அத்தியாயம் 15
நடந்த நிகழ்வுகளில் இருந்து சற்றும் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் யசோதா.
“நான்.. அப்படியா??? நான்.. நான்… அப்படியா செஞ்சிடுவேன்..” என்று அத்தனை அரட்டிக் கெண்டிருந்தார்.
அதிலும் மீராவின் கையை இறுக்கமாக பற்றி தன் நெஞ்சில் வைத்தப்படி அவர் அமர்ந்திருந்த நிலை அனைவரையும் உருக்குவதாக இருந்தது. அவரின் அழுது அழுது சோர்ந்த முகம் அனைவரையும் கலங்க வைத்தது.
“ம்மா.. ம்மா… அதெல்லாம் நினைக்காத மா.. லீவ் இட்” என்ற மீராவின் சமாதானமோ.. ராதாவின் அழுகையோ.. ரூபிணி மற்றும் யாமினியின் தேற்றலோ அவரை அசைக்கவில்லை.
ரதன் தந்தைக்கு ஃபோன் செய்து நடந்தவற்றை கூறிவிட்டான்.
“நாங்க வந்திட்டே இருக்கோம். நீ அத்தைய பாத்துக்க” என்ற தேசிகன் ராஜநாராயணனிடம் “அய்த்தான்… தேவகி வந்திருந்தாளாம்..” என்றார் மெல்லிய குரலில் தயக்கமாக..!
“ம்ம்ம்..” என்று உறுமினார் நாராயணன்.
இருவரும் வேகவேகமாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
“என்ன யசோதா என் புருஷனையும் என் பொண்ணையும் தான் என் கிட்ட இருந்து பறிச்சுகிட்ட… வர போற மாப்பிள்ளையாவது என் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைப்பியா? இல்ல உன் பொண்ணுக்கு பண்ணி வச்சுடுவியா?” அந்த வீடே அதிர அவர் கத்த.. அதுவரை ஒரு மோனநிலையில் இருந்த கிருஷூம் மீராவும் சட்டென திரும்பி பார்க்க, மீராவின் கண்களில் ஒருவித பதட்டம்.
ஏனென்றால் தேவகியின் நாக்கு தேள் கொடுக்கு போல அத்தனை விஷம் உள்ளது. அதிலிருந்து வரும் வார்த்தைகள் எதிர்பட்டவரை மனதை நோகடிக்காமல் செல்லாது.
ஓரளவு அங்கு இருக்கும் சூழ்நிலையை கிரகித்த கிருஷ் “வில் யூ ஷட் அப்..!” என்றான்.
“நா ஏன் ஷட் அப் பண்ணனும்? உனக்கு இவங்களை எல்லாம் பத்தி தெரியல புது மாப்பிள்ள.. அதனால என்னை பேச வேணாம்னு சொல்ற.. நெஜமா நான் சொல்றேன் எழுதி வச்சுக்கோ. இந்த கல்யாணம் இவ கூட உனக்கு நடக்காது..! நடத்த விட மாட்டா இந்த யசோதா” என்றார் ஆணித்தரமாக..!
“அது என் பிரச்சனை..!” என்று அவரை திரும்பி பார்த்தவன் “ என் பிரச்சனையை எனக்கு பார்த்துக்க தெரியும். நீங்க வந்த வேலை முடிஞ்சதுனா கிளம்புங்க.. என் பொண்டாட்டி மீரா தான்.!” என்று அருகில் இருந்தவளை இடையோடு இழுத்து தன் அருகில் அணைத்த வாக்கில் அவன் பேச…
தேவகியின் கண்களில் இருந்த அந்த கொடூரம் அதிகரித்ததே தவிர, குறையவே இல்லை.. இருவரின் இணைந்த நிலையை பார்த்து..!
