உயிரே 45

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 233
Thread starter  

45

 

திருமணம் முடிந்து இந்த ஆறு மாதத்தில் ஓரளவு தன் பக்கம் பணத்தை சேர்த்துக் கொண்டான். இல்லையில்லை அம்பலவாணனின் பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டான். கூடவே இவனை சுற்றியும் அதாவது அம்பலவாணனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ளவர்களை தனக்கு பக்கபலமாக சேர்த்துக் கொண்டிருந்தான் சஞ்சயன்.

 

அம்பலவாணன் வீட்டுக்கு ஒருநாள் ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளையை அழைத்து வந்து பெண்ணிடம் பேச வைக்க முயற்சி செய்ய.. அவளோ அப்பாவை முறைத்துவிட்டு "இதுபோல் இனி கண்டவனையும் அழைத்து வந்தால்.. நான் பெரியப்பா வீட்டில் இருந்து கொள்கிறேன். இங்கே வரமாட்டேன்" என்று சட்டை பிடித்து அவள் போக.. பாவம் போல பார்த்து நின்ற சஞ்சயனை பார்த்து பலமாக சிரித்தார்கள் அம்பலவாணனும் அவன் பார்த்த மாப்பிள்ளையும்.

 

சஞ்சயனும் அஸ்திராவிடம் சென்று "என்னால் தேன் உனக்கு இவ்வளவு பிரச்சனையாச்சு அஸூ.. நீயி சிவனே வீராவையே கல்யாணம் செஞ்சு இருந்தா.. அவேன் இவகள ஒரு வழி பார்த்திருப்பான். என்னால தான் இவுகள எதிர்க்க முடியவில்ல" என்று அல்லது போலியாக கண்ணீர் விட்டு இவன் நடிக்க.. அவனது நடிப்பை உண்மை என்று நம்பிய அஸ்திராவும் "விடு அத்தான் நாம ஏற்கனவே பேசியது தானே.. இதேன் நம்மளோட வாழ்க்கை. அவனை எப்படி நெருங்கவிடாமல் பாக்கணும்னு எனக்கு தெரியும். நீயி வெசனப்படாதே" என்று அவனுக்கு ஆறுதல் அளித்தாள் பேதை பெண்ணவள்.

 

"அஸூ.. மனசே சரியில்ல சாயந்திரம் போல கோவிலுக்கு போவமா?" என்று கேட்க அவளும் சரியென்று தலையை அசைக்க வழக்கம்போல பஞ்சநதீஸ்வரர் வணங்கிவிட்டு வடபத்திர காளியம்மன் கோவில் இவர்கள் செல்லும் போது இருட்டி விட்டிருந்தது.

 

காதலில் தோற்று.. அப்பாவின் இந்த அருவுருப்பான செயல்.. மனதில் நெருஞ்சி முள்ளாய் வலிக்கும் வீராவின் நினைவு.. என்று மனதிலேயே இருள் சூழ்ந்திருக்க தன்னை சுற்றி இருக்கும் இருளையும் தனக்கு பிண்ணியிருக்கும் வலையையும் மறந்து போனாள் அஸ்திரா.

 

வடபத்ரகாளி அம்மனை வணங்கி விட்டு சற்று தள்ளி இருக்கும் அந்த ஆல மரங்கள் இருக்கும் சுனை அருகே எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அஸ்திரா. மனதில் பயம் இல்லை!! வலி மட்டுமே!! சஞ்சயன் இருக்கின்றான் என்று ஏக நம்பிக்கை அவன் மீது..

 

அப்போது சஞ்சயன் என்றும் இல்லாத அதிசயமாக அவளை நெருங்கி அமர்ந்து அவளை தோளோடு அணைத்தான். முதலில் ஆறுதலுக்காக செய்கிறான் என்று நினைத்தவளுக்கு அவனின் தொடுகை வித்தியாசமாகப் பட்டது. பெண்ணின் உள்ளுணர்வு இது சாதாரணமான ஆறுதலுக்கான தொடுகை இல்லை என்று அவளை எச்சரிக்க.. மெதுவாக அவனது கையை எடுத்து விட்டாள். சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து "அத்தான்.. வீட்டுக்குப் போகலாம்" என்று அவள் எழ முற்பட அவள் கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்தான் சஞ்சயன்.

