உயிரே 32

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 221
Thread starter  

32

 

தன்னிடம் சவால் விட்டு சென்ற வீராவை பார்த்து அம்பலவாணனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ஆனால் அதே நேரம் அவர் பற்ற வைத்த காதலெனும் தீ தான் அவனுள் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை மறந்து போனார் அவர்.

 

மிரட்டுகிறேன் என்ற பேர் பண்ணிக் கொண்டு அவன் மனதில் இருந்த காதலை உசுப்பேத்தி விட்டார் மனிதர்.

 

சிறுவயதில் இருந்து அவளை பார்க்கும் போது ஒருவித அலட்சியம்.. கூடவே அப்படி என்ன இவள் பெரிய ரதியோ? என்று மற்றவர்கள் அவள் மேல் காட்டும் அன்பை அரவணைப்பை பார்த்து நினைத்துக் கொள்வான்.

 

ஆனால் கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் அது பொறாமை என்று அவனுக்கு புரிந்தது. அதுவும் மற்றவர்கள் அவள் மீது காட்டும் அந்த அன்பினால் விளைந்தது என்றும் புரிந்து கொண்டான்.

 

'அவள் மீது ஏன் தனக்கு நேசம் ஏற்படுகிறது இப்போதெல்லாம்?' அவன் நினைக்கும் தருணம்.. அவர்களின் இரு வீட்டு பிரச்சினையும் முன்னே வந்து நிற்க அவனால் அந்த நேசத்தை வேண்டாமென கடந்து செல்ல முடிந்தது.

 

எப்போது அம்பலவாணன் மிரட்டினாரோ.. அதுவும் சஞ்சயனுக்கு தான் அவள் என்று கூறினாரோ.. அப்போதே முடிவு எடுத்துவிட்டான் அவள் என்னவள்!! எனக்கு மட்டும்தான் என்று!!

 

அம்பலவாணன் இடமிருந்த அதே அவசரமும் கோபமும் வீராவுக்குள்ளும் இருந்தது. அந்த அவசரம் தான் அவளிடம் உடனடியாக காதலை சொல்ல தூண்டியதும்.. அந்தக் கோபம்தான் அவள் சஞ்சயனின் மனைவி ஆவதற்கும் காரணம்.

 

ஆனால் வாலிப மிடுக்கில்.. ஆண் என்ற கர்வத்தில்.. அப்படி என்ன என்னை விட்டுவிட்டு வேறு ஒருவனை பார்த்து விடுவாளோ என்ற இறுமாப்பில்.. இருந்தவனுக்கு இடி என விழுந்ததுதான் சஞ்சயன் அஸ்திரா திருமணம். ஆனால் அன்று தெரியவில்லை!! 

 

முதன் முதலில் காதலை சொல்லும் சந்தோசத்தில் அதேநேரம் அம்பலவாணனை எதிர்த்து பேசிவிட்டு வந்த அந்த தருணத்தில் தன்னை பெரும் ஆண்மகனாக வீராதி வீரனாக எண்ணிய வீரா அந்த திருவிழாக் கூட்டத்தில் அஸ்திராவை தேட அவன் கண்களுக்கு அகப்படவில்லை அவள். அகப்படவில்லை என்பதை விட அம்பலவாணன் விடவில்லை என்பதுதான் சாலப் பொருந்தும்!!

 

இவன் சவால் விட்ட உடனே வேகமாக தன் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர் அவளை தன்னுடன் வைத்துக் கொண்டார். ஒரு சமயம் அஸ்திராவை அம்பலவாணனுடன் பார்த்த வீரா.. புரிந்து கொண்டு அவரை பார்த்து எள்ளலாக சிரிக்க.. அந்த எள்ளல் ஒரு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது அம்பலவாணனுக்குள் என்பதை அறியவில்லை அவன்.