“நீ நினைக்கிற மாதிரி கிடையாது புது மாப்பிள்ள.. வெளி பார்வைக்கு நல்லவளா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள அத்தனை அழுக்கு வச்சிக்கிட்டு இருக்கா.. இந்த யசோதா” என்று தேவகி மேலும் பேசப் போக.. தன் கையை அவர் முன்னே காட்டி தடுத்து நிறுத்தியவன்,
“நல்லவங்க கெட்டவங்க பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன். கூடவே நான் யாரை கல்யாணம் பண்ணனும் பண்ண கூடாதுங்கறது என்னோட தனிப்பட்ட விருப்பம். யாரும் என்ட்ட அத திணிக்க முடியாது. நான் பாத்துக்குறேன் நீங்க கிளம்புங்க.. மேட்டம்” என்றான்.
“வாட்??!! எது உன் பிரச்சனை? மீரா என் பொண்ணு.. அவ சம்பந்தப்பட்டது எல்லாம் எனக்கு கேட்க உரிமை இருக்கு” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க..
“சட்டப்பூர்வமா நான் அவங்களோட பொண்ணு. கூடவே, எனக்கு 18 வயசு தாண்டிட்டு. நான் மேஜர்..! என் வாழ்க்கையில என்ன முடிவு எடுக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க கிளம்பலாம்..” என்று அருகில் இருந்த கிருஷின் தைரியத்தில் நிமிர்வாகவே பேசிய மீராவின் வதனத்தை கண்டவரின் முகம் கசங்கி போனது.
அவரின் முக கசங்களை ஒரு திருப்தியோடு பார்த்த மீரா.. அருகில் இருந்த கிருஷிடம் “பேச்சு பேச்சா தான் இருக்கணும். எதுக்கு இப்போ இறுக்கி பிடிச்சுட்டு நிக்கிற நீனு? கைய எடு..!” என்று பற்களை கடித்த படி மெல்லிய குரலில் சீறினாள்.
“இது என்ன வம்பா இருக்கு? இப்பதான் என் பொண்டாட்டின்னு அவ்ளோ அழுத்தம் திருத்தமாக சொன்னேன். இப்ப நீ கைய எடுன்னு சொன்னா அப்புறம் அந்த அம்மா என்ன பத்தி என்ன நினைக்கும்? கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு டி. அப்படி எல்லாம் உடனே கையெடுக்க முடியாது” என்றவன் இன்னும் அவளது இடையை தன்னோடு அழுத்தி பிடித்து நின்றிருந்தான்.
அதும் லெஹங்காவில் இடைப்பட்ட இடையில் அவனின் கை அழுத்தமாக பதிந்திருக்க.. மீராவுக்கு அவனின் தொடுகை ஏனோ அத்தனை அசௌகரியத்தை கொடுத்தது.
க்ருஷோ அவளின் அசௌகர்யத்தை வேண்டுமென்று சீண்டிப் பார்க்க நினைத்தவன், அவனின் கைவிரல்களால் அம்மென்மையான இடையில் மெல்ல வருடி.. தாளம் போட்டு.. அழுத்தமாக அணைத்து.. லேசாக கிள்ளி என்று ஏக சீண்டல்களை செய்து கொண்டிருந்தான்.
“இந்த ரணகளத்திலும் உனக்கு குதூகலம் கேக்குதா? இப்ப கை எடுக்க போறியா இல்லையா?” என்று மீண்டும் அவள் சீற.. பதிலுக்கு அவன் சீண்ட.. என்று மீண்டும் தனியொரு உலகில் இவர்களின் சஞ்சாரம்.
யசோதாவை நோக்கி சென்ற தேவகி “இதோடு எதுவும் முடியலை யசோதா? இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்? இவளுக்கு கல்யாணம் ஒன்னு நடந்தா.. அது தேவகி பொண்ணா தான்..! யசோதா ராஜநாராயணன் பொண்ணுக்கு நடக்கவே நடக்காது. அதுக்கு இந்த தேவகி விடமாட்டா..! யசோதாவ தேவகி ஜெயிக்க விடமாட்டா” என்று மெல்லிய குரலில் அத்தனை அழுத்தமாக கூறியவரை வெறித்து பார்த்தார் யசோதா.
