Share:
Notifications
Clear all

காமன் 16

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

16

 

 

 

“நீ இப்ப இந்த பசங்கள ரிலீஸ் பண்ணலேனா உனக்கு மெமோ கொடுக்க ஏற்பாடு பண்ணிடுவேன்.. அதுக்கு அப்பறம் என்ன நடக்கும்னு உனக்கு தெரியும்.. விசாரணை கமிஷன் வச்சு.. உன்னை டி புரோமோட் கூட பண்ண சான்ஸஸ் இருக்கு” என்றான் பார்த்திவ். அங்கே கதிர்காமன் அதிகம் பேசவில்லை அவன் கண்களை காட்ட அதை புரிந்துக் கொண்டு பார்த்து அடுத்தடுத்து இன்ஸ்பெக்டரிடம் உரையாடினான். தேவையான இடத்தில் மட்டும் கதிர்காமன் தான் யார் என்பதை அந்த இன்ஸ்பெக்டரிடம் நிரூபித்தான்.

 

 

 

“இல்ல சார் எஃப்.ஐ.ஆர் போட்டாச்சு.. வேற ஒன்னும் பண்ண முடியாது சார் இப்போ” என்று அப்பொழுதும் தான் தவறானவர்களை கைது பண்ணி இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் தான் பேசினான்.

 

 

 

“அது எப்படி சார் தப்பே செய்யாதவங்க மேல நீங்க எஃப்.ஐ.ஆர் போட முடியும்?” என்று ரதி ஆற்றாமையுடன் கேட்டாள்.

 

 

 

அவனும் கதிர்காமன் அருகில் இருக்கும் ரதியை ஒன்றும் செய்ய முடியாமல் முறைப்போடு பார்த்தான்.

 

 

 

“யோவ் இன்ஸ்.. அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இந்த பசங்க வீட்டுக்கு போகணும்.” என்றான் பார்த்திவ்..

 

 

 

இப்பொழுது அவனை முறைத்து பார்த்துவிட்டு கெத்து காட்டியவன் "போட்ட எஃப். ஐ. ஆர் ஐ என்ன செய்வது?" என்றான் சற்றே நக்கலோடு..!

 

 

 

“அந்த எஃப் ஐ ஆர் ஐ கிழிச்சு போடுறது” என்று அவனுக்கு மேல் நக்கலாக பார்த்திவ் கூற..

 

 

 

“நோ பார்த்திவ்.. இந்த ஸ்டேஷனில் இருந்து எஃப்ஐஆர் தொலைஞ்சு போச்சு.. இல்ல இல்ல நம்ம இன்ஸு தொலைச்சுட்டாரு சோ அவர் மேல ஒரு கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணுங்க பார்ப்போம்” என்றான் இன்ஸ்பெக்டரை கூர்ந்து பார்த்தபடி..

 

 

 

எஃப்.ஐ.ஆர் காணாமல் போய்விட்டது என்றால் அது பெரிய பிரச்சனையை உண்டு செய்யும் என்று புரிந்த இன்ஸ்பெக்டரோ தன் முன் இருப்பவன் சாதாரணமானவன் அல்ல என்று இப்பொழுது புரிந்துக் கொண்டான்.

 

 

 

“வீடியோல இருக்குற பசங்கள அரெஸ்ட் பண்ணி மறுபடியும் எப்.ஐ.ஆர் போட்டு கோர்ட்ல புரொடியூஸ் பண்ணிக்கோ” என்றான் கதிர்காம்ன்.

 

 

 

“இல்ல.. அவங்க எல்லாம் பெரிய இடம்.” என்றான் இன்ஸ்பெக்டர் மெல்லிய குரலில்..

 

 

 

“ஓ தப்பு பண்ணவங்க பெரிய இடமா இருந்தா அவங்க தப்பை நீங்க மறைச்சிடுவீங்க? ஆனா தப்பே செய்யாத அப்பாவிங்க மேல அந்த தப்பை போட்டு அவங்கள உள்ள தள்ளிடுவீங்க.. அப்படி தானே? என்ன சார் உங்க நியாயம்? நீங்க அவங்களுக்கு என்ன வேணும்னாலும் சாதகமா பண்ணுங்க.. அதுக்காக இப்படி ஒன்னும் இல்லாத எங்க மேல பாதகத்தை செய்வீங்களா?” என்று ஆதங்கமும் கோபமுமாக வெடித்தாள் ரதி.

 

 

 

தன் ஸ்டேஷனிலே வைத்து தன்னையே இப்படி மாற்றி மாற்றி கேள்விகளால் துளைத்தெடுக்கும் இவர்களை என்ன செய்வது என்ற முறைப்போடு பார்த்திருந்தான் அந்த பீடா வாய் இன்ஸ்பெக்டர்.

