விலகிவிட வேண்டும்
விஜய் ஆத்மிகாவின் கையில் பிடித்துக் கொண்டிருக்க அவளோ அவனிடமிருந்து விலகிக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள்.
அதை உணர்ந்தவன் அவள் கரங்களை விட்டு, “என்ன கைய புடிச்சா கற்பு போயிடுச்சுனு நெனப்பா?” என்று கேட்கவும், அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
‘என்ன இப்படி எல்லாம் பேசுகிறான்?’ என்பது போல் இருந்தது அவள் அதிசயத்த பார்வை உதட்டிற்குள் சிரிப்பை மறைத்தவன்,
“என்ன அப்படி பார்க்கிற? நான் என்ன ஒன்றும் புதுசா சொல்லலாமா, நீ சொன்ன டயலாக் தான்” என்றதும் அவளுக்கு மேலும் அதிர்ச்சி.
நானா நான் எப்ப சொன்னேன் என்பது போல் அவள் யோசனையுடன் இருக்க,
“ அது சரி ஆளே மாறிட்டு இருக்கும்போது, பேசுனது மட்டும் ஞாபகம் இருக்குமா என்ன? என்றவன், சரிப்பா கொஞ்சம் வெளியே போகலாம்” என்றான்.
“வெளியே வா, எங்க?” என்று அவள் திணறியபடி கேட்டாள்.
“ஏன் எங்கன்னு சொன்னால் தான் வருவீயா?, அவ்வளவு நம்பிக்கை இல்லையா?” என்று அவன் அவளை கூர்ந்து பார்த்து கேட்க..
“நான் அப்படி சொல்லலையே, ஜஸ்ட் எங்கன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்” என்று சொன்னவள்,
வாங்க போகலாம் என்று முன்னாள் நடக்க அவன் உதட்டிற்குள் சிரிப்பை மறைத்துக் கொண்டான்.
“ தட்ஸ் மை கேர்ள்” என்று அவன் இதழ்கள் முனுமுனுத்தது, அவளை அழைத்துக்கொண்டு ஒரு பொட்டிக்கிற்கு சென்றான்.
“ இங்க எதுக்கு?” என்று கேட்டாள் அவள், “இங்க டைய்லி வியர் பண்ற மாதிரி நல்ல சாரீஸ், சல்வார் எல்லாமே அவைலபிலா இருக்கும், இதை நான் அங்கேயே, நம்ம பொட்டிக்லையே செய்திருப்பேன், நம்ம பொட்டிகளையும் இருக்குதான்.,
பட் இப்போதைக்கு அது உனக்கு தேவையில்லாத அன்கஃப்ரடபில் கொடுக்கும், அதுக்காக தான் எங்க கூட்டிட்டு வந்தேன்” என்று கூறவும், சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவளுக்காக யோசிக்கிறானா என்றுமே அவள் கணவன் அவளுக்காக சிறு விஷயத்தில் கூட யோசித்ததில்லை, ‘உனக்காக நான் ஏன் ?’ என்று தான் அவன் முதல் வார்த்தை வரும்.
அவள், ‘தனியாக இருக்கிறேன், சீக்கிரம் வாங்க’ என்று திருமணமான புதிதில் அழைத்தபோது கூட, ‘நான் எதுக்கு உனக்காக வரணும்” என்ற கேள்வி தான் அவனிடம் முதன்மையாக இருக்கும் .
அதற்குப்பின் அவன் வரும் நேரத்திற்கு வரட்டும் என்று விட்டுவிட்டாள், ‘உன்ன பார்க்க புடிக்காம தான் வெளிய சுத்திட்டு இருக்கேன், இதுல வேற கூப்பிட்டு இருக்க?” என்று ஒரு நாள் கடுப்புடன் கேட்டான்.
