Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 22

 

“ஒரே ஒரு முத்தம் தானடி கொடுத்தேன். அதுக்கே என்னடி மயக்கம் போட்டுட்ட.. ஃபர்ஸ்ட் நைட்டுல ஒரு ஆணுக்கு இதைவிட அவமானம் ஏற்பட முடியாது டி!” இடது கையால் அவளை தாங்கிக் கொண்டு வலது கையால் தலையில் தட்டிக் கொண்டான் கிருஷ்.

 

“உனக்கு தேவையா டா இது? தேவையா? கொஞ்சம் இதமா பதமா பேசி இருந்தா கூட ஏதோ முழுசா முடிக்கலானாலும் கொஞ்ச நஞ்சம் பார்த்து இத்தனை வருஷ பிரம்மச்சாரியத்திற்கு ஏதோ நியாயம் செஞ்ச மாதிரி இருந்திருக்கும். முதலுக்கும் மோசம் போச்சா இப்போ..!” சுட்டுவிரலை தன்னை நோக்கி நீட்டி பேசிக்கொண்டே இருந்தான். 

 

“மொதல்ல இவளை கொண்டு போய் பெட்ல படுக்க வைப்போம்” என்று அவளை இரு கைகளிலும் ஏந்தியவன், “எப்பா இவ பார்க்க தான் ஒல்லியா தெரியுறா.. ஆனா என்ன கனம் கனக்குறா? சரியான வசம்பி” என்றபடி அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான் கிருஷ்.

 

அவளோ மயக்கத்தில் இருக்க.. மெல்ல புன்னகை பூத்திருந்தது கிருஷின் வதனம்.

 

“இதான் அழகுல மயங்குறது போலடா க்ருஷ்..” என்று சிரித்துக் கொண்டவன், குளியலறை நோக்கிச் சென்றான்.

 

அவன் சென்றதும் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து “அப்பாடி எப்படியோ இன்னைக்கு தப்பிச்சாச்சு” என்று பெருமூச்சு விட்டாள் மீரா.

 

அப்பொழுது அவள் இடையில் சொருகி வைத்திருந்த அவளது ஃபோன் வைப்ரேட்டரில் உசுப்ப..

 

“இந்த நேரத்துல எவன்டா போனை பண்ணி என் உசுர வாங்குறான்?” என்று முணுமுணுத்தப்படி போனை எடுத்து பார்த்தாள்.‌

 

அவளின் அசிஸ்டெண்ட் வீரபாஞ்சான் தான்.

 

“எக்காவ்வோ… ஹெப்பி ஃபர்ஸ்ட் நைட் எக்கோவ்.‌ நம்ம ஆர்கனைஸ் டீம் உனக்கு வாழ்த்தியே ஆகணும்ன்னு ஒத்த காலுல நிக்குறாங்கக்கோவ்..!” என்றான் வீரப்பாஞ்சான் சிரிப்போடு.

 

“அல்லா பேரையும் வீடாயோ கால்ல வரச் சொல்லவாக்கோவ்” என்றவன் மேலும் சிரிக்க.. அவனை சுற்றியும் பலர் நின்று சிரிப்பது இவளுக்கு தெளிவாக கேட்டது.

 

“எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு எல்லாம்..” என்று பல்லை கடித்தவள், குளியலறை பக்கம் ஒரு நோட்டம் விட்டவள்,

 

“அடேய்.. எழவுக்கு பொறந்தவனே.. வந்து இரண்டு வச்சேனு வச்சுக்கோ.. மொகற முதுகு பக்கம் திரும்பிக்கும்.. வை டா ஃபோன கசுமாலம்” என்று‌ அவள் திட்டி முடிக்கவும், குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்கும் சரியாக இருந்தது. சட்டென்று ஃபோனை இடுப்பில் சொருக்கிக் கொண்டவள் மீண்டும் மயக்கம் வந்தது போலவே நடித்தாள்.

 

என்னதான் தைரியமாக காட்டிக் கொண்டாலும் மீராவுக்கு மனது தித் திக்கென்று அடித்துக் கொண்டுதான் இருந்தது. கதவு மூடும் சத்தம் கேட்டதும் அவளின் உடல் சூடாகியது, கண்ணை கொஞ்சமாய் திறந்து பார்க்கலாமா என்று‌ யோசித்தாள்.

 

“வேணாம் வேணாம் அவன் நம்மை விட எமக்காதகன், நம்மள வாட்ச் பண்ணிட்டு கூட இருக்கலாம். நீ இப்படியே மயக்கம் வந்தது போலவே கண்டினியூ பண்ணிட்டு அப்படியே தூங்கிடு மீருக்குட்டி” என்று தனக்கு தானே அவள் கூறிக் கொண்டவள் கண்ணை திறக்கவே இல்லை.

