Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 21

 

இவனேங்களோட.. நேரம் காலம் தெரியாம..’ என்றபடி முகத்தை சிரித்தாற் போல் வைத்துக் கொள்ள அத்தனை கஷ்டப்பட்டாள் மீரா. அவர்களிடத்தில் அமர்ந்த உடன் மடமடவென்று அவர்களின் வெள்ளி தட்டில் பதார்த்தங்களால் நிரப்பப்பட்டது.

 

இளவட்டங்கள் என்றால் சும்மாவா “அப்புறம் ?” “அடுத்து..?” என்று அவர்களின் கேள்விப் பேச்சு அதுவும் நமட்டு சிரிப்போடு கூடிய அவர்களின் பார்வை மாற்றங்களும் சிரிப்புகளும் இன்னும் மறைமுகமான வார்த்தைகளும் கேட்க கேட்க மீராவுக்கு ஒரு மாதிரியாகியது. 

 

“இன்னைக்கு நைட்..” என்று அவர்கள் ஆரம்பித்த பேச்சிலேயே ஏதோ பேய் அடித்த மாதிரி திகில் வந்து அவளோடு ஒட்டிக்கொள்ள ஒருவித படபடப்பில் இருந்தவள் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமல் தட்டில் வைத்ததெல்லாம் என்ன எது என்று தெரியாமல் விழுங்கிக் கொண்டு இருந்தாள் மீரா.

 

உண்ணும் உணவின் ருசி என்ன? அதன் பெயர் கூட அந்நேரத்தில் அவளிடம் கேட்டிருந்தால்? திருத்திருவென்று விழித்திருப்பாள்..

 

அவள் சாப்பிடுவதை ஒரு விதமாக பார்த்திருந்தான் கிருஷ்.

 

“புருஷனு நினைச்சு என் தட்டில் இருந்து நீ எடுத்து சாப்பிடுவது எனக்கு பிரச்சனை இல்லை மீரு.. நீ இப்ப கையில வச்சிருக்கிறது மிளகாய்.. அதுவும் பச்ச மிளகாய்” என்றதும் சட்டென்று வாயில் வைக்கப் போனவளின் கரத்தைப் பற்றி அவன் கூற.. 

 

ஒரு நிமிடம் என்னவென்று புரியாமல் விழித்தவள் அதன் பின்னே கையில் இருந்தவற்றைப் பார்த்து சட்டென்று கீழே போட்டாள். 

 

அதற்குப் பின்னால் தான் தன்னைச் சுற்றி உள்ள சூழ்நிலையை அவள் முழுதாக அவதானித்தாள். அவளின் தட்டில் இருந்த பதார்த்தங்கள் வைத்தது வைத்தபடியே இருக்க.. இவள் பாட்டுக்கு அவன் தட்டில் இருந்து தான் அனைத்தையும் எடுத்து உண்டு இருந்திருக்கிறாள் என்று..!

 

“அச்சோ..! இப்படி மானம் போச்சே..!” என்று வெளிப்படையாக தலையில் அடித்துக் கொள்ள முடியாது நிலை அவளுக்கு. அதற்குள் இளவட்டங்கள் இவற்றைப் பார்த்து சிரித்து மற்றவர்களுக்கும் வைஃபை இல்லாமலேயே தகவல் பரப்ப..

 

அப்புறம் என்ன சிரிப்பொலிகளால் அவ்விடம் கலவரப்பட்டது..!?

 

அதற்கு மேல் எங்கிருந்து உண்ண என்று வெட்கம் பிடுங்கி தின்ன அவள் எழ முற்பட, 

 

“ஹேய் உட்கார்ந்து சாப்பிடு முதல்ல.. நீ பாட்டுக்கு எழுந்து போற.. நைட்ல பசிச்சா உன் கூட இருக்கும் என்னை நீ சாப்பிட்டினினா என்ன பண்றது?” என்று‌ கன்னகுழியில் உதட்டை சுழித்தவாறு கிருஷ் கேட்க, இன்னும் விதிர்விதிர்த்து அவனை‌ பார்த்தாள் மீரா.

 

அதற்குள் மீரா சாப்பிட்ட லட்சணம் அங்கிருந்த அனைவருக்கும் பரவ.. பெரியவர்களும் இதை கண்டும் காணாமல் ஒரு புன்னகையுடன் கடந்து செல்ல.. சிறியவர்கள் தான் அதை சொல்லி சொல்லி சிரித்து காட்டினர்.. கேலி பேசினர்..!!

