உனக்கு எப்படியோ அப்படியே.
வாசுகி விஜயின் அரை விட்டு வெளியே வர, ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள் அவர் மனம் தெளிந்திருந்தது, மகன் சீக்கிரத்தில் குடும்பமாகிவிடுவான் என்ற எண்ணமே அவருக்குள் பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது.
“என்னம்மா என்ன ஆச்சு?” என்று கேட்டான் அஜய், “உண்மையாவே திவ்யா சொன்ன மாதிரி நாம விஜய் சரியா புரிஞ்சுக்கல டா, நம்ம கிட்ட இருந்து பெருசா எதையும் எதிர்பார்க்கல, ஆனா அவன் விருப்பப்பட்டதை கொடுக்காமல் விட்டுட்டோம்னு தோணுது” என்று கலங்கிய கண்களுடன் கூறினார்.
“ நமக்காக நமக்கு பிடிச்சத, பார்த்து பார்த்து செஞ்சவனுக்கு, நாம எதுவும் செய்யாம விட்டுட்டோம்னு தோணுது” என்று சொல்ல,
“ என்னம்மா சொல்றீங்க?” என்று கேட்டான் அஜய், “இனி சொல்றதுக்கு என்ன இருக்கு, அவனே இப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கான்” என்றதும்,
“ நிஜமாவா?” என்று கேட்டாள் திவ்யா,
“ ஆமா நீ சொன்னது சரிதான் நான் நினைக்கிறேன், காரணம் அவன நான் கல்யாணம் பண்ணிக்க சொன்னதும், நான் பண்ணிக்கிறேன்னு இப்பதான் முதல் முறையா சொல்லி இருக்கான், ஆனா அவன் ஒரு கேள்வி கேட்டான் என்று கூறினார்.
“என்ன கேள்வியத்தை உங்க புள்ள டிவிஸ்ட் வச்சு தான் கேள்வி கேட்பான், என்னது?” என்று சிரித்தபடி கேட்டான் சரவணன்.
அவரும் சிரித்துக் கொண்டு, “எனக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறீங்களா? அது எனக்கு புடிச்ச மாதிரி நடக்கனும்னு நினைக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“அப்போ சீக்கிரமா, உங்க மகனையும் மருமகளையும் வெல்கம் பண்ண ரெடியா இருங்க” என்று சரவணன் சொல்ல,
“ உங்க வாய் பலிக்கட்டும், கண்டிப்பா, நான் ஆத்மியை என் பொண்ணு மாதிரி பார்த்துப்பேன்” என்று கூறினார்.
அதே நேரம் தன் அறையில் அமர்ந்திருந்த விஜய் யோசனையில் இருந்தான்,
ஆத்மிகா அவளுக்கு சுரேஷை பிரிவதில் உறுதியாக இருக்கிறாளா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.
“திவ்யா” என்று அழைக்க, “அண்ணா கூப்பிடுறார்மா” என்று சொல்லிக்கொண்டே, அவள் உள்ளே சென்றாள்.
“சொல்லுங்கண்ணா” என்றதும், “மீகாவ நாளைக்கு வர சொல்லி இருக்கியா?” என்று கேட்க,
“எனது மீகா? வா நான் கூட அவளை இப்படி கூப்பிட்டது இல்லையே” என்று மனதில் நினைத்தவள்,
“ இந்த பேரெல்லாம் எப்ப வச்சாரு?” என்று மனதில் “ஆமாணா, நான் காலையில போய் கூட்டிட்டு வரனும்” என்று சொன்னாள்.
