26
எத்தனை பெரிய பிரச்சினை எது வந்தாலும் வீட்டு பெண்களின் துணை இருந்தால்.. அவற்றை தூசி போல தட்டி செல்லலாம் ஆண்கள். ஆணின் பலம் சக்தி பெண்தானே!! அவர்களே சோர்ந்து விட்டால்.. ஆணின் சக்தி வடிந்துவிடும்!!
அவர் மட்டும் தனியாக அமர்ந்து இருக்க 'எங்கே போனா இந்த கோதை? எங்கம்மா சிண்டு மூட்டி வேற வேலையே ஆரம்பித்திருக்கும் போல!' என்று அம்மாவை சரியாக கணித்தவன், சத்தமாக "கோதை…!!" என்று அழைக்க, அறையிலிருந்து வேகமாக ஓடி வந்து அவனை பார்த்து "என்ன??" என்றாள் சற்று வெடுக்கென்று..
"கோதை..!!" என்று இம்முறை அழுத்தமாக அழைத்தது தர்மா அல்ல சற்குணம், 'மாப்பிள்ளையிடம் தனிமையாக நடந்துகொள்!' என்று மறைமுக எச்சரிக்கை அதில்.. "என்னதான் தாய்மாமா மகனாக இருந்தாலும் வீட்டு மாப்பிள்ளைனு வரும்போது அந்த மதிப்பு கொடுக்க வேணும்.. கூடவே எங்க முன்னாலே இப்படி பேசுகிறியே.. எவ்ளே தைரியம் உனக்கு? உன் அம்மா அப்படித்தான் உன்னை வளத்துச்சா??" என்று சற்று காட்டமாகவே நாட்டாமை அவளிடம் பேச தலைகுனிந்து நின்றவள் "மன்னிச்சுக்கோங்க மாமா!!" என்றாள் தர்மாவை பார்த்து..
"உன் மன்னிப்பை கொண்டு போய் குப்பையில் போடு!!" என்று கூறியவன் "அத்தை அப்படி ஓரமா ஓய்ந்து போய் உட்கார்ந்து இருக்காக.. நீயி ரூமுக்குள்ளே உட்கார்ந்து கிட்டு என்ன பண்ற? அவங்க பொண்ணு தானே நீயி? ஜெயிலுக்கு போனது உன் அண்ணன்தானே? என்னமோ விருந்துக்கு வந்த மாதிரி விசாலமா ரூம்ல படுத்திருக்க.. இந்த வீட்டு பொண்ணுனு கொஞ்சம் ஆச்சு உனக்கு இருக்கா உனக்கு?" என்று அவன் அவளைத் திட்டிக் கொண்டே இருக்க..
"என்னை என்ன பண்ண சொல்றீக? எல்லாம் இவகளா செஞ்சுக்கிட்டு தான.. இவகளும் தானே எ
யேன்.. யேன் மருமக மருமகனு தலையில் தூக்கி வைத்து ஆடுனாக.. அதுதான் எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வைச்சிட்டா.. இதுல நா என்ன ஆறுதல் சொல்ல இவகளுக்கு??" என்று வெட்டேறியா பேசிய மனைவியின் பார்த்தவனுக்கு அவ்வளவு கோபம் வர.. இதற்கெல்லாம் காரணம் தன் தாய் கிழவி என்பதை உணர்ந்த தர்மா "அப்பா கூடிய சீக்கிரம் நான் உனக்கு டைவர்ஸ் வாங்கி தர போறேன்!" என்றான்.
அதுவரை நாச்சிமுத்துவும் கோதையின் பேச்சை ரசிக்காமல் முகத்தை வேறுபக்கம் திருப்பி இருக்க.. "என்னடா சொல்லுற மகனே?" என்று அதிர்ச்சியோடு அவனை திரும்பி பார்க்க..
"பின்ன.. எனக்கு டைவர்ஸ் வாங்காம இருக்கும்னா முதல்ல உனக்குதேன் அந்த தாய்க்கிழவி டமிருந்து டைவர்ஸ் வாங்கி தரனும்.. உன்னையும் உன் பொண்டாட்டியும் பிரிக்கணும்.. அப்பதேன் யேன் பொண்டாட்டி ஒழுங்கா வேலை செய்யும் பின்னாலிருந்து ஸ்குரு கொடுக்குறது எல்லாம் உன் பொண்டாட்டி தேன்!!" என்று அவன் கடுப்படிக்க சங்கடத்தோடு சற்குணத்தை பார்த்தார் நாச்சிமுத்து.
