37
அப்படி என்ன இடம் இது?' என்று சுற்றும் முற்றும் பார்த்தவளின் நினைவடுக்குகளில் இருந்து வெளிவந்தது அந்த திருவிழா நாட்கள்.
'சச்சீ.. எரும.. எப்ப பாரு இவனுக்கு இதே நினைப்புதான்! எதை ஞாபகம் வைத்து கேக்குறான் பாரு!' என்று சட்டென முகம் சிவந்தாள். அந்தச் சிவப்பு கோபத்திலா? நாணத்திலா? என்று புரியாத அவளது கணவன் அவளது அருகில் நெருங்கி அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டான்.
"நீயி இன்னும் கோதை பேசினதே நினைச்சுட்டு இருக்கிறியா தீரா? அவள் பேசுனது எவ்வளவு அபத்தமான அவளுக்கு வேணா புரியாமல் இருக்கலாம். உனக்குமா புரியல?" என்றவனை யோசனையோடு நெற்றி சுருங்க இவள் பார்த்தாள்.
"நீயி வீராவின் பொண்டாட்டி டி!! வீராவுக்கு மட்டுந்தேன் பொண்டாட்டி!! வேற எவனுக்கும் இல்லை.. அது அவளுக்கு வேணும்னாலும் தெரியாமல் இருக்கலாம்.. உனக்குக் கூடவா தெரியல?" என்று அவன் கேட்ட விதத்தில் உள்ளுக்குள் இவளுக்கு நடுங்கியது.
"என்..ன.. என்ன.. சொல்ற நீயி?" என்று திக்கித் திணறி வெளிவந்தது அவளது வார்த்தைகள்.
"அதான்.. உன்னை மனதாலும் உடலாலும் தொட்ட ஒரு ஆண்மகன் இந்த வீரா மட்டும்தேன்!!" என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து..
அவன் கண்களை சில நிமிடங்கள் உற்று பார்த்தவள் அவன் சொன்ன செய்தியின் தாக்கம் புரிந்து தன் கைகளை அவன் கையிலிருந்து பிடுங்கி கொண்டு "அத..அதெல்லாம் ஒன்னும் இல்ல.. யார் சொன்னா உனக்கு நீதேன் எனக்கு முதல்லனு? உனக்கு முன்னாடி சஞ்சயன்…" என்று சொல்ல வந்தவளின் தாடையை பற்றி தன் புறம் இழுத்தவன்..
"எனக்கு தெரியும்.. நான் உன் கூட சேர்ந்த போது நீ கன்னியா இல்லையானு!!" என்றவனின் கூற்றில் அவள் முகத்தை திருப்பி கொள்ள முயல.. அதற்கு இடமளிக்காமல் அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.
"அதுமட்டுமல்ல இன்னொரு விஷயமும் எனக்கு தெரியும்! அதாவது உன் மனசுல இருந்தது நான்.. நான் மட்டும்தேன்!!" என்றவுடன் அவளின் நடுக்கம் இன்னும் கூடியது. அவள் ஆழ் மன ரகசியத்தை அறிந்துக் கொண்டதால்..
"இங்க பாரு தீரா.. உன் மனசு தெரிஞ்சுதான் உன் கழுத்தில் தாலி கட்டி என் பொண்டாட்டியா நான் கூட்டிட்டு வந்தேன். ஆனாலும் இன்னும் நீயி உன் மனசை பூட்டுக்கிறது கொஞ்சம் கூட சரியில்ல.. பேசுடி!! என்கிட்ட உன் மனசுவிட்டு பேசு டி!!" என்றான்.
