தளிர் -13
அவனிடம் காதலை சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்த தென்றலுக்கோ முகத்தில் மருந்துக்கும் புன்னகை என்பதே கிடையாது . ஏதோ ஒரு அழுத்தம் குடிக்கொண்டது . ஏதோ தவறு செய்வது போல் மனம் உறுத்தத் தொடங்கியது . அதே நேரம் அவளின் கவனத்தை கலைத்தது போனின் அழைப்பு சத்தம் அதை எடுத்து காதுக்கு கொடுத்தவளோ அங்கு இருந்த ஒரு கடினக்குரல் கேட்க தொடங்கியது .
என்ன எல்லாம் நாம நினைச்ச மாதிரி போய்ட்டு இருக்கா என்று அந்த நபர் கேட்க .
தென்றலோ எல்லாம் நல்ல போய்ட்டு இருக்கு என்று பதில் கொடுக்க .
அந்த நபரோ சரி முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் எல்லாத்தையும் முடிக்கப் பாரு என்று அந்த போன் கால் கட் ஆகி விட . அந்த போனையே சில விநாடிகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தால் .
வீட்டின் உள் நுழைந்த அவளது பாட்டியோ தென்றல் என்று அழைக்க அவளோ திடுக்கிட்டு அவளது பாட்டியை பார்க்க.
அவரோ என்ன ஆச்சு ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு என்றபடி அவளின் அருகில் அமர , அவரையே சிறுது நேரம் பார்த்த தென்றலோ அவரின் மடியில் தலை வைத்து படுத்துக் கொள்ள.
அவரோ இதழில் சிறு புன் முறுவலுடன் அவளின் தலையை வருடி கொடுக்க .அவளோ சுவரையே வெறித்தபடி இருக்க .
அவரோ என்ன ஆச்சு தென்றல் என்க .
அவளோ இன்று நடந்ததை அவரிடம் கூற .
அவரோ இப்போ என்ன பண்ண போற என்று ஒரு தீவிரத்துடன் கேட்க .
அவளோ அவரின் முகத்தை பார்த்தபடி எதுக்கு வந்தேனோ அதை பண்ண போறேன் என்று அவரிடம் கூறியவளோ அப்படியே சிறிது நேரம் படுத்து இருந்தவள் , பின் எழுந்து தனது வேலைகளை பார்க்கத் தொடங்கினால் .
போகும் அவளையே ஒரு பார்வை பார்த்தபடி இருந்தவரோ ஒரு விஷயம் மட்டும் நியாபகம் வச்சுக்கோ தென்றல் இதனால பாதிக்கப்பட போறது நீயும் தான் என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட .
தென்றலோ அவரது பேச்சு காதில் விழுந்தாலும் அதை கேட்டும் கேட்காமல் தனது வேலைகளில் கவனமாக .
இரவு என்ற தோழன் புவியிடம் இருந்து விடை கொடுத்த , பகல் என்ற தோழன் புவியிடம் வந்து சேர்ந்தான் . இன்று நேரமாக எழுந்த தென்றலோ குளித்து முடித்து சுடிதார் அணிய நினைத்தவள் அதை கைவிட்டு அங்கிருந்த ஒரு இளம் ரோஜா நிற புடவையை எடுத்தவளோ ஆசையாக அதை வருடியபடி அணிந்து கொண்டவளோ அவளது பாட்டியிடம் சொல்லி விட்டு அவனது வீடு நோக்கி நடக்கத் தொடங்கினால் .
அதே நேரம் இங்கு பாண்டியனோ வீட்டின் மேல் மாடியில் இருந்த ஊஞ்சலில் ஆடியபடி இருந்தவனின் எண்ணங்களோ நேற்று தென்றல் சொன்ன விஷயத்திலேயே நிலைத்து நின்றது . யார் இவள் இவளுக்கு என்னைப்பற்றி என்னத் தெரியும் விரும்புகிறாளாம் என்று அவள் சொன்னதை நினைத்தவனின் இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை இழையோடியது . அதை எல்லாம் ஓரம் தள்ளி வைத்தவனோ தனது உடற்பயிற்சியை செய்யத் தொடங்கினான் . சிறிது நேரம் கடந்து இருக்கும் தன்னை யாரோ பார்ப்பது போலவே இருக்க . அதை உணர்ந்தவனோ பின்னால் திரும்பி பார்க்க அங்கு தென்றலோ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க .
அதை கண்டவனுக்கோ எரிச்சல் தான் வந்தது . தன் உடற்பயிற்சியை கைவிட்டு அங்கிருந்து ஒரு துண்டை எடுத்தவனோ அதில் தன்னை துடைத்துக் கொண்டு அவள் அருகில் வந்தவனோ ஏய் உனக்கு அறிவு இல்லை இப்படிதான் ஒருத்தரை வெறிக்க வெறிக்க பார்ப்பியா என்று அவளிடம் சிடு சிடு என்று பேச .
