உயிரே 19

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

19

 

வாழ பழகிக் கொண்டாள் அந்த வீட்டில் அஸ்திரா!! இது தான் நிரந்தரம் என்று தெரிந்து விட்டது. இனி முரண்டு பிடித்து பின்பு போட்டி போட்டு அவனிடம் அல்லோலப்படுவதை விட.. பொறுத்திருந்து நேரம் பார்த்து திருப்பி அடிப்போம் என்று மனதில் குறித்து வைத்தாள் வீராவை. கணவனாய் இல்லை தன் வாழ்க்கையை திசை திருப்பிய வஞ்சகனாய். இப்படியாக மேலும் ஒரு மாதம் ஓடி மறைந்தது!!

 

ஆனால் சஞ்சயனோடு அவள் வாழ்ந்த அந்த ஒருமாத காலம் சந்தோஷமாக.. பிண்ணி பிணைந்த.. ஆத்மார்த்த தம்பதியராய் வாழ்ந்தார்கள் என்றால்.. அதுவும் கிடையாது!! 

அவனை ஆசைப்பட்டு, மனதில் பெரும் காதல் கொண்டு, மணந்தால் என்றால் அதுவும் கிடையாது!!

அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளை என்பதால் அவனை மறுப்பேதும் சொல்லாமல் மணந்து கொண்டாள் என்றால் அதுவும் கிடையாது!!

 

பின்பு எப்படித்தான் மணையாள் ஆனால் அந்த மறைந்து போனவனுக்கு?? விசித்திரமான விஷயம் அவள் கல்யாணம் பற்றி அவளுக்கே தெரியாது என்பது தான்!! ஆனால்.. சஞ்சயன் கேட்டதும் மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள். அப்பொழுது வெறுப்பான விருப்பாய் உள்ளே வீரா இருந்தது தெரியாமல்!! ஏன் இப்பொழுது வரையுமே அவளுக்கு தெரியாது, அவள் மனம் விரும்பியது வீராவை தான் என்று!! அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் அப்போதும் இல்லை.. இப்போதும் இல்லை இந்த வீராப்பு கொண்ட வீரலெட்சுமிக்கு!!

 

விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு நூல் இழை தான் இடைவெளி!! தான் என்ற அகந்தையை விட்டொழித்து அந்த நூல் இழையை கடந்தால் வெறுப்பு எல்லாம் மறைந்து விருப்பமான வாழ்வு நம் கை வசத்தில்!! ஆனால் அந்தக் வசத்தை எத்தனை பேர் கைப்பற்றி இருக்கிறார்கள்?? ஒரு சிலரே!! வீராவை போல… 

 

இப்போதும் வீரா வீட்டுக்கு அதிக விருந்தாளிகள் வரவில்லையா? என்று கேட்டால் ஆமாம் என்று தான் சொல்லவேண்டும். பெரிய வீடு பெரிய கை என்பதால் ஆட்கள் வருவதும் போவதுமாய் தான் இருப்பார்கள். அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் கை வடிவாம்பாளோடது!! முடியாது என்று எவரையும் மறுக்க முடியாது!! அதனால் அதை மருமகளுக்கு கொஞ்சம் கொஞ்சம் பயிற்றுவித்து கொண்டிருந்தார். அஸ்திராவுக்கு இந்த பழக்கவழக்கங்கள் பிடித்ததோ இல்லையோ வடிவாம்பாளை பிடித்தது. அவரது அருகாமையை பிடித்தது. அதைவிட வீராவின் அருகாமையை தவிர்ப்பதற்காகவே அவருடன் சுற்றிக் கொண்டிருப்பது பிடித்தது!!

 

இவளின் சின்னப் பிள்ளைத்தனமான ஆட்டத்தை புரியாதவனா வீரா? ஒரு சிறு உதட்டு சுழிப்பும் ஏறி இறங்கிய புருவமுமே அவன் கண்டுகொண்டான் என்பதை அவளுக்கு எடுத்துரைக்க.. ஆனால் எதுவும் அவளிடம் கேட்டுக் கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.

