Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 18

 

என்னாச்சு? மீராவுக்கு என்னாச்சு? அவள ஏன் அந்த பிசாசு கூட அனுப்பி வைச்சிங்க?” விட்டால் நாராயணனின்‌ சட்டையை பிடித்து உலுக்கி கேட்பார் போல சங்கீதா.. அத்தனை ஆத்திரம் ஆதங்கம் அவரிடம்.

 

“பொம்பள புள்ளங்க நம் வீட்டோட மகாலெட்சுமிங்க அண்ணே.. பெத்தவங்களோட சந்தோஷம்.. அவ வீட்டுல இருந்தா வீடே நிறைஞ்சி இருக்கும். அவளோட அந்த சின்னஞ்சிறு கொலுசு ஒலி போதும்ணே, நம் வருத்தத்தை போக்க.. ஏன் துரதிஷ்டவசம் கூட தூர போய்டும் அவளின் கிள்ளை மொழியில..! அந்த வரம் எங்களுக்கு கிடைக்காமலே போயிடுச்சு.. ஆனா உங்களுக்கு கிடைச்சும் தவற விட்டுடீங்களே” என்று அத்தனை வருத்தம் கூடவே கண்கள் வேறு கலங்கியது சங்கீதாவுக்கு.

 

என்றோ அவர் வயிற்றிலேயே இழந்த பெண் சிசுவை எண்ணி கலங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

 

ஆம்.. இழந்தவருக்கு தானே அப்பொருளோ உறவோ அதனின் அருமை தெரியும்..!

 

“உண்மை மா..” என்றார் நாராயணன்.

 

“முதல்ல தேவகி எங்கள தப்பா புரிஞ்சுக்கிட்டா.. எப்படியும் பேசி சமாதானம் படுத்தலாம்னு தான் நாங்க நினைச்சோம். ஆனா அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.. எப்ப அந்த அரசியல்வாதியோட வைஃப்புக்கு மேக்கப் போட போறேன்னு போனாளோ.. அப்பத்தில் இருந்து அவங்களுக்குள்ள தொடர்பு இருக்குன்னு. ச்சீனு வெறுத்துப் போச்சு..! அதுக்கப்புறம் எங்க அத்தை மாமாவே எனக்கு யசோதாவை கல்யாணம் பண்ணி வச்சாங்க.. எங்களுக்கும் ராதா பொறந்தா. ஒரு பக்கம் தேவகி எங்க வாழ்க்கையில் போனது நிம்மதியா இருந்தாலும் மறுபக்கம் பெரிய மகள விட்டுட்டோம்னு நினைச்சு வருத்தப்படாத நாளே கிடையாது..!”

 

“ஆனா மீராவுக்கு பத்து வயசு இருக்கும் போது பயங்கர காய்ச்சல்ல ஹாஸ்பிட்டல்ல இருக்கானு தெரிஞ்சு போனா நாங்க தேவகி கிட்ட சண்டை போட்டு போலீஸ் வக்கீல் கோர்ட்னு ஏகப்பட்ட பேரை சந்தித்து கடைசியா மீராவோட கஷ்டடிய என்கிட்ட கொண்டு வந்தேன். அப்புறம் எங்க கூட தான் அவள வச்சு நல்ல பாத்துகிட்டோம். அப்பதான் அந்த ராட்சசியால மனதளவில் எவ்வளவு கஷ்டப்பட்டானு எங்களுக்கு தெரிஞ்சது” 

 

“காக்கைக்கும் தன் குஞ்சு போல் குஞ்சுனு சொல்லுவாங்க.. நமக்கு பொறந்த குழந்தைங்க நம்மளோட வரம்.. அவங்களுக்கு கலரு இல்லன்னா என்ன? அழகு இல்லைனா என்ன? நம்ம குழந்தைங்க தானே..! ஏனோ அது அந்த தேவகிக்கு புரியவே இல்லை.. வார்த்தையால இவளை அவ்வளவு வதைச்சு இருக்கா..”

