இராவணா 9

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 222
Thread starter  

அத்தியாயம் 9

 

 

“சிஸ்டர் நெக்ஸ்ட் ஓபி அனுப்புங்க…” என்று பிரக்யாவின் குரலுக்கு உள்ளே வந்த தங்கை ஆதிராவையும்.. தம்பி ஆர்யாவையும் கண்டு இவள் நெற்றி சுருக்கி பார்த்தாள்.

 

“என்ன டாக்டர் மேடம் எங்களை எல்லாம் உங்களுக்கு தெரியுதா? ஞாபகம் இருக்கா?” என்று ஆதிரா ஒரு பக்கம் அவளை முறைத்து பார்க்க..

 

“அது எப்படி ஆதி இருக்கும்? அவங்க எல்லாம் இப்ப சேர்ற சேர்க்கை வர வர சரியில்ல..!” என்றான் ஆர்யா மறுபக்கம் நின்று..

 

யாரை சொல்கிறான் என்பது போல இருவரையும் மாறி மாறி பார்த்தாள் பிரக்யா. 

 

விசாலினி வந்த அன்று இருவரிடமும் சிறிது நேரம் உரையாடினாள். அதற்குப்பின் விசாலினி வந்திருப்பதாக பிரக்யா கூற 

 

“அய்யய்யோ அந்த சிலுக்கு சிங்காரியா?” என்று ஆர்யா ஒரு பக்கம் கதற..

 

“அவ பாடம் நடத்த ஆரம்பிச்சா நான்ஸ்டாப் போயிட்டே இருப்பாளே.. என் காது தாங்காதே..!” என்று ஆதிரா பதற..

 

“அது மட்டுமா வீட்ல போய் ஒன்னுக்கு ரெண்டா பத்த வேற வைப்பாளே..” இது ஆதி..!

 

“அம்மா கிட்ட மட்டும்னா பரவால்லடி ஆதி.. அவ அப்பாகிட்டயும் தாறுமாறா போட்டு கொடுப்பா..” இது ஆரு..!

 

“உன் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு வந்தா.. கூடவே இந்த இம்சையும் வந்து இறங்கிட்டு. இனிமே நாங்க இங்க இருந்தா எங்க உசுருக்கு உத்தரவாதம் இல்ல..!” என்றபடி இருவரும் அவசர அவசரமாக கிளம்பி பர்வதத்தம்மாளிடம் சொல்லிக்கொண்டு விசாலினி கதிர்நயனனிடம் பேசிவிட்டு வரும் முன்னே இருவரும் வீட்டை விட்டு ஓடியே போயிருந்தனர். 

 

“டேய் யார் கூட டா.. நான் சேர்ந்தேன் சேர்க்க சரியில்லன்னு சொல்ற?” என்று பிரக்யா தம்பியிடம் புரியாமல் கேட்க..

 

“வேற யாரு நம்ம கண்டிஷனர் கதிர்நயனன் தான்..!” என்றான் அவன் சிரிக்காமல்..!

 

“ஹா.. ஹா.. இது என்ன டா புதுப்பேரு கண்டிஷனர்? எப்பொழுதும் டீமன்.. அரக்கன்.. இந்த மாதிரி தானே டா நம்ம கூப்பிட்டு பழக்கம்” என்று பிரக்யா சிரிப்போடு கேட்க..

 

“நாங்க எல்லாம் அப்டேட் ஆயிட்டோம் அக்காடி.. நீயும் அப்டேட் ஆகு” என்று பிரக்யாவை தன் புறம் திருப்பி பதில் கூறினாள் ஆதி..!

 

“ஓ அப்டேட் ஆயிட்டீங்களா.!! சரி சரி.. அப்போ இதை நான் அவர்கிட்ட கன்வே பண்ணவா டி?” என்று ராகத்தோடு பிரக்யா கேட்க.. 

 

“அடியாத்தி..! இவளை நம் அக்கானு நம்பி சொன்னா, இவ அந்த கண்டிஷினருக்கு பொண்டாட்டியா மாறி நமக்கே வேட்டு வைக்கிறா பாருடா?” என்று அக்காளை முறைத்தனர் இருவரும்..!

 

“என்ன இருந்தாலும் தாலி கட்டிய கணவர் அல்லவா?” என்று அவள் குர்தி ஓரத்தில் தெரிந்த தாலிச் செயினை காட்டி மீண்டும் இருவரையும் வெறுப்பேற்ற..