"ஹலோ.. நீயி மட்டும் எல்லாத்தையும் உன் மனச விட்டு என்னிடம் பேசினியா?" என்பது போல பார்வை பார்த்தாள். அவளின் பார்வையின் அர்த்தத்தை வழக்கம்போல படித்தவன் உதடு கடித்து கீழே குனிந்து சிரித்தான். பின் இடது வலமாக தலையை ஆட்டி.. "இப்ப என்ன சொல்லணும் நானு? ஆமா நான் உன்னைய லவ் பண்ணுனவன் தேன். அந்த லவ்வ உன் கிட்ட சொன்னவன் தேன். நீ கிடைக்க மாட்டேனு தெரிஞ்சு இதே இடத்துல பித்து பிடிச்சு போய் அலைஞ்சவன் தேன்.. திரும்ப ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது உன்னைய தவற விட முடியாமல் வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டவன் தேன்.. எனக்கு என்னோட தீரா எப்பவும் யேன் பக்கத்திலேயே இருக்கணும்.. அதற்காக எதையும் செய்வேன்!! அவளுக்காக எதையும் செய்வேன்!!" என்று அவள் முன்னே அமர்ந்து கூறியவனை பார்த்தவளுக்கு நெஞ்சம் கொஞ்சம் நெகிழ்ந்தது!!
அப்பொழுது அவள் மனதில் சஞ்சயன் இல்லை. அவனது மரணம் இல்லை. அவன் மீது அவள் கொண்ட கோபம் இல்லை. உள்ளே புதைந்து இருந்த காதல் அவனது வார்த்தைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து மனதை நிறைக்க அவனையே காதலாக பார்த்தாள் பெண்.
இதுவரை அவன் காண ஏங்கியிருந்த கண்கள்!!
இதுவரை அவன் மீதான காதலை காட்டாத கண்கள்!!
இன்று அனைத்தையும் உடைத்து இரு கண்களிலும் காதலை மட்டுமே தேக்கி தண்ணீரோடு பார்க்கும் மனைவியை இறுக்க தழுவிக்கொண்டான் வீரா. அவனது தழுவலில் சற்று நேரம் உறைந்திருந்த தீரா..
"ப்பொது இடம்… த்தள்ளிப்போங்க" என்று அவள் திரும்ப, அவள் பின் கழுத்தில் அவன் உதடுகள் கோலமிட்டன. அவன் பற்கள் அவள் பிடரியை கடிக்க.. அவன் நாக்கு நீண்டு பெண்ணின் முகத்தை திருப்பி இதழ்களுக்குள் தஞ்சம் அடைந்தது. அஸ்திராவின் கோபம் எல்லாம் எங்கோ பறந்து போனது.
அவனுக்குள் பிரவாகமெடுத்த மோகம் என்னும் போதை அவனது உடலின் நுண்ணிய நரம்புகளைக் கூட லயம் மாற வைத்திருந்தது. தீராவின் பெண்மை வாசத்தின் வசீகரம் அவனுக்குள் தீரா கிளர்ச்சியை தூண்ட.. அவன் ஆண்மை முறுக்கிக் கொண்டு அவளின் பெண்மையில் மோகம் கொண்டிருந்தது. அவளது புடவை மறைக்காத மெலிந்த இடுப்பில் தன் கையைப் படர விட்டு.. அவள் கன்னத்தில் மூக்கை உரசினான்.
அவனின் மோமத்தை அவளுள் அவன் கடத்த, அவனைப் பார்த்த அவள் விழிகள் கிறக்கத்தில் மின்னியது. அவளது உதடுகள் பிளந்து.. அவனிடம் 'என்னைக் கவ்விக் கொள்ளேன் ' என்றது. அவளின் இடையை இறுக்கிப் பிடித்து தன்னோடு அணைத்தவனின் உதடுகள் ஊர்ந்து வந்து அவள் உதடுகளைக் கவ்விக் கொண்டது.
உடம்பிலும் மனசிலும் ஒரு புத்துணர்ச்சி பிறந்திருந்தது. பெண் சுகம் என்பது ஒரு மிகப்பெரிய போதை!! அதுவும் காதல் கொண்ட பெண் என்றால் ராஜ போதை!! என்பதை இப்போது அனுபவப் பூர்வமாக உணர்ந்தான் வீரா.
