மயக்கம் 8

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

மயக்கம் 8

 

 

“அட.. மாமோய்ய்ய்….” என்று கிருத்தி இம்முறை திருபுரபவனனை வெறுப்பேற்ற.. தன் வீட்டில் இருந்து அந்த பாட்டு அலற விட்டாள்.

 

மாடியில் இருந்தவனுக்கு புரிந்து போனது. தன்னை வெறுப்பேற்ற வேண்டும் என்றும் சீண்ட வேண்டும் என்றும் அவள் செய்கிறாள் என்று..!

 

ஆனால் அதற்கு கிஞ்சத்தும் அவன் வினையாற்றாமல் கதவை மட்டுமல்ல ஜன்னல்களையும் இறுக்க சாத்திக்கொண்டு வீட்டில் அமர்ந்திருந்தான்..!!

 

‘நா என்ன நிலையில இருக்கிறம்? இந்த லூசு என்ன செய்யுது பாரும்..!”’என்று உள்ளுக்குள் மனம் கடுகடுத்தாலும்.. அவள் செய்யும் யாவும் தன்னை பாதிக்கவில்லை என்று அமர்ந்திருந்தாலும்.. உள்ளுக்குள் அத்தனை வலித்தது அவனுக்கு..!

 

“‘ஏன்... ஏன் எல்லாரும் என்னை இப்பிடிப் பாடாய்ப்படுத்துறீங்க? நான் உங்களுக்கு என்ன செய்தனான்? என்ன துரோகம் செய்தனான்? என்னை விட்டிடுங்கடா…!” என்று அவன் மனதின் அலறல் பாவம் அங்குள்ள யாருக்கும் கேட்கவில்லை..!!

 

பாவம் அவனும் தானே…!!

 

வேண்டாம் என்று கடல் கடந்து வந்தாலும்.. மனதளவில் 

எத்தனை கடந்து வந்தாலும் இன்னும் அவனை துரத்தி வருவதை அவன் எங்கணம் தாங்குவான்?

 

மாடிக்கு சென்று பவனனை அழைக்க செல்வதாக கிருத்தி சென்றுவிட.. சிவகாமியும் அருகில் இருக்கும் குணா வீட்டிற்கு சென்றார்

 

 

குணாவின் அம்மா பரிமளா இவரிடம் நாளைக்கு ஏதோ விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு வாரம் முன்பே ஜாக்கெட் தைக்க கொடுத்திருந்தார். அதையும் எடுத்துக்கொண்டு மகனுக்கும் அப்படி பால் ஆற்றிக்கொண்டு சென்றிருந்தார். 

 

“என்ன சிவகாமி இது? ஏன் குணாவுக்கு நாங்க பால் கூட தர மாட்டோமா? இப்படி பால தூக்கிட்டு இவ்வளவு தூரம் வந்துருக்க?” என்றவரிடம், 

 

மென் சிரிப்போடு “அதில்ல பரிமளா..! நீங்க கொடுப்பீங்க ஆனால் இவனுக்குன்னு எடுத்து வச்சது அப்புறம் வீணா போகும்ல. நைட்டும் குடிக்க மாட்டான். எப்படியும் உங்க பிளவுஸ் கொடுக்க வரணும் தானே.. சேர்த்து கொடுத்திட்டு போலாம்னு தான் வந்தேன்” என்றார்.

 

இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

 

 

“ஏதோ உங்க புள்ள கூட சேர்ந்ததுக்கு அப்புறம்தான் இந்த குணா பைய கொஞ்சம் பொறுப்பா உக்காந்து படிக்கிறான். இல்லன்னா அவன பிடிச்சு ஒரு இடத்துல எல்லாம் உட்கார வைக்க முடியாது” என்றார். 

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே தான் இவர்கள் இந்த பக்கத்திற்கு குடி பெயர்ந்து வந்தனர்.

 

அது முதல் குணாவும் வேலனும் நல்ல நண்பர்கள்…!!

 

பக்கத்தில் இருப்பவர்கள் சிவகாமியை பற்றி சில நல்லதும் பல கெட்டதுமாக புறம் பேசுவதை கேட்டிருக்கிறார் பரிமிளா. ஆனால் ஒருமுறை கூட அதை பற்றி சிவகாமியிடம் அவர் சிறு கண் ஜாடையில் கூட காட்டியது கிடையாது பரிமளா. 

