உயிரே 25

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 223
Thread starter  
25
கண்களை மூடி சாய்ந்து அமர்ந்த அஸ்திராவுக்கு வீராவின் ஈர நினைவுகளே!!
 
மென் மேலும் அதிகமாக வந்தது..
அவளை சுற்றி அலைந்தது..
அவளை தொட்டு சீண்டியது..
காற்றாகி உடைக்குள் தவழ்ந்தது..
குளிர் பனியாய் அவளை சிலிர்க்க வைத்தது..
சுடும் தனலாய் தேகத்தை தகிக்க வைத்தது..
மேக பொதிக்குள் இனிமையாய் மென்மையாய் அவளை சுகித்தது..
சட்டென ஆழ் கடலுக்குள் மூச்சு திணற அவளை அமிழ்த்தியது..
சுற்றும் சூறாவளியாய் அவன் நினைவுகள் அவளை சுழன்று அடிக்க.. அவ்வுணர்ச்சிகளை தாங்க மாட்டா பெண்ணவள் மயங்கி சரிந்தாள்!!
 
மயங்கினாலும்.. நினைவுகள் தப்பினாலும்.. அவனின் நிழல்கள் நினைவுகளாய் அவளை இம்சித்தது!!
 
இங்கே இவள் அவன் நினைவுகளின் தாக்கத்தால் மயங்கி கிடக்க..
 
அங்கே மன்னவனோ அவளின் எழிலோவிய அழகு தந்த மயக்கித்தல் கிறங்கி கிடந்தான்.
 
அவனும் கண்களை மூடி தூங்கத்தான் முயன்றான். ஆனால் அஸ்திராவின் நினைவுகள் அதிகமாகி அவன் மனதைக் கொஞ்சம் வதைத்தது. அவளின் அழகு முகம் அடிக்கடி வந்து அவனை ஏங்கச் செய்தது. ஒரு நாள்.. இல்லையில்லை சில மணி நேர பிரிவே அவனை தகிக்க வைத்தது.
 
தூக்கம் பிடிக்காமல் கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே பெருமூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான். அவளின் நினைவில் இருந்து அவன் மீள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே உணர்ந்தான். 
"அவள போய் எதுக்கு இந்த அளவுக்கு நேசிச்சு தொலைச்சோம்.. எனக்கும் இருக்கும் காதலில் ஒரு சிறிதளவேனும் அவளுக்கு இல்லை.. ஏன் அதன் பிரதிபலிப்பு கூட கொஞ்சமும் இல்லை.‌ என்ன காதலுடா இது.. மனுஷனை வதைக்குது‌‌.. உயிரோட புதைக்குது!!" என்ற மனதுக்குள்ளேயே வசைப்பாடி கொண்டான்.
 
எவ்வளவு கோபம் வருத்தம் ஆற்றாமை அவள் மீது இருந்தாலும் அதையும் தாண்டி அவள் மீதான காதலே ஜெயித்தது. அதனோடு கூடிய மோகமும் அவனைத் பித்தாக்கியது!! தாபம் மேலேறி அனலேற்றியது!! அதிலும் அவளாய் நேற்று அரவணைத்ததை நினைத்தவனுக்கு அவளுடனான நெருக்கமான ஞாபகங்கள் கண்களுக்குள் உலா போயின..
 
அன்றும் ஒருநாள் இவனை தவிர்ப்பதற்காகவே தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த அவளை சிறிது நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன் தூங்கிவிட்டான் என்று நினைத்து மெல்ல ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க நமட்டு சிரிப்போடு இவன் புஜத்தால் முகத்தை மூடிக்கொண்டு படுத்திருந்தான். அப்பாடி தூங்கிட்டான் என்று அவள் திரும்பி படுக்க…
 
"ஏய் திருட்டு பொண்டாட்டி..!!" வீராவின் கொஞ்சல் குரல் அவளை உலுக்கியத்தோடு அவளையும் அவனோடு புரட்டிப் போட்டது.
 
அவளோ மீண்டும் அவனிடம் விலகி படுக்க.. வீராவால் அதற்கு மேல் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை தன் தாபத்தை. 
 
அவள் காலில் கன்னத்தை அழுத்தி தேய்த்தான்.. அவனின் முரட்டு உதடுகள் அவள் தந்த காலில் ஆங்காங்கே ஈரம் செய்தது. அவனின் நா அவளின் கால்களின் சுவையறிய முற்பட.. அவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது.
 