தன்னை காதலோடு பார்க்கும் இந்த கண்கள் அவனுக்கு புதிது!!
தான் கொடுக்கும் முத்தத்திற்கு சிணுங்கும் இந்த வெட்கம் புதிது!!
தன் அணைப்பிற்கு குழைந்து நெளிந்து கரையும் இந்த தேகம் புதிது!!
தனது மீசை உரசிலில் எல்லாம் சிலிர்த்து சிணுங்கும் இந்த குரல் புதிது!!
மனைவியே புதிதாக தான் தெரிந்தாள்.. இல்லையில்லை காதலியாக தெரிந்தாள்!!
இம்முறை தன்னவளிடத்தில் அனுமதி பெற அவள் கண்களைப் பார்க்க.. நாணம் கொண்ட விழிகளோ இமை எனும் சிறகை விரித்து மூடிக்கொண்டது.
எங்கனம் மறுப்பாள் பெண்? அவளின் அன்பும், பாசமும் அவன் மீதான பிடித்தமும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் மிகவும் நெருக்கமாக்கியிருக்கிறது.
மெல்ல அவளது சிப்பி இதழ்களை தன் இதழ்களுள் அதக்கி சுவைத்து அவன் வெளிவிட மனமில்லாமல் விட்டான். அவள் நாணம் கொண்டு அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளின் தளிர் விரல்களை தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு விரலாக நீவிவிட்டுக் கொண்டே அவளது தலை மீது தன் தாடையை பதித்திருந்தான் வீரா. "உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லனும் தீரா.. அதுக்குதேன் உன்னைய இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்தேன். இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கு தானே??" என்றதும் இப்பொழுது வெட்கச்சிரிப்பு பெண்ணின் வதனத்தில்..
அதே நேரம் அவளது நினைவடுக்குகளில் மற்றொரு நிகழ்ச்சியும் வெளி வர அவள் உடம்பு லேசாக நடுங்க அவளை இறுக்கி கொண்டவன், அவள் கையை அழுத்தமாக பற்றி "சஞ்சயன்.. சஞ்சயன.. கொன்னது…" என்று அவன் ஆரம்பிக்க..
பயத்தோடு நிமிர்ந்து கணவன் முகத்தை பார்த்தாள் மனைவி என்ன சொல்வானோ என்று!!
அவளின் வெளிறிய முகத்தையும் பயத்தையும் கண்டவன் முகத்தை இரு கைகளில் ஏந்தி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு "சஞ்சயன் கொன்னது நான் இல்லடி!! சத்தியமா நான் இல்லை.. இதை நீயி நம்புறியா? எனக்கு இந்த உலகத்துல உன்னையும் என் குழந்தையும் தவிர முக்கியமானவுக.. உயிரானவுக யாரும் இல்ல. உங்க ரெண்டு பேரும் மேலையும் சத்தியமா சஞ்சயன கொன்னது நான் இல்ல டி தீரா!!" என்றான் உணர்ச்சி பிழம்யாய்..
ரொம்ப நாள் கழித்து அவளது முகத்தில் பெரும் நிம்மதி. வீரா எந்த ஒரு செயலையும் செய்தாலும் "நான் தேன் செய்தேன்!" என்று நெஞ்சை நிமிர்த்து சொல்லிக் கொள்பவன். அதுவும் சஞ்சயனை கொன்றானா? இல்லையா? என்பதெல்லாம் அவளுக்கு தெரியாது.
ஆனால் அன்றைய நிகழ்வின் போது இவள் கண்விழித்து பார்க்கும்போது உயிரற்ற சடலமாக கிடந்த சஞ்சயனின் அருகில் நின்று இருந்தவன் வீரா.. இருவரையும் அந்த கோலத்தில் பார்த்தவள் மீண்டும் மயக்கமுற்ற போக அதன் பின் அவள் கண்விழித்து பார்க்கும்போது இருந்தது அவர்களது வீட்டில்…
'அப்பாடி சஞ்சயனை கொன்றது என் கணவன் அல்ல!!