அதுவும் அல்லாமல் அணியும் உடைகள் முதற்கொண்டு ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பான்,
அவள் தன் சுயத்தையே மொத்தமாக இழந்து போயிருந்தாள், அவனிடத்தில் எப்போதும் கூனிக்குறுகி நிற்பதே அவள் வேலையாக இருந்தது, அந்த அளவிற்கு மட்டம் தட்டுவான்,
ஒருவேளை தான் அப்படித்தான் இருக்கிறோமோ என்று கூட அவளையே நினைக்க தூண்டும் அளவுக்கு, அவள் எப்பவுமே அடுத்தவர்களை மோட்டிவேட் செய்துதான் பழக்கம், ஆனால் இவன் அவளை எப்பொழுதுமே மட்டம் தட்டி மட்டம் தட்டியே எல்லா விடயத்திலும் சுயமாக ஒரு விஷயத்தை தேர்வு செய்வதை கூட அவள் மறந்து இருந்தாள்.
தனக்காக அவன் என்றுமே யோசித்ததில்லை, எல்லாரிடத்திலும் விட்டுக் கொடுத்து விடுவான், தரைக்குறைவாக பேச அனுமதித்திருக்கிறான்,
ஆனால் இவன், விஜய் தன் மானம் மரியாதைக்காக பார்க்கிறான் என்று நினைக்கும் போதே கண்களில் நீர் நிறைந்தது ,
“ஆனால் என்ன ஒப்பீடு இது ,இவனுக்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, அது ஒரு சாக்கடை” என்று நினைத்தவள்,
“ தேங்க்ஸ்” என்றாள் அவள் முகத்தில் வந்த உணர்வுகளையே பார்த்தபடி நின்று இருந்தான் விஜய்.
ஒருவாறு அவனால் அவளின் மனநிலையை யூகிக்க முடிந்திருந்தது,
“ இங்க பாரு, இனி நீ நீயா இருக்கணும், பழைய மாதிரி, புரிஞ்சுதா உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணு, நான் ஒரு போன் கால் பேசணும் பேசிட்டு வந்துடுறேன்” என்று சொன்னான்.
“ அது எது..? என்று தயங்கினால் அவள், “என்ன என்பதைப் போல் திரும்பி பார்த்தான் அவன்,
“என்னால உங்களுக்கு வீண் சிரமம், அதுவும் இல்லாம என்கிட்ட இப்போ காசு அவ்வளவா இல்ல” என்று அவள் தயக்கத்துடன் இழுக்க, கூர்ந்து அவளைப் பார்த்தான்.
என்ன சொன்னால் வழிக்கு வருவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்,
“ நோ வொரி ,இது எப்படியும் நீ இங்கதான வேலை செய்ய போற, உன்னுடைய சேலரில எடுத்துக்க சொல்றேன்” என்று சொன்னான்.
“ இல்ல அது..”
“ இப்போ உனக்கு டிரஸ் வாங்கனும், நாளைக்கு நாம முக்கியமான ஒரு இடத்துக்கு போறோம் என்று சொல்ல,?”
“எங்க போறோம்?” என்று அவள் மீண்டும் அடுத்த கேள்வி கேட்க, அவன் சட்டென்று திரும்பி பார்க்கவும்,
“ இல்ல தெரிஞ்சுக்க கூட கேட்க கூடாதா?” என்று சற்று மனத்தாங்களோடு கேட்டாள்
“போனா நாளைக்கு உனக்கே தெரிஞ்சிடும், மேபி உன் விடுதலை நாளா கூட இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல,
முதலில் அவளுக்கு புரியவில்லை, சட்டென அதிர்ச்சியில் கண்கள் விரிய ,அவனைத் தேட அவன் அங்கே இல்லை.
