இராவணா 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 215
Thread starter  

அத்தியாயம் 2

 

 

//அடி நான் புடிச்ச கிளியே

வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி

நீ கூடு விட்டு வெளியே

வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி

ஒண்ணு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து

அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்..//

 

என்ற பாடல் அந்த காரில் அதிக சத்தத்தில் ஒலிக்க..

 

அதற்கு தக்கவாறு விரல்களால் தாளமிட்டபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கதிர்நயனன்.

 

அதுவும் அந்த பாடல் வரிகளோடு இவனும் சேர்ந்து பாடினான் குறிப்பாக அவளையே பார்த்து..!

 

அவனைக் காணக் காண அத்தனை ஆத்திரமாக வந்தது பெண்ணவளுக்கு. 

 

இப்போது மட்டுமல்ல எப்பொழுதும் தான் நினைத்ததை சாதித்து முடிக்கும் அவனின் இந்த ஆளுமையில் அழுத்தத்தில் பெண்ணவளுக்கு மண்டை காய்ந்தது. 

 

“ஒழுங்கா நான் உண்டு.. என் ஹாஸ்பிடல் உண்டுன்னு இருந்தேன். என்னை ஏன் இப்படி வம்படியா இழுத்துட்டு போறீங்க?” என்று கேட்க அவனோ அவளை திரும்பி பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தான். 

 

//கட்டு கட்டா புத்தகத்த சுமக்க வில்ல நானடி

ஆனாலும் தான் கெட்ட வழி போனதில்ல நானடி..

வெள்ள மனம் பிள்ள குணம் உள்ள ஆளு நானடி

என்ன பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி

படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா

படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா

உன்னை கண் போலதான் வச்சி காப்பேனடி

அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்..//

 

அதிலும் ‘அடி உன்ன தான் நெனச்சேன்..’ என்ற வரிகளில் அப்பட்டமான கோபம் அவள் முகத்தில் கொந்தளிக்க.. சட்டென்று எக்கி அந்த பாடலை அணைத்து இருந்தாள் பிரக்யா.

 

பின்பு அவனை முறைத்தவள் அவனின் பார்வையில் கிடைத்த பல செய்திகளில் முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள்.

 

அவனோ “நீ பாட்டை நிறுத்திட்டா…” என்று கடுப்பில் சிரிக்க,

 

வெடுக்கென்று திரும்பி அவனை பார்த்தவள் “இப்ப எதுக்கு என்னை இவ்வளவு வலுக்கட்டாயமா ஊருக்கு அழைச்சுட்டு போறீங்க நீங்க?” என்று சிடுசிடுத்தாள்.

 

“அதுவா.. ரொம்ப நாளா என்னையே நினைச்சுட்டு இருந்த ஒரு பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கலாம்னு முடிவு எடுத்து இருக்கேன்” என்றான் உல்லாசமாக..

 

‘இது எதிர்பார்த்ததுதானே.!’ என்று அவள் மனம் சமாதானமானாலும் மனதில் மூலையில் குறுகுறுத்த சிறு மர்ம புத்தகமும் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவியாய் தவித்தது..!

 

பெருமூச்சை ஒன்று வெளியில் விட்டவள், “அதுக்கு எதுக்கு நான் வேணும் உங்களுக்கு? நீங்க டாக்குமெண்ட் அனுப்பி வைச்சிருந்தா நான் சைன் பண்ணி அனுப்பி இருப்பேன் இல்ல..” என்றாள் வெறுமையான குரலில்..!

 

“ஆஹான்.. அப்போ வெறும் டாக்குமெண்ட்டோட நம்ம உறவு முடிஞ்சுதா?” என்றவனின் கேள்வியில் அவள் திணறினாள்.

 

‘எப்படி சொல்ல முடியும்? ஆம் என்று..!’ அவள் உதடு கடித்துக் கொள்ள.. அவளின் கடித்த உதட்டில் அவனின் கவனம் கூர் பெற..

 

இவளோ எதிரே பார்த்த “அகரதிருநல்லூர்” உங்களை அன்புடன் அழைக்கிறது என்ற பலகையில் அப்படியே இறுகி அமர்ந்தாள்.

 

இதுவரை இருந்த இலகுத்தன்மை மாறி அவளது உடல் சற்று இறுக்கமாக இருந்ததை கண்டவன் காரை ஓரமாக நிறுத்தி, ஒரு கையால் அவள் தோளை நன்றாக வளைத்து அணைத்துக் கொண்டான்.

