அத்தியாயம் 27
“அடியே.. என்ன டி இது? என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அதுவும் வீட்டுக்குள்ள?” என்று தங்கையை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தாள் மீரா.
”பாருங்க அண்ணி.. என்னை புடிச்சிருக்காங்க பாருங்க உங்க தங்கச்சிய.. சொல்ல சொல்ல கேட்கவே மாட்டேங்கிறாங்க” என்று போலியாய் நடித்தவனை சீற்றமாய் பார்த்தாள் ராதா.
ஓங்கிய அவள் கை அவளை அடிக்கும் முன் ராதா அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். ஆனால் கண்ணா ராதா கையைப் பிடித்து சட்டென இழுத்து என் மேல் சாய்த்துக் கொண்டான்.!!
இந்த செயலை எதிர் பார்க்காத மீரா அதிர்ச்சியோடு பார்க்க.. ராதா திணறி.. தடுமாறி அவன் மேல் சரிந்தாள். ஒரு நொடியில் அவன் கை அவள் இடுப்பை வளைக்க.. அவன் உதடுகளும் அவள் உதடுகளும் கவ்வின..!
ராதா சுதாரித்து அவனிடமிருந்து மீண்ட போது.. மீரா திறந்த வாய் மூடாமல் அவர்களைப் பார்த்தக் கொண்டிருந்தாள். கண்ணா மிக இயல்பாக எழுந்து.. மீண்டும் ராதாவை இழுத்துப் பிடித்து தன் கை வளைவில் வைத்தவன்,
“நாங்க ரெண்டு பேரும் அஞ்சு வருஷமா லவ் பண்றோமா அண்ணி..” என்றதும் இப்பொழுது மீரா திருப்பிட்டு தங்கையை பார்க்க அவளோ முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டாள் அக்காவை கண்டு பயந்து.
“தயவு செய்து எங்க லவ்வ..” என்று கண்ணா ஆரம்பிக்கும்போது “வீட்ல சொல்ல கூடாது அதான?” என்று அதட்டலாக முடித்தாள் மீரா.
“சேச்சே அப்படி எல்லாம் இல்ல அண்ணி.. நீங்க சொல்லாம போனா வேற யாரு எங்கள பத்தி எடுத்து சொல்லி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பா? அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்க காதல வீட்ல உள்ள பெரியவங்க காதுல எல்லாம் ஓதி.. சீக்கிரமே எங்களுக்கும் தம்பதிங்க ஆக்குங்க அண்ணி.. ப்ளீஸ்” என்று அண்ணி முன்னால் காதலியோடு இளித்துக் கொண்டு நின்றிருந்த கண்ணனாவை ஆவென்று வாய் திறந்து பார்த்தாள் மீரா.
அப்புறம் என்ன இவ்வளவு நாள் காதல் என்றால் கலைத்து விட்டவள்.. முதன்முறையாக தங்கையின் காதலை வீட்டில் சொல்லி சேர்த்து வைத்தாள்.
அன்று நெருங்கிய சொந்தங்களை மட்டும் கூப்பிட்டு வீட்டோடு ஒப்புத்தாம்பாளம் மாற்றப்பட்டது. ராஜநாராயணனுக்கு மனதெல்லாம் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. இரண்டு பெண்களும் ஒரே வீட்டில்.. மருமகன்கள் இருவரும் அவருக்கு மகன்களை போல மனுசனை கையால் பிடிக்கவே முடியவில்லை இப்போது எல்லாம்.
ஒரு வாரம் என்று அம்மா வீட்டுக்கு சென்றவள் அதர் பின் ராதாவின் காதல் விவகாரம் வெளியே தெரிய.. அப்படி இப்படி என்ற பேச்சு வார்த்தை ஒரு வாரம் சென்று விட, ஒப்புத்தாம்பாளம் மிடுத்து இதோ 20 நாட்களுக்குப் பின் தான் கணவன் வீட்டிற்கு வந்திருந்தாள் மீரா.