 

டேபிளிலிருந்து அவள் பேனாவை எடுத்த ஆர்யாவோ அதில் மூடியை திறந்து கத்தி போல அதனை பாவித்து “ஏய் அக்கா.. ஒத்த வார்த்தை இங்க நடக்குற நம்ம சம்பாஷனை எல்லாம் கணவனே கண்கண்ட தெய்வம்.. புருசனே பெண்ணுக்கு வரம்.. அப்படி இப்படின்னு ஏதாவது பெனாத்திக்கிட்டு போய் சொன்ன அம்புட்டுதான் பார்த்துக்கோ..!” என்று பயமுறுத்த இன்னும் வெடித்து சிரித்தாள் தம்பியின் செய்கையில்..!

 

“ஒரு ஆம்பள பையன்.. அதுவும் முரட்டு ஆம்பள பையன்..!” என்று தன் புஜத்தை காட்டி “மிரட்டுனா நீ என்னவோ சிரிக்கிற.. இதெல்லாம் சரியில்லை..! என்னை அசிங்கப்படுத்துற நீ.. நான் சாப்பிட்ட முட்டை, கோழி, என் ஜிம் பாடி.. எல்லாத்தையும் அசிங்கப்படுத்துற நீ..!” என்று அவன் முறைக்க..

 

அவன் கையில் இருந்து பேனாவை பிடுங்கி மூடி வைத்தவள் “சும்மா ஆட்டி ஆட்டி பேசி கண்ட இடத்துல குத்திட போதுடா..! விளையாட்டு பேச்சு விபரீதமாயிட போகுது..! அதெல்லாம் அவர்கிட்ட நான் சொல்ல மாட்டேன். அது உனக்கும் நல்லாவே தெரியும்..! இப்ப என்ன ரெண்டு பேரு காத்தும் இந்த பக்கம் வீசுது.. என்ன விஷயம் சொல்லுங்க?” என்று தாடையில் கை வைத்த படி எதிரில் நின்ற தம்பி தங்கையை மாறி மாறி பார்த்து கேட்டாள் பிரக்யா. 

 

“அதுவா அக்காடி… தஞ்சாவூர் டூ கும்பகோணம் போற வழியில ஒரு ரெசார்ட் ஒன்னு ஓப்பன் பண்ணி இருக்காங்களாம். ஒன் டே ஃபுல் என்டர்டெயின்மென்ட்..! எல்லா குசைன் சாப்பாடும் அல்டியா இருக்காம் டி..! என் ஃபிரண்டு போயிட்டு வந்து சொன்னா” என்று ஆதிரா அக்காளை தன் புறம் திருப்பி வாயில் வாட்டர் ஃபால்ஸ் ஒழுகக் கூற..

 

“இன்டோர் அவுட் டோர் கேம்ஸ்.. ஜிப் லைன்.. ஜிப் சைக்கிள் அப்படின்னு திரில்லிங் கேம்ஸூம் இருக்காம். அதை தவிர ரொட்டீன் கேம்ஸ் இருக்காம்..” என்று இப்பொழுது ஆர்யா அவளை தன் பக்கம் திருப்பி பேசினான்.

 

“அது மட்டும் இல்ல அக்காடி, குட்டியா ஃபால்ஸ் மாதிரி ரெடி பண்ணி இருக்காங்களாம். அது தவிர ரெயின் டைம்ஸ் அப்படின்னு வெட் கேம்ஸ் இருக்காம்.. என்ன போலாமா?” என்று அவள் புருவத்தை உயர்த்தி ஆசையாக கேட்ட தினுசில் மறுக்க தோன்றவில்லை தான், அக்காவான பிரக்யாவிற்கு.‌!

 

“ஓகே.. இந்த வீக் எண்ட் போகலாம்..!” என்று தம்பி தங்கைகளுக்கு வாக்கு கொடுத்தாலும் மனதில் பக் என்று ஒரு பயம் எட்டி பார்க்க தான் செய்தது, எல்லாம் கடந்த கால அனுபவத்தால்..!

 

கடல் கடந்து இவள் படிக்கச் சென்றாலும்.. அங்கே தனியாக வேலை பார்த்தாலும் கூட இம்மாதிரி சற்றென்று யார் கூடவும் வெளியே சென்று விடவோ, பார்ட்டி,டேட்டிங் என்று பொழுதுபோக்கவோ பிரக்யாவின் மனது நினைத்ததே இல்லை..!

 

வலிகளையும் ரணங்களையும் மறக்கவே அவள் படிப்பு படிப்பு என்று அதில் மூழ்கி விடுவாள்..!

