அத்தியாயம் 19
இரு குடும்பங்களும் மிக ஆவலாக எதிர்ப்பார்த்த தருணம்..
வேதாந்த் கிருஷ்ணாவுக்கும் ராஜமீராவுக்கும் அன்று காலை பிரம்ம மூகூர்த்தத்தில் திருமணம்..!
தன் அருகில் அலங்கார பூஜிதையாக அழகே உருவாக அமைதியாக அமர்ந்திருக்கும் பெண்ணவளை ரசனையுடன் பார்த்தான் கிருஷ்..
ஐயர் சொல்ல சொன்ன மந்திரங்கள் எதுவும் அவன் காதில் விழவில்லை. திருமண அரங்கம் நிறைந்திருக்கும் உறவினர்கள் அவன் எண்ணத்தில் இல்லை. பெற்றவர்களின் பூரித்த வதனமோ அவனின் கண்களில் படவில்லை.
ஐயர் “மாப்பிள்ள.. மாப்பிள்ள.. அவாள அப்பறம் பார்த்துக்கோங்க.. இப்ப என்னை பாருங்கோ” என்று மந்திரங்களை ஓதி அவனை திரும்பி சொல்ல சொல்ல அவனோ அவளையே பார்த்திருந்தான்.
“என்ன இப்ப உனக்கு? ஏன் என்னையே பார்க்குற? ஐயர் உன்னை கூப்பிடுறாரு பாரு” என்று மீரா பேசியதும் மெல்ல தலையாட்டி சிரித்தவன்,
“ரெண்டு விஷயங்கள் என் ஞாபகத்துல ஓடுது. அதுதான் யோசனையா..?” என்று இழுத்தவன் மீண்டும் புன்னகைக்க..
ஏதோ தன்னை பற்றி தான் அவன் யோசித்து இருக்கிறான் என்று புரிந்தவள் அவனை முறைக்க..
“எக்ஸாக்ட்லி..! உன்ன பத்தி தான். இவ்வளவு அமைதியா என் பக்கத்துல உக்காந்து இருக்குற இந்த பொண்ணு ஒரு காலத்துல காலேஜ்ல எப்படி என்கிட்ட வாயடிச்சிச்சு? இனி காலமெல்லாம் இன்னும் கூட வாய் அடிப்பாளே.. எப்படி சமாளிப்பேனு? அப்படின்னு ஒரு ஷாக்..!” என்றதும் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவள் நறுக்கென்று அவனது தொடையில் கிள்ளினாள் மீரா.
“அவுச்.. ஹா ஹா நிரூப்பிச்சிட்ட பார்த்தியா?” என்று சிரித்தவன், “கவுண்டட்..!” என்று கண் சிமிட்டினான்.
“இரண்டாவது என்ன?” ஆர்வம் இல்லாமல் அவள் கேட்டாலும் அதில் அவ்வளவு ஆர்வம் ஒளிந்திருந்தது.
“அதுவா?” என்று கன்னக்குழியில் நாக்கை சுழற்றியவாறே அவளைப் பார்த்தான்,
“மாப்பிள்ளை அவாளை அப்புறம் பாருங்கோ..! செத்த என்னை பார்க்குறேளா? நீங்க மந்திரம் சொல்லுலேனாலும் பரவாயில்லை உங்களுக்கு பதில் நானே சொல்றேன்.. இந்த பூவை மட்டுமாவது யாகத்துல போடுங்கோ” என்று அவனிடம் பூக்கள் இருந்த தட்டையை நீட்டினார்.
“மந்திரம் சொல்ல தானே உங்கள அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி இருக்கோம் நாங்க.. அப்புறம் எங்கள் மந்திரம் சொல்ல சொன்னா எப்படி
ஐயர் வாள்?” என்றவனின் நக்கலில்..
“அதுக்கேன்னா பேஷா நானே மந்திரத்தை சொல்றேன்” என்ற ஐயரின் குரலில் அத்தனை காட்டம்.
“அப்போ நான் பாஷா அவாளை பார்க்குறேன்” என்றான் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்..
“உன்னை எல்லாம்??” என்று பற்களை கடித்தாள் மீரா.
“என்ன நான் தப்பா சொல்லிட்டேன்? உன்னை சைட் கூட அடிக்க கூடாதுனா எதுக்கு டி இந்த கல்யாணம்? எல்லாமே பண்றதுக்கு லைசன்ஸ் தானே கல்யாணம்..!” என்றான் கண்களை சிமிட்டி..!
“வாட்?” அவள் அதிர,
“இப்ப நீ தான் என்னை சைட் அடிக்குற..!” என்றவனின் கேலியில் அதன்பிறகு அவன் பக்கம் திரும்பவே இல்லை மீரா.
“மீரா.. ராஜ மீரா.. என்ன டா வெட்கமா?” என்று சமர்த்து பிள்ளையாக ஐயர் சொன்னதை செய்துக் கொண்டே அவளை வம்பிழுத்தான் கிருஷ்.