"விடு விடு மாப்பிள்ள!!" என்று அவர் தோளை தட்டி விட்டு சற்குணமும் பத்ரியின் வரவை எதிர்பார்த்து இருக்க.. வாசலில் கேட்ட பட்சத்தில் எட்டிப்பார்க்க அங்கு ஜெகநாதன் பூங்கொடியும் வந்தனர்.
"ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு ஏன் இப்ப இவன் வந்தான்?" என்று ஜெகநாதனை பார்த்துக்கொண்டே அவனை அழைக்க வெளியே சென்ற தர்மாவை பார்த்து ஜெகநாதன் முறைத்தான்.
"நீ எல்லாம் சகல.. பிரெண்ட்னு சொல்லிக்காத டா நாதாரி!! காலையில இவ்வளோ விஷயம் நடந்திருக்கு. யேன் கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா நீ.. எருமை பயலே!!" என்று திட்டியபடியே உள்ளே நுழைந்த மருமகனை வரவேற்றார்கள் சற்று சங்கடமான சூழ்நிலை தான்..
பூங்கொடி அங்கு இருந்த யாரையும் பார்க்கவில்லை ஆய்ந்து ஓய்ந்து போனது போல அமர்ந்திருந்த அன்னையை கண்டவள் வேகமாக சென்று அவரை அணைத்துக் கொண்டாள். அதுவரை வரவா வரவா என்று இருந்த கண்ணீர் துளிகள்.. பெரும் மழை என மகளின் தோளில் சாய்ந்த கணத்தில் வந்தது அவருக்கு.
"அழாத மா.. அண்ணே வந்துரும்!! இதெல்லாம் ஒரு சின்ன பிரச்சனை மா.. இதுக்கெல்லாம் போய் மனசு விடலாமா? அண்ண பத்தி உனக்கு தெரியாதா? சின்ன வயசுல இப்படி ஏதாவது பிரச்சனை இழுத்துவிட்டு தானே இருக்கும். ஆனால் தப்பான வழியில எல்லாம் அண்ண போகாது ம்மா!!" என்று அவரை ஆறுதல்படுத்த.. தன் மனைவியிடம் பூங்கொடியை கண்களால் காட்டினான் தர்மா.. "பார்த்து படித்துக்கோ!!" என்று!! அவள் முகத்தை வெடுக்கென்று திரும்பிக் கொண்டு உள்ளே செல்ல முனைய..
"போ எல்லாருக்கும் டீ போட்டு எடுத்திட்டு வா கோத!" என்ற தர்மாவின் அழுத்தமான குரலில் அவளது கால்கள் அறைக்குச் செல்லாமல் நேரே சமையலறைக்கு சென்றது. மேம்போக்காக பார்த்தால் பூங்கோதையும் நல்ல பெண்ணே!! ஆனால் கொஞ்சம் எடுப்பார் கைப்பிள்ளை போல.. இவ்வளவு நாளும் தன்னை விட அம்மா அஸ்திராவை தாங்கியது அவளுக்குப் பொறுக்கவில்லை.
கோதை அனைவருக்கும் டீ போட்டுக்கொண்டு வந்து கொடுக்க பூங்கொடி வேண்டாம் என்று மறுத்த தாய் வம்படியாக குடிக்க வைத்தவள், "அஸ்திரா எங்கே?" என்று கேட்க மீண்டும் ஒரு மௌனச் சூழல் அங்கே!!
"மாடியில் தான் இருக்கிறா மா" என்று சற்குணம் கூற.. மெதுவாக மாடி ஏறிப் போனாள். அங்கே மயங்கி கிடந்தவளை பார்த்து "ஐயோ அம்மா அவ மயக்கம் போட்டு கிடக்குறா?" என்றதும் அதுவரை மருமகள் மீது வருத்தத்தில் இருந்த வடிவாம்பாள் அவசரமாக மாடி ஏறி வர.. கூடவே ஜெகநாதனும் தங்கையை பார்க்க மாடி ஏறி வர.. அங்கே மயங்கி கிடந்தவளை அவனே தூக்கி பெட்டில் படுக்க வைத்தான். அவள் முகத்தில் லேசாக தண்ணீர் தெளித்தாள் பூங்கொடி.. மெல்ல கண்களை திறந்து பார்த்தவள் முன்னே அவளது அண்ணியும் அண்ணனும் நிற்க.. தன் வீடு என்று எண்ணி இருப்பாள் போலும் "அண்ணே.. மதனி.." என்றவள் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.
