மாயவன் - 10

 

(@gayathri-senthil)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 9
Thread starter  

இவள் என் மனைவி

 

ஆத்மிகா திவ்யாவிடம், “நீ எப்படி உன் அண்ணனை நம்புறியோ அதேபோலத்தான் அண்ணன் “என்ற முறையில் இன்று அவள் சொல்ல வருவதற்குள்,

 

 எங்கே அவள் வாயாலிருந்து அண்ணன் என்று வந்துவிடப் போகிறது என்று பயந்த விஜய் வேகமாக உள் நுழையவும் இருவரின் பேச்சும் நின்றுவிட்டது.

 

“ சைன் போட்டாச்சா?” என்று கேட்டான் திவ்யாவை பார்த்தபடி, ஆத்மிகாவிடம் திரும்பவே இல்லை, அவன் பார்வையில் என்ன இருந்தது என்பதை திவ்யாவினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை ,ஆத்மிகாவினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை ஒருவித பதற்றம் நிலவியது. 

 

“ஆம் போட்டாச்சு” என்று மெதுவாக அவன் புறம் அவள் சைன் செய்த பேப்பரை தள்ளினாள் ஆத்மிகா,

 

“ ஓகே” என்றவன் அவையெல்லாம் பார்த்தான், அவளுக்கும் சுரேஷ்கும் விவாகரத்து டாக்குமெண்ட்டு சைன் ஆகியிருந்தது, 

 

அவன் இதழில் லேசாக மிக லேசாக மென்னகை இரு பெண்களும் அறியாத ஒரு மென்னகை, விவாகரத்து ஆகிவிட்டது ஆனால் எப்படி ஆனது என்று அவன் மட்டுமே அறிவான்.

 

 ஆனால் அதை பிராசஸ் போல அவளுக்கு காண்பிக்க வேண்டும் என்று நினைத்தவன், தற்போது அந்த விடயத்தை அவளிடம் தெரிவிக்கவில்லை, அப்படியே அடுத்த டாக்குமெண்ட்களை திருப்பினான். 

 

 எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வை ஒரு டாக்குமெண்டில் வந்ததும் நின்று விட்டது, அதில் அவன் ஏற்கனவே கையெழுத்திட்டு இருந்தான், சற்று தள்ளி அவளும் அதில் கையெழுத்திட்டு இருந்தாள்.

 

 அவன் வேண்டும் என்று தான் அவள் சைன் செய்வதற்கு முன்னே அதில் கையெழுத்திட்டு அதில் வைத்திருந்தான், ஒரு வேளை அவள் படித்துப் பார்த்தாலும், எப்படியாவது பேசி சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணம் இருந்தது.

 

 ஆம் அது அவர்களின் திருமண பதிவு தான், இன்றிலிருந்து அவள் மிசஸ் ஆத்மிகா விஜய மாயவன், அவனுக்கு சத்தம் போட்டு அவள் என் மனைவி என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது,

 

 தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க பெரிதும் கஷ்டப்பட்டான், எங்கே தன்னையும் மீறி தன் மகிழ்ச்சி வெளிப்பட்டு விடப் போகிறது என்று ஒரு பதற்றம், இருந்தாலும் விவாகரத்து அவள் கைக்கு கிடைத்த பிறகு தான் இதைப் பற்றிய விடயத்தை வெளியே தெரிவிக்க வேண்டும் என்று அமைதியாக இருந்தான்.

 

 அவனுக்குள் ஒரு பெரிய ரிலீஃப், கைக்கு கிடைக்காத பொக்கிஷம் ஒன்று தான் உடைமையாகி இருக்கிறது, ஆனாலும் அவள் தன் மனப்பூர்வமாக தன்னிடம் வரவேண்டும், அதுவரை காத்திருக்க வேண்டும், கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த ஒரு விஷயம் வந்துவிட்டது அதுவே பெரிதல்லவா என்று நினைத்தபடி அவன் அதையே பார்த்துக் கொண்டிருக்க

 

“ அண்ணா” என்று ஆத்மிகா இருமுறை அழைத்தாள்.

 

அப்போதுதான் சுய உலகிற்கு வந்தவன் போல், “சொல்லு திவ்யா” என்றான்,

 

“ அப்போ முடிஞ்சதாணா? என்று விசாரித்தாள்.

 

“ஹம் முடிஞ்சது,கூட்டிட்டு போய் பொட்டிக் அவளுக்கு.. என்று சொல்ல வந்தவன், தொண்டை செருமி, அவங்களுக்கு வேலை எல்லாம் கற்றுக் கொடுக்க சொல்லு” என்று கூறினான்.