 

குளியலறையில் இருந்து வந்தவன் அவள் அருகில் அமர்ந்தான். அவளை ஆழ்ந்து பார்த்தான்.

 

அவன் தன்னை பார்க்கிறான் என்று உள்ளுணர்வு கூற அவளின் உடல் நடுங்கியது, மூச்சு வேக வேகமாக வந்தது. அதன்பின் அவனின் அரவம் கேட்கவே இல்லை அவ்வறையில்.

 

அவன் என்ன செய்கிறான் என்கிற எதிர்பார்ப்பு எகிற, கொஞ்சமாய் கண் திறந்து பார்த்தாள் அவள். 

 

அவனோ அவளைப் பார்த்துக் கொண்டு தன் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாய் கழட்ட.. 

 

‘அட பாவி.. இவன் என்ன ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாகுறான்’ திகிலடிக்க மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் மீரா. 

 

“என்ன இவன் நானும் இந்த ரூம்ல இருக்கும்னு தெரிஞ்சே இவன் பாட்டுக்கு டிரஸ் சேஞ்ச் பண்றான்.. கடன்காரன்.. கடன்காரன்..” என்ற மனதுக்குள் திட்டிக் கொண்டாள்.

 

அதைப் புரிந்தவன் போல் சட்டையை கழட்டி மெதுவாக அருகில் உள்ள சோபாவில் போட்டவன், 

 

“ஒரு பொண்ண வச்சிட்டு டிரஸ் மாத்த கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு. ஆனா நீதான் மயக்கத்துல இருக்கியே? நீ என்ன பாக்க மாட்டேன் தானே?” என்று விஷம புன்னகையுடன் அவன் சத்தமாக கூற.. எழுந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டாள் மீரா ‘என்னெல்லாம் பேசுறான் பாவி பாவி’ என்று.

முன்னை விட இப்போது கண்களை இறுக்கமாக மூடினாள். 

 

எவ்வளவு நேரம் தான் இப்படியே எந்த புடவையில் படுத்து தூங்குவது? அறையில் ஏசி இருந்தாலும் அதை தாண்டியே புழுக்கம் அவளிடம். முன்ன பின்ன புடவை கட்டி பழக்கம் இருந்தால் தானே? 

 

புடவையை உருவி போட்டுவிட்டு அவளுடைய நைட் ட்ரஸை போட்டுக் கொள்ள அவளது கைகள் எல்லாம் பரப்‌பரத்தது. ‘ஆனால் இப்பொழுது கண்விழித்தால் அவன் கண்டு கொள்வானே?’ என்று அத்தனையையும் அடக்கி படுத்திருந்தாள்.

 

அவன் விடும் வெப்ப மூச்சு அவளின் முகத்தில் பட்டது. அவளோ கஷ்டப்பட்டு உடலை அசைக்காமல் அப்படியே படுத்திருந்தாள்.. 

 

‘கொஞ்சம் அசைந்தால் அவ்வளவு தான் நீ..! ஸ்டடி மீரா’ என்று படுத்திருந்தாள்.

 

அவன் உடலின் வியர்வை வாசம் கலந்த அவன் ஆண்மை வாசம் அவளின் நாசியை நிறைக்க..

 

“கொஞ்சம் தள்ளி தான் பட்டேன் டா” என்று அவள் மனம் அரற்றிக் கொண்டே இருந்தது‌.

 

புதிதாக உணரும் ஆண் வாசம் அவளின் உடலில் ஏதோ ஒருவித மாற்றம் செய்தது. அவள் அப்படியே மூச்சை பிடித்து உள்ளிழுக்க..

 

“இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் மூச்சு புடிச்சுக்கிட்டே மயக்கம் வந்த மாதிரி நடிக்க போற மீருக்குட்டி?” என்று அவன் நக்கல் கேள்வியில் சட்டென கண்களை திறந்தவள் அவனை முறைக்க..

 

கட்டிலில் அவள் அருகில் படுத்துக் கொண்டு அரங்கதாதனை போல கையை தலையில் ஊனிக்கொண்டு அவளின் முகம் அருகில் அவளையே பார்த்தவாறு.. அவள் செய்யும் சேட்டைகள் அவள் முகத்தில் தெரிய அத்தனையும் ரசித்தவாறு.. படுத்து இருந்தான் கிருஷ்.

 

“இந்தப் பார்வை மட்டும் அப்போதிருந்து இப்ப வரைக்கும் உன்கிட்ட மாற்றம் இல்லை. மற்றபடி..” என்றவனின் பார்வை அவளது கலைந்த புடவையில் வெளிப்பட்ட வனப்பு‌லேயும் அங்கலாவயங்களிலும் வெகு அழுத்தமாக அதி ரசனையாக படிந்து மீண்டது.

 

சட்டென்று அவளது ஆடையை சரி செய்து இடையை அவள் மறைக்க..

