Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 25

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 25

 

“ஹாய் செல்லக்குட்டி.. என்னா பண்ற?” என்று வழக்கம் போல தன் ராதையிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தான் கண்ணா..

 

“தூக்கம் தூக்கமா வருது கண்ணா.. நான் தூங்க போறேன்” என்றாள் அவள்.

 

“எது தூக்கம் வருதா? ஒழுங்கா என் கூட பேசு டி.. காலையிலிருந்து ஒழுங்காவே என் கூட நீ பேசவே இல்ல..” ஏக்கமாய் அவன்.

 

“எனக்கு நிஜமாகவே தூக்கம் வருது கண்ணா” தூக்கமாய் அவள். 

 

“நீ இப்ப போன் பேசலனா நான் வீட்டுக்கு வந்துருவேன் ஞாபகம் வைச்சிக்கோ?” என்று அவன் மிரட்ட..

 

“ஹேன்..” என்று அந்தப் பக்கம் அழுக ஆரம்பித்தாள் ராதா. 

 

பயந்து பதறி போன கண்ணா.. “ஏய்.. ஏய்.. எதுக்கு டி இப்போ நீ அழுகுற?” என்று அதட்ட..

 

“பாரு.. பாரு.. நீ என்ன அதட்டுற திட்ற? எங்க அக்கா கல்யாணம் ஆகுற வரைக்கும் அவ்வளவு நல்லா லவ்வா கொஞ்சி கொஞ்சி பேசுன.. இப்ப கல்யாணம் ஆன உடனே என்னை நீ ரொம்ப அதட்டுற.. நாளைக்கு நம்ம கல்யாணம் நடந்தா என்ன அடிப்பியா?” என்று அந்த பக்கம் அவன் கேவி கேவி அழுகையோடு பேசினாள்.

 

‘என்னடா இது? இவ இப்படி அழுகிறாள்? காலையிலிருந்து ஒரே வேலை இவளோடு பேசி மனதை பகுஜால் மூடுக்கு கொண்டு வரலாம்னு பார்த்தா.. இவ அழுது எரிச்சல் மூடுக்கு மாத்திடுவா போல..’ என்று நொந்தவன்,

 

இரவு 11 மணிக்கு பேசி பேசி அவளிடம் பல மன்னிப்புகளை கேட்டு.. முத்தங்களை கொடுத்து.. கொஞ்சி கெஞ்சி.. விருட்சுவலாய் காலில் கூட விழுந்து சமாதானப்படுத்தி மூன்று மணிக்கு தூங்க சென்றான் ராகுல் கண்ணா.. 

 

“என்ன எழவு டா இந்த காதல்” என்று நொந்தப்படி..!

 

காதல் ஜோடி இவ்வாறு கவுந்து படுத்து விட.. கல்யாணம் ஆன ஜோடி என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் வாங்க..

 

பெற்றோர்கள் சென்றவுடன் முகத்தை தூக்கி கொண்டு உட்கார்ந்திருப்பாளோ.. இல்லை கோபமாக இருப்பாளோ.. இல்லை அழுது அழுது கரைந்து இருப்பாளோ என்று பலவாறு எண்ணியவாறு உள்ளே நுழைந்தவனை வரவேற்றாள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மீரா.

 

“என்னடா இவ தூங்கிட்டா?” என்று விழித்தான் கிருஷ்.. 

 

அவள் அருகில் வெகு நேரம் நின்று அவதானித்தன். அன்று போல தூங்குவதாக ஏமாற்றுகிறாளோ என்று..!

 

ஆழ்ந்த சுவாசமும் ஏறி இறங்கும் மார்பும் அவள் நன்றாக உறங்குகிறாள் என்பதை தெரியப்படுத்த, பின் அமைதியாக அவனும் அவள் அருகிலேயே உறங்கினான்.

 

எந்தவித அலட்டலும் புதிய மாமியாராய் மிடுக்கும் கொள்ளாமல் இயல்பாக பாசமாக நடந்து கொள்ளும் சங்கீதாவை மிகவும் பிடித்தது மீராவுக்கு. 