அழகு கொஞ்சும் அவளது முகத்தில் மலர்ச்சியும்.. தேன் சிந்தும் இதழ்களில்
புன்னகையும் தவழ்ந்தது..!
தன் ஆபிஸ் டேபிளில் அமர்ந்து லேப்டாப்பில் முக்கியமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்.
அவளே இருக்கையை நகர்த்திப் போட்டு அமர்ந்தாள் அவன் அருகே. அவனும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் பேசவே இல்லை. அவளோ அவனை விடுவதாக இல்லை.
”தனியா இருக்க போரடிக்கலையா புருஷ்..??” அவனை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
”ம்கூம். .!!” என்றவன் சிரிப்பை வாய்க்குள் மறைத்தான்.
‘இருவது நாளா அவளையே நினைத்து நினைத்து
உருகிக்கொண்டிருப்பவனுக்கு.போராவது.. இன்னொன்னாவது..??’ மனதினுள் புழுங்கிக் கொண்டான்.
”எனக்குலாம்.. செம போரிங்கா இருந்துச்சு புருஷன்” பின்னால் இருந்த முந்தானையை
எடுத்து அழகாக மடித்து மடியில் வைத்துக் கொண்டாள். முந்தானைக்குள் விம்மி
நின்ற அவளது இளமைகள்.. புடவையில் அழகாகக் காட்டியது. கூடவே மார்பில் தவழ்ந்த தாலிக்கொடியும் அவன் அணிவித்த சங்கிலியும்
பிணைந்த நிலையில்.. இன்னுமோர் பேரழகு..!!
”கூட ஆள் இருந்தா போரடிக்காதாம். உனக்கு தான் அம்மா வீட்டில் ஒரு கூட்டமே இருந்துச்சே.. அப்புறம் எப்படி போர் அடிக்கும்?” இத்தனை நாளாக பிரிந்து இருந்தவளை குற்றம் சாட்டினான். ஆனால் அவன் பார்வை மேயும் இடத்தை சிரமத்துடன் மாற்றிக்கொண்டு சொன்னான்.
”ஆஹா..” அழகு முகத்தில் வெட்கம் படரச் சிரித்தாள். பின் இருவரும் அமைதியாக மற்றவர் இருப்பை ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த இருபது நாள் பிரிவு இருவரையும் அத்தனை தேட வைத்திருந்தது தங்கள் இணையினை..! ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. அழகே உருவாய் அருகே இருக்கும் மனைவியை அணைக்க முடியாமல் அவஸ்தையாய் அமர்ந்திருந்தான் ஆண்மகன்.
“உங்களுக்கு வலிக்கலையா கிருஷ்?” என்று அவள் ஆரம்பிக்க..
“இல்லை.” என்று தலையசைத்தான் அவன்.
“ஆனா.. எனக்கு.. எனக்கு.. ரொம்ப வலிக்குதே..??” என்றாள் சிணுங்கலோடு.
”வாட்..??” அவள் எதை கூறுகின்றாள் என்று புரிந்து அவன் திடுக்கிட..
மெதுவாக எழுந்து நின்றவள்.
“நீங்க என்னை விரும்பறீங்க தானே..??” அவனை நேரடியாகப் பார்த்துக் கேட்டாள்.
“போடி லூசு..” என்றவன் எழுந்துக் கொள்ள..
“என் கடந்த காலம்.. உங்க கடந்த காலம் எதுவும் இப்ப இல்லைல..” என்று அவள் கேட்க..
இதற்கு தான் என்ன பதில் சொல்லுவது..? நான் சும்மா விட்டாலும் இவள் விட மாட்டாள் போலிருக்கே..? அடியே எக்கு தப்பா ஆக போகுது டி.. தள்ளி போடி’ என்று தவித்தான்.