 

காதல் என்றால் பாவம் என்ற எண்ணம் எல்லாம் இல்லை அவருக்கு. ஆனால் அதில் ஜாதி அந்தஸ்து பணம் என்று எல்லாவற்றையும் பார்ப்பவர் அவர்!!

 

இவர்களுக்குள் ஜாதி அந்தஸ்து பணத்தில் எவ்வித வேறுபாடு இல்லை என்றாலும் அதையெல்லாம் கடந்த வன்மம்.. தீராத வன்மம்.. சற்குணத்தின் மீது!! தன் காதலை வேரறுத்தவனின் மகனுக்கு தன் மகளை கொடுப்பதா? என்ற ஆணவம்!! அப்படி என்ன குறைந்து விட்டேன் நான்? நன்றாக தான் வாழ்கிறேன் என்று அவ்வப்போது அந்த கர்வம் கொடுத்த இறுமாப்பில் சற்குணத்தோடு அவர் சண்டை போட்டாலும் அநியாயமாக அவரே தோற்று நிற்பார்.

 

இவையெல்லாம் சேர்ந்துதான் வீராவை அவருக்கு பிடிக்காமல் போனது. கூடவே அவனது அலட்சிய பேச்சும் அப்பாவை போன்ற நேர்மையான குணமும் சுத்தமாக பிடிக்காமல் போனது அம்பலவாணனினுக்கு.

 

இப்போது காதலை சொல்ல வரும் அவனிடமிருந்து தனது மகளை காப்பாற்ற தான் தன் கை சிறகுகளுக்குள் வைத்திருந்தார் அம்பலவாணன்.

 

"காப்பாத்திக்க.. காப்பாத்திக்க.. எவ்வளவு நாளு மகள வைச்சு காப்பாத்தேறுனு நானும் தான் பார்க்க போறேன். ஒரு‌ நாளு இல்ல ஒரு நாள் இருக்கு!!" என்று சிரித்தவன் அதற்குப்பின் அவர் கண்ணில் படவே இல்லை. போய் ஒழிந்தான் என்று இவரும் இயல்பாக இருந்தார். ஆனால் அவன் அப்படி இல்லை என்று நிரூபித்தான் அடுத்த வந்த நாட்களில்..

 

அன்று திருவிழாவின் கடைசி நாள்.. பொது பந்தி முடிந்து அனைவரும் அங்காங்கே அமர்ந்து உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பேசிக் கொண்டிருந்த தருணம்.

 

திடீரென்று கூட்டத்தில் ஒருவருக்கு சாமியாடி வந்து ஆடிக்கொண்டிருக்க.. பார்ப்பவரெல்லாம் அவரிடம் குறி கேட்டனர். சாமி வந்தவரும் குறி சொல்ல தொடங்க.. உடனே அங்கே பெரிய கூட்டம் சேர்ந்தது.

 

வீராவின் எண்ணம் அறியாத அஸ்திரா அப்பாவோடு நின்றிருந்தாள். சாமியாடியை பார்த்தவள் தானும் குறி கேட்கப் போவதாக கூட்டத்திற்குள் நுழைய.. அந்தக் கூட்டத்துக்குள் இடித்து கொண்டு முன்னால் செல்ல பார்க்க, முடியாமல் விழிபிதுங்கி நின்றாள் அஸ்திரா.

 

அதில் பல பேருக்கு சாமி வந்து ஆட.. இவள் பயந்து போனாள். அந்தக் கூட்டத்தில் சிக்கி தவித்தவளை சட்டென்று ஒரு கரம் இடுப்போடு அணைத்தவாறு கூட்டத்திற்குள் நுழைத்து எதிர்ப்பக்கம் அழைத்துச் சென்றது.

 

ஸ்பரிசமே சொன்னது அது வீரநெடுமாற பாண்டியன் தான் என்று!! வேறு யார் அவனையின்றி அம்பலவாணன் பெண்ணை தைரியமாக தொட முடியும்? எப்படியோ இந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்து வெளியில் வந்தால் போதும் என்ற நிலைமையில் முதன்முறையாக அவனிடம் எதிர்க்காமல் அவன் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு பின்னே சென்றாள்.

