Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 14

 

தேவகி யார் என்று வேதாந்த கிருஷ்ணா வீட்டிற்கு இதுவரை இவர்கள் தெரியப்படுத்தவில்லை ராஜநாராயணனும் யசோதாவும். தெரியப்படுத்த வேண்டிய அவசியமும் அவர்களுக்கு வரவே இல்லை.

 

ஏன் தேவகி என்ற ஒருவர் அவர்கள் வாழ்வில் வந்ததையே அவர்கள் மறந்துவிட்ட போது.. இப்பொழுது திடீரென்று குதித்து வந்திருக்கும் அவரை என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்த? என்று திணறித்தான் போனார் யசோதா.

 

இந்நேரம் பார்த்து கணவரும் அருகில் இல்லாதது அவருக்கு பெரும் மனம் அழுத்தமாகவே இருந்தது.‌

 

மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்று ராஜநாராயணனின் ஒன்னு விட்ட தம்பி வந்து கூற.. மொத்த சக்தியும் வடிந்தது போல உணர்ந்தார் யசோதா.

 

தேவகியை பார்த்து பயந்த அளவுக்கு எல்லாம் வேதாந்த் கிருஷ்ணாவை கண்டு பயப்படவில்லை மீரா. வரட்டும் பாத்துக்கலாம் என்று கொஞ்சம் தைரியமாகவே இல்லையில்லை திமிராகவே இருந்தாள்.

 

“என்ன ரூபி.. மாப்ள திடுதிப்புன்னு வந்து இருக்காரு என்னன்னு தெரியலையே? இந்த ‌நேரம் பார்த்து உங்க அண்ணனும் இல்ல.. தேசிகனும் இல்ல..” என்று யசோதாவுக்கு கை கால் எல்லாம் ஆச்சரியம் ஆனந்தம் கூடவே சற்று பயத்தில் நடுங்கியது.

 

“அச்சோ அண்ணி.. ஏன் தான் நீங்க எப்படி இருக்கீங்க தெரியல? ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..!” என்று அவரை சற்று சாந்தப்படுத்த, அதற்குள் சற்றும் தயக்கம் இல்லாமல் விரலில் வண்டியின் சாவியை சுழற்றியப்படி உள்ளே வந்தான் வேதாந்த் கிருஷ்ணா.

 

 

“வாங்க மாப்பிள்ளை.. 

 

வாங்க தம்பி.. 

 

வாங்க அத்தான்.. 

 

வாங்க மாமா..

 

வாங்க மச்சான்..

 

என்று உறவுக்குத் தகுந்தாற் போல அங்கிருந்த அனைவருமே வேதாந்த் கிருஷ்ணாவை வரவேற்றார்கள். 

 

அப்பொழுதும் தன் எதிரில் சோபாவில் சற்று தோரணையாக அமர்ந்திருந்த தேவகியை அவன் கண்டு கொள்ளவே இல்லை. 

 

வீட்டினுள் வரும் பொழுதே அவன் விழிகள் அங்கு இருந்தவர்களை ஸ்கேன் செய்திருந்தது. தேவகியின் ஆர்ப்பாட்டமான உடல் மொழியும் அதற்கு எதிரே சற்று பயந்தாற் போல் நின்று இருந்த வீட்டினர்களின் உடல்மொழியையும் கண்டவனுக்கு ‘ஏதோ சரியில்லை’ என்று மட்டும் புரிந்தது.

 

“இந்த டைம் வந்திருக்க கூடாதோ?” என்று யோசித்தவன்,

 

“என் மாமியார் வீடு..! யாரோ ஒருத்தருக்காக நான் ஏன் தயங்கணும்?” என்று சோபாவில் அமரும்போதே தேவகிக்கு எதிரில் தான் அமர்த்தலாக அமர்ந்தான்.

 

மாப்பிள்ளை வரவேற்பு தடபுடலாக நடந்து அவனுக்கு உபசரிக்க.. வெல்கம் ட்ரிங்ஸ் டீயா? காஃபியா? ப்ரஸ் ஜூஸா? அதில் என்ன வகை வேண்டும்? என்று மாறி மாறிக் கேட்க திக்கித் திணறிப் போனான் கிருஷ்.