 

கல்யாண வீடு என்றால் இந்த மாதிரி கேலிகள் கூட இல்லை என்றால் எப்படி?

 

மீராவுக்கு தனலில் இருப்பது போல இருந்தது. யாரை முறைத்து? யாரைவிட? என்பது போல கேலி செய்தவர்களை ஒன்றும் செய்ய முடியாமல், இவள்தான் தலையை குனிந்து கொள்ள..

 

“பாருடா மீராவிற்கே வெட்கம் வருது” என்று இன்னும் சிரிப்பொலி அவ்வீட்டை நிறைத்தது.

 

ஆனால் அவளோ மற்றதெல்லாம் விட இவன் செய்த சேட்டை தாங்க முடியாது ‘எப்படா இங்கிருந்து தப்பித்து செல்லலாம்?’ என்று எஸ்கேபி மோடியிலேயே இருக்க.. அதற்கு கிருஷ் விட்டால் தானே?

 

“என்ன ஓடிப் போய்டலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா? எப்படி தப்பிக்கலாம்னு பிளான் பண்றியா? வாய்ப்பே இல்லை ஒன்ஸ் உள்ள வந்துட்டா.. நோ அவுட் கோயிங்..!” என்றதும் இல்லை என்று வேகவேகமாக தலையசைத்தாள் அவள். 

 

“அப்போ வேற என்ன திங்கிங் மிர்ஸஸ் ராஜமீரா வேதாந்த் கிருஷ்ணா?” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து அவளது ஒற்றை நாள் கூட ஆகாத புது கணவன்.

 

அதை அவன் கேட்ட விதத்திலும் அவனின் குரலிலும் அவளுக்கு அதன் அர்த்தம் பலவாறு புரிய.. இன்று இவனிடம் பேசி வீண் விவாதம் செய்ய மனமின்றி எதுவும் பேசாமல் முடிந்த மட்டும் தலை நிமிராமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

“என்ன ஆச்சரியம்? என் சீனி சக்கர சீனி பட்டாசு வெடிக்காமல் அமைதியா இருக்கிறாளே?” என்று அவள் காதில் ஏதோ ரகசியம் போல அவன் முணுமுணக்க.. முகத்தை மட்டும் அவன் புறம் திரும்பி முறைத்தாள் மீரா.

 

“சாப்பாடு மாத்தி சாப்பிட்டதுக்கு எல்லாம் கவலைப்படற ஆளு நீ கிடையாது. இப்போ தெரியாம செஞ்சத வேணும்னு செய்ற ஆளு நீ..! அதுவும் மத்தவங்க கேலி கிண்டல் எல்லாம் கண்டு கொள்ளுற ஆளும் நீ இல்ல.‌ வேற எதற்காக இந்த பயம் பதட்டம் உனக்குள்ள இப்போ?” இப்பொழுது இவனும் அவள் புறம் நன்றாக பார்த்து ஆழ்ந்த குரலில் கேட்க..

 

அவளோ இப்பொழுது இன்னும் தலையை குனிந்து கொண்டாள். விட்டால் சாப்பாட்டிலேயே முகத்தை புதைத்துக் கொள்வாள் போல..

 

“ஓஹ்..‌ஓஓஓ.. கண்டுபிடிச்சிட்டேன். நம்ம ஃபர்ஸ்ட் நைட் நினைச்சா?” என்று விழுந்தது சரியான கேள்விக் கணை அவள் காதில்.

 

“பேர் வச்சிருக்காங்க பாரு இவனுக்கு? எப்படி சரியா எல்லாத்தையும் மகாபாரதத்தில் வர கிருஷ்ணன் படிக்கிற மாதிரி எல்லாத்தையும் கரெக்டா கேப்சர் பண்றானே தெரியல? ஆண்டவா என்னை எப்படியாவது இன்னிக்கு ஒரு நாள் நைட் மட்டும் காப்பாத்து..!” என்று அவள் அவசரமாக வேண்டுதல் வைக்க..

 

“என்ன வேண்டுதல் பலமோ?” என்று மீண்டும் அவனிடம் கேலி சிரிப்பு..!

