உயிரே 39

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

39

"என்னாச்சு மாமா.. என்னாச்சு?" என்று பதறியவள் திரும்பி பார்க்க.. அங்கே ரத்தம் தோய்ந்த கத்தியோடு நின்றிருந்தார் அம்பலவாணன்.

 

அம்பலவாணன் கையிலிருந்த கத்தியையும் வீராவையும் மாறி மாறி பார்த்தவள் சற்று அவன் பின்னே பார்க்க.. அவன் முதுகுக்கு கீழே இடுப்பில் கத்தியால் குத்தியிருந்தார் அம்பலவாணன்.

 

அதிர்ச்சியில் கண்கள் விரிய வாயைப் பொத்திக் கொண்டு "மாமாஆஆஆ…" என்று கத்தியவள் அவனை அணைக்க ஒரு அடி எடுத்து வைக்க, அடுத்த நிமிடமே அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தார் அம்பலவாணன்.

"எங்குடும்ப மானத்த கெடுக்க வந்த காலகோடாறி.. நாயே.." என்று!!

அதில் நிலை தடுமாறி நிற்க முடியாமல் விழுந்தவளை அங்கிருந்த கல் ஒன்று நெற்றியில் பதம் பார்க்க.. ஏற்கனவே மசக்கை.. அதோடு சேர்ந்த அதிர்ச்சி.. வழியும் ரத்தம் என்று எல்லாம் ஒன்று சேர மயங்கி சரிந்தாள் மாது.

 

"த்தீரா… தீரா.." என்று அவன் கத்தி கொண்டு தன்னவளிடம் செல்ல முற்பட..‌ அவனது பின்பக்கம் இருந்து

அம்பலவாணனின் ஆட்கள் அவனை உதைத்து தள்ள.. உருண்டு விழுந்தான் அஸ்திராவின் எதிர் பக்கத்தில் வீரா.

 

"தீரா.. தீரா…" என்ற தீன அழைப்போடு இரத்தம் சொட்ட சொட்ட கிடந்தவனை அவனது ஆட்கள் பந்தாட.. முதலில் சோர்வாலும்.. தீடீர் தாக்குதலாலும்.. அதீத இரத்த போக்காலும்.. தளர்வடைந்து அவர்களிடம் அடி வாங்கியவன், ஒரு கட்டத்தில் தன் சட்டையை கழற்றி ரத்தம் வருவதை தடுப்பது போல இறுக்கு இடுப்பில் கட்டிக்கொண்டு.. அங்கே எல்லைச்சாமிக்கு ஆங்காங்கே வேண்டுதலுக்காக வைத்திருக்கும் அருவாள் ஒன்றை எடுத்தவன், அவர்களை சரமாரியாக கண்முன் தெரியாமல் வெட்ட.. சற்று அதிர்ந்து அவனை நெருங்க பயந்து பின் வாங்கியது அந்தக் கூட்டம். 

 

ஆலமர விழுதை பிடித்துக்கொண்டு மெல்ல அம்மரத்தில் சாய்ந்து அமர்ந்தவன், அங்கே கிடந்த தனது போனை எடுத்து அப்போது தர்மாவுக்கு போன் செய்தான். அவன் போன் செய்யும் நேரத்தில் வீராவை நெருங்கியவர்களை தன் கையில் இருந்த வீச்சருவாளால் சரமாரியாக வெட்ட.. மீண்டும் அவனை நெருங்க பயந்து தள்ளி நின்றது முதுகில் குத்தும் அந்த வீணர்கள் கூட்டம்.

 

"என்னங்கய்யா.. அவன நெருங்கவே முடியலையே!!" என்று அம்பலவாணனின் ஆட்கள் அவரிடம் கேட்க..