 

எந்தவித கஷ்டமும் இல்லாமல் யாருமே அறியாமல் அவளை இழுத்துக் கொண்டு சென்றவன் அருகிலிருந்த ஆல மரத்துக்கு அழைத்துச் சென்றான்.

 

இதுவரை இல்லாத பயம் முதல் முதலாக பிடித்தது அவளுக்கு? கூட்டமும் சத்தமும் மட்டும் தூரம் இல்லை.. கூப்பிடும் குரலுக்கு வரும் சொந்தமும் தூரத்தில்தான்!!

 

அவளோ அவன் என்ன செய்வானோ என்ற பயத்தில் வேர்க்க விருவிருக்க நின்றிருக்க.. வீராவோ கோயில் என்றால் எப்போதும் அவன் வேஷ்டி தான்!! இன்றும் அதே வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தவன், சட்டை பட்டன்களை மேலே இரண்டை திறந்துவிட்டு உள்ளுக்குள் ஊதி கொண்டான்.  

 

அவன் சட்டையை கழற்றிய விதம்.. ஊதிக்கொண்டு பாங்கு.. அதை எல்லாம் தாண்டி அந்த சட்டை வழியே தெரிந்து அவன் அடர்ந்த நெஞ்சு ரோமங்கள்.. கூடவே அவர்களது இந்த தனிமை.. முதல் முறை பெண்களுக்கு உள்ளுக்குள் தடதடத்தது.

 

அவளையும் மீறி சிறிது நேரம் அவளது கண்கள் அங்கே பயணித்து பயணித்து வர, அதை பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான் வீரா.

 

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள் "நான் போறேன்" என்று போக..

 

"இருடி உன் கிட்ட பேசணும் தானே அந்த கூட்டத்திலிருந்து உன்னைய கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தேன். அதுக்குள்ள ஓடுற இரு" என்று அவள் கையை பிடிக்க.. அவளோ முரண்டு பிடிக்க.. இவன் வேகமாக இழுக்க.. அவன் மேலேயே வந்து விழுந்தாள் அஸ்திரா.

 

அவன் பார்வை காதலாக..  

இவள் பார்வை கோபமாக..

 

"மாமன மேல் கொள்ள ஆசையோ? இப்படி பார்க்குறவ!!" என்று அவன் கேட்க..

 

"இவரு பெரிய மன்மத கு.." என்று ஆரம்பித்தவளின் இதழ்களை தன் கையால் பொத்தினான்.

 

"அடியேய்.. வர வர வாய் நீளுதுடி உனக்கு?" என்றவன், *அப்புறம் கல்யாணத்துக்கு தினதினம் தீபாவளி தான் பார்த்துக்கோ.." என்றதும்..

 

"யாருக்கு.. யாருக்கு.. யார் கூட கல்யாணம்?" என்றாள் அதிர்ச்சியில்..

 

"யேன்.. வேறொரு பய உன் கழுத்துல தாலிக் கட்டிடுவானா என்ன??" என்று இடது கையால் அவன் மீசையை முறுக்க..

 

"ம்க்கும்.. இவரு பெரிய‌ சண்டியரு!!" என்று அவள் முகத்தை சுளித்துக் கொண்டாள்.

 

"யேன்கிட்ட இப்படி மூஞ்சிய சுளிக்காதேனு நான் உனக்கு சொல்லி இருக்கேன் தானே??" என்றவன், தன் முன்னால் வாகாக அமர்ந்து இருந்தவளை காதல் கூறிய அடுத்த கணமே இதழ்களை கவ்விகொண்டான் வீரா.

 

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அஸ்திரா. கைகால்கள் எல்லாம் உதறல் எடுக்க.. அவன் இதழ்களிலிருந்து தன் இதழ்களை வம்படியாக பிய்த்துக் கொண்டு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து முறைத்தாள்.