 

“என் அம்மாவுக்கு இத்தனை ஜூஸ் போட தெரியும்னே இன்னிக்கு தான் எனக்கு தெரியுது அத்தாச்சி” என்று அருகில் இருந்த மீராவிடம் கிசுகிசுத்தான் ரதன்.

 

அவளோ முறைக்க.. “அம்மா அத்தாச்சிக்கும் ஜில்லுனு ஒரு ஜூஸ் பார்சல்” என்று அவன் சத்தமிட.. மொத்த குடும்பமும் அவனை மொத்தவா? குத்தவா? என்று கண்களாலேயே வெட்டியது.

 

“நீங்க எல்லாம் சேர்ந்து என்னை டென்ஷன் ஆக்கிருவீங்க போலவே.. ரிலாக்ஸ் ஆன்ட்டி..! நான் ஜஸ்ட் மீராவை பார்க்க தான் வந்தேன்..” என்றான் தயக்கம் கலந்த புன்னகையோடு..!

 

அது வரை இருந்த இறுக்கம் சற்று குறைய இப்பொழுது ஒட்டுமொத்த சிறுசுகளும் “ஓஓஓஓ..” ஆரவாரம் எழுப்பவே காலையிலிருந்து இவர்களின் இந்த கலாட்டாக்கள் அதிலும் கல்யாண கலாட்டா என்றால் சும்மாவா? அதிலேயே நொந்து போயிருந்தவள்,

 

இப்பொழுது கிருஷ்ணாவின் வருகையும் அவனின் பேச்சிலும் இன்னும் நொந்து “ஹரே கிருஷ்ணா..!” என்று தலையில் கை வைத்துக் கொண்டாள்.

 

“மெஹந்தி ஃபங்ஷனா ஆன்ட்டி?” என்று அங்கிருந்தவர்களின் கைகளில் இருந்த மருதாணியை பார்த்துக் கொண்டே அவன் கேட்க..

 

“ஆமா மாப்பிள.. பெருசாலாம் இல்ல சின்னதா நம்ம வீட்டுல மட்டுமா செலிப்ரேட் பண்றோம்” என்றார் யசோதா மரியாதையாக. 

 

“குட் .. குட்.. ஆன்ட்டி..! எனக்குமே பெருசா விளம்பரமா ஆடம்பரமா இதெல்லாம் பண்ண பிடிக்காது. கூடவே அது நம்ம கலாச்சாரம் இல்ல. ஆனா டிரெண்டிங்கா இப்ப போயிட்டு இருக்கு. ஃபீல் குட்” என்றான் ரூபிணி கொடுத்த ஜூஸை குடித்துக் கொண்டே..

 

“ஏன் ஆடம்பரமா செய்ய உங்களுக்கு அந்த அளவு வசதி பத்தாதா? நான் வேணா ஸ்பான்ஸர் பண்ணவா? அட்லீஸ்ட் மீராவுக்காக நான் இதை கூட பண்ண மாட்டேனா?” என்று தேவகியின் கேலியான கேள்வியில் தலையை மட்டும் திருப்பி அவரைக் கூர்ந்துப் பார்த்தான் கிருஷ்.

 

“எனக்கு ஸ்பான்சர் பண்ற அளவு நீங்க ஒன்னும் பிக் ஷாட் இல்ல..! மோர் ஓவர் எனக்கு என்ன தேவைன்னாலும் அதை என்னால பாத்துக்க முடியும். ஐ ஹவ் மை ஓன் ஏனிங்க்ஸ்..!” என்றான் இவனும் சற்றே நக்கலாக..!

 

‘அதாவது நீ உன் கணவன் சம்பாதித்தியத்தில் தான் செலவு செய்கிறாய்.. ஆனால் நான் என் சுய சம்பாத்தியத்தில் செலவு செய்கிறேன்..!’ என்று நெத்தியில அடித்தாற் போன்று அவன் பேச..