இன்னும் அவளை இடித்துக் கொண்டு படுத்தவன்,

 

“ரொம்ப எல்லாம் ஒன்னும் தெரியல.. லேசா உன் சைடு போர்ஷன்.. கொஞ்சமே கொஞ்சம் உன் மடிப்பில்லா இடுப்பு.. நடுவில் உள்ள அந்த நேவல்.. அது ஓரம் இருக்குற மச்சம்.. ம்ப்ச் அவ்வளவு தான்..” என்று உதடு பிதுக்கியவனை கண்டு அவளின் மூச்சு ஏறி இறங்கியது.

 

“முன்ன விட இப்போ கோபுர தரிசனம் பரவாயில்ல..” என்றவனின் பச்சை வார்த்தைகளில் அவள் சட்டென்று எழுந்துக் கொண்டாள்.

 

“யூ.. யூ.. யூ..” என்று புடவையை அவள் சரி செய்துக் கொள்ள..

 

“ஹேய் என்ன ரொம்ப எகிற? ஃபர்ஸ்ட் நைட்டுல இதுவே கம்மி..! ஏதோ யானை பசிக்கு சோளப்பொறினு நினைச்சு நான் மனசு தேத்திக்கிட்டா நீ என்னை முறைப்பியா?” என்று அவனும் எழுந்துக் கொள்ள..

 

இருவரது தோளும் ஒன்றோடு ஒன்று உரச.. தன் நெஞ்சுக்குள் பட படவென துடிப்பதை உணர்ந்தாள் மீரா.

 

“இங்க பாரு.. ஏதோ உனக்கும் பிடித்தமே இல்லாத மாதிரி எல்லாம் நடிக்காதடி. நான் டிரஸ் மாத்தினத நீ ஓர கண்ணால பார்த்த தானே?” என்று அவன் சண்டைக்கு நிற்க‌.

 

“எதே? ஓரக்கண்ணால பார்த்தேனா?” நெஞ்சில் கை வைத்தாள் அவள்.

 

“யோவ்.. நீ சட்டையை மட்டும் தானே மாத்துன.. பெருசா ஃபுல்லா பார்த்தது மாதிரி பேசுற?” என்றதும் அவனோ அவளது தோளை தன் தோளால் இடித்து “எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை..!” என்றான் கண் சிமிட்டி வெளிப்படையாக..

 

மீராவின் மனமோ கொஞ்சம் படபடுத்தது. கிருஷ் அவளது தாடையில் கையை வைக்க அழுத்தி பிடித்தாள் அவனது கையை. அவனது சூடான மூச்சு காற்றை அவள் மூக்கில் உணர்ந்தாள்.

 

“ஒரே ஒரு டெஸ்ட் தான். அத செஞ்சா உன் மனசு உனக்கே தெளிவா புரிஞ்சிடும். ஷல் ஐ?” என்று அவளை நெருங்கினான்.

 

மீராவின் தொண்டைக்குழி சுருங்கி விரிய, நெஞ்சு அடைப்பதை போல் இருந்தது. உரிமையாய் ஒரு ஆணின் தீண்டல்… அதுவும் அவள் தடுக்க இயலாதவாறு..!

 

மீராவின் கைகள் நடுங்க மெதுவாக மிக மெதுவாக அவளது உதட்டில் தன் உதட்டை பதித்தான் கிருஷ்.

 

அவனது வாசம் மட்டுமில்லை அவனது சுவையும் அவளது தொண்டைக்குள் இறங்க.. “நோ.. நோ.. நோ..” என்று அலறி அவனை தள்ளிவிட்டவள், வேக வேகமாக அவளது உதட்டை துடைத்தாள்.

 

இளம் ரோஸ் உதடுகள்.. 

கனிந்த சிவந்த முகம்… 

தலை நிறைய மல்லிகை பூக்கள்..

மிதமாக அலங்காரத்தில் மயக்கும் அழகி..

அதுவும் முதல் இரவு அறையில்..

எந்த ஆண்மகனையும் பீர் அடிக்காமலேயே போதைக் கொள்ள வைக்குமளவு பெண்ணின் தோற்றம்.

 

ஆனால்..

கலங்கி தவிக்கும் கண்கள்.. 

நடுங்கி துடிக்கும் உதடுகள்.. 

படபடப்பாக ஏறி இறங்கும் மார்புகள்.. என்று அவளை அவதானித்தவன்,

 

“டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு தூங்கு மீரா” என்றான் மென்மையாக, அவளது கன்னம் தட்டி.

 

அவள் அவனை நம்பாமல் பார்க்க..

 

“என்னடி நம்பாம பாக்குற? நெஜமா உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன்” என்று அவன் வாக்குறுதி கொடுக்க..

 

சற்று முன்பு தன் விருப்பம் இல்லாமலேயே அவன் முத்தம் கொடுத்தை அவள் குறிப்பாக உதட்டை காட்டி உணர்த்த..