 

சஞ்சயனின் கொலைக் கேஸ் அவனல நெருக்கிக்கொண்டிருந்தது.

என்னதான் அவன் கொலை செய்யவில்லை என்று அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் ஏன் ஊரில் உள்ளவர்களுக்குமே தெரிந்தாலும்..‌ இவனை கரம் வைத்து கருவறுக்க இருந்தவர்களும்.. இவனுக்காக கன்னம் வைத்து காத்திருந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்து அவதூறை பரப்பிக் கொண்டு இருந்தனர்.

 

'அஸ்திராவை திருமணம் செய்ய வேண்டும் என்பதால்தான் சஞ்சயனை கொன்றான்!' என்றனர்...

 

'பல நாட்களாக அவர்கள் குடும்பத்தோடு இவர்கள் குடும்பத்திற்கு இருந்த பகையை தீர்த்துக் கொள்ள சஞ்சயனை கொன்றுவிட்டான்‌!' என்றனர்…

 

'கௌரவ கொலை!' என்றனர்..

 

இன்னும் சிலர் 'அஸ்திராவுக்கும் வீராவுக்கும் கல்யாணத்திற்கு பிறகு கள்ளத்தொடர்பு!! இடைஞ்சலாக இருந்த சஞ்சயனை கொன்று விட்டான்!' என்றனர்..

 

நரம்பில்லா நாக்கு.. அது இஷ்டப்படி வளைந்து குழைந்து கொடுக்காய் பேசி விஷத்தை கொட்டியது. இதில் பாதி அவர்களாக பேசினார்கள் என்றால்.. மீதியை அம்பலவாணன் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் பரப்பிவிட்டார்கள். அதில் அவர்களே எதிர்பாராதது வீராவுக்கும் தீராவுக்கும் கள்ள தொடர்பு என்று!!

 

வீராவை பழிவாங்க என்று அவர்கள் ஆரம்பித்தது. ஆனால்... 

"கள்ள தொடர்பு.." "புருஷனுக்கு தெரியாமல் வீராவை வைச்சிருந்தா…" "ஒழுக்கம் கெட்டவ.." "என்ன பொட்ட புள்ளைய வளத்து வச்சிருக்கான் அம்பலவாணன்.." என்று சேற்றை அவர்கள் மீதே வாரி இறைக்க… தன் மீது தெறித்தவற்றை எதை கொண்டு கழுவது என்று புரியாமல் விழித்தார் அம்பலவாணன்.

 

அன்று கண்ணபிரான் அம்பலவாணனை பார்க்க வந்திருந்தான். ஏற்கனவே தன் மீது விழுந்த பழி ஒரு‌பக்கம்.. தன் சொந்த தங்கை மகன் இறந்த துக்கம் ஒரு பக்கம்.. தன்‌ மகளுக்கு தன் விருப்பப்படி எதுவும் செய்ய முடியாத தன் நிலை பற்றி விரக்தி ஒரு பக்கம்.. இதுக்கு எல்லாம் காரணமான வீராவை ஒன்றும் செய்ய இயலா கோபம் ஒரு பக்கம்.. என்று எல்லா பக்கமும் திகு திகு என்றே தீயாய் கொதிக்க.. வந்து மாட்டினான் கண்ணபிரான். வைச்சு வாங்கி விட்டார் அம்பலவாணன்.