 

யசோதாவை பிடிக்காமல் கிடையாது ஆனால் யசோதாவும் ராஜ நாராயணனும் தன்னை விட்டுவிட்டு அவர்கள் என்ற எண்ணம் அவளுக்கு மிகவும் உண்டு. அதனால் இருவரிடமும் பாசம் இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் சற்று தள்ளியே இருந்து பழகிக் கொண்டவள், சங்கீதாவிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.

 

சங்கீதாவும் வழக்கமான மாமியார்கள் போல “இந்த வேலை செய்” “அந்த வேலையை செய்” “உறவினர்களை கவனி” “என் பிள்ளையை பார்த்துக்கோ.. என் பிள்ளையை பார்த்துக்க தான் உன்னை கட்டிட்டு வந்து இருக்கேன்” அப்படி எல்லாம் கூறவே மாட்டார். 

 

தன் திடீர் திருமணத்தைக் கூறி ஆன்சைட் சென்று வந்த ரிப்போர்ட்டை இரண்டு நாட்கள் கழித்து சமீட் செய்வதாக அங்கே தன் ஆபீஸ் ஹையரோடு ஃபோனில் போராடிக் கொண்டிருந்தான் கிரிஷ். 

 

சங்கீதாவும் காலை எழுந்து வந்த மருமகளை பார்த்து “வா வா நம்ம சாப்பிடலாம்” என்றதும், அவள் சற்று தயங்கி பார்க்க.. 

 

“இந்த சேர்ந்து சாப்பிடுவதெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல தான்.. ஒரு நாள் முடிஞ்சாலே நாமெல்லாம் பழசு தான். அவனுக்காக உன் வயிற நீ காயப்போடணுமா? நீ வந்து சாப்பிட்டு வா” என்று அழைத்து தன்னுடனே அமர வைத்து உண்ண வைத்தார். இந்த சிறு விஷயத்திலேயே மீராவின் மனதில் அத்தனை உயர்ந்திருந்தார்‌ சங்கீதா.

 

காலை இருந்த உறவினர்களும் உண்டு விட்டு ஊருக்கு கிளம்பினர். ஒரு சிலர் எல்லாம் அருகே இருப்பவர்கள் தான். அனைவரிடமும் ரிசப்ஷனுக்கு முதல் நாளே கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்று கூறி கல்யாண பலகாரங்களோடு அனைவரையும் இன் முகமாகவே வழியனுப்பி வைத்தனர் தீனதயாளன் சங்கீதா தம்பதியினர். 

 

அருகில் மீரா இருந்தால் அவளையும் அழைத்துக் கொள்வார் சங்கீதா.. இல்லையென்றால்‌ அவளை வருத்தி அழைக்கலாம் மாட்டார். “சின்னஞ்சிறுசுக டிஸ்டர்ப் பண்ண வேணாம்.. நமக்கும் இங்கிதம் இருக்குமுள்ள அத்தை” என்று நாசுக்காக அவர்களை வழி அனுப்பி வைத்துவிடுவார் சங்கீதா. 

 

ராதாவோடு பேசிவிட்டு வந்த மீராவின் காதில் இவை எல்லாம் விழ.. மாமியாரின் மீது நன்மதிப்பு அவளுக்கு உயர்ந்து கொண்டே இருந்தது.

 

தான் பார்க்கும் நேரத்தில் மட்டும் நல்லவளாக நடிக்காமல் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பவர்களை சட்டென்று பிடித்து விடும் மீராவுக்கு. 

 

அதற்குள் இவளின் ஆர்கனைச் சொற்களும் பார்ட்டி வேண்டும் என்று அன்பாய் மிரட்டினர். 