 

“சில் டா சின்னு..! எல்லாம் சரியா போகும்..!” அவன் வெகு காலம் கழித்து அழைத்த அந்த சின்னுவில் அவள் உடைந்து போக, கண்களில் இருந்து தண்ணீர் இப்போ கொட்டுவேன் என்று நின்றுக் கொண்டிருக்க..

 

“நோ டா சின்னு..” மறு கையால் கலைந்து முகத்தில் தவழ்ந்த அவளது முடி கற்றைகளை ஒதுக்கினான். அதை மெதுவாக அவள் காதோரம் எடுத்து விட்டவன் அவளின் கழுத்தை வளைத்து அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான். 

 

நனி காதலாக…!

வளர் ஆசையாக..!

துளி மோகமாக…!

 

அவனின் இந்த நெற்றி முத்தத்தில் சட்டென அவளிடமிருந்து ஒரு நெடுமூச்சு வெளிப்பட்டது..! அவனது கையை இறுக பற்றினாள் மாது.

 

“சின்னு..” என்ற அவனின் நெருக்கமான அழைப்பில்…

 

அவள் பற்றியிருந்த கையைக் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாள்..!

 

அவளிடமிருந்து பதில் இல்லை. மீண்டும் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான். அவளது உடலோ சிலிர்த்து சிணுங்கிக் கொண்டது. அவள் புருவம் சுருங்கி விரிந்தது. அவனோ அடுத்த முத்தத்தை அவள் புருவத்தில் பதித்தான். அதற்கும் அவளிடமிருந்து மறுப்பு இல்லை. 

 

அவனுக்குள் உணர்ச்சிகள் தீப்பிழம்பாக வெடித்து, அவளை மென்று சுவைக்க ஆசை வந்தது..!

 

அதன் விளைவாய் அவள் முகத்தில் படர்ந்த அவனின் முத்தங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது..!

 

அவளது வில்லென்ற புருவம்.. கயல் கண்கள்.. சிவந்த கன்னங்கள்.. கூர் மூக்கு என இறங்கி கிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது அவனது அழுத்தமான உதடுகள்..!

 

அவளிடமிருந்து துளி எதிர்ப்பு கூட இப்போது இல்லாதது அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது..!

 

“ராட்சஸி..! எல்லாத்தையும் இத்தனை நாளும் மனசுக்குள்ள ஒரேடியா பூட்டு போட்டு பூட்டி வச்சி இருந்துயிருக்கா.. இருடி.. உன்னை..!” என்று மனசுக்குள் உஷ்ணமானவன்,

 

பற்களால் கடித்திருந்த அவளின் ஆரஞ்சு சுளை உதடுகளை தன் உதடுகளால் மெல்லப் பிரித்தான். தன் உதட்டால் கவ்வி இழுத்து மெதுவாக உறிஞ்சினான். 

 

அவனின் இந்த திடீர் இதழ் முத்தத்தில் அதிர்ச்சியாக கண்களை அகல விரித்தாள் மாது..!

 

முதல் முறையாக அவனின் இதழ் முத்தம்..! 

 

உயிர் வரை இனிக்க வேண்டியது இன்று ஏனோ கசந்தது..!

 

ஆனால் அவனிடம் அதனை காட்டிக் கொள்ள பெண் விரும்பவில்லை. அமைதியாக அவனிடம் தன்னை ஒப்படைத்து கண்களை மூடிக்கொண்டு அவனின் கையை இறுக்கினாள் பிரக்யா.. !!

 

அவனுக்கு அவளின் செயல்களில் தைரியம் மட்டும் இல்லை. நம்பிக்கையும் வந்தது. இப்போது அவள் தன்னை எதிர்க்கும் நிலையில் இல்லை. தன்னை ஏற்கத் தயாராகி வந்திருக்கிறாள் என்று!!

 

அவள் உதடுகளை நோகாமல் சுவைத்த பின் விட்டவன்.

 

”யூ ஆர் ஸோ ஸ்வீட்..! லைக் விசா..!” என்று அவளின் நெஞ்சத்தில் அமிலத்தை ஊற்றியவன்,

 

“எதுக்கு என்னை அழைச்சிட்டு வந்தீங்க.. எதுக்கு என்னை அழைச்சிட்டு வந்தீங்கன்னு தாம் தூம்னு குதிச்சுக்கிட்டு இருந்த இல்ல.. இன்னும் பத்து நாள்ல எனக்கும் விசாவுக்கும் நிச்சயதார்த்தம். அதுக்கு தான் உன்னை இப்போ கூட்டிட்டு வரேன்..!” என்றதும் அவள் கசங்கிய முகத்தோடு அவனை பார்த்தாள்.