ஒரு உயிரைப் போக்கும் கொடூரமானவன் கிடையாது!!
அவன் வஞ்சகமாக வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டவனும் இல்லை!! அவன் நல்லவன்!! வீரன்!! எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் பெற்றவன்!!' என்று காதல் கொண்ட மனது அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் பூங்கொடியின் வார்த்தைகள் தான். அவளில் இருந்தே பார்க்காமல் சற்று தள்ளி நின்று பார்த்த பொழுது வீராவின் நியாயமும் புரிந்தது, அவள் மீதான அவனது அன்பு நேசம் காதல் அனைத்தும் புரிந்தது. அதையும் காட்டிலும் இவ்வளவு நாட்களாக மனதில் இருந்த அவளது காதல் வெளிப்பட.. அனைத்தும் சுபம்!! ஆனால் சஞ்சயன் மரணம் மட்டும் அவளை உறுத்திக் கொண்டே இருக்க இப்போது அதுவும் இல்லை..
இனி இந்த வழக்கை கணவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியில் இருந்தவளின் நிம்மதியைப் போக்க.. வந்து சேர்ந்தனர் அவ்விடத்திற்கு அஸ்திராவின் அப்பா அம்பலவாணன் அனுப்பிய ஆட்கள்.
எதிர்பாராத தருணத்தில் பின்னிருந்து அவர்கள் தாக்கியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தவன் வேகமாக எழுந்து மனைவிதான் பார்த்தான். அவள் ஒரு ஓரமாக உருண்டு கிடந்தாள்.
"அய்யோ.. தீரா.. அதுவும் அவள் வயிற்றில் குழந்தை வேறு இருக்கிறது" என்ற எண்ணத்தோடு அருகே ஓட முயல.. இன்னும் இருவர் வந்து தன்னோடு அவனை இறுக்கி கட்டிக்கொண்டனர். ஒருவன் சென்று அஸ்திராவின் முடியை பிடித்து இழுத்து எழுப்பி நிற்க வைத்தான்.
எப்பொழுதும் வீராவின் அந்த மர்ம அடிகளில் முதலில் நிலைகுலைந்து போனவர்கள், அடுத்த நொடி அஸ்திராவை அஸ்திவாரமாக கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்க நிலைகுலைந்து போனான் மன்னவன். அதில் உருட்டுக்கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒருவன் அடிக்க மயக்கத்தில் தள்ளாடிய கீழே விழுந்தான் வீரா.
"கழுத்துல உள்ள தாலிய கழட்டு டி!!" என்று ஒருவன் கேட்க..
"உயிரே போனாலும் தர மாட்டேன் டா.." என்றாள் அஸ்திரா அனல் கக்கும் விழிகளோடு..
"டேய் உயிருக்கு பயப்படாத பொண்ணுங்களையும் வழிக்கு கொண்டுவர ஒரே வழி.." என்று முகத்தில் கோணல் சிரிப்புடன் மற்றவர்களை இவன் பார்க்க.. அவர்களும் புரிந்தது போல் "நீ ஆரம்பி மாமா.. அடுத்தடுத்த நாங்களும் கலந்துகிறோம்!!" என்று அவள் அங்கங்களை பிடித்து தின்று விடுவது போல பார்த்தனர் அந்த காமுகர்கள்.
"சரக்கு வாங்கிட்டு வந்திருக்கலாம் மாமா!! சரக்கு வித் சூப்பர் பிகரோட நைட்டு நச்சுனு இருந்திருக்கும்!" என்று ஒருவன் ஆதங்கப்பட்டான்.
