17
அதே கதிர்காமனது வீடு..!
நேற்று போல இன்றும் ரதியவள் அதே பதற்றத்தோடு பயத்தோடு தான் அமர்ந்திருந்தாள் காமன் முன்..
ஆனால்.. நேற்று இருந்த பயம் வேறு இன்று இருக்கும் நிலைமை வேறு..!!
அவள் பேசவில்லை. அமைதியாக தன் கை கோர்த்தப்படி தலை குனிந்து அமர்ந்திருந்தாள்..
அவனோ வெகு நேரமாக அவளையே தான் பார்த்திருக்கிறான்..!
ஏதோ அந்த கால கண்ணதாசன் போல
ஒரு கோப்பையில் என் குடியிருப்பு..
ஒரு கோலமயில் என் துணை இருப்பு..
என்று பாடத் தான் இல்லை. மற்றப்படி அவனின் கையில் மின்னியது அந்த தேன் நிற திரவம்..! ஆம் ஆல்கஹால்..!
ஒரு கையில் சிகரெட்டும் மறு கையில் ஆல்கஹால் கோப்பையுமாய் அமர்ந்திருந்தான். கண்கள் சொருக அதை மிடறு மிடறாக குடித்தவாறு..!
இடையிடையே அந்த தேன் திரவ ஆல்கஹாலுக்கு ஊறுகாய் போல அவளை கண்களாலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கதிர்காமன்.
அவர்கள் இருக்கும் அந்த சூழலுக்கும்.. இருளுக்கு அணைந்துக் கொடுக்கும் வகையில் மெல்லிய வெளிச்சத்திற்கும்.. கதிர்காமனை பார்க்கும்போது அவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது.
மோக மயக்கம் இல்லை..! பட் மயக்கம்..!
‘இவன் என்ன இப்படி ஒரு மார்க்கமா இருக்கான்? ஒரு வேளை சைக்கோவா இருப்பானோ? அன்னைக்கு ஹோட்டல்ல பார்க்கும்போது ஒரு மாதிரியா பிஹேவ் பண்ணினான்.. இன்னைக்கு வெறிக்க வெறிக்க நம்மள உட்கார வைச்சு பார்த்துக்கிட்டே இருக்கானே? என்னென்னமோ கேள்விப்படுறோமே.. இந்த மாதிரி சைக்கோஸ்லாம் பொண்ணுங்கள கட்டி வச்சு சித்திரவதைப் பண்ணி அனுபவிப்பாங்கன்னு.. அப்படி எதுவும் பண்ணுவானோ?’ என்று பயத்தில் என்னென்னவோ கற்பனைகள் அவளின் அழகான மண்டைக்குள் முட்டி மோதி அலை பாய்ந்துக் கொண்டிருந்தன..
“கற்பனைகள் ஓவர்லோடு..!” என்று தன் கையில் இருந்த திரவத்தை பார்த்தவாறு கதிர்காமன் கூற.. அவளோ திடுக்கிட்டு விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
தன் கையில் இருந்த ஆல்கஹாலையே உற்று நோக்கி இருந்தவன் அடுத்த நொடி அதை வாயில் சரெலென்று சரிக்க.. அந்த ஆல்கஹாலின் கார நெடி அவனது பெருங்குடல் வரை சென்று தாக்க.. அதை ஆழ்ந்த அனுபவித்து கண்களை மூடியவனை இப்பொழுது பெரும் பயத்தோடு பார்த்தாள்.
‘இவனுக்கு ஏதாவது காதல் தோல்வி இருக்குமா? இவனை ஏமாத்திட்டு அந்த பொண்ணு ஓடி இருப்பாளோ? இவனை விட பணக்காரன் கிடைச்சு கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பாளோ? அந்த பொண்ண பழி வாங்குறேன்னு இப்படி வுமனைசரா மாறிட்டானோ? அதுக்காகத்தான் இப்படி ஒரு கேஸுக்கு லட்சம் லட்சமா சம்பளம் வாங்கி பணக்காரன் ஆகி இருக்கானோ?’ என்று ஏதேதோ கற்பனைகள் மீண்டும் அவள் அகத்தில் உலா வர..
“இப்ப தானே சொன்னேன் தேவையில்லாம கற்பனை எல்லாம் ஓட்டாதேனு.. கேட்க மாட்டியா நீ?” என்றவன் தன் முன்னால் இருந்த அந்த ஆல்கஹால் குப்பையை நீக்கி விட்டு அவளை கூர்ந்து பார்த்தான்.
