உயிரே 38

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

38

மனைவியை திட்டுவிட்டு மில்லுக்கு வந்த தர்மாவுக்கு நிலை கொள்ளவில்லை. அவள் அப்படித்தான் என்று சிறுவயதிலேயே இருந்து அறிந்து தெரிந்து தான் கல்யாணம் செய்து கொண்டான். தன்னுடைய அன்பினாலும் தாம்பத்திய வாழ்வு கொடுக்கும் முதிர்ச்சியினாலும் அவள் மாறிவிடுவாள் என்று அவன் நினைத்திருக்க.. அவளோ இன்னும் அந்த எடுப்பாற் கைப்பிள்ளை போலவே இருந்தது அவனை வருத்தியது.

 

இதற்கெல்லாம் காரணம் அவனது அன்னை யோகலெட்சுமி!! 'தன் மகனின் வாழ்க்கை விட இந்த புறம்பேசுதல் ரொம்ப முக்கியமா?' என்று பல நேரம் அவன் கோபப்பட்டு அன்னையிடம் கத்தினாலும் அதை பூங்கோதையிடம் அவன் காட்டியதில்லை. இன்று அவளை அதிகம் பேசி விட்டோம் என்று வருந்தியவன், இரவு அவளுக்குப் பிடித்தமான உணவுகளை வெளியில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான். கண்டிப்பாக சமைத்திருக்க மாட்டாள் என்பது தெரியும். ஆனால் அவள் அவன் விட்டுப் போன இடத்திலேயே சமைந்திருந்தாள். 

 

எட்டி திண்ணையில் பார்க்க அவன் அன்னையை அங்கே காணவில்லை. அவர் அறைக்கு சென்றிருப்பார் என்று நினைக்கவில்லை. அன்னையை அறிந்தவனாயிற்றே?? அங்காளி பங்காளி வீட்டில் இன்று நடந்தவற்றை எல்லாம் ஒளிபரப்பவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. எனவே அங்கே சென்று இருப்பார் என்று எண்ணியவன், குனிந்து தரையில் அமர்ந்த நிலையில் உறங்கி விட்ட மனைவியை 

கைகளில் ஏந்திக் கொண்டான். ஏனோ முதலிரவுக்கு செல்லும் மணமக்களை போல.. அவன் ஸ்பரிசத்தில் அவள் விழித்து விழி விரித்து கணவனை பார்த்தாள். எதினா கோபம் மீதம் இருக்கிறதா என்று!! 

 

கணவன் கண்களில் கோபம் இல்லையென்றதும் கணவன் மார்பில் அவள் மையம் கொள்ள.. மெத்தையில் இட்டவுடன் நாணம் வந்து அவளை போர்வையாக்கி கொள்ள.. மெல்ல அவள் கெண்டைக்காலின் அடியில் வருடினான் தர்மா. அவன் விரல்களின் வருடல் தையலின் உடலில் அனலை மூட்ட, அவள் நெளிய.. அவன் விரல்கள் மெல்ல மேலேறி அவள் மெல்லிடையின் நாபிச் சுழியை வருடியது. நுண்ணிய உணர்வுகளைக் கொண்ட அந்த இடத்தின் வருடலில் உடல் மொத்தமும் சிலிர்த்தாள் கோதை!!

 

அவன் இதழ்களோ அவளது பாதங்களின் குட்டிக் குட்டி விரல்களை சுவைக்க.. மொத்தமாய் உணர்வுகளின் பிடியில் தத்தளித்தாள் கோதை.

 

கண்கள் சொருக.. அரைக் கண் திறந்து அவனைப் பார்த்தாள் கோதையவள். மோக போதை ஏறிய அவ்விழிகள் 'என்னை எடுத்துக் கொள்!' என்று சொல்வதைப் போலிருந்தது. அவளின் மூச்சுக் காற்றுக்கு அருகே வந்தவன், இள வெப்பமான அவளின் மூச்சுக் காற்றில் அவனின் இதயம் சூடாக.. அதில் சூடான ரத்தம் உடல் முழுவதும் பரவி விரவி உணர்ச்சி மேவிட பெண்மையை அணைத்தான்.

 

அவளின் நிலையறிந்து அவனும் அவளை மென்மையாக கையாள நினைத்தவன், முடியாமல் வன்மையில் இறங்க.. அவனின் வன்மையான கூடலில் சற்றே வலி இருந்தாலும் தன்னவனுக்காக அதனை அவள் சுகமாக்கி கொள்ள..

வியர்த்துக் களைத்த மேனியுடன்.. அவள் மார்பில் கவிழ்ந்து அவளது கழுத்தில் முகம் புதைத்து அப்படியே செயலற்றவனான் தர்மா.