“சரி” என்று அவள் இரண்டு செட் சுடிதார் இரண்டு செட் புடவை என்று அவள் எடுத்துக் கொண்டு வைத்தாள்,
“என்ன எடுத்திட்டியா?” என்று அவன் கேட்டபடி அருகில் வரவும்,
“எடுத்துட்டேனே” என்று அவள் சொல்ல,
“ தட்ஸ் குட்” என்றவன், “பில் போட கொடுத்துட்டியா?” என்று கேட்கவும்,
“ இங்கதான் இருக்கு” என்று அங்கே அவள் எடுத்து வைத்திருந்த இரண்டு செட் புடவையையும், இரண்டு சுடிதாரையும் காட்ட, விட்டால் பார்வையாலேயே அவளை பஸ்பமாக்கும் அளவிற்கு ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன்,
“ வேக வேகமாக பத்து செட் சல்வார்,பத்து புடவை எடுக்கவும் ஐயோ எனக்கு இது..” என்று அவள் ஏதோ சொல்ல,
“ என்னதான் உன் பிரச்சனை?” என்று கேட்டபடியே, “இதை எடுங்க, அதை எடுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவள், “மனி..” என்று சொல்ல, “அதுதான் சொல்லிட்டேன்ல” என்று அவன் மீண்டும் கேட்க,
“ இல்ல இதெல்லாம் கொஞ்சம் காஸ்ட்லி” என்று சொல்ல,
அவன், “நல்ல பொருள் எப்பவுமே கொஞ்சம் விலை அதிகமா தான் இருக்கும்* என்று அவன் சொல்லிக்கொண்டு அவளை கைப்பற்றி இன்னொரு செக்ஷனிற்கு அழைத்துப் போனான்.
அது வந்து பெண்கள் உள்ளாடைகள் இருக்கும் பகுதி, அவள் தயக்கத்துடன் அவனை முறைத்து பார்க்க,
“ உள்ள போ இதையும் நான் வந்து செலக்ட் பண்ண முடியாது, டக்குனு போய் எடுத்துட்டு வா, நான் பில்லிங் செக்ஷன்ல கொடுத்துட்டு, கீழே வெயிட் பண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் நகர,
“அப்பா மழை பெய்ந்து ஓய்ந்தது போல் இருக்கிறது, என்ன இந்த வாங்கு வாங்குகிறார்” என்று அவள் நினைத்துக் கொண்டு செல்ல,
அவள் அறிந்திருக்க வழி இல்லை, ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் வருகிறான் என்றால், இதுதான் முதல் தடவை என்று, தன் தங்கையிடமே அவன் இந்த அளவிற்கு நெருங்கி பழகியது இல்லை என்பதை அவளுக்கு யார் சொல்வது?
பார்ப்போம் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்று.. அங்கேயும் தனக்கு தேவையானதை எல்லாம் எடுத்துக்கொண்டு அவள் பில்லிங் செக்ஷன் அருகில் வந்து நிற்க,
போதாதற்கு அவள் வீட்டில் அணிவதற்கு வேறு உடைகளை எடுத்து வைத்திருந்தான் அவன்,
“ என்ன மொத்த சம்பளமும் இதுக்கே போயிடும்போலயே?” அவள் உள்ளுக்குள் பதறினாள்.
அந்த ஹாஸ்டல் ரென்ட் கட்ட வேண்டுமே ,மாதம் மாதம் ஐயோ என்பது போல குழம்பியபடி நின்றாள்.
“என்ன மனசுக்குள்ள, என்னை புகழ்ந்து கொண்டு இருந்தது போதும், நான் பார்த்துக்கிறேன்”
“அது சரி மொத்த சாலரியும் இப்படியே போயிடும்” என்றாள் அவள் கோபமாக, சட்டென திரும்பி பார்த்தான்.
‘அப்படி வா வழிக்கு இப்பதான் உள்ளே இருக்கிற அந்த ராட்சசி வெளியே வரானு நினைக்கிறேன், வரட்டும் வரட்டும்’ என்று நினைத்தபடி,
“ அடடா அதான் சொல்றேன் இல்ல, வேணும்னா உனக்கு சம்பளத்தை உயர்த்தி தர சொல்றேன்..” என்று அவன் வேண்டுமென்று அழுத்தம் கொடுத்து சொல்லவும், அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் ஆத்மிகா.
“ஏற்கனவே அடிக்கிற வெயில்ல நீ வேற இப்படி முறைச்சேனா நான் கருகிட மாட்டேன், நான் ஏற்கனவே வெயில்ல காய்ந்த மாதிரி தான் இருக்கேன்” என்றதும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
இவன் இவ்வளவு பேசுவான் என்பதை அவள் இன்று தான் அறிந்தாள்.