 

“அதுக்கு.. அதுக்கு.. எதுக்கு.. நான்?” என்று வார்த்தைகள் வெளிவராமல் நாக்கு தந்தியடிக்க அவன் முகம் பார்க்க பிடிக்காமல் நேர் எதிரே வெறித்தப்படி கேட்டாள்.

 

“ம்ம்.. தாய்மாமன் கல்யாணத்துக்கு அக்கா பொண்ணு நீ இல்லாமலா? அதுக்குத்தான்..!” என்றவன் இப்பொழுது காரை வேகமாக விரட்டினான் அவனது ஊருக்குள்ளே..!!

 

அந்த தாய்மாமனில் அவளது நினைவுகளில் பல உருவங்கள்.. பல நிகழ்ச்சிகள்.. என்று பேயாட்டம் போட.. அதனை எதையும் தாங்க முடியாமல் கண்களை இறுக்க மூடி சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள் பிரக்யா உமையாள்.

 

அகரதிருநல்லூர் அவளது அன்னையின் ஊர்..!

 

அந்த ஊரின் செல்வந்தரின் சீமந்தபுத்தரி அவளின் தாய் பார்கவி.

 

மகாராணிகளான மகள்கள் மறக்கப்பட்டார்கள்..!

 

காரணம்..??

 

பேரரசிகள் பேத்திகளாய் வந்ததினால்…

 

ஆம்.. அவளது அன்னை சித்தியை விட, முதல் பேரக்குழந்தை.. அதுவும் பேத்தி என்று ஏக செல்லமாக வளர்ந்தவள் தான் பிரக்யா.

 

ஆனால் அப்போதும் தாய்மாமா கதிர்நயனன் என்றால் பயம் தான் அவளுக்கு..!

 

வாய்க்கு வாய் வாயாடுவாள் தன் அம்மம்மாவிடம். ஆனால் தெரு முனையில் மாமனது புல்லட்டின் சத்தம் கேட்டாலே இங்கே கப்சிப் என்று அமைதியாகிவிடுவாள் அவள்..!

 

பர்வதம்மாள் பேத்தியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார். 

 

“ஏய் சின்னவளே.. இப்ப பேசு டி பாக்கலாம். இவ்வளவு நேரம் என் கிட்ட வாய் கிழிய அத்தனை நியாயம் கேட்டியே? அதுல ஒத்த வார்த்தை இப்ப பேசு பார்க்கலாம்..” என்று அவரும் இதுதான் சாக்கு என்று பேத்தியை கிண்டல் செய்தார்.

 

“என் வாய கிளறாத கிழவி.. புள்ளைய பெக்க சொன்னா நீ ஒரு ஹிட்லரை பெத்து வைச்சிருக்க..!! ஒரு வயசு பொண்ணு இந்த வீட்ல ஆட முடியுதா? பாட முடியுதா? இல்ல சுதந்திரமா பேச தான் முடியுதா? ம்ஹீம்.. அராஜகம் பண்றார் உன் புள்ள” என்று அங்கலாயித்தாள்.

 

“வீடுன்னா அப்படித்தான் கட்டுக்கோப்பா இருக்கணும்டி. அப்படி எந்த கட்டும் இல்லாமல் விட்டா அது குடும்பமே இல்லடி ராசாத்தி” என்று செல்ல பேத்திக்கு புரிய வைக்க தன்மையாக அவர் கூற,

 

“போ.. போ.. தாய்கிழவி..! வீட்டிலேயே எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கலன்னா.. எங்க இருந்து வெளியில் எங்களுக்கு கிடைக்க..” என்று‌ அவள் பேசும்போது புல்லட் சத்தம் வீட்டு முனையில் கேட்க..

 

திரும்பி வாசல் பக்கம் ஒரு பார்வை பார்த்தவள் “போச்சு.. போச்சு.. வந்திட்டாரு..” என்றவள்,

 

“எங்க தாத்தாவோட ரொமாண்டிக்கா இருந்து ஒரு புள்ளய பெக்க சொன்னா.. அந்நேரம் நீ என்ன கடுப்புல இருந்தியோ.. இப்படி ஒரு கடுகடுன்னு இருக்குற புள்ளய பெத்து போட்டு வைச்சிருக்க.. அவரு எங்களையெல்லாம் போட்டு தாளிக்கிறாரு.. நீ சிரிக்குற.. இரு.. இரு.. அப்புறம் பார்த்துக்கிறேன் உன்னை” என்று அம்மம்மாவின் கன்னத்தில் செல்லமாக குத்தியவள், புல்லட் சத்தம் நிற்கும் முன் மாடியை நோக்கி வேகமாக ஓடினாள் பிரக்யா..!