“சரி நாளைக்கு நான் கொடுக்கிற டாக்குமெண்ட்ஸ் எல்லாம் அவகிட்ட சைன் வாங்கிடு, அதுக்கு முன்னாடி அவ டிவோஸ்ல உறுதியாக தான் இருக்காலான்னு கன்ஃபார்ம் பண்ணிக்க, காரணம் ஒரு வேலை மே பி அவங்க ஹஸ்பண்ட் ஒழுங்கா இருந்தா, அவர் கூட வாழ விருப்பம் இருந்ததுனா, நம்ம ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் இல்லையா,
அவங்களுக்கு அவங்க ஹஸ்பண்ட் பிடிச்சிருக்கலாம் ,ஒருவேளை அப்படி இருக்கும் பொழுது, நாம ஒன்ஸ் கேட்டு சரி பார்த்துக்கலாம் இல்ல” என்று கூறினான்.
அதை சொல்லும் பொழுதே அவன் முகம் இறுகிக் கொண்டுதான் போனது, காரணம் அவளை இன்னொருவன் மனைவியாக அவனால் யோசிக்க முடியவில்லை, நம் வாழ்க்கையில் நடந்த எல்லாம் ஆக்சிடென்ட், அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது தான்.
இருந்தாலும் வேறு யார் மீதும் அவனுக்கு ஈர்ப்பும் அந்த எண்ணமும் வரவில்லையே, அவள் ஒருத்தியைத் தவிர, என்னதான் அவன் வேறு திருமணம் செய்ய நினைத்தாலும், முடியவே இல்லை, அதனால் தான் இப்படியே இருந்து விடலாம் என்று நினைத்திருக்க, காலம் அவளை திருப்பி தன்னிடம் கொண்டுவந்து சேர்த்து இருக்கிறது.
அவள் மீண்டும் தன் கைக்கு கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று இருந்தாலும், மனம் பரபரத்தது, எங்கே மீண்டும் கை நழுவி விடுவாளோ என்று, அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக வருந்துகிறான் தான்,
ஆனால் அதிலும் சொல்ல முடியாத ஒரு உணர்வு, எல்லாம் நன்மைக்கே, அவள் தன்னிடம் வந்து சேரவே” என்று எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை,
அவள் தன்னவள் தனக்கு மட்டும் சொந்தமானவள் என்று நினைத்தான், இருந்தாலும் அவள் மனதில் என்ன இருக்கிறது அறிய வேண்டுமே அதற்காகவே அமைதி காத்தான்.
தன் அண்ணன் என்ன நினைக்கிறான் என்று திவ்யாவினால் அறிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அவன் முகம் எதையோ யோசித்து இறுகிக் கொண்டே போகிறது, அதுவும் அவள் கணவனைப் பற்றி பேசும் பொழுது, ஐயோ என்று இருந்தது .
“என்னாச்சுன்னா? என்று சற்று தவிப்புடன் கேட்டாள் திவ்யா,
“ ஒன்னும் இல்ல” என்றவன், “நாளைக்கு இதை கன்ஃபார்ம் பண்ணிடு, அப்போ அவ டிவோர்ஸ்ல உறுதியாக தான் இருக்கிறானா ,இந்த டாக்குமென்டல் எல்லாம் சைன் வாங்கிடு” என்று சொன்னான்.
“என்ன டாக்குமெண்ட்னா?”என்று திவ்யா மேலாக பார்க்க, அது டிவோர்ஸ் என்று புரிந்தது, ஆனால் நிறைய இருப்பது போல் இருந்தது, சட்டென அதன் மீது கைகளை வைத்தவன்,
“ அவள் கன்பார்ம் பண்ணா மட்டும்தான் இதுல சைன் வாங்கணும், புரிஞ்சுதா?” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூற,
“ சரி, நான்..” என்றவன், “இதை நாளைக்கு எடுத்துட்டு போ, இங்கே இருக்கட்டும்” என்றான்.
சரி என்று அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.
விஜய் யோசனையாகவே இருந்தான், அவளை முதன் முதலில் பார்த்தது, அவள் தன்னைப் பார்த்து பயந்து பயந்து செல்வது எல்லாம் அவன் மனதில் ஆழப் பதிந்திருந்தது,
அவள் படிப்பு முடியும் வரை காத்திருக்க விரும்பினான், ஆனால் அதற்குள் எதிர்பாராமல் என்னென்னவோ நடந்து விட்டது.