 

“மீராவ பேசவே விடாமாட்டா.. கேட்க விடமாட்டா.. ‘உன் மூஞ்சிய நீ கண்ணாடியில பார்த்து இருக்கியா? நீ எல்லாம் ஒரு பொண்ணுனு எப்படி வாழுற?’ இப்படி கேட்டு வதைச்சிருக்கா.. அது மட்டும் இல்ல..” என்ற நாராயணன், சிறிது நேரம் பேச்சை நிறுத்த..

 

‘இன்னும் என்ன மனதை கஷ்டப்படுத்தும் விஷயங்கள் வரப்போகின்றனவோ?’ என்று தீனதயாளனும் சங்கீதாவும் ஒரு பெரும் தவிப்போடு இருக்க அந்நேரம் பார்த்து, 

 

“என்ன மாமா உங்க ஃப்ளாஷ்பேக் எல்லாம் சொல்லி முடிச்சிட்டீங்களா?” என்றபடி உள்ளே வந்தான் கிருஷ்.

 

அதிலும் அவரை அழுத்தமாக பார்த்தபடி வந்தவன் தோற்றம் ‘அடுத்து மீராவை பற்றி எதுவும் பேசக்கூடாது.!’ என்ற சமிக்ஞை அதிலிருக்க.. 

 

“சொல்லிட்டேன் மாப்பிள்ளை எல்லாத்தையும் சம்பந்திங்க கிட்ட சொல்லிட்டேன்” என்றார், அவன் பார்வை ‌புரிந்தது என்று தலையாட்டி.

 

“பாவம் டா தம்பி மீரா. இப்படி எங்கையாவது ஒரு அம்மா இருப்பாளா? இவ்வளோ மோசமா? என் மருமகள என்னென்ன பாடு படுத்தி இருக்கா? என் மருமக பாவம் வாயில்லா பூச்சி போல இவ்வளவு கஷ்டத்தையும் எப்படி தாங்குனானு தெரியல” என்று வருத்தமாக பேசிய அன்னையை பார்த்து, மனதுக்குள் சிரித்துக் கொண்ட கிருஷோ..

 

‘யாரு இவ புள்ள பூச்சி? பேசத் தெரியாதவ? எல்லாம் நேரம்..!’

 

“சரி மாமா நாங்க கிளம்புறோம். மீராவுக்கு கிப்ட் வாங்கி கொடுக்கலாம்னு நான் இங்கு வந்த நேரம் சரியில்ல போல.. சரி மா நாம கிளம்புவோம்” என்று எழுந்தான் கிருஷ். 

 

அதற்குள் தேசிகன் அனைவரையும் அழைத்து வந்திருக்க அனைவரிடம் விடைபெற்று கிளம்பும் நேரத்தில் அங்கு மீரா இல்லையென்று கண்டு கொண்டவன், “மீரா எங்க ஆன்ட்டி?” என்று கேட்க..

 

“உள்ள அந்த ஹால்ல இருக்கா தம்பி” என்றார் யசோதா.

 

ஹாலில் இருந்து சற்று தள்ளி இருந்த பெரிய அறை ஒன்று காட்டினார். அங்கே கீழே மெத்தைகள் விரிப்புகளை விரித்து பெண்கள் அங்கே அமர்ந்து தான் மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது.

 

ஒரு பக்கம் இதமான இசை மறுபக்கம் சிறுபிள்ளைகளின் ஆட்டம் டான்ஸ் என்று கலகலப்பாக இருந்த அனைத்தையும் ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மீரா.

 

அவனை உள்ளே அழைத்து சென்றார் யசோதா. உள்ளிருந்தே அங்கே நடக்கும் அனைத்தையும் கேட்டுக் கொண்டே தான் இருந்தாள் அவள். எழுந்து போக முடியவில்லை. அவளது கலைந்து போன கையில் மீண்டும் மருதாணி வைத்துக் கொண்டிருந்தார்கள் மெஹந்தி போடும் பெண்கள். 

 

“மீரு..” என்று அழைத்துக் கொண்டு நுழையும்போதே அந்தப் பெண்களுக்கு யசோதா கண்ணை காட்ட அவர்களும் நாகரிகமாக எழுந்து வெளியே சென்று விட்டனர்.

 

இவர்களெல்லாம் தோட்டத்திலிருந்து போது தேசிகன் மட்டும் வந்தவர், “மாப்பிள்ளையோட அப்பா அம்மா எல்லாம் வந்திருக்காங்க.. அய்த்தான் பேசிட்டு இருக்காங்க அவங்க கூட” என்றார். 