அவனின் அந்த கூர் பார்வையில் மங்கைக்குள் ஏதோ தடம் புரண்டது. இரையை வேட்டையாடும் வேங்கையென அவனது கூர் பார்வையில் அவளோ எச்சில் கூட்டி விழுங்கினாள்.
அவனது பார்வை இப்பொழுது அவள் மீது அழுத்தமாகப் படிந்தது. முக்கியமாக அந்த ஏறி இறங்கும் தொண்டைக் குழியில்..
அவனின் அழுத்தமான கூர்பார்வையில் அவளுக்கு முதுகு தண்டோ மார்கழி மாத பனியில் நிற்பது போல சில்லிட்டது..!
மெல்ல எழுந்தவன் அழுத்தமான கால் அடிகளோடு அவளை நோக்கி நடந்தான்.
முன்னே அவன் முகத்தை விட்டு இறங்காத அவளின் பார்வை, இப்பொழுதுதான் அவனை முழுமையாக கண்டதில் விதிர்விதிர்த்துப் போனாள் பாவை..
ஆம்..! ஆண்களின் இனத்தின் கவர்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்று வெறும் பாக்ஸர் மட்டுமே அணிந்திருந்தான் இந்த நல்லவன் காமன்..!
தன் படிக்கட்டு தேகத்தை பறைசாற்றியபடி வந்துக் கொண்டிருந்தவனை மீண்டும் எச்சில் விழுங்க பார்த்தாள் பாவை.
‘இவன் என்னடா பாலிவுட் ஹீரோவுக்கே டஃப் கொடுக்கிற மாதிரி பாடி வச்சிருக்கான். ஆமா இவன் வச்சிருக்கறது சிக்ஸ் பேக்கா? எய்ட் பேக்கா?’ என்று அவள் பார்வை அவனை திகைத்து நோக்கியவாறே இருக்க, அவளது மானங்கெட்ட மைண்டோ அவன் உடல் கட்டை பற்றி ஆராய்ந்துக் கொண்டிருந்தது.
அவள் முன் நின்றவன் அவளது கையைப் பிடித்து எழுப்பினான். அவளோ சாவி கொடுத்த பொம்மை போல மெதுவாக எழுந்து நின்றாள்.
அவளது தளிர் விரல்களை தன் முரட்டு கைக்குள் பிடித்து பார்த்தவன், “உன் கை ரொம்ப சாஃப்ட் ரதி” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறியவன்,
“இது சிக்ஸ் பேக்கா இல்ல எய்ட் பேக்கானு உனக்கு டவுட்டு தானே?” என்றதும்,
‘எப்படி கண்டுபிடித்தானாம்?’ அவள் திடுக்கிட்டு அவனைப் பார்க்க..
“நான் லாயர்.. அதுவும் இந்த மும்பையின் டாப் மோஸ்ட் லாயர். உன் ஃபேஸ் எக்ஸ்பிரஷனை வைச்சே நீ என்னென்ன நினைக்கிற.. என்னென்ன யோசிக்கிற.. எல்லாம் சொல்லிடுவேன்” என்று அவள் முன் குனிந்து கூறினான்.
“இல்ல.. அதெல்லாம் இல்ல..!” என்று அவள் பொய் உரைத்தாள். மென்மையான குரலில் ஆனால் அழுத்தமாக..
“ஆஹான்..??” என்று நம்பா பார்வை பார்த்தவன், மெல்ல அவள் கையை பிடித்து தன் படிக்கட்டு தேகத்தில் உறவாட விட்டான்.
“ஜஸ்ட் கவுண்டன்..!” என்று அவள் காது மடலுக்கு அருகில் சென்று முணகினான்.
அவளோ முன்னை விட கையை இப்பொழுது இறுக்கமாக வைத்திருக்க “ஜஸ்ட் ரிலாக்ஸ் ரதி..! தொட்டு பார்க்க தான் சொல்றேன். இனி நடக்க போறதுக்கு முன்ன ஜஸ்ட் ட்ரையல் தானே?” என்றவன் அவள் மணிக்கட்டை அழுத்தமாக பற்றி மீண்டும் தனது படிக்கட்டு தேகத்தில் உறவாட விட்டு கண்களை மூடி அந்த சுகத்தை சுகித்தான்.
அவளுக்கு நெருப்பின் மீது நிற்பது போலவே தகித்தது.
பின் அவளது கூந்தலில் கை நுழைத்து இறுக்க பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், "ஷால் வீ?” என்று அவள் கன்னத்தில் தன் மூக்கால் உரசி கேட்க..