"விடு மாமா!! இங்கே ஃபர்ஸ்ட் ரவுண்ட் முடிச்சிட்டு, நம்ம எடத்துக்கு தூக்கிட்டு போய் இன்னொரு ரவுண்டு முடிச்சுடலாம்.. நீ சொன்ன மாதிரி சரக்கோட" என்று மற்றொருவன் அவன் தோளில் தட்டி சிரிக்க.. ஏதோ பெரிய நகைச்சுவை கேட்டது போலவே அந்த அயோக்கிய அரக்கர்கள் சிரித்தனர்.
அவர்கள் சிரித்துக் கொண்டிருந்த அந்த இலகுவான நேரத்தை பயன்படுத்தி இவள் ஒரே தள்ளாத தன் கை கால்களை பிடுங்கிக்கொண்டு எழுந்து ஓட முயற்சிக்க.. சட்டென்று ஒருவன் அவளது ப்ளவுஸை பற்றி இழுக்க முதுகு பின்னால் இருந்த பகுதி அவன் கையோடு வந்திருந்தது.
பாதி வெற்று முதுகோடு கீழே விழுந்து திரும்பவும் எழுந்தவள் ஓட.. மற்றொரு முரட்டு கை மற்றொரு முதுகுப்புறம் மீதமிருந்த ப்ளவுஸை இழுக்க முயன்று தோற்றாலும் சிறு பகுதி அவன் கையோடு வந்தது.
"டேய்!! இந்த விளையாட்டு கூட நல்லா தான்டா இருக்கு! நான் இப்போ அவ முன் பக்கம் போறேன்" என்று அடுத்தவன் கூறிக்கொண்டு அவளை விட வேகமாக ஓடி முன்னால் திரும்பி, அவள் முன் புறம் கை வைக்க வந்தவன் சட்டென்று எதனால தாக்கப்பட்டு தூரப் போய் ஆலமரத்தில் முட்டி விழுந்தான்.
மற்றவர்களோ பயத்துடன் திரும்பி பார்க்க அங்கே தன் கை முட்டியை உதறியபடி இவர்களை மூர்க்கமாக பார்த்தவாறு நின்றிருந்தான் வீரா..
நெற்றியில் வழியும் ரத்தத்தை ஒரு சிலுப்பு சிலுப்பி.. வேஷ்டியை மடித்துக் கொண்டு.. கையில் இருக்கும் காப்பை முறுக்கிக் கொண்டு.. அவன் நின்ற விதம் ருத்ரனாயிருக்க சற்றே மிரண்டு அவனைப் பார்த்தனர் இந்தக் கயவர்கள்.
அம்பலவாணன் அனுப்பி இருந்தாலும் இவர்கள் அடுத்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதனால் வீராவின் வீர பராக்கிரமும் தெரியாது. அஸ்திரா அம்பலவாணனின் உறவு முறையும் தெரியாது.
"அந்த பெண்ணிடமிருந்து தாலியை பறித்து, அவனை கொன்று விட்டு வாருங்கள்!" என்பதுதான் அவர்களுக்கு கொடுத்த வேலை. வந்த இடத்தில் பெண்ணும் நன்றாக இருக்க.. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயன்றனர் இந்த அற்ப ஜந்துக்கள்.
நங்கையின் நேத்திரத்தில் தன் அத்தாரத்தை முத்தாரமாக பதித்து விட்டு அவர்களை அழிக்க விரைந்து சென்றவனை பார்த்துக் கொண்டே இருந்த தீரா மயங்கி சரிந்தாள். ஆனால் இதழ்களோ புன்னகையில் விரிந்த படி இருந்தது தன்னவன் தந்த நம்பிக்கையில்..
ஆனால்
அந்த நம்பிக்கை பொய்த்து கத்தி குத்து வாங்கி இரத்த வெள்ளத்தில் கிடந்தான் வீரா!!
தீருமோ தாகம்!!