 

"அட.. விடுங்க டே.. இன்னும் கொஞ்ச நேரத்துல ரத்தப்போக்கு அதிகமாகி அவனே செத்துடுவியான். பத்தாததுக்கு ஏற்கனவே வந்த கூட்டம் அவன சரமாரியாக அடிச்சிருக்கு போல.. தலையில் இருந்து ரத்தம் சொட்டது. இன்னும் கொஞ்ச நேரத்துல.. அவன் தங்கச்சி புருஷன் அதாவது தர்மா வந்துருவியான். அவேன் வரும் நேரம் இவனை திரும்பவும் ரெண்டு குத்து குத்தினால் ஒரேதிரியா போயிடுவியான் மேல.. தூக்கி போட்டுவிட்டு நாம போயிடலாம்!!" என்ளு என்று திட்டம் வகுத்தார்.

 

 

"ஐயா.. தர்மா தேன் கொலை செய்தானு சொன்னாக்கா.. ஆரும் நம்ப மாட்டாகளே??" என்று ஒருவன் கூற..

 

"நாம நம்ம வைப்போம் டே.. கூடவே நம்ம கண்ணபிராண வர சொல்லி இருக்கேன். ஸ்பாட்டிலேயே கைது பண்ணா.. சாட்சியே தேவையில்லை. உள்ளேயே சோலிய முடிச்சிடலாம். இல்ல வாய்தா வாய்தா வாய்தா வாங்கியே அவேனையும் உள்ளேயே வைச்சிடலாம். இரண்டு பயல்களும் இல்லாமல் இந்த ஊரை நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரலாம்" என்று ஏக திட்டங்கள் அனேக வருங்கால கனவுகள் என்று திளைத்திருந்த அம்பலவாணன் நினைக்கவில்லை வீரா மற்றும் தர்மாவின் நட்பை!!

 

பைக்கில் வந்து கொண்டிருந்த தர்மா சட்டென்று நின்றான். காதலில் மட்டுமல்ல நட்பில் கூட உள்ளுணர்வு பேசும். ஏனோ இப்போது தனியாக அங்கே செல்வது அவ்வளவு நல்லது இல்லை என்று அவள் உள்மனம் கூற சட்டென்று ஜெகனுக்கு போன் செய்ய இரு ஊர்களுக்கும் நடுவில் அக்கோவில் இருப்பதால் ஜெகனும் வருவதாகக் கூற, கூட ஆட்களை கூட்டி வா என்று கூறினான். அவனும் சரி என்று அங்கு வந்து விடுவதாக கூறி போனை வைத்தான்.

 

இவனும் தங்கள் இளைஞரணி படைக்கு ஒரு‌ வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப.. அவர்களும் "என்னாச்சு ணே?? வீரா அண்ணாவுக்கு என்னாச்சு?" என்று பதறிக்கொண்டு அவனது விழுதுகளும் சற்று நேரத்தில் வடபத்திர காளியம்மன் கோயிலில் நோக்கி வந்தனர். கூடவே தர்மாவுடன் சில பேர் சேர்ந்து கொண்டனர்.

 

தர்மாவை மட்டும் எதிர்பார்த்து அங்கே அம்பலவாணன் கத்தியோடு காத்துக்கொண்டிருக்க.. ஆனால் அவன் வந்ததோ பெரும்படையோடு!!

அதுவும் இளைஞர்கள் படை!! போதாததற்கு தன் அண்ணன் வாரிசான ஜெகநாதனை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை இவர்.

 

நிறைய வண்டிகள் சத்தமும் ஆட்களின் சத்தமும் கேட்க "என்னங்கய்யா.. அவேன் மட்டுந்தேன்ன் வருவியான்னு சொன்னீக.. ஒரு கூட்டமே இல்ல வருது. நாம இங்கிருந்து நழுவ விடுவது தேன் நல்லது" என்று ஆடியாட்கள் ஆரூடம் கூற..

 

"அதெல்லாம் முடியாது டே.. இவனை கொன்னுட்டு தான் நாம போனும். எத்தனை நாள் திட்டம் தெரியுமா இது? எத்தனை வருஷமா இவனுக்கு நான் கட்டி கட்டம் திட்டம் வைச்சு தூக்க காத்திருந்தேன் தெரியுமா? இன்னைக்கு எல்லாம் ஒருசேர வந்திருக்கு.. இவன விட்டுவிடப் போவதில்லை. நீங்க வேணா ஓடுங்கடா தொடநடுங்கி பயலுகளா.. இவனைக் கொன்னுட்டுதேன் வருவேன்" என்று ஆத்திரத்தில் அறிவிழந்து தன் கையிலிருந்த கத்தியால் மீண்டும் வீராவை குத்த அம்பலவாணன் ஓட..