 

வீரவோ அவள் காதலாக பார்ப்பது போல பாவித்து இதழ்களை விரித்தவன், ஒற்றை விரலால் அவளது முகவடிவை அளந்தான் காதலாக.. அவளோ அதனை தட்டி விட்டாள் கோபமாக.. 

 

"புரியுது மயிலு!! உனக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இருக்கணும்.. என்ன செய்ய மாமனுக்கு பொறுமை இல்லையே.. பொறுமை இல்லையே.. அவ்வளோ லவ்வுஸ் உன் மேலே.. கூடவே யேன் மாம்ஸ் வேற சொரிஞ்சு விட்டாரா.. அதான் பொங்குது!!" என்று இரு கைகளையும் விரித்துக்கொண்டு அவன் கூற..

 

"என்னது?? காதலா?? என்னையா இது?" என்று தனது உதட்டினை காட்டியவள், "காதலிக்குறவன் செய்யுற வேலையா இது?" என்று ஏதோ ரேப் செய்ய வந்தவனை போல அவள் சாட..

 

"மாமனுக்கு காதல இப்படி தேன் காட்ட தெரியும் டி. தள்ளி நின்னு.. விரல் உரசாம.. கண்ணும் கண்ணு பேசுற காதல் எல்லாம் காலாவதியாகிடுச்சு.. இப்போதைக்கு இது தான் ட்ரண்ட்.." என்றான் கூலாக..

 

"எப்பவுமே அது தேன் காதல்.. நீ பண்றதுக்கு பேரு வேற!" என்றாள் அவள் கடுப்பாக..

 

"ஓய்.. நீயி என்ன 90'ஸ் கிட் ஆ டி? டச் பண்ணாம லவ்வு சொல்லனும் சொல்ற.. இப்போ இருக்குற பயபுள்ளக எவ்வளோ வெவரமா இருக்குதுக.. உனக்கு ஒன்னும் தெரியல.." என்று அவன் கிண்டல் செய்ய..

 

"நீரு என்னவாம்?" என்று அவள் பல்லை கடித்தாள்.

 

"மாமன் எல்லாம் விதிவிலக்கு டி.. பாரு எப்படி யேன் லவ்வ சொன்னேன்னு" என்றான் சட்டை காலரை தூக்கி விட்டபடி..

 

"இங்க பாரு உனக்கும் எனக்கும் எல்லாம் செட் ஆகாது.. இரண்டு குடும்பமும் சண்டையும் சச்சசரவுமா இருக்குறவுக.. இப்போ காதல் முளைத்த சுவாரசியத்துல இது எல்லாம் உம்ம கண்ணுக்கு தெரியாது.. அப்புறம் இது தேன் பூதாகரமாக தெரியும்.. தவிர எங்க அம்மா பத்தி மூச்சுக்கு முன்னூறு தடவ பேசுவீக.. அதெல்லாம் கேட்டுட்டு நானு சும்மா இருக்க மாட்டேன். விதண்டாவாதம் பண்ணாம பேச்சை இதோட முடிச்சிட்டு கிளம்புக.." என்றவள் வேக வேகமாக பக்கம் பக்கமாக கூற.. 

 

"ஏன்டி?? ஏன்?? காதல் சொன்ன அன்னைக்கே அதுக்கு எண்ட் கார்ட் போடுற.. ஒரு பேச்சுக்காவது யோசிக்கிறனு சொல்லுறியாடி நீ?? பாவி பாவி.. இவ்வளவு பேசிட்டு என் மேலே ஜம்பமா உட்கார்ந்து இருக்க.. எழுந்திருடி" என்று அவன் உறும..

 

அவள் பயத்தில் எழ முடியாமல் அவன் மீது கை வைத்து ஊன்றி எழ பார்க்க.. வீராவோ அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவள் கையை தட்டி விட.. அவன் மீதே இன்னும் தொப்பென்று விழுந்தாள்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top