 

"யோவ்வ்… உன்னைய எதுக்கு அத்தன செலவு பண்ணி இங்கன கூட்டியாந்தேன்.. அவனை இந்த ஊரு முன்ன தலக்குனிய வைச்சு.. கைது பண்ணி.. தரதரத்துனு இழுத்துட்டு போவேனு பார்த்தா… 

என்னமோ மாமனாரு வூட்டுக்கு விருந்துக்கு வந்த மருமவன் கண்க்கா உட்கார்ந்தே இருக்க.. எத்தன லட்சம் தெரியுமா? உன்னைய இங்கன ட்ரான்ஸ்பர் பண்ண செலவு அழிச்சிருக்கேன் நானு.. ஒழுங்கு மரியாத அவனை தூக்குற வழிய பாரு.. இல்ல.. அவனுக்கு வெட்டி வச்சிருக்க குழிக்கு உன்னைய அனுப்பி சாந்தி பண்ணி மூடிடுவேன். ஜாக்கிரத!!" என்று கர்ஜித்தார் அம்பலவாணன்.

 

"ஐயா நான் ஒன்னும் சும்மா இல்லீங்க.‌ அவன் வூட்டுக்கே போய் மிரட்டிட்டுதேன் வந்தேன். ஆனா.. பாருங்க.. அவனுக்கு எதிராக வாய் வார்த்தையாக வதந்தி தானுக இருக்கு. ஸ்டார்ங்கான சாட்சி ஒன்னும் இல்லீங்க.." என்றவனை பார்த்த அம்பலவாணன்.. "அதுக்கு தாம்பல உன்னைய இங்கன செலவுழிச்சு கூட்டியாந்தது. நீயி இப்புடி வியாக்கனம் பேசாம.. சாட்சிய நீயே உருவாக்கு. நம்ம பயலுக உன்னைய மாதிரி இல்ல.. எள்ளுன்னா எண்ணெயா வந்து நிப்பானுக.. அவனுகள கூட்டிக்கோ பொய் சாட்சி சொல்ல.. இதெல்லாம் நான் சொல்ல வேண்டியதா இருக்கு. என்னத்தோ படிச்சு.. இத்தன வருசம் என்னத்த வேல பார்த்தியோ??" என்று ஏளனமாக பேசி சிரிக்க.. ஒன்றும் எதிர்த்து கூற‌ முடியாமல் தலை குனிந்து நின்றான் கண்ணபிரான்.

 

"வாங்கி தின்னும் போது இனிச்சுசா.. பேசினா கசக்குதோ!!" என்று அம்பலவாணனின் அல்லக்கை ஜால்ரா அடிக்க.. அவமானத்திலும் கோபத்தாலும் முகம் செவ செவென சிவக்க அங்கிருந்து விரைந்து சென்றான் கண்ணபிரான். பேசியவர்கள் மீது ஆத்திரமும்.. அதற்கெல்லாம் காரணமான வீரா மீது கொலைவெறியே வந்தது.

 

"ஐயா.. அந்த போலீஸ்காரன் கோவமாக போறானுக!!" என்று ஒரு அல்லக்கை அம்பலவாணனிடம் கூற..

 

"எலும்ப தூக்கி போட்டா நாயு மாதிரி கவ்வி திங்குற எச்சிக்கல நாயு அவேன்.. என்னைய அவேன் கோவம் என்ன பண்ணிப்புடும். வேலைக்கு ஆவலனா.. அவனை தூக்கிட்டு வேறொருத்தன கூட்டியாந்திடுவேன். நான் அம்பலவாணன்!!" என்று மீசையை நீவி கொண்டார்.

 

கோபத்தோடு சென்ற கண்ணபிரான் அடுத்து வீராவை கட்டம் கட்ட எதிர்பார்த்திருத்தான். காய்களை நகர்த்தி வைத்து..

 

அஸ்திரா தன் வீட்டில் இருப்பதைப் போல வெகு இயல்பாக இருந்தாள் வீராவின் வீட்டில். அங்குமிங்கும் நடமாடினாள். வடிவு சொல்லும் வேலைகளை செய்தாள். அதாவது வேலையாட்களை வேலை வாங்கும் வேலையை!!

 

அன்றும் ஏதோ மிக மும்மரமாக சமையலறையில் உருட்டிக் கொண்டிருந்தாள். மதியம் உணவு முடித்து வேலையாட்கள் கூட ஓய்வு எடுக்க சென்று விட.. இவளோ அவர்கள் அறைக்கு போக பயந்து தான் சுற்றிக் கொண்டிருந்தாள். 