 

அப்பொழுதே புரிந்து போனது மீராவுக்கு. தந்தை கடந்த காலத்தை எல்லாம் சொல்கிறார் என்று. 

 

‘அவரோடதை சொன்னால் பத்தாதா ஏன் என்னையும் அதில் இழுக்கிறார்? இதையெல்லாம் கேட்டுவிட்டு இவர்கள் என்னை பரிதாபமாக பார்க்கும் அந்த பார்வை எனக்கு வேண்டவே வேண்டாம்..!” என்று கொஞ்சம் கடுப்பாக தான் அமர்ந்திருந்தாள்.

 

“மேடம்.. எங்களுக்கு நேரம் ஆயிடுச்சு இன்னும் ஒன் அவர் தான் இருக்கு. அதுக்குள்ள வேற யாருக்காவது மெஹந்தி போடணும்னா சொல்லுங்க நாங்க முடிச்சிட்டு கிளம்புறோம்” என்றனர்.

 

அப்பொழுது தான் மீராவின் கையில் அலைந்துப் போனதே ஞாபகம் வர.. மீராவின் வலது கையை காட்டி “வேற ஏதாவது டிசைன் மாற்றி போட்டு விடுங்க” என்றார் யசோதா.

 

அதற்குள் கலைந்து ஓரளவு சிவந்து விட்டிருந்த கையை கண்டு திகைத்து விட்டனர் இருவரும். மணமகளுக்காக பார்த்து பார்த்து டிசைன் செய்தவர்கள் அல்லவா?

 

அவர்கள் முகத்தில் வருத்தத்தை தாண்டியும் ஒரு சலிப்பை கண்ட மீரா சட்டென்று தன் கையை இழுத்துக் கொண்டு “ஏன் இந்த கையோடு இருந்தால் உங்க மாப்பிள்ளை எனக்கு தாலி கட்ட மாட்டாரா?” என்று வெடுக்கென்று கேட்டு வைத்தாள் அம்மாவிடம்.

 

 அவளின் திடீர் கோபம் கலந்த பேச்சில் அந்த பெண்களுமே பயந்தனர். யசோதா “ப்ளீஸ் மீரு..” என்று‌ மகளை கொஞ்சினார்.

 

மீராவின் கோபத்தைக் கண்ட பெண்கள் யசோதாவின் கெஞ்சல் பார்வையில் “சரி மேடம் இதெல்லாம் கொஞ்சம் அசிங்கமா தெரியாம அழகா மாத்தி கொடுக்கிறோம்” என்று அவளை மீண்டும் அமர வைத்து போட்டார்கள். அவளது எண்ணங்களோ கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கு மாத்தி மாத்தி டைம் ட்ராவல் செய்து கொண்டிருந்தது.

 

“என்ன எல்லாம் அப்பா இவர்கிட்ட சொல்லி வச்சாருன்னு தெரியலையே? ஏற்கனவே இவருக்கு நாம செஞ்சு வச்சதுல செம கோபத்துல இருப்பாரு.. என்னுடைய பிளாஷ்பேக் எல்லாம் கேட்டு என்ன நினைக்கிறாருனு தெரியவில்லையே?” என்று கிருஷை திரும்பி பார்க்காமல் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

 

அவள் அருகில் இரு கைகளையும் பேண்டில் விட்டபடி நின்றிருந்தான் கிருஷ். அவளோ அவன் வந்தது தெரிந்தும் திரும்பவும் இல்லை நிமிரவும் இல்லை. இப்போது அவன் அவள் அருகில் அமர்ந்தான்.

 

“ஏய் நீ இப்படி குனிஞ்சு என்னை பார்க்காம இருக்குறதை மத்தவங்க வேணும்னா வெட்கம்னு நினைக்கலாம். ஆனா நானில்லை..! எனக்கே என்னமோ மாறி இருக்கு. எப்போதும் கண்ணுல டிராகன் மாதிரி ஃபயர் விட்டிக்கிட்டு அப்பப்போ மூஞ்சி சுழிச்சுக்கிட்டு பேசிவியே அந்த மாதிரி பேசேன் இப்போ” என்றவன் அவளை ரசனையாக பார்த்தவாறு வம்பிழுக்க கேட்டு வைக்க.. 

