Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

அத்தியாயம் 6

 

ராஜமீரா‌, கருப்பும் இல்லாமல் கலரும் இல்லாமல் கலையான முகம் ஒடிந்த தேகம். சாக்லேட் நிற மெல்லிய உதடுகள். அந்த கீழ் உதட்டில்.. கடுகளவில் ஓர் கருத்த மச்சம். அவள் சிரிக்கும் போது மட்டுமே வெளியே தெரியும். ஆனால் அதற்கு அவள் சிரிக்க வேண்டுமே..!

 

இன்று‌ ஒரு பர்த்டே பார்ட்டி, அதற்கு தான் தன்னை‌ ஒப்புனை செய்துக் கொண்டிருந்தாள்.

ஒப்பனை என்றால் சிண்ட்ரெல்லா பார்ட்டி கவுன், இரண்டு மூன்று கோட்டிங் கன்ஸோலர் முகத்திற்கு பூசி.. ஐ லைனர், ஐ ஷேடோ லிப்ஸ்டிக் லிப் கிளாஸ் உடைக்கு தோதான அணிகலன்கள் என்றெல்லாம் கற்பனை செய்து விடாதீர்கள்..! 

 

உள்ளே கழுத்தை ஒட்டிய வெண்ணிற டி-ஷர்ட் அதன் மேலே கட்டம் போட்ட ஷர்ட், அதனை முழங்கை வரை மடித்து விட்டு இருந்தாள். தொல தொலப்பான பேக்கி பேண்ட் வலது கையில் கருப்பு நிற ஸ்ட்ரிப் வாட்ச், இடது கையில் மெல்லிய வெள்ளி ப்ரேஸ்லெட், காதில் மூன்று கல் வைத்த மெல்லிய வெள்ளி தோடு, விரலில் மெல்லிய வெள்ளி மோதிரம், தலையை உயர்த்தி ஒரு போனி டைல், அவ்வளவே அவ்வளவு தான்.

 

அப்பொழுது “மீரா இந்த பிளவுஸ் மட்டும் கொஞ்சம் சரியா இருக்கான்னு பாரேன்?” என்றபடி உள்ளே வந்தவர் மகளின் கோலத்தைக் கண்டு, 

 

“என்னடி இது கல்யாணமாக போற பொண்ணு மாதிரி லட்சணமா புடவை கட்டிட்டு இரு அட்லீஸ்ட் சுடிதாராவது போடுடி..! சொந்தக்காரங்க எல்லாம் வர்றதும் போறதுமா இருக்காங்க. நீ என்னடி சட்டை பேண்ட் போட்டுகிட்டு நிக்குற, ஏற்கனவே கண்டெண்டுக்கு அலையுறவங்க கிட்ட கொத்த அள்ளி நீயே குடுக்குறியே?” என்று அவர் முகத்தை சுழிக்க, 

 

“கல்யாணம்தானே??? பண்ணிக்கலாம்..! பண்ணிக்கலாம்..!” என்றபடி பெர்ஃப்யூமை எடுத்து தன் மீது மட்டுமல்லாமல் அருகே நின்ற அம்மாவின் மேலும் அடித்து விளையாண்டவள் “ஒரு பர்த்டே பார்ட்டி மா.. அதான் ரெடி ஆயிட்டு இருக்கேன்” என்றாள்.

 

“ஊர்ல யாராவது பர்த்டே பார்ட்டிக்கு இப்படி ரெடியாவாங்கலாடி? நீயும் உன் ட்ரஸூம்.. ஏன் டி இப்படி இருக்க?” என்று அவர் வருத்தமாக கேட்க..

 

“நான் என்ன பர்த்டே பார்ட்டில கலந்துக்கவா போறேன். அந்தப் பார்ட்டிய நாங்க தான் ஆர்கனைஸ் பண்றோம். அதுக்கு இது ஓகே..! போயிட்டு வந்துடறேன் யசோக்குட்டி. வந்து..” அவரையும் அவர் கையில் இருந்து அந்த ஆரி ஒர்க் செய்த பிளவுஸையும் பார்த்தவள் ஒருவித நக்கல் சிரிப்போடு “பொறுமையா பாத்துக்கலாம்” என்று கிளம்பி விட்டாள்.

 

“இவ பார்வையும் பேச்சும் சரி இல்லையே.. என்னங்க.. என்னங்க..” என்று வேகமாக யசோதா கணவனைத் தேட, அதற்குள் மீரா தன் வெண்ணிற ராயல் என்ஃபீல்டில் மெயின் கேட்டை தாண்டி சாலையில் புகுந்து பறந்து கொண்டிருந்தாள்.

