உயிரே 43

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 233
Thread starter  

43

 

தன்னையே காதலாக பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணை அவனும் கொஞ்சும் காதலோடு பார்த்தான்!!

கொஞ்சி காதலாட பார்த்தான்!!

கொஞ்சம் களவாடவும் பார்த்தான்!!

 

அவளை அவன் மடியில் சரித்தவனின் உதடுகள் பெண்ணவள் உதடுகளை கவ்வி பிடித்து சுவைக்க ஆரம்பிக்க.. இதழ் பிரிக்க மனமில்லா நீண்ட நெடிய முத்தம். ஒரு கை அவளது முகத்தை தாங்கிப் பிடித்து இருக்க.. மற்றொரு கையோ

பாவையவளின் பூ மேனியில் மேய

ஆரம்பித்தது. கூச்சத்தில் பெண்ணவள் கொஞ்சம் கொஞ்சமாய் பின்னால் சரிய ஆரம்பித்தாள். அவனோ சுகத்தில் உழன்றிட..

 

இரு மென்மைகளும் இப்போது அவன் கண்களுக்கு விருந்தாய்.. விழி எடுக்க முடியாதவனாய் அவன்!! கன்னியவளின் ரோஸ் நிற இதழ்கள் அவனின் சுவைத்தலில் செந்நிறமாக மாறிட.. மெல்ல மெல்ல அவனது இதழ்கள் கீழிறங்கி அவளது கழுத்தை நங்கூரமிட்டது. 

அதில் அவன் அணிவித்த செயின் தவழ்ந்த பிறை நிலவில் நிலைத்து நின்றது அவனது விழிகள்!!

தன் முரட்டு இதழ்கள் கொண்டு அவளின் நீண்ட நரம்புகள் ஓட்டிய கழுத்தை உரசினான். 

 

கண்ணனவன் தீண்டலில்.. இதுவரை உணராத புது வித உணர்வு பொங்க..

தலை முதல் கால் வரை சூடான ரத்தம் பாய..

தன் உதடுகளை படித்து அவற்றை சமன் செய்தாள் பெண். 

 

"தீரா.. தீரா.. தீருமோ உன் மீதான தாகமடி!!"என்று பிதற்றி கழுத்து முழுவதும் அவனின் சூடான முரட்டு இதழ்களை பதித்தான். கற்றை மீசையின் குறுகுறுப்பும் முரட்டு இதழ்களின் ஸ்பரிசம் முதன்முறையாக அவளுள் ஹார்மோன்களை விழித்தெழச் செய்ய.. அவனின் தோள்களை இறுக்கி பிடித்துக்கொண்டாள் அஸ்திரா.

 

முதல் முறையாக தன் செயலுக்கு அவளிடம் இருந்து வரும் எதிர்வினை அதுவும் நேர்மறையாக கண்டவனுக்கு உள்ளம் பூரிக்க.. இன்னும் இன்னும் அவளுள் ஐக்கியமாகி விடவே துணிந்தான் கலியுக துஷ்யந்தனாய்..

 

அவனின் கைகளும் உரிமையாக அவளது மெல்லிடையை மறைத்த முந்தானையை விலக்கி.. குறிஞ்சி நிலத்திற்கு கீழே

பரவி படர்ந்திருக்கும் மருத நிலமாகிய அவளின் வயிற்றை மெல்ல வருட.. அதில் சுழித்திருந்த நாபி சுழி அவளது மெல்லிடைக்கு அழகு சேர்க்க.. அதில் மேலிருந்து கீழாக அவன் விரல்கள் வருடிச் செல்ல.. அதில் சொல்லவென்னா சுகம் மிளிர அவள் நெளிந்தாள். இடையின் ஓரம் அவனது பிடியை இறுக்கமாக பிடித்தான் அவள் விலகி விடாமல்.. மெல்ல குனிந்தான் ஆணவன் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே.. அவளோ கண்கள் மூடி அவன் செய்யும் இன்ப இம்சையில் சுகமாய் சுகித்திருக்க.. குனிந்தவனின் அதரங்கள் அம்மெல்லிய இடுப்பினை கவ்விப்பிடித்தது. பற்களால் மெல்ல கடித்தவன், இடையின் நீள அகலத்தை தன் உதடுகளால் அளக்க.. சுகத்தில் கண்கள் சொரிந்தாள் சுந்தரி.