 

அடுத்து வேலை என்று வந்ததும் ஓய்விற்காக கால்களும் மூளையும் கண்களும் ஏன் மொத்த உடலே கெஞ்சிய பின் தான் அதற்கு ஓய்வு கொடுப்பாள். அந்த அளவுக்கு வேலை வேலை என்று மருத்துவமனையே கதியாய் கிடப்பவள். 

 

இன்று தம்பியும் தங்கையும் வந்து கூப்பிட, அவளுக்குமே ஒரு சிறு புத்துணர்ச்சி தேவைப்பட்டதோ என்னவோ ‘போகலாமே’ என்று மனம் விரும்ப தொடங்கியது.

 

ஆனால் இதை எப்படி அவரிடம் சொல்ல.. சிறு தயக்கமும் எட்டிப் பார்த்தது மெல்ல…

 

'எதுக்கு அவரிடம் அனுமதி வாங்க வேண்டும்? அம்மம்மா மூலம் இன்ஃபர்மேஷன் மட்டும் சொல்லிட்டு கிளம்பி போயிட்டு வர வேண்டியது தான்' என்று முடிவெடுத்தவள்,

 

அன்று அவன் அழைக்க வந்த போது அவனிடம் வாயை திறக்கவில்லை. கண்களை மூடி அமைதியாக அவள் சீட்டில் சாய்ந்துக் கொள்ள.. அவனும் அவளை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு தொந்தரவு செய்யாமல் வீடு வந்துவிட்டான்.

 

வந்தவள் தன்னை சுத்தப்படுத்தி வந்து ஆதிராவும் ஆர்யனும் கூறியதை அம்மம்மாவிடம் ஒப்புவித்து விட்டு “நான் போறேன் அவ்வளவுதான் அம்மம்மா.. உங்க புள்ள கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது. நீங்களே சொல்லிடுங்க..!” என்றபடி வேகமாக தங்கள் அறைக்கு சென்று படுத்துவிட்டாள். 

 

அதுவும் தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு, அருகில் தலையணைகளை அணை கட்டிக்கொண்டு உறங்குவாள்.

 

ஆனால் அதெல்லாம் தூக்கத்திற்கு பின் தலையணைகள் ஒரு புறம் அவள் போர்த்திருக்கும் போர்வை மறுபுறம் என்று பறந்து கிடப்பது எல்லாம் அவளுக்கு தெரிய வருவது கிடையாது.

 

அதை கதிர்நயனன் தான் எடுத்து மீண்டும் அவள் அருகே வைத்துவிட்டு, போர்த்தி விடுபவனோ அவள் அருகில் படுத்து உறங்கி விடுவான்.

 

காலையில் எழுந்திருக்கும் அம்மணியோ தான் இருவருக்கும் இடையில் அடுக்கி வைத்த அணைக்கட்டு ஒரு இன்ச் கூட அலுங்காமல் குலுங்காமல் இருப்பதை எண்ணி.. தான் ஒரு இன்ச் கூட நகராமல் படுத்திருந்ததாக நினைத்து வியந்துக் கொள்வாள்.

 

இரவெல்லாம் இவள் ஒவ்வொரு முறை உதறி எறிந்து தள்ளிய தலையணைகளையும் பொறுமையாய் எடுத்து, பின்‌ அவளுக்கு போர்த்துவது அவனின் தலையாய கடமையாக இருந்தது, பாவம் அவள் எங்கணம் அறிவாள்?

 

மறுநாளில் இருந்து அவளுக்காக பிரத்யேக காரும் டிரைவரும் காத்திருக்க.. கதிர்நயனன் சொன்னபடி செய்து விட்டான் என்பதில் மனம் ஒருவித மகிழ்ச்சியில் இருந்தாலும்.. ஏனோ சிறு மூலையில் ஒரு வெறுமைப் படருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. 

 

‘ஆனாலும் இதுதான் நிதர்சனம்..! இனி இப்படித்தான் பழகிக்கொள்ள வேண்டும்..! எதற்கும் மாமாவை சார்ந்து இருக்கக் கூடாது..!’ என்று திடமாக முடிவெடுத்தவள், அதன்பின் நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்கள் என்று அவர்களோடு சிறிது பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பின் நாட்கள் அவளுக்கு இலகுவாக கழிந்தது. 

 

இப்படியாக ஒரு வாரம் கழிந்த நிலையில் அன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஆதிராவும் ஆர்யனும் வந்துவிட்டார்கள்.