 

பொதுவான பேச்சு பிள்ளைகளின் படிப்பு கீர்த்தி வேலை என்று இப்படியாகத்தான் செல்லும் அவர்கள் சம்பாஷணை.

 

சில முறை பரிமளா கூட அவர்கள் வீட்டு பக்கம் அக்கா தங்கை கணவனின் குடும்பம் பற்றி கூட புலம்பலாக கூறியிருக்கிறார். அனைத்தையும் சிவகாமி ஒரு புன் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருப்பாரே ஒழிய அதனை தாண்டி தம் வீட்டை பற்றி எதுவுமே கூற மாட்டார்.

 

“நானே ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லணும் நினைச்சுட்டு இருந்த சிவகாமி. நீ தப்பா எடுத்துக்க மாட்ட இல்ல?” என்றார் பரிமளா.

 

அவர் கையை பிடித்து “சும்மா சொல்லு பரிமளா.. எனக்கு உன்னை பத்தி தெரியும்” என்றார் சிவகாமி. 

 

“உங்க வீட்டு மாடில குடியிருக்கிற பையன்…” என்று ஆரம்பிக்கும் போது அதுவரை இலகுவாக இருந்த சிவகாமி முகம் சற்று இறுக்கமடைய “என்ன அவனுக்கு?” என்று அவரது குரலும் ஒரு மாதிரியாக…

 

“இல்ல.. இல்ல…! அந்த புள்ளைய ரொம்ப நாளா நாங்க வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கோம். ரொம்ப நல்ல பிள்ளையா தெரியுது. ஏன் அக்கா பொண்ணும் ஐடில தான் வேலை பார்க்கிறா… அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆகல நீ ஒரு தடவை சொன்னதா கூட எனக்கு ஞாபகம்.. கூடவே உனக்கு தூரத்து சொந்தம் சொன்ன்ல.. அவங்க வீட்ல பேசி ஜாதகம் வாங்கி தரியா? என் அக்கா பொண்ணுக்கு பொருத்தம் பார்க்கலாமா?” என்று கேட்டார்.

 

எதுவும் பவனன் பற்றி குறை சொல்ல போகிறாரோ என்று முகத்தை சற்று இறுக்கமாக வைத்திருந்த சிவகாமியின் முகம் இலகுவாக மாறி “அதுக்கு என்ன எங்க அண்ணன் கிட்ட கேட்டு நான் வாங்கி தரேன்” என்றார். 

 

“ரொம்ப சந்தோஷம் சிவகாமி. இந்த மாதிரி ஒரு பிள்ளையை இப்ப எல்லாம் பார்க்கிறது ரொம்ப அரிதா இருக்கு. மொழி நாடெல்லாம் விடுங்க.. கட்டிக் கொடுக்கிற நம்ம புள்ளைங்க நல்லா இருக்கணும்னு அதைவிட உயிரோடு இருக்கணும்ல? யாரையுமே இப்ப நம்ப முடியல.. நம்ம கண்ணுக்கு எதிர்க்க வளர்ந்தாலுமே அவனுக்கு பின்னால என்ன வன்ம குடோன் கூட வச்சிருக்கானோனு பயந்து பயந்து இருக்க வேண்டியதா இருக்கு’ என்று அவர் பார்த்த சிலரை பற்றி அங்கலாய்ப்பாக சொன்னார் பரிமளா.

 

அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் திடீரென்று “அட மாமோயய்ய்…” என்று பாட்டு அலறல் கேட்க.. பரிமளாவோ சிரித்துக்கொண்டார். 

 

“அந்த புள்ளைக்கு இந்த பாட்டு மேல அப்படி என்ன ஒரு பிடித்தம்னு தெரியல? அடிக்கடி இந்த பாட்டையே போட்டு கேக்குது. ஒருவேளை கல்யாண ஆசை வந்துருச்சோ? இந்த மாதிரி பொண்ணும் பாடிக்கிட்டு ஆடிக்கிட்டு வரணும்னு ஆசைப்படுதோ?” என்று கேட்டதும் சிவகாமியும் மெல்ல சிரித்துக் கொண்டவர் “எனக்கும் தெரியல..!” என்றார்.