வடிவாம்பாள் அவளை நெருங்கி வந்து பார்த்து "இந்த புள்ள காலையிலிருந்து இன்னும் சாப்பிடக் கூட இல்ல.. போதாகுறைக்கு மனசு அலட்டி இருக்கும். அதனால வந்த மயக்கம் தேன்.. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாயிடுவா" என்று வேலைக்காரை அழைத்து சத்து மாவு கலந்த பால் எடுத்தவர சொல்லி தூக்கத்திலேயே அவளுக்கு ஊட்டி விட்டு அனைவரும் கீழே வந்தனர்.
அதற்குள் பத்ரியும் வந்துவிட "என்ன பத்ரி ஏற்கனவே இந்த விஷயம் உனக்கு தெரியும்தானே முன்னெச்சரிக்கையாக ஒரு முன்ஜாமீன் எடுத்து வைத்திருக்கக் கூடாதா?? இப்படி அவனை கைது பண்ற வரைக்கும் விட்டுட்டியே?" என்று சற்குணம் கோபமாகவும் வருத்தமாகவும் அவனிடம் கேட்க..
'இதைத்தான் அந்த பயலிடம் முன்னுமே சொன்னேன்.. கொஞ்சம் கூட கேட்க மாட்டேன் என்றான். நான் தான் இப்போ என்னை மாட்டிக்ககட்டேன்.. என்னை ஊரே வைத்து இல்ல திட்டுவானுக.. இதற்கே உன்னை உள்ள தள்ளணும் டா வீரா!' என்று மனதில் வீராவை திட்டனாலும் "நான் ஏற்கனவே சொல்லிட்டேனுங்க ஐயா.. அவன்தேன் வேண்டாம்னு சொன்னான்" என்றதும் அங்கிருந்தவர்கள் அவனை முறைக்க..
"ஐயா.. நிஜமாகவே தான் இந்த கேச ப்ரோசீட் பண்ண பண்ண தான் உண்மை எல்லாருக்கும் தெரிய வரும் சொன்னான். மேலும் அவன் மனசுல எதோ ஒன்னு வச்சிருக்கியான். அத அங்கே வெளிக்கொண்டு வரும்னு அவேன் நினைக்கிறியான். அவன் போக்கில் விட்டால் எல்லாம் நன்மையாகவே தேன் ஐயா முடியும்!!" என்றான்.
"அவேன் என்ன வேணா செஞ்சுட்டு போட்டும்!! ஆனால் ஜெயிலுக்குள்ள இருந்து செய்யக்கூடாது!! யேன் புள்ள ஒரு நாள் கூட அங்கன இருக்க கூடாது!! நீயி என்ன செய்வியோ? ஏது செய்வியோ? தெரியாது.. இன்னும் ஒரு மணி நேரத்தில யேன் பிள்ளை யேன் வீட்டுல இருக்கனும்.. இல்ல அவனுக்கு துணையாக நானும் போயுள்ள இருப்பேன் உன்னை வெட்டிட்டு!!" என்று சற்குணத்தின் கோபத்தை அன்றுதான் முதன் முதலாக பார்த்த பத்ரி உள்ளுக்குள் நெடுங்கி வெளியே தலையை ஆட்டி ஆட்டி வேகமாக மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு விரைந்தான் அவனுக்கு ஜாமீன் வாங்க…
ஒரு வழியாக தனது வக்கீல் மூளையை இதுநாள் அனுபவத்தை வைத்துப் போராடி ஜாமீனை வாங்கிக்கொண்டு இவன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றான்.
எப்படியும் கண்ணபிரான் ஒத்துக் கொள்ள மாட்டான் வீராவை வெளியில் விட..
அவனிடமும் நாலஞ்சு பஞ்சு டயலாக் போட வேண்டுமே என்று ஆயாசமாக இருந்தது பத்ரிக்கு.. "ஏன்டா இந்த தொழிலுக்கு வந்ததோம்.. இவன் கிட்ட ஏன் டா ப்ரண்ட்ஷிப் வைச்சோம்?" என்று புலம்பியபடியே காவல் நிலையத்தில் நுழைய..
இவனை பார்த்ததும் கண்ணபிரானை எழுந்து வந்து "வாங்க.. வாங்க..வக்கீல் சார் உங்களுக்காக தான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பே இல்ல இவ்வளவு லேட்டா வா அவரது? ஜாமீன் கொண்டு வந்து இருக்கீங்களா?" என்று அவன் கையில் இருந்த கற்றை பேப்பரையும் அப்படி எடுத்தவன் "அப்பாடி இருக்கு!! ஜாமின் இருக்கு இருக்கு!! முதல்ல உங்க பிரண்ட இங்கே இருந்து கூட்டிட்டு போங்க சார்.. என்னால சமாளிக்க முடியல!!" என்று கைகூப்பி வேண்டி நின்றான் கண்ணபிரான்!!
