33
என்னது?? காதலா?? என்னையா இது?" என்று தனது உதட்டினை காட்டியவள், "காதலிக்குறவன் செய்யுற வேலையா இது?" என்று ஏதோ ரேப் செய்ய வந்தவனை போல அவள் சாட..
"மாமனுக்கு காதல இப்படி தேன் காட்ட தெரியும் டி. தள்ளி நின்னு.. விரல் உரசாம.. கண்ணும் கண்ணு பேசுற காதல் எல்லாம் காலாவதியாகிடுச்சு.. இப்போதைக்கு இது தான் ட்ரண்ட்.." என்றான் கூலாக..
"எப்பவுமே அது தேன் காதல்.. நீ பண்றதுக்கு பேரு வேற!" என்றாள் அவள் கடுப்பாக..
"ஓய்.. நீயி என்ன 90'ஸ் கிட் ஆ டி? டச் பண்ணாம லவ்வு சொல்லனும் சொல்ற.. இப்போ இருக்குற பயபுள்ளக எவ்வளோ வெவரமா இருக்குதுக.. உனக்கு ஒன்னும் தெரியல.." என்று அவன் கிண்டல் செய்ய..
"நீரு என்னவாம்?" என்று அவள் பல்லை கடித்தாள்.
"மாமன் எல்லாம் விதிவிலக்கு டி.. பாரு எப்படி யேன் லவ்வ சொன்னேன்னு" என்றான் சட்டை காலரை தூக்கி விட்டபடி..
"இங்க பாரு உனக்கும் எனக்கும் எல்லாம் செட் ஆகாது.. இரண்டு குடும்பமும் சண்டையும் சச்சசரவுமா இருக்குறவுக.. இப்போ காதல் முளைத்த சுவாரசியத்துல இது எல்லாம் உம்ம கண்ணுக்கு தெரியாது.. அப்புறம் இது தேன் பூதாகரமாக தெரியும்.. தவிர எங்க அம்மா பத்தி மூச்சுக்கு முன்னூறு தடவ பேசுவீக.. அதெல்லாம் கேட்டுட்டு நானு சும்மா இருக்க மாட்டேன். விதண்டாவாதம் பண்ணாம பேச்சை இதோட முடிச்சிட்டு கிளம்புக.." என்றவள் வேக வேகமாக பக்கம் பக்கமாக கூற..
"ஏன்டி?? ஏன்?? காதல் சொன்ன அன்னைக்கே அதுக்கு எண்ட் கார்ட் போடுற.. ஒரு பேச்சுக்காவது யோசிக்கிறனு சொல்லுறியாடி நீ?? பாவி பாவி.. இவ்வளவு பேசிட்டு என் மேலே ஜம்பமா உட்கார்ந்து இருக்க.. எழுந்திருடி" என்று அவன் உறும..
அவள் பயத்தில் எழ முடியாமல் அவன் மீது கை வைத்து ஊன்றி எழ பார்க்க.. வீராவோ அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவள் கையை தட்டி விட.. அவன் மீதே இன்னும் தொப்பென்று விழுந்தாள்.
வீராவின் அணைப்புக்குள் முழுமையாக வந்தாள். முதன் முறையாக ஒரு பெண்ணின் முழு ஸ்பரிசம் உணர்கிறான் அவன். ஜிவ்வென்று இருந்தது. இந்த உணர்வை வேறொருத்தி நிச்சயமாக தர முடியுமா? கண்டிப்பாக முடியாது என்று அவன் உணர்ந்தான். "இந்த ஜென்மத்தல் இவ தேன்!! இவ மட்டும் தேன்!!" என்று முடிவு எடுத்தவனுக்கு தயக்கம் உடைந்தது. மெல்ல அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவள் கண்களை நேராகப் பார்த்து "லவ்ஸ் இல்ல.. யேன் மேல" என்று கேட்க.. அவளோ பதில் அளித்தாள் இல்லை.
அவன் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற.. அதில் அவனுக்கு தைரியம் ஊற்றெடுக்க.. அவள் உதடுகளை தேடிக் கவ்விக் கொண்டான். இதழ்களும் இதழ்களும் சண்டையிட்டு கொள்ளவில்லை. மாறாக மென்மையாக.. மிக.. மிக மென்மையாக கொஞ்சிக் கொண்டிருந்தன..
நீண்ட நெடிய முத்தத்துக்குப் பின், அவளை தன் பக்கம் திரும்பி, தன் மார்பில் அவள் முகம் வைத்து அழுத்தி கொண்டான். அவள் முகம் அவனின் இதயத்தருகில் இருக்க.. "கேளுடி நல்லா கேளு.. யேன் இதயத்தோட சத்தத்தை.. அது உன் பெயரை மட்டும் தான் சொல்லும்.. இப்பவும் எப்பவும்" என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி, "யேன் காதல் இனக்கவர்ச்சி இல்ல டி.. உனக்கு தேவையான டைம் எடுத்துக்கோ தீரா.. ஆனா நீந்தேன் பொண்டாட்டி வீராவுக்கு" மீண்டும் மீண்டும் அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்து விட்டே எழுந்தான்.