 

அவனைப் போலவே கோதையும் அவனிடம் அடங்கிப் போனாள். சிறிது நேரம் அவளிடமிருந்தும் எந்த அசைவும் இல்லை. பேச்சும் இல்லை. வெறும் மூச்சு மட்டுமே!! அவனை அப்படியே நெஞ்சில் தாங்கிக் கொண்டு அவனை இறுக்கிய நிலையில் இருந்தாள். அவளது கைகள் அவனது முதுகில் கோர்த்துப் பிணைந்திருந்தன. இருவரது கால்களும் ஒன்றையொன்று பிண்ணி வளைத்து பிடித்திருந்தது.

 

"ஏய்ய்.. கோதை.." என்று மிகவும் மெல்லிய குரலில் வாஞ்சையுடன் அழைத்தான்.

 

''ம்..ம்ம்..?'' என முனகினாள்.

 

''கொன்னுட்ட டி கோதை..!!'' என்றான் கிசுகிசுப்பான குரலில்..

 

மெதுவாக முகத்தை உயர்த்தி அவளது தாடை மீது அவனது தாடையை வைத்தான். அவள் அமைதியாக அவனை பார்த்திருந்திருந்தாள்.

 

''உன் அழகு இன்னைக்கு என்னைய கொன்னுட்டுடி.. இவ்வளவு அழகான.. உன்னைய மனைவியா அடைய நான் கொடுத்து வெச்சிருக்கனும் அழகி. என்ன அழகு..? என்ன.. நெளிவு.. சுழிவு.. குழைவு?" என்று அழகில் ஆரம்பித்து அந்தரங்கத்தில் அவன் பேச..

 

''ஹேய்.. மாமா…" உதட்டில் புன்னகை மலர செல்லமாக அவன் கன்னத்தை கடித்தாள் கோதை.

 

''பொய் சொல்லாத மாமா.. நானெல்லாம் ஒரு அழகா..?'' என்றாள் கணவனின் மனதை அறியும் பொருட்டு.

 

''நீயி ஒரு அழகு இல்ல டி செல்லம்.. ஓராயிரம் அழகு!! இந்த ரோசா பூ.. இருக்கில்ல.. ரோசா பூ.. அது எல்லாத்தையும் மொத்தமா பறிச்சிட்டு வந்து ஒரு பெரிய குவளைல போட்டு அதுல பால்.. சந்தனம்.. தேனு நெறைய வாசணைய சேர்த்து, அதையெல்லாம் மொத்தமா அரைச்சு அத ஒரு கைத்தேர்ந்த சிற்பி.. காதல் நிரம்பி வழியற இதயத்தோட ஒரு பெண்ண வடிச்சா... எப்படி இருக்கும்? அப்படி இருக்க நீயி கோதை.. என் அழகிடி நீயி!!" என அவன் சொல்ல சொல்ல.. கோதையின் முகத்தில் மலர்ந்த புன்னகை.

 

"வர.. வர.. நல்ல கவிதையா பொய் பேச கத்துகிட்டே மாமா நீயி" என்று அவள் நம்பாமல் பேசினாள்.

 

"கண்டுபிடிச்சிட்டியா?" என்று அவன் கண்ணடித்து சிரிக்க..

 

"ஓய்.. ப்ராடு மாமா…" என்று அடித்தவளின் கைகளை பிடித்தவன் அவள் கண்களை உற்றுப் பார்த்து, 

"ஒரு மனைவிக்கு அழகு முக்கியமில்ல கோதை.. அன்பு தான் முக்கியம்!! இன்னும் பத்து வருஷம் போனா இந்த இளமை அழுகு எல்லாம் போயிடும். ஆனா இந்த அன்பு.. அரவணைப்பு.. அந்நியோன்யம் இதெல்லாம் மாறாது!! யேன் மனைவிகிட்ட இருக்கிற அழகு இதுதேன்!! பொதுவா ஒரு கணவனின் கண்களுக்கு அவள் மனைவிதேன் அழகியாம்.. யேன் கண்களுக்கு நீயி பேரழகி டி!! என்றான். அவனின் பேச்சில் அப்படியே நெக்குருகிப் போனாள் கோதை.

 

"நல்லா யோசிச்சு பாரு கோத.. இந்த மூன்று வருட வாழ்க்கையில் இந்த மாதிரி நாம ஆத்மார்த்தமா இருந்தது கிடையாது. காரணம் ஏதோ ஒரு வேண்டுதல் ஹாஸ்பிடல்ல சொன்னாகனு சொல்லிட்டு தான் நாம ஒன்னும் இருப்போம். இனிமே அது மாதிரி எல்லாம் இல்லாமல் நமக்காக நாம வாழனும் கோதை.. அடுத்தவர்களுக்காக இல்ல.. சரியா?" என்று அன்பான பேச்சினாலே அவளின் மனதை மாற்றிக் கொண்டிருந்தான் தர்மா.