 

“இது கூட ஃபர்ஸ்ட் நைட்ல இல்லைன்னா.. என் 27 வருஷ பிரம்மச்சரியத்திற்கு என்னடி நியாயம்? என் மனசே என்ன காரி துப்பும்” என்ற அவன் புன்னகையோடு பேச.. அவனை நம்பாமலேயே நைட் ட்ரஸை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று மாற்றி வந்தாள். 

 

அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே தன் வேட்டியில் உருவி விட்டு ஷார்ட்சை மாற்றிக் கொண்டான்.

 

“பாத்தியா.. நம்ப மாட்டேங்குற பாத்தியா? நான் எப்படி உன்னை நம்புறேன். நீ என் மேல பாஞ்சிட மாட்டேனு தைரியமா டிரஸ் மாத்துனேன் பாத்தியா?” என்றவன் நக்கலில், கோபத்தோடு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள் மீரா. 

 

சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள் அவள்.

 

காலையிலிருந்து இருந்த அலைச்சல் சோர்வு எல்லாம் கலந்து கட்டி அடிக்க தன்னை மீறி ஆழ்ந்து உறங்கி விட்டாள் மீரா.

 

உறங்கும் அவளை மென் புன்னகையோடு பார்த்திருந்தான் வேதாந்த் கிருஷ்ணா. 

 

இரண்டு நாளைக்கு முன்னால் தேவகி வந்து செய்த கலேபரத்தில் அவளைப் பற்றி அனைத்தும் கூறியிருந்தார் ராஜநாராயணன். 

 

கேட்ட அவனுக்கே அத்தனை கொதித்து வந்தது இவளெல்லாம் ஒரு தாயா என்று தேவகி மேல்.

 

அதே சமயம் தன் கல்யாணத்தில் வந்து அவர் எந்தவித வம்பும் செய்து விடக்கூடாது என்று முன்னேற்பாடாக தனது தெரிந்த நண்பன் மூலம் கமிஷனர் ஆபீஸில் ராஜநாராயணனை வைத்து கம்பளைண்ட் கொடுத்தான். 

 

அவரும் தேவகியை அழைத்து அந்த விஷயத்தை கூறி எச்சரிக்க.. அவரோ தாம் தூம் என்று அங்கே குதித்தார்.

 

கமிஷனர் அதோடு விடாமல் தேவகியோடு இருக்கும் அந்த அரசியல்வாதிக்கும் ஃபோன் செய்து “சார், இந்த விஷயத்தில் உங்க செகண்ட் வைஃப் தலையிடாமல் இருந்தால் உங்க அரசியல் வாழ்க்கைக்கு நல்லது..! ஒரு அம்மாவே பொண்ணு கல்யாணத்துல இவ்வளவோ பிரச்சினை பண்றாங்கனு பேச்சு வந்தா நெட்டிசன்கள் உங்க எதிர்கட்சி எல்லாம் என்ன பேசுவாங்கனு நீங்களே யோசிச்சுக்கோங்க?” என்று கூறிவிட.. அரசியல்வாதியே தேவகியை அடக்கி வைத்து விட்டார். 

 

தனி வாழ்க்கையில் எப்படிப்பட்ட வாழ்க்கை அவன் வாழ்ந்திருந்தாலும், அரசியல்வாதிக்கு அவரது செல்வாக்கும் அரசியல் உலகத்தில் அவரது நன்மதிப்பும் ரொம்ப முக்கியம். அதனாலதான் இவர்களது திருமணம் எந்தவித தொந்தரவும் இன்றி நன்முறையில் நடந்தேறியது.

 

அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவன், அவள் முகத்தில் வந்து விழுந்த அவளது முடிக்கற்றைகளை மெல்ல ஊதிவிட்டான்.

 

“இனி உன் வாழ்க்கையில் கடந்த கால கசப்பு எதுவும் இருக்காது மீரா.. நிகழ்காலமும் எதிர்காலமும் நானாக இருப்பேனடி..! எனக்கு நீ வேணும்..! ஆனா.. நீயா தான் நீ வேணும்” என்றவன் அவள் தூக்கம் கலையாமல் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தான்.

 

 

கிருஷ் அவசர படவில்லை.. 

அவளை உடனடியாக அனுபவிக்க முயலவில்லை. அவளது மன கசப்புகளில் இருந்து அவளை வெளிவர முயற்சிக்கிறான்.

 

அவனுக்கு தேவை காதலோடு கலந்த காமம். அதுவும் அவளின் ஒப்புதலோடு..!

 

தானாக கனியும் கனிக்கு தான் சுவை அதிகம் அல்லவா?

 

அவளை கனிய வைக்க.. காத்திருக்க முடிவு எடுத்தான் கிருஷ்.

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top