35
அவள் மேலிருந்து கண்களை திறக்காமலேயே மெல்ல அடியெடுத்து அவளை நெருங்கி சென்றான் வீரா. என்னதான் பூங்கொடி அவளுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினாலும் சஞ்சயன் கொலையிலிருந்து வீராவை பிரித்து வைக்க அவளால் முடியவில்லை.
அந்த ஒரு எண்ணமே அவனிடம் நெருங்க விடாமல்.. அவனையும் நெருங்க விடாமல் அவளை உள்ளுக்குள் படுத்தி எடுக்கிறது.
இதை விழாவும் அறிந்திருந்தான் ஆனால் அதை சட்டை செய்யவில்லை. பெரும்பாலான ஆண்களை போல பெண்ணின் வல்லுநர்களுக்கு அந்த அளவு மதிப்பு அளிக்கவில்லை. இப்போது தள்ளி இருந்தால் வாழ்க்கை முழுவதற்கும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சற்று அடாவடியாக தான் அவளிடம் நெருங்கிக்கொண்டிருந்தான்.
அவன் அருகே வந்ததும் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளை நெருங்கி மெல்ல அணைத்தான். அவளோ நெளிந்து பின்னால் நகர்ந்தாள்.
"என்னைய கண்டா பயமா இருக்கா தீரா? ஆனா நீந்தேன் வீரலெட்சுமி ஆச்சே ?" என்றான் சிரிப்பை வெளிக்காட்டாமல்..
"ச்சே.. நான் ஏன் உன்னைய கண்டு பயப்பட போறேன்" என்றாள் அவளும் அதே துடுக்குத்தனத்தோடு..
"உனக்கு தேன் என்னைய ரொம்ப ரொம்ப புடிக்குமே.. அதேன்" என்றான் கள்ளச் சிரிப்போடு..
"எதே.. பிடிக்குமா?" படபடக்கும் விழிகளுடன் அவனைப் பார்த்தாள். அவளின் செவ்விதழ்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. உள்ளுக்குள் அவனை பிடிக்கும் தான்.
இந்த அடாவடி..
ஆளுமை..
அலட்டிக்கொள்ளாத தன்மை..
அலட்சிய பேச்சு..
அனைத்துமே.. அனைத்துமே பிடித்தம் தான்!! ஆனால் அது அப்போது!!
அவள் உள் மன ரகசிய பெட்டிக்குள் இருந்தது இவன் எங்கணம் கண்டறிந்தான்? என்ற கேள்விகளை கண்களில் தாங்கி அவனை பார்த்தாள்.
அவன் அவளை மென்மையாக அணைத்து அவள் முகத்தை ஒரு கையில் பிடித்து நிமிர்த்தினான். அவன் விழிகள் அவள் விழிகளை ஊடுருவ.. இப்போது சுற்றம் மறந்தது.. சூழல் மறந்தது. ஏன் அவர்களை சுற்றி உலகம் சுழன்று கொண்டிருந்ததே மறந்தது இருவருக்கும்.
அவளின் நெற்றியில் மென்மையாக ஒரு இச் கொடுத்தான். அதில் அவள் சிலிர்த்தாள். அந்த சிலிர்ப்பை அவள் மேனியில் கண்டான் அவன். முதல் முறையாக அவன் முத்தம் கொடுத்த அந்த பெண்ணாக தான் தெரிந்தாள் அவள். அதே சிலிர்ப்பு.. அதே பார்வை.. அதே வெளி தெரியாத நாணம்!! மனதுக்குள் சிரித்துக் கொண்டான் வீரா.
அவளை காதலுடன் அவன் பார்த்த பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் இமைகள் தாமாக மூடிக்கொண்டன..
பின் அதே போல இச் ஒன்றை அவள் கண்களுக்கு கொடுத்தான் மன்னவன்.
கண்களை மூடிக் கொண்டு வேகமாக மூச்சு வாங்கினாள். அவனது அணைப்பு சற்று நெருக்கமாக..
அவளின் மென்மைகள் அவன் நெஞ்சில் இதமாகப் பதிந்து அவனை இன்பப் பரவசத்தில் ஆழ்த்தியது.
இப்போது கண்களை மூடி தன்னோடு அணைந்து நிற்கும் அந்த பேரழகியை தான் ரசித்தான் கோமகன்..
அழகிய முக வடிவு..
கூரிய மூக்கு..
செழித்த கன்னங்கள்..
துடிக்கும் சிவந்த அதரங்கள்.
அத்துணை உணர்வு குவியலை காட்டும் பளிங்கு முகம்..
பார்க்க.. பார்க்க.. தெவிட்டவில்லை தேன் நிலவவளின் முகம்!!