அவளோ எங்கணம் மறுப்பாள்? அவள் மறுக்க முடியாதப்படிக்கு அவளை வலைக்குள் சிக்க வைத்திருக்கிறானே..!
அது அன்பு வலை.. பாசவலை..!
தம்பி ராகவ் மீது அவள் வைத்திருக்கும் பாசத்தின் விலையை தான் வலையாக பயன்படுத்தி அவளை வளைத்து இருந்தான்.
மறுக்க முடியாத இக்கட்டில் தன்னை நிறுத்தி என்னவோ புது மனைவியிடமோ அல்லது அவனை உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலியிடமோ கேட்பது போல “வா கலவிக் கொள்ளலாம்” என்று அழைக்கிறானே என்று அவளது பெண் மனம் குமறியது..!
அவள் மனதின் குமறல் பெரும் கண்ணீராய் வெளிப்பட்டது..! அவளை சுட்டது..!
தன் கையை மெதுவாக உயர்த்தி அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான். அவனின் விரல்கள் அவளின் சிவந்த கனிந்த கன்னங்களை அழுத்தின. அவள் உடல் மெல்ல அதிர்ந்தது.
”பதில் சொல்லு ரதி??” என்று அவன் கேட்க
”என்னை எதுவும் கேட்காதீங்க சார் ப்ளீஸ்.. ” முணகினாள்.
அவன் இடது கை கட்டை விரல் அவளது வலது மூக்கின் மடலோரத்தை மெல்ல வருட.. வலது கை கட்டை விரல் அவளின் தடித்துச் சிவந்த இதழோரத்தை வருடியது. ரதி உடல் நடுங்க.. மூக்கை உறிஞ்சியபடி கண்களை மூடினாள்.
அவள் நிமிரவேயில்லை. முகம் குனிந்தே நின்றாள். அவளை இவ்வளவு அருகில் பார்த்துக் கொண்டு.. இதழையும் வருடியதில் அவனின் ஆண்மையோ அவளது பெண்மையை ஆள வேண்டும் என்று கிளர்ந்தது.
விரல் தொட்ட இடங்களை எல்லாம் இதழ்களால் தொட்டு தீண்டி ருசிக்க சொல்லியது அவனின் மனம். அவன் இன்னும் கொஞ்சம் முன்னால் நெருங்கி.. அவளின் இதழ்களோடு தன் இதழ்களை உரச விட்டான். அவனுக்குள் ஏதேதோ நிகழத் தொடங்கியது.. !!
அவளுக்கோ உடம்பு விரைப்பாக தொடங்கியது.
”நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல.. நீ தான் உன் ஆஃபரை சொன்ன? இப்போ.. உன் பாடி என் தொடுகைக்கு எகைன்ஸ்ட்டா இருக்கு.. வொய் ரதி?” அவள் இதழ்கடையோரம் தன் கட்டை விரலை அழுத்தியபடி ஹஸ்கி குரலில் சொன்னான். அவனின் விரல் உள்ளே புதைந்தது. அவள் எச்சில் அவன் விரலில் படிய.. உதடுகளை பிளந்த படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
மிக மிக அருகில் இருந்த அவனின் முகத்தைப் பார்த்ததும் அவள் கண்கள் கண்ணீரை நிறுத்தி விட்டு பயத்தை காட்டியது.
எப்படி இவளால் சட் சட்டென தன் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்ள முடிகிறது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.!!
பெண்களுக்கு மட்டும் படைத்தவன் அளித்த வரப் பிரசாதம்.. சட் சட்டென உணர்ச்சிகளை மாற்றிக் கொள்வது..!!
ம்ம்ம்.. என்றவன் இருவரின் இதழ்களுக்கு இடையேயான இடைவெளியை குறைத்தான் அவள் இதழ்களை கொய்து..!
முதல் முத்தம்..! அதுவும் ஒரு அந்நிய ஆணிடமிருந்து..!
முதல் முத்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கன்னியவளுக்கு பல்வேறு கற்பனைகள் இருந்தன..! தன் இணை தரும் அந்த முதல் முத்தம் மிகப் பொக்கிஷமாக மனதுக்குள் பொத்தி வைக்க வேண்டும் என்றெல்லாம் ஏதேதோ கனவுகள் இருந்தன..!
இன்று அவற்றையெல்லாம் உடைத்து, இங்கே யாரோ ஒருவனோடு தன் முதல் முத்தம் பகிரப்படுகிறது என்பதில் அத்தனை வேதனை ரதிக்கு.
தொடரும்...