சில நொடிகள் அவனையே
வெறித்தாள்! அவள் கண்கள் அவன் மேல் நிலைத்திருந்த போதும்.. அதன் எண்ண அலைகள் வேறு எங்கோ இருப்பது போலத் தோன்றியது..!!
ஒரு முறை மார்பு விம்ம.. மூச்சை ஆழமாக இழுத்து விட்டவள்,
”ஓகே.. இதுக்கு நான் ஒரு முடிவு கட்றேன்” எனச் சொல்லிவிட்டு.. மெல்ல
நடந்து சென்று அறை கதவைச் சாத்தினாள்.
அவன் திகைத்த முகத்துடனும்.. திறந்த வாயுடனும்.. அவளையே பார்த்துக்
கொண்டிருந்தான். அவளது செயலில் இருக்கும் விபரீதத்தை உணரத்தொடங்கியதும், அவன் உடம்பில் ஒரு நடுக்கம் பரவத் தொடங்கியது.கதவைச் சாத்தி தாழ் போட்டு.. மெதுவாகத் திரும்பி அவனிடம் வந்தாள்.
”ஏ.. ஏய்.. மீரு.. நீ.. நீ.. நீ என்ன பண்ற? புரிஞ்சுதான் பற்றியா?” நடுங்கியது அவன் உதடுகள். அவளைக் காயப்படுத்த கூடாது என்று மனம் பதப்பதைத்தது.
அவனைப் பார்த்துக்கொண்டே..
அவளது இடது தோளில் கை வைத்தவள், பிளவுசுடன் சேர்த்து பின் செய்திருந்த
முந்தானையை தோளில் இருந்து நீக்கினாள்!
”ஏய்.. மீரு.. எ.. என்ன.. இது..?? ஏன் இப்படி.. லூசு மாதிரி.. ச்ச..!!
இப்படி பண்ணாத ப்ளீஸ்ஸ்ஸ்..!!” அவன் என்ன உணர்கிறேன் என்று அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.. அவன் மனம் பதைக்க.. வாய் குளறினாலும்.. அவன் கண்கள்.. அவளது செழித்த இளமைகளை
காணத்தவறவில்லை..!!
அவன் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை. அவள்
முந்தானையை தோளில் இருந்து நீக்கியிருந்தாள்.
அவன் அவளை விரும்பியது.. இந்த உடம்புக்காகவா..?? சே..!!
”மிரு ப்ளீஸ்ஸ்ஸ்.. என்ன இது..?? சேரிய கட்டு மொதல்ல..!! நான் உன்ன
விரும்புறது உண்மை..!! ஆனா.. ஆனா… அதுக்காக.. இப்படி உன் உடம்பை.. சே..!!
வேண்டாம் ப்ளீஸ்ஸ்ஸ்… மூடிக்கோ…!!” அவன் மனசுக்கு எதிராக அவன் பேசுகிறேன்
என்பதை அவன் மூளை அவனுக்கு உணர்த்தியது..!!
மெல்லச் சிரித்தவாறு உருவிய புடவையை இருக்கை மீது போட்டுவிட்டு கட்டிலுக்கு பக்கத்தில் அவனை
நெருங்கி வந்தாள்..!!
”ஏன் கிருஷ் என்மேல் லவ் இல்லையா உங்களுக்கு? நான் உங்க பொண்டாட்டி தானே?”
”பயங்கர லவ் இருக்கு..!! பட்.. அது இப்படி பட்ட லவ் இல்ல. நான் ஆசைப்படுறது உன் உடம்பை இல்ல மீரு.. உன்னை..”
”ஓஹ்ஹோ… என் உடம்பு வேற.. நான் வேறையா? இவ்வளவு நாளா இதை யாரும் என்கிட்ட சொல்லலயே..??” அவள் குரலில் கொஞ்சம் நக்கல் தெறித்தது.