 

ஏனென்றால் ஓரளவு பவனன் சிவகாமியின் ஒன்று விட்டு அண்ணனும் பவனின் தந்தையான உதயகுமார் சொல்லி இருக்கிறார். 

 

அது அவனின் தனிப்பட்ட விஷயம்..!! அதை ஏன் நாம் அம்பலப்படுத்த வேண்டும் என்று எண்ணி அமைதியாக இருந்து கொண்டார்.

 

“சரி பரிமளா.. நான் கிளம்புறேன் இப்பதான் அவ வேலை விட்டு வந்தா. சோம்பேறிக் கழுத ஒரு டீ கூட போட்டு குடிக்காது. என்னை தான் போட சொல்லுவா..” என்று அவர் எழ,

 

“ஆனாலும் கிருத்திய நீ ரொம்ப தான் திட்டுற சிவகாமி. ஸ்கூலுக்கு போய் உட்கார்ந்த இடத்துல இருந்து படிச்சிட்டு வந்த புள்ளைக்கு பாலை தூக்கிட்டு வந்து நிற்குற.. ஆனா.. வேலைக்கு போற புள்ளைக்கு நீ ஒரு டீ கூட போட்டுக் கொடுக்க மாட்டீயா? எனக்கெல்லாம் பொம்பள புள்ள இல்லைனு நான் கவலைப்படாத நாளே இல்ல தெரியுமா?” என்று அவர் விடாமல் பேசிக் கொண்டிருக்க..

 

“பொம்பள புள்ள இல்லன்னா நீ பீல் பண்றியா? வேணும்னா சொல்லு என் பொண்ணு நான் தத்து கொடுக்குறேன்? நீ வச்சுகிரியா அவள?” என்று விளையாட்டாக கேட்டதும்,

 

அவரோ “”உனக்கு ஓகேனா எனக்கு டபுள் ஓகே..!” என்றவர் இன்னும் பெண் பிள்ளைகளை பற்றி தான் அத்தனை பேசினார்.

 

விட்டால் அவர் இன்னும் பேசுவார் என்று புரிந்த சிவகாமி மகளை குறை சொல்லி அந்த சாக்கிலாவது செல்லலாம் என்றால்.. அதற்கும் பேசியவரை கண்டு ஆயாசமாக இருந்தது.

 

“சரி நான் வரேன் பரிமளா.. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த பாட்டை கேட்டுட்டு அந்த பையன் கிட்ட சண்டை பிடிக்க போய்டுவா என் பொண்ணு.. அதுக்குள்ள நான் போய் அவளை தடுத்து நிறுத்தனும்” என்றார் சிரிப்போடு.

 

“ஆமா ஆமா இப்படி அலறவிட்டால் அவளுக்கும் தலைவலி வராதா? புள்ளையும் இப்பதான் வேலை முடிஞ்சு வந்திருக்கும் இல்ல” என்றபடி விடை கொடுத்தார் பரிமளா.

 

சிவகாமியும் “இப்பதான் வேலையிலிருந்து வந்தா.. இந்த பாட்ட கேட்டுட்டு தாம் தூம்னு குதிச்சிட்டு அந்த பிள்ளை கிட்ட போய் சண்டை போட போறா..! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்தப் புள்ளையால தான் வேலை நிரந்தரம் ஆக போகுது. நன்றி சொல்லப் போறேன்னு போனா.. இப்ப சண்டை போட்டு வீட்டை விட்டு தொறத்திடுவா போலவே? இந்த புள்ளையும் ஏன் இப்படி போட்டுக்கிட்டே இருக்கேனு தெரியல..! இவங்க ரெண்டு பேரோட என்னால முடியல..” என்று புலம்பி கொண்டே வீட்டுக்கு சென்ற சிவகாமி, தம் வீட்டில் கேட்டு அந்த பாடலின் அதிர்வில் காதை பொத்திக் கொண்டு கிருத்தி என்று அலறியிருந்தார்.

 

அந்த பாட்டு சத்தத்தில் அவளுக்கு காது கேட்கவில்லை போலும். “கிருத்தி..!” என்று இன்னும் கத்திக் கொண்டே அவர் உள்ளே நுழைய..