கிருஷின் அணைப்பில் நின்றிருந்த மீராவை ஒரு முறை பார்த்துவிட்டு “மீரா.. நான் சொன்னா கேளு. கண்டிப்பாக இவனோடு உனக்கு யசோதா கல்யாணம் பண்ணி வைக்க மாட்டா.. வாட்ச் மை வோர்ட்ஸ்.!” வேகமாக சென்று விட்டார்.
அதுவரை தைரியமாக இருந்த யசோதா வேரறுந்த மரம் போல் மடிந்து அமர்ந்தார்.
“நான் என் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேனா? மீரு.. என் பொண்ணு தானே? என் பொண்ணு தானே? நான் அப்படியா ரூபி?” என்று அவர் அழுது கரைய..
“விடுங்க..” என்று கிருஷின் அணைப்பில் இருந்து வெளியே வந்தவள் யசோதாவின் அருகில் அமர்ந்து அவரை தேற்றினாள் மீரா.
“அவளை எல்லாம் யார் வீட்டுக்குள்ள விட்டது?” என்று வந்ததும் தாம் தூம் என்று குதித்தார் ராஜநாராயணன். தேசிகன் தான் “அய்த்தான் அமைதியா இருங்க.. மாப்பிள்ளை வேற இருக்காரு. கொஞ்சம் பார்த்து பேசுங்க..” என்று எவ்வளவு கேட்டும் கெஞ்சியும் அவரால் நாராயணனை கட்டுப்படுத்த முடியவில்லை.
“எப்படி அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு? என் வீட்டிலேயே வந்து என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்காதுன்னு சொல்லுவாளா? என் பொண்டாட்டியை தப்பா பேசுவாளா? நீங்க எல்லாம் அவள பேசவிட்டு வாய் பார்த்துட்டு இருந்தீங்களா? அவளை அடிச்சு விரட்ட வேண்டிதானே.!” என்று அங்கிருந்து தன் உறவினர்களிடம் உரிமையாய் அதட்டலாய் அவர் கேட்க..
அங்கிருந்து ஒரு பெரியவர் “அது எப்படி நாராயணா நாங்க பேச முடியும்? என்ன இருந்தாலும் அவதான உன்னோட மூத்த பொண்டாட்டி? அதுவும் இல்லாம விசேஷம் வச்சிருக்கிற வீட்டில நாங்களும் சேர்ந்து சண்டை போட்டா நல்லாவா இருக்கும்?”என்று அவர் அறிவுரை சொல்ல..
“யார் யாருக்கு பொண்டாட்டி பெரியப்பா? எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா? என்ன இருந்தாலும் நீங்க அவள பேச விட்டுயிருக்க கூடாது பெரியப்பா.. பெரியவங்க நீங்களே அவளை விரட்டி அடிச்சி இருக்கணும். இதுல அவ மூத்த பொண்டாட்டியா? எனக்கு வாயில நல்லா வந்துடும்..!” என்று இங்கும் அங்கும் நடந்தபடியே வேக வேகமாக பேசிக் கொண்டிருந்தவர் அமைதியாக அவரையே பார்த்து நின்றிருந்த வேதாந்த் கிருஷ்ணா அருகில் வந்த நின்றார்.
“இந்த விஷயத்தை முதலில் உங்க வீட்டுல சொல்லி இருக்கணும் மாப்பிள்ளை.. மன்னிச்சிடுங்க..! என் தப்புதான்” என்றதும் அவரின் கூப்பியை கரங்களை தன் கை வைத்து கீழே தாழ்த்தியவன்,
“மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீங்க மாமா. ஆனா இந்த விஷயத்தை நீங்க சொல்லி இருந்திருக்கலாம். இப்ப வந்து பிரச்சனை பண்ணுனவங்க நாளைக்கு கல்யாண மண்டபத்தில் வந்த பிரச்சனை பண்ணி இருந்தா இன்னும் நிலைமை மோசமாக இருந்திருக்கும் இல்லையா?” என்று கேட்டான்.