 

“அட.! பார்றா..!” என்று ஆச்சரியமாக கிருஷ்ணாவை பார்த்தாள் மீரா.

 

இவ்வளவு படோகரமாக அமர்ந்திருக்கும் தன்னை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் வந்ததிலிருந்து ரூபிணியிடமும் யசோதாவிடம் மாறி மாறி பேசும் இவனை மட்டம் தட்டுவதற்காகவே தான் தேவகி அவ்வாறு கூறியது.

 

கூடவே ‘அப்படி என்ன பெரிய மாப்பிள்ளை நீ?’ என்று அவனை எடை போட்டவருக்கு, அவன் உடுத்திருந்த உடையோ அவன் உருவத்திலோ அழகிலோ எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் தான் வசதியை சுட்டிக்காட்டி இகழ்ச்சியாக பேசினார்.

 

அதன்பின் அப்படி ஒரு ஜீவன் அங்கு இருப்பதை கண்டு கொள்ளாமல் கண்களால் மீராவை தேடுவது போல பாவனை செய்தவன் அவளை கண்டு கொண்டும் தெரியாதவன் போலவே நடித்து, “ஆமா நீங்க எல்லாம் மட்டும் மாறி மாறி பேசிகிட்டு இருக்கீங்க எங்க மீராவ காணும்?” என்று அவன் ஆவலாய் கேட்க..(?)

 

“அவளுக்கும் மெஹந்தி போட்டு இருக்கோம். இங்க தான் இருக்கா..” என்றவர், மகளை இழுத்து மருமகன் முன்னே அமர்த்தினார். 

 

“பொண்ணோட அம்மாவா உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா யசோதா? மாப்பிள்ளை முன்னாடி இப்படித்தான் வெறும் லெஹங்கா அதுவும் பொட்டு நகைய போட்டு உட்கார வைப்பியா? நல்லா அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வா. போ.. போ..! அப்பயாவது இவ கொஞ்சம் பாக்குற மாதிரி இருப்பா” என்று சீண்டலாக பேசிய தேவகியை கண்டு மனம் வெறுத்த மீரா, சட்டென்று அன்னையைப் பார்க்க யசோதா அவள் அருகில் வந்து நின்று கண்களாலே அமைதியாக இரு அவளிடம் கெஞ்சினார்.

 

“ஏன் மீராவுக்கு என்ன? கல்யாணத்துக்கப்புறம் தினமும் பட்டு புடவை கட்டிக்கிட்டு ஃபுல் மேக்கப் போட்டுக்கிட்டா சுத்த போறா? கேஷுவல் டிரஸ் தான் அவங்க உண்மையான அழகை எடுத்துக்காட்டும்” என்ற கிருஷ்

 

தலையை சாய்த்து அவளை மேல் இருந்து கீழாக அவன் பார்க்க.. அதுவும் அணு அணுவாக அவனின் பார்வை அவள் தலையிலிருந்து மெல்ல மெல்ல கீழ இறங்குவதை கண்டவளுக்கு பெரும் அவஸ்தையாக போக.. சற்று என்று எழுந்து கொள்ளவும் முடியாமல் இரு கைகளிலும் மருதாணி. 

 

இத்தனைக்கும் ‘இன்று‌ பேண்ட் ஷர்ட் போடாதே அட்லீஸ்ட் புடவை கட்டு இல்லை லெகஹங்காவது போடு’ என்று நன்கு வேலைபாடு அமைந்த வெண்ணிற ஷர்கோஷி வேலைபாட்டோடு இருந்ததை அணிவித்திருந்தார் யசோதா மகளுக்கு. 

 

வெண்மை நிறத்தில் ஆங்காங்கே சிறுசிறு ரோஜா பூக்கள் பூத்திருக்க தோட்டத்தில் நடுவில் அமர்ந்திருக்கும் பெரிய பூவாக அவளுமே அமர்ந்திருந்தாள்.

 

“தலைமுடியை விரிச்சு போடாம கொஞ்சம் அழகா பின்னிக்கோ” என்று யாமினியும் ராதாவும் தான் அவளுக்கு அழகாக வாரி இருந்தனர். 