 

என்ன இன்று அவர்களோடு அவர்களது அன்னையும் இவளது சித்தியுமான அபிராமியும் வந்திருக்க.. இவளால் தான் இலகுவாக இருக்க முடியவில்லை அவர்களோடு. 

 

அபிராமியும் ரவீந்திரனும் பர்வத்தம்மாளோட பேசிக் கொண்டிருக்க கீழே ஆர்யா மற்றும் ஆதிராவின் சத்தம் கேட்டதும் தான் இவள் சோம்பல் முறித்து எழுந்தாள். 

 

இன்று வெளியே செல்ல வேண்டும் என்று நினைப்பே அவளுக்கு வரவில்லை.

 

முதல் நாள் ஒரு வயது குழந்தை சிறிய பாட்டில் மூடியை விழுங்கி விட்டது என்று பெற்றோர்கள் பதறி வந்திருக்க.. போராடி அந்த குழந்தையை காப்பாற்றுவது பெரியதாயிற்று.

 

அதிலும் அதற்கு பின்னும் சுவாசக் கோளாறு ஏதாவது வருகிறதா? வேற ஏதேனும் பக்க விளைவுகள் வருகிறதா? என்று இரண்டு மணி வரை அங்கே இருந்து குழந்தை நலம் பெற்ற பின்பு விடியற்காலை 5 மணி போல தான் வீட்டிற்கு வந்திருந்தாள் பிரக்யா. 

 

பர்வதம்மாள் 10 மணி ஆகியும் பேத்தி வரவில்லை என்று கவலை கொண்டு ஃபோன் செய்யும் போது தான், அந்த விவரத்தை கூறியவள் “மாமா.. மாமா கிட்ட நீங்களே சொல்லிடுங்க. எனக்கு இப்ப டைம் இல்ல” என்று கூறி விட இவர் கதிர்நயனனுக்கு அழைத்து கூறி விட்டார்.

 

அவளின் அனைத்து விஷயங்களும் அவன் கைவிரல் நுனியில் வைத்திருக்கானே..

 

“எனக்கு தெரியும் மா.. நான் பார்த்துக்குறேன். நீங்க தூங்குங்க” என்றவன் இவளுக்கு தொந்தரவு தராமல் மருத்துவமனை வந்து அவன் அலுவலக அறையிலேயே உறங்கி விட்டான்.

 

இவள் அந்த குழந்தையை பார்ப்பதும் சிறிது நேரம் கழித்து வந்து தன் அறையில் ஓய்வு எடுப்பதும்.. இப்படி மாறி மாறி இருந்ததையும்.. அவ்வப்போது பார்த்துக் கொண்டான்.

 

காலை 5 மணி அளவில் எழுந்து அரை குறை தூக்கத்தில் இருந்த அவளையும் வீட்டுக்கு அழைத்து வந்தவன், “நல்லா தூங்கி ரெஸ்ட் எடு” என்று விட்டு இவன் சென்றுவிட… அதெல்லாம் அவளுக்கு காதிலே விழவில்லை படுத்ததும் உறக்கம் தான்.

 

இவளோ நன்கு அயர்ந்து உறங்கி இப்பொழுது தங்கை தம்பி சத்தத்தில் தான் கண்விழித்தாள். அதுவும் தொடர்ச்சியாக அவர்கள் அறை கதவை தட்டிய சத்தத்தில்..!

 

“இருங்கடா வரேன்..!" என்று குரல் கரகரக்க எழுந்து சென்று கதவை திறந்தவளை கண்டவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர் 

 

பிரக்யா ஊருக்கு வந்த உடனேயே இவளை அறையில் சென்று பார்க்கணும் என்று துடித்த இருவரையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் பர்வதத்தம்மாள். 

 

“இங்க பாருங்க உங்க அக்கா முன்ன மாதிரி உங்களுக்கு மட்டும் அக்கா கிடையாது. இப்போ உங்களுக்கு அத்தையும் கூட.. உங்க மாமனுக்கு பொண்டாட்டி. அதனால அவங்க ரூம்ல இருக்கும் போது நீங்க நுழையக்கூடாது” என்றதும் முதலில் “வொய்.. வொய்..??” என்று இழுத்தவர்கள்..

 

பின் “ஓஓஓஓ..!” என்று ராகம் பாடினார்கள்..!

 

“வாலுங்களா..!” என்று பர்வதத்தம்மாள் அவர்கள் தலையில் தட்டி சிரித்தார்.