 

 

 

இது அவனது ஸ்டேஷன் என்பதால் தான் இத்தனை அடக்கமாக கேள்விகளை தொடுத்திருக்கிறான் காமன். இதுவே வழக்காடு மன்றம் என்றால் அவன் கேள்விகளை கேட்கும் விதமே வேற விதமாக இருந்திருக்கும்..

 

 

 

“ஓ.. மாமா வேலையா.? உனக்கு எல்லாம் வெட்கமா இல்ல.. யாரோ பண்ண தப்புக்கு இவங்கள அரெஸ்ட் பண்ணிட்டு வந்திருக்க.. அவங்க லைஃப் பத்தி நினைச்சி பார்த்தியா..? காசு கொடுத்தா போதும் உன் அம்மா அப்பா ஏன் பொண்டாட்டி மேல கூட கேஸ் ஃபைல் பண்ணுவ அப்படிதானே? ஒழுங்கு மரியாதையா அவங்கள ரிலீஸ் பண்ற வழிய பாரு.. இல்ல உன் தலையில நீயே மண்ண அள்ளி போடுற மாதிரி பண்ணிடுவேன்.” என்று தன் இருக்கையில் இருந்து முன்னே வந்து அந்த டேபிளில் கைவைத்து இன்ஸ்பெக்டரை கூர்ந்து நோக்கியவாறு கதிர்காமன் கூற

 

 

 

அந்த இன்ஸ்பெக்டர் கதிர்காமனின் அதிரடியில் வெல வெலத்து போனான். வேறு வழியில்லாமல் அவன் அரெஸ்ட் செய்த எல்லா பசங்களையும் ரிலீஸ் செய்தான்.

 

 

 

ரதி ஓடிச் சென்று தம்பியை இறுக்க அணைத்துக் கொண்டாள். அவனும் ரதியை அணைத்து “சாரிக்கா இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் அந்த பர்த்டே பார்ட்டிக்கு போய் இருக்கவே மாட்டேன்” என்று அழுகுரலில் மன்னிப்பு கேட்டான்.

 

 

 

“யாரோ செஞ்ச தப்புக்கு நீ ஏன் டா என்கிட்ட மன்னிப்பு கேட்குற? விடு விடு.. எல்லாம் தான் முடிஞ்சு போச்சே” என்று தம்பியின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

 

 

 

அதன் பின் அங்கிருந்த சில ஃபார்மாலிட்டிஸ் முடித்துக் கொண்டு இப்படி ஒரு எஃப் ஐ ஆர் போட்டதாகவே ரெக்கார்டில் பதிவு செய்யப்படாமல் இருக்க என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் கதிர்காமனும் பார்த்திவ்வும் செய்து விட்டே மற்ற அனைவரையும் அனுப்பி வைத்தார்கள்.

 

 

 

அதற்குள் வருணை காணவில்லை என்று அவன் ஃபோனுக்கு அவன் அப்பா கால் செய்ய.. இப்படி மாட்டிக் கொண்ட விஷயத்தை மறைத்து “வீட்டுக்கு கிளம்பிட்டேன் வந்துட்டே இருக்கேன் பா” என்று ரதியிடம் சொல்லிக் கொண்டு வருண் புறப்பட்டான்.

 

 

 

தங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றவளை தன் வீட்டிற்கு வம்படியாக அழைத்து வந்தான் கதிர்காமன்.

 

 

 

பார்த்திவ் காவல் நிலையத்திலிருந்து கதிர்காமனிடம் விடை பெற்று பவுன்சர்களோடு சென்றுவிட்டான்.

 

 

 

அவன் வீட்டிற்கு வரும் வழியில் ரதியிடம் அவன் தம்பி தனக்கு நடந்ததை நினைத்து அழுதுக் கொண்டே தான் வந்தனர். ரதி என்னதான் தட்டி கொடுத்து ஆறுதலாக சொன்னாலும் அவர்களால் அதில் இருந்து மீள முடியாமல் அழுதுக் கொண்டே தான் இருந்தனர்.