 

இவள் தான் இரண்டு வகையான குழுக்களை வைத்திருக்கிறாளே, கல்யாணம் எங்கேஜ்மென்ட் இம்மமாதிரியான குழுவிற்கு ஒரு மாலை வேளையில் கிருஷோட சென்று உயர்தர ஹோட்டலில் நன்முறையில் பார்ட்டி வைத்துவிட்டு வந்துவிட்டாள்.

 

ஆனால் அவளின் மற்றொரு டீமான இந்த பெரிய காரியத்திற்கு செல்லும் வீரபாஞ்சான் டீமோ “எங்களுக்கு அப்படியெல்லாம் வேண்டாம்.. நீ வீட்டுக்குல பிரியாணி விருந்து வை க்கா” என்று உரிமையுடன் கேட்க..

 

பதில் சொல்ல முடியாத நிலை அவளுக்கு. இதுவே அவள் வீடு என்றால் ராஜ நாராயணன் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், வீம்புக்கு என்று அவள் அவர்களுக்கு ஏற்பாடு செய்வாள் தாய் மாமன் உதவியோடு. 

 

ஆனால் புகுந்த வீட்டில் அப்படி எல்லாம் செய்ய முடியாது அல்லவா? 

 

என்ன தான் புகுந்த வீடு தன் வீடு போல என்றாலும்.. பிறந்த வீட்டில் இருந்த சுதந்திரம் அங்கு கிடையாது என்பதே நிதர்சன உண்மை..! 

 

சரி என்று வாக்களித்து விட்டு வந்தவள், சற்று தயங்கிவாறே சங்கீதாவிடம் கேட்டாள். அவரும் ஒரு முறை அவளை வீரபாஞ்சானோடு துக்க வீட்டில் பார்த்திருக்கிறார். 

 

“நம்ம மாடியிலேயே நிறைய இடம் இருக்கு மீராக்கண்ணு.. சாமியானா பந்தல் போட்டு நாமலே பிரியாணி ஆர்டர் பண்ணி நல்லாவே விருந்து வைத்து விடுவோம்” என்றவர் கணவனிடம் கூற, அவரும் மறுக்கவில்லை.

 

அன்று பார்த்து அலுவலகம் சென்றிருந்த கிருஷ் இரவு அவள் தூங்கி பின்னே தான் வந்திருக்க அவனுக்கு விஷயம் தெரிவிக்கப்படவில்லை. 

 

காலையில் அதிக வேலை என்று அவன் அவசரமாக கிளம்ப.. சங்கீதா “டிபன் சாப்பிட்டு போ டா” என்று கூறி முடிக்கும் முன் அவன் பறந்து விட்டான் அதிகாலையிலேயே.. அந்நேரம் மீராவும் எழுந்திருக்கவில்லை. 

 

வேலை முடித்து மாலை போல வீட்டுக்கு வந்தவன், மாடியில் லைட் செட்டிங்கோடு பாட்டு சத்தம் காதை என்ன அந்த தெருவையே கிழி கிழினு கிழிக்க..

 

‘இது நம் வீடு தானா? இல்லை மாறி வந்து விட்டோமா?’ என்று ஒரு நிமிடம் திகைத்து போனவன், அதற்கு பின் ஒன்றுக்கு பத்து முறை நன்றாக பார்த்துவிட்டே உள்ளே நுழைந்தான்.

 

இவன் வீட்டுக்குள் நுழையும் போது பெரிய அண்டாவை இருவர் தூக்கி செல்ல, அவர்களுக்கு பின்னே தேசிகன் “ஏலேய்.. பார்த்து பார்த்து கீழ கொட்டிடாதீங்கடா.. அத்தனையும் பீஸூ டா” என்று பதற..

 

“நீங்க சும்மா சலம்பாம இருங்க மாமா.. நாங்க பார்த்துக்கிறோம்” என்றனர் அவர்கள். 

 

“இவனுங்க யாரு? எதுக்கு இவர மாமானுங்குறானுங்க?” என்று புரியாமல் கிருஷ் புரியாமல் விழிக்க..