அதனை ஓரக்கண்ணால் கண்டு கொண்டே.. அவள் பாதத்தையும்.. அவளின் பிஞ்சு பாத விரல்களையும் முத்தமிட்டான். மனதோ பேயாட்டம் போட்டது அவளை ஆட் கொள்ள.. அவனுக்கு அவள் மீது ஆசையும், மோகமும் பெருகியதே தவிர சிறிதும் குறையவில்லை. அவனின் தாபத்தையும் மோகத்தையும் அவளுக்குள் கடத்த தொடங்கினான் தன் இதழ்கள் கொண்டு..
 
அவளது மென்மையான சிணுங்கலையும்.. சத்தமில்லா முனகலையும் கண்டு கொண்ட கள்வன்.. அதை குறைய விடாமல் தொடர.. இடைவிடாமல் அவன் செவிகளை அறைந்து கொண்டே இருந்தது அச்சத்தங்கள் இன்ப தாளங்களாய்!!
 
கொஞ்சம் முன்பிருந்த இருந்த தயக்கம் எல்லாம் முற்றிலுமாக அவனை விட்டு பறந்தோடி போக.. இன்னும் இன்னும் அவளுள் மூழ்கினான்.
 
உதடுகள் இந்த முறை கொஞ்சம் பலமாகவே அவள் உதடுகளில் உட்புக இந்த அழுத்தத்தால்.. ஏற்கனவே கொஞ்சம் விலகி இருந்த அஸ்திராவின் தேன் சிந்தும் இளம் உதடுகள் மேலும் கொஞ்சம் விலக.... விலகிய அந்த உதடுகளில் ஒன்றை மெல்ல கவ்வி கடித்து நாக்கால் அவளது வெண் பற்களை வருடியபடி நாக்கால் பதப்படுத்த, ஆணவனின் இந்த புதிய பரிமாணத்தை கண்டு பேசற்று போனாள் பேதையவள்!!
 
இருவர் உடல்களும் காமனின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. மோக வேட்கையின் தவிப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கொன்று தின்று விடும் வெறியில் இருந்தனர்.
ஆனால.. அவன் வெளிப்படையாக..
இவளோ உள்ளுக்குள்!!
 
ஒரு விரல் கொண்டு அவளது நெற்றியில் இருந்து மெல்ல கோடு இழுத்து வந்தான் கோமகன். பிறை நெற்றி.. கூர் மூக்கு.. சிவந்த அதரங்கள்.. சிறிய தாடை.. வெண்ணிற கழுத்தென பயணித்த அவனது விரல்கள்.. கழுத்தைத் தாண்டி இறங்க சற்று தயக்கம் காட்ட.. இவளோ இரு கைகளாலும் எக்ஸ் குறியீட்டு மறைத்துக் கொண்டாள் தன் மென்மையை.. பெண்மையை!!
 
உதட்டை உள்ளுக்குள் மடித்து சிரித்தவனின் விரல்கள் கழுத்துக்கு கீழே சற்று அழுத்தமாய் அமர்த்தலாய் அமர்ந்திருந்தது. 
 
கீழே இறங்கி விடுமோ என்ற பயத்தோடு அஸ்திரா!!
 
கீழே இறக்கட்டுமா அல்லது உன் மீது இரக்கம் காட்டடுமா என்ற கேள்வியோடு வீரா!!
 
இருவர் கண்களும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய.. அவள் கண்களை கூட விடாமல் கவ்வித் தின்றன வீராவின் கண்கள்!!
 
அவள் கண்களை பார்த்துக் கொண்டே மெல்ல குனிந்தவன் வெம் மூச்சுக் காற்றின் சீறலுடன் அவள் முந்தானையை விலக்கி.. அவளின் மெல்லிய முடிகள் சிலிர்த்திருக்கும் இளஞ் சூட்டு வயிற்றின் மேல் முகத்தை கவிழ்த்தான். அழகிய நீர் குமிழாய் சுழிந்திருக்கும் அவள் நாபியில் காற்றை ஊதினான். அதில் சிலிர்த்துச் சிணுங்கியவள் அவன் முகத்தை தள்ளி விட்டாள். ஆனால் அந்த வீம்பு பிடித்த வீரக் காளையவனோ அவள் சிற்றிடையில் முரட்டு முத்தங்களை பதித்து விட்டே நிமிர்ந்தான்.
 
அவளைத் தழுவி முதுகோடு இறுக்கி கொண்டவன், லேசாக குனிந்து அவள் உச்சந் தலையில் முத்தமிட்டான். பின் அவள் முகத்தை ஒரு கையில் பிடித்து நிமிர்த்தினான். அவன் கண்களில் பொங்கிய அந்த அபிரிமிதமான காதலில் சிலிர்த்தாள் பெண்ணவள். ஆனால் அவனின் அந்த காதல் அந்த நேரத்து தேடலாகவே பட்டது அவளுக்கு!!
 
