Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 24

 

காலையில் மீரா எழும் கலையை அறிந்திருந்த யசோதா விடியல் காலையிலேயே வந்து கதவை தட்டினார்.

 

அவரின் தொடர் தட்டலில் வந்து கதவு திறந்தது என்னவோ கிருஷ் தான் கொட்டாவி விட்டப்படி..!

 

“குட் மார்னிங் ஆன்ட்டி..” என்று கதவில் சாய்ந்துக் கொண்டே பேசியவனை கண்டு அவருக்கு தான் லஜ்ஜையாக இருந்தது.

 

“குட்.. குட்.. மார்னிங் தம்பி.. அது.. அது வந்து.. மீரா..” என்று அவர் திக்கி திணறி முகத்தை திருப்பிக் கொண்டார்‌.

 

“எதுக்கு ஆன்ட்டி மூஞ்ச அந்த பக்கம் திருப்பிக்கிறீங்க? அப்படி‌ என்ன இருக்கு என் மூஞ்சுல?” என்று ஒற்றை கண்ணை திறந்து பார்த்து கேட்டான் கிருஷ்.

 

அவனின் கேள்வியில் இன்னும் வெட்கமாகி போனது யசோதாவுக்கு. பெண்ணை அறிந்திருந்தாலும் இது அவருக்கு சற்று சங்கடமான சூழ்நிலை தானே?

 

“அதில்ல தம்பி.. வந்து.. சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இன்னைக்கு சீக்கிரம் எழுந்து கோயிலுக்கு போகணும்னு அண்ணி சொன்னாங்க” என்றார்.

 

“நீங்க வெட்கப்பட்டு அந்தப் பக்கம் முகத்தை திருப்பிகிற அளவுக்கு எல்லாம் இங்க ஒன்னும் நடக்கல..உங்க பொண்ணு குங்குமம் எதுவும் பூச வாய்ப்பில்லையே..! ஏன் ஆன்ட்டி உங்க பொண்ணு பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீங்களே இப்படி பிஹவ் பண்ணா எப்படி?” என்று எப்பொழுது நன்றாக கண்களை திறந்தவன் அவரை பார்த்து கூற அவருக்கு சற்று வருத்தமாகி போனது. 

 

இப்பொழுது அவனை நேருக்கு நேராய் பார்த்து “தம்பி..” என்று மீண்டும் ஏதோ சொல்ல வர..

 

“மனசுல எதுவும் வச்சுக்காதீங்க ஆன்ட்டி.. நீங்க சொன்ன உடனே டக்குனு கேட்டுட்டேன். ஆனா அது நிதர்சனம் இல்லையா?” என்றதும் அவருக்கு இன்னும் கலக்கமாகி போனது மகளின் வாழ்வு என்னாகுமோ என்று..!

 

“மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஆன்ட்டி. இதுவும் மாறும்..! நம்புவோம்..!” என்று சிரித்தவன், “ஒன் ஹவர்ல கீழே வந்துருவோம்” என்று கூற, அவரும் தலையாட்டி விட்டு சென்றார்.

 

“அடியே கும்பக்கர்ணி..” என்று கூவிக்கொண்டு தொப்பு என்று அவள் அருகில் வந்து விழுந்தான் க்ருஷ்.

 

திருமணமான மகளுக்கு என்று ஏற்கனவே இருந்த கட்டிலை மாற்றிவிட்டு புதிதாக கட்டில் பஞ்சு மெத்தை.. இன்னும் அவள் அறைக்கு என்று வாங்கி அடிக்கடி இருந்தார் ராஜ நாராயணன். அதுவும் அமர்ந்தால் உள்ளே அமுங்குமான அந்த மெத்தை இவன் வந்து குதித்ததின் எதிர்விசையாக அருகில் படுத்திருந்தாளோ சில அடி மேலே பறக்க.. பயந்து போனாள் மீரா.

