20
என்ன பெண்டாட்டி.. ஒளிஞ்சு ஒளிச்சு விளையாடுறியா? நானா நெனைக்கிற வரைக்கும் தேன் உன் கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம்.. புரியுதோ?" என்றவன் இப்போது அவளுக்கு வெகு நெருக்கமாய்!!
"அது.. அது…" அவனின் அருகாமையில் அவள் திணற..
"ம்ம்ம்.. சொல்லு.. அது…" என்றவன் அவளின் இடுப்பு மெல்லிய மடிப்பை ஒன்றே விரல் கொண்டு நீவ.. வந்த ஓரிரு வார்த்தைகளும் மறைந்து போயின…
அவளின் முகுகோடு அவனின் வெற்று மார்பை சாய்த்து நின்றவனின் ஆண்மை வாசம் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. படுக்கையறை தாண்டி அவனின் சில்மிஷங்கள் வெகு குறைவு தான். ஆனால் இன்று அது சற்று எல்லை மீறிக் கொண்டிருந்தது.
"சொல்லு டி.. ஏதோ சொல்ல வந்த.. ஒரு வேளை நாந்தேன் உன் கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்டிபுடிக்கலைனு மாமன் மேல் கோவமா மயிலு" என்றவன்
அவளின் கால்களிலிருந்த குறு முடிகளை தன் கால் கட்டை விரலால்
மென்மையாக உரச.. உரச.. அவ்வுரசல் அவளுள் தீயை மூட்டின.
அவனின் பார்வை ரகசியமாக தன் உடலின் இடது பக்க அங்கச் செழிப்பை ரசிப்பதை உணர்ந்து கொண்டவள் சட்டென்று புடவையால் அதை மறைக்க முயல.. முயல மட்டுமே அவளால் முடிந்தது. அது எப்போதோ அவனின் கைச்சிறைக்குள். ஆஆஅவ் என்று
சத்தமிட்டு அவள் அதிர்ச்சி அடைந்ததை எல்லாம் கணக்கெடுக்காமல் காரியத்தில் கண்ணானான் தீராவின் கண்ணாளன்!!
"உனக்கு இன்னும் என்னைய புரியலையா தீரா?" என்றவனின் குரலில் இருந்த தவிப்பை அவள் தாபம் என்றே எண்ணினாள். அவன் மனதை எண்ணவேயில்லை. இவனும் அதை புரிய வைக்கவே இல்லை.
"நீயி இங்கன தான்டி இருக்க" என்று
அவன் காதலாய் அவளைப் பார்த்து மென்மையான குரலில் சொன்ன விதம் அவளது பெண்மைக்குள் என்னவெல்லாமோ செய்தது. அரும்பு அவளின் மார்பகங்கள் விம்மித் தணிந்தன. அடிவயிறு பிசைந்தன. அவள் நெஞ்சுக் குழியில் அப்படி ஒரு பூரிப்பு. பெண்மையில் அப்படி ஒரு தவிப்பு.. !!
'இவன் என்ன சொல்கிறான்? என்னை காதலித்தானா?' என்று அவனின் கண்களை அவள் உற்று பார்க்க.. அவனும் சில நொடிகள் வார்த்தைகளின்றி அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தான். அவன் கண்களின் பார்வை அவளை ஆழமாக ஊடுறுவிச் சென்று தாக்கியதில் அவளின் பெண்மைக்குள் மீண்டும் உஷ்ணமான அதிர்வலைகள் எழத் தொடங்கின.
"என்னால நம்ப முடியலடி.. இன்னுமே நம்ப முடியல.. யேன் கையில நீயி வருவேன்னு!" கைகளை அழுத்தமாக இணைத்துப் பிணைத்தபடி சொன்னான்.
அவள் தன்னைப் புரிந்து கொண்டாள் என்று நினைத்தான் வீரா. அவளோ பதட்டமாக அவனையே பார்த்தாள்.