அவன் மட்டும் இங்கே இருந்திருந்தால் நிச்சயம் இந்த திருமணத்தை நடத்த விட்டு இருக்க மாட்டான், வேறு யாரையும் அவளை பெண் கேட்டு வர அனுமதித்திருக்கவும் மாட்டான், அவன் இல்லை
அவன் இல்லை அந்த நாட்களை நினைக்கும் பொழுதே தன் கை முஸ்ட்டிகள் இறுகியது அவனுக்கு.
அடுத்த நாள், திவ்யா நவீனை ஸ்கூலில் விட்டு விட்டு, அப்படியே ஆத்மிகாவை அழைத்துக் கொண்டு அவளுடைய பொட்டிக்கிற்கு செல்லலாம் என்று நினைத்தாள்.
விஜய்யும் சரவணனும் சேர்ந்து தான் அவளுக்கு அந்த பொட்டிகை அமைத்து கொடுத்திருந்தார்கள், விஜய் வேண்டவே வேண்டாம் என்று மறுத்தான், சரவணன் அவளுக்கு பெண் வீட்டு சீதனமாக, நான் செய்ததாகவே இருக்கட்டும் என்று கூறினாலும்,
“ இல்லை என் மனைவிக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்” என்று கூற, ஒருவாறு இருவரும் சேர்ந்து அந்த பொட்டிக் நிறுவ உதவி செய்தார்கள், இப்போது அந்த பொட்டிக்கள் கிட்டதட்ட சிறிய பொட்டிக்கு என்று சொல்ல முடியாது, அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் ஒரு மேனுஃபேக்சரிங் டிசைனிங் டிரஸ் கம்பெனி என்று கூட சொல்லலாம், கிட்டத்தட்ட 40 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சரவணன் ஏற்கனவே வேலைக்கு சென்று விட்டான், அவள் நவீனை அழைத்துக் கொண்டு கிளம்ப வர விஜய் வந்தான்.
“கிளம்பிட்டீங்களா?” என்றதும், “கிளம்பிட்டோம்னா” என்று அவள் கூற, “மாமா” என்று அவன் கையை பிடித்துக் கொண்டான் நவீன்.
குழந்தை தூக்கி கொண்டவன், “என்ன ஸ்கூல் ஸ்டார்ட் ஆயிடுச்சா?” என்று கேட்க, “ஆமா” என்று கூறினான்.
“நல்லா படிக்கணும்” என்று விஜய் கூற,
“ நல்லா படிச்சு மாமா மாதிரியே ஆகணும்” என்று நவீன் சொன்னது, குழந்தையின் கண்ணத்தில் முத்தமிட்டு, “தட்ஸ் மை பாய்” என்று தங்கையிடம் திரும்ப,
“ இவனை விட்டுட்டு தான், ஆத்மியை கூப்பிட போற?” என்று கேட்டான்.
“ ஆமா” என்று சொன்னதும், “நானும் வரேன்” என்று சொல்ல, அவளுக்கு அதிர்ச்சி தான்,
“ வா வா” என்றாலும் வரமாட்டான், இப்போது ஆத்மியை பார்ப்பதற்கு அடிக்கடி வருவான் போலையே என்று நினைத்தாள் .
இருந்தாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அதைப் பற்றி எல்லாம் விஜய்க்கு கவலை இல்லை, இந்த முறை அவளை விட்டு விடுவதாக அவன் இல்லை, அதற்காகவே இனி யாரையும் அவளை கஷ்டப்படுத்தவும் அவன் விடமாட்டான், அவன் தன் கண் பார்வையிலே இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
தங்கை பார்வையில் தெரிந்த அதிர்ச்சியை கண்டாலும் காணாதது போல, “போலாமா ?”என்று கேட்க, “போலாமே” என்று சொன்னாள் அவள்.
நவீனை ஸ்கூலில் விட்டு விட்டு இருவரும் ஆத்மி தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு சென்றார்கள்.