 

"அஸூ.. எப்படியும் நீயி வீராவை கட்டிக்க போறது கிடையாது. யேன் வாழ்க்கையிலும் வேற பொண்ணு கிடையாது.. நாம ஏன் ஒன்னா வாழக்கூடாது?" என்று அவன் ஆரம்பிக்க.. அவளும் அதிர்ந்து அவனை தள்ளி விட்டு எழுந்தவள் "அத்தான் உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுறவன்? ஏற்கனவே சொல்லியிருந்தேன் மனசுல ஒருத்தன வச்சுக்கிட்டு உடம்பால இன்னொருத்தன ஏத்துக்க முடியாது. அப்படி இருந்தால.. அவளுக்கு.. பேரு.. வேற.. தயவு செய்து இனிமேல் இப்படி பேசாத!! எனக்கு பிடிக்கல!!" என்று காட்டமாக கூறியவள் "வா போகலாம்!!" என்று முன்னே நடக்க..

 

அவளது முந்தானை எதிலோ மாட்டியது போல இருக்க.. திரும்பிப் பார்த்தால், அங்கே தனது இடது கையில் அவளது முந்தானையை இறுக்க சுற்றி பிடித்து இருந்தான் சஞ்சயன். அரை இருளில் அவன் முகத்தின் வஞ்சகமும் கோபமும் அவளுக்கு தெரியவில்லை.

 

"சஞ்சயா… விடு.. இது நல்லதில்ல..!!" என்று உள்ளுக்குள் அவனது செயல் சிறு பயத்தைக் கொடுத்தாலும் அதை வெளியில் காட்டாது தனது இரு கைகளால் முந்தானையை இருக்க பிடித்துக்கொண்டு அவனை முறைத்தாள்.

 

"முடியாது அஸ்திரா!! எனக்கு நீயி வேணும். அதுவும் இப்பவே.. இங்கேயே.." என்று வெறி கொண்டவன் போல் கர்ஜித்தவனை பார்த்தவளுக்கு திகில் பிடித்தது.

 

"நீயி.. நீயி.. செய்றது ரொம்ப தப்பு சஞ்சயா.. முதல்ல விடு. நான் கத்தி எல்லாரையும் கூப்பிடுவேன்" என்று அவள் மிரட்ட..

 

"ஹா..‌ஹா..‌." என்று அந்தக் காடே நடுங்கும் வண்ணம் சிரித்தான் சஞ்சயன். 'இவனுக்கு ஏதும் பைத்தியம் பிடித்து விட்டதா?' என்று உள்ளுக்குள் கிலி பிடித்தது அஸ்திராவுக்கு. இவனை நம்பி இங்கே வந்திருக்கக் கூடாதோ என்று தாமதமாக உணர்ந்தாள்.

 

"இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே அமாவாச பூச தொடங்கிடுவானுக.. உடுக்க சத்தமும்.. கோவில் மணி சத்தமும் மட்டும்தேன் இந்த காட்டுப் பூரா எதிரொலிக்கும். நீயி எவ்வளவு கத்தினாலும் எவனும் வந்து இங்கே பார்க்க மாட்டான். அப்படியே பார்த்தாலும் புருஷன் பொண்டாட்டி தானே நினைச்சு போய்விடுவான்" என்று மீண்டும் அவள் முந்தானையை சுண்டி தன் பக்கம் இழுத்தான்.

 

இன்று அம்மாவாசை பூஜையா? ஐயோ. என்று ஆனது அவளுக்கு. ஏனென்றால் அமாவாசை பூஜை போது சில துஷ்ட சக்திகளை அடக்க மந்திரம் தெரிந்தவர்கள் வடபத்ரகாளி அம்மன் கோவிலை இரவில் பூஜை இடுவார்கள். பொதுவாக அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அங்கே வரமாட்டார்கள். 

 

'இன்று இப்படி வந்து இவனிடம் மாட்டிக் கொண்டோமே?' என்று தன் மீதான கழிவிரக்கமும் எல்லாத்துக்கும் அந்த அப்பாதான் காரணம். அவர் அந்த மாங்கா மடையன் மாப்பிள்ளையை அழைத்து வராமலிருந்தால் இவன் எப்போது போலவே இருந்திருப்பான்!' என்று சஞ்சயனை பற்றி தவறாக ஊகித்தாள்.

 

இவனிடம் மிரட்டி எல்லாம் வேலைக்கு ஆகாது. நயமாக பேசு காரியம் சாதிக்கனும் என்று எண்ணி, "அத்தான் இங்க பாரு அப்பா என்ன மாப்பிள்ளை கொண்டு வந்தாலும் யேன் மனச எவனாலும் மாத்த முடியாது. அங்கு இருக்கிறது அவேன் ஒருத்தன் தான். அதுக்காக பயந்துட்டு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாதே!!" என்று பேச..

 

"ச்ச்சே.. உன் அப்பன் பெரிய இவனா? அவனுக்கு பயந்தா நான் செய்றேன். இல்ல..இல்ல.. அவேன் எனக்கு குழி பறிக்க பார்க்கிரியான். அதற்கு முன்னமே அவனை எழவிடாம அடிக்கணும். அதுக்கு அவனுடைய பெரிய பலவீனம் நீதேன்!!" என்றவன் அவளது புடவையை பற்றி இழுக்க..