 

தேசிகனை என்ன உறவு சொல்லி கூப்பிடுவதும் என்று அவனுக்கு தெரியாமல் போக.. “அங்கிள்” என்று சத்தமாக அழைத்தான். 

 

“மாப்பிள்ளை வந்துட்டீங்களா நீங்க.. வாங்க.. வாங்க..” 

 

“என்ன அங்கிள் நடக்குது?” என்று அவன் கேட்க..

 

“என்ன தம்பி நீங்க.. என்ன அங்கிள்னு சொல்றீங்க.. நான் உங்களுக்கு சித்தப்பா முறை வேண்டும்” என்றவர் தன் உறவுமுறை என்ன என்று அவர் விளக்கி கூற கூற..

 

ஏற்கனவே சோர்வாக வந்தவன் இன்னும் சோர்ந்து போய் “அங்கிள் இருங்க நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்” என்று நழுவ பார்க்க..

 

“இல்ல.. இல்ல.. உங்களுக்காக தான் எல்லோரும் வெயிட்டிங்.. நான் வெளியே வெயிட் பண்றேன். டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க” என்று அன்பு கட்டளையோடு காத்திருந்து அவனை அள்ளிக் கொண்டு சென்றார் மாடிக்கு. 

 

குண்டு குண்டாக இரண்டு பெண் உருவங்கள் குத்து பாட்டுக்கு நடனம் ஆட.. நடுவில் நின்று ஆடுவது யாரு? தன் தாயா? என்னை பத்துமாசம் சுமந்து பெத்த தாய் சங்கீதாவா? என்று அத்தனை முறை அவன் போட்டிருந்த கண்ணாடியை கழட்டி சுத்தம் செய்து பார்த்தவனை தோளில் பலமாக ஒரு தட்டு தட்டி சிரித்தார் தேசிகன்.

 

“என்ன மாப்பிள்ளை.. அண்ணி தான் அது. உங்களுக்கு சந்தேகமா என்ன? பாருங்க எப்படி டான்ஸூல பின்னி பெடல் எடுக்குறாங்க..” என்று அவரும் சேர்ந்து கைதட்டிக் கொண்டு ஆடிக்கொண்டே அங்கே செல்ல..

 

“என்னங்கடா நடக்குது என் வீட்டில்?” என்று ஒவ்வொரு முகமாய் பார்க்க எந்த முகமும் அவனுக்கு தெரிந்த முகமாய் இல்லை. 

 

“ஆமா இத்தனை கூத்து வீட்டுல நடக்குது என்ன பெத்த தகப்பருக்கு இதெல்லாம் பிடிக்காதே..! எங்கே தகப்பர்? எங்கே தகப்பர்?” என்று பார்க்க..

 

“கொஞ்ச ஒத்து நைனா..” என்றபடி தலையில் முண்டாசுடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒரு உருவம் அவனை கிராஸ் செய்து சென்றது. 

 

மீண்டும் கண்ணாடியை துடைத்து உற்றுப் பார்க்க.. அது அவனது தெய்வத் தந்தை தீனதயாளன் என்று தெரிந்ததும் அதிர்ச்சியின் உச்சியில் கிருஷ்..!

 

அதுவும் போனில் “ஒழுங்கா சொல்லுடா கசுமாலம்.. மூஞ்சிலே ஒன்னு வைச்சேன் வச்சுக்கோ டங்குவாறு பிஞ்சிடும்.. நான் எங்குறு‌ பிஸ்து தெரியும்ல..” என்று சத்தமிட்டு கொண்டே சென்றவரை வாயை பிளந்து பார்த்தான் கிருஷ்.

 

அடுத்து ‘இந்த கண்ணா எங்க போனான்?’ என்று பார்க்க அவனோ அங்கு நின்றிருந்து விடலை பசங்களை வைத்துக் கொண்டு.. 

கை விரலால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தான். 

 

ஏதோ சாம்பியன் ட்ரோபி கிரிக்கெட் மேட்ச் போலவே அவ்வளவு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தது அவர்களின் கிரிக்கெட். 