 

 

 

“நாங்க யாருமே தப்பு செய்ல ரதி..! இத்தனைக்கும் பார்ட்டில வெறும் சாஃப்ட் டிரிங்ஸ் கேக் டின்னர் தான் பரிமாறுனாங்க. ஆனா எங்கள பார்த்து அந்த இன்ஸ்பெக்டர் போதை மருந்து பயன்படுத்துறோம்னு சொல்லி எவ்வளவு பேசினான்‌ தெரியுமா? நாங்க ரொம்ப பயந்துட்டோம் நார்கோடிக்ஸ்ல புடிச்சு உள்ள போட்டான்னா.. அவ்வளவுதான், என் மொத்த லைஃப் போச்சுன்னு நானும் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அழுதுக்கிட்டு பயந்துக்கிட்டே இருந்தோம். நல்லவேளை நீ இந்த சாரோட வந்து எங்கள காப்பாத்திட்ட..” என்று அக்காவிடம் பேசியவன் வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த கதிர்காமனை பார்த்து நூறாவது முறையாக அத்தனை நன்றிகளை உதிர்த்தான்.

 

 

 

“ஓஹ் பாய்.. எனஃப்.. எனஃப்..! உன் நன்றியை வார்த்தையில் சொல்றதை விட வாழ்க்கையில் செஞ்சு காட்டுனா நல்லா இருக்கும்” என்றவன் குறிப்பால் ரதியை பார்க்க அவளோ சற்றென்று தலையை புரிந்துக் கொண்டாள்.

 

 

 

வீட்டிற்கு முன் மூவரும் நின்றிருக்க.. மற்றொரு முறை முழுமனதுடன் நன்றி சொல்லிவிட்டுச் செல்ல முயன்ற இருவரையும் தன் வீட்டிற்கு உள் அழைத்தான் கதிர்காம்ன்.

 

 

 

ரதிக்கு செய்த இந்த உதவி அவனின் மனதுக்கு நிறைவாக இருந்தது. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. ஏதோ வார்த்தையில் சொல்லி விவரித்திட முடியாத அளவிற்கு அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது.. அப்போது தான் அவர்கள் இருவரும் இருக்கும் நிலையில் எதுவும் சாப்பிட்டு இருக்கமாட்டார்கள் என்று எண்ணி அவர்கள் மறுக்க மறுக்க உள்ளே அழைத்துச் சென்று உணவு பரிமாறி அதற்கு பின்னே தன் காரில் அழைத்துச் சென்று அவர்கள் வீட்டில் விட்டான்.

 

 

 

“கொஞ்ச நாளைக்கு நீ எங்கயும் வெளில போகக்கூடாது. இப்ப மாட்டுனவங்க சும்மா இருக்க மாட்டாங்க.. திரும்பவும் எதுலையாவது உங்களை இழுத்து விட கோர்த்து விட நினைப்பாங்க அதனால ரொம்ப ஜாக்கிரதையா இரு” என்று அத்தனை அறிவுரை கூறினான் ராகவ்வுக்கு.

 

 

 

ஒரே நாளில் கதிர்காமனை அத்தனை பிடித்து விட்டது ராகவ்வுக்கு.

 

 

 

வீட்டில் அத்தனை புகழ்ச்சியாக கதிர்காமன் பற்றியே அளவில்லாமல் பேசிக் கொண்டே இருந்தவனிடம் “டேய் போதும்டா தூக்கம் வருது. கொஞ்ச நேரம் தூங்கலாம்” என்று ரதி கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

 

 

 

சிறிது நேரம் வாய்மூடி இருந்தவனோ, மீண்டும் விழித்து ரதியின் கையை சுரண்டி “ஹே ரதி சிவனனேனு.. நம்ம வீட்டுப் பிரச்சனை இவர்கிட்ட சொல்லி கேஸ் போட்டு இருக்கலாம்.. கண்டிப்பா ஜெயிச்சு கொடுத்திருப்பார். வாட் அ டேலண்ட் மேன்” என்றான் அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததை போன்று முகபாவனையோடு..

 

 

 

“அட போடா அன்னைக்கு நான் போய் பார்த்த வக்கீலே இவர் தான் டா ராகவ். காசு அதிகமா கேட்டாருன்னு சொன்னேன்ல.. அது இந்த மனுஷனே தான்” என்றாள் ரதி.

 

 

 

ராகவ்வோ திடுக்கிட்டு “அன்னைக்கு வீட்டுக்கு வாதாடுறதுக்கு லட்சக்கணத்துல கேட்ட வக்கீலும்.. இன்னைக்கு எனக்கு ஃப்ரீயாவே இவ்ளோ உதவிகளை செஞ்ச வக்கீலும் ஒருத்தரா?” என்று அதிர்ந்தான்.

 

 

 

மனதளவில் தம்பிக்கு எந்த பிரச்சனையும் வராமல் காத்த கதிர்காமன் மீது அத்தனை நன்றி உணர்ச்சி பெருகியது பெண்ணவளுக்கு. ஆனால் அந்த நன்றி உணர்ச்சியை அவன் காட்ட சொன்ன விதத்தில் மனம் நொந்து போனாள்..!

 

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top