'ஒரு வழியா யேன் மனசை புரிஞ்சுகிட்டா.. யேன் ஆசை என்னன்னு அவளுக்கு தெரிஞ்சிடுச்சு. இனி நானு கவலைப்பட தேவையில்ல.. அன்னைக்கு நடந்ததை அப்படியே அவக்கிட்ட சொல்லிடணும்!' மனதுக்குள் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டான்.
"நம்பு.. நாந்தேன்.. உன் கையில தேன் இருக்கேன்" அவளின் வார்த்தைகள் திக்கி திணறி வந்தது. அவள் தோள்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி தன் பக்கம் திருப்பினான்.
"யேன் மேல உனக்கு அன்பிருக்குனு தெரியும். ஆனா அது இவ்வளவு ஆழமான அன்பா இருக்கும்னு நான் நெனைக்கல" என்றவளை பார்த்தவன், வலது கை கட்டை விரலை நகர்த்தி மெதுவாக அவளின் உதட்டைத் தொட்டு நீவினான். அவளுக்கு உடல் சிலிர்த்து சிணுங்கியது. முகம் முழுவதும் சிவந்து செம்மையுற்றது. இருவர் கண்களும் ஒன்றையொன்று கவ்வி நின்றன. கண்களின் வழியாக காமச் சூட்டை அவன் அனுப்ப அது அவளுள் பரவி படர்வதை உணர்ந்தாள்.
அவளின் மெல்லிய உதட்டை தன் கட்டை விரலால் மிருதுவாக வருடினான். அவள் உதட்டின் ஈரம் அவன் விரலில் ஒட்டியது விலகாமல்.. ஒரு ஆழப் பெருமூச்சுடன் கண்களை மூடிச் சிலிர்த்தாள். அவள் கைகள் மேலெழுந்து வந்து அவன் தோள்களைப் பற்றின. அவன் உடம்பும் சூடாகியிருந்தது. அப்படியே அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு தன் அறைக்கு சென்றான் வீரா.
அவளை தன் கை அணைப்பில் வைத்து அணுஅணுவாய் பார்த்தவனுக்கு எப்படி சஞ்சயன் இவளை மணக்கலாம் எனத் தோன்றியது. இவள் என்னவள்!! எனக்கென்றே பிறந்தவள்!! என்று ஆழப்பதிய அவன் அறியாமல் சஞ்சயனை பற்றி பேசினான்.
"தீரா நீயி.. அன்பான பொண்ணு மட்டுமில்ல டி.. ரொம்ப ரொம்ப அழகானவடி. இவ்வளவு அழகா இருக்குற உன்னைய எப்புடி டி அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க முடியும்? ஆசை இல்லாத.. ஒரு ரசணை இல்லாதவன் தேன் அவேன். உன்னோட அன்பை புரிஞ்சுக்காதவன் டி அவேன்... உன்னோட உயரத்த தெரியாதவன் டி அவேன்.. மொத்ததுல அவேன் ஒரு மூடந்தேன்" எனச் சொன்னபடி அவள் கன்னத்தை விட்டு கைகளைப் பிடித்து தூக்கினான்.
அஸ்திரா வெட்கம் கலந்த பரவசப் புன்னகையுடன் மெதுவாக அவனை பார்த்தாள். புடவை கொஞ்சமாய் தோளை விட்டு சரிந்து மார்பின் திரட்சியைக் காட்டியது. அவன் கண்களோ அவளின் மார்புத் திரட்சியை ரசித்து பின் மீண்டது. அஸ்திரா தவிப்புடன் மாராப்பை மூட முனைய, "வேணாமடி மயிலு!" என்று கூறிக் கொண்டே அவள் கண்களைப் பார்த்தபடி அவளை நெருக்கமாக இழுத்து அணைத்தான்.