 

“சரி நான் இதை போய் லாயர் கிட்ட கொடுத்துட்டு நெக்ஸ்ட் என்ன பிராசஸ்னு பாத்துட்டு வரேன் அப்படியே நான் என் ஆபீஸ்க்கு போறேன்” என்று கிளம்பியவன் தங்கையிடம் போயிட்டு வரேன் என்று ஒரு கணம் செல்வதற்கு முன்,

 

மீண்டும், “வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றான் திரும்பி பாராமல்,

 

 அந்த வரேன் யாருக்கு தனக்குத்தானோ என்று ஆத்மிகாவிற்கும் குழப்பம், அவளுக்குத்தான் என்று திவ்யாவிற்கும் புரிந்தது.

 

 ஐயோ இவர் மனசுல அவரு அண்ணனு நெனச்சுக்க போறா என்று ஆத்மிகாவிற்கு அது வேறு பயமும் பதற்றமுமாக இருந்தது,

 

“ என்னடி உள்ள பொட்டிக் பார்க்க போகலாம் என்று என்ன யோசனையில் இருக்க?” என்று கேட்டாள்.

 

“ஹாங் ஒன்னும் இல்ல” என்றவள், “வா போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

 

 இங்கே காரை எடுத்துக் கொண்டு வந்த விஜய்க்கு மனம் இறக்கை கட்டி பறப்பது போல் இருந்தது, அவன் மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொள்வது, யாரிடமும் தெரிவிக்க முடியாது சூழ்நிலை. 

 

ஒரு லாங் டிரைவ் சென்றான் காரில், அவள் உடனிருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, அதுவும் சீக்கிரம் நடக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டான்.

 

காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் ஆளில்லாத சாலையில் நின்று கொண்டு, “ஆத்மிகா, மை மீகா மை சோல், ஐ லவ் யூ” என்று அந்த இடத்தில் கத்தினான்.

 

 அவள் தன் மனைவி தன் மனைவி என்று அவ்வளவு மகிழ்ச்சி ,இருந்தாலும் அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த சுரேஷை நிச்சயமாக சும்மா விடப்போவதில்லை ,அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது மகிழ்ச்சி தான்,

 

 இருந்தாலும் எப்படிப்பட்ட பெண்ணை, எப்படி பார்த்து இருக்கிறான், அவளைப் போய் இப்படி சிதைத்த அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்றே தோன்றியது விஜய்க்கு, மகிழ்ச்சியில் இருந்தவனின் முகம் சட்டெனு ரௌத்திரமாக மாறியது,

 

காரை எடுத்துக்கொண்டு லாயரை பார்க்க கிளம்பினான். அந்த லாயரிடம் அவள் சைன் போட்ட டாக்குமெண்ட் எல்லாம் கொடுத்தான்.

 

 அவர் லேசாக புன்னகைத்தபடி, “எப்படி எல்லாத்துலயும் சைன் பண்ணிட்டாங்களா?” என்று கேட்க, “எஸ்” என்று கூறினான். 

 

“இதுல நீங்களும் சைன் பண்ணி இருக்கீங்க, அவங்க எதுவும் கேட்கலையா? இல்ல வரும்போது போட்டிங்களா? என்று கேட்டார்.

 

“ அவன் சிரித்தபடி நான் ஏற்கனவே போட்டுட்டேன், என்றதும் அவருக்கு அதிர்ச்சி,

 

“ அப்போ பார்த்து எதுவும் கேட்கலையா?” என்று அவர் கேட்க, “இல்லை” என்று கூறினான்.

 

 “அவள் பார்க்கவே இல்லை” என்றான்.

 

“ எதையும் படிச்சு பாக்கலையா?” என்று அவருக்கு இன்னும் அதிர்ச்சி,

 

 எப்படியும் மேலே இருக்கும் விவாகரத்து டாக்குமென்ட்களை படித்து இருப்பார், அப்படியே சைன் போடும்போது அதுவும் சேர்த்து வரும் என்று தான் லாயர் அவ்வாறு செய்தார், ஆனால் அவள் சைன் போட்ட பிறகு விஜய் சைன் போட சொல்லலாம் என்று காத்திருக்க, இருவரின் சைனும் அதில் இருப்பதைப் பார்த்து அவர்தான் கொஞ்சம் அதிர்ந்து போனார், அதனால் தான் விசாரித்தார்.