அவனுக்கு முன் கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து ஒரு காலை நிலத்தில் ஊன்றிக்கொண்டு.. இன்னொரு காலை மடக்கி.. மெத்தை மீது வைத்துக் கொண்டு நின்றாள்.
“ப்ளீஸ் மீரு இது வேணாம்..!! இட்ஸ் டூ பேட்..!! ட்ரஸ் பண்ணிக்கோ..!!”
கெஞ்சும் குரலில் சொன்னான்.
”வொய்..?? வாட்ஸ் ராங்..??” அவள் வலது கையை நீட்டி அவன் தோளைத் தொட்டாள்.
”நான் உன்னத்தான் விரும்புறேன் தான். நம் கூடல் புரிதலோடு காதலோடு நடக்கணும். இப்படி நான் வருத்தப்படுகிறேன்னு காரணத்துக்காக இல்லை” சீரியஸான
குரலில் சொன்னான்.
”என்ன இது சின்ன புள்ள மாதிரி திரும்ப திரும்ப.. ஒன்னையே
சொல்லிகிட்டு?” என்று அவள் அதட்டலாக கேட்க..
”வார்த்தைய பாக்காத.. அர்த்தத்த பாரு டி” என்று தவித்தான்.
மெத்தென்ற அவள் கை அவன் தோளை தொட்டதும்.. அவனுள்ளும் மின் அதிர்வலைகள் எழத்தொடங்கியது.
”என்ன அர்த்தம்..?? எங்கே சொல்லுங்க..நானும்தான் தெரிஞ்சுக்குறேனே..??”
இன்னும் உள்ளே நகர்ந்து.. அவள் இதழ்களை அவன் முகத்தருகில் கொண்டு வந்தாள்.
அவளை பார்த்து திணறிக்கொண்டு.. முகத்துக்கு பார்வையை மாற்றியவன்,
”நான்.. உன்கூட சேர்ந்து காலம்பூரா வாழத்தான் ஆசைப்படுறேன் மீரு. அது காதலால் தான் சேரணும்.
ப்ளீஸ்ஸ்ஸ் புரிஞ்சுக்க..”
”ஓ..!!” என்னையே குறுகுறுவெனப் பார்த்தாள்
”அப்ப என் மேல
உங்களுக்கு ஆசை இல்ல..??”
”கொள்ளை ஆசை இல்ல.. அதை விட உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு அக்கறை நிறைய இருக்கு” விளக்கினேன்.
“ஓ…. அப்படி வரீங்க..!! ஓகே.. நானா வர்றதனால உங்களுக்கு விருப்பமில்லை அப்படித்தானே? இதுவே நீங்களா வந்து கேட்டிருந்தா.. ஆக மொத்தம் ஒரு பொண்ணா நாங்க தாம்பத்தியத்துக்குள்ள முதல் ஸ்டெப் எடுத்து வைக்க கூடாது? எதுவா இருந்தாலும் ஆம்பளைங்க நீங்கதான் எடுத்து வைக்கணும் இல்லையா?
“அடியே..இது என்ன டி புதுசா குழப்புற?”
“ஒருவேளை நான் அழகா இல்லாதது உங்களுக்கு பிரச்சனையா இருக்கு? அப்படித்தானே?” என்றதும் அவன் திகைத்தான்.
‘அவள் மீது நான் எத்தனை நேசம் வைத்திருக்கிறேன்.. இவள் என்ன இப்படி பேசுகிறா?’
”ஒரு ஆணுக்கு ஒரு பொண்ணுமேல
பயங்கரமான லவ்.. புனிதமான லவ்.. தெய்வீக லவ் எல்லாம் வரனும்னா.. அந்த
பொண்ணு நிச்சயமா நல்லா கலரா.. நல்லா ஃபிகரா.. ஐ மீன்.. நச்சுனு இருக்கனும்..!! ஏன் காலேஜ்ல கூட நான் உங்க கண்ணுக்கு தெரியல தானே? காரணம் நான் கருப்பா இருந்தேன். கலரா இல்லை..”