 

அதற்குள் ஜெகநாதன் தர்மா மற்றும் அந்த இளைஞர் அணி இளைஞர்கள் அனைவரும் அவ்விடத்தை தங்கள் போனில் உள்ள டார்ச் உதவியோடு வந்து சேர.. அம்பலவாணன் வீராவை குத்து நெருங்க.. வீரா தன் கையிலிருந்த அரிவாளை அவரை நோக்கி வீச.. கத்தியோடு அவரது வலது கை மணிக்கட்டை வெட்டி சென்றது அவ்வீச்சருவாள்.

 

இதை எதிர்பார்க்காத அம்பலவாணன் வலதுகை முட்டியோடு பறந்து போனதை பார்த்து ஸ்தம்பித்து.. அதன்பின் வலியில் துடித்து.. ஆறாக ஓடும் இரத்தத்தைக் கண்டு பயந்து.. அதை விட தன்னை நோக்கி வரும் அந்த இளைஞர் படைகளைக் கண்டு உயிர் தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று ஓட அவனை வளைத்துப் பிடித்தார்கள் அவர்கள்.

 

அதே நேரத்தில் தர்மாவை கைது செய்வதற்காக ஏற்கனவே செய்த திட்டத்தோடு அங்கு வந்து சேர்ந்த கண்ணபிரான் இவ்விளைஞர்கள் கூட்டத்தை எதிர்ப்பார்க்கவில்லை. கூடவே அவர்களின் கேள்வி கணைகளில் தட்டுஸதடுமாறினான். ஏற்கனவே அவர்களிடம் படாத பாடுபட்டவன் அல்லவா?

 

இம்முறை சரியாக அம்பலவாணனை கைது செய்து கூடவே ஆம்புலன்ஸை வரச் செய்து மூவரையும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.

 

"த்தீ..தீரா.. தீரா… ஏலேய் தர்மா.. அவள பாருடா.. குழந்தைக்கு என்னாச்சு தெரியல டா?" என்று பயத்தில் வீரா பேச.. அது அப்பட்டமாக அம்பலவாணன் காதில் விழ..

 

"என்னது குழந்தையா? யேன் மக முழுகாம இருக்காளா? அதுவும் இவனோட குழந்தையா?" அதை ஒன்றும் செய்ய முடியாமல் போனதை நினைத்து தான் அவர் வருந்தினார். இம்மாதிரி ஜென்மங்கள் எல்லாம் என்றும் திருந்தாதவை.. திருத்த முடியாதவை!!

 

அம்பலவாணனுக்கும் வீராவுக்கும் உடனடியாக அறுவை சிகிச்சை நடக்க.. தலையில் லேசான காயத்தோடு கண்விழித்தாள் அஸ்திரா.

 

அருகில் பார்க்க அங்கே செவிலியரோடு மருத்துவர் இருக்க.. "மாமா.. மாமா எங்க?" என்று கேட்டாள்.

 

"அவருக்கு சிகிச்சை நடக்குதும்மா?" என்று கேட்டவள் தன் பிள்ளை பற்றி கூட ஞாபகம் இல்லை. "இல்ல.. நானு.. அவர பார்க்கணும்.. அவர பார்க்கணும்" என்று அவள் நெற்றிக்கு மறந்துட்டு கொண்டிருந்தவர்களை தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்தாள்.

 

குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் எல்லாம் இருக்க அனைவரையும் கண்டு "மாமாக்கு என்ன ஆச்சு? எங்க இருக்காக? டாக்டர் என்ன சொன்னாக?" என்று அழுதபடி இவள் கேட்க..