 

சில வினாடிகள் உயிரே பயணித்து மீண்டும் தொப்பன்று அவளும் விழ.. அதே நேரத்தில் இதை எதிர்ப்பார்க்காதவன் அவளை பார்த்து வெடித்து சிரித்தான் கிருஷ். விழுந்தவள் இப்போது நன்றாக அவன் அருகில் விழ அவனை முறைத்தாள் மீரா. 

 

“அப்பாடி எழுந்துட்டியா? இந்த டெக்னிக் கூட நல்லா இருக்குல்ல உன்னை எழுப்புவதற்கு” என்று அரங்கநாதனை போல பள்ளிகொண்டு அவளை பார்த்தவனை கண்டவளுக்கு காலையிலேயே அத்தனை கடுப்புகள்..!!

 

அவள் ஆத்திரமாக பேச வரும் முன் “இங்க பாரு ஃபர்ஸ்ட் நைட் முடிச்சு மொத மொதல்ல வெட்கத்தோட தான் கணவன பாக்கணும்னு கேள்வி பட்டு இருக்கேன்‌‌.. நீ காலையிலேயே உன்னோட பஜனையை ஆரம்பிக்காத.. நீ ஏதாவது ஆரம்பித்தால் கொஞ்சம் கூட யோசிக்காம நான் என் பஜனையை ஆரம்பிச்சிடுவேன்.‌ ஓகேவா?” என்றவனின் கேள்வியில் அவள் விதிர்விதிர்த்து அவளை பார்த்தாள்.

 

“ஹாஃப் அன் ஹவர் தான் டைம்.. அதுக்குள்ள குடுகுடுன்னு ஓடிப் போய் குளிச்சிட்டு வந்திடு” 

 

“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால குளிக்க முடியாது. நான் காலையில எழுந்திரிச்சதும் காபி குடிச்சிட்டு பொறுமையா தான் குளிக்க போவேன்” என்றாள் வீம்பாக‌‌..!

 

“வாவ்‌‌..! நீயும் என் மாதிரி தானா? சூப்பர்..! ஆன்ட்டி ஒன் ஹவருல கிளம்பி கீழே வர சொன்னாங்க.. காஃபி கிளாஸ்ல கொண்டு வந்து வைக்கிறேன் சொல்லிருக்காங்க.. வா நம்ம பொறுமையா குடிச்சிட்டு அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பொறுமையா ஒண்ணாவே குளிக்கலாம்..” என்றதும் அரண்டவள் விட்டு விடுவென்று வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

குளித்து முடித்தவள் நைட்ரஸ் உடன் வெளியே வந்ததை ஒற்றை புருவத்தை உயர்த்திப் பார்த்தவன், மீண்டும் அவளை சீண்டாமல் இவன் குளியல் அறையில் புகுந்து கொள்ள பெருமூச்சு விட்டபடி அவன் வருவதற்குள் உடை மாற்ற சென்றாள்.

 

சுடிதார் போட இருந்தவள் பின்பு வீட்டில் இருந்த உறவினர்கள்.. அவர்கள் முன் யசோதா பேசும் பொருளாகி விடக்கூடாது என்று புடவையை கட்டினாள்.

 

மீராவுக்கு சீக்கிரமாக எழுந்து பழக்கம் இல்லை என்றெல்லாம் கூறி விட முடியாது. வேலையின் பொருட்டு அதிகாலை 3 மணி 4:00 மணிக்கு என்று எழுப்பிடும் அவளே தான், வேலையில்லா நேரத்தில் காலை 10 மணி உறங்குபவளும் அவளே தான்.

 

மேக்கப் என்று பெரிதாக எதுவும் அவள் போட்டுக் கொள்ள விரும்ப மாட்டாள். கோவிலுக்கு என்றவுடன் தலை குளித்து இருந்தவள் தன் நீள முடியை உலர வைத்தப்படி காஃபி அருந்திக் கொண்டிருந்தாள்.

 

ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தில் ராஜநாராயணன் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

அவர் முகத்தில் அத்தனை சந்தோஷம். ஒவ்வொரு பேச்சுக்கும் சிரித்து சிரித்து பேசும் தந்தையை கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள் மகள்.