 

கல் வைத்த சிறு சிறு அணிகலன்கள் அவள் அழகுக்கு அழகு சேர்க்க இப்பொழுது நிஜமாகவே அவன் கண்களுக்கு மீரா அழகியாகத் தான் தெரிந்தாள்.

 

‘என்ன சட்டென்னு இவ ரொம்ப அழகிய தெரியுறா நம்ம கண்ணுக்கு?’ தலையை சட்டென்று உலுக்கிக் கொண்டவன்,

 

“நாங்க இரண்டு பேரும் வெளியில போய்டு வரட்டுமா ஆன்ட்டி?” என்று கிருஷ் கேட்க..

 

எப்படி மறுக்க முடியும்? இன்னும் இரு நாட்களில் உரிமையாக இந்த வீட்டுக்கு மருமகனாக வரப் போகிறவன். அதுவும் மீராவின் மறு பாதி..!

 

இப்போ உள்ள பிள்ளைகளை போல இருவரும் பார்த்து பேசி பழகி இருக்கவில்லை. இப்பொழுது தான் மருமகனாகவே மகளை காண வந்திருக்க.. அதுவே யசோதாவுக்கு பெரிய சந்தோஷமாக இருக்க.. அவன் கேட்டதற்கு பதில் அளிக்க முடியாமல் கையை பிசைத்துக் கொண்டு நின்றிருந்தார். 

 

“ஏன் பயமா இருக்கா யசோதா? சரித்திரம் திரும்பிடுமோ?” என்று தேவகி கேட்க.. 

 

அமைதியாக அவரை ஆழ்ந்து பார்த்தவர், “கூட்டிட்டு போறது மாப்பிள்ளை தானே? அதுல எனக்கு எந்த பயமும் இல்லை. எல்லோரும் ஒன்றுபோல கிடையாது” என்று தேவகிக்கு பதில் அளித்தவர்,

 

“அங்கிள் கிட்ட கேட்டு சொல்றேன் தம்பி” என்றார் கிருஷிடம்.

 

“ஓஓஓ.. அங்கிள் வீட்ல இல்லையா? அதானே இந்நேரம் அவர் இருந்தா சலசலனு எனக்கு மேல பேசுவார். நீங்க கேட்டு சொல்லுங்க ஆன்ட்டி.. ஐ அம் வெயிட்டிங்..!” என்று மீராவை பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி சிரித்தான். 

 

“நீங்க இருங்க அண்ணி.. நான் கேட்டுட்டு வரேன்” என்று ரூபிணி நழுவி விட..

 

“அப்புறம்.. என்னை அறிமுகப்படுத்தவே இல்லையே யசோதா? எனக்கும் மீராவுக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லவே இல்லை? ப்ச் பரவாயில்ல.. நீ கல்யாண வேலையில ரொம்ப பிசியா படபடப்பா டென்ஷனா இருக்க போல.. நானே என்னை அறிமுகப்படுத்துகிறேன்.. அது தானே முறையும் கூட..!” என்ற தேவகியின் வார்த்தை ஜாலமும் அதிலிருந்த புள்ளியும் யசோதாவையும் அவரைச் சேர்ந்தவர்களின் கலவரப்படுத்துவதை கண்ணாரக் கண்டான் கிருஷ்ணா.

 

யசோதாவோ ‘என்ன சொல்லி இவளை அறிமுகப்படுத்த? ராஜநாராயணனின் முதல் மனைவி என்றா? இல்லை மீராவின் சொந்த அன்னை என்றா?’ என்று தவித்துப் போனார். 

 

இரண்டில் எதே கூறி அறிமுகப்படுத்தினாலும் தான் அப்போது இங்கே யார்? தன் நிலை என்ன? என்று அத்தனை தடுமாறினார். 

 

அதற்கு மேல் மீரா பயந்து போய் அருகில் நின்ற தாயின் இடது கையை தன் வலது கையால் இறுகி பற்றிக்கொள்ள அவள் கைகளில் அழகாய் வரைந்திருந்த மருதாணி அனைத்தும் கலைந்து போனது.

