அத்தியாயம் 20
“கண்ணா.. டேய் கண்ணா..” என்ற அண்ணாவின் குரலில் காதல் முத்தம் எல்லாம் தூரம் போக, அவசர அவசரமாக தன் காதலியிடமிருந்து பிரிந்தான் ராகுல் கண்ணா.
“என்னங்க..” என்று சிணுங்கினாள். எப்போதாவது கிடைக்கும் காதலனின் அணைப்பு கிட்டாமல் போவதை எண்ணி அவள் கடுப்பு மீற கேட்க..
“எங்க அண்ணன் கூப்பிடுறாரு டி” என்று கிசுகிசுத்தான்.
“வீட்ல முழுக்க சொந்தங்களும் இருக்காங்க தெரியும் இல்ல.. அப்புறம் எதுக்கு என்னை தள்ளிட்டு வந்தீங்க? இப்ப பாருங்க பாதியிலேயே உங்க அண்ணன் கூப்டாரு போறிங்க? நாள பின்னும் கல்யாணம் பண்ணி இதே மாதிரி நம்ம ரூம்ல இருக்கும் போது உங்க அண்ணன் கூப்பிட்டாங்க.. அம்மா கூப்பிட்டாங்க ஓடுன..?? மவனே..!!” என்று அவனை தன் அருகில் இழுத்து உதட்ட அசைவில் ஏதோ கூறி “கத்தரிச்சிருவேன் பாத்துக்க..!” என்று அவள் மிரட்ட, அவன் ஆ என்று வாயைப் பொத்தி நின்றான்.
“லவ் பண்ணும் போது என்கிட்ட என்ன சொன்ன.. சொல்லு? இப்படி எல்லாம் மிரட்ட மாட்டேன்.. அடிக்க மாட்டேன்.. துன்புறுத்த மாட்டேன்.. முக்கியமா மூடு வர்ற நேரத்துல எல்லாம் முகத்தை திருப்பிக்க மாட்டேன்னு அத்தனை வாக்குறுதி கொடுத்த தானடி லவ் பண்ணுன? இப்ப என்ன இப்படி பேசுற?” என்று அவன் உதட்டை பிதுக்க..
அவனின் தோளில் தன் இடது கையின் புஜத்தை வைத்து ஒய்யாரமாக ஒரு பக்கமாக சாய்ந்து நின்றவள், அவனது கன்னத்தை தன் வலது கையால் தட்டி, “காதலுக்கு முன்னாடி நாங்க 40 உறுதிமொழி கூட கொடுப்போம்.. அதெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணனும் அவசியமா என்ன?” என்றவள்,
அவனின் கன்னத்தை தட்டியவள், “ஆனாலும்.. நீ இன்னும் சின்ன பிள்ளையாகவே இருக்கடா கண்ணா” என்றவள் அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்ச..
“இப்படி எல்லாம் ஐஸ் வச்சு என்ன ஏமாத்த முடியாது. ரூல்ஸ ஒழுங்கா ஃபாலோ பண்ணு.. இல்லன்னா..?”
“இல்லன்னா என்னடா பண்ணுவ?” என்று அவள் இப்பொழுது எகிற..
“உங்க அக்கா கிட்ட நீதான் கல்யாணத்துக்கு ஐடியா கொடுத்த நான் அதை ஜஸ்ட் ஃபாலோ பண்ணி அவங்கள என் அண்ணன் கூட சேர்த்து வச்சுட்டேன்னு போட்டு கொடுத்துடுவேன் டி” என்று அவன் மிரட்ட..
“அடப்பாவி.. அடப்பாவி..! என்னடா என்னையே பிளாக் மெயில் பண்ற நீ? இப்படி எல்லாம் பண்ண கூடாது மேன்..! ரொம்ப தப்பு மேன் தப்பு..!” என்று அவனது கன்னத்தை கொஞ்சம் வலிக்க கிள்ளினாள்.
“ஓய்.. ட்ராக்க மாத்தாதே..! நாம ரெண்டு பேரும் சண்டை மூடுல இருக்கோம்.. அந்த டிராக்கிலேயே போகணும். எதுக்கு இப்ப நீ மூட மாத்துற?” என்றவன் கைகள் அவளது இடையில் தான் இருந்தது.