 

தனக்குள்ளே ஏதே ஏதோ நினைவுகளை அசைப்போட்டப்படி நின்றிருந்தவளை பின்னிருந்து அணைத்தது இரு வலிய கரங்கள்!!

 

"மீரு…!!" என்று ஆசை அழைப்போடு அவள் பின்கழுத்தில் தன் ஈர இதழ்களை பதித்தான் கிருஷ் நச்சென்று!!

 

என்ன இது என்று அவள் உணரும் முன்னே அவளை விட்டு விலகியவன், “ஏய் பொண்டாட்டி, நான் ட்ரஸ் மாத்த போறேன் கொஞ்சம் கண்ண மூடிக்கோ, உனக்கு வெட்கமா இருந்தா..” என்றதும் திரும்பி அவனை முறைக்க முயன்றவள் திகைத்து நின்றாள்.

 

ஏனென்றால் தன் தேக்கு மரத் தேகத்தை காட்டியப்படி ஒற்றை டவலில் நின்றிருந்தவனை நிச்சயமாக அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

 

அதிர்ச்சியில் திரும்ப வேண்டுமென்று கூட தோன்றாமல் அவள் சிலையாய் நிற்க, அவளையே பார்த்தப்படி அழுத்தமான நடையோடு அவன் அவளை நெருங்க நெருங்க, அவளின் நீள விழிகள் அகண்டு விரிந்தது. 

 

அவளின் மார்பு கூடு அதிர்ச்சி படப்படப்பில் ஏறி இறங்க, இதழில் பதித்த காஃபி கப்பை எடுக்க மறந்திருந்தாள் பூவை!!

 

மெல்ல மெல்ல அவளை நெருங்கியவன், அவளை ஆழ்ந்துப் பார்க்க.. அந்த பார்வை பாவையினுள் பரவி படர, இதோ சுக இம்சை இரத்து நாளங்களில் எல்லாம்.

 

காஃபி கப்புக்குள் அவளின் சுவாசம் எக்குத்தப்பாய் பாய.. அனலாய் கொதித்த காஃபி குளிர்ந்து போக.. அவ்வனல் பெண்மையின் உள்ளுக்குள் இடம் மாறியத போல, அவளது இதயமோ லயம் தப்பி துடித்தது.

 

“கிருஷ்…என்ற வார்த்தைக்கு பதிலாக.. “கிஷ்.. கிஷ்..” என்று அவள் உளற..

 

“கிஸ்?” என்று மென் சிரிப்போடு அவளை காதலாய் பார்த்து நெருங்க..

 

இதயம் இடம் மாறி படபடக்க.. 

கரங்கள் பயத்தில் தடதடக்க.. 

இமைகளோ பறவையின் சிறகாய் துடிதுடிக்க..

 

புதிதாக உணரும் இந்த இம்சையின் கனம் தாங்காது கண்களை இறுக்க மூடிக்கொண்டாள் மீரா.

 

அவளை நெருங்கியவன் அவளின் குண்டு கன்னத்தில் சுருண்டு விழுந்த கூந்தைக் கற்றைகளை தன் விரல் கொண்டு விலக்க.. அவன் தீண்டலில் உடல் சிலிர்க்க இன்னும் அழுத்தமாக கண்களை மூடினாள் மீரா. 

 

“கிஸ்.. கேட்ட இப்ப கண்ண மூடிக்கிட்ட?” என்று அவனது ஹஸ்கி வாய்ஸில் டக்குனு அவள் கண்களை திறக்க. 

 

அவளின் இரு கைகளுக்கிடையே இருந்த காஃபி கப்பை நிதானமாக பறித்தான் அவன். பின் அவளை ஆழ்ந்து பார்த்தான். இதழ்கள் முழுவதும் காஃபியில் நனைந்து செவ்விதழ்கள் ஈரத்தில் மின்னியது. அவள் பயத்தில் எச்சில் முழுங்க, அதில் அவளது தொண்டைக் குழி சுருங்கி விரிந்தது.. நெஞ்சோ விம்மி எழுந்தது!!