“என்னை பார்க்க மாட்டியா?” ஏக்கமாக கேட்டவன் கையில் இறைவனிடமும் அவர்களின் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிய பொன்தாலியை ஐயர் கொடுக்க..
“இப்ப என்னை பார்க்க விரும்பலையா நீ? அப்ப நைட் ஃபுல்லா பார்த்துக்கோ..!” என்றவன் அவளது கன்னத்தை தன் கற்றை மீசையால் உரசி பேச,
“ஏதே நைட்டா?” விதிர்விதிர்த்து போனவள், அவனை திரும்பி பார்க்க.. இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டன..!
“லவ்லி..!” என்றவன், அவளது நெற்றியில் முத்தம் பதிக்க..
அதுவரை அவர்களது சம்பாசனையை ஏதோ இருவருக்கும் தகராறோ? முட்டி மோதிக் கொள்கிறார்களோ? ஆண்டவா..! கல்யாணத்தை எப்படியாவது நல்லபடியாக முடித்துக் கொடுத்துவிடு..! என்று பலவாறு இரு பெற்றோர்களும் நின்று பிரார்த்தனை செய்ய…
கிருஷின் அதிரடி முத்தத்தில் அனைவரும் ஆனந்த் அதிர்ச்சியில் சமைந்து நின்றிருக்க.. ஐயர் சொல்லிய “கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்ற சத்தத்தில்,
கெட்டிமேளம் முழங்க வேதாந்த் கிருஷ்ணா ராஜமீராவின் அழகிய கழுத்தில் பொன்தாலியை கட்டி தன்னவாளக்கி கொண்டான்.
உச்ச ஸ்துதியில் கேட்ட கெட்டி மேளச் சத்தத்தில் அனைவரும் சுய நினைவுக்கு வந்து, உள்ளம் உவந்து உவகையோடு மலர்கள் கலந்த மஞ்சள் அரிசி அட்சதையை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
“கெட் ரெடி பொண்டாட்டி..!” என்றவனின் ரகசிய கண்சிமிட்டலில் உள்ளம் கிடுகிடுத்தது மீராவுக்கு.
ராகுல் கண்ணா கூட்டத்தோடு கூட்டமாக மெல்ல நகர்ந்து ராதாவின் அருகில் சென்று நின்றவன், அவன் கையில் இருந்த அட்சதையை யாரும் அறியாமல் அவள் தலையில் போட்டு “வாழ்த்துக்கள் டி யாது.. அடுத்த கப்பிள் நாம தான்” என்றவன் அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
கிருஷின் மறைமுக பேச்சும்.. ரகசிய தீண்டலும் சீண்டலும் பெண்ணவளை மாய உலகத்திற்கு அழைத்து செல்லவில்லை..! மாறாக மனதில் பயத்தை ஏற்படுத்தியது..!
பெண்ணின் கல்யாணத்தை கண்ணாற கண்ட சந்தோஷத்தில் யசோதா கண்கள் கலங்க நின்றிருந்தார். அவரை தோளோடு அணைத்து நின்ற ராஜ் நாராயண் “ஈஸி யசோ.. ஈஸி..!” என்றவரின் குரலும் கலங்கி தான் இருந்தது.
பெண் குழந்தையை பெற்ற போது இருக்கும் அந்த மகிழ்ச்சியை காட்டிலும் அவளை நல்ல குடும்பத்தில் நம்பிக்கையானவன் கையில் பிடித்துக் கொடுக்கும் போது வரும் மகிழ்ச்சி அளப்பரியது..! எல்லையற்றது..!!
என்னதான் அவளை பிரிய போகிறோம் என்ற வலி மனதின் ஓரம் இருந்தாலும் அதைக்காட்டிலும் மகளின் சந்தோஷ பூரித்த வனத்தை கண்டு பெற்றவரின் வதனமும் மகளின் அதே சந்தோஷ நிறத்தை பூசிக் கொள்ளும்.
வழக்கமான சம்பிரதாயங்கள் எல்லாம் அனைத்தையும் ஒன்று விடாமல் பின்பற்ற வைத்தனர் யசோதாவும் சங்கீதாவும்.
மகன் முகத்தை சுழிப்பான்.. என்னால் முடியாது.. இப்படி எல்லாம் செய்து பழக்கம் இல்லை என்று ஏதேனும் சொல்லி சமாளிப்பான், அப்படி செய்தால் நெஞ்சு வலி நாடகத்தை அரங்கேற்ற வேண்டியது தான் என்று கையோடு தனது சால்வையும் எடுத்து வந்திருந்தார் சங்கீதா.
ஆனால் அவருக்கு அப்படிப்பட்ட நாடகத்ததை அரங்கேற்ற விடாமல் அவளின் முழு சம்மதத்தை ஒற்றை நெற்றி முத்தத்தில் அவன் காட்டி விட.. சங்கீதாவே அசந்து போனார்.
