அத்தியாயம் 26
கிருஷ் சொன்னது போலவே அவளிடம் நடந்து கொண்டான். அவளை எதுக்கும் கட்டாயப்படுத்தவும் இல்லை அதே சமயம் அவனது உரிமையை விட்டுக் கொடுக்கவும் இல்லை.
சிறு சிறு அணைப்பு.. சர்ப்ரைஸ் முத்தங்கள்.. என்று அவர்களின் நாட்கள் கடந்து கொண்டுதான் இருந்தது.
ஆனால் எத்தனை நாளைக்கு தான் இந்த ஆண்மகன் அழகிய மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு பிரம்மச்சரியத்தை பார்க்க முடியும் இப்போது எல்லாம் அவனுக்கு விரகத்தாபம் அதிகமாக இருந்தது.
ஆனால் அது மனைவி இடத்தில் காட்டவும் முடிய வில்லை. “நீதானே அப்போ சொன்னது இப்போ இப்படி நடக்குறியே?” என்று அவள் ஒரு வார்த்தை கேட்டு விடக்கூடாது.
“எல்லா ஆம்பளைங்களுக்கும் உடம்புக்கு தான் பிரதானம் எங்க மனசுல இல்ல” என்று அவள் வருத்தப்படக்கூடாது என்று மிகவும் அவளை மென்மையாக பார்த்துக் கொண்டான் கிருஷ்.
அவளது ஆர்கனைஸ் வேலையில் அவன் எவ்வித குறையும் சொல்ல மாட்டான். ஆனால் ராத்திரியில் அவள் செய்யும் இந்த பைக் ரைட் வீலிங் இதையெல்லாம் விட்டு விடுமாறு கட்டளையை இட்டிருந்தான்.
அவன் கண்டிப்பாக கட்டளையாக சொன்னால் “போடா.. போ.. அப்படிதான் செய்வேன்” என்று கோபம் கொள்ளும் குணம் தான் அவளுக்கு.
ஆனால் ‘மற்றவற்றில் தனக்கு ஆதரவாக இருக்கும் கணவன் இந்த ஒன்று கண்டித்து சொல்கிறான் என்றால் நம் நன்மைக்கு தானே?” என்று எப்பொழுது எல்லாம் அவனைப் புரிந்து கொள்கிறாள். இரவு பயணத்தை தவிர்த்தாள். அப்படி பயணம் செல்ல நேரிட்டால் ஒன்று கண்ணாவையோ அல்லது வீரபாஞ்சானையோ அழைத்துக் கொண்டாள்.
முறைத்துக் கொண்டே தன் பேச்சை கேட்கிறாளே என்று மனைவியைப் பார்த்து புன்னகைப்பான் கிருஷ். ஆனாலும் இவள் முறுக்கிக் கொண்டுதான் திரிவாள்.
கண்ணா ராதாவின் காதல் இப்பொழுது அந்தரங்கத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்தது. ராதாவும் கிருஷுக்கு கொடுத்த வாக்குப்படி கண்ணாவை அதிகம் பார்ப்பதில்லை பேசுவதில்லை..
அவளும் தந்தையைப் போல ஆடிட்டர் படிப்புக்கு தேர்வுக்காக தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறாள். அதுவும் கிருஷின் அறிவுரையின் பேரில்.
அன்று ஏதோ மிகவும் சந்தோஷமாக இருந்த கிருஷ், அறைக்குள் நுழைந்ததும் மீராவை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். கொஞ்சம் எல்லே தாண்டினான் எனீறே சொல்லலாம். அவளின் விரைப்பை கண்டு சற்று நேரத்தில் விடுவித்தான்.
“இதெல்லாம் வேண்டாம்..!! ரொம்ப தப்புனு யாரோ சொன்ன மாதிரி இருந்துச்சு..??”
குறும்பாகக் கேட்டாள்.
”ஹ்..ம்ம்.. அவன அப்பவே வெரட்டி விட்டுட்டேன்..!!” என்றவன் முகம் தூக்கி அவள்
உதட்டில் முத்தம் கொடுத்தான்..
”எங்க போனீங்க..??” கூர்மையான அவள் பார்வை.. என் விழிகளைச் சுண்டியது..!
