உயிரே 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 223
Thread starter  

24

 

இந்த எண்ணங்கள் தான் அவனை காலை முதல் படுத்தி எடுத்தது. அதற்கு தான் கொஞ்சம் தஞ்சம் கொண்டான் இறைவனிடம்!! மற்றபடி இந்த கைது வழக்கு இதெல்லாம் அவனுக்கு தூசு போல.. தட்டிவிட்டுக் கொண்டு சென்று கொண்டே இருப்பான்.. தன் வழியே 

நேராய்..

நிமிர்வாய்..

தெனாவட்டாய்..

கம்பீரமாய்!!

வழக்கம்போல் அவனது இடதுகையால் மீசையை முறுக்கிக்கொண்டே!!

 

"என்னங்க டேய்.. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீக? வாய் இருந்தால் எத வேணாலும் பேசி விடுவீகளோ? என்னைக்கு நான் தாலி கட்டினனோ அன்னையிலிருந்து அவ யேன் பொண்டாட்டி!! எனக்கு மட்டும்தான் பொண்டாட்டி!! சற்குண பாண்டியன் மருமக!! அவள நீங்க நினைச்ச மாதிரி எல்லாம் பேசிட முடியாது!! இல்ல பேசி தான் பாருகளேன்!!" என்று கர்ஜித்தவனின் சிம்மக் குரலில் சற்று அடங்கி போனது கூட்டம். ஆனாலும் அவர்களது விருப்பமின்மை முகத்தில் அப்பட்டமாய் தாண்டவமாடியது!!

 

வீராவின் இந்த கர்ஜித்தலில் கண்ணபிரானுக்கும் சற்று உள்ளூர் நடுக்கும் தான். ஆனாலும் பேஸ்மட்டம் வீக் பில்டிங் ஸ்ட்ராங் என்பதைப்போல முகத்தை படு இறுக்கமாக வைத்துக்கொள்ள பிரம்ம பிரயத்தனம் பட்டான்.

 

நேராக தன் தந்தையின் முன்னே அவன் நிற்க.. இருவர் கண்களும் வாய் பேசாத பல விஷயங்களைப் பேசிக் கொண்டன. "முடிவாக நீயி முடிவெடுத்திட்ட??" என்று சற்குணம் கேட்க.. ஆமாம் என்று அவன் தலையசைக்க..

 

"சரி யா.. ரொம்ப நாளு எடுத்துக்காம சீக்கிரம் ஜோலிய முடிச்சிடு.. உன் ஆத்தா தாங்க மாட்டா!!" என்று மகனை வாழ்த்தி அனுப்பும்.. அதுவும் சிறைக்கு செல்லும் மகனை வாழ்த்தி வழியனுப்பிய ஒரே தகப்பன் நம் சற்குணபாண்டியன் தான்!!

 

அதன்பின் கீழே அமர்ந்து அழுது கொண்டிருந்த அன்னையிடம் சென்றவன் மெல்ல அவர் பாதங்களை தொட்டு தலையில் வைத்துக் கொண்டவன் "எம்மோவ்.. மாமியார் வீட்டுக்குத்தேன் போறேன்.. அதுவும் யேன் மாமனார் செலவுல.. இதுக்கு போய் நீயி ஏன் இப்படி ஒப்பாரி வைச்சிட்டு இருக்க.. சந்தோசமா போயிட்டு வானு என்னைய வழியனுப்பு ஆத்தா!! பாரு அங்கன எங்க ஐயன.. எம்புட்டு கம்பீரமாக நிற்கிறாரு!! நீயி என்னமோ சின்னபுள்ள கணக்கா அழுதுட்டு இருக்கியே.. போலிஸ் ஜெயில் இதெல்லாம் வீரனுக்கு அழகு ஆத்தா!! எந்திரி.. எந்திரி.." என்று அவரை கைத்தூக்கி எழுப்பினான்.

 

"ஆயிரம் தேன் நீ சொல்லு யேன் மனசு அறவே மாட்டேங்குது. யேன் மருமகளா தானே நெனச்சேன் அவள.. இப்படி ஒரு விஷமான விஷயத்தை செஞ்சிட்டாலே!!" என்று மருமகளை கண்களால் எரித்துக்கொண்டே வடிவாம்பாள் கூற..

 

"அவ செஞ்சது தப்பு இல்லை மா.. யாரா இருந்தாலும் அதைதான் செய்வாக. அவ நிலையில் இருந்து யோசி.. அவ மயக்கத்தில் இருந்து கண் விழிக்கும்போது செத்து போன சஞ்சயன் கிட்ட நான் தேன் இருந்தேன். ஏற்கனவே நம்ம குடும்பத்துக்கும் அவுக குடும்பத்திற்கு ஆவாது.. அப்புறம் என்ன நினைப்பா? இது கூட நன்மைக்கேனு நினைச்சுக்கோ.. சீக்கிரம் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். நான் வரவரைக்கும் உன் மருமக.. இல்லையில்லை இந்த வீராவோட பொண்டாட்டி உன் பொறுப்பு!! சரியா?" என்று அன்னையை தோளோடு அணைத்து தந்தையிடம் கண்ணைக் காட்டிவிட்டு கண்ணபிரானை நோக்கி கன கம்பீரமாய் சென்றான்.