 

இன்று அவற்றை எல்லாம் நினைக்கும் போது இளம் சாரலாய் நெஞ்சில் வீசியது.

 

“கனவு காண்றத விட்டுட்டு இறங்கு.. வீடு வந்திருச்சு..!” என்றவனின் வார்த்தையில் நடுக்கத்தோடு அவள் காரிலிருந்து இறங்கினாள்.

 

பெரிய வீட்டை சற்று பயத்துடனே பார்த்தப்படி அவள் நின்றிருக்க..

 

“ஹேய் உமையா வந்தாச்சு..” என்று கூக்குரலோடு ஓடி வந்தனர் அவளது சித்தியின் பிள்ளைகள் ஆதிராவும் ஆர்யாவும்..!

 

புன்சிரிப்போடு அவர்களை எதிர்கொண்டாள் பிரக்யா.

 

வெகு நாள் கழித்து பார்க்கும் தம்பி தங்கையோடு கதைத்தப்படி அவள் உள்ளே செல்ல “இப்பதான் வீட்டுக்கு வரணும் உனக்கு வழி தெரிஞ்சுதா டி பாப்பா” என்று நா தழுதழுக்க கேட்ட பாசக் குரலில் திரும்பிப் பார்க்க அங்கே பர்வதத்தம்மாள் நின்றிருந்தார்.

 

“அம்மம்மா..” என்று நெகிழ்வான குரலோடு அவள் அவரை நோக்கி ஓட..

 

“ஏய் ஆதி.. என்னடி உமையா மாறிட்டா..! எப்பொழுதும் தாய்க்கிழவினு தானே கூப்பிடுவா? என்ன புதுசா அம்மம்மானு புதுசா மரியாதையா பேசுற.. பாசப்பயிரை வளர்க்குறா? இவள எப்படி டி நம்ம கேங்குல சேர்த்துக்கிறது?” என்று ஆர்யன் ஆதிராவின் காதை கடிக்க..

 

“அது வேற ஒன்னும் இல்லடா ஆரு.. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறா இல்ல.. அந்த பாச பரவசத்துல கூப்பிட்டுயிருப்பா.. கவலைப்படாத ரூமுக்கு அழைச்சிட்டு போய் நாம மந்திருச்சிடலாம்..!” என்று இவள் திரும்பி குசுகுசுக்க..

 

“இங்க என்ன ரெண்டு பேருக்கும் குசுகுசுனு பேச்சு?” என்று கதிர்நயனின் அழுத்தமான குரலில் 

 

“ஒன்னும் இல்ல மாமா..” என்று இருவரும் வேகமாக உள்ளே ஓடினர்.

 

வெகு நாள் கழித்து பார்த்த அம்மம்மாவிடம் சில பல கொஞ்சல்.. கெஞ்சல்.. மிஞ்சல் என்று அன்பில் முக்குளித்து, பாசத்தைக் கொட்டி கண்ணீரோடு அவள் திரும்ப, அவளை தான் கைக்கட்டி கூர்பார்வை பார்த்தான் கதிர்நயனன்.

 

அதற்குள் வேலையாள் வந்து அவளது பெட்டிகளை எங்கே வைக்க என்பது போல கதிர்நயனனை பார்த்து நிற்க.. அதைக் கண்டு

“என் ரூம் உள்ள..” என்று பிரக்யா ஆரம்பிக்கும் முன்..

 

“எங்க ரூம்ல கொண்டு போய் வை முரளி” என்று அழுத்தமாக வந்து விழுந்தது நயனனின் நயமான வார்த்தைகள்.

 

“போடா தங்கம் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா.. சாப்பிடலாம்..!” என்று பர்வதம் அனுப்பி வைக்க..

 

கால்கள் பின்ன.. நெஞ்சு உலர.. கையை பிசைந்துக் கொண்டு அதுவும் கதிர்நயனனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே,  

 

மெல்ல அடி மேல் அடி வைத்து அவர்களது அறையை நோக்கி சென்றாள் பிரக்யா. 

 

அவள் உள்ளே நுழைந்த அடுத்த நிமிடம் அறை கதவு தாழிடப்பட… அதிர்ந்து திரும்பியவள் முன் அழுத்தமாக கை கட்டியப்படி நின்றிருந்தான் கதிர்நயனன்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top