அங்கே போனதும் ஆத்மியை பார்க்க, நேற்றைய விட இன்று அவள் முகத்தில் ஒரு தெளிவு,
“என்னடி ஹாஸ்டல் செட் ஆச்சா?” என்று கேட்கவும், “ஹம்” என்றவள், “நிம்மதியா தூங்குனேன்” என்று சொன்னதும் சுருக்கு என்று ஒரு வலி விஜயின் மனதில்,
“திவ்யாவும் என்னடி இப்படி சொல்ற?” என்று கேட்க, “லேசாக புன்னகைத்தவள் நான் நல்லா தூங்கியே வருஷ கணக்கில் ஆகுதுடி” என்று சொல்லவும், என்ன சொல்வது என்றே தெரியவில்லை அதை எல்லாம் கேட்க முடியாமல் விஜய், “சரி சீக்கிரமா வாங்க” என்று சொல்லிவிட்டு
காரில் வந்து அமர்ந்து கொண்டான்.
திவ்யாவும் ஆத்மியை அழைத்துக் கொண்டு வந்தாள், தன் அண்ணனே தெளிவாக கேட்டுக் கொள்ளட்டும் என்று நினைத்தவள், வேண்டுமென்றே பேச்சை ஆரம்பித்தாள்.
ஏண்டி என் கே எஸ் உன்னுடைய ஹஸ்பண்ட் என்று அவள் சொல்ல வர, “என் ஹஸ்பண்ட் இல்ல, திரும்பவும் அதை சொல்லாத, வேணாம்” என்று சிறு கடுப்புடன் கூறினாள் ஆத்மிகா.
“சரி அவன் பெயர் என்ன சுரேஷ், ஒருவேளை அவர் மனசு திருந்தி உன் கிட்ட வந்து சேர்ந்து வாழலாம்னு சொன்னா என்ன பண்ணுவ” என்று கேட்கவும்,
ஒரு கணம் அமைதியாக இருந்தாள், அந்த அமைதி விஜய்யின் மனதை பெரிதும் வருத்தியது, அப்படி என்றால் அவள் அதை எதிர்பார்க்கிறாளோ என்று நினைத்தாள்.
அதேதான் திவ்யாவும் நினைத்தவள், “என்னடி அமைதியா இருக்க, அப்போ உன் ஹஸ்பண்ட் திரும்பவும் வந்தா அக்சப்ட் பண்ணிப்பியா?” என்று கேட்டாள்.
லேசாக சிரித்தவள், “அதுக்கு வாய்ப்பே இல்லடி, என் மனசை பொறுத்த வரைக்கும், உலகத்துக்கு தான் நாங்க கணவன் மனைவி, நாங்க கணவன் மனைவியா வாழ்ந்தே கிட்டத்தட்ட மூன்று வருஷம் ஆகுது” என்று சொன்னதும், கார் ஸ்டேரிங் ஒரு கணம் தடுமாறியது விஜயின் கையில், சட்டுனு சுதாரித்தான்.
ஆனால் பெண்கள் இருவரும் எதிரில் ஒரு நாய் ஓடியதால் அப்படியானது என்று நினைத்தனர்.
“என்னடி சொல்றா, எனக்கு கரெக்ட்டா சொல்லு, ஏன்னா வக்கீல் கிட்ட இந்த டீடைல்ஸ் எல்லாம் நீ எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கேன்னு தெரிஞ்சிக்கிட்டா தான் அவங்க ஃபர்தரா ப்ரொசீட் பண்ணனும், அதுக்காக கேட்கிறேன்” என்றாள் திவ்யா,
“ சொல்றதுக்கு ஒன்னும் இல்லடி, நான் கன்ஃபார்மா தான் இருக்கிறேன், அந்த ஆளு என் மனச விட்டு போய் மூணு வருஷம் ஆகுது, என்னதான் எங்களுக்கு மேரேஜ் ஆகி 5 வருஷம் ஆனாலும், எங்களுடைய திருமண வாழ்க்கை என்பது ரெண்டு வருஷத்துக்குள்ளாகவே சுருங்கிடுச்சு ,
அதை எல்லாம் திரும்பவும் நானே நினைத்து பார்க்க விரும்பல, அவன் ஒரு விதமான சைக்கோன்னு கூட சொல்லலாம், அதுவும் இல்லாம இன்னொரு பொண்ணு கூட அஃபேர் வச்சு இருக்கான், எனக்கு அதெல்லாம் வேண்டாம்,
நான் நிம்மதியா எனக்கு சந்தோஷமா வாழனும்ங்கறதை விட, யாருக்கும் அடிமையா இல்லாம, நிம்மதியா என் முடிவை, நானே எடுத்து, வாழ ஆசைப்படறேன், அவ்வளவுதான், மத்தபடி எனக்கு எதுவுமே வேணாம், யாருமே வேணாம்” என்று கூறினாள்.