 

சிறுது நேரம் நாபியில் விளையாடியவன் அதரங்கள் கொண்டு, அடுத்து அவளது ஆலிலை வயிற்றில் முத்தங்களை அள்ளி வீசியவன், அல்லிமலர் குளத்தில் பூத்திருந்த சிவந்த அல்லியென நாபியில் நாவினை பதித்தான். அவனின் லீலைகள் எல்லை மீற அவனைத் தவிர்க்க முடியாமல் இழுத்து அணைக்க.. அதுவே அவனின் தாபத்தை அணைக்க போதுமாக இருந்தது.

 

இருவரின் சுவாசக் காற்றும் அனலாக மாறி இதயம்வரை பாய்ந்து ஒரு பாலை நிலத்தின் வறட்சியை உணர்த்தியது. அவர்கள் உதடுகள் இப்போது உரசிக் கொள்ளவில்லை. மாறாக அவைகள் ஒன்றையொன்று சிதைத்துக் கொண்டன. எந்த இதழ்கள் எந்த முகத்தில் என்று பிரித்தரிய முடியாத ஒரு ஆவேசமான முத்தமாக மாற்றி இருந்தான் அர்ஜூன்!!

 

மூச்சு திணறும் போதெல்லாம் இதழ்களுக்கு விடுதலை கொடுத்து கன்னங்களுக்குத் தொல்லை கொடுத்தான்!! கன்னங்கள் இருக்கிறதா இல்லையா என்று அவளுக்கு சந்தேகம் தோன்றும் அளவுக்கு!! அதற்கு மேல் அவனது விரல்கள் அவளது காது மடலை உரசி உரசி அவளின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தான்!! இறுக்கி பிடித்த பின் உச்சி முடி.. வலியில் கூட சுகம் காண முடியுமா? ஆம்!! முடியும்தான் போல!! காதலில் மட்டும்.. சற்றே மோகம் கூடும் போது!! வலிகள் அனைத்தும் சுகங்களாக மாறும் மாயம்!! இதுவரை அறியாத உணர்வுகள் இவை அஸ்திராவுக்கு..

 

எங்கோ வானத்தில் சிறகில்லாமல் பறக்கும் உணர்வு!!

வெண்பஞ்சு மேகத்தில் அமிழ்ந்து கிடக்கும் சுகம்!!

சாரல் மழை அடிக்கும் போது உள்ளுக்குள் ஏற்படும் குளிர்ச்சி!!

அருவியில் சொட்ட சொட்ட நனையும் பொழுது ஏற்படும் ஆனந்தம்!!

 

கண்கள் மூடி இன்பச் சிலிர்ப்பில் லயித்துக் கிடந்தவளின் செவிகளை மெல்ல வருடி ஏதோ ஏதோ பேசினான்‌ வீரா. 

காதல் பிதற்றல்கள் போல!! ஆனால் அவை அனைத்துக்கும் பதிலளிக்காமல் உணர்வுகளில் தத்தளித்து கொண்டிருந்தாள் அஸ்திரா!!

 

 "தீரா.. தீரா!!" மீண்டும் மீண்டும் இவையே அவளின் காதுகளை வந்தடைந்தன.. தீரா ஆசை கொண்டான். 

 

அவன் உதடுகள், அவள் உதடுகளை மனமேயில்லாமல் பிரிந்து, அவளின் கண் இமைகளை உரசின. அவனது வெப்ப மூச்சுக் காற்று பட்டு அவளது கண் இமை நரம்புகள் கூட சிலிர்த்தன.  