 

அதற்குள் “என்ன பொண்ணு மாப்பிள்ளை இன்னும் சாப்பிட்டுட்டு இருக்காங்களா?” என்று அவர்களுக்கு குறித்த வந்த நேரம் கடந்து விடுமோ என்று பதட்டத்தோடு வந்தார் யசோதா.

 

மீராவின் தட்டில் வைத்த பதார்த்தங்கள் அப்படியே இருக்க கிருஷ்வின் தட்டில் பாதிக்கு மேல் காலியாக இருந்தது. 

 

அதுவும் அவன் அமைதியாக அமர்ந்திருக்க “மாப்பிள்ளை சாப்பிட்டு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. சீக்கிரம் சாப்பிடு டி” என்று உந்தினார் யசோதா. 

 

“ஆமா.. ஆமா.. மாப்பிள்ளை வெயிட்டிங் தான்..!” என்று ஏகப்பட்ட கேலி குரல்கள் அவர்களை சுற்றி கேட்க..

 

“உங்களை.. எல்லாருக்கும் போங்க.. அவங்கள ஃப்ரீயா விடுங்க” என்று யசோதா சிரிப்போடு சற்று நாணத்தோடும் அவர்களை அகற்றினார். 

 

அதற்குள் ரதன் “அத்த ரொம்ப உங்க உன் பொண்ண தாங்காதிங்க..! அதுவும் சாப்பிடலனு சொல்லாதிங்க.. ஏன்னா அண்ணன் தட்டுல இருந்தத காலி பண்ணதே அவதான். ஒரு தட்ட முடிச்சிட்டு இப்ப இன்னொரு தட்டுக்கு வந்து இருக்கா.. தெரியுமா?” என்றதும் இன்னும் சிரிப்பு அங்கே பீறிட்டது. 

 

“அட ஆண்டவா..! இப்படியாடா சேர்த்து எல்லாரும் என்ன பழிவாங்குவீங்க.. இருங்கடா உங்களுக்கும் இது போல எல்லாம் நாள் வராமல் போகும்? அப்ப பதிலுக்கு நாம் பழி வாங்கல..!” என்று அவசரமாக மங்கம்மா சபதம் எல்லாம் எடுத்துக் கொண்டாள் மீரா. 

 

“என்ன மாப்ள சாப்பிடலையா? அவர் தட்டுல இருந்தத இவ சாப்பிட்டாளா?” என்று அதிர்ச்சியோடு யசோதா மகளை முறைக்க..

 

“அது வந்து மா.. தெரியாம.. அது வந்து..” என்று மகளின் சமாளிப்பில் சற்று என்று அவர் சிரித்து விட்டவர்,

 

எப்பொழுது கிருஷிடம் நகர்ந்து “நான் உங்களுக்கு வேற தட்டு வைக்கிறேன் தம்பி” என்றதும் அவன் சிரித்து தலையாட்டி மறுத்தவன்,

 

“நோ ப்ராப்ளம் ஆன்ட்டி..! எனக்கு இதுவே போதும் என்ன இருந்தாலும் என்னோட சரிபாதி தானே என் பாதி சாப்பாட்டை காலி பண்ணுனா..” என்றவன், மீரா சாப்பிட்டு மீதி வைத்திருந்த ஸ்வீட்டை எடுத்து மீராவை பார்த்தவாறே சப்பு கொட்டி சாப்பிட அவனை ஆவேனென்று பார்த்தவள் சற்று என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“இன்னும் கொஞ்சம் இது மட்டும் வச்சுக்கோங்க..” என்று அவர் அவன் எதை சாப்பிடுகிறானோ அதை அருகில் நின்று பரிமாறியவர் மகளை ஓரக்கண்ணால் உருத்து “சீக்கிரம் சாப்பிடு” என்று வாயசைவில் எச்சரித்தார். 

 

“எனக்கு மாமியார் கொடுமை கிடையாது போல.. அம்மா கொடுமையே ஜாஸ்தி இருக்கு. என் மாமியாரை கம்முனு போய்ட்டாங்க என் அம்மாவுக்கு என்ன வந்துச்சுன்னு தெரியல..” என்றவளுக்கு ஒரு பருக்கை கூட இப்பொழுது வாயில் நுழைய அத்தனை கஷ்டமாக இருந்தது. 