“எது? நான் ட்ராக்க மாத்துறேன்?” என்று கண்களால் அவன் கை இருக்கும் இடத்தை அவள் சுட்டிக்காட்ட..
“அதுவொரு சப்போர்ட்க்காக புடிச்சிருக்கேன் ராதுமா” என்று அவள் மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சினான்.
“நீ தான்டா இப்போ ட்ராக்க மாத்துற.. இந்த கல்யாணம் நடக்குறதுக்காக நான் எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா? எங்க அக்கா காலேஜ் படிக்கும் போது உங்க அண்ணன் யாரையோ லவ் பண்ணிறத பிரித்து விட்டுட்டா போல.. அதையெல்லாம் என்கிட்ட சொல்லியிருந்தா? அது வெளியில் தெரிஞ்சா எங்க பிரச்சனையாகும் நான் எவ்வளவு கமுக்கமா வச்சிருந்தேன் தெரியுமா?” என்று அவள் புலம்ப..
“ஏய்.. போடி.. போடி..! அதுக்கு முன்னாடியே உங்க அக்கா எங்க அண்ணனோட டீன் ஏஜ் வயசுல வந்த முதல் லவ்வையே பிரிச்சு விட்டுருக்காங்க.. நான் ரிவேஞ்ச் எடுக்க போறேன்னு சுத்திட்டு இருந்தவர எப்படி நைசா பேசி கரெக்ட் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன் தெரியுமா?” என்று அவன் தன் பிரதாபங்களை அரங்கேற்ற..
“ஆமா ஆமா ரொம்ப தான்..!
நீ எங்க அக்கா கிட்ட சொன்னினா நான் உங்க அண்ணன்கிட்ட சொல்லுவேன்? அண்ணா வரத்துக்குள்ளே அவ்வளவு வேலையும் செஞ்ச.. பிரண்ட்ஸ்க்கு பத்திரிக்கை வைக்கிறதுல இருந்து அவர் சூட்ட எடுத்து அளவு கொடுத்து தைத்தது வரைக்கும் என்னென்ன பிராடுத்தனம் பண்ணுனியோ.. இதெல்லாம் சொல்லுவேன். எதோ ஆன்ட்டி அங்கிளுக்காக செஞ்ச மாதிரி வேற வேஷம் எல்லாம் போட்ட தானே? உன்னோட லவ்வுக்காக தானே செஞ்ச.. நான் அதையும் போட்டு கொடுப்பேன் டா..!” என்றாள் அவள் இந்த கண்ணனுக்கு ஏத்த ராதையாய்..!
“அச்சோ வேணாண்டி வேணாண்டி..! எங்க அண்ணன பத்தி சரியா தெரியாது உனக்கு. சரியான முசுடு புடிச்சவன் டி..! நாம ரெண்டு பேரும் சமாதான உடன்படிக்கைக்கு வந்துடுவோம்.! என்ன சொல்ற?” என்று இப்பொழுது அவள் தோளில் தனது இரண்டு கைகளையும் இவன் போட்டுக்கொண்டு ஒரு காலை நிலத்தில் வைத்து ஆட்டியபடியே கேட்டான்.
“அதுக்கு என்ன தாராள உடன்படிக்கைக்கு வந்துடலாமே..!” என்று கரகரப்ப ஆண் குரல் கேட்க..
“ராகு மா.. என்ன ஆச்சுடா உன் தொண்டைக்கு? திடீர்னு ஆம்பள வாய்ஸ் கேக்குது?” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி தொண்டையை தன் விரல்களால் நீவி அவன் ஆராய.. அவன் முதுகில் மொத்த என்று அடி விழ அதிர்ந்து கண்ணன் திரும்பி பார்க்க…
இவர்கள் இருவரையும் முறைத்தபடி நின்று இருந்தான் வேதாந்த் கிருஷ்ணா..!
என்ன பதில் சொல்வது? என்ன வினையாற்றுவது? என்று தெரியாமல் இருவரும் திருதிருவென்று முழித்தப்படி நின்றிருந்தனர்.