தென்றலோ நான் ஏன் மத்தவங்கள பார்க்கனும் நான் விரும்புற உங்களத்தான இப்படி பார்க்க முடியும் என்று அவனிடம் நெருங்கி நிற்க .
பாண்டியனோ ஏய் உனக்கு அவ்ளோதான் மரியாதை என்றவனோ உன்ன இங்க வரக்கூடாதுன்னு சொன்னேன் அப்புறம் எதுக்குடி வந்த என்று அவளிடம் சண்டைக்கு போக .
தென்றலோ இதழில் ஒரு புன்னகையுடன் நான் ஏன் வரக்கூடாது நான் வருவேன் , வர மட்டும் என்ன இங்க தங்க கூட செய்வேன் என்று அவனிடம் மேலும் நெருங்கி நிற்க .
அவனோ அவளிடம் இருந்து விலகி நின்றவனோ முதல்ல இங்கிருந்து வெளிய போ என்று அந்த இடமே அதிரும்படி கத்த .
தென்றலோ அவன் சத்தத்தில் காதை பொத்தியவளோ எதுக்கு இப்படி கத்துறீங்க நான் என் வேலையை பார்க்க வரேன் உங்களுக்கு என்ன வந்தது என அவளும் அவனிடம் சண்டைக்கு போக .
பாண்டியனோ நீ இங்க வேலைக்கு வர வேண்டாம் என்று அவன் அவளை அழுத்தமாக பார்க்க.
அவளோ நான் சம்பளம் வாங்கி இருக்கேன் அதனால நான் வேலைக்கு வந்துதான் ஆவேன் என்று அவள் கூற .
அவனோ ஓ அப்படியா மேடம் நீ உன் சம்பளத்தை நான் தானமா போட்டதா நினைச்சுக்கிறேன் நீ இங்க வராத என்க.
தென்றலோ ஏன் என்ன இப்ப இங்கிருந்து விரட்டுலதுலேயே குறியா இருக்கீங்க, ஓ உங்களுக்கு என்மேல காதல் வந்துடும் அப்படின்னு பயப்படுறீங்களா என்று ஒரு நமட்டு சிரிப்புடன் கேட்க .
அவனோ ஏய் யாருக்கு பயம் போடி உன்ன மாதிரி எத்தனை பேரை நான் பார்த்து இருப்பேன் வந்துட்டா பெரிய இவ மாதிரி , முதல்ல இங்கிருந்து கிளம்ப பாரு என்றுவிட்டு அவன் கீழே சென்று விட.
போகும் அவன் பின் வந்த தென்றலோ அவன் முதுகோடு உப்பு மூட்டை ஏறிக் கொள்ள .
பாண்டியனுக்கோ திடீரென அவள் பின்புறம் ஏறியவுடன் அவனோ சமாளிக்க முடியாமல் தடுமாறி அங்கிருந்த சுவரை பிடித்தவனோ . தன் கழுத்தோடு இருந்த அவளின் கையை பிரித்துவிட .
தென்றலோ அவன் முதுகை விட்டு இறங்கியவளோ அவன் தன்னை பிடிக்கும் முன் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அங்கிருந்து இறங்கி ஓடிவிட .
பாண்டியனுக்குதான் அவளின் இவ்வாறான நடவடிக்கையில் எரிச்சல் வர அவனோ ஏய் என்று அவளை பிடிக்க வர .
தென்றலோ கலகலவென சிரிப்புடன் படியில் இறங்கியவளோ வாசல் அருகே சென்று திரும்பி பாண்டியனை பார்த்து சாப்பாடு கொண்டு வந்து வச்சிருக்கேன் சாப்பிடுங்க என்று அங்கிருந்து சிட்டாய் பறந்து விட்டால் .
போகும் அவளையே விழி அகலாமல் பார்க்க. அவனது மனமோ என்ன பாண்டி எதுக்கு இப்போ அவள பார்க்கிற எல்லாம் பொய் ஏமாந்து போய்டாத என சாத்தன் வேதம் ஓதுவது போல் அவனது மனம் வேதம் ஓத .
மீண்டும் பாண்டியனின் மனமோ இறுகிப்போனது .
அதே நேரம் அங்கிருந்து வந்த தென்றலின் முகத்திலோ அப்படியே இருந்த புன்னகை வடிந்துவிட . கண்களில் ஒருவித அழுத்தம் , குடி கொண்டது . அங்கு வயலின் ஓரம் இருந்த சிறு விநாயகர் கோவிலில் அமர்ந்தவளோ அவரையே கண்களில் ஒரு வித ஏக்கத்துடன் பார்க்க.
அவரோ நீ என்ன பார்த்தாலும் நடப்பது நடந்தே தீரும் என்பது போல் இருந்தது அவரது பார்வை . தென்றலோ ஏன் இப்படி என் வாழ்க்கையில மட்டும் ,நான் என்ன பாவம் செஞ்சேன் என்று வாய்விட்டு கேட்க . சிறிது நேரம் அங்கு இருந்தவளோ அங்கிருந்து நடக்கத் தொடங்கினால் .