 

ஏற்கனவே சிவகாமி இறக்கி வைத்திருந்த டிக்காஷனில் காஃபி கலந்து அதை நுரைப்பொங்க ஆற்றி.. வாசனையை நன்றாக முகர்ந்து நல்ல சிப்பு சிப்பாக குடித்துக் கொண்டிருந்தாள்.

 

கூடவே எப்பொழுதும் அவன் பாட்டு போட்டால் வருகிற கோபம் இல்லாமல்.. இப்பொழுது தலையாட்டி அந்த பாடலை ரசித்தபடி குடித்துக் கொண்டிருந்தாள்.

 

மகளிடம் கத்தி கத்தி பார்த்து அவள் கண்டு கொள்ளவில்லை என்றதும் வேகமாக சென்று ப்ளூடூத்தை ஆப் செய்தவர் “என்னடி? இது ஏன் இவ்வளவு சத்தமா வச்சிருக்க?” என்று கத்தினார் சிவகாமி. 

 

“வா ம்மா சிவகாமிதேவியாரே..! இத்தனை நாளா உன் லாங் லாங் சொந்தக்கார பையன் வச்சு தெருவையே இரண்டாகும் போதெல்லாம் ஒத்த வார்த்தை கேட்டு இருப்பியா நீ? இப்போ.. இன்னைக்கு நான் ஒரே ஒரு தடவை அந்த பாட்டு வச்சத்துக்கு எப்படி சண்டை பிடிச்சுகிட்டு வர? தாயாமா நீயெல்லாம்..!” என்று மூக்கு விடைக்க பேசிய மகளின் தலையில் கொட்டினார்.

 

“இங்க பாரு இந்த சமூகத்தை பொறுத்தவரைக்கும், அதோட பார்வை ஆண்களுக்கு ஒரு பக்கம் பெண்களுக்கு ஒரு பக்கம்..! என்ன ஒழுக்க கேடு செஞ்சாலும் ஒரு மன்னிப்பு கேட்டால் அவனை இந்த சமூகம் ஏத்துக்கும்.. அதே பொண்ணு செஞ்சா… இல்லை இல்லை செய்யக் கூட வேணாம் அவ செஞ்சானு ஒரு புரளி வதந்தி மட்டும் காட்டு தீயா பரவுனதுனா போதும், அத அந்த சமூகம் ஒத்த ஆதாரம் கேட்காம நம்பி அவளை காலில் போட்டு மிதிக்கும்..!” என்றார் தன் அனுபவத்தைக் கொண்டு..!!

 

“ஸ்ஸ்ப்பா முடியல அம்மா உன்னோட இப்ப என்ன பாட்டு போடக்கூடாது அவ்ளோதானே..! இதுக்கு எதுக்கு ஆத்தா இவ்வளவு பெருசு பெருசா டயலாக் எல்லாம் பேசுற? நானே ரொம்ப டயர்டா வந்து இருக்கேன். போ போ சீக்கிரம் போய் பாப்பாவுக்கு புடிச்ச மாதிரி சாப்பாடு செய்..!”:என்று மகளை கண்டு 

 

“இதெல்லாம் என்னைக்கு திருந்த போகுதோ?” என்ற படி இரவு உணவு செய்ய சென்றார் சிவகாமி. 

 

சிவகாமி பேசியது அவர் கண்ட சமூகத்தின் அனுபவத்தைக் கொண்டு..!

 

ஆனால் கிருத்திக்கோ.. அது என்ன ஆணுக்கு ஒரு மாதிரியா பொண்ணுக்கு ஒரு மாதிரியா மாத்தி மாத்தி பேசுறது? அதெல்லாம் ஒத்துக்க முடியாது..! என்ற இன்றைய மங்கையாக அவள்..!

 

 

“என்னமா ரசம் சாதம் வச்சு துவையல் அரைச்சு வச்சிருக்க? நான் எவ்வளவு பெரிய சந்தோஷ விஷயத்தோட வந்தேன்.. நீ என்னம்மா.. போம்மா..” என்று இரவு உணவை பிடிக்காமையால் அம்மாவை கடிந்தாள் கிருத்தி..!!

 

“நான் கூட அக்கா செலவுல இன்னைக்கு பீட்சா ஆர்டர் பண்ணலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்” என்றதும் தம்பியை முறைத்தாள்.