 

 "ம்மாமாஆஆ..." என்றவளது வார்த்தைகள் தொண்டைக் குழியை விட்டு வெளியேறவில்லை. 

 

"ம்ம்ம்.. சொல்லுடி தீரா" அவனது உதடுகள் இப்போது அவளின் கண் இமை மீது அழுந்திப் பதிந்தன.

 

கண்கள் மூடி சுக லயிப்பில் இருந்தவள், "மாமா.. மாமா" அவளின் குரலில் ஆயிரமாயிரம் சுருதிகள் இழைந்து மோகத்தில் குழைந்து வந்தது.

 

"யேன் அழகிடி தீரா நீ!! பேரழகி!!" அவனின் குரலும் அவளுக்கு சற்றும் குறையாமல் குழைந்து வந்தது.

 

"பொய்!! பொய்!! காதல் மயக்கத்தில் ஒவ்வொரு பெண்ணும் பேரழகிதான்! காலையில விடிஞ்சவுடனே இந்த பேரழகி எல்லாம் பேய்களாக தேன் உங்களுக்கு தெரியும்" என்று கண் இமைகள் மூடியபடியே அவள் கூற..

 

அவளின் கண் இமைகளைக் கடந்து கீழே சென்றவனின் உதடுகள் அவளது உதடுகளில் முத்தமிட்டு,

"இந்த பேய்க்கு ஏத்த அரக்கன் நான் தேனடி!!" என்றான்‌ முரட்டுத்தனமாய் அவள் இதழ்களை சுவைத்து.

 

 "ஆமா ஆமா அரக்கனே தான்.. காதல் அரக்கன்!!" என்று காதல் கிறக்கத்தில் அவளும் மொழிய..

 

 "முடியலைடி!! உன்னைய இப்படி பக்கத்தில் வச்சுக்கிட்டு கட்டுப்பாட்டோடு இருக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா இருக்கு.. ஆழிப்பேரலை போல அமைதியான யன் வாழ்க்கையில் வந்து என்னை அப்படியே சுருட்டி மடக்கி எடுத்துக்கிட்ட டி.. உனக்குள்ள நானே தொலைஞ்சே போயிட்டேன்" என்றான் உணர்ந்து. மெல்லிய புன்னகை மட்டுமே பெண் அவளிடம்!!

 

பார்க்கும் பெண்ணிடம் எல்லாம் தோன்றினால் அது காமம்!!

தன் இணையிடம் மட்டும் தோன்றும் உணர்வு மட்டுமே மோகம்!!

தீயைப் போல பற்றி எறியுமது!!

தீயைத் தீயால் அணைப்பதைப் போல.. மோத்தை மோத்தால் மட்டுமே வெல்ல முடியும்.!!

ஒற்றைத் தீயாய் இருந்த வீராவினது மோகம்.. அஸ்திராவினதும் சேர்ந்து இரட்டைத் தீயானால்??

இரண்டும் இணைந்து பெருந் தீயாகும்!! இருவரின் மோகமும் இணைந்து ஒற்றை மோகமானது!! ஒன்றே மோகம மயமானது!!

அதில் இருவரும் திளைத்திருந்த தருணமது!!

 

"எனக்கு காதலை மட்டுமல்ல மோகத்தையும் கற்றுக்கொடுத்தது நீ ஒருத்தி தானடி!!" என்று அவளருகே படுத்து ஒற்றை விரலால் அவள் முகத்தை அளந்தவாறே அவன் கூற..

ஆச்சரியத்துடன் அவனை கண்திறந்து பார்த்தாள் அஸ்திரா.