"அப்படியென்ன டா செய்த???
உன்னை வெளியே விட மாட்டேன் என்று சபதம் செய்து கொண்டிருந்தவன் என்னை சமாதனப்படுத்தி உன்னை வெளியே அனுப்புகிறேன் என்றால் என்ன பண்ணி தொலச்சான் இவன்?" என்று கேள்வியோடு சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்த வீராவை பார்த்தான் பத்ரி!!
அங்கே திரைக்குப் பின்னால் வீரா மட்டுமல்ல அவனோடு அல்லக்கை நல்லது என்று ஒரு கூட்டமே அமர்ந்திருந்தது!
"நான் ஒருத்தனுக்கு தானடா ஜாமீன் வாங்கினேன்.. இங்க என்னோட இத்தனை பேர் இருக்கீக??" என்று கேட்டவாறு இவன் அந்த சிறை பக்கம் வர..
ஒரு கூட்டம் அமர்ந்து சீட்டு விளையாட.. மறு கூட்டம் ஆடு புலி ஆடம் ஆட.. மற்றொரு கூட்டம் தாயம் விளையாடிக் கொண்டிருக்க.. சட்டென ஒருவன் "டேய்.. நான் உன்னைய வெட்டிட்டேன்!" என்று சந்தோஷ கூச்சலிட..
"நீ எப்படா என்னைய வெட்டலாம்?" என்று அவன் இவனை தாக்க.. இருவரும் கட்டி உருள.. ஒரே அலங்கோலமாக இருந்தது அந்த சிறை அறையே..
"என்னடா மாப்ள.. இவ்வளவு தூரம்?" என்று வீரா நக்கலாக கேட்க..
"நீயி ஏன் கேக்க மாட்ட? அங்கன உன்னைய பெயில அழைச்சிட்டு வரலைன்னா என்னைய வெட்டிட்டு உனக்கு துணையாக வந்து உட்கார்ந்துக்க போறாராம் உங்க அப்பா.. சொல்றாரு!! இங்கே வந்து பாத்தா ஒரு ஊரே உனக்கு துணையாக வந்து இருக்குது. நான் ஒரே ஒரு ஜாமீன் தான் எடுத்துட்டு வந்தேன் டா" என்று இவன் பாவமாகக் கூறி அங்கிருந்தவர்களை தலைகளின் கணக்கை எண்ண ஆரம்பித்தான்.
"என்னடா??" என்ற என்று புரியாமல் வீரா கேட்க..
"எத்தன தலை இருக்குனு எண்ணிட்டு இருக்கேன்டா.. அத்தன தலைக்கும் ஜாமீன் எடுக்கணும் இல்ல?" என்று சொல்லிக்கொண்டே.. "அப்பாடி எண்ணிட்டேன்!! எழுபத்தி அஞ்சு..!!" என்றான் பத்ரி..
"அப்போ சொச்சம் எல்லாம் யாரு எண்ணுவா ஆபீஸர்?" என்று வீரா கேட்ட கேள்வியில் புரியாது அவனை பத்ரி பார்த்திருக்க.. அவனை பார்த்துக் கொண்டு பக்கத்திலிருந்த இரு அறைகளை காட்டினான் வீரா அட்டகாசமான சிரிப்போடு!!
அங்கேயே இருக்கும் மற்ற இரண்டு அறைகளிலும் இன்னும் கூட்டமாக உட்கார்ந்து கும்மி அடித்துக் கொண்டிருந்தனர் வீராவின் வீர விழுதுகள்!!
"என்னாது இன்னுமா???" என்று மயங்கியே விழுந்திட்டான் பத்ரி!!
"என்னடா இவனே மயங்கிடியான்? இப்ப யாருடா இவனுகளுக்கு ஜாமீன் எடுத்து வெளியே அழைச்சிட்டு போக??" என்று அருகிருந்த ஏட்டை பார்த்து பாவமாக கேட்டான் கண்ணாபிரான்!!
என்னது கண்ணபிரான் பாவமா??!!
இல்லையில்லை அவனை அப்படி ஆக்கினர் வீராவின் வீர விழுதுகள்!!
தீருமோ தாகம்!!