அப்போ ஸ்ட்ராங்கா தான்.. என்று திவ்யா இழுக்க,
“ எழுதி வேனா தரவா டி” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்,அவள் வலி கூட அவளை சிரிக்கும் அளவிற்கு மறுத்துப் போக வைத்திருக்கிறது என்று நினைத்தார்கள்.
ஆத்திரமாக வந்தது விஜய்க்கு, ஒருவழியாக ஆபீஸ் வந்து சேர்ந்தார்கள்,
“ சரி வா உன்னிடம் சில டாக்குமெண்ட்ஸ் சைன் வாங்க சொன்னாரு அண்ணா” என்று சொல்லியே, அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அவள் முன் சில டாக்குமென்ட்கள் எல்லாம் வைக்க, “சரி பென் கொடு” என்று கேட்டவள், அவள் பாட்டுக்கு எங்கே எல்லாம் சைன் செய்ய சொல்லி மார்க் செய்யப்பட்டிருக்கிறதோ அதில் எல்லாம் படித்து கூட பார்க்காமல் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தாள்.
ஆச்சரியமாக இருந்தது திவ்யாவிற்கு, “அதுல என்ன இருக்குணும் கூட பாக்காம, நீ பாட்டுக்கு சைன் போட்டுட்டு இருக்க?” என்று கேட்டாள்.
“ மனுஷங்க எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கடி, ஏனோ நான் என்னை நம்புறதை விட, உங்க அண்ணன நம்புறேன்,அவர நம்ப சொல்லி என் மனசு சொல்லுது, அதான்” என்று அவள் சொல்லி சைன் போட, அந்த அறையில் எதையோ எடுக்க வந்த விஜய் அதைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்.
“ அப்படி ஏன்டி என்னை விட்டு போன?” என்று அவன் மனம் அரற்றியது, “எதனால் அப்படி சொல்ற?” என்று திவ்யா சற்று தயக்கத்துடன் கேட்க,
“ தெரியல அவர பார்த்தா, ஒரு பயம் இருக்கு ,ஆனாலும் அதையும் மீறி ஒரு மரியாதை, அதைவிட சொல்ல தெரியலடி, எனக்கு அவர் பார்த்துப் பாருன்னு தோணுது அதான்”
“ எந்த விதத்துல?* என்று அவள் தயக்கமாக அவள் தெளிவு பெற கேட்க,
ஆனால் திவ்யாவும் அவள் கணவனும் பேசிக்கொண்டிருந்தது தான் ஆத்மிகா கேட்டு விட்டாளோ, எங்கே அவன் அண்ணன் கழுத்தை பிடித்து தான் உயிரை வாங்கி மணந்து கொள்ள போகிறேன் என்ற பயத்தில் கேட்கிறாள் என்று தவறாக புரிந்து, லேசாக சிரித்தவள்.
“நீ எப்படி, உன் அண்ணனை நம்புறியோ ,அதேபோலத்தான் நானும் நம்புறேன்” என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள்.
இது அதைவிட பேரிடியாக இருந்தது விஜய்க்கும் திவ்யாவிற்கும்.
வருவான்