விடாமல் இவளும் அதனைப் படித்து இருக்க..

 

"என்ன சஞ்சயா.. எங்கள விட்டு,புட்டு நீயே தனியா ஆரம்பிச்சிட்டியா?" என்று குரல்கள் கேட்க திரும்பி பார்க்க அங்கே இவர்களை நோக்கி இன்னும் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். நம்பமுடியா அதிர்ச்சியோடு சஞ்சயனையும் அவர்களையும் இவள் மாறி மாறி பார்க்க.. 

 

"இருங்கடா நான் முதல்ல டிரெயில் பாத்துக்குறேன். அதுக்கு அப்புறம் உங்களுக்கு தேன்.. அந்த கேமராவை எல்லாம் ஒழுங்காக எடுத்து சரி பார்த்தியாடா? இருட்டுல எடுத்தாலும் பிக்சர் க்வாலிட்டி அவ்வளவு தெளிவா இருக்கணும். சொல்லிபுட்டேன்!!" என்று இவன் அவர்களிடம் பேச.. தன் முன்னால் நடக்கிறதை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அவள் அடுத்த நிமிடம்..

அந்த கிடைத்த சிறு சந்தர்ப்பத்தில் தன் முந்தானையை உருவி கொண்டு அவள் ஓட..

 

அந்த கும்பலும் "பிடிடா அவள.. விடுடாத டா!! விடுடாத டா!!" என்று கூக்குரலோடு அவளை துரத்த..

 

இம்மாதிரியான சந்தர்ப்பத்தை இதுவரை அவள் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை அஸ்திரா. செய்திகளில் யாரோ ஒருவருக்கு நிகழ்ந்ததாக இவள் கேள்விப்படும்போதே மனசு பரிதவிக்கும்... அந்த பெண்ணுக்காக அழுகும்.. அந்தப் பெண்ணை பாடாய் படுத்திய கயவர்களை நிந்திக்கும். ஆனால் இன்று தனக்கே என்கிற போது.. அதன் நிதர்சனத்தை அவளால் நம்பமுடியாமல் கண்முன் தெரியாமல்.. இருட்டு பகுதியில் ஓட முடியாமல்.. புடவையை தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் விழுந்து எழுந்து ஓடினாள்.

 

கைகால்கள் எல்லாம் ஆங்காங்கே சிராய்ப்பு!! போதாக்குறைக்கு இரண்டு மூன்று இடத்தில் அந்த புடவை எல்லாம் மாட்ட.. அது அவள் ஓட்டத்தை தடுத்து நிறுத்த.. அந்த தடிமாடுகளோ இன்னும் அவள் அருகில் நெருங்கி வர.. அவர்கள் கையில் பிடிபட கூடாது என்ற எண்ணத்தோடு.. கிழிந்தாலும் பரவாயில்லை என்று படாரென்று புடவையை கிழித்து விட்டு

 

ஓரளவுக்கு தான் அவளால் ஓட முடிந்தது. அதற்குமேல் முடியவில்லை. மனதில் அதிர்ச்சி அவளுக்கு சோர்வை தந்தது. இப்படி இடைவிடாத ஓட்டமும்.. அதனால் விளைந்த மூச்சறைப்பும்.. எங்கே தன்னை பிடித்து விடுவார்களோ என்ற பயமும்.. எல்லாம் சேர்ந்து அவள் உடம்பு மனம் இரண்டையும் சோர்வுறச் செய்தது.

 

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல.. கற்களும் முற்களும் கடந்த அந்த முரட்டு பாதையில்.. அந்த கற்கள் எல்லாம் வெண் பஞ்சு பாதங்களில் குத்தி அழுந்த.. இன்னும் அவளின் ஓட்டத்தின் வேகம் தடைபட்டது.

 

கண்கள் எல்லாம் பூச்சிகள் பறக்க.. மூச்சு விடவே சிரமமாக இருக்க.. இதோ மூச்சடைத்து விழ போகிறோம்.. விழ போகிறோம்.. என்று அவளுக்கு அவளை சொல்லிக்கொண்டாலும்..

 

"ஓடு.. ஓடு.. அஸ்திரா.. என் உன் மானத்தை நீதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எந்த கிருஷ்ணனும் எங்கே வரமாட்டான் உனக்கு உதவ.." தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன் முழு முயற்சியையும் கொடுத்து ஓடினாள்.