எப்போதும் அவனைப் பார்த்து பயப்படுவாள் அவள், ஆனால் அவனுக்கே தன் இயல்பே இப்போது வெளியே வருவது போல் இருந்தது,
அவளை அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும் போல மனம் பரபரத்தது, அவள் உணர்வுகளை எல்லாம் பார்க்கும் பொழுது, ஆனால் என்ன செய்வது ,தன் மனைவி என்று ஆன பிறகும் விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை,
அவள் மனதில் இப்போது அவள் மாற்றான் மனைவி என்று தானே தோன்றும், ஐயோ என்று அது வேறு கஷ்டமாக இருந்தது,
எப்பொழுதடா நாளை வக்கீலை சென்று பார்ப்போம் என்று அவளை விட அவனுக்கு தான் அதிக ஆர்வம்.
அவன் இதையெல்லாம் மனதில் யோசித்துக் கொண்டிருக்க அவளோ அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவரை பார்த்தா காஞ்சி போன மாதிரியா இருக்கு, செம ஹேண்ட்சம்மா, மேன்லியா இருக்கிறார், ஜிம் பாடி வேற,ஏன் அந்த பொட்டிக்ல அந்த பொண்ணு சொல்லலையா?
சும்மா சொல்லக்கூடாது இவரே ஒரு மாடல் என்ன, ஹீரோ கூட ஆகலாம், ஒரு ஹீரோக்கு தேவையான அத்தனையும் இருக்கு, என்ன மார்க் போடலாம் இவருக்கு’ என்று யோசனையுடன் பார்த்தாள்.
“அடடா செமையா இருக்காரு ,அவருடைய ஹேர் ஸ்டைல் பாரு ,அப்படியே காத்துல அது அசையும் பொழுது, அது எப்படி அதுவும் சேர்ந்து.. கண்ல என்ன கவர்ச்சி, ஆளையே விழுங்குற பார்வை, (அவள் அறியாதது அது அவளை மட்டுமே விழுங்கும் பார்வை என்பது)
அப்படி சொல்ல முடியாது ஆனால் ஏதோ அந்த கண்ணுல இருக்கு, மூக்க பாரு அப்படியே கோபப்பட்டா மூக்குக்கு மேல கோவம் வருமா, சரிதான், அந்த தாடியும் மீசையும் செம்மையா இருக்காரு, அதும் அந்த லிப்ஸ்.. டீ டோட்டலரா இருப்பாரோ, எப்படி சிவப்பா இருக்கு.. அதுல ஒரு கிஸ்…!;’
அப்போதுதான், தன் நினைப்பை பார்த்து ஆத்மி என்ன யோசிச்சிட்டு இருக்க, அவரு உன் பிரண்டோட அண்ணன்” என்று மனசாட்சி கூறியதும்,
சட்டென கனவில் இருந்து விழித்தது போல, ஐயோ என்று விழித்தாள்.
ஏற்கனவே அவர்கள் வீட்டில் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், எங்கே அவனை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற பயம் வேறு, இதில் இப்படியெல்லாம் வேற நினைத்துக் கொண்டிருந்தாள்
“எப்பா, இவ்வளவு சீக்கிரம் இவர் பக்கத்துல இருந்து தூரமா போறோமோ, எனக்கு நல்லது”என்று அவள் நினைக்க,
“எவ்வளவு சீக்கிரம் இவளைக் கிட்ட கொண்டு வரணுமோ அவ்வளவும் எனக்கு நல்லது” என்று அவன் நினைத்தான், இருவரும் இருவேறு மனநிலையில் பார்ப்போம்.
ஆனால் அவனுக்கு ஏதுவாக விதி கூட அவளுக்கு எதிராக சதி செய்தது, நாளையே ஹாஸ்டலில் இருந்து அவனுடன் வீட்டிற்கு வந்தாள் ஆத்மிகா, எப்படி?
வருவான்.