”சொன்னேன் இல்ல.. காலேஜ் பிரெண்ட்ஸ் கெட்டுகெதர்னு..” அவள் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் சற்று தடுமாறினான்.
”எக்ஸ் கேர்ள் பிரெண்டா..?? காலேஜா?” பளீரென மின்னும் வெண்மைப் பற்கள் தெரிய.. சிவந்த இதழ்களை விரித்துச் சிரித்தாள். அவளது கண்களில் குறும்பு மின்னியது..
”ச்சே.. சே.. அதெல்லாம் இல்லை” என்றவன் பாலகனி பக்கம் சென்றான்.
”அப்புறம் என்ன சொன்னா என் சக்களத்தி?” அவன் பார்வையில் முழுமையாகப் படுமாறு வந்து.. அவளது வலது தோளை சுவற்றில் சாய்த்து இடுப்பை வளைத்து.. ஒயிலாக நின்றாள் மீரா.
“ம்ம்.. அவளுக்கு என்னை ஓசியில் கொடுத்தாலும் வேணாமாம்” என்றான் அவனும் குறும்பாக.
”நீங்க எல்லாம் சாப்டாச்சா..??”
”ம்ம்ம்.. வெளியில் ஃபங்ஷன் போனோம்ல அப்போவே சாப்பிட்டாச்சு. நீங்க..??”
”ஓ..!! ப்ரண்ஸோட..” என்றான் கிருஷ்.
மீண்டும் ”அப்புறம்..??” என்றாள் சிரிப்பை அடக்கியப்படி. அவளுக்கு கிருஷ் தனது எக்ஸ் காதலியை பார்த்தபோது என்ன நடந்தது என்று அறிய வேண்டிய குறுகுறுப்பு.
”அப்புறம் என்ன விழுப்புரம். நீ என்ன தூண்டி துருவினாலும் அங்கு ஒரு விஷயம் இல்ல. கெட்டுகெதருக்கு அவளும் வந்திருந்தா.. ஜஸ்ட் பேசினோம் அவ்வளவுதான்” என்றவன் சிரித்தவாறு தன் தோளை அவளை போல
சுவற்றில் சாயத்து அவளைப் பார்த்து நின்றான்.
“என்ன அவ்வளவு தானா? நான் கூட 96 ஸ்டோரில் வருகிற மாதிரி நடந்திருக்கும்னு எவ்வளவு ஆவலோடு காத்திருந்தேன் தெரியுமா?” என்றவளை முறைத்தான் கிருஷ்.
இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஓடி இருந்தன..
தீனதயாளன் மகனின் ரிசப்ஷனை மிக விமர்சையாகவே நடத்தினார்.
கோபம் ஆற்றாமை மனதாங்கல் அனைத்தும் மறந்து இப்பொழுது அன்பு நேசம் பாசம் கொண்டு உறவுகளோடு உலா வருவதில் மீராவின் மனமும் சந்தோஷமாக நிறைவாக இருந்தாள். அதன் பூரிப்பு அவள் உடலில் தெரிந்தது.
கன்றிச் சிவந்த அவளது செழுமையான கன்னங்களும்.. இன்ப ரசம் ஊறிதத்தும்பும்..
செவ்விய இதழ்களும்.. மதுக்குடம்போல் நிறைந்து முழுமை பெற்ற முற்றாத இளம்
கொங்கைகளும்.. இன்னும் பூரித்த அவளது இளமை அழகை…. அவனால் சாதாரணமாக பார்க்கவே முடியவில்லை..!!
அவனின் ஏக்கம் தணிக்க வழியில்லையே.. பெரு மூச்சு விட்டான்.
இன்று சங்கீதா உறவினர் வகையில் ஒரு எங்கேஜ்மென்ட் சென்று வந்திருந்தாள் தீன தயாளன் மற்றும் சங்கீதாவோடு மீரா.
நெற்றியில் திலகம் வைத்து..
புத்தம் புதிய பட்டு புடவையில்.. அவளது பொங்கும் இளமை ததும்பி வழிந்தது..!!
தளதளவென உடம்பு..!! தகதகவென ஒரு நிறம்..!! பளப்பளவென ஒரு தோற்றம்..!!
கிறங்கினான் கணவன்..