 

இவர்கள் இருவரின் பதட்டத்தை பார்த்த கிருஷ் “என்ன செய்ற நீ? கைய பாரு..” என்று சற்றே அதட்டியப்படி எழுந்து வந்தவன் அவள் கையை யசோதாவின் கையில் இருந்து பிரித்தெடுத்து பார்க்க.. மெஹந்தி முக்கால்வாசி அழிந்து போய் இருந்தது. 

 

சற்று முன் அழகாய் சிரித்த மீரா இப்போது சிதிலமாய்…!

 

“தேங்க் காட்..! அட்லீஸ்ட் இந்த பக்கம் யாரும் நிக்கல.. இருந்திருந்தால் இந்த கையில் உள்ளதையும் அழிச்சு இருப்ப.. இல்லையா?” என்று நக்கலாய் கேட்டவன் வெகு சுவாதினமாய் அவளின் கையை பற்றி பார்த்தான்.

 

யாசோதாவும் ரூபிணியும் முதலில் சற்றே தேவகியின் வரவால் மிரண்டாலும்.. அவரின் குறிப்பு பேச்சால் அரண்டாலும்.. தற்போது கிருஷ்ணாவின் பதில் தாக்குதலில் இலகுவாய் மூச்சு விட்டனர்.

 

“ஆமா ஆன்ட்டி.. மெஹந்தி போடும் போது ஹஸ்பண்ட் பேரு இல்ல அவங்க.. அதாவது என்னோட உருவ படத்தை எல்லாம் வரைஞ்சுகிறது இப்போ ட்ரெண்ட்டாமே?” என்று கேட்க..

 

ரதன் சிரித்தப்படி “அத்தாச்சி காட்டு காட்டு” என்று அவள் தோளில் தட்டினான். திரும்பி அவனை ஒரு முறை முறைத்தாள் மீரா.

 

“மீரா.. நீ அப்படி ஏதாவது வரைஞ்சு இருக்கியா?” என்று குறுகுறுப்புடன் கேட்டான். 

 

“வாட் ரப்பிஷ்..! அதெல்லாம் இல்ல.. ஏன் நான் எழுதிக்கணும் உங்க பேர? நீங்க எழுதிக்க வேண்டியது தானே என் பேர..!” என்று மென் குரலில் வார்த்தைக்கு வார்த்தை வீசியவளை கண்டு சிரித்தவன், 

 

“கையை காட்டு..!” என்று அனைவரும் முன்பும் இயல்பாய் அவள் கையைப் பற்றி பார்க்க..

அவளால் கையை மறைக்கவும் முடியவில்லை..! அவனுக்கு மறுக்கவும் முடியவில்லை அனைவரின் முன்பு.. குறிப்பாக தேவகியின் முன்பு.

 

மீரா கிருஷ்ணன் இருவரின் பெயரினை சித்தர எழுத்து போல தமிழில் அவர்கள் எழுதியிருக்க சட்டென்று அவனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

ஆனால் குழல் ஊதும் கிருஷ்ணன் அழகாக ஓவியமாக வரையப்பட்டிருந்ததை கண்டு… மாய கண்ணனாய் சிரித்தவன் “இதோ நான்..!” என்றான்.

 

“அது.. அது..” என்று மீரா தடுமாற..

 

அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி “இப்போ பேசேன்‌ நீ?” என்பது போல பார்க்க.. அவளுக்கு முகத்தை இப்போது எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

 

“வீம்பாக நான் எழுத மாட்டேனு சொன்னவ.. ஆனா பேர் என்ன படத்தையே வரைஞ்சு வச்சிருக்கியே மீரா.. மீரா..” என்று அவன் கண் சிமிட்டி கேட்க.. கஷ்டப்பட்டு அவனை முறைத்தாள் மீரா. 