 

"அன்று திருவிழாவில் கொடுத்த ஒற்றை முத்தம் உயிர் வரை தீண்டி.. உயிருக்குள் புகுந்து பேயாட்டம் போட்டு.. என் மோகத்தை தூண்டிவிட்டு.. பிறகு நீயி கிடைக்க மாட்டாய் என்று நான் தவித்திருந்த வேளையில் என் கையிலேயே உன்னை ஒப்படைத்து.. காதலோடு நீ என்னை பார்க்க மாட்டாயா என்று ஏங்கியவனுக்கு.. உன் காதலையும் கொடுத்து கூடவே குட்டி வாரிசையும் கொடுத்திருக்கிறது இந்த காதல்.. நம் காதல்!!" என்று உணர்ந்து சொன்னான் வீரா.

 

அவர்கள் இணைந்ததற்கு அவன் காதல் மட்டுமல்ல.. அவன் மீது அவள் கொண்ட காதலும் தான் காரணம்!!

 

விடிய விடிய மெல்லிடையாளுக்கு வல்லினத்தை கற்றுக் கொடுத்தான் இடையினத்தோடு ஒன்றி இருந்தவாறு!!

 

மறுநாள் காலையில் பூரித்த முகத்தோடு கீழே இறங்கி வந்த மருமகளை பார்த்த வடிவம்பாளுக்கு மனது நிறைந்தது.

 

ஒரு வீட்டின் ஆக்க சக்தியே பெண்தான்!! அவளை மகாலட்சுமி என்று செல்வத்தை குறித்தாலும் சரி.. பராசக்தி என்று வீரத்தை குறித்தாலும் சரி.. கலைவாணி என்று கல்வி கடாட்சத்தை குறித்தாலும் சரி.. ஒரு பெண் சந்தோசத்தோடு புன்னகை முகமாக மனநிறைவோடு அந்த வீட்டில் வலம் வரவில்லை என்றால்.. அது வீடில்லை!!

 

திருமணமாகி வந்தது முதல் மருமகளின் முகத்தில் காணாத அந்த பூரிப்பும் மனநிறைவும் சந்தோசமும்.. இன்று கண்டதும் தான் வீடே நிறைந்தது போல இருந்தது வடிவுக்கு. மருமகளின் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்து இருவருக்குமான காபியைக் கொடுத்து அனுப்பினார்.

 

இவள் மேலே செல்லுமுன் குளித்து தயாராகி வந்திருந்தான் வீரா. நேற்றைய இரவின் மிச்சத்தை மனைவியின் முகத்தில் கண்டவனுக்கு இன்றும் அவளின் மச்சங்களை எண்ணிவிட ஆசைதான்.. ஆனால் கடமை அழைத்தது.

 

பத்ரி தான் அழைத்தது. இன்று கேஸ் என்று கூறி வீரா கண்டிப்பாக ஆஜராக வேண்டும். கூடவே.. அஸ்திராவும் அன்று நடந்ததை சொல்ல சாட்சியாக அழைக்கப்படுவாள் என்றும் கூறியிருந்தான். ஏற்கனவே கண்ணபிரான் மிரட்டியதால் தான் வழக்கு கொடுத்தேன் என்று இவள் கூறிவிட, கட்டப்பா கடுமையாகத் தாக்கி விட்டார் கண்ணபிரானை.

 

ஆனால் இன்று இந்த வழக்கோடு சஞ்சயன் வழக்கும் வருவது அஸ்திராவுக்கு தெரியாது. அதனால் அவளையும் கையோடவே கிளப்பி தன்னோடு அழைத்து வந்திருந்தான் நீதிமன்றத்துக்கு.

 

அம்பலவாணனுக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்கில் முதலில் வீராவையும் அஸ்திராவையும் கொல்ல முயன்றது நிரூபணமாகி விட.. அவருக்கு தீர்ப்பு சொல்ல முயன்ற நீதிபதியை சற்று தடுத்து நிறுத்தினான் வீரா.