அவளின் கண்களுக்குப் பிறகு செழிப்பாக இருக்கும் பருவக் கன்னங்களையும் அழகான குட்டி மூக்கையும் முத்தங்களால் கொத்தி எடுத்தான். அவள் கண்கள் மூடி அவனின் அணைப்பில் வாகாக நின்றாள் முத்தங்களை பெற்று கொண்டு..
நீ சரியான
வட்டிகாரனடி..
என் முத்தங்களை மட்டும் பெற்றுக்
கொண்டு எனக்கு தர மறுக்குறாய்..
பொல்லாத ராட்சசி நீயடி!!
என்றான் அவளது இதழ்களின் நெருக்கத்தில்..
அவள் அதரங்கள் மெல்ல சிரிப்பில் விரிய.. தன் அதரங்கள் வைத்து அவளது தேனூறூம் அதரங்களை கவ்வி அப்படியே நாக்கால் துளாவி, அவளின் அமிரத்ங்களை ஆவேசமாக உறிஞ்சினான் வீரா. இதழ்கள் இரண்டும் உயிருள்ள மீன் போல துடித்து துடித்து மெல்ல படபடத்து முரட்டு முத்தத்தில் சிக்கி பிணைந்து மனமற்று விரிந்து பிரிந்தன.
வளை படுக்கையில் கிடத்தி மீண்டும் அவன் இதழ்கள் செய்ய மாயத்தினால்.. உடல் கனமில்லத பஞ்சு போல அந்தரத்தில் ஒரு காகிதமாய் துடிதுடித்து நடுங்கியது அவளுக்கு. அவன் மீசையும் தாடியும் பட்டு அவள் பெண்மை பயங்கரமாய் புல்லரித்தது. இன்னும் இன்னும் இன்ப புதையலின் ஆழமாய் அலறின் நாக்கு மலர்விழியாளின் திறந்திருந்த அதரங்களை கவ்வி சுவைத்து சுவைத்து மீண்டது.
மெல்ல அவை மென்கைகளில் மேல் பயணித்து கீழே சமதளத்தில் இறங்கி அங்கே.. தடாகத்தில் தாகம் தணிக்க முற்பட்டன.
ஆலிலை வயிறு.. அவன் மகவு தாங்கும் அழகு பெட்டகம்!! மெல்ல விரல்கள் நடுங்க தடவி பார்த்தான். அவ்வளவு இனித்தது.. அவ்வளவு பிடித்தது இந்த நேரம்!! இனிய நேரம்!!
தன்னவளின் வயிற்றில் தன் உதிரம் பூத்திருந்த தருணம். உலகை வென்ற மகிழ்வு!! மனம் நிறைந்து கிடந்தது. இனி என்னவும் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று பெரும் தைரியம் ஆட் கொண்டது. அவனின் இளமை உணர்வுகள் பொங்கி எழ.. ஆனால் அவளை ஆட் கொள்ளத்தான் பயம் கொண்டது. உள்ளிருக்கும் மகவுக்கு எதுனா ஆகிவிடுமோ என்று!!
வீரா முழுதாக அப்பாவாக மாறிய அழகிய தருணம்!! மெல்ல அவளிடம் இருந்து விலகியவன் மீண்டும் தன் மகனுக்கு அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்து வா வெளியே போகலாம் என்று கீழே அழைத்து வந்தான்.
பூங்கொடி மேலே சென்று வந்து வெகு நேரம் கழித்தே இருவரும் கீழே இறங்கி வர.. அவர்களுக்கான நேரம் அது என்று மற்ற தம்பதியர்கள் புரிந்துகொண்டு மௌன சிரிப்போடு நிற்க.. பூங்கோதைக்கு தான் அவ்வளவு ஆத்திரமாக வந்தது.
அதுவும் வடிவாம்பாள் மருமகள் அருகில் சென்று திருஷ்டி கழித்ததோடு ஒரு பெரிய டம்ளர் நிறைய மாதுளம் ஜூஸ் கொண்டுவந்து கொடுக்க.. அவள் மென் சிரிப்போடு அதை குடித்து முடிக்கும் வரை அருகில் நின்றார் வாஞ்சையாக பார்த்துக்கொண்டு..
கூடவே சற்குணத்தையும் வடிவம்பாளையும் அருகில் நிறுத்தி வீரா மனைவியோடு ஆசிர்வாதம் வாங்க.. இன்னும் மகிழ்ந்துபோன வடிவாம்பாள் தன் கழுத்தில் இருக்கும் வைர அட்டையை கழட்டி மருமகளின் கழுத்தில் போட்டு விட்டார்.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க பூங்கோதைக்கு மனம் எரிந்தது. கூடவே யோகலட்சுமி விரல்களால் அவளை சுரண்டி அனைவரையும் காட்டி உதடு பிதுக்கி இவளிடம் காட்டினார்.
"எம்மோவ்.. ரொம்ப சந்தோசத்தில் குதிக்காத.. அந்த புள்ளைக்கு உன் புள்ள தேன் அப்பான்னு என்ன நிச்சயம்?" என்றாள் பூங்கோதை!!