“பாருங்ளேன் இவன? என்ன எல்லாம் நம்ம கிட்ட பிட்ட போட்டான் இப்ப பாருங்க” என்று அதிசயத்து தாடையில் கை வைத்தாலும் மகனின் மாற்றத்தில் பரிபூரண மகிழ்ச்சி சங்கீதாவுக்கும் தீனதயாளனுக்கும்.
பிறகு என்ன சந்தோஷம் பொங்க குதூக்கலோத்தோடு மற்ற சடங்குகள் நடக்க.. மருமகளை மன நிறைய மகிழ்ச்சியோடு தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர் சங்கீதாவும் தீனதயாளனும்.
கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கழித்து தான் ரிஷப்ஷன் தீனதயாளன் வீட்டு சார்பாக ஏற்பாடாகி இருந்தது. அதுவரை மணமக்கள் ஃப்ரீயாக இருக்கட்டும் கல்யாண டென்ஷன் சோர்வில் இருந்து கொஞ்சம் வெளிவரட்டும் என்ற எண்ணத்தில்..!
இங்கே பால் பழம் கொடுத்து சிறிது நேரம் மீராவை ஓய்வு எடுக்க சொல்ல.. பட்டு புடவையில் புத்தம் புது தாலியில் தலை நிறைய மல்லிகைப்பூவோடு சோர்ந்த வதனத்தோடு செல்லும் மனைவியின் சோபை அழகு அவனை கொள்ளை கொண்டது.
“இப்ப தான் டா புரியுது? எதுக்கு இப்படி பொண்ணுங்கள அலங்காரம் பண்றாங்கனு..! வேணாம்னு சொல்றவனையும் வேணும் சொல்லு வைச்சிடும் போல..” என்றவன் தம்பி எங்கே என்று கண்களால் துழாவ.. அவனோ கண்ணன் அல்லவா? இவர்கள் கண்களை எல்லாம் மண்ணைத் தூவி விட்டு தன் காதல் ராதாவோடு மாடிப்படிகளுக்கு அடியில் அமர்ந்து கொண்டு அவளை கொஞ்சிக் கொண்டிருந்தான்.
அதுவும் மணமக்களை ஆவென்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தவளை வாயை பொத்தி அப்படியே தள்ளிக் கொண்டு வந்திருந்தான ராகுல் கண்ணன் கோகுல கண்ணனாய்..!
“ஏங்க அறிவிருக்கா உங்களுக்கு?” என்றவள் கத்த..
“ஏன் டி இப்படி கத்தி தொலைக்கிற? ஊர்ல உள்ள அம்புட்டு உறவினர்களும் இங்க தான் சுத்திகிட்டு இருக்காங்க.. மொத்த பிஸ்ல ஒத்த பீசு பார்த்தா கூட நாளை காலையில நமக்கு பஞ்சாயத்து கூடிடுவாங்க..." என்று மெல்ல தன் கையை அவள் வாயில் இருந்து எடுத்தான்.
"நானும் அதுக்கு தானே ஆசைப்பட்டேன். எவ்வளவு நாளே தான் இப்படி இரண்டு பேரும் கள்ளத்தனமா காதல் பண்றது? ஒத்த பீஸூ பார்த்தா கூட நாளைக்கு பஞ்சாயத்து தான் அப்புறம் கல்யாணம் தான்..!” என்றாள் ஆசையாக ராதா
“ஆமா.. ஆமா.. அப்புறம் நமக்கு.." என்றவன் அவளை ஆசாயாக பார்க்க..
அவளோ அதுவரை இருந்த கோபத்தை விட்டு வெட்கத்தை தத்து எடுத்து தன் வலது கால் பெருவிரலை கொண்டு கீழே கோலம் போட.. அவளின் வெட்கத்தை பார்த்தவன் அவளை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டாருந்தான் .
அவன் ஆரம்பித்து வைத்த இதழ் முத்தத்தை வன்மையாக மாற்றி கொண்டிருந்தாள் ராதா, அவனுக்கு சற்றும் சளைக்காத காதலில்… தாபத்தில்..!
மலைப் பாம்பனெ அவனின் முரட்டு கைகள் அவளை இறுக்கி இருக்க.. சிறிது கூட அவனிடமிருந்து அவளால் விடுபட முடியவில்லை. அவனின் காதல் தாபம் தள்ளிவிடவும் இயலவில்லை அவளால்.
இரு காதல் கிளிகளும் தங்கள் காதல் வானில் முத்தமிட்டு சஞ்சாரமிட,
“எங்க போனான் இந்த கண்ணா.. என் ப்ரண்ட்ஸ் ஊருக்கு போக கேப் அரேஞ்ச் பண்ணனுமே..” என்று தம்பியை காணாமல் தேடினான் கிருஷ்.
பின் “மொட்ட மாடியில் இருப்பனோ?” என்று யோசித்துக் கொண்டே அவர்
கள் இருக்கும் இடம் நோக்கி வந்துக் கொண்டிருந்தான் கிருஷ்.
மாட்டுமா இந்த காதல் கிளிகள்??
தொடரும்..