"உனக்கு காதல் வரும் வரைக்கும் நீயி வெயிட் பண்ணு தீரா.. ஆனா இந்த வீராவ வெயிட் பண்ண சொல்லும் உரிமை உனக்கு இல்லைடி யோவ்.." என்றவனையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பதுமை என பாவை.
இப்பொழுது இருவர் கண்களும் ஒன்றையொன்று கவ்விக்கொள்ள.. மிக அருகில் அவனது முகம், அவளது கண்கள் ஆழியென அவனை இழுத்துக் கொள்ள.. தங்களை அறியாமல் இருவரும் நெருங்க.. அப்போது பெரும் சத்தம் கூட்டத்திலிருந்து..
"அய்யோ.. பாவி மக.. இப்படி பண்ணிபுட்டாளே!!" என்று ஒரு அம்மா கூப்பாடு போட..
அதுவரை அவர்களை பிணைத்து வைத்திருந்த மோக வலை சட்டென்று அறுந்தது. "நீயி உங்க அப்பாரு கிட்ட போ" என்று அவளை வேகமாக அனுப்பி வைத்தவன் அதன் பின்னே அந்த சத்தம் வந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடினான்.
கோவிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கும் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு பெண் தனது தாவணியால் தூக்கிட்டு மாண்டிருந்தாள். அவ்வூரைச் சேர்ந்தவள் தான்.
'இவளை எங்கையோ பார்த்திருக்கிறோமே? ஆனால் எங்க?' என்று யோசித்த வீராவின் ஞாபக அடுக்கில் அவள் வரவே இல்லை.
"அட.. நம்ம செல்லாத்தா மக.. இவ ஏன் தூக்கு போட்டுகிட்டா?"
"எவனையாவது காதல் கீதலு பண்ணி வவுத்துல வாங்கி இருக்கும். அவன் ஏமாத்திட்டு போய் இருப்பான்.. அதேன் இவ நாண்டு கிட்டா"
"ம்ஹீம்.. இப்போலாம்.. எந்த புத்துல எந்த நாகம் இருக்குனு யார் கண்டா?"
என்று அங்கிருந்தவர்கள் வாய்க்கு ஒன்றாக பேச.. மகளை பறிகொடுத்த செல்லாத்தாவுக்கு ஆறுதல் அளிப்பதைவிட அனலை அள்ளிக் கொட்டினர் அவர்கள்.
அப்போதுதான் வீராவுக்கும் அந்த பெண் யார் என்று தெரிந்தது. அவள் இசக்கி, செல்லாத்தாவின் மகள். அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் தான் வேலை பார்க்கிறாள். செல்லாத்தாவோடு பார்த்திருக்கிறான் அவளை தோட்டத்திற்கு செல்லும் பொழுது..
அதற்குள் அவன நண்பர்கள் அங்கே வந்து விட.. "இந்த பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணாச்சே டா.. ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சது. மேற்கொண்டு படிக்க வைக்க கேட்டாக மாமா.. வேண்டாம்னு சொல்லிப்புடுச்சு" என்று தர்மா வருத்தப்பட்டான்.
ஜெகனுக்கு தர்மா கூறிய விவரமெல்லாம் தெரியாது அவன் பக்கத்து ஊர் என்பதால்..
ஆனால் அங்கே பேசிக் கொண்டிருந்தவர்களை கேட்டவனுக்கு உள்ளுக்குள் கொதித்தது. "இந்த பொண்ணு செத்தது தற்கொலையா கொலையானு கூட தெரியல? அதுக்குள்ள என்னென்னமோ கை கால் மூக்கு எல்லாம் வைத்து பேசுறாக.. சாவு கூட ஒருத்தனுக்கு நிம்மதிய தர மாட்டேங்குது இந்த ஊருல!!" என்று வெறுப்போடு பேசியவர்களை பார்த்தான்.
"போகப்போக நாம மாத்திடுவோம் மச்சான்.. நாம ஒண்ணா இருந்தா எந்த குள்ளநரியும் இடையில வரமுடியாது" என்று அவன் தோளை தட்டினான் வீரா.
ஊர் தீட்டு ஆனதால் திருவிழா நின்று கோயில் பூட்டிய பிறகு அந்த பெண்ணின் ஈமக்கிரியை எல்லாம் நடந்தது.
அன்றைய கோவில் சம்பவத்திற்கு பிறகு வீரவாள் ஆதிராவை முன்னைப்போல சந்திக்க முடியால் போனது வீராவுக்கு. இப்போது அவள் கல்லூரிக்கு சென்று வந்தாலும் காரில்தான் சென்று வந்தாள்.
