11
“நேம்?”
“ரதி சிற்பிகா.. சார்..”
“போட்டாச்சா?” என்றவனின் தெள்ள தெளிவான தமிழ் உச்சரிப்பில் அவள் தேகம் உலுக்கி போட அவனை அதிர்ந்து பார்த்தாள் ரதி.
“சார்??” என்று கண்கள் சற்றே பீதியுடன் தன்னை பார்க்கும் பெண்ணவளை கண்டு உதட்டை வளைத்தவன்
“அந்த கார்ப்பரேட் கம்பெனி மேல கேஸ் போட்டாச்சானு கேட்டேன்?” என்றான்.
“இன்னும் இல்ல சார்.. யாருமே அந்த கேஸை எடுத்துக்கல. என்னோட ப்ரொஃபசர்ஸ் நிறைய பேர் கிட்டயும் இந்த கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணுனேன். அவங்க எல்லாம் இதுல ஜெயிக்க வாய்ப்பே இல்லைன்னு கேஸ் எடுக்க மறுத்துட்டாங்க” என்றாள் வருத்தத்தோடு..
“அப்போ ஃபிரெஷ் தான் இல்லையா?” என்றதும்.. அவள் உள்ளமோ ‘என்ன இவன் இப்படி இரட்டை அர்த்தத்திலேயே பேசுகிறான்?’ என்று அதிர அவனை சற்று முறைத்து பார்த்தாள்.
“வாட் ஐ மீன்ட்.. நாமதான் இப்போ ஃபர்ஸ்ட் ஃபிரெஷ்ஷா கேஸ் போட போறோம் இல்லையா?” என்றதும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
“குட்.. ஃபர்ஸ்ட்.. ஃப்ரெஷ்..! ம்ம்ம்.. இன்ட்ரஸ்டிங்..!” என்றான் அவளை உச்சாதி பாதம் வரை பார்வையாலேயே அளந்து..!
அவளுக்கோ அவன் பார்வையின் வீச்சில் மேனியில் கம்பளிப்புழு ஊறுவது போல கொஞ்சம் அசூசையாக உணர்ந்தாள்.
என்ன இது ? நாம ஏன் இப்படி உணர்கிறோம் இவன் கிட்ட?? வெளி பார்வைக்கு நார்மலா தான் இருக்கு ஆனா இவன் பார்வை ஏதோ சரி இல்லை என்று அவளது உள் மனம் உணர்த்த..
“நான் மத்த டீடைல்ஸ் எல்லாம் சொல்லவா சார்?” என்று இவளே முன் வந்து கேட்டாள்.
அவனும் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை பார்த்தான்.
குறிப்பாக உணர்த்துகிறானாம் தனக்கு நேரமில்லை என்று..!
“ஃபைல் எதுவும் கொண்டு வந்திருக்கியா?” என்று கேட்க..
தன் கையில் இருந்த அந்த கோப்பையை எடுத்து அவன் முன்னே பவ்யமாக குனிந்து வைத்தாள்.
பத்து நிமிடம் தான் ஓட்டிருப்பான் அந்த கோப்பையை அவன் கண்களால்.. பின் தூக்கி அவள் முன்னே போட்டவன் “ஜெயிக்கிறது கஷ்டம் தான். முயற்சி செஞ்சா முடியும். ஆனா…” என்று இடக்கு வைத்தான்.
“ஆனா.. ஆனா.. என்ன சார்?” என்று தவித்தாள் பெண்.
அவளுக்கு எப்படியாவது இந்த வீட்டை மீட்டு விட வேண்டும் என்று பரிதவிப்பு உள்ளுக்குள்.
எத்தனை மாதங்களாக இந்த வழக்கை யாராவது எடுத்துக் கொள்ளுவார்களா? என்று எத்தனை வழக்கறிஞர்களை தேடி தேடி பார்த்து அலைந்து சோர்ந்து இருப்பாள்.
அனைவரும் ஒன்று போல கூறியது “உங்க அம்மா கையெழுத்து மட்டும் இல்ல கைநாட்டும் இதுல இருக்கு. கையெழுத்தாவது நம்ம ஃபோர்ஜரி பண்ணி வாங்கினாங்கன்னு சொல்லலாம். கைநாட்டும் இருக்கே.. ம்ஹூம்.. இதுல ஜெயிக்கிறது கஷ்டம். அதுவும் இல்லாம உங்க அம்மா அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஸாக்ஷன் கரெக்டா ஆயிருக்கு பாரு மா” என்று வழக்கில் உள்ள குறைகளை கூறி இந்த வழக்கில் ஜெயிப்பது சுலபம் அல்ல என்று ஒன்று போல அனைவரும் கூறியிருந்தனர்.