 

“என்ன டி முறைக்கிற? நான் மட்டும் அந்த பிரசன்டேஷன் டெலிட் பண்ணாம இருந்திருந்தா.. மேலே இருக்கிற பவனன் சர் உனக்கு ஹெல்ப் பண்ணாம இருந்திருந்தா.. இன்னைக்கு உனக்கு அந்த சக்சஸ் கிடையாது..! பார்த்து பதிவுசெய் நடந்துக்கோ என்ட்ட” என்ற தம்பியின் தலையில் நான்கு கொட்டு கொட்டினாள். 

 

“விஷம் விஷம்..! அதுக்குதான் சனிக்கிழமை பாரட்டி தரேன்னு சொல்லி இருக்கேனடா. அன்னைக்கு கூட்டத்தோடு சேர்ந்து நீயும் சாப்பிட்டுக்கோ…. அவ்வளவுதான்..! அதுக்கு மேல ஒத்த காசு என்கிட்ட கேட்காத. ஏற்கனவே ராஜமாதா எனக்கு கொடுக்கிற காசுல குறைச்சிட்டாங்க தெரியுமா?” என்ற அவள் மூக்கை உறிஞ்ச…

 

“அப்படியா ம்மா?” என்று அக்காவின் பேச்சை நம்பாமல் அம்மாவிடம் கேட்டான். 

 

“புளுகுறா டா தம்பி. எப்பொழுதும் ஆயிரம் ரூபா பெட்ரோலுக்கும் சேர்த்து கொடுப்பேன் இல்ல டா. அதுல ஒரு நூறு ரூபா ரெண்டு நாளைக்கு முன்னாடி காய்கறி காரருக்கு கொடுக்கணும்னு வாங்கிட்டேன். அதுக்கு இப்படி புழுகுது பாரு புழுகு மூட்டை” என்று அவர் மகளை பேச..

 

“அதானே பார்த்தேன்..! எங்க அம்மா கணக்குல புலி ஆச்சே. ஆனா எப்படி மா இவள நீ பெத்த? கணக்குனாலே காது தூரம் ஓடுகிறாளே” என்று சிரித்தான் அவன். 

 

“ஆமா டா. கணக்கு தெரியாம தான் இந்த டிஷ்ஷுக்கு இவ்வளவு இன்கிரிடியன்ஸ்னு அளந்து போடாம எல்லாம் குத்துமதிப்பா போட்டு நான் வேலை செய்றேன்” என்று கடுப்பாக கேட்டவளிடம்..

 

“அது தாண்டி கிருத்து எனக்கும் புரிய மாட்டேங்குது? பிளஸ் டூலல மேத்ஸ் குரூப் எடுக்கல.. சைன்ஸ் குரூப் தான் எடுத்த? அப்புறம் எப்படி இவ்ளோ பெர்பெக்ஷனா இருக்கு ஒன் டிஷ் எல்லாம்..?? ஆஹான்… கண்டுபிடிச்சிட்டேன் ஏன்னா நீ ஒரு சாப்பாடு ராமி..!” என்றவனை,

 

அவள் பதில் பேச.. இவன் திரும்ப பேச.. இவர்கள் ரெண்டு பேரையும் சிவகாமி பேச என்று அந்த இரவு அவர்களின் கூட்டுக்குள் இனிய உறவாய் அவர்களுக்கு மட்டுமே அழகாய் நகர்ந்தது..!?

 

ஆனால் அதற்கு எதிர்பதமாக உள்ளே மூடும் வெறுமையையும் உறவுகளால் உண்டான கசப்பையும் மென்று விழுங்க முடியாமல் தவியாய் தவித்து‌‌.. மூச்சை விடாமல் மூச்சு முட்ட.. அந்த சிறிய வீட்டினில் இருக்க முடியாமல் படார் என்று கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த வாஹீஸ திரிபுரபவனனோ அந்த இருளில் நிலவில்லா வானத்தையும் அதில் ஒளிர்ந்த நட்சத்திரங்களையும் பார்த்தபடி நின்று இருந்தான்.

 

நேரம் 11:30 கடந்து கொண்டிருந்தது. “டேய் நீ இன்னும் தூங்கலையா?” என்று தம்பியிடம் கீர்த்தி கேட்க..