 

"பசிக்கிது மாமா…" என்று அவள் கூற, "வா.. வா.. நீயி ஒரு சாப்பாட்டு ராமி கூடவே சோம்பேறினு தெரிஞ்சுதேன் வரும்போதே சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன். ஆமா எங்க அம்மா? எங்க போச்சு?" என்ற படி இருவரும் உடை மாற்றி சாப்பிட வந்து அமர அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தார் யோகலட்சுமி.

 

மகனும் மருமகளும் சாப்பிடுவதை பார்த்து "உனக்கு விஷயம் தெரியுமா கோத? அந்த நம்ம பங்காளி அண்ணாமலை இருக்கானே…" என்று ஒரு கதையை அவர் ஆரம்பிக்க..

 

"அத்த நிப்பாட்டுக.. இப்பதேன் உங்க புள்ள வந்து இருக்காரு மில்லுல இருந்து.. அவரு கொஞ்சம் சாப்பிடட்டும். எப்பவும் அடுத்தவக கதையை பேசிட்டு இருக்க வேணாம். நம்ம வூட்டு சோலிய பார்ப்போம்" என்று அவளின் மாற்றத்தை கண்டு யோகலட்சுமி அதிர்ந்தார் என்றால் தர்மா இனிமையாக அதிர்ந்தான். 

 

மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா?? அதிலும் பெரும்பாலான தம்பதிகளுக்கிடையே அன்னிய சக்திகளின் ஊடுருவலுக்கு காரணம் இவர்கள் தங்களுக்குள் மனம் விட்டு பேசிக் கொள்ளாததே!!

 

மனம் விட்டு பேசினால் மார்க்கம் மட்டுமல்ல மழலையும் பிறக்கும்!! 

 

அட!! நமக்கில்ல பா.. இந்த தம்பதிக்கு!!

 

யோகலட்சுமி, தன்னை கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இருவரையும் குறுகுறுவென பார்த்தார். 

'அப்படி என்ன சொக்குப்பொடி போட்டு இருப்பியான் யேன் புள்ள? யேன் மருமக இப்படி மாறிட்டாளே??" என்று உல்ட்டாவாக யோசித்தப்படி...

 

"அத்த நீங்களும் சாப்பிட வாங்க" என்று அவருக்கும் எடுத்து வைக்க ஒன்றும் சொல்ல முடியாமல் சாப்பாட்டை சாப்பிட்டார். அந்த நேரத்தில்தான் தர்மாவின் போன் அடித்துக்கொண்டே இருந்தது.

 

போனை எடுத்து பார்க்க வீரா தான் அழைத்திருந்தான். "உங்க அண்ணன் தேன் கூப்பிடுறியான். அனேகமா உன்னைய பத்தி தேன் கேட்பான்.. ஆச தங்கிச்சிய நான் ஏதாவது பண்ணிட்டனோனு.. ஹா.. ஹா" என்று சிரித்துக்கொண்டே "சொல்லுடா மச்சான்..!!" என்று இவன் ஆரம்பிக்க..

 

"ம்மாப்.. மாப்புள்ள… ச்சீக்கிரம்.. வாடா… வட.. பத்ர காளியம்மன் க்கோகோவில்லு…" என்று முடிக்கும் முன்னே அவனது கால் கட்டாகி விட.. சாப்பிட்டதை அப்படியே போட்டவன் "நீங்க ரெண்டு பேரும் உடனே கிளம்பி மாமா வீட்டுக்கு போங்க..!!" என்றவன் தனது பைக் சாவியை எடுக்க..

 

"என்னாச்சு மாமா? அண்ணன்தானே பேச்சிச்சு.. ஏதாவது பிரச்சினையா?" என்று கோதை தவிப்புடன் கேட்க.

 

"என்னனு தெரியல உங்க அண்ணன்தேன் கூப்பிட்டியான். ஆனா.. அவேன் குரலே சரியில்ல.. நான் என்னன்னு பார்த்துட்டு வெரசா வரேன். நான் வர வரைக்கும் அங்கனவே இருங்க இரண்டு பேரும்" என்று வேகமாக வண்டியில் பறந்தான் தர்மா.

 

"ஹா..‌ஹா.. ஹா.. உன் நண்பன வரச்சொல்லி போன் பண்ணல.. இன்னும் கொஞ்ச நேரத்துல மூச்சு வாங்க வந்து நிற்பான்.. உன் மூச்ச வாங்கிட்டு, கொலை பழிய தூக்கி அவேன் மேல போட்டுட்டுவேன்.. ஒரே நேரத்தில இரண்டு பேரும் அழிஞ்சிங்கடா..!!" என்று கடோத்கஜனாய் கடகடவென்று சிரித்தார் அம்பலவாணன். தன் கையில் இருந்த ரத்தம் தோய்ந்த கத்தியை பார்த்துக்கொண்டே...