 

இவர்களுக்குள்ளே என்ன நடந்தது எல்லாம் அந்த நேரத்தில் அவர்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை..! தெரியப்படுத்தவில்லை யாவரும்..!

 

பிரக்யா மேற்படிப்புக்காக யு.எஸ் சென்றிருக்கிறாள். அங்கே சிறிது காலம் வேலை செய்துக் கொண்டிருக்கிறாள் என்று தான் சொல்லப்பட்டிருந்தது அவர்களுக்கு..!

 

இப்போதுதான் ஊரில் இருந்து அக்காவும் திரும்பி வந்திருக்க அக்கா மாமாவின் தனிமையில் அந்தரங்கத்தில் தாங்கள் தலையிடக்கூடாது என்பதும் அதனை அம்மம்மா இருவருக்கும் படித்து படித்து சொல்லி இருக்க.. நல்ல பிள்ளையாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள்,

 

‘இன்று அவுட்டிங் செல்ல வேண்டுமே.!’ என்று விடாமல் அறை கதவை தட்டி வெளியே இழுத்து இருந்தனர் அவளை.

 

அதுவும் வந்த அவளின் தோற்றத்தை பார்த்து இருவருக்குள்ளும் ரகசிய சிரிப்பு..!

 

ஆம்.. கண்களெல்லாம் சிவந்து.. இமைகள் தடித்து.. முகமோ சற்று ஊதினாற் போன்று.. குரலோ கரகரவென்று.. தலையெல்லாம் கலைந்து அலுங்கி.. நலுங்கிய தோற்றத்தோடு அவள் வந்து கதவில் கைபிடித்தபடி அதில் தலையை சாய்த்து நின்றாள்.

 

“வாலுங்களா.. என்னங்கடா காலையிலேயே தரிசனம் கொடுத்து இருக்கீங்க? என்ன விஷயம்?” என்று மீண்டும் தலையை கதவில் சாய்த்துக்கொண்டு விட்ட தூக்கத்தை தொடர முயன்றாள்.

 

“ஏய் அக்காடி.. இன்னைக்கு என்ன சொன்னோம் அவுட்டிங் வெளில போகணும்னு சொன்னோமா இல்லையா? நீ என்னடி இப்படி தூங்கி வழியுற?” என்று அவள் புஜத்தை பிடித்து உலுக்கினாள் ஆதிரா. 

 

“ஆஆஆஆ.. எரும.. எருமை.. கை வலிக்குது எரும..” என்று புஜத்தில் இருந்து அவள் கையை தட்டி விட்டவள் தனது கையை நீவிக் கொண்டாள்.

 

இப்பொழுது புதிதாக காலேஜுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இவர்களுக்கு அக்காவுக்கும் மாமாவுக்கும் நிறைய ரொமான்ஸ் நடந்திருக்கும் போலயே.. அதற்காக தான் அக்கா எப்படி இருக்கிறாள்.. உடலில் கை வைத்தாலே வலிக்கிறது என்கிறாள்.. என்று மீண்டும் ரகசிய சிரிப்பு இருவருக்கும்..!

 

“அறிவு இருக்காடி ஆதி உனக்கு.. அக்காவே டயர்டா இருக்கா?” என்றான் குறுஞ்சிரிப்போடு ஆர்யா.

 

அதுவரை இவர்கள் பேசியதை புரியாமல் அவளும் “ஆமடா ஆரு.. ரொம்ப டயர்டா இருக்குடா. நம்ம வேணும்னா அடுத்த வீக் எண்டு பிளானை மாத்திப்போமா?” என்றாள் அரை கண்களை மூடியபடியே..!

 

“என்னது அடுத்த வாரமா? வாய்ப்பே இல்லை..! எங்க அம்மா ஆனந்தவல்லி அபிராம சுந்தரிய கஷ்டப்பட்டு சம்மதிக்க வைத்து கூட்டிட்டு வந்திருக்கோம்.. அடுத்த வாரம் முடியவே முடியாது..! எங்கள எங்க ஆத்தா வையும்.!” என்று கண்ணை கசக்கிக் கொண்டு கூறிய ஆதிராவை பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது.

 

அதே நேரம் “சித்தி வந்திருக்காங்களா?” என்று கேட்டவளின் உடலோ அலார்ட் மோடுக்கு போக.. 

 

“சரி நீங்க கீழே போங்க நான் ரெடி ஆயிட்டு வரேன்” என்றாள் செல்லும் அவர்களிடம்,

 

“டேய் ஆரு எங்கடா உங்க மாமா?” என்று கேட்க..

