Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

அத்தியாயம் 7

 

மகன் ஜெட் லாக்கில் தூங்கிக் கொண்டிருப்பான் என்று விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்த சங்கீதாவின் எண்ணத்தில் மண்ணை லாரியால் வாரி போட்டபடி, தயாராகி கீழே வந்து கொண்டிருந்தான் அவரின் தவப்புதல்வன் வேதாந்த் கிருஷ்ணா!!

 

தனது சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு கொண்டே வந்தவனின் மொத்த பார்வையும் சங்கீதாவையே கூர் கூராக குத்திக் கிழித்தது.

 

"ஐயையோ.. வரானே.. வரானே.. என்னையே உத்து உத்து பார்க்கிறானே.. பார்க்கிறானே! என்னை தனியா விட்டுட்டு அப்பாவும் பிள்ளையும் எங்கே டா போனிங்க?" என்று மனதினுள் புலம்பியப்படி கண்களை சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தார். 

 

அந்தோ பரிதாபம்! அவரின் விழிப் பரப்பளவில் கண்ணனையும் காணோம்! தீனதயாளனையும் காணோம்!

 

"இவன் வருவான்னு தெரிஞ்சிருந்தா நாம இன்னும் கொஞ்ச நேரம் சோக சீனை கண்டினியூ பண்ணி இருக்கலாமே.." என்று அவர் முழிக்க..

 

"மா… என்ன? என்ன முழிக்குறிங்க? எங்க அந்த கண்ணன்?" பற்களை கடித்துக் கொண்டு மெதுவாக கேட்டான் கிருஷ். ஆனால் உறவினர்களிடம் புன்னகையோடு தலையசைத்தான்.

 

அப்போது "ம்மா… வந்திட்டேன்..! ஸ்ப்பா என்ன கனம்.. என்னா கனம்” என்று‌ கண்ணன் குரலின் கேட்டது.

 

'ரைட்டு.. பிரியாணிக்கு தானாக வந்து தலையை கொடுக்குது ஆடு' என்று மனதில் சிரித்துக் கொண்டார் சங்கீதா.

 

"அம்மா… இந்தாங்க நீ கேட்ட ஸ்வீட்ஸ்" என்று பெரிய பெரிய பெட்டிகளை தூக்கிட்டு வந்தவன் கண் பார்வையில் கிருஷ் படவே இல்லை.

 

"அதை அந்தப் பக்கம் டேபிளில் வை கண்ணா" என்று குரலில் பிசிர் அடிக்க அவர் கூற..

 

"ஏன் உங்களுக்கு வாய்ஸ் இப்படி வைப்ரேட் ஆகுது!" என்றவன் அந்த டேபிளில் வைத்துவிட்டு திரும்ப, அங்கே தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்யை கண்டதும்.. 

 

அவருக்காவது வாய்ஸ் வைப்ரேட் தான் ஆனது. இவனுக்கோ டோட்டல் பாடியே வைப்ரேட் ஆனது.

 

சுட்டுவிரலை அவனை நோக்கி நீட்டி 'இங்கே வா' என்று அவனை கிருஷ் அழைக்க… இவன் அன்னையைப் பார்த்துக் கொண்டே "என்ன கிருஷ்?" என்று இயல்பாக கேட்டாலும், அவன் இயல்பாக இல்லை என்று கிருஷூக்கு தெரியும்.

 

தன் காரின் சாவியை அவனை நோக்கி தூக்கி எறிந்தவன் "வந்து வண்டியை எடு!" என்றதும்..

 

"எங்க கிருஷ்?" என்று கேட்டான்.

 

"எங்கன்னு சொன்னா தான் துரை வருவீகளோ? வாடா வந்து கார எடுடா!" என்று முன்னே வேகமாக கிருஷ் நடந்தான்.

 

அன்னையை திரும்பி பார்த்த கண்ணனோ "வசமா சிக்கிட்டேன் போலேயே.. வரும்போது எப்படி வருவேன்னு எனக்கு தெரியல. இப்ப எங்க கூட்டிட்டு போறானும் தெரியல! இவன் இங்க இருப்பான்னு தெரிஞ்சிருந்தா.. நான் ஒரு அரை மணி நேரம் லேட்டாவே வந்திருப்பேன்" என்று புலம்பிக் கொண்டே சென்றான்.

 

அவன் பின்னே செல்லும் சின்ன மகனை பெரிய மகனிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு "கிருஷ்ணா.. கண்ணா இன்னும் கால டிஃபன் சாப்பிடவே இல்ல டா" என்றார் பாவமாக.