 

“ஏன் பெரியம்மா அக்காவை இவ்வளவு போர்ஸ் பண்றீங்க வேகமா சாப்பிடுனு.. மெதுவா பொறுமையா அக்கா சாப்பிட்டு பலம் ஏத்திக்கிட்டும். அப்பத்தானே தெம்மா அத்தானை எதிர்க்கொள்ள் முடியும்?” என்று இன்னொரு பெண் கேலி செய்ய..

 

‘ஐயோ கல்யாணம்னா இவர்களுக்கு இதைத் தவிர வேறு எதுவுமே ஞாபகத்துக்கு வராதா?” என்று காலையிலிருந்து இவர்கள் செய்யும் அலப்பறையில் நொந்து நூலாகி இப்பொழுது வெந்து நூடூஸாகி கொண்டு இருந்தாள் ராஜ மீரா.

 

அதைவிட உச்சக்கட்டம்..

 

பயந்து பயந்து முதல் இரவு அறைக்குள் நுழைந்தாள் மீரா. தைரியமான பெண் தான்..! தேவை என்றால் ஆண்களை எதிர்த்து பந்தாடும் தற்காப்பு கலையை கற்ற பெண் தான்..!

 

ஆனால் இந்த சமூக கட்டுப்பாடு கல்யாணம் ஆனதிலிருந்து பெண்களுக்குள் இப்படி நடக்க வேண்டும்.. அப்படி நடக்க வேண்டும் என்று ஏகப்பட்ட அறிவுறுத்தல்களை கூறி அவர்களின் மனநிலையை மாற்றி வைத்து விடுகிறார்கள். ஏனோ ஒரு பயம் பதட்டம் பெண்களின் மனதிற்குள் வந்து விடுகிறது.. இயல்பாக..!

 

அப்போது மற்றொரு மூலையிலிருந்து பாட்டு சத்தம் கேட்க திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் மீரா.

 

வேறு‌ யாரு கிருஷ் தான்..! அதுவும் பாடலை பாரு..

 

“இன்று முதல் இரவு...  

நீ என் இளமைக்கு விருந்து…” 

 

என்று குறும்பாக கண்ணடித்து பாடியபடி நெருங்கிய கிருஷை கண்டு அவள் பயந்து பின்னே செல்ல, அங்கிருந்த சுவர் அவளின் நகர்வை தடுத்து நிறுத்த, விரிந்த கண்கள் விரிந்தபடி அவனை பார்த்து பயந்தபடி அவள் நிற்க, அவளை நெருங்கியவனோ இரு கை கொண்டு அவளின் இரு புறமும் வைத்து நகர முடியாதபடி சிறைப்பிடித்து நின்றான்.

 

//கிள்ளவா

உன்னை கிள்ளவா

இல்லை அள்ளவா.. //

 

என்றவனின் பாடலில் அவள் அரண்டு பார்க்க..

 

//வரவா..

வந்து தொடவா?

உன் ஆடைக்கு விடுதலை

தரவா…?//

 

என்றவன் தாபத்தின் வேகத்தில் அவளை நெருங்கி நின்றான். பின்வாங்க முடியாமல் அவள் முழித்து கொண்டு நிற்க, ரசித்துக்கொண்டே முன்னேறியவன் கைகளை அவள் இடையில் இம்சித்தது. பின் வாங்க முடியாமல் அவன் கை வளையத்துக்குள் அகப்பட்டுக்கொண்டவளை ஆரத்தழுவிக் கொண்டான் ஆணவன்..

 

“அது வந்து.. ப்ளீஸ்.. நான் என்ன சொல்ல வரேன்னா..” என்று இரண்டு வரிகள் பேசவே அவளுக்கு 200 முறை மூச்சு இறைத்தது.

 

அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை. 

 

//இது போன்ற விசயத்தில்

உன் பேச்சி உதவாது..//

 

என்றவன் பதிலுக்கு பாட.. அவள் திகைத்து விழிக்க..

 

அழுத்தமாக தன் முதல் முத்தத்தை அவள் இதழில் பதித்தான் கிருஷ்.

அவளோ அவ

னின் இதழின் ஈரத்தை உணரும் முன்னே.. வெவ்வேறு நினைவுகளின் தாக்கத்தில் மயங்கி சரிந்தாள் அவன் கைகளிலேயே..!!

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top