 

“இதெல்லாம் சரி..! நான் கட்டிக் கொண்டு வந்தனே அந்த ராசாத்தி எங்கே?” என்று அவன் பார்க்க..

 

அந்த கிரிக்கெட்டுக்கு அம்பயராக நின்றிருந்தவளே அவள்தான்..! 

 

பழையபடி கட்டம் போட்ட சட்டை பேண்ட் போட்டு தலையில் ஒரு பெரிய குல்லாவை மாட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அவனின் தர்ம பத்தினி. 

 

அப்போது ஒருத்தன் “இது நோபால்” என்று சத்தமிட..

 

“ஏய் டுபுக்கு.. என்னடா என்கிட்ட கிரிக்கெட் பத்தி பேசுறியா? கம்முனு கட இல்ல..” என்று அம்பையரா இருந்தவள் அர்னால்டாக மாறி அவளின் தீர்ப்பை தப்பாக சொன்னவனின் சட்டையை பிடித்து உலுக்கி கொண்டிருந்தாள்.

 

“அடங்கொன்னியான்… நான் ஒரு நாள் தானடா வீட்ல இல்ல அதுக்குள்ள என்னங்கடா என் வீடு இப்படி மாறிப் போய் இருக்கு?” என்று அவன் அயர்ந்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட..

 

அப்பொழுது அவனை நோக்கி வந்த ஒரு பையன் அதும் புள்ளிங்கோ ஸ்டைலில் இருந்தவன் “மாம்ஸ் வந்துட்டீங்களா? உங்களுக்காக தான் நாங்க எல்லாம் வெயிட்டிங். வாங்க.. வாங்க.. வந்த ஜோதியில் ஐக்கியம் ஆகுங்கோ..” என்று அவனை இழுத்து சொல்ல..

 

“டேய் முதல்ல கை விடுடா நீங்களெல்லும் யாருடா? அதை முதல்ல சொல்லுடா?” என்று கிருஷ் கோபப்பட..

 

“இப்ப புரியுது கண்ணாலமாகி நாலு நாள் தான் ஆகுது. அக்காவ கண்ணுல காட்டாம உங்க இஸ்துக்குனு போனா உங்களுக்கு காண்டு ஆவும் தானே.. இங்க வாங்க அக்காவ நான் காட்றேன்” என்று உரிமையாய் அவனை அழைத்துக் கொண்டு சென்றவனை திகிலோடு பார்த்தான் கிருஷ்.

 

அதன் பின் கண்ணா தான் அவனை அழைத்து அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தான். இவர்கள் மீரா ஆர்கனைஸ் டீமின் உறுப்பினர்கள் என்று சொல்ல.. ஒரு நொடி திகைத்தாலும் அடுத்த நொடி முகத்தை சாதாரணமாக வைத்து அனைவருடன் நன்றாகவே பழகினான் கிருஷ்.

 

அதற்குள் உணவும் வந்து விட, அனைவருக்கும் மீராவோடு முன் நின்று விருந்து பரிமாறி திருப்தியாக அனுப்பி வைத்தனர். 

 

கிருஷ் திட்டுவான் அட்லீஸ்ட் கோபப்படுவான் என்று எதிர்பார்த்துதான் இருந்தாள் மீரா. ஆனால் அதற்கு மாறாக அவன் முதலில் திகைத்தாலும், பின்பு புன்னகையோடு அனைவரையும் அவன் வரவேற்ற விதம்.. பழகிய விதம்.. அவர்களுக்கு பரிமாறிய விதம் கண்டு திகைத்து தான் போனாள்.

 

“அப்பா நாராயணா சொன்னது போல.. உண்மையிலேயே நல்ல குடும்பம் தான் போல.. ஆனாலும் உடனே முடிவு செய்யக்கூடாது. ரெண்டு நாளா என்ன பெருசா தெரிஞ்சிட போகுது? புதுசா எதிர்பார்த்தாலும் பளபளக்க தான் செய்யும். போக போக தான் உண்மையான குணம் பல்லு இழிக்கும்.. அப்ப பார்த்துக்கலாம்” என்று அமைதியாகி விட்டாள்.