 

“அது கூட தெரியாமல் தான் நீ கும்பகர்ணியாட்டம் தூங்குனியா.. விளங்கிடும்..!” என்று அவன் சிரிக்க..

 

“அவ்வளோ உழைச்ச எங்க மாமாவே காலைல சீக்கிரம் எழுந்து வந்து அவர் அக்கா கிட்ட பொறுமையாக பேசிட்டு இருக்காரு தெரியுமா?” என்று கண் சிமிட்டி ஆதி கூற.. 

 

அப்பொழுதுதான் அவளுக்கு அவர்களின் நக்கல் புரிய “வந்தேனோ வச்சுக்கோ அவ்வளவு தான்..! பிள்ளைகளாடா நீங்களெல்லாம்.. பிசாசுகளா.. எருமைகளா.. ஓடிடுங்க..!” என்று திட்டியபடி குளிக்க சென்றாள்.

 

குளித்து முடித்து தயாராக கீழே வந்தவள் மனம் இலகு தன்மை இழந்து ஒருவித இறுக்கத்தை போர்த்திக் கொள்ள.. உடல் மொழியும் அதை தெளிவாக காட்டியது.

 

அக்காவிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் கதிர்நயனன் நயனங்கள் அவளின் உடல் மாற்றங்களை கிரஹித்துக் கொண்டுதான் இருந்தது.

 

“வாங்க சித்தி.. வாங்க சித்தப்பா..” என்று ஃபார்மலாக அழைத்த படி அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமரப்போனவளை,

 

“இங்க வந்து உட்காரு உமை..!” என்று அழுத்தமாக அழைத்த கதிர்நயனன் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அமைதியாக சென்று அவன் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள் காரிகை. 

 

“இதுதான் ஒரு பொம்பள புள்ள எந்திரிச்சு வர நேரமா? முன்ன எப்படியோ..! இப்ப நீ இந்த வீட்டுக்கு மருமக.. என் தம்பி பொண்டாட்டி..! வீட்டுக்கு விருந்தாளியா நாங்க வந்து இருக்கோம்.. இந்த வீட்ல பொறந்த பொண்ணு நானு..! நேரத்தோடு எந்திரிச்சு வந்து எங்களுக்கு உபசரிக்கணும் கவனிக்கணும் உனக்கு எண்ணமே இல்லையா? இன்னமும் அதே பொறுப்பில்லாத தனத்தோட தான் சுத்திக்கிட்டு இருக்கியா நீனு?” என்று அவர் பாட்டில் பொரிய..

 

அவர் என்ன எல்லாம் கூறுவார் என்று அறிந்து அவர் அங்க பேசி இங்கே வாய அசைத்தபடி கீழே குனிந்து இருந்த மனைவியை கண்டு கொண்டான் கதிர்நயனன்.

 

அதேநேரம் முன்னே தெரியாதது.. புரியாதது.. இப்பொழுது அவனுக்கு நன்கு புரிந்தது..!

 

“அக்கா நிறுத்து..! நீ பாட்டுக்கு வந்த உடனே பேசிக்கிட்டே இருக்க. அவ ஒரு டாக்டர். நேத்து ஒரு குழந்தை உயிரை காப்பாத்திட்டு நைட் எல்லாம் தூக்கம் இல்லாம காலைல அஞ்சு மணிக்கு தான் வந்து தூங்கி இருக்கா.. நீ வரதை முன்னாடியே ஏதும் இன்ஃபார்ம் பண்ணியா இல்ல தானே? அப்புறம் எதுக்கு அவளை குத்தம் சொல்ற? நீ எப்படி பொறந்த பொண்ணோ.. அது மாதிரி அவ இந்த வீட்டு பொண்ணு. அவ உனக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிறியோ அதே மாதிரியே தம்பி பொண்டாட்டிக்கு நீயும் சில மரியாதைகள கொடுத்து தான் ஆகணும்..! அவ ஒன்னும் உன் அக்கா பொண்ணு மட்டும் கிடையாது.. இந்த வீட்டு மருமக..!” அழுத்தம் தி

ருத்தமாக கூறிய கதிர் நயனனை அபிராமி அதிர்ச்சியோடு பார்த்தார் என்றால்..

 

பிரக்யாவோ பேரதிர்ச்சியாக பார்த்தாள்..!

 

'ஐயையோ இந்த மாமா போற போக்கே சரியில்லையே..!' என்று..!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top