 

 அவன் அழுத்தமாக இல்லை என்ற தலையசைத்தவன், *ஆத்மிகா தன் சகோதரியிடம் கூறியதை கூற, ஓஹோ நாட் பேட்” என்று சிறுநகை அவர் இதழில்.

 

“மேபி, அவங்க தான் உங்களுக்கானவங்களா இருந்திருக்கணும், உங்ககிட்ட வருவதற்காகவே சில சூழ்நிலைகள் நடந்திருக்கலாம்,

 

 இப்படிப்பட்ட விஷயங்கள் தான் நடக்கும் பொழுது, நம்மளை மீறி ஒரு சக்தி இருக்குன்னு தோணுது” என்று லாயராக இருந்து கூற, விஜய் லேசாக சிரித்துக்கொண்டிருந்தானே தவிர பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

 

“ ஓகே அவங்களுக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு, அதே நேரம் உங்களுக்கும் மேரேஜ் ஆயிடுச்சு. கங்கிராட்ஸ் விஜய்” என்று அவனுக்கு கையை கொடுக்க, அவனும் சிரித்தபடி கைகுலுக்கினான்.

 

  “நெக்ஸ்ட் என்ன பண்ணலாம் சார்?” என்று கேட்டான், “இந்த விவாகரத்து பிராசஸ் தான், ஒரு டூ டேஸ் பிறகு நான் சொல்றப்ப அவங்களை இங்க கூட்டிட்டு வாங்க, அதே நேரம் அந்த சுரேஷையும் இங்கு வர வைக்கணும். ரெண்டு பேர்கிட்டயும் விவாகரத்து ஆயிடுச்சின்னு இந்த டாக்குமென்ட்ட கொடுக்கணும்” என்று சொன்னார். 

 

“பாசிபில் தானா சார், அவன் நம்ப மாட்டானே, ஏன்னா அவன் இன்னும் ஸ்டப்பர்னா தான இருக்கிறான்,நம்ம இந்த சைனயே வேற ஒரு ப்ரோசிஜர் மூலமா தானே வாங்க வச்சோம்” என்று விஜய் கூறவும், 

 

“என்ன விஜய் எவ்ளோ பெரிய விஷயங்கள் எல்லாம் லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுவீங்க, போயும் போயும் இவன்கிட்ட எதுக்கு?” என்று அவர் சீரியஸாக கேட்டார்.

 

“ அப்படி இல்ல சார் நமக்கு பிடிச்சவங்க, நம்மள விட பெட்டரா யாராவது பார்த்துக்கொண்டார்கள்னா, அது சந்தோஷம்தான், ஆனால் அவளை இப்படி ஆக்கி வைத்திருக்கிறான், போதாததுக்கு டிவோஸ் தர மாட்டேனு உயிரை வேற வாங்கிட்டு இருக்கான்,

 

 அவனை ஏதாவது பண்ணனும் ஆனால் அவளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது, அவ நம்பிக்கையை நான் காப்பாத்தணும்னு நினைக்கிறேன்” என்று கூறினான்.

 

“ நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட், ஆனா அந்த சுரேஷ் பேமிலி லைப் ல மட்டும் இல்ல ப்ரொபஷனலாவும் கொஞ்சம் கெட்டவன் தான் நினைக்கிறேன், ஆபீஸ்ல கூட வேலை நடக்கணும்னா காசு வாங்குற கை போல,

 

 நீங்க சொன்னதுனால அவன விசாரிக்க, ஆள் வச்சு விசாரிச்சதுல்ல இந்த தகவல் எல்லாம் வந்து இருக்கு, அப்போதான் ஒரு டாகுமெண்ட்ல இந்த டாகுமெண்ட்டையும் சேர்த்து வைத்து சைன் வாங்க வச்சேன்” என்று வக்கீலும் விஜய்யும் சேர்ந்து போட்ட திட்டத்தை குறித்து கூறிக் கொண்டிருந்தார்.

 

 “இனி அவன் குடுமி நம்ம கையில, ஒன்னு இந்த டிவோசுக்கு அக்சப்ட் பண்ணிட்டு பரஸ்பர முடிவா அவன் விலகி போகணும், இல்லையா ஜெயில்ல கம்பி எண்ணனும், காலத்துக்கும் வெளிவர முடியாது,

 

“ பாக்குறதுக்கு தான் மிடில் கிளாஸ் போல இருக்கிறான், பட் இந்த மாதிரி கையாடல் பண்ணி எவ்வளவு ப்ராப்பர்ட்டி வாங்கி வச்சிருக்கான்னு தெரியுமா ?”என்று அவனைப் பற்றிய வண்டவாளத்தை எல்லாம் கூற விஜய்க்கு அதிர்ச்சி தான்.