 

இப்போது நூலிழை இடைவெளி கூட கொடுக்க விரும்பாதவனாய்

அவளின் உடலோடு உரசிக் கொண்டே வெற்று உடலோடு அவன்!!

 

 அவளின் இதழ்களை நெருங்க.. அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் படர.. அவளின் சிவந்த முகம் மேலும் சிவக்க.. உதடுகள் வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தது. 

 

அவளின் இந்த துடிப்பை அவள் உடலில் உணரும் மாற்றத்தை அவதானித்துக் கொண்டே மெதுவாக அந்த காஃபியை இவன் மிடறு மிடறாக குடித்தான்.

 

“குளிச்சிட்டு வந்த உடனே சூடா காஃபி குடிக்கணும் போல தோணுச்சு.. அதான்” என்றவன் “ஆமா நீ ஏதோ கேட்டியே?” என்று கன்னக்குழியில் நாக்கை சுழற்றியவாறு அவளை பார்க்க..

 

“ஒன்னும் இல்லை” என்றவள் சற்று என்று முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள்.

 

“கொஞ்ச நேரத்துல என்ன பாடுபடுத்திட்டான் இந்த பாவி..! நான் கூட கிஸ் கொடுக்க வந்துட்டானு பயந்திட்டேன். இதுல நான் கிஸ் கேட்கிறேன்னு சொல்றான்? ஆண்டவா..!” என்று மனதுக்குள் புலம்ப மட்டுமே அவளால் முடிந்தது.

 

திரும்பினால் தான் ‘என்னைப் பார்..! என் அழகைப் பார்..!’ என்று ஒற்றை டவலில் நிற்கிறானே? என்று அவன் உடை மாற்றி முடிக்கும் வரை அவன் பக்கம் திரும்பினாளில்லை மீரா.

 

இருவரும் சேர்ந்து வந்ததும் காலை உணவு இருவருக்கும் பரிமாறப்பட்டது. அதன் பின் தீனதயாளன் குடும்பமும் வந்துவிட அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்றனர் புதுமண தம்பதிகளை..!

 

பின் முறைப்படி தீனதயாளன் வீட்டில் பெண்ணை விட குடும்பமாக எல்லோரும் சென்றனர், மீராவுக்கு என்று பார்த்து பார்த்து வாங்கிய சீர் செனத்தியோடு..!

 

அன்று முழுவதும் அவர்களுடைய நேரம் செலுத்துவீட்டு இரவு புறப்படும் முன் அத்தனை அழுகை யசோதாவிற்கு ராதாவிற்கும். ராஜ நாராயணனுக்கு வருத்தம் தான். 

ஆனால் பெண் நல்ல இடத்தில் வாக்கப்பட்டதில் ஏக மன நிறைவு அவருக்கு.

 

ஆனால் மீராவோ கொஞ்சமும் அசராமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல அம்மாவையும் அப்பாவையும் பார்த்தாளே தவிர சிறிது முகம் கலங்கவே இல்லை. 

 

“ஏய் மீரு உங்க அம்மா அப்பா அழுவுறாங்க பாரு.. அழ வேண்டாம்னு சொல்லு” என்று கிருஷ் கூறும் பொழுது அவனை திரும்பி பார்த்தவள், “எதுக்கு அழுகணும்? உண்மைய சொல்லு போனா ஒரு கேடுகெட்டவ கிட்ட என்ன விட்டாங்க‌‌.. அப்போ அழல் தானே? இப்போ உங்களை மாதிரி ஒரு நல்ல குடும்பத்தில் தானே விட்டு போறாங்க.. அதுவும் தெரிஞ்சு தானே? அப்புறம் எதுக்கு அழுகணும்? ஆக மொத்தம் என்னை எங்கையாவது விட்டுட்டு போறது தான் அவங்களோட வழக்கம் ஆச்சே..!” என்றவள் குரலும் பிசிர் அடித்தது. 

 

இவனே ராஜநாராயணனிடம் சென்று “சீக்கிரமே எல்லாம் சரியாக மாமா கவலைப்படாதீங்க..!” என்றான்.