 

“இல்லடி..! நாளைக்கு மேக்ஸ்ல டெஸ்ட் இருக்கு. கண்டிப்பா நல்ல மார்க் ஸ்கோர் பண்ணனும். இன்னும் ஒரு செப்ட்டர் மட்டும் இருக்கு. நான் முடிச்சிட்டு தூங்குறேன். நீ தூக்கம் வந்தா தூங்கு.. நான் போய் ஹாலில் உட்கார்ந்து படிக்கிறேன். உனக்கு லைட் எரியுது டிஸ்டர்பா இருக்கா?” என்று கேட்டான் வேலன். 

 

பெரும்பாலான நேரங்கள் இரண்டும் எலியும் பூனையுமாய் சண்டை பிடித்துக் கொண்டாலும், சில நேரங்கள் அவன் அக்காவை தாங்குவதும்.. இவள் தம்பியை பாதுகாப்பதுமாய் என்று உள்ளூரா இருக்கும் அந்த சகோதர பாசம் வெளிப்படும், சிவகாமியே அதை வியந்து பார்ப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..!!

 

எல்லார் வீட்டிலும் நடப்பது தானே அது..!

 

“இல்ல இல்ல ஹால்ல உட்கார வேணாம். நீ ரூம்லேயே உட்கார்ந்து படி. எனக்குமே கொஞ்சம் தூக்கம் வரல.. அப்படியே கொஞ்சம் மாடியில உலாத்திட்டு வரேன். கதவு வெளியில சாத்திட்டு போறேன் டா” என்றவள் கூடத்து விளக்கை அணைத்து விட்டு வெளியில் கதவை சாத்திவிட்டு, மெல்ல மாடி ஏறி வந்தாள்.

 

முதலில் பார்த்தது பவனன் வீட்டை தான். அவனது வீடோ சாத்தி இருந்தது. விளக்கும் அணைக்கப்பட்டு இருக்க.. “தூங்கிட்டான் போல..!” என்றவள் மெல்ல அங்கேயே நடை பயின்று கொண்டிருந்தாள்.

 

மாடியில் குறுக்கும் நடுக்குமாக மெல்ல காற்றை ஆழ்ந்து சுவாசித்து நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று தண்ணீர் தொட்டி பக்கம் பார்க்க.. அங்கேயே ஒரு உரும் அமைந்திருப்பது கண்டு முதலில் திட்டிக்கிட்டாலும், கூர்ந்து பார்த்தவளுக்கு அது பவனன் என்று தெரிந்ததும் ஒரு மெல்லிய அதிர்ச்சி..!!

 

அதிலும் அன்று தான் உட்கார்ந்தது போலவே தலையை அன்னார்த்தி வைத்து கண்களை மூடி காதுக்கு ஹெட்போனை சொருகி இருந்தான் ஏதோ பாட்டு கேட்கிறான் போல..

 

ஆனால் அதையும் தாண்டி அவன் அமர்ந்திருந்த விதமும்.. கண்களை மூடி இருந்தாலும் அவன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு வலியும் அவளுக்கு அவளையே நினைவூட்டியது.

 

அவனை தொந்தரவு செய்யாமல் சென்று விடத்தான் எண்ணினாள்..!?

 

எண்ணி நடந்தும் விட்டாள், அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே…!

 

ஆனால் 10 அடிக்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை..!!

 

ஏதோ ஒன்று அவளை இழுத்தது அவன் பால்..!!

 

ஏதோ ஒன்று அவளை இறுக்கிப்பிடித்தது நகர விடாமல்..!!

 

அந்த ஏதோ ஒன்று ஏதேன்று ஆராய விருப்பம் இல்லாமல்.. ஒரு பெருமூச்சு விட்டவள் மெல்ல நடந்து அவனுக்கு சற்று இடைவெளியை விட்டு அமர்ந்து கொண்டாள், அன்று அவனைப் போலவே..!!

 

அருகில் அவள் அமரும் அரவத்தில் ச

ட்டென்று கண்விழித்து முகத்தை திருப்பி பார்த்தான் பவனன்.

 

இருவர் விழிகளும் விலங்கிட்டுக்கொள்ள..

 

அங்கே மௌனங்கள் பாஷையாகி போனது…!!

 

தொடரும்..

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top