 

சிறு மான் ஒன்று தன் உயிரான மானத்துக்காக செந்நாய் கூட்டத்திலுமிருந்து தப்ப ஓட்டம் எடுக்க.. பின்னால் வந்த மாமிச மலைகளோ தங்கள் இச்சைக்காகவும் காமத்துக்கும் துரத்தியது அம்மானை!! அம்பலவாணன் ஐ பழிவாங்க வேண்டும் பல நாள் திட்டம் போட்ட குள்ள நரிகளின் புத்தி நேர் பாதையில் செல்லுமா என்ன? எப்பவும் குறுக்கு பாதை தானே!! சட்டென்று தன் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஓடும் அஸ்திராவின் காலை நோக்கி ஒருவன் குறிவைத்து தாக்க..அதில் தடுக்கி நிலைதடுமாறி தொப்பென்று விழுந்தாள்.

 

நச்சென்று ஏதோ தலையிலும் முன் நெற்றியிலும் அடிப்பட.. அழகு வதனம் செவ்வண்ணம் பூசியது. கண்கள் அவளால் தெளிவாக பார்க்க முடியவில்லை. இதோ மூர்ச்சையாகி போகப்போகிறோம்!! இவனுங்களும் என்னை புசிக்க போகிறார்கள்!! என்ற நினைவே அவளுக்கு பயத்தையும் நடுக்கத்தையும் தர.. ஓடி வந்த களைப்பும் பயமும் அவளை சோர்வுறுச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் ஆட்கொண்டது அவளை

 

கண்கள் திறக்க முடியாமல் கடினமான பாறையை வைத்தது போல இருக்க.. கைகளும் கால்களும் அவள் முளையின் கட்டளைக்கு இணங்காமல் ஓர் இன்ச் கூட அசையாமல் கட்டை போல கிடக்க.. உடம்பு தொடர் ஓட்டத்தினாலும் அடிப்பட்டதாலும் ஆங்காங்கே வலிக்க..

 

என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்று ஒன்றும் புரியாமல் மயக்கத்தின் பிடியில் சென்று கொண்டிருந்தவளுக்கு உடுக்கை சத்தம் கேட்கத் தொடங்கியது.

 

கண்களை மூடினாலும் தாயே என்னை காப்பாற்று இல்லை என் உயிரை இப்படி எடுத்து விடு என்று மனதுக்குள் மன்றாடிக் கொண்டிருந்தாள் அஸ்திரா. 

 

பெற்றவர்களின் சொத்து சுகங்கள் மட்டுமல்ல பாவ புண்ணியங்களையும் மக்கள்தான் சுமக்க வேண்டும் என்று கூறிய படி அவர்களை நெருங்கி இருந்தான் சஞ்சயன்.

 

அவளின் காதுகள் மட்டும் சற்றே கூர்மையாகி தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உத்து உத்து கேட்கலானது.

 

 

அப்போது அவளை சுற்றி அவர்கள் நிற்க.. அது தெளிவாக இல்லாமல் ஏதோ நிழல் போலவே அவள் கண்களுக்கு காட்சி தந்தது. அவள் கண்ணை விட்டு காதை கூர்மை தீட்டினாள்.

 

"டேய்.. சஞ்சயா.. முதல்ல அவளை போட்டோ எடுடா.. அப்புறமேலு ஒவ்வொருத்தரா அனுபவிக்கலாம். அப்பயும் ஒவ்வொருத்தன் கூடவே இவள ஃபோட்டோ எடுத்து அவ அப்பனுக்கு அனுப்பி வைக்கணும்" என்றான் ஒருவன்.

 

"ஆமாண்டா பார்க்கும்போது உடம்புல ஏதோதோ பண்ணுது டா. அல்வா மாதிரி இருக்கா?" என்று மற்றொருவன் தனது உதடுகளை நாக்கால் தடவி ஈரமாக்கி இச்சையோடு பார்க்க..

 

"டேய்.. என்னடா பேசிக்கிட்டே நேரத்தை கிடக்கிறிங்க.. ஆரம்பிங்க டா.. இன்னைக்கு கிடாவெட்டு தான்" என்றான்‌ இன்னொருவன் கூற..

 

சஞ்சயன் இகழ்ச்சியான சிரிப்போடு அவள் முந்தானையில் கை வைத்து உருவ.. 

இனி.. அவ்வளவு தான்.. எல்லாம் முடிந்தது என்று மயக்கத்திலும் அவள் கதற..

 

எங்கிருந்தா பாய்ந்து வந்த அருவாள் இடையில் சீறிக் கொண்டு செல்ல.. சஞ்சயன் பிடித்திருந்த அந்த முந்தானை

அவன் கையோடு வர மீது புடவை பாந்தமாய் அஸ்திரா போர்த்தியது.

 

தீருமோ தாகம்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top