 

என்னவென்று அவர் பார்க்க "ஐயா இந்த ஒரு வழக்கில் மட்டும் இவருக்கு தீர்ப்பை அவசரப்பட்டு கொடுக்காதீங்க.. இந்த இவரு மேல நிறைய வழக்குகள் இருக்கு. அதை ஒன்று ஒன்றாக இப்போது என் வக்கீல் உங்களுக்கு சொல்லுவார்" என்று இவன் அமைதியாகி பத்ரியை சுட்டிக் காட்டினான்.

 

ஒரு பெரிய கேஸ் கட்டையை எடுத்து நீதிபதி முன்னால் வைத்தான் பத்ரி. "இவர் ஒருத்தர் மேல இத்தனை வழக்காக?" என்று அதிர்ந்து பார்த்த நீதிபதியிடம், "இவையெல்லாம் சாதாரண வழக்கு இல்லை யுவர் ஹானர்.. கௌரவக் கொலைகள்!!" என்று கூற அதிர்ந்தது அந்த நீதிமன்றத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல அம்பலவாணனும் தான்.

இதுவரை யாருக்குமே தெரிந்திராத அவரது இன்னொரு முகம் இங்கே பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட விதத்தில்…

 

"என்ன.. என்ன…!!" என்று அங்குள்ளவர்கள் எல்லோர் முகத்திலும் அவ்வளவு ஆர்வம். அதைவிட "கௌரவ கொலைகள் என்றால்.. எத்தனை கொலை செய்து இருப்பான் இந்த நாசமாப் போனவன்?" என்று தங்களுக்குள் ஆற்றாமையாகப் பேசி கொண்டிருந்தனர்.

 

"யுவர் ஹானர்.. இதில் முதலாவது கேஸ் சஞ்சயனோட கொலை வழக்கு. என்னதான் சொந்த தங்கச்சி மகனாக இருந்தாலும் கலப்புத் திருமணத்தில் பிறந்தவரான சஞ்சயன் தன் மகளை திருமணம் செய்துகொண்டது பிடிக்காமல் அவரை கொலை செய்தது இவர்தான்" என்று பத்ரி கூற..

 

"இல்ல.. இல்ல.. நான் கொல்லல" என்று மறுத்த அம்பலவாணனை அங்கே யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அஸ்திரா அதிர்ச்சியோடு வீராவை பார்க்க அவன் கண் மூடி ஆமாம் என்று தலையசைத்தான்.

 

அதற்கு சாட்சிகள் என்று வீரா அனுப்பிய ஆட்கள் அம்பலவாணனுக்கு எதிராக சாட்சி கூற.. இதுவரை எத்தனை கொலைகள் செய்தும் மாட்டாமல் தப்பித்தவர் செய்யாத கொலைக்காக முதன்முதலாக தண்டிக்கப்பட்டார் அம்பலவாணன்.

 

அதுமட்டுமின்றி அவ்வூரில் நடந்த சில பல தற்கொலைகளுக்கு பின்னணியாக இருந்தவர் அம்பலவாணன் என்றும்.. ஜாதி மறந்து காதலில் கட்டுண்டு கல்யாணம் செய்தவர்களை தேடி பிடித்து சென்று பிரிப்பதும்.. அப்படி பிடிப்பவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை வெட்டி புதைப்பதும் அவர்களுக்கு சகஜமான ஒன்றாக இருந்திருக்கிறது! என்பதை காட்டி.. கடந்த சில வருடங்களாக இறந்தவர்களின் எண்ணிக்கையையும்.. மாயமாக போனவர்களையும் பெயர்களை குறிப்பிட்டு அவற்றுக்கும் அம்பலவாணன் தான் காரணம் என்று பத்ரி கூற.. 

 

வெறும் கொலை கேஸ் தான் அதுவும் அட்டம்ட் மார்டர் தானே ஈசியாக வெளியே வந்துவிடலாம் என்று அம்பலவாணன் வக்கீல் அவருக்கு உறுதி அளித்திருந்தார். இப்போது வழக்கு சென்ற விதமோ வேறு விதமாக இருந்தது. இதற்காக தானே வீரா காத்திருந்தது.