 

“பாருடா..!” என்று உதடு சுழித்தாள் மீரா. சங்கீதா அவள் அருகில் வந்து நின்றவர், “ரெண்டு தடி மாட்ட பெத்தவளுக்கு தான் பொண்ணோட அருமை தெரியும் அண்ணி.. நீங்க கவலைப்படாம போங்க..” என்றார். யசோதா முயன்று சிரித்தார்.

 

“சரிங்க மாப்ள ரிசப்ஷன் முடிச்ச உடனே நம்ம வீட்ல ஒரு விருந்து இருக்கு.. உறவுக்காரர்களை மட்டும் மறக்காம நீங்க வந்துடணும்” என்றார்.

 

அவனும் சங்கடமாக அவரை பார்த்து “எனக்கு ரொம்ப லீவ் இல்ல மாமா.. ஆன் சைட் போய்ட்டு வந்து நான் இன்னும் என் கம்பெனிக்கு போய் ரிப்போர்ட்டே குடுக்கல.. அதுக்குள்ள இழுத்து வச்சு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டீங்க.. இதுவே எனக்கு இங்க ஒரு வாரம் ஓடிட்டு. இனிமேதான் என் ஆபீஸ் பக்கம் நான் தலைய காட்டணும்.. கொஞ்ச நாள் ஆகட்டும் மாமா” என்றான்.

 

“பரவால்ல மாப்பிள்ளை.. ஆனா இந்த உறவுக்காரனுங்க தொல்லை எல்லாம் தாங்க முடியாது.‌ விருந்து கொடுக்கலைனாலும் பேசுவானுங்க.. கொடுத்தாலும் பேசுவானுங்க..” என்று அவர் அவஸ்தையாய் கூற…

 

“சம்மந்தி தான் அவ்வளவு சொல்றார் இல்ல ஒத்துக்கிட்டா தான் என்ன குறைந்த போய்டுவ” என்ற தந்தையை முறைதான் க்ருஷ்.

 

“மாப்பிள்ளை ஒன்னும் சொல்லாதீங்க தயாளன் அவருக்கும் வேலை இருக்கும் இல்ல” என்று புரிந்து கொண்ட மாமனாரை கண்டு வென்றுதலாய் ஒரு பார்வை தந்தையை பார்த்தவன், 

 

“சரி மாமா ஒரு சண்டே பார்த்து பிக்ஸ் பண்ணிக்கலாம்” என்றதும் நிம்மதியாய் தலையை அசைத்து தீனதயாளிடம் விருந்து பற்றி கூறிவிட்டு ராஜ நாராயணன் குடும்பம் கனத்த மனதோடு அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

 

“நெக்ஸ்ட் வீட்டு நம்ம வீட்டு சார்பாக ரிசப்ஷன் இருக்கு சங்கீ.. உன் பிள்ளை கிட்ட சொல்லி வை.. சம்மந்தி கிட்ட பேசின மாதிரி என்கிட்ட பேச முடியாதுன்னு சொல்லி வை” என்று தீனதயாளன் கூற..

 

இவனோ எழுந்து நின்று இரு கைகளில் மேலே உயர்த்தி நெட்டி முறித்தவன் “பார்க்கலாம்” என்று விட்டு மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றான். 

 

“என்னடி இவன் பாட்டுக்கு போயிட்டான்? வந்த சீசனத்தை எல்லாம் எங்கடி அடுக்கி வைக்கிறது? ஒண்ணுமே சொல்லாம இவன் பாட்டுக்கு போறான்?” என்று தீனதயாளன் குதிக்க..

 

“ஏங்க உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. இங்கிதம் இருக்கா.. மணி என்ன பாருங்க? இப்பவே மணி பத்து ஆகுது. நீங்க எல்லாம் கல்யாணமான புதுசுல எட்டு மணிக்குள்ள ரூமுக்கு வந்துட்டீங்க தெரியுமா?” என்றதும் அருகில் நின்று ராகுல் கண்ணாவோ வாயை பொத்திக்கொண்டு சிரிக்க.. 