அஸ்டதமமான இடத்தில் ஒரு துளி ஒளி ஊடுருவி வருவது போல இன்று கதிர்காமனின் ஓர் வார்த்தையில் அவளது உள்ளத்தில் ஒரு நம்பிக்கை உணர்வு வந்தது.
‘கூடவே எத்தனை பெரிய வல்லுநன் இவன் வழக்காடுவதில்… கண்டிப்பாக நமக்கு சாதகமாக ஏதாவது ஒரு பாயிண்டை கண்டுபிடித்து இருப்பான். இவன் மட்டும் இந்த தேவை ஜெயிச்சு கொடுத்து விட்டால்…’ என்று அவள் உடனடியாக பல கோவில்களுக்கு.. பல தெய்வங்களுக்கு.. பல பிரார்த்தனைகளை செய்துக் கொண்டே இருக்க.. அவளின் முகத்தை கொண்டு அகத்தைப் படித்தவன்,
“உன் வேண்டுதல் எல்லாம் அப்புறம் வச்சுக்கோ. இப்போ நான் சொல்றதை நல்லா காதுல வாங்கு..!” என்றவனின் பேச்சில்.. அவள் தலையோ பொம்மை போல எல்லா பக்கங்களும் சரி சரி என்று வேகமாக ஆடியது.
“குட்..! வெரி குட்..! இப்படியே நான் சொல்ற எல்லாத்துக்கும் இந்த மாதிரியே நீ தலையை ஆட்டிட்டினா எனக்கு பிரச்சனை இல்ல..” என்றவனின் முகத்தில் கள்ளம் குடி கொண்டதை பாவம் கன்னியவள் அறியவில்லை.
“என்னன்னு சொல்லுங்க சார் நான் செஞ்சுடுறேன்..” என்று வாக்கு கொடுத்தவள் அறியவில்லை அவனிடம் கொடுத்தது வாக்கு இல்லை அவள் வாழ்க்கையை என்று..!!
தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றவன் மெல்ல இரு கைகளையும் உயர்த்தி நெட்டி முறித்தான், அவளின் மீது இருந்து பார்வையை விலக்காமல்.. அந்தப் பார்வையில் இருந்த விஷயத்தை பாவையவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒற்றை கையை பாக்கெட்டில் விட்டபடி மெல்ல அவளை நோக்கி நடந்து வந்தவன் “என்னோட ஃபீஸ் எவ்வளவுனு உனக்கு தெரியுமா?” என்று கேட்க அவளோ அதிர்ந்து இல்லை என்று இரு பக்கமும் தலை அசைத்தாள்.
‘இவனை பிடித்தால் போதும் வழக்கை நடத்தினால் போதும்..’ என்று அதை மட்டுமே குறியாக இருந்தவளோ இவனுக்கு ஃபீஸ் கொடுக்க வேண்டும் என்பதையே மறந்து இருந்தாள்.
அவள் வேண்டுமானால் மறக்கலாம். ஆனால் தன் குறி இரை ஒன்றே என்று இருக்கும் இந்த வேங்கை மறக்குமா என்ன?
“முதல்ல என்னோட ஃபீஸ் ஸ்ட்ரக்சர் கேளு. அதுக்கு அப்புறம் உன் விருப்பத்தை சொல்லு” என்றவன் ஸ்டைலாக நடந்து வந்து தன் மேஜையில் இருந்த இன்டர்காமில் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு “நான் ஒரு கேஸுக்கு எவ்வளவு ஃபீஸ் வாங்குறேன் டீடைல்ஸை எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வாங்க” என்று ஆணையிட்டான் ஆங்கிலத்தில்.
“அவங்க கொண்டு வருவாங்க அதுவரைக்கும் நீ உட்காரு” என்று தன் முன்னே இருந்த இருக்கையை அவன் காட்ட…
அவளோ பெரும் தயக்கத்தோடு அந்த மேசை முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அவன் முன்னே பிரசன்னமாகி அவன் கேட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்து விட்டுச் சென்றாள், அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்.
அவள் முன்னே அந்த காகிதத்தை நகர்த்தி வைத்தான்.