“முதல்ல அந்த பொண்ணு மேல இருந்து கைய எடுடா.. நாதாரி” என்று எரிந்து விழுந்தான் கிருஷ்ணா.
“ஆக மொத்தம் நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி உங்க லவ் சக்ஸஸ் ஆகுறதுக்காக எங்க ரெண்டு பேரையும் இந்த கல்யாண சாகரத்துல புடிச்சு தள்ளிடிங்க அப்படித்தானே?” என்று கேட்டான் கூர் பார்வையோடு கிருஷ்.
இல்லை என்று வேகமாக தலையாட்டியவர்கள் கிருஷ்ணாவின் முறைப்பில் ஆமாம் என்று இப்பொழுது அதைவிட வேகமாக தலையாட்டினர்.
“குட்..! கல்யாணம் பண்ணி வச்சதோட உங்களோட வேலை முடியல..!” என்றதும் இருவரும் அவனை அதிர்ந்து பார்க்க..
‘அதுக்கு.. இவருக்கு ஃபர்ஸ்ட் நைட் வரைக்குமான நம்ம ஏற்பாடு பண்ண முடியுமா?’ என்று மைண்ட் வாய்லில் ராதா நினைக்க..
“எஸ்.. எஸ்.. மைத்துனி..! அதே தான். உங்க அக்கா என் மேல கோவத்துல.. கல்யாணம் கட்டாயப்படுத்தி பண்ணி வெச்ச கடுப்புல இருக்கா. அவ கடுப்பை எப்ப மலை ஏத்தி.. இடுப்ப நான் எப்ப பிடிக்க? இதோ உங்கள மாதிரி..” என்று கண்ணனின் கை ராதாவின் இடுப்பில் இருப்பதை அவன் சுட்டிக்காட்ட.. அவசரமாக கண்ணனின் கையை தட்டி விட்டாள் ராதா.
“அதுக்கு.. அதுக்கு.. நாங்க.. என்னத்தான் பண்ண?” என்று திக்கித் திணறி வந்தது அவளது குரல்.
“இவ்வளவு தகடு திட்டம் பண்ணி எங்களுக்கு கல்யாணம் பண்ண மாதிரி அதே தகடு தித்தம் பண்ணி உங்க அக்கா மனச மாத்துங்க மைத்துனி..! அப்பதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் இல்லைன்னா.. நோ வே..!”என்றான் கிருஷ் கைகளை கட்டிக்கொண்டு..!
சட்டென்று அண்ணன் காலிலேயே விழுந்துவிட்டான் கண்ணன்.
“அடே படுபாவி அண்ணா.. அப்படி எல்லாம் செஞ்சு விடாத டா. அஞ்சு வருஷ லவ் டா..! என்னடி பாக்குற நீயும் சொல்லு” என்று அருகில் இருந்து ராதாவின் லெகங்காவை பிடித்து இழுக்க.. அவளும் சற்று என்று கிருஷ்ணாவின் காலடியில் அமர்ந்து “ஆமா.. ஆமா அஞ்சு வருஷ காதல் அத்தான்” என்றாள் கொஞ்சும் குரலில்.
“ஓகே..! ஏதோ ஒரு அஞ்சு வருஷமா லவ் பண்றேனுறிங்க.. காதல் பறவைகள்னு சொல்றீங்க.. அதனால போனா போகுதுனு மன்னிச்சு விடுறேன். இன்னொரு முறை இப்படி தனியாக வந்து ஜல்சா பண்றது.. கூட்டத்துக்குள்ளே இருந்து கும்மாளம் போடுறது.. இது எதுவும் கூடாது. அதுவும் முக்கியமா என் கண்ணுல படுற மாதிரி இப்படி ஏதாவது கிஸ்ஸிங் டச்சிங் ஏதாவது நடந்துச்சு.. தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு..!” என்று அவன் எச்சரிக்க..
“ஐயோ அத்தான்.. இப்ப பாருங்க நான் எப்படி வேகமாக ஓடுறேன் மட்டும்..! இனிமேல் நீங்களா கல்யாணம் பேசி முடிக்கிற வரைக்கும் இவனை என் பக்கத்திலேயே நான் அலோவ் பண்ண மாட்டேன்” என்று என்றாள் ராதா.