அவளது முந்தானை ஒதுங்கிய இளமை செழுமையும்.. மின்னல் வெட்டும்.. இடுப்புச்
சரிவும் அவனை ஈர்த்தது..!
எதுவும் பேசாமல் அவளை பார்த்திருந்தான் கண் சிமிட்டாமல்..
அவளுக்கு அவனின் தோற்றத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது. அது அவனின் தேடல் அவளுக்காக..!
பாசமாய் பேசுகிறாள்.. அன்பாய் கவனிக்கிறாள்.. காதலாய் பார்க்கிறாள்.. ஆனால் அதை தாண்டி.. அவளாக ஒரு முத்தம்.. ஒரு அணைப்பு.. ம்ஹூம்..!
ஏக்கம் நிறைந்த ஆண் மனது அதனை வதனத்தில் காட்ட.. அவனைக் கண்டு கொண்டாள் மனைவி.
”ஏன் இப்படி இருக்கீங்க..??” கொஞ்சம் வருத்தமான குரலில் கேட்டாள்.
“நல்லா தான் இருக்கேன் மீரு” என்றான் பொய்யாக.
“இல்ல.. எனக்கு வித்தியாசம் தெரியுது. எதுவோ போல இருக்கீங்க” என்றாள் கூர்ந்து பார்த்து.
இன்று அவன் சென்று வந்த நண்பர்கள் பலரும் தங்கள் மனைவியோடு குழந்தையோடு வந்திருக்க.. இவளோ நெருங்கிய உறவினர் விசேஷம் என்று மாமனார் மாமியாரோடு கம்பி நீட்டி விட்டாள்.
சங்கீதாவும் வேண்டாம் என்றுதான் கூறினார். ஆனாலும் விடாப்படியாக இவள்தான் சென்றாள்.
காரணம் கல்லூரி என்றால் அங்கே வருபவர்களில் கிருஷின் எக்ஸையும் சந்திக்க வேண்டும். அந்த துணிவு அவளிடம் இப்போது இல்லை.
”நானா ஆசைப்பட்டு.. இருக்கல.. ஆனா.. இப்பல்லாம்.. வலி ரொம்ப அதிகமா இருக்கு.. ராத்திரில தூங்க முடியாத அளவுக்கு..!!” என்றான் எங்கோ பார்த்து..
அமைதியாக நின்றவள் அவனை வெறித்துப் பார்த்தாள். அவளது அழகு கொஞ்சும் முகம்
கொஞ்சம் இறுக்கமானது.
”இப்படி ஒரு அவஸ்தைக்கு ஆளாவேன்னு நானே எதிர் பாக்கல.. சாரி மீரு.. உன்ன
டிஸ்டர்ப் பண்ண இதை நான் சொல்லல..!! என் மனசுல நான் அனுபவிக்கற காயம்.. நீ
கேட்டதும் சட்னு சொல்லிட்டேன்..! சாரி..
இனிமே உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..!!” என்றவன், அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து விட்டான். அவள் அழகும் இன்னும் அவன் கண்ணுக்குள்
மின்னிக் கொண்டிருந்தது..!!
‘ச்ச.. எவ்வளவு அழகாக இருந்து ஆளக் கொல்றாளே..!!’
‘கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.. அவன் காதலித்து வேதனையில் வாட
வேண்டும்..!!’ என்கிற பாடல் வரிகளை தன் மனசுக்குள் ஓடவிட்டுக்கொண்டு..
தலையணையை ஓங்கி ஒரு குத்துவிட்டான்.. அது தூரம் போய் விழுந்தது.
அன்று வெகு நேரம் கழித்து தான் உறங்குவதற்கு அறைக்குள் வந்தாள் மீரா.
மறுநாள் கையில் பெட்டியோடு ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு செல்ல போகிறேன் என்ற ஒரே திகைத்துப் பார்த்தான் கிருஷ்.
“இதுக்குத்தான் நான் எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். நீதான் சொல்லுடா சொல்லுடானு வம்படியா கேட்ட.. இப்ப பாரு அம்மா வீட்டுக்கு பொட்டியை தூக்கிட்ட” என்று அவன் கோபமாய் கத்த…
அவளோ சாந்தமாக நிதானமாக “ஒரு வாரம் தானே அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்டவளை விசித்திரமாக பார்த்தான் கிருஷ்.