 

இரவு சட்டென விழித்தான் கிருஷ். மெல்ல கொட்டாவி விட்டவன் சுற்றும் முற்றும் பார்க்க, அப்போதுதான் அவன் வீடு வந்ததே ஞாபகம் வந்தது. அவன் அருகே கண்ணன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

 

“இவேன் ஏன் என்‌ரூம்ல வந்து.. அதுவும் என் பக்கத்துல படுத்து இருக்கான்? அடேய்‌ கண்ணா.. எழுந்திரு..” என்று எழுப்ப, கல்யாண வேலை பார்த்து களைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கண்ணனோ எழவே இல்லை.

 

“எலே கண்ணா..” என்று எட்டி அவனை ஒரு உதை விட கட்டில் ஓரம் படுத்திருந்தவன் ஐயோ என்று‌ அலறி பிடிக்க பிடிமானம் இல்லாமல் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்தான்.

 

“நீயெல்லாம் அண்ணனா டா? ஒரே ஒரு நைட் உன்‌ பெட்டுல படுத்தத்துக்கு இப்படி எட்டி உதைக்குற‌.. நாளைக்கு அண்ணி நிலைமை கஷ்டம் தான்.!” என்று இடுப்பை நீவிக் கொண்டு எழுந்து அண்ணனை முறைத்தான் கண்ணன்.

 

“எவ்வளவு நேரம் தான் உன்ன எழுப்புறது பசிக்குது டா ஏதாவது சாப்பாடு இருந்தா சாப்பிடலாம் வாடா” என்று எழுப்பியவனை கண்டு அலறியவன்,

 

“இங்கே பாரு.. நீ காலேஜ் படிக்கும்போது தான் அந்த பாடு படுத்தினீங்க நீயும் அம்மாவும் சேர்ந்து என்னைய.. இப்பவும் அதே பண்ணுன கல்யாண மாப்பிள்ளைனு கூட பார்க்க மாட்டேன் டா..!” என்று குரலில் சற்று கடுமையை ஏற்றினான் கண்ணன்.

 

மௌனச் சிரிப்பில் கிருஷின் தோள்கள் குலுங்கியது கண்ணனை பார்த்து..!

 

கிருஷ்ணா காலேஜ் படித்துக் கொண்டிருந்த சமயம் அப்பொழுது கண்ணனும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். இருவரும் ஒரு அறையில் தான் உறங்குவார்கள். 

 

கிருஷ்ணாவுக்கு காலையில் எழுந்து படிக்கும்போது தூக்க கலக்கம் போக டீ குடித்தாக வேண்டும். அதனால் மூன்று மணிக்கு அலாரம் வைத்து எழுப்பவன் அன்னையும் எழுப்பி விடுவான். அவரும் சலிக்காமல் வந்து அவனுக்கு டீ போட்டுக் கொடுப்பார். ஆனால் அப்பொழுது அவனுக்கு மட்டும் கொடுக்காமல் அருகே உறங்கிக் கொண்டிருக்கும் ராகுல் கண்ணாவையும் எழுப்புவார். அவனா தூக்கு கலகத்தில் “என்னமா?” என்றால்,

 

“இது குடிச்சிட்டு தூங்குடா கண்ணா” என்பார் பாசமாக..! 

 

அவன் என்னவென்று தூக்க கலக்கத்தோடு அந்த டம்ளரை பார்த்தால் அதில் பாதி அளவே இருக்கும் டீ அவனை பார்த்து பல்லிளிக்கும்.

 

“இந்த டீக்காக தான் என்னை எழுப்பினீங்களா?” என்று அவனும் கொட்டாவி விட்டுக்கொண்டு கேட்பான். 

 

“ஆமா டா கண்ணா.. உன்னை விட்டுட்டு எப்படிடா உன் அண்ணனுக்கு மட்டும் கொடுக்கிறது?” என்று அவர் பாசமழை பொழிய, இவனோ தூக்கம் கெட்டுப்போன துக்கத்தில் அன்னையை முறைப்பான்.

 

அன்று மட்டும் அல்ல அதுக்கடுத்து எப்போது எல்லாம் கிருஷ்ணாவுக்கு டீ போடுகிறாரோ சங்கீதா அப்போதெல்லாம் ராகுல் கண்ணாவை எழுப்பி அந்த அரை டம்ளரை அவன் கையில் திணிக்காமல் இருக்கவே மாட்டார், அன்னை பாசமாம்..!

 

“இங்க பாருங்க மா.. அவனுக்கு தான் பரீட்சை நடக்குது. எனக்கு நடக்கல.. தயவுசெய்து என்னை எழுப்பி இந்த அரை டம்ளர் டீய குடிக்க சொல்லாதிங்க.. தூங்குறவன எதுக்குமா எழுப்பி டீயை குடிச்சு மறுபடியும் தூங்க சொல்ற? அப்புறம் எப்படிம்மா தூக்கம் வரும்? புரிஞ்சுக்கம்மா புரிஞ்சுக்க..!” என்று முதல் நாள் இரவே அத்தனை கெஞ்சலாக கோவமாக கத்தி சென்னாலும்,

 

மறுநாள் வழக்கம் போல கிருஷ்ணனுக்கு டீ கொடுக்கும் பொழுது அவனை எழுப்பி அந்த அரை டம்ளர் டீ அவனுக்கு கொடுத்தால் தான் சங்கீதாவுக்கு மனது ஆறும்..!!