“கரெக்ட் தான் மாப்பிள்ளை நீங்க சொல்றதும்.. ஒரு நிமிஷம் இருங்க” என்றவர் தீனதயாளனுக்கு அழைத்தார்.
“சம்பந்தி..” என்று எடுத்து உடனே நாராயணன் ஆரம்பிக்க..
“ஐயோ எத்தனை முறை தான் சொல்றது பரவாயில்லை தயாளனே கூப்பிடுங்க..” என்றார் பெருந்தன்மையாக தீனதயாளன்.
“நீங்க சம்பந்திம்மாவ அழைச்சிட்டு கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போங்களேன்.. கொஞ்சம் பேசணும்” என்றதும் அவருக்கோ திடுக்கிட்டது.
‘மகன் வேறு அங்கு சென்று இருக்கிறானே?? ஏதாவது வேலையை பார்த்துட்டானா?’ என்று அவர் யோசிக்க..
“ஃபோன்ல ஏதும் பேச முடியாது. சிரமம் பாராம கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போங்க..” என்று கெஞ்சும் நாராயணனை தவிர்க்க முடியாமல்,
“நான் எங்க வீட்டம்மாவ கூட்டிட்டு வரேன்” என்றபடியே ஃபோனை வைத்து தீனதயாளனுக்கு ஏகப்பட்ட யோசனைகள் மண்டையை குடைந்தது.
அதற்கு மேல் எல்லா கோபமும் இப்பொழுது மனைவியின் மேல் வந்தது.
“சங்கீ.. அடியே சங்கீ.. இங்கே வாடி” என்று அவர் கத்த…
அதுவும் இங்கே இருக்கிற உறவினர்கள் முன் பேச முடியாமல் தங்கள் அறையில் நின்றே அவர் கத்த.. அங்கிருந்து சொந்தக்காரர்களும் சிரித்தபடி
“மாமாவுக்கு மதியானத்திலேயே இவ்வளவு அவசரம் கூடாது அக்கா.. புள்ள கல்யாணத்தை வச்சுட்டு நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குள்ள ஜல்சா பண்ண போறீங்களா..” என்று தங்கை முறையில் உள்ள பெண் சங்கீதாவிடம் விகற்பம் இல்லாமல் விளையாட்டுத்தனமாய் கேட்டு வைக்க..
“யாரு உங்க மாமா? அந்த அளவுக்கெல்லாம் உங்க மாமாவுக்கு தைரியமும் இல்ல.. வெவரமும் இல்ல… அப்படி தைரியம் இருந்திருந்தா இந்த வீட்ல நாலஞ்சு பொறந்து இந்நேரத்துக்கு என் உசுர வாங்கிட்டு இருந்திருக்கும்” என்று நொடித்தப்படியே வந்த மனைவியை இடுப்பில் கை வைத்து முறைத்தார் தீனதயாளன்.
“ஏன் டி எவ்வளவு முக்கியமான விஷயம் பேசறதுக்கு கூப்பிட்டா.. நீ என்னைய வைச்சு கலாச்சிட்டு வந்துட்டு இருக்க.. எதுடா நேரம்னு பாத்துட்டு இருப்பீங்களா புருஷன கலாய்க்கிறதுக்கு?” என்று கேட்டவரின் கன்னத்தை மெல்ல வருடியவர்,
“கோபப்படாதீக மாமா.. இந்த மாதிரி சொந்த பந்தங்க வந்திருக்கிற நேரத்துல தானே இப்படி பேசி சிரிக்க முடியும்.. மத்த நேரத்துல நானும் என் டிவியும் என் சீரியலும் தானே இருப்போம்” என்றதும் அதில் சற்று குளிர்ந்தார்.
‘கண்டிப்பா இந்த பொண்டாட்டிங்க கையில ஏதோ ஒரு மந்திரம் இருக்கு.! எவ்வளவு கோபமா இருந்தாலும் ஆஃப் பண்ணிடுறாளுங்க..!’ என்று யோசித்தவர், அப்புறம் தான் நாராயணன் ஃபோன் பண்ணியது ஞாபகம் வர மீண்டும் காய ஆரம்பித்தார் மனைவியிடம்.