அவனும் அவனின் மனதை புரிய வைக்கத்தான் முயன்றான். ஆனால் அவன் புரியவைத்த மொழியோ காதலோடு காமத்தையும் சேர்த்தது..
ஏற்கனவே அவன் மீது கோபத்தின் உச்சத்தில் இருப்பவளுக்கு இந்த காதலோடு கூடிய மோகம் எல்லாம் வெறும் காமம் ஆகவே பட.. அவ்வப்போது அவன் கண்ணில் தோன்றி மறையும் அந்த மின்னலும் காதலும் அவளுக்கு தாபமாக தப்பாகவே பட்டு.. வெறும் உடல் இச்சைக்காக என்னிடம் வருகிறான் என்று தப்பான கருத்தை அவளுக்கு மனதில் பதிய வைத்தது.
 
அவள் மனச்சுணக்கத்தையும்.. முகச்சுளிப்பையும்.. உள்ளுக்குள் இருக்கும் கோபத்தையும் தெரிந்திருந்தாலும்.. ஒவ்வொரு நொடியும் அவள் தன் மனைவி என்பதை அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தான். வெறும் மஞ்சள் கயிறு மேஜிக் எல்லாம் இவளிடம் வேலை செய்யாது என்பதை அறிந்த வீரா!! 
 
அன்று மெல்லினத்தோடு வல்லினத்தையும் ஒரு சேர பூட்டி அவள் இடையினத்தோடு இணை சேர்ந்தே கிடந்தான் விடியல் பிரிக்கும் வரை..
 
இவன் கனவுலகில் மிதந்து கொண்டே உள்ளே தான் படுத்து இருந்தான்.
 
இவனை சிறையில் கொண்டு வந்து அடைந்ததும் முதல் வேலையாக அம்பலவாணனை பார்த்து.. விஷயத்தை பகிர்ந்து.. மேலும் தன் பேங்க் பேலன்சை ஏற்றுக் கொள்வதற்காக பறந்துவிட்டான் கண்ணபிரான்.
 
சற்குணம் தர்மாவிடம் நடந்ததை கேட்க.. அவனும் கண்ணபிரானின் இடைவிடாத தொடர் தாக்குதலில் அஸ்திராவின் மனம் மாறி இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறி அந்த போட்டோ ஆதாரத்தை காட்டினான்.
 
"என்னதான் ஒருத்தன் நம்ம மனச கரைத்தாலும் நம் மனசு திடமாக இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது தருமா!!" என்று பெரு மூச்சு இழுத்து விட்டார். "சரி போய் அந்த பத்திரிய அழைச்சுக்கிட்டு வா" என்றார்.
 
"நான் அவேனுக்கு அப்பவே ஃபோன் பண்ணிட்டேன் மாமா.. அவேன் இந்நேரம் கிளம்பி இருப்பியான். இங்கேதான் வந்துகிட்டு இருப்பியான்" என்றவன், "எதுக்கும் ஒரு முறை நான் போன் செய்கிறேன்" என்று பத்ரிக்கு அழைத்தான்.
 
"சொல்லு தர்மா!!" என்ற பத்ரி குரலில் இருந்தே அவன் டிராவல் இருக்கிறான் என்று புரிந்ததை தர்மா "கிளம்பிட்டியா?" கேட்க..
 
"பத்து நிமிஷத்தில உங்க வீட்டுக்கு.. அதாவது வீரா வீட்டுக்கு வந்து விடுவேன்" என்று போனை அணைத்து விட்டான் பத்ரி. அதை அப்படியே மாமனிடம் சொல்லிவிட்டு அவனும் அருகே அமர்ந்து கொள்ள சற்று தள்ளி தூணில் சாய்ந்து இவர்களை பார்த்தவரை அமர்ந்திருந்தார் வடிவாம்பாள் சோக பதுமையாக. தர்மாவுக்கு தான் அவரை பார்க்க பார்க்க மனம் கனத்தது‌.
 
எத்தனை பெரிய பிரச்சினை எது வந்தாலும் வீட்டு பெண்களின் துணை இருந்தால்.. அவற்றை தூசி போல தட்டி செல்லலாம் ஆண்கள். ஆணின் பலம் சக்தி பெண்தானே!! அவர்களே சோர்ந்து விட்டால்.. ஆணின் சக்தி வடிந்துவிடும்!!

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top