அனைவர் முகத்திலும் அடர் அமிலத்தை வீசியவர் தகித்தது. அதிலும் அஸ்திராவின் நிலையை கேட்கவும் வேண்டுமா?
தன் கையோடு கோர்த்திருந்த வீராவின் கைகளை பிடுங்கிக் கொண்டு அவள் செல்ல முயல.. வீராவின் அழுத்தம் இன்னும் அதிகரிக்க.. அவளது கையை கழண்டு வந்துவிடும் போல் அப்படி வலித்தது. நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அப்படி ஒரு ரௌத்திரம் அவன் முகத்தில்.. இதுவரை யாரும் பார்த்திராத வண்ணம்!!
"என்னடி பேச்சு பேசுற.. சிறுக்கி மவள" என்று வடிவாம்பாள் அவளை நெருங்கும் முன்.. கோதை ஆஆஆ என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தாள். அருகே உக்கிரமாக நின்றிருந்தான் தர்மா..
"இன்னுமொரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்த உன் வாயிலிருந்து வந்தது.. அத்த பொண்ணு கூட பாக்காம அத்து விட்டட்டு போய்கிட்டே இருப்பேன்" என்றான். அவ்வளவு அழுத்தமாக இதுவரை அவ்வாறு பேசியிராத.. ஏன் அடித்திராத தர்மாவின் இந்த அவதாரத்தில் அரண்டு போய் அமர்ந்திருந்தாள் கோதை.
"ஏ தாய்க்கிழவி…!!" என்று சத்தமாக அழைக்க யோகலட்சுமி மருண்ட விழிகளோடு மகன் அருகே வந்து பம்மியவாறு நின்றார்.
"இனி ரெண்டு பேருக்கும் தாய்வூடு என்பதே கிடையாது. இப்படி இனி ஒரு வார்த்த அவ பேசினா.. இன்னொரு தடவ இப்படி நான் பேசிட்டு இருக்க மாட்டேன். அவ்வளவுதான்!! ஏய் தாய்கிழவி.. நீ கிழவி இல்ல குளவி.. உன் விஷத்தை கொட்டி கொட்டி யேன் பொண்டாட்டிக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாம் நீந்தேன். இனி நீயி ஏத்தி விட்ட... நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன்.. உன்னைய கொண்டு போய் தனியே எங்கேயாவது சேர்த்துட்டு வந்துருவேன்.. எங்க அப்பாருக்கு இனிமேலாவது நிம்மதி கிடைக்கட்டும்!!" என்று அவன் கூறிய விதத்தில் செய்வேன் என்று அழுத்தம் இருக்க.. அதிர்ந்த தன் கணவனை பார்த்தார் யோகலெட்சுமி. அவரோ அவரின் முகத்தை பார்க்க பிடிக்காதவராய் வேறு எங்கோ திருப்பிக் கொண்டார்.
"என்னைய மன்னிச்சிடு மச்சான்.. சந்தோசமான நேரத்துல இந்த கிரகம் வாயை விட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டு.. நானு இதுக இரண்டுத்தையும் கூட்டிட்டு போறேன்" என்றவன் எல்லோரிடமும் சொல்லி விட்டு.. கோதை அருகே நின்று "நட..!!" என்றான்.
எழுந்து நடந்தவளை கைப்பிடித்து நிறுத்தியவன் "நீயி பேசிய பேச்சுக்கு மொதல்ல மன்னிப்பு கேளு!!" என்றான். அவளும் வேறு வழியின்றி தரையை பார்த்து மன்னிச்சிடுங்க என்று கூறிவிட்டு கணவனோடு வெளியே சென்றுவிட்டாள். யாரையும் பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை. பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அவர்கள் முகத்தில் இவள் மீதான அருவருப்பையும் கோபத்தையும்!!
"சரிமா.. நேரமாகுது நாங்களும் கிளம்புறோம்!!" என்ற பூங்கொடிக்கு இனிப்புகள் அடங்கிய பெரிய தூக்கு வாளியை கொடுத்து..
"வீட்ல போய் எல்லாத்திட்டேயும் இந்த விஷயத்தை சொல்லு.. முக்கியமாக இவ அம்மாகிட்ட சொல்லு!!" என்று வடிவாம்பாள் கூற அஸ்திரா தன் அத்தையை பார்த்தாள் நன்றியோடு!!
சோர்ந்து தெரிந்தவளை அழைத்துக்கொண்டு பஞ்சநதி குளத்தில் இருக்கும் சிவன் கோவிலை நோக்கி சென்றான்
வீரா!!
கூடவே அவனை முடிக்கும் வேகத்தோடு அம்பலவாணனின் ஆட்களும்!!
தீருமோ தாகம்!!