 

ஒவ்வொரு கேஸாக தூசி தட்டி பார்க்க ஆரம்பித்தால் அம்பலவாணன் இப்பிறப்பிலும் அல்ல அடுத்த பிறப்பில் கூட ஜெயிலில் தான் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அந்த அளவு ஒற்றை கேஸ் மூலம் மொத்தமாய் அம்பலவாணனை சிக்க வைத்திருந்தான் வீரா. 

 

இதை சாதரணமாக இவன் கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் மருமகனையே கொல்ல துணிந்தவனுக்கு மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்? என்று தன்னுடைய தாக்குதலை உதாரணமாகக் காட்டி அனைத்திற்கும் சாட்சியங்களையும் காட்டினான். கூடவே அம்பலவாணன் கூடவே இருந்த சிலரை வீரா கவனித்த விதத்தில் அவர்களே முன்வந்து அனைத்து குற்றத்தையும் ஒப்புக்கொண்டனர். அம்பலவாணனுக்கு வேறு வழி தெரியவில்லை. அனைத்து கதவுகளும் மூடப்பட.. சிறைக் கதவு மட்டுமே அவருக்கு திறந்தது.

 

அடுத்த ஒரு வாரத்தில் பரபரப்பாக இந்த கேஸ் பற்றி மட்டுமே சுற்றி உள்ள ஊர்களில் பேசப்பட.. இம்மாதிரி கௌரவ கொலை செய்பவர்கள் பற்றிய விவரம் அனைவருக்கும் தெரிய வர.. இவர்கள் ஊர் மட்டுமல்லாமல் அருகில் இருந்த ஊர்களிலும் இருந்து கௌரவ கொலைகள் பற்றிய வழக்கு அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது.

 

அரசுக்கு ஆயாசமாக இருந்தது. இத்தனை கொலைகளுக்குப் பின்னால்.‌ இவ்வளவு பெரிய மனிதர்களா என்று!! இத்துணை பின்புலம் உள்ளவர்களாக என்று!! அதனால் இதற்கு என்று தனியாக ஒரு குழுவை அமைத்து இது போன்றவர்களை கட்டி தூக்கச் செய்தது.

 

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆனது இவை அனைத்தும் அடங்க.. அன்று ஐந்தாம் மாதம் அஸ்திரா வுக்கு அவர்கள் நாத்தனார்களும்.. அசோகன் வீட்டில் இருந்து வந்து ஏழு வகை சோறை ஊட்டும் விடும் விழா நடந்தது.

 

விழாவை சிறப்பித்தவன் அன்று மதியமே தன் மாமனாரை சென்று சந்தித்தான் சிறையில்..

 

அவனைப் பார்த்ததும் இன்னும் அவரின் வன்மமும் கோபம் குறையவில்லை. அவர் தப்பு செய்திருந்தாலும் அது தப்பு என்று அவர் மனதிற்கு உறைக்கவே இல்லை. அதை எல்லாம் தாண்டி "யேன் மகன் போன்று வளர்த்தவன.. நானே எப்படிடா கொலை செய்வேன்? என்னை இப்படி மாட்ட வைத்து விட்டாயே?" என்று சிறைக் கம்பிகள் பின்னே சீறிப்பாய்ந்தார் அவர்.

 

"இப்பவும் சொல்றேன் மாமனாரே.. சஞ்சயனை கொன்னது நான் இல்ல.."

 

"அப்போ வேற யாருடா கொன்னு இருப்பா? நீனும் கொல்லல.. நானும் கொல்லல.." என்று உக்கிரமாக அவர் கேட்க..

 

"அஸ்திரா!!" என்றான் மிக

நிதானமாக அஸ்திரத்தை அவரது நெஞ்சினில் எறிந்துவிட்டு..

 

"என்ன…???" நம்ப முடியா அதிர்ச்சியில் அம்பலவாணன்.

 

தீருமோ தாகம்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top