 

கோதை இம்முறை வாய் விடவில்லை. பூங்கொடியும் அவளை அணைத்து "ஒன்னுமில்ல அஸ்திரா.. அண்ணனை உள்ளதேன் ஆபரேஷன் தியேட்டரில் வச்சிருக்காக.. இப்ப கொண்டு வந்துடுவாக" என்று ஆறுதல் அளித்தாள்.

 

"இல்ல.. இல்ல.. என் கண்ணு முன்னாடி தான் எங்க அப்பாரு அவரை குத்தினாரு. எனக்கு பயமா இருக்கு அண்ணி.. என்ன ஆச்சு சொல்லுக அண்ணி? சொல்லப் போறீகளா இல்லையா? அவர் இல்லைன்னா.. நானும் இல்ல.. அண்ணி" என்று மடிந்து அமர்ந்து பூங்கொடியின் காலை பற்றி கதறி தீர்த்தவளைக் கண்ட கல் மனமும் கரைந்து போகும். ஆனால் கரையாதது யோகலட்சுமியின் மனம் மட்டும் கூடவே அவரது வாயும் அடங்காதது.

 

"என்ன ராசியோ ஒன் ராசி? கல்யாணம் பண்ணி ஆறு மாசத்துல ஏற்கனவே ஒருத்தன் இப்படி தான் செத்துப்போனியான். இப்போ ரெண்டு மாசம் தேன் ஆகுது.. அதுக்குள்ள இன்னொருத்தன் குத்துபட்டு அப்பவோ இப்பவோ போக கடக்கிறியான். நல்ல தாலி பாக்கியமடி ஆத்தா உனக்கு?" என்று அத்தனை பேரின் முறைப்பையும் மீறி அவர் வாயை விட..

 

"யார் சொன்னா? யார் சொன்னா? சஞ்சயன் எனக்கு புருஷன்னு? வீரா தேன்.. வீரா மட்டும் தேன் என் புருஷன்!!" என்று அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே அவரிடம் சண்டைக்குப் போனாள் அஸ்திரா.

 

"ஆமாமா.. சொல்லிக்கிட்டாக.. உன் பொழப்பு தேன் சிரிப்பா சிரிச்சத்தேடி. அந்த சஞ்சயன் சாவைதேன் ஊரே பார்த்தாச்சே.. இப்ப அடுத்தது.. யேன் மாப்பிள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. உன்னைய வூட்டை விட்டே துரத்தி விடுபுவேன்!!" என்று இவர் என்னமோ அவளுக்கு மாமியார் போல பேசிக் கொண்டே செல்ல முந்தானையை உதறி இடுப்பில் சொருகியவள் சட்டென்று அவர் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள்.

 

"ஒரு வார்த்த.. ஒரு வார்த்த.. யேன் மாமன பத்தி பேசக்கூடாது. யேன் மாமா நல்லா ஆகிடுவாரு.. நல்லா இருப்பாரு.. யாரு என்ன சொன்னாலும் யேன் புருஷனா அது வீரா தேன்!! நீ பார்த்தியா என் கழுத்துல சஞ்சயன் தாலி கட்டுனத நீயி பாத்தியா?" என்று கூறி கையை இழுத்து அவள் கேட்ட விதத்தில் அரண்டு பயந்தவர் இல்லை என்று அவசரமாக இடது வலமாக தலையாட்ட..

 

"அந்தத் தாலியை அவேன் கட்டல.. அது எனக்கு நானே கட்டிக்க்கிட்டது. அவேன் என் புருஷனும் கிடையாது ஒன்னும் கிடையாது. வீரா மட்டும் தேன் என் புருஷன்!! இன்னொரு தடவ உன் வாயிலிருந்து அவேன் பேர் வந்துச்சு…" என்று அவள் கூற வலியில் கண்கள் தெறிக்க காப்பாத்துங்க என்று கத்த முடியாமல் யோகா இருந்தார் என்றால்.. இவளின் பேச்சை கேட்டு வீரா குடும்பம் மட்டுமல்ல அசோகன் குடும்பமும் அத்தனை

யுமே அதிர்ச்சியில் வாயை பிளந்து நின்றனர்!!

 

 

தீருமோ தாகம்...

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top