வீடு வந்த சேர்ந்த தென்றலை வரவேற்றதோ அவளின் பள்ளி நண்பனான முருகன் . அவனை கண்ட தென்றலோ ஏய் முருகா நீ எப்போ இங்க வந்த என்று புன்னகை முகமாக கேட்க .
முருகனோ இப்பதான் தென்றல் என்றவனோ அவளிடம் ஒரு ஸ்வீட் பாக்சை நீட்ட , அதை வாங்கியவளோ எதுக்கடா என்று கேட்க .
முருகனோ எனக்கு வேலை கிடைச்சு இருக்கு தென்றல் என்று சந்தோஷத்துடன் கூற . தென்றலோ வாழ்த்துக்கள் டா என்று அவனுக்கு கைகொடுக்க.
அவனும் தேங்ஸ் தென்றல் அதான் உன்ன பார்த்துட்டு போலாம் வந்தேன் என்று அவன் கூற .
தென்றலோ சரி முருகா எப்போ இங்கிருந்து கிளம்புற என்று கேட்க .
அவனோ அது நாளைக்கு தென்றல் என்றவனோ அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றான் .
அன்று மாலை அவனுக்காக உணவு எடுத்துக் கொண்டு அவனது வீட்டுக்கு செல்ல .
அவனது வீடோ பூட்டி இருக்க . அதை கண்டவளோ அவனது போனிற்கு அழைப்பு விடுக்க . அதுவோ எடுக்கப்படாமல் இருக்க . இப்படியே சிறிது நேரம் கடந்து இருக்கும் பாண்டியனது கார் வீட்டின் வாசலில் வந்து நிற்க .
தென்றலோ வாசலில் அமர்ந்து இருந்தவளோ அவன் காரை கண்டவுடன் புன்னகை முகத்துடன் அவனை பார்க்க.
அதே நேரம் பாண்டியனோ காரில் இருந்து இறங்கியபடி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த பக்கம் சென்றவனோ கார் கதவை திறந்து விட .
அதில் இருந்து ஒரு பெண் இறங்க . அதை கண்ட தென்றலுக்கோ அதிர்ச்சி . அவளோ பாண்டியனையே அழுத்தமாக பார்க்க .
பாண்டியனோ உன் பார்வை என்னை ஒன்றும் செய்யாது என்பது போல் அவளை கடந்து அப்பெண்ணுடன் வீட்டின் உள் நுழைய . தன்னை கடந்து போகும் பெண்ணின் கையை பிடித்த தென்றலோ அவளை அழுத்தமாக பார்த்தபடி வெளிய போ என்று அவளிடம் கூற .
அவளோ பாண்டியனை திரும்பி பார்க்க . பாண்டியனோ ஏய் நீ யாரு அவள போகச் சொல்ல , முதல்ல நீ எதுக்கு என் விஷயத்துல தலையிடுற என்று கோவத்துடன் அவளிடம் சீற .
தென்றலோ நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்கலாம் இப்ப இவ இங்க இருக்க கூடாது என்று அழுத்தமாக பாண்டியனிடம் கூற .
பாண்டியனோ அவளின் பேச்சை மதிக்காமல் வீட்டின் உள் செல்ல பார்க்க .
தென்றலோ சுற்றியும் பார்த்தவள் அங்கிருந்த பூச்சாடியை தூக்கியவளோ ஏய் நீ மட்டும் இப்ப வீட்டுக்குள்ள போன உன் தலையிலேயே இதை போட்டுருவேன் என்று அவள் கோவத்தில் கண்களை காளி போல் விரித்து அப்பெண்ணை பயமுறுத்த .
அப்பெண்ணோ பயத்தில் பாண்டியன் பக்கம் திரும்பியவளோ சார் முதல்ல இதை பாருங்க சார் நான் இதுக்கு வரல என்று பயத்தில் அங்கிருந்து ஓடிவிட .
பாண்டியனோ ஏய் ஏய் என்று போகும் பெண்ணை அழைத்தவனோ, அதே கடுப்புடன் தென்றலின் பக்கம் திரும்பியவனோ ஓங்கி அவளின் கன்னத்தில் கொடுத்தவனோ இதுக்கு மேல இங்க வந்து உன்ன கொன்னு புதைச்சுடுவேன் என்று கடுப்புடன் வீட்டின் உள் நுழைந்து கதவை அடித்து சாத்திக் கொள்ள .
தென்றலுக்கோ அவன் அடித்ததில் கண்கள் கலங்கிவிட . கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அங்கிருந்து அகன்றால் .
தொடரும் ...
Review please and follow பண்ணிட்டு படிங்க , அப்போதான் அடுத்த ud சீக்கிரம் கிடைக்கும் .
எனது மற்ற கதைகள்
அரசனோ என் அரக்கனோ .
மாறனின் மலரிவள் .