 

“புள்ள முன்னாடி என்ன பேசுறது அறிவு இல்ல சங்கீ? உனக்கு வயசு தான் ஆகுது” என்று நொந்துக் கொண்டவர் வேகமாக அறைக்குள் சென்றார்.

 

“பாரேன் இப்பதான் அவரு பிள்ளையை சொன்னாரு அதுக்குள்ள இவரே ரூமுக்குள்ள போறத..” என்று சற்று சத்தமாகவே பேசிய சங்கீதாவை கண்டு ராகுல் கண்ணா வெடித்து சிரிக்க..

 

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா தெரியுத என்ன? டே மகனே சுத்தி இருக்கிறதெல்லாம் நம்ம சொந்தக்காரங்க தான். ஆனாலும் வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் தான் எல்லாரும் நல்லவங்க.. அதனால பொருள் எல்லாம் பத்திரமா பாத்துக்கோ நகை எல்லாம் அண்ணி என்கிட்ட கொடுத்துட்டாங்க.. அதை என் லாக்கர்ல வச்சிருக்கேன் ரெண்டு நாள்ல ஒரு இன்ஜினியர் வர சொல்லி மாடில பக்கத்திலேயே கொஞ்சம் பெருசா ரூம் எடுத்து விடலாம்” என்றார். 

 

“ஆமா ஆமா ரூம் எடுத்திடலாம் ரெண்டு ரூமா எடுத்துவிடலாம்” என்றால் ராகுல் கண்ணா..

 

“எதுக்குடா ரெண்டு ரூமு?” என்று அப்பாவி அன்னையாய் சங்கீதா..

 

“என்னம்மா இப்படி பொசுகுன்னு கேக்குற? உனக்கு ரெண்டு புள்ள இருக்கானுங்க மா.. நாளைக்கு அந்த பிள்ளைக்கும் கல்யாணம் ஆகும். அவனுக்கும் பொண்டாட்டி வருவா.. அப்போ அவனுக்கும் பிரைவசி வேணும் இல்ல.. நாங்க என்ன ஹாலையா குடும்பம் நடத்துறது?” என்றவனை கண்டு ஒரு நிமிடம் திகைத்தவர் பின்பு வாய் விட்டு சிரித்தார். 

 

“ஆனாலும் உனக்கு இவ்வளவு அவசரமாகாது டா கண்ணா.. இப்பதானே அண்ணனுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. ஒரு அஞ்சு வருஷம் போகட்டும்.. அப்புறம் உன் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்” என்று அவர் பாட்டுக்கு சென்று விட..

 

“எது? அஞ்சு வருஷமா? எம்மோவ்.. எம்மோவ்.. நான் வேணும்னா அஞ்சு வருஷம் பொறுப்பேன். உன் மருமக.. ம்ஹீம்.. பொறுக்க மாட்டா.. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா.. என் பிள்ளைகளுக்கு எப்போ லீவு வருதுனு பார்த்து அப்பதான் என் கல்யாணத்தையும் வைக்க முடியும் போல” என்று தனக்குள் பேசிக்கொள்வது போல அவன் சத்தமாக பேச..

 

“எடு அந்த விளக்கமாத்த..! கல்யாணத்துக்கு முன்ன புள்ள வருமாமே புள்ள..!” என்றபடி சங்கீதா வர அங்கிருந்து ஓடியே சென்றான் ராகுல் கண்ணா.

 

இருந்த ஒன்று இரண்டு உறவினர்களும் கண்ணா பேசியதை நகைச்சுவையாக எண்ணி சிரித்தார்கள். 

 

எதே? நகைச்சுவையா? அவன் நெசமா சொல்றான்.‌ இவனுங்க எல்லாம் நகைச்சுவைனு எண்ணி சிரிக்கிறானுங்க..

 

என்னைக்கு அவன் பொலப்பு சிரிப்பா சிரிக்க போகுதோ…!

 

லெட்ஸ் வெட்டீஸ்…

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top