 

இப்பொழுது மெல்ல நிமிர்ந்து அவனை ஆழ்ந்து பார்த்தவள், “உங்களுக்கு அந்த மாதிரி பொண்ணுங்கள தான் பிடிக்காதே..!” என்றாள்.

 

நெற்றி சுருக்கி அவள் சொன்னதை யோசித்தவன் “நீ இன்னும் அதை எல்லாம் மறக்கவே இல்லையா?” என்று கேட்க.. உதட்டை சுழித்து தோளை குலுக்கியவள் “ஏன் நீங்க மறந்துட்டீங்களா?” என்று அவள் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் யோசித்தவன், அடுத்த நிமிடம் வெடித்து சிரித்தான். 

 

“நான் மறந்துட்டேன்..! ஸ்பெஷலி அந்த பொண்ணு நேத்ராவை..!” என்றதும் அவளுக்கு பொசு பொசுவென்று வந்தது.

 

“ஏதோ கருகுற மாதிரி ஸ்மெல் வரல..” என்று அவள் மூக்கு நுனியை தன் சுட்டு விரலால் நிமிண்டியப்படி கூறினான்.

 

“கொழுப்பெடுத்தவன்.. நான் பொஸஷிவுல பொங்குறேனு சொல்றத பாரு.. கருகுற வாசனை வந்தால் உன் மூக்கு பொத்திக்கணும்.. எதுக்கு என் மூக்கை டச் பண்ற மேன் நீ?” என்று அவனை முறைக்க..

 

அவனோ “ஏதாவது சொல்லனுமா? நீ மனசுக்குள்ள நினைக்கிறதெல்லாம் நான் கண்டுபிடிக்கிற அளவு இன்னும் உன் மனசுல நான் வரல..” என்றவன் சுட்டு விரல் இப்பொழுது அவள் நெஞ்சை நோக்கி வர..

 

“ஆத்தி..!! இவன் என்ன ஓவரா போறான்?” பின்னால் சாய்ந்தாள் அவள்.

 

“ஹே விழுந்திடாத டி..! விழுந்து கால கை உடைச்சு வைக்காத.. அப்புறம் எனக்கு தான் கஷ்டம்” என்றவன்,

படத்தில் ஹீரோயின் வழுக்கி விழும்போது ஹீரோ தாங்கி பிடிப்பது போலவே அவள் இடையோடு தாங்கிப் பிடிக்க.. அதிர்ச்சியின் உச்சத்தில் மீரா.

 

“நான் உன்ன வெளியில கூட்டி போக தான் வந்தேன். பட் இப்ப முடியாது போல.. சரி பை. கல்யாணத்துல பார்க்கலாம்” என்றதும் அவன் எழுந்து கொள்ள..

 

“ம்ம்..” என்று அவளும் எழ பார்க்க..

 

“மெஹந்தி கையோடு எப்படி எந்திரிப்ப?” என்றவன், அவள் எதிர்பாராத வண்ணம் அவள் இடையில் இரு கைகளையும் கொடுத்து தூக்கி விட்டவனை கண்டவள் அதிர்ந்தாள்.

 

“நான் ஒன்னும் உன் கூட ரொமான்ஸ் பண்ணல. நீ எழும் போது விழுந்திட கூடாதுன்னு தான். அப்புறம் உன் கைல உள்ள நான்.. அதாவது கிருஷ்ணன் அழிஞ்சிட கூடாதுன்னு தான் அப்படி பண்ணுனேன்” என்றவன் கேலியாக சொன்னாலும் உண்மையில் அதுவும் ஒரு காரணம் தான். 

 

இன்னும் இடையில் இருந்த கை எடுக்கவில்லை. அருகில் வெகு அருகில் அவள்..!

 

ஏதோ உணர்வுகளின் தாக்கம் அவனிடம். எதனால் ?

 

இரு நாளில் தன்னில் பாதி என்ற உரிமையா?

 

இல்லை அவளை பற்றி காலையில் கேட்டவைகள் எல்லாம் அவள் பால் அவனை ஈர்க்கிறதா?