“அடப்பாவி.. காதலி..! இப்படியா டி பல்டி அடிப்ப?” என்று கண்ணன் பொறும..
“கடைசியா ஒன் டைம்..” என்று போகிற போக்கில் கண்ணனின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு ஓடினாள் ராதா.
அண்ணன் முன்னாலயே தன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடும் தன் காதலியை நினைத்து வெட்கம் பொங்கி பொங்கி வந்தது கண்ணனுக்கு.
அண்ணனை பார்த்து சிரித்துக் கொண்டே தன் சட்டை நுனியை இரு கைகளால் முறுக்கிக்கொண்டு கால் கட்டை விரலால் நிலத்தில் அவன் கோலம் போட..
“கருமம்.. கருமம்..” என்று தலையில் அடித்துக் கொண்டு கீழே சென்றான் கிருஷ்ணா.
“கத்தரி வெயில் நின்னு கனவு காணாதடா.. கீழ வந்து சேருடா.. என் மாமியார் வீட்டுக்கு போகணும்” என்றப்படி..!
அதன் பிறகு இங்கே சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு, சில முக்கியமான உறவுகளோடு தீனதயாளன் குடும்பம் ராஜநாராயணன் வீட்டிற்கு சென்றது.
“மறு வீட்டுக்கு எல்லாம் நாங்க வரல.. நாங்க இங்கேயே ரெஸ்ட் எடுக்கிறோம்” என்று விட்டனர் சில உறவினர்கள்.
அவர்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தீனதயாளனின் ஒன்றுவிட்ட தம்பியிடம் கொடுத்துவிட்டு இரவு உணவுக்கு வெளியில் இருந்து உணவை வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டு தான் சென்றார் சங்கீதா.
ராஜநாராயணன் வீட்டிலும் புது மாப்பிள்ளை பொண்ணுக்கு செண்டு மேல தாளங்கள் முழங்க வரவேற்பு பெரிதாக இருந்தது அனைத்துமே ரதனின் ஏற்பாடு.
மகனை மெச்சுதலாக பார்த்த தேசிகன் “செம டா..!” என்றார்.
ராஜநாராயணனோ ஒரு படி மேல் போய் “நீ கொஞ்சம் முன்னாடியே பிறந்திருக்கலாம் டா மருமகனே.. ரெண்டாவது பொண்ண உனக்கே கட்டிக் கொடுத்திருப்பேன்” என்றதும் “அப்பாடா தப்பிச்சேன்” என்று அவனோ பெருமூச்சு விட்டான்.
இங்கேயும் பால் பழம் கொடுத்து சில சம்பிரதாயங்களை செய்து காலையிலிருந்து மாற்றாமல் இருக்கும் கல்யாண உடைகளை மாற்ற சொன்னார்கள். இருவருக்கும் புது உடையை கொடுத்து மாற்றி வர செய்தனர் நாராயணன் தம்பதிகள்.
அவர்கள் வீட்டிற்கும் தேசிகன் வந்தால் தங்கும் அறையில்தான் கிருஷ்ணாவும் கண்ணனும் சென்றனர்.
“இங்க பாருடா கண்ணா.. என் கண் எதிரில் தான் நீ இருக்கணும். அப்படி இப்படி அசைஞ்சு போய் ஏதாவது கில்மா பண்ணலாம் நினைச்ச அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று எச்சரித்து வைத்திருந்தான் தம்பியை கிருஷ்.
மதியமும் சரியாக சாப்பிடாததால் நேரமாகவே உணவை பரிமாறி விடலாம் என்று இரு அன்னையர்களும் பேசிக்கொண்டனர்.
மூத்த தலைமுறையினர் அனைவரும் ஓரளவு சாப்பிட்டு முடித்ததும் இளப்பட்டாளங்கள் இப்பொழுது சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கிருஷூமீ மீராவும் வருவதை பார்த்து ஓ என்று விசில் பறந்தது அவ்விடத்தில்..!
இளம் தம்பதிகளை கேலி கிண்டல் செய்வது ஒரு வித அலாதி தானே? அதுவும் அன்று இரவு அவர்களுக்கு முதலிரவு என்கையில்..