“என்னடி புள்ள வளர்த்து வச்சிருக்க? சம்பந்தி வீட்டுக்கு போயி என்ன ஓரண்டையை இழுத்து வச்சானு தெரியல.. ஃபோனை போட்டு உடனே உங்க வீட்டுக்காரம்மா கூட்டிட்டு வீட்டுக்கு வாங்கன்னு ஒத்தக்கால நிக்கிறாரு அந்த நாராயணன்” என்றதும் சங்கீதாவுக்கு திக்கென்றானது.
“என்னங்க சொல்றீங்க?? அவன் மருமக பொண்ணுக்கு ஏதோ கிப்ட் வாங்கணும் தானே போனான்..?”
“ஆமா.. அதே தான்..! போனவன் என்ன பண்ணுனான்னு தெரியலையே? கிளம்பு கிளம்பு இங்க வீட்ல இருக்குறவங்க யாருகிட்டயும் இத பத்தி சொல்லாம ஒரு முக்கியமான தொழில் துறையில் ஆட்களுக்கு பத்திரிக்கை வைக்கணும் சொல்லிட்டு கெளம்பு” என்று மனைவிக்கு சட்டென்று பொய் சொல்ல வராது என்று சொல்லிக் கொடுத்தே அனுப்பினார்.
வீட்டில் இருந்தே கண்ணனையும் அங்கு வர சொல்லிவிட்டு சென்றனர்.
நாராயணன் வீட்டுக்குள் நுழையும் போதே ஒரு வித அமைதியை உணர்ந்தனர் மூவரும்.
‘என்ன ஆயிற்று?’ என்றபடி கணவனும் மனைவியும் யோசித்தபடி உள்ளே நுழைய, அவர்களை வரவேற்று அமர வைத்த நாராயணன் முகத்திலும் சிரத்தை இல்லை. அருகில் இருந்த தேசிகன் முகத்திலும் மலர்ச்சி இல்லை.
“என்ன ஆச்சு நாராயணா? தம்பி வந்தானே எங்க…?” என்று அவர் பயம் அவருக்கு.
‘மகன் ஏதேனும் பொண்ணு புடிக்கல.. அவ பண்ற தொழில் புடிக்கல.. அவ ஓட்டுற பைக் பிடிக்கலைன்னு இப்படி ஏதாவது காரணத்த அடுக்கிட்டானா?’ என்று உள்ளுக்குள் பதைப்பதைத்தது.
“மாப்பிள்ளை முக்கியமா ஃபோன் பேச போயிருக்கிறார். பிரச்சனை என்னன்னா..” என்றவர்
“என் முதல் தாரம் யசோதா இல்லை தேவகி தான்” என்று கூறினார்.
“தேவகிக்கும் எனக்கும் பிறந்த பொண்ணுதான் மீரா. யசோதா தேவகியோட கூட பொறந்த அக்கா” என்றார்.
“என்னங்க இப்படி சொல்றாரு? எப்படி யோசிச்சாலும் எனக்கு குழப்பமாவே இருக்குங்க.. பொதுவா அக்காவ கல்யாணம் பண்ணிட்டு தான பிரச்சனை எதுவும் வம்பு தும்பு இல்ல இறந்துட்டானு தங்கச்சிய கட்டுவாங்க.. இவர் என்னங்க உல்ட்டாவா பண்ணி இருக்காரு?” என்று கணவனின் காதை கடித்தார் சங்கீதா.
“செத்த சும்மா இருடி..!” என்று மனைவியை அடக்கிய தீனதயாளனுக்கும் அதே குழப்பங்கள் தான்.
“நீங்க சொல்றது புரியல நாராயணன் கொஞ்சம் தெளிவா பேசிப்போமா இத பத்தி..” என்றதும் பெருமூச்சு விட்டபடி தேசிகனை பார்க்க..
“அய்த்தான்.. நீங்க பேசிட்டு இருங்க நான் போய் மத்தவங்கள கவனிக்கிறேன்” என்று அருகில் இருந்த அறைக்கு சென்றார்.