அவள் மென்மைகள் அவன் வெற்று நெஞ்சில் மெத்தெனப் படிந்து அழுந்தின. அவன் கைகளுக்குள் அவளின் மென்மையான உடல் சுகத்தை உணர்ந்தாலும் அவளின் நெஞ்சு மட்டும் படபடவென அடித்துக் கொண்டது. அவள் கை, கால்கள் எல்லாம் கூட வெடவெடத்து நடுங்கியது. அவளின் மென்மையான மென்மைகள் அழுத்தமாக அவன் நெஞ்சில் நசுங்க அவளை அணைத்து அவளின் பட்டுக் கன்னத்தில் பட்டும் படாமலும் உதட்டைப் பதித்து ஒரு முத்தம் கொடுத்தான் வீரா. சற்றே கழுத்தில் அழுத்தமாக ஒரு கடி கடிக்க.. அடுத்த நொடியே அவளின் நெஞ்சைப் பிளந்து கொண்டு ஒரு ஏக்கப் பெருமூச்சு வெடித்துக் கிளம்பியது. அவன் கைகள் அவள் முதுகைத் தடவி.. அவளின் ரவிக்கைகளுக்கு விடுதலை அளித்து அவள் உடலைத் தடவி பின் மெல்ல சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டன.
சில நொடிகள் இருவரும் அணைத்தபடி நின்றிருந்தனர். மெலிதான பதட்டம் தணிந்தப்பின் மீண்டும் அவள் தாடையில் அழுத்தமாக ஒரு முத்தம்!!
சற்றேறிய சங்கு கழுத்தில் ஒரு முத்தம்!!
விம்மித் தணியும் மார்புக்கு மத்தியில் ஒரு முத்தம்!!
மெல்ல குனிந்து அவள் நாழிக்கு சற்றே மென்மைகளின் முடிவிலொரு முத்தம்!!
உள்ளும் வெளியும் நடனயாடிய அவளது நாபிக் குழியில் அழுத்தமான ஒரு முத்தம்!!
அவள் கண்களை மூடி தலையை சாய்த்து கிறங்கி நின்றாள். வீரா அவள் முகத்தை நேராக்கி அவளின் மெல்லிய உதட்டில் தன் சூடான உதடுகளைப் பதித்து ஒரு முத்தம்!!
அதன்பின்னான அவன் முத்தமும் அவளின் சத்தமில்லா சத்தமும் அவ்வறையை ஆண்டது!!
மாலை தர்மாவின் இடைவிடாத அழைப்பு தொந்தரவு செய்ய எடுத்தவன் அவனை திட்ட முனைய "மச்சான் ரொம்ப அர்ஜென்ட் சீக்கிரம் கிளம்பி வா!" என்று அவனது அவசர குரலில்.. அருகே அசந்து தூங்கும் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு விரைந்து சென்றான்.
எப்பொழுதும் இருவரும் சந்திக்கும் இடத்தில் இல்லாமல் தர்மாவின் மில்லுக்கு வர சொல்ல.. 'ஏன் இங்கே வரச் சொல்கிறான்?' என்பது புரியாமல் அங்கே சென்வனிடம் சில பல போட்டோக்களை காட்டிய தர்மா "எதற்கும் ஜாக்கிரதையா இரு மச்சான்!!" என்று கலங்கிய குரலில் கூற.. விரக்தி புன்னகை வீராவின் முகத்தில்!!
அந்த விரக்தி புன்னகையின் அர்த்தம் அடுத்த நாள் தெரிந்தது.
கண்ணபிரான் அவன் கேட்ட சாட்சியை அழைத்துக்கொண்டு வீராவை கைது செய்ய வந்திருந்தான்.
அந்த சாட்சி வீராவின் மனைவி தீரா!!
நேற்று அவனோடு கூடி களித்தவள்..
இன்று அவனை கவிழ்க்க வந்திருக்கிறாள் பகைவனோடு கை கோர்த்து!!
தீருமோ தாகம்!!
