Share:
Notifications
Clear all

காமன் 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

14

 

 

 

அந்த காவல் நிலையத்தினை‌ அனுமானித்தவன் “நீ போய் என்னன்னு ஃபர்ஸ்ட் கேளு.. நான் பின்னாடி வரேன்” என்று அவளை அனுப்பி வைத்தான் முதலில் கதிர்காமன்.

 

 

 

அவளும் அந்த இன்ஸ்பெக்டரிடம் தன்னை அறிமுகப்படுத்தி என்ன விஷயம் எதற்காக என் தம்பியையும் அவன் நண்பர்களையும் கைது செய்தீர்கள் என்று விசாரித்தாள்.

 

 

 

“இவங்க எல்லாம் குடிச்சி கூத்தடிச்சிட்டு.. கூடவே போதை போதைப் பொருளும் யூஸ் பண்ணி இருக்கானுங்க.. அந்த ஹோட்டலுக்கு வந்த பொம்பள புள்ளங்க கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ஹோட்டல் மேனேஜர் கால் பண்ணி சொன்னதுனால அரெஸ்ட் பண்ணியிருக்கேன்” என்றார் தெனாவட்டாக.. வாயில் அவள் முன்னே பீடாவை வைத்து குதப்பிய படி..!

 

 

 

ரதியோ “அதெல்லாம் வாய்ப்பே இருக்காது சார். நீங்க பொய் சொல்றீங்க. என் தம்பியும் அவன் ஃப்ரெண்ட்ஸ் அப்படிப்பட்டவங்க இல்ல. என்னனு நீங்க நல்லா விசாரிக்க சொல்லுங்க” என்றாள் அழுகையும் கோபமுமாக..

 

 

 

இன்ஸ்பெக்டரோ “இந்தாமா.. எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? பாரும்மா.. நல்லா விசாரிச்சு தான் கேஸ் ஃபைல் பண்ணியிருக்கோம்.. சும்மா நச்சு நச்சுன்னு எதுவும் பேசாதே..! வீட்டுக்கு தகவல் கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு. அது மாதிரி கொடுத்துட்டோம் நாளைக்கு கோர்ட்ல ஆஜர் படுத்திருவோம். அங்க வந்து நீ பேசிக்கோ” என்று அவளை ஒருமையில் சாடி விரட்டி விட முயன்றார், வாயில் பீடாவை குதப்பியபடி..!

 

 

 

அதிலும் அந்த இன்ஸ்பெக்டரின் துச்சாதன பார்வையும் அவனின் பேச்சும் சுத்தமாக சரியில்லாததை உணர்ந்தாள் ரதி.

 

 

 

“எந்த ஆதாரத்தை வச்சு நீங்க அவங்களையெல்லாம் கைது பண்ணீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று குரல் வந்து திக்கில் பார்த்தவன், யோசித்த அந்த பீடா வாய் இன்ஸ்பெக்டருக்கும் கதிர்காமனை சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை.

 

 

 

அங்கே ஒரு கையை பாக்கெட்டில் விட்டபடி அவர்களை நோக்கி அழுத்தமான நடையுடன் வந்தான் கதிர்காமன்.

 

 

 

“ட்ரக்ஸ்னு சொல்றீங்க நார்கோட்டி டிபார்ட்மெண்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?” என்று‌ கேட்டான் காமன்.

 

 

 

“இப்ப தான்.. அரெஸ்ட் பண்ணோம். இன்னும் சொல்லல” என்றான் அந்த பீடா வாய் இன்ஸ்பெக்டர்.

 

 

 

“சார் பொய் சொல்றார்.. அரெஸ்ட் பண்ணி 45 மினிட்ஸ்க்கு மேல ஆச்சு.. எனக்கு போன் வந்து அதுக்கப்புறம் நான் இங்கே கிளம்பி வந்தேன்”

 

 

 

“ஓஹ்.. அப்ப ஃபர்ஸ்டே நீங்க கொடுத்த இன்ஃபர்மேஷனே தப்பு” என்று அந்த இன்ஸ்பெக்டரை காமன் ஏற இறங்க பார்த்தான்.

 

 

 

“சார் எந்த ஹோட்டல்ல வச்சு அரெஸ்ட் பண்ணீங்க?” என்று சற்று நக்கலாகவே கேட்க..

 

 

 

“எதுக்கு சார் அதெல்லாம் கேட்கிறீங்க? நீங்க யாரு முதல்ல இப்படி குறுக்கு விசாரணை பண்றீங்க?” அதெல்லாம் உங்களுக்கு சொல்ல முடியாது” என்றான்‌ திமிராக..!

 

 

 

“ஓஹ்.. அப்போ எந்த டீடெயில்ஸும் நீங்க கொடுக்க மாட்டீங்க. ஆனா இவங்க தான் குற்றம் செஞ்சாங்கன்னு எஃப்.ஐ.ஆர் போடுவீங்க.. அப்படித்தானே? இப்ப கேட்குறதுக்கு பதில் சொல்ல முடியுமா முடியாதா?” என்று‌ கதிர்காமனும் சற்று அதிகாரமாகவே கேட்க..