 

"தர்மா.. மாப்புள்ள.. தனியே வந்திராத டா.. தனியே வந்துராத டா!!" என்று தனக்குள் உரு போட்டுக்கொண்டே குருதி பாய்ந்து வந்த இடுப்பு பகுதியை தனது சாட்டையால் இறுக்கி கட்டிக்கொண்டு மூச்சுவிட சிரமப்பட்டு ஓய்ந்து அமர்ந்திருந்தான் வீரா. அருகே தலையில் அடிபட்டு மயக்கத்தில் கிடக்கும் மனைவியை மனம் கொண்ட வலியோடு பார்த்தான். அவனால் அவள் அருகில் செல்ல முடியவில்லை. அவளின் நிலை என்ன ஆயிற்று? வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலை என்ன ஆயிற்று? என்று அறிய முடியாமல் ஊமையாய் உள்ளுக்குள்ளே அழுதான் வீரா. அவனால் இந்த நிலையில் ஒன்னும் செய்ய முடியாததை எண்ணி குமைந்தான்.. மருகினான்.. 

 

ருத்ரமூர்த்தியாய் அம்பலவாணன் ஆட்களுக்குள் நுழைந்த வீரா அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருந்தான் தன் மடக்கிய முஷ்டியாலும்.. தன் புஜ வலிமையாலும்.. தன் தேக்கு மர ஒத்த கால்களினாலும்.. அடித்து உதைத்து.. மிதித்து.. நெறித்து என்று பந்தாடினான் அனைவரையும்.

 

அந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அயோக்கியர்கள் வீராவின் வீரத்திற்கு எதிரே தாக்கு பிடிக்க முடியாமல் பக்கத்திற்கு ஒன்றாய் சிதறி ஓடினர்.

 

"ஓடுங்கடா நாய்களா... யார் கிட்ட வந்து உங்க பவுச காட்டுறீக. வீரா டா நானு!! உங்களையெல்லாம் அனுப்புன அவேன் மட்டும் யேன் கைல கிடைச்சியான்?? அவன உருத்தெரியாமல் ஆக்கிடுவேன்.. என்னைய ஆருனு நினைச்சிட்டியான்!!" என்று கோபத்தில் கத்தியவன், தன் மனைவியின் நிலை பார்க்க ஓடி சென்று அவளை தன் மடியில் வைத்து "தீரா.. தீரா.. முழிச்சிக்கோடி.." என்று அவள் கன்னத்தில் மெதுவாக தட்ட.. மெல்ல விழித்தாள் அவனின் தீரா.

 

"ம்மா.. மாமாஆஆ.." என்று மெதுவாக அவள் அழைக்க..

 

"ஆமாண்டி. இந்த நேரத்தில தேன் என்னைய மாமானு கூப்பிட உனக்கு தோணும். ரெண்டு மாசமும் உன் முந்தானை புடிச்சுக்கிட்டே சுத்திக்கிட்டே வந்தேன் அப்ப எல்லாம் கண்டுக்காம.. அப்போ கூப்பிட்டியாடி? இப்போ என்னைய மாமானு கூப்பிடு!! என்னால எதுவுமே செய்ய முடியாத இந்நேரத்துல..!!" என்று புலம்பியவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு கூட வந்தது.

 

மெதுவாக அவள் வயிற்றை பிடிக்க "என்னாச்சு.. என்னாச்சு தீரா? வலிக்குதா டி.. ஏதும் பண்ணுதா?" என்று பயத்துடன் அவன் கேட்க "இல்ல மாமா.. ஒன்னும் இல்லை!!" என்று எழுந்தவளை தாங்கி வீரா பிடிக்க மெல்ல நடந்தனர்.

 

அப்பொழுது அவன் பின் மண்டையில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தவள் "ஐயோ மாமா.. ரத்தம்!!" என்று பயந்து அங்கே சுட்டிக்காட்ட.. 

 

"ஒன்னும் ஆகாதடி.. உன் மாமன்.. படு ஸ்டாரங்.. எதுக்கும் தர்மாவை வர சொல்றேன்" என்று அவன் போன் எடுத்து டயல் செய்யும் நேரத்தில் அவனது கண்கள் அதீத வலியை காட்ட.. 

 

"என்னாச்சு மாமா.. என்னாச்சு?" என்று பதறியவள் திரும்பி பார்க்க.. அங்கே ரத்தம் தோய்ந்த கத்தியோடு நின்றிருந்தார் அம்பலவாணன்.

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top