மெல்ல அவளை அழமாக பார்த்தவாறே அருகே சென்றவன், அவள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் வெகு அருகே நின்று மேசையின் மேல் நுனியில் அமர்ந்தவாறு அவளை குனிந்து பார்த்தான்.
அவன் எழுந்து வந்ததற்கே அவளுக்கு படபடப்பாக இருக்க.. தற்போது தன் அருகில் அமர்ந்து குனியவும் இன்னும் உள்ளுக்குள் படபடத்தது அவளுக்கு. அதையெல்லாம் அவனிடம் காண்பிக்காமல் அமர்ந்திருந்தாள்.
ஆணவனின் பிரத்யேக ஆண் வாசனை மட்டுமல்லாமல் அவன் உபயோகிக்கும் உயர்தர சென்டின் நறுமணமும் அவள் மூக்கை துளைத்தது.
“எடுத்துப் பாரு? ம்ம்ம்.. பேர் என்ன சொன்ன?” இடதுகை பெருவிரலால் அவன் தனது புருவத்தை நீவி விட்டவாறு கேட்க..
“ரதி சிற்பிகா” என்றாள் அவள் உள் நடுக்கத்தை காட்டாமல்.
எடுத்துப் பார்த்தவளுக்கோ தலையே சுற்றிக் கொண்டு வந்தது.
ட்ராவல்ஸ் பேக்கேஜ் போடுவது போல இவனும் அத்தனை பேக்கேஜ் போட்டு இருந்தான். அதாவது வழக்கை வழக்காட இவனது ஜூனியர்களுக்கு ஒரு மாதிரியான கட்டணம் காட்டப்பட்டிருந்தது.
அதுவே சற்று அனுபவம் உள்ளவர்கள் அந்த வழக்கை கையாண்டால்.. அதற்கு சற்றே ஒரு பெரும் தொகை..!
இல்லை இவர்களெல்லாம் வேண்டாம் எனக்கு. கதிர்காமனின் நேரடி அணுகுமுறை தான் வேண்டும் என்று கேட்டால்..
அதற்கு அவன் குறிப்பிட்டு இருந்த தொகையோ அவள் வீட்டை விற்று வரும் பணத்திற்கு சற்றே குறைவு..!
“எதே இவ்வளவு பணமா?” என்று அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட்டாள் பாவை.
“ஓஹ்.. அவ்வளோ ஜாஸ்தியாவா இருக்கு?” என்று அவள் அருகே குனிந்து அவனும் அந்த காகிதத்தை பார்க்க.. அவனின் அருகாமை அவளுக்கு என்னவோ செய்தது..!
“கொஞ்சமே கொஞ்சம் தான் அதிகம்” என்றான் கதிர்காமன் கண்களை சுருக்கி.
அவளோ “இல்ல.. கொஞ்சம் அதிகமல்ல. கிட்டத்தட்ட என் வீட்டை விற்றால் வரும் பணம் தான் உங்க ஃபீஸ்” என்றாள் மெல்லிய குரலில்..
“ஓஹோ.. அப்போ உன்னால இந்த ஃபீஸ் கொடுக்க முடியாதா?” என்று அவன் அப்பாவியாய் விழி விரித்து அதிர்ச்சியாய் கேட்டான்.
“இல்ல இயலாது சார்..” என்று அவள் மெல்ல தலையாட்டினாள்.
“அப்போ நான் ஒரு ஐடியா சொல்லவா?” என்றவன்,
“ஃபீஸூக்கு பதில் உன்னை தா…!” என்றதும் அவளோ இவனிடம் இதனை எதிர்ப்பாராமல்.. அதிர்ந்து எழுந்து அவனை விழி விரித்து வெறித்து பார்க்க…
அவளின் கை பிடித்து இருக்கையில் அமர வைத்தவன், “இப்படி ஷாக்கிங்கா பார்த்தா எப்படி? கேட்டதுக்கு பதில் வரணும்" என்று அவள் காதில் கிசுகிசுக்க.. அதில் உள்ளுக்குள் அவளுக்கு நடுங்கியது. அவனின் மூச்சுக்காற்றும் மீசை உராய்வும் அவளுள் வெம்மை படர்ந்தது.
"அதான் அப்பவே சொன்னேனே இயலாதுன்னு" என்று கூறியவள் அவனை தள்ள முயற்சிக்க.. அவளால் சிறிதும் முடியவில்லை.