 

ஆனால் இரவின் தனிமையில் “ரொம்ப தேங்க்ஸ்” என்று அவள் கூற 

 

“எதுக்கு தேங்க்ஸ்? நீ என் வைஃப் மீரு. நீ ஒரு விஷயம் செய்ற.. அதுக்கு நான் உனக்கு துணையாய் இருக்கனும் தானே? என்கிட்ட முன்னாலேயே இன்பார்ம் பண்ணி இருக்கலாம்” என்றான் வருத்தமாக.. 

 

அவன் சொன்னதை புரிந்து கொண்டவள் “இல்ல அன்னைக்கு நைட்டு நீங்க லேட்டா வந்தீங்க நானும் தூங்கிட்டேன். காலையில் சொல்லாம்னு பாத்தா எனக்கு முன்னாடியே நீங்க ஆஃபிஸ் போயிட்டீங்க” என்றாள் மென் குரலில்..

 

“எஸ்.. எஸ்.. சாரி..! எனக்கும் கொஞ்சம் ஆபீஸ்ல டைட் ஒர்க். இந்த திடீர் கல்யாணம் அதுக்கு எடுத்த லீவு.. ஆன் சைட் ரிப்போர்ட் சமிஷன்.. அப்படி இப்படின்னு ரெண்டு நாளா மண்ட குடைச்சல்.. இப்பதான் எல்லாம் சமிட் பண்ணிட்டு ப்ரீயா இருக்கேன்” என்றான். 

 

“எனக்கும் ரொம்ப டயர்ட் ..!” என்றவள் ட்ரஸிங் டேபிளில் கவிழ்ந்து படுக்க.. மெல்ல எழுந்த கிருஷ், அவள் பின்னல் வந்தான். கவிழ்ந்து படுத்திருந்த மீராவின் கூந்தலை மெதுவாக விலக்கி… வியர்வை பூத்திருந்த பின்னங்கழுத்தில் அழுத்தி முத்தமிட.. உடல் விரைக்க ஆரம்பித்தது அவளுக்கு.

 

அவளின் ஒற்றை போனி டையலை விலக்கி.. பின்னங்கழுத்தை வருடியபடி மேலும் அவன் ஒரு முத்தம் வைக்க.. மெதுவாக தலையை உயர்த்தினாள் மீரா.

 

அவள் உக்கார்ந்த இருந்த சேரை பின்னோக்கி இழுக்க.. அவள் விசுக்கென்று எழுந்தாள். இருவரின்‌ இதழ்களும் அவசரத்தில் லேசாக உரசிக் கொள்ள.. அதை நிதானமாக செய்ய ஆர்ம்பித்தான் கிருஷ்.

 

ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை. சட்டென்று அவனை தள்ளி விட்டாள்.

 

“என் மீரு பிடிக்கலையா? இதுவா நானா?” என்று அவன் மென்மையாக அவள் தோளை தொட..

 

மீண்டும் பின் வாங்கியவள் மூச்சோ வேகவேகமாக இரைந்தது. உடல் இன்னும் வியர்த்துக் கொட்டியது

 அவளின் இந்த அசாதாரணமான நிலையை கண்டவன்,

 

“மீரு.. மீனு.. என்ன பண்ணுவது?” என்று‌ அதிர்ந்தவன், ஏசியின் குளிரை உயர்த்தி வைத்து “ரிலாக்ஸ் மீரு உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது.. ஆனா நாம எப்படி இருக்க முடியாது தானே? நம்ம வாழ்க்கை நம்ம வாழனும் தானே?” என்று மெல்ல ஆரம்பித்தான். 

 

“உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே..!” என்றாள் அவள்.