சாப்பிடும் போதே வீரா‌ பார்த்த பார்வையே புரிந்து போனது அவளுக்கு. இரவுமே அவன் வரும் முன் தூங்குவதும் மதிய வேளையில் இப்படி ஏதாவது வேலை செய்துக் கொண்டு அவனை தவிர்த்திடாமல் தவிர்த்தவளை… கண்டுக் கொண்டவன் அவளை தேடி வந்துவிட்டான்.

 

சமையலறை வாசலில் தோளை சாய்த்து கைகளை கட்டிக் கொண்டு அவளை தான் பார்த்திருந்தான் வெற்று உடம்போடு!!

 

அவளோ பொருட்களை கலைப்பதும் அடுக்குவதுமாக இருந்தாள். அவளின் முந்தானை சற்று ஒதுங்கியிருக்க.. அவளது ஜாக்கெட்டுக்குள் சிறை பட்டிருக்கும் முமுமதிகள் முந்தானை மறைவில் பிறை நிலவாய் தெரிவது கவர்ச்சியாய்!! அதற்கு கீழே இடுப்பில் இறுக்கிக் கட்டிய புடவையும்.. மெலிந்த நிலையில் இருக்கும் சரிவான குழைவான இடுப்பும் அவன் பார்வையில் கள்ளத் தனத்தைக் கொடுத்து திருட்டுத்தனமாக பார்த்து ரசிக்க வைத்து.. ருசிக்க தூண்டியது.

 

அவன் தன் அங்கச் செழுமைகளை பார்க்கிறான் என்பதை அறியாதவள் இன்னும் எக்கி எக்கி வேலை செய்ய.. அவனின் விடாத கள்ளப் பார்வையில் அவள் முதுகுத் தண்டில் குறுகுறு உணர்வு!! அவ்வுணர்வு அவள் உடலில் ஊறி.. நரம்புகளில் படர்ந்து‌‌.. அவளது பெண்மை புதிதாய் மலர்வதைப் போலி உணர்வை ஏற்படுத்தியது!!

 

மெல்ல முகத்தை மட்டும் திருப்பி அவனை பார்க்க.. ஆழ்ந்து அவளை பார்த்தவன், பார்வையிலேயே அவனின் தாகத்தை.. தாபத்தை அவளுக்கு கடத்தினான். அவனின் பார்வை பார்த்தவளுக்கு பயத்தில் நா வரள.. எச்சில் சுரக்க.. அவசரமாக விழுங்கிக் கொண்டவள், சட்டென்று திரும்பி கொண்டாள். 

 

அவனும் பார்வையை விலகாமல் கொத்தும் பார்வையோடு அவளை அங்கங்கமாக பார்த்துக் கொண்டிருந்தான். 

கழுத்தை தாண்டி..

மென்மைகளை விழுங்கி..

 மெல்லிய மடிப்பு விழுந்த மெலிந்த இடுப்பையும்..

 கொஞ்சமாய் எட்டிப் பார்க்க முயன்று வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டிருக்கும் குட்டி தடாகத்தையும்..

 இடுப்பு மடிப்பில் சொருகியிருக்கும் புடவையும்.. அதனிடையில் தெரியும் கொலுசுகளோடு கூடிய அவளின் கெண்டைக்கால் திரட்சியையும் உற்றுப் பார்த்து ரசிக்க.. ரசிக்க அவனின் ஆண்மை அவளை சுகிக்க பிரவாகம் எடுக்க..

 

"என்ன பெண்டாட்டி.. ஒளிஞ்சு ஒளிச்சு விளையாடுறியா? நானா நெனைக்கிற வரைக்கும் தேன் உன் கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம்.. புரியுதோ?" என்றவன் இப்போது அவளுக்கு வெகு நெருக்கமாய்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top