"நான் ஃபீஸை கேட்கல.. அதுக்கு பதில் நான் கொடுத்த ஆஃபரை கேட்டேன்..” என்றவனுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள் ரதி.
“ம்ம்ம்.. அப்போ நீ சொல்ல மாட்ட.." என்று மீண்டும் அவள் காதருகே அவன் கிசுகிசுக்க.. அதில் விதிர்விதிர்த்து பயந்து அவள் திரும்ப, சரியாக அவனது மீசை மீது அவளது செவ்விதழ்கள் உரசி நிற்க..
செவ்விதழ்களின் மென்மையை அவனது கற்றை மீசை பதம் பார்க்க..
கருவிழிகள் இரண்டும் விரிய அவனைப் பார்த்தவாறே அவள் இருக்க.. உள்ளுக்குள் அவளுக்குள் ஒரு மின்சாரம் ஓடி மறைந்தது.
“என்ன ரதி.. இயலாதுனு சொன்ன.. இப்ப இதழாலேயே சம்மதம் சொல்லுற?”
ஒற்றை புருவத்தை தூக்கி சன்ன
சிரிப்போடு அவன் கேட்க.. ரதியோ தன் கீழ் உதட்டை பற்களால் கடித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அத்தோடு விடுவானா காமன் என்ன!!
"என்னை பிளேபாய் ரேஞ்சுக்கு அப்போ குற்றம் சாட்டிட்டு…. இப்ப நீயே கொடுக்கிறியே.. அதுவும் வித்தியாசமா மீசையில" என்று தன் மீசையை நீவி விட்டுக் கொண்டே அவன் கூற..
ரதிக்கு தான் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்ளுவது என்று தெரியவில்லை. அவன் சொல்வதெல்லாம் உண்மை தானே!!
எத்தனை வார்த்தை சாமார்த்தியன் இவன்..! இல்லையென்றால் இந்த மும்பையில் தமிழன் ஒருவன் ஜெயிக்க முடியுமா? இவ்வளவு சிறப்பாக தொழில் தான் செய்ய முடியுமா?
இப்போதைக்கு இவனிடம் வார்த்தை ஆடுவதை விட விலகிச் செல்வதே மேல் என்று எழுந்து அவள் அவனை சுற்றிக் கொண்டு செல்ல முயன்றாள்.
சட்டென்று அவள் கையை பிடித்து அவன் தடுத்து நிறுத்த "என்னை அப்படி எல்லாம் தவிர்க்க முடியாது ரதி. உன்னை ஃபர்ஸ்ட் டைம் அந்த ஹோட்டல்ல அந்த ஹோட்டல்ல அந்த டைம்ல பார்த்ததிலிருந்து எனக்கு உன் ஞாபகம் தான்" என்றவன் குரல் என்னவோ இலகுவாக இருந்தாலும் அதில் இருந்த அழுத்தம் அவளை திகைக்க வைத்தது.
“என் ஞாபகமா?” என்று திகைத்தாள்.
அவனை எந்நிலையில் சந்தித்தோம் என்ற ஞாபகம் வர.. அவள் முகம் சிவந்தது, அருவருப்பிலும்.. கோபத்திலும்..!
மெல்ல அவளின் கையை இழுத்துக் கொள்ள முயன்றாள். ஆனால் முடியவில்லை, அவனது முகத்தில் உள்ள இலகுத்தன்மை கைகளில் இல்லை. அது உடும்பு பிடியாக அவளது கையை பற்றி இருந்தது.
“நல்லா யோசிச்சுட்டு எனக்கு பதில் சொல்லு” என்றவன் அவள் கையில் தன் கார்ட் ஒன்றை திணித்தவன்,
“இது என் வீட்டு அட்ரஸ். நாளைக்கு ஈவ்னிங் உன்னை நான் அங்கு எதிர்பார்ப்பேன்” என்றான்.
அவளோ முடியாது என்பது போல பார்க்க.. அதிலும் இவ்வளவு கேவலமானவனா நீ என்பது போல முறைக்க..
“இதை வெளியில சொல்லி நீ பப்ளிசிட்டி தேடின அப்படின்னா ஐ டோன்ட் கேர். யாரும் உங்களை நம்ப மாட்டாங்க.. ஆனா அதற்கு பின் விளைவுகள் ?? உன் தம்பி.. இப்ப டுவல்த் இல்ல.. பப்ளிக் இல்ல..” என்றதும் விதர் விதிர்த்துப் போனாள் ரதி.