 

“ஐயோ அது காலேஜ்ல அந்த பொண்ணு கிட்ட.. அதான் என் எக்ஸ் லவ்வர் கிட்ட என்னை போட்டு கொடுத்து என் காதலை நீ காவு வாங்கினால.. எனக்கு உன் மேல் ஒரு பக்கம் கோபம் இருந்தது உண்மைதான். அதுக்காக நம்ம அப்படியே இருந்துற முடியுமா? ஆனாலும் நீ செஞ்சது தப்பு தானே?” என்றதும் அவனை முறைத்தவள், 

 

“ஆமா.. பெரிய காதல்..! பொல்லாத காதல்..? ஸ்கூல் படிக்கும்போது ஒரு காதல்.. காலேஜ் படிக்கும்போது ஒரு காதல்.. இப்போ கல்யாணம் என்கூட.. இடையில வேலை செய்யுற இடத்துல எத்தனை காதலோ? ஆன் சைட்ல எத்தனை காதலோ?” என்று அவள் உதடு பிதுக்க..

 

அந்த உதட்டை பிடித்து நறுக்கு என்று கிள்ளியவன் “எங்க அப்பா பத்தி உனக்கு தெரியுமா? காதல் கீதலனு வந்தேன்னு வச்சுக்கோ, பெல்ட் உருவி மனுஷன் அடிச்சு நகத்திடுவார்… லவ் பண்ணாலும்.. லவுனா எனக்கு கொஞ்சம் அலர்ஜி தான்.. காலேஜ்ல அவளா வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினா.. சரி பண்ணி தான் பார்ப்போமே லவ் பண்ணேன். அதையும் நீ காவு வாங்கிட்ட.. என்னதான் கிருஷ்ணன்னு பேர் வச்சிருந்தாலும் உண்மையிலேயே ராமனா தான் இருந்தேன்” என்றான் சோகாமாக..

 

லேசாக சிரித்தவள் அமைதியாக அமர்ந்திருக்க, ஏதோ பெரிய விஷயம் வரப்போகிறது என்று உஷாரானான் க்ரிஷ். 

 

“என்னோட கடந்த காலத்தை எல்லாம் அப்பா உங்க கிட்ட சொல்லி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அப்பாவுக்கு தெரியாது சில விஷயங்கள் உண்டு” என்று மடியில் கோர்த்து இருந்த கைகளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவள் கோர்த்திரூந்த கைகளுக்கு தன் கைகளையும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டான் கிரிஷ். 

 

“உன்ன வருத்த வைக்கும் எந்த கடந்த காலமும் எனக்கு வேண்டாம் மீரு. அது எதைப் பத்தினாலும் எனக்கு தேவையில்லை. நிகழ்காலமும் எதிர்காலமும் எல்லாம் எனக்கு நீ மட்டும் தான்..! இது தான் நிதர்சனம் கூட..! அதேபோல உனக்கு நான் மட்டும்தான். அது எப்பவுமே நீ மனசுல வச்சுக்க” என்று ஒற்றை விரலால் அவள் நெஞ்சப் பகுதியை அவன் தொட்டு காட்ட.. சட்டென்று அவன் விரலை தட்டி விட்டு முறைத்துப் பார்த்தாள்.

 

“என்ன சும்மா சும்மா முறைச்சுகிட்டே இருக்க.. என்னைக்கு இருந்தாலும்..” என்று அவளது முழு உடலையும் ஒருகணம் பார்த்தவன் “இது எனக்கு சொந்தமானது தானே? ஃபுல்லா இப்போதைக்கு இல்லைனாலும்.. கொஞ்சம் கொஞ்சமா இன்ஸ்டால்மெண்ட்ல கொடுக்கலாம் தானே? நானும் பாவம் இல்லையா மீரு?” என்று அவன் பாவம் போல் முகத்தை வைத்து கேட்க சிரிப்புதான் வந்தது அவளுக்கு. 