 

இல்லை அவளிடம் இருந்து வரும் சுகந்த வாசமா?

 

ஏதோவொன்று அவனை அவளுடன் இப்படி அணைந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

 

அவன் திரும்ப திரும்ப அவள் வாசத்தை ஸ்பரித்தை உணர்ந்தவன், வேகமாக மூச்சு விட்டு, முன்னை விட இன்னும் அதிகமாக அவளின் வாசத்தோடு மூச்சை உள்ளிழுத்தான்.

 

“கல்யாணத்துக்கு அப்புறம் வெறும் அடிதடி சண்டையில் தான் நம்ம லைஃப் போகும் நினைச்சேன். பரவால்ல.. கொஞ்சம் ரொமான்டிக்காகவும் போகும் போல.. என்ன பொண்டாட்டி?” என்றவனின் ஒரு கை விரல்கள் அவளது இடையின் மென்மையை சோதித்து அவளை சோதித்து என்றால்… மற்றொரு கையோ அவளது கன்னத்தின் மென்மையை சோதித்தது.

 

அவளுக்கோ பெரும் அவஸ்தை அவனை தள்ளி விட்டு செல்ல ஒரு கனமாகாது. ஆனால்.. இரு கைகளிலும் இருக்கும் மருதாணி அவளை பொறுமை காக்க சொன்னது. 

 

இந்த மருதாணி கலைந்தால் மீண்டும் யசோதாவிடம் திட்டு வாங்கி, மீண்டும் ஒரு நான்கு மணி நேரம் இப்படி பொறுமையாக உட்கார வேண்டும் அல்லவா? அதற்கு அவளிடம் சுத்தமாக பொறுமையே இல்லை..! 

 

 

இவன.. “ஹலோ கன்னம்..” என்று கண்களால் குறிப்பு காட்டி அவள் அடிக்கரலில் கூற..

 

“ஆமா கன்னம் தான்.. சோ சாஃப்ட்..” என்றவனோ இன்னும் சற்று அழுத்தமாக அவள் கன்னத்தை வருடினான். 

 

“அது என் கன்னம். கைய எடுங்க..” என்றாள் அவனை முறைத்து நின்றபடி..

 

“யாரும் இல்லைனா? உன் கன்னம் தான்” என்றவன் குரல் கிறங்கி ஒலித்தது.

 

“என் கன்னத்தை இப்படி எல்லாம் தடவ நான் அனுமதிக்க மாட்டேன். ஆனா போகிற போக்கை பார்த்தா கை விரல் மட்டுமே இதுக்கு போதும்னு தெரியல.. வேற ஒன்னும் இந்த கன்னத்தின் மென்மையை சோதிக்கணும்னு ஆசையா இருக்கு” என்றவனின் வார்த்தைகளில் தொணித்து ஸிங்காரமும் குழைவும் பெண்ணவளை திடுக்கிடச் செய்தது.

 

“வாட்?” என்றவள் குரல் நடுங்க..

 

“ஆஃடர்ஆல் வி கெட்டிங் மேரிட் இன் டு டேஸ்.. வெறும் கன்னம் தானே? அதுவும் கையால் தானே? இதுக்கெல்லாம் இவ்வளவு ஓவர் ரியாக்ட் அதிகம். அவனவன் கல்யாணத்துக்கு முன்ன என்னென்ன ‌ பண்றானுங்க..” என்றவன் முணுமுணுத்த அத்தனை சென்சார் கட்டுப்படா வார்த்தைகளும் அச்சு பிசாகாமல் அப்பாட்டமாக மீராவின் காதில் நிறைந்து அவளை சிவக்க வைத்தது. 

 

“என்ன இவன்? இப்படி ஆகிட்டான்?” என்றவள் விழி விரிக்க..

 

ஒரு மாத்திரை அளவில் அவளது நெற்றியில் முத்தமிட்டு நகர்ந்தவன், “பை டி ரசகுல்லா” என்று கண்ணடித்த சென்றவனை ஆவென்று பார்த்தாள் மீரா.

 

கிஷ் -மீ யின்.. கிஸ் மீ கள் இனி களை கட்டும்.

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top