 

அன்னையின் குரலில் வேக நடையோடு சென்றவன் அப்படியே நின்று ஸ்லோமோஷனில் அன்னையை பார்த்து "கல்யாண மாப்பிள்ள நானே சாப்பிடல.. இவனுக்கு மட்டும் என்ன சாப்பாடு? நீ தொண மாப்பிள்ளை தானடா வா வா.. வந்து பொறுமையா சாப்பிட்டுக்கலாம்" என்று அவனை கட்டி தூக்காத குறையாக அழைத்துக் கொண்டு சென்றான்.

 

"டேய் கிருஷ்ணா.. சொன்னா கேளு, கண்ணனுக்கு கல்யாண வேலை வேற இருக்குடா" என்று பின்னோடு சங்கீதா ஓட…

 

"நான் போற வேலை ஒழுங்கா முடிஞ்சா தான் கல்யாணம் நடக்குமா நடக்காதனு தெரியும். அப்புறமா கல்யாண வேலைய பார்த்துக்கலாம்! கண்ணா வண்டிய எடு டா" என்றான் கண்ணனை பார்த்து கிருஷ்.

 

"அப்படி எங்கடா போற கிருஷ்ணா?" என்று அழுவாத குறையாக கேட்டார் சங்கீதா.

 

"வேற எங்க? பொண்ண பாக்க தான்!" என்று கண் சிமிட்டியவனை கண்டு அதிர்ந்தார் சங்கீதா “ஆத்தி.. கெட்டுச்சு குடி”

 

"ஏன் பா.. பொண்ண போட்டோவுல பாத்துக்கலாம்ல" நயமாக பேசினார்.

 

"நோ வே.‌.! நேரா பார்த்து தான் முடிவு எடுப்பேன்" என்றவன் காரில் ஏறி பறந்து விட.. சங்கீதா பதட்டத்தோடு நின்றிருந்தார்.

 

"அண்ணி தம்பி எங்க போகுது?" என்று தீனதயாளனின் ஒன்றுவிட்ட தங்கை வந்து கேட்க..

 

"அதை ஏன் கேக்குற சுந்தரி.. பொண்ண நேருல பார்த்தே தீருவேனு கங்கணம் கட்டிட்டு கிளம்புறான்" என்றார் அவர்.

 

"என்னது இப்பவே கங்கணம் கட்டிட்டு கிளம்புறானா என்ன? நலுங்கே வைக்கலையே!" என்று சங்கீதாவின் பெரியம்மா இடைபுகுந்தார். 'இங்கே நான் தான் பெரியவள்! சடங்க என்ன மாத்தி மாத்தி செய்றீங்களா?' என்று கண்டிப்பு தொணி அதிலிருந்து..

 

"அட நீங்க வேற பெரியம்மா.. அந்த கங்கணம் இல்ல இது! பொண்ண முதல்ல பாத்துட்டு வந்து தான் மத்ததே அப்படின்னு பொண்ண பார்க்க போறேனு விடாப்படியா கிளம்பறான்! அதை தான் கங்கணம் கட்டிட்டு கிளம்புகிறானு பேச்சு வழக்குல சொன்னேன்" என்று பெரியம்மாவை சமாளிப்பதற்குள் தலை சுற்றியது சங்கீதாவிற்கு.

 

அப்பொழுது "அண்ணி அண்ணா உங்க கிட்ட பத்திரிகை கொடுத்து இருந்தாராமே.. அதுல ஒரு 50 பத்திரிகை வாங்கிட்டு உடனே கடைக்கு வர சொன்னாங்க" என்று வந்தார் தீனதயாளனின் பங்காளி ஒருவர்.

 

"தம்பி.. அப்படியே உங்க அண்ணன் கிட்ட கிருஷ்ணா பொண்ண பாக்கறதுக்காக சம்மந்தி வீட்டுக்கு போய்ட்டு இருக்கான்னு சொல்லிடுங்க! உங்களுக்கு புண்ணியமா போகும். நான் ஃபோன் பண்றேன் அவரு எடுக்கவே இல்லை.." என்றதும் "சரிங்க அண்ணி" என்றவர் பத்திரிக்கையை எடுத்து சென்று தீனதயாளிடம் கொடுத்து சங்கீதா சொன்னதையும்

கூறிவிட்டார்.

 

தீனதயாளனுக்கோ "இப்ப எதுக்கு இவன் அங்க போறான்?" என்று யோசனை, பிரச்சனை ஏதும் கிளப்பிடுவானோ என்று பயம் வேறு.

 

அந்த யோசனையோடு ராஜநாராயணனுக்கு ஃபோன் செய்து ‘மாப்பிள்ளை வருகிறான் பொண்ணை பார்க்க’ என்று வத்தி ச்ச.. எச்சரித்து விட்டார்.

 

அங்கோ ராஜா நாராயணனுக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top