அவள் சொல்ல சொல்ல…
அவனோ
ஆடிப்போனான். எதை எதையெல்லாம் ஒப்பிட்டு பேசுகிறாள் பாரேன் என்று குழம்பிப் போனான்.
”என் மனசுன்ற ஒரு பார்ட்ட மட்டும் தனியா பிரிச்சு எடுத்து உங்க முன்னாடி வெச்சா.. அப்ப தெரியும் உங்க லவ்வோட லட்சணம்..!!” என்றவள் அவன் தலை முடியைக்
களைத்து விட்டுக்கொண்டே கூற..
‘இவளுக்காக நான் பார்த்தால் இவள் என்னையே குற்றம் சாட்டுகிறாளே.. இனி இருக்கு டி உனக்கு”
என்றவன் தயக்கத்தை உடைத்து, தன் கண்முன்னால்
திமிறிக்கோண்டு நின்றிருந்த.. அவளது பருவத்துச் செழிப்பைப் பார்த்தவாறே..
”நீ இவ்ளோ தெளிவா பேசுவேனு நான் நினைக்கல.. எப்ப நீ என்னை சந்தேகப்பட்டியோ.. என் காதலை சந்தேகப்பட்டியோ.. இனி.. உன்னை விடுவாதில்லை..” என்றவன் சொல்லி முடிக்கும்முன்.. அவளது சிவந்து மெலிந்த பூ இதழ்கள் பாய்ந்து
வந்து அவன் உதடுகளுடன் ஒட்டிக்கொண்டது.
கிருஷ் திகைப்படைந்து விழிகளை விரிக்க.. அப்படியே அவனைத் தள்ளிக்கொண்டு..
அவன் மார்பில் படர்ந்து அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள் மீரா..!!
அவன்பின்னால் சாய..
அவளது மென்மைகள் அவன் நெஞ்சில் அழுந்த அவளது நெஞ்சகம் என்பது.. எவ்வளவு
மென்மையானது என்பதை அவனுக்கு உணர்த்தியது..!!
அவன் உதட்டில் பொருந்திய அவளது மெல்லிய ஈர உதடுகளின் ஜில்லிப்பில்.. உஷ்ணத்தில் இருந்த அவன் உணர்வுகள்.. குளுமையடையத் தொடங்கியது..
அவன் கன்னத்தில் செல்லமா அடித்தவள், ”ஆளப் பாரு.. நெஞ்சு நிறைய ஆசையை வெச்சிகிட்டு.. பேச்செல்லாம் புத்தனுக்கு அண்ணன் மாதிரிதான்” என்ளு அவள் சீண்ட..
அவள் பேச்சு அவனைச் சீண்டியது.. அவன் நெஞ்சுக்குள் புகுந்து பார்த்தவள் போல
பேசும் வித்தையை எங்கு கற்றாள் என்று தெரியவில்லை.. அவள் பேசுவதைப்
பார்த்தால்.. இனி கவலை பேசவே விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான் கிருஷ்.
“கிஷ்.. கிஷ்.. கிஸ் மீ” என்று அவள் கண் சிமிட்டி கூற..
சட்டென அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டான்.
அவன் ஆசை.. காதல்.. தாபம்..
ஏக்கம்.. தவிப்பு.. இப்போது இருக்கும் பயம்.. எல்லாவற்றையும்
போக்கும் அருமருந்தாக.. இருந்தது அவளது உதட்டின் தித்திப்பு..!!
அவள் உதடுகளின் அமுதம் பருகி தேவனான் கிருஷ்..!!
அங்கே கிருஷூம் மீராவும்.. கிஷ் -மீ யாக.. அடுத்த பத்தாவது மாதத்தில் பிறந்தாள் அவர்களது மகள்.
கிஷ்மியா..!!
சுபம்..