எப்பொழுதும் இவன் சாதாரணமாக பேசினாலே அவள் கோபமாக கத்துவாள். இவன் கோபம் கொண்டால் அவள் அதிகோபமாக கத்துவாள். மீராவின் இந்த நிதானம் அவனை பயம் கொள்ளச் செய்தது.
சரி என்றவன் வீட்டில் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு அவளை அவள் பிறந்த வீட்டில் விட்டு விட்டு வந்தான். முதல் ஊடல் கூடவே பிரிவு அவனை வாட்டி வதைத்தது.
அவளுடனான தாம்பத்தியம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும்.. அவள் அருகில் இருக்கும் வாசமும் ஸ்பரிசமே போதும் என்று மனது ஏங்க ஆரம்பித்தது.
ஒரு வாரம் ஓடிப்போன நிலையில் ஆர்கனைஸிங் வேலையில் தீவிரமாக இருந்தாள் மீரா. யசோதா கூட அவ்வப்போது யோசனையாக மகளை பார்த்த வண்ணம் தான் இருந்தார். ஆனால் வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை.
ராதாவை கேட்க சொன்னார் யசோதா. அவளோ “சும்மா இருங்கம்மா.. ஆறு மாசமா அக்கா அங்க தானே இருந்தா.. ஒரு வாரம் அம்மா வீட்டுல வந்து இருக்க உரிமை இல்லையா? நாளைக்கு என்னையும் இப்படித்தான் விரட்டுவீங்களா?” அவள் பதிலுக்கு அம்மாவிடம் கண்களை கசக்க..
“சரியான ஆழு மூஞ்சி போய் தொலை..” என்றவர் கணவனை நச்சரிக்க ஆரம்பித்தார்.
“நீங்க மாப்பிள்ளைகிட்ட பேசுனீங்களேன்.. ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனையானு?” என்றதும் அவரோ “விடு யசோ.. மீராவே ஆறு மாசம் கழிச்சு அவளவே நம்மள தேடி வந்து இருக்கா.. இப்பவும் அவளை நாம விரட்டுனுமா சொல்லு?” என்று கேட்டதும் அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை.
மகளின் மனம் புரிந்தாலும் மகள் புகுந்த வீட்டில் இருந்தால் தானே நலம் என்று அன்னையின் மனம் அதையே உழப்பிக்கொண்டு இருந்தது.
அன்று ராஜநாராயணனும் யசோதாவும் கோவிலுக்கு செல்ல.. இரு பெண்களும் வர மறுத்து விட்டனர்.
அண்ணியை காண வந்திருந்தான் கண்ணா.
“பாருடா என் கொழுந்தனுக்கு என்னை எல்லாம் ஞாபகம் இருக்கு?” என்று அவள் கிண்டலாக கேட்க..
“இது போக்கு அண்ணி.. முந்தநாள் ஆர்கனைசிங் டீம்ல ஆளு பத்தலன்னு என்னதான கூப்பிட்டீங்க.. நானும் சூப்பர் மார்க்கெட்டில் வேலையிலிருந்து ஓடி வந்து பத்தோட பதினோரு ஆள் நின்னு வேலை செஞ்சேனா இல்லையா?” என்று அவன் முகத்தை தூக்கி கொள்ள..
“ஓகே ஓகே.. சும்மா கிட்டிங்.. என்ன சாப்பிடுற?”
“ஒன்னும் வேணாம் போங்க” என்று மறுத்தவனை கண்டுகொள்ளாமல் அவனுக்கு காஃபி ஸ்னாக்ஸ் எடுத்து வரும்போது யசோதா அழைக்க ராதாவிடம் கொடுத்து கொடுக்குமாறு சொல்லிவிட்டு அன்னையிடம் பேசினாள் மீரா.
ஸ்நாக்ஸ் தட்டை டேபிளில் வைத்து விட்டு கண்ணாவை இறுக்கமாக அணைத்து நின்றிருந்தாள் ராதா.. தன் அக்காவை கண்டு சட்டென கண்ணாவை விலக்கி விட,
“அடியே.. என்ன டி இது? என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அதுவும் வீட்டுக்குள்ள?” என்று தங்கையை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தாள் மீரா.