கூடவே அப்போதுதான் படிப்பை முடித்து தொழில் பக்கம் வந்திருந்த வீராவுக்கும் இன்னும் விவசாயத்தில் என்னென்ன புதுமை செய்யலாம்.. என்னென்ன தொழில்களை இதனோடு கூட செய்யலாம் என்று அதில் பிஸியாக இருந்தான் வீரா.
எப்போதாவது அத்தி பூத்தாற்போல் அவளை கோவிலிலோ இல்லை வேறு கடைகளிலோ பார்த்தால் இவன் பேச முயன்றால் அவளை விலகி சென்று விடுவாள்.
'என்ன ஆனது இவளுக்கு?' என்று அவனுக்கு புரியவில்லை . ஆனால் அவளின் ஒதுக்கும் நன்றாக தெரிந்தது. சரி விட்டுப் பிடிப்போம் என்று இவன் காத்திருக்க.. ஒரேயடியாக கையை விட்டு போனது அவனது காதல் மட்டுமல்ல காதலியும் தான்.
இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில் அவள் கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டில் இருக்க.. அதை ஜெகன் மூலம் தெரிந்து கொண்டவன் எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பொழுதுதான் ஜெகனுக்கும் பூங்கொடிக்கும் திருமணம் நடந்தது.
ஆஹா.. இன்னும் நெருங்கியாகிவிட்டது கூடிய சீக்கிரம் அவளை தன்னவளாக்கிக் கொள்ளும் கனவோடு இவன் சுற்றிக் கொண்டிருக்க.. அடுத்த வருடத்தில் அவளது இரட்டையான பூங்கோதைக்கும் தர்மாவுக்கும் திருமணம் நடந்தது. இதற்கிடையில் பூங்கொடியின் வளைகாப்பு சீமந்தம் என்று மேலும் ஒரு வருடம் ஓடியது.
இரு தங்கைகளுக்கும் முறையாக திருமணம் சீர்வரிசை சீமந்தம் என்று முடித்தவன் அதே நேரம் தன் தொழிலிலும் நன்றாக முன்னேறி இருந்தான். இவனுக்கும் திருமணம் வயதாகிவிட்டது பொண்ணு பார்க்கலாம் என்று சற்குணமும் வடிவாம்பாளும் பேசிக் கொண்டிருக்கும் சமயம்.. தன் மனதை வெளியிடலாமா வேண்டாமா என்று அவனுக்குள்ளே பயங்கர குழப்பம்.
முதலில் அவளது விருப்பத்தை தெரிந்து கொள்ளலாம் என்று காத்திருந்தவனுக்கு மறுநாள் பேரிடியாக வந்து சேர்ந்தது. அஸ்திரா சஞ்சயன் திடீர் திருமணம்!! அதில் யாரும் அறியாமல் திருட்டுத்தனமாக நடந்தது என்று!!
அதன் பின்… என்று அவனது கடந்த கடந்த காலத்திற்கு தடை போட்டது அஸ்திராவின் தொடர்ச்சியான ஓங்கரிப்பு!!
'அப்போது வேண்டுமானால் நம் முத்தம் கொடுத்ததால் பிடிக்கவில்லை என்று வாந்தி எடுத்தாள் என்று நினைத்தால்.. இப்போது எலுமிச்சை சாறு தானே கொடுத்தேன்.. என்ன ஆனது இவளுக்கு? உடம்பு சரியில்லையோ?' என்று மீண்டும் அவள் தலையை ஆதரவாக பிடித்து, தண்ணீர் கொடுத்து படுக்கையில் அமர வைத்தவன் கீழே ஓடிச் சென்றான் அன்னையை அழைக்க..
இவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அப்படியும் இருக்குமோ என்ற சந்தேக சந்தோஷத்தோடு வடிவாம்பாள் பூங்கொடி மாடிக்கு வந்தனர். வந்தவர்கள் அவளிடம் விவரம் கேட்க அவளோ திருதிரு என்று முழித்தாள்.
அதற்குள் நாடி பிடித்து பார்த்த உறவினர் மூதாட்டி ஒருவர், "உம்ம குலம் தலைச்சிடுச்சி வடிவு.. போய் நாட்டாமக்கார கிட்ட சொல்லு.. அவரு மீசைய பிடிச்சு ஆட்ட.. ஆள் வருப்போறாங்கனு!!" என்றார் சந்தோஷத்தோடு!!
வீடே விழாக்கோலம் பூண்டு கொண்டாட்டமாக.. இரு ஜோடி கண்கள் மட்டும் வன்மத்தில் ஜொலித்தது.
வேறு யார் பூங்கோதையும் அவளது அத்தை யோகலட்சுமியும் தான்!!
வன்மத்தை தொண்டையோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லையே.. அவற்றை வார்த்தைகளாக அல்லவா கொட்டினர்.
"எம்மோவ்.. ரொம்ப சந்தோசத்தில் குதிக்காத.. அந்த புள்ளை
க்கு உன் புள்ள தேன் அப்பான்னு என்ன நிச்சயம்?" என்றாள் பூங்கோதை!!
தீருமோ தாகம்!!