 

 

 

“ஓ.. என்னையே நீ அதிகாரம் பண்றியா? நீ அவ்வளோ பெரிய ஆளா நீ.. அதெல்லாம் சொல்ல முடியாது.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. முதல்ல இந்த பொண்ண கூட்டிட்டு கிளம்பு” என்று விரட்டினான்.

 

 

 

இங்கே நடந்தவற்றையெல்லாம் ராகவ்வும் அவன் நண்பர்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். அதில் அவன் நண்பன் வருணும் ஒருவன்.

 

 

 

ஆனால் அவனோ போலீஸ் விசாரித்தபோது தன் அப்பாவின் பழைய நம்பரை கொடுத்தான். வீட்டிற்கு விஷயம் தெரிந்தால் அவர் தோலை உரித்து விடுவார் என்ற பயத்தில்..

 

 

 

இப்படி விவகாரமானது வருணின் தந்தைக்கு தெரியவே தெரியாது.

 

 

 

ராகவ் தைரியமாக ஹோட்டல் பெயரை சொன்னான்.

 

 

 

உடனே அந்த இன்ஸ்பெக்டருக்கு கோபம் பெருக எழுந்து ராகவ்வை அடிக்கச் சென்றான்.

 

 

 

“ஹலோ.. இன்ஸ் எங்க அடிடா பாப்போம். அவன் மேல ஒரு அடி பட்டதுனா நீ ரொம்ப வருத்தப்படுவ பின்னால..” என்று அவனுக்கு முன் வந்த நின்றான் கதிர்காமன்.

 

 

 

“ஓஹ்.. நீ அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா? ஏய் என்ன திமிரா? உன்னையும் இந்த கேஸ்ல கோர்த்துவிட்டு சேர்த்து உள்ள தள்ளிவிடுவேன் பார்த்துக்கோ..” என்றான் தன் கையில் இருந்த லத்தியை அவன் முன் ஆட்டி..

 

 

 

‘உனக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட்டட் டா’ என்று மனதுக்குள் நினைத்தாள் ரதி.

 

 

 

‘எப்படி இந்த இன்ஸ்பெக்டருக்கு த லெஜன்ட் லாயர் கதிர்காமனை தெரியாமல் போனது?’ என்று வெகுவாக யோசித்தாள் ரதி.

 

 

 

அந்த இன்ஸ்பெக்டர் ஒரு வாரம் முன்னால் தான் மகாராஷ்டிராவின் வேறு ஒரு மூலையில் இருந்து மும்பைக்கு மாற்றுதல் ஆகி வந்திருந்தான்.

 

 

 

“அப்படியா? எங்க முதல்ல என் மேல் ஒரு சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணு பார்க்கலாம்..” என்று கதிர்காமன் கைகளைக் கட்டி அவன் முன் தைரியமாய் நிற்க..

 

 

 

“ஓ.. நீ அவ்ளோ பெரிய ஆளா?”

 

 

 

“ஆமா.. இந்தா நீ வேணா நான் யாருனு பாரு?” என்றவன் தன் ஐடி கார்ட்டை காட்ட அந்த இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பதற்றத்துடன்

 

 

 

“சார் வக்கீலா?” என்றான்.

 

 

 

“எஸ்.. இங்க இருக்கிற ஒரு பையனுக்கு கூட உடம்புல சின்ன கீறல் கூட விழுந்திருக்க கூடாது. நான் வர்ற வரைக்கும்” சொல்லிட்டு வெளியே வந்து அந்த ஹோட்டலுக்குச் சென்றான். போகும்போதே பார்த்திவ்வுக்கு அழைத்து அந்த ஹோட்டலுக்கு வர செய்தான்..

 

 

 

இவன் சென்ற பொழுது பார்த்திவ்வும் சில பௌனஸர்ஸோடு அந்த இடத்திற்கு வந்திருந்தான்.

 

 

 

காரில் இருந்து இறங்கிய ரதியை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

 

 

 

ரதியும் அவனைப் பார்த்து ஒரு நிமிடம் தயங்கினாலும் அடுத்த நிமிடம் அமைதியாக வந்து கதிர்காமன் அருகில் நின்றாள்.

 

 

 

‘என்னடா நடக்குது இங்க?’ என்று புரியாமல் பார்த்திவ் இருவரையும் மாறி மாறி பார்க்க..

 

 

 

கதிர்காமன் தொண்டையை செறுமி “பார்த்தா..” என்று இழுக்க.. அவனோ அமைதியாக நின்றான். ஆனால் அவன் மனமும் அமைதியாக இல்லை.

 

 

 

‘இந்த பொண்ணு நம்ம சாரோட எப்படி? அதுவும் இந்த நேரத்துல.. என்ன பிரச்சனையா இருக்கும்?’ என்று தனக்கு தானே யோசித்தானே தவிர வாய் திறந்து கேட்கவில்லை.

 

 

 

“ரொம்ப யோசிக்காத..! மூளை உருகி காது வழியா வழிஞ்சுட போகுது. போய் இந்த ஹோட்டல் மேனேஜரை இழுத்துட்டு வா” என்று கட்டளையிட்டான் கதிர்காமன்.

 

 

 

பவுன்ஸர்கள் படை சூழ அந்த ஹோட்டலில் நுழைந்தான் கதிர்காமன் ரதியோடு..

 

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top