 

இன்னும் சில நேரம் அவனைப் பற்றி ஆச்சரியமாகவும் இருந்தது. இரண்டு முறை அவனது காதலை கலைத்து விட்டவள் என்று கோபமோ.. என் கடந்த காலம் மிக மோசமாக இருந்தாலும் அதைப்பற்றிய அக்கறை இல்லை.. இந்த கணம் இது மட்டுமே சுவாசிதம்.. இக்கணத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்போம் என்று கூறியவன் எவ்வகை ஆண்மகன்? என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தான் கிருஷ்..!

 

“கொஞ்சம் டைம் கொடுக்குறீங்களா? ப்ளீஸ்..!” என்றவள், 

 

“நீங்க தெரிஞ்சுக்க ஆசை படலனாலும் சொல்றது என்னோட கடமை.. அறியாத வயசுல புரியாத சூழ்நிலையில் தெரியாத சில பாவிகளின் உடல் இச்சையால மனதளவில் மட்டும் இல்லாமல் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டவ நான்” என்றாள் வலியோடு. அவள் கைகளை இன்னும் இறுக்கமாக அவன் பிடித்துக் கொண்டு மறு கையால் லேசாக தட்டிக் கொடுத்தான். 

 

“அந்த ரணங்கள் வலிகள் எல்லாம்

 இன்னும் என்னை விட்டு போகல அதுக்கப்புறம் எவ்வளவோ கவுன்சிலிங்ஸ் மெடிசன் இதெல்லாம் நான் எடுத்துக் கொண்டாலும்.. ஒரு முழுமையான தாம்பத்தியத்துக்கு நான் இன்னும் தயாராகலனு எனக்கு புரியுது. அதுவும் நீங்க கிட்ட வந்தாலே எனக்கு அந்த நினைவுகள் எல்லாம் வருது..” என்றவள் வேறுபக்கம் முகத்தை திருப்பி வைத்துக் கொள்ள..

 

அவள் முகத்தை தன் புறம் திருப்பியவன், “இப்பவும் சொல்றேன் உன்னோட கடந்த காலம் எனக்கு தேவையில்லை. அதை எல்லாம் ஒரு கெட்ட கனவா.. ஒரு ஆக்சிடென்ட்டா நினைச்சு மறந்திடு. நமக்கு நடந்த ஆக்சிடென்ட் எப்பவும் நினைச்சு பியூச்சர்ல அப்படியேதான் நமக்கு ஆக்சிடென்ட் ஆகும்னு பயந்துகிட்டு ட்ராவல் பண்ணாம இருப்போமா? இல்லைதானே..! அதுபோலத்தான்..! இனி அந்த கடந்த கால கசப்புக்களையும் நான் என்னோட காதலால் அன்பால் நேசத்தால மறக்க வைப்பேன்.. மீரு அதுக்கு நீ என்ன முதல்ல நம்பனும்..!” என்றதும் சரி என்று அவள் தலையாட்ட,

 

“சரி போய் படுத்துக்கோ..” என்றான்.

 

ஆனால் அவள் படுத்து அடுத்த சிறிது நேரத்திலேயே இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டு அவன் படுக்க.. அவள் பயந்து விலக..

 

“சும்மா இரு டி..! அதுக்குன்னு உன்னை தள்ளி வச்சிட்டு பார்த்துட்டு இருக்கலாம் என்னால முடியாது. இதுபோல சின்ன சின்ன அணைப்பு.. சில சமயம் இறுக்குமான அனைப்பு.. அவ்வப்போது செல்ல முத்தங்கள் இதெல்லாம் இருக்கும். பின்ன எப்படி என் மனைவி என்கிறதை உனக்கு நான் உணர வைக்க முடியும்? அதனால இதெல்லாம் பழகிக்கோ..” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக்

கொண்டு உறங்க..

 

கணவனின் இந்து புரிதலில் அன்பில் கடந்த காலத்தை நாம் கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட்டது மீராவுக்கு. 

 

மெல்ல அவளும் அவனது அணைப்பிலேயே உறக்கத்தை தழுவினாள்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top