 

அந்த அரை கிளாஸ் டீக்கு பயந்தவன் “ம்மா.. நான் இனி ஹாலிலேயே படுத்துகிறேன்” என்று.. அன்று ஓடியவன் தான் கிருஷ்ணாவின் அறையை விட்டு, கண்ணா.. இன்று தான் வீடெல்லாம் உறவினர்கள் இருக்க வேறு வழியின்றி அவன் அறையில் வந்த படுத்தான். 

 

‘இதோ இன்றும் பாதி தூக்கத்தில் எழுப்பி தூக்கத்துக்கு வைத்து விட்டானே ஆப்பு..!’ என்றபடி அண்ணனை பாசமாக பார்த்தான் கண்ணா.

 

“சரி சரி வா முறைக்காத” என்று இருவரும் மெல்ல இறங்கி கிச்சனுக்குள் போகவே முடியவில்லை. அத்தனை உறவினர்களும் ஹாலில் படுத்து உருண்டு பெரண்டு கொண்டிருந்தார்கள்.

 

“என்னடா இது?” என்று அவன் அதிர்ச்சியோடு கேட்க..

 

“அதெல்லாம் அப்படித்தான்.. கண்டுக்காம வா” என்று இருவரும் கிச்சனுக்கு செல்ல அங்கு அனைத்தும் சுத்தமாக கழுவி வைக்கப்பட்டிருந்தது.

 

“எனக்கு பசிக்குதுடா” என்று அண்ணன் பாவமாக கேட்டவுடன் “சரி வா வெளியே போய் சாப்பிட்டு வரலாம்” என்று மெதுவாக யாருக்கும் தெரியாமல் இருவரும் வெளியே கிளம்பிவிட்டனர். 

 

இருவரும் ரோடு கடையில் திருப்தியாக உண்டு‌ “என்ன இருந்தாலும் ரோடு சைடு டிபன்.. ரோட் சைடு டிபன் தான்..! நல்ல காரசாரமா சூப்பரா இருந்துச்சுடா” என்று பல நாள் பிரட் பர்கர் பாஸ்தா அவ்வப்போது தன் கையால் உணவு என்ற திண்றவனுக்கு இவ்வுணவு தேவாமிர்தமாக இருந்தது.

 

“கொடு டா நா வண்டி ஓட்டுறேன்” என்று பைக்கை கிருஷ் ஓட்ட பின்னால் கண்ணை அமர, இவன் யூடேர்ன் எடுக்க, அப்போது சட்டென்று எதிரில் வந்த வெண்ணிற ராயல் என்ஃபீல்டின் மேல் மோதி விட்டான்.

 

“ஹோய்.. அறிவில்ல?? இன்னா வூட்டாண்ட சொல்லிகிணு வந்திட்டியா?” என்ற பெண் குரலில் கிருஷ் ஜெர்க்கானான்.

 

ஹெல்மெட்டின் வழி தெரிந்த விழியை அவன் உத்துப் பார்க்க..

 

“என்னா நைனா சைட்டு அடிக்கிறியா? உட்டேன் உன் வூட்டாண்ட போய் விழுவ.. போ.. போ.. போய் வூடு சேரு. காலம் கெட்டு கிடக்கு எவனா வந்து அலேக்காக அள்ளினு போய்ர பூரானுங்க” என்றவள், வண்டியை வீலிங் எடுத்து செல்ல, 

 

ஆவென்று பார்த்தவன் தோளில் தட்டிய கண்ணா “வண்டியை எடு அண்ணா.. இங்கே இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் சகஜம்” என்றான்.

 

“எனக்கு என்ன மாதிரி பொண்ணு பார்த்து வச்சிருக்காரு இந்த தகப்பர்னு தெரியலையே? நாளைக்கு போய் பொண்ண பார்த்தே தீரணும்” என்று முடிவோடு வீட்டுக்கு திரும்பினான்.

 

ஆனால்… மறுநாள் காலை மீராவின் வீட்டுக்கு சென்றவனோ அவளை பார்த்தவுடன் "நீயா???" என்று அதிர்ந்து எழுந்து விட்டான். 

 

அவனின் கத்தலில் நிமிர்ந்து கிருஷ்ணாவை பார்த்தவளும் அதே அதிர்ச்சியோடு "நீங்களா??" என்று அதிர்ந்து கத்தி இருந்தாள்.

 

தொடரும்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top