இப்பொழுது தயக்கத்தோடு இவர்கள் அருகில் இருக்கும் கண்ணனை பார்த்தார் நாராயணன். தீனதயாளனுக்கு புரிந்தது. தன் வாழ்க்கையின் சில கசப்பான சம்பவங்களை சிறியவர்களுக்கு முன் கூற அவர் கூச்சப்படுகிறார் என்று..!
“தம்பி கண்ணா.. உங்க அண்ணா எங்க இருக்கான்னு போய் பாரு?” என்றதும்,
அவனும் புரிந்தார் போல “இதோ போறேன் பெரியப்பா” என்று எழுந்து சென்றவனை வாஞ்சையாக பார்த்த நாராயணன்,
“ரொம்ப நல்ல பிள்ளைங்க.. நானும் கல்யாணம் பேச்ச ஆரம்பிச்சத்திலிருந்து கவனிச்சுட்டு தான் இருக்கேன்” என்று பாராட்டினார் கண்ணனை..!
தோட்டத்தில் அந்தப் பக்கம் சிறு பிள்ளைகளோடு ரதன் யாமினி ராதா மூவரும் விளையாண்டு கொண்டிருக்க.. அதை பார்த்தபடி ரூபிணி யசோதா மீரா அமர்ந்திருந்தனர். யசோதாவின் மனதை மாற்று இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது பிள்ளைகளோடு விளையாடுபடியே வந்த ராதாவின் கரம் சற்றென்று பற்றப்பட்டு அங்கு இருந்த மரத்திற்கு பின்னால் இழுக்கப்பட அதிர்ந்து விழித்தவளை இறுக்கமாக அணைத்திருந்தான் கண்ணன்.
“கொஞ்சமாச்சும் உங்களுக்கு கூறு இருக்கா? எல்லாருக்கும் முன்னாடி இப்படி கைய புடிச்சு இழுக்கறீங்களே? யாராவது பார்த்துட்டா?” என்று பதறியபடி ராதா அவனிடமிருந்து விலக முற்பட..
“அதுக்கெல்லாம் எனக்கு நேரமும் இல்ல அவகாசமும் இல்ல.. அர்ஜெண்டா ஒரு கிஸ் வேணும்..!” என்றவனை கண்டு அதிர்ந்தவள்,
“எதே? கிஸ்ஸா? போயா…!” என்று ராதா முறுக்க..
“ஏன் டி உன்ன கல்யாணம் பண்றதுக்கு.. என்னெல்லாம் பிளான் போட்டு.. கல்யாணமே வேண்டாம்னு சொன்ன உங்க அக்காவ இப்ப கல்யாணம் வரைக்கும் வந்து நிப்பாட்டி இருக்கேன்.. எவ்ளோ பெரிய விஷயம் சாதிச்சிருக்கேன் தெரியுதா? இதுக்கு நீ எனக்கு எவ்வளவு பெரிய ட்ரீட் வைக்கணும் தெரியுமா?” என்றவன் அவளது கன்னத்தை வருட..
“ஆஹான்..?? அப்படி என்ன வேணுமாம்?”
“கேட்டா தர போறியா என்ன? எப்படியும் கல்யாணத்துக்கு முன்னால அதெல்லாம் கூடாதுன்னு கிளாஸ் தான் எடுப்ப..” என்றவனின் பார்வை மாற்றத்தை கண்ட பெண்ணவள் அவன் கண்களை தன் கரத்தைக் கொண்டு மூடினாள்.
“ராது.. ஒரே ஒரு கிஸ் டி..!”
“நோ.. நோ..!” என்று சிணுங்கினாள்.
“ஒரு சிங்கிள் கிஸ்க்கு கஞ்ச பி
சினாரி மாதிரி முறுக்கிக்கிற நீ? போடி.. நீ தர வேணாம் போடி.. நானே எடுத்துக்குறேன்” என்றவன் அவளது அதரங்களை கொய்திருந்தான் கண்ணன் மாயக்கண்ணனாய்..!
தொடரும்..