 

சுற்றிலும் உறவினர்கள் இருப்பது எல்லாம் இருப்பது அவர்களுக்கு ஞாபகமில்லை. அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசி முறைக்க.. மற்றவர்களோ அது காதலர்களின் பரிபாஷை என்று மௌனமாக சிரித்துக்கொண்டனர். யசோதாவின் பார்வையில் உறவினர்கள் எல்லாம் நாகரிகமாக அவர்களிடம் இருந்து சற்று தள்ளி வந்தனர்.

 

தான் பற்ற வைத்து சிறு தீ பெரும் தீயாக.. காட்டுத் தீயாக பற்றி எரியாமல்.. புஸ்வானம் போல நமத்துப் போனதை கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல்‌.‌. அடங்காத கோபத்தை அடக்கிக் கொண்டு இரு விழியிலும் வன்மத்தை ஏற்றி கிருஷ்-மீராவை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் தேவகி.

 

“உன்ன வெளியில கூட்டிட்டு போலாம்னு தான் நான் வந்தேன்..”

என்றான்‌, அவள் அமர்ந்திருந்த சோபாவின் முன்னே குனிந்து..

 

இப்பொழுது விழி விரிய அவனை பார்த்தாள்.

 

“என்ன ஷாக்கிங் மேல ஷாக்கிங் கொடுக்கிறேனு பார்க்கிறியா?” என்று கேட்டான்.

 

“இல்லையா பின்ன? நான் செஞ்சு வச்ச வேலைக்கு நீங்க ரிவேஞ்ச் எடுப்பிங்கனு பார்த்தேன்.. நீங்க என்னடானா அசல் கல்யாண மாப்பிள்ளையாவே மாறிட்டீங்க.. கூடவே ப்ரோட்டக்ஷன் வேற பலமா இருக்கு” என்று தேவகியை குறிப்பால் உணர்த்தி அவள் கேட்டாள். 

 

அதுவும் தன் கையில் இருந்த மெஹந்தி பார்த்துக் கொண்டே அவள் பேச.. நிமிர்ந்தால் தான் இதழ்கள் தொட்டுக் கொள்ளும் தூரத்தில் இருந்தானே..!!

 

“அந்த லேடிய பார்க்கும் போது உன் கண்ணுல ஒரு பயம் வருது.. ஐ டோண்ட் லைக் திஸ்..” என்றான் தோளை ஸ்டைலாக குலுக்கி..

 

“எது? என் கண்ணுல பயமா?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். என் கண்ணின் பயத்தைப் படிக்கும் அளவுக்கு இவனுக்கு என்னை தெரிகிறதா என்ற ஆச்சரியம்.

 

“எஸ்.. எஸ்..!”

 

“ஏன்? பயம் தெரிய கூடாதா என்ன?” சற்றே திக்கி திணறி தான் கேட்டாள் மீரா.

 

“நோ நோ.. அப்படி சொல்லல.. மீரா டியர்..! பயம் தெரியணும் ஆனா அந்த பயம் என்னை பார்த்து தெரியணும் உன் கண்ணுல” என்றவன் அவள் கண்களை கூர்ந்து பார்த்து பேச.. ஙேன்று விழித்தாள் மீரா.

 

“அதாவது தப்பு செய்யனும்.. ஆனா அத நாங்க மட்டும் தான் செய்யணும்..!” என்று குரல் அவள் காதில் கேட்க..

 

“என்ன மேக் டா நீ??!!” என்பது போல அவனை பார்த்தாள்.

 

அதே நேரம் இவர்கள் இருவரின் நெருக்கத்தை பொறுக்க மாட்டாமல் எழுந்த தேவகி “என்ன யசோதா என் புருஷனையும் என் பொண்ணையும் தான் என் கிட்ட இருந்து பறிச்சுகிட்ட… வர போற மாப்பிள்ளையாவது என் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைப்பியா? இல்

ல உன் பொண்ணுக்கு பண்ணி வச்சுடுவியா?” அந்த வீடே அதிர வீடு அவர் கத்த..

 

அதுவரை ஒரு மோன நிலையில் இருந்த கிருஷிம் மீராவும் திடுக்கிட்டு திரும்பினார்கள்.

 

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top