 

“ சோ இதெல்லாம் கோர்ட்ல ஹேண்டோவர் பண்ணிடுவேன்னு சொன்னா நான் கும்பிட்டு தானே ஆகணும் பாப்போம் என்றார் லாயர்

 

“தேங்க்யூ சார், தேங்க்யூ சோ மச் சார்” என்று விஜய் அவரிடம் நன்றி தெரிவிக்க, 

 

“அட என்ன விஜய் நீங்க போய் என்கிட்ட நன்றி சொல்லிட்டு இருக்கீங்க, நீங்க செய்ற இவ்வளவு நல்ல விஷயங்கள்ல உங்களுக்கு ஒரு நல்லது நடக்குதுனா, என்னால முடிஞ்சதா கண்டிப்பா நான் பண்ணுவேன்,

 

 நீங்க செஞ்சதுல இது ஒரு பர்சன்ட் கூட இருக்காது, எவ்வளவு பேருக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று அவர் தொடங்க..

 

“ சார் போதும் சார், கேட்டு கேட்டு என் காதுல இருந்து ரத்தம் வந்துடும், சரி நான் கிளம்புறேன்” என்று சொல்லவும்,

 

“ என்ன சார் மேரேஜ் ஆகி இருக்கு, ட்ரீட் இல்லையா?” என்று அவர் கேட்க,

 

 “அஃப்க்கோர்ஸ் வாங்க” என்று இருவரும் வெளியே கிளம்பினார்கள். 

 

அப்போது அதே நேரம் ஆத்மிகாவை பொட்டிகை சுற்றி காண்பித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.

 

 ஒரு மாடலிற்கு நிற்க வைத்து அப்படியே அங்கிருந்த காஸ்டியூமில் அலங்காரம் செய்து கொண்டிருக்க, அது சரியாகவே வரவில்லை, அதை பார்த்த ஆத்மிகா, “நான் ஹெல்ப் பண்ணலாமா?” என்று கேட்கவும்,

 

  அந்த மாடலே, “உனக்கு என்ன தெரியும், யார் இவங்க, சும்மா இருக்குறவங்க எல்லாம் கூட்டிட்டு வந்து டிரஸ் பண்ண வைக்கிறீங்க, இது ஒரு நல்ல கம்பெனினு தானே கேள்விப்பட்டேன், எல்லாத்துக்கும் மேல இது விஜய் சார் ஸ்பான்சர் என்பதனால் தான் வந்தேன்” என்று அந்த மாடல் ரொம்ப திமிராக பேசிக்கொண்டு இருக்க, ஆத்மிகா அமைதியாகவே இருந்தாள். 

 

அவளிடம் எதுவும் பேசவில்லை, திரும்பி திவ்யாவிடம் திரும்பியவள்,

 

“ இதே மெட்டீரியல் இருக்கா இல்ல, இத மாதிரி இருக்கா ?”என்று கேட்க

 

“ ஒரு செகண்ட் குவாலிட்டி மெட்டீரியல் இருக்கு” என்று கூறினாள் திவ்யா,

 

 இன்னொரு பெண்ணை அந்த மாடலைப் போல கிட்டத்தட்ட ஒரே உயரம் இருக்கும், அந்த பெண்ணை அழைத்து இஃப் யூ டோன்ட் மைன், “கொஞ்ச நேரம் நிக்க முடியுமா?” என்று கேட்க ,அந்த பெண்ணிற்கு அந்த மாடல் பேசியது ஓவர் என்று அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று ஆத்மீக அழைக்கவும் வரேன் என்று நின்றாள்.

 

 வேகவேகமாக அந்த மாடலுக்கு உடையை சரி செய்து கொண்டிருந்த அந்த பெண்ணிடம், “நான் பண்ற மாதிரி பண்ணுங்க ,உங்களுக்கு கரெக்டா இருக்கும்” என்று சொன்னவள், அவள் செய்து காண்பிக்கா அந்த பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

 அழகாக அந்த துணிகளை வைத்து, ஒரு லாங் கவுன் போல் செய்து விட்டாள், அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க,

 

 திவ்யாவே, “சூப்பர் டி” என்

று சொல்ல, அந்த மாடலுக்கு தான் பார்ப்பதற்கு இவ்வளவு கேவலமாக இருக்கிறாள், சொல்லி நான் ஒரு உடை போடுவதா?” என்ற கோபம் வந்தது. 

 

 

வருவான் 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top