 

தன்னை நோக்கி வருபவனை ஏதாவது இரண்டு வார்த்தைகளாவது

நல்லா நல்லாதாய் நாக்கை பிடுங்குவதாய் கேட்கவேண்டும் என்று கண்ணபிரான் ஏக எதிர்பாரப்போடு நிற்க.. வேகமாக வந்தவன் இடது கையால் அவனை ஒதுக்கிவிட்டு, வலது கையால் தன் மனைவியை இழுத்து இடையோடு அணைத்தவன், "ஓய் பொண்டாட்டி… மாமன் கிட்ட சொல்லியிருந்தா நானே போய் சரணடைஞ்சு இருப்பேனே.. உனக்கு வேலை மிச்சமாய் இருக்குமே தீரா.. ஆனாலும் யேன் பொண்டாட்டிக்காகத்தான் இந்த வீரா இப்போ அமைதியா இருக்கான். இல்லேனா இந்த கண்ணபிரான் எல்லாம் கண்ண மூழி இல்லாம சுத்திக்கிட்டு இருப்பான். புரிஞ்சுதா? யேன் பொண்டாட்டி!!" என்று யாரும் அறியாமல் அவள் இடை கிள்ளி ஒற்றை கண்ணடித்து, நெற்றியில் முட்டியது போல அவளது துடித்த அதரங்களை தன் மீசை மறைத்து அதரங்களால் உரசிவிட்டே நகர்ந்தான்!!

 

"போலாமா கண்ணபிரான்!!" என்று ஜம்பமாய் அமர்ந்து கொண்டவனை பார்த்த கண்ணபிரானுக்கு யார் யாரைக் கைது செய்து அழைத்து செல்கிறார்கள் என்று ஆகப் பெரும் குழப்பம்!!

 

அவனை விட அதிகமாய் குழம்பி நின்றிருந்தாள் அஸ்திரா‌ கணவன் கண்டிப்பான்.. தண்டிப்பான்.. ஏன் சுடு சொல்லால் தன்னை வதைப்பான் என்று என்னென்னவோ அவள் கற்பனை கோட்டை கற்றிருக்க.. அத்தனை கோட்டையையும் ஒரே இச்சில் தரைமட்டமாக்கி விட்டான் நெற்றியில் அனைவர் முன்னாலும் கொடுத்து!!

 

"இவனைப் பெத்தவங்கள இல்லை செஞ்சாங்களா?" என்று அவள் விழி விரித்து நிற்க.. விருட்டென்று வீராவை சுமந்து கொண்டு அந்த வாகனம் அங்கிருந்து சென்றது.

 

இப்பொழுது தான் என்ன செய்வது? எங்கே போவது? இவர்கள் வீட்டு பையனையே சிறைக்கு அனுப்பி விட்டு இவர்கள் வீட்டுக்குள்ளேயே செல்ல முடியுமா? அல்லது அப்பாவிடம் தான் சொல்ல முடியுமா? அதுவும் முடியாது!! என்று அவள் தவிப்பாய் தவறு செய்து விட்டோமோ என்று முதல் முறை குற்றவுணர்ச்சியாய் நின்று கொண்டிருக்க… சுற்றியிருந்த கூட்டம் கண்களாலேயே அவளை எரித்து பஸ்பமாக்க காத்திருந்தது.

 

சற்குணபாண்டியன் வடிவாம்பாளிடம் கண்காட்ட அவருக்கு மனம் இல்லை. மகனை போலீசில் பிடித்துக் கொடுத்த அவளை எப்படி மருமகளாய் கொண்டாட முடியும்.

 

ஆனாலும் கணவன் பேச்சை தட்டாத அந்த கிராமத்து பெண்மணி கூடவே மகனும் அத்தனை பத்திரம் சொல்லி சென்றிருக்க தன் அழுகை அனைத்தையும் கண்களோடு விழுங்கிக் கொண்டு.. மகன் சிறை சென்ற துக்கத்தை தன் நெஞ்சோடு புதைத்துக்கொண்டு.. முந்தானையால் முகத்தை அழுந்த துடைத்து.. அஸ்திராவை நோக்கி சென்றபோது முகத்தில் மருந்துக்கும் புன்சிரிப்பில் இல்லை கோபமும் இல்லை. நிர்மலமான முகத்தோடு "வா ஆத்தா.. உள்ள போலாம்" என்று அவளை கைபிடித்து அழைத்துச் சென்றார்.

 

இதுவரை அஸ்திராவுக்கு வடிவாம்பாள் பிடிக்கும் அதாவது மற்றவர்களை காட்டிலும் தன்னிடம் பிரியமாக இருக்கிறார் என்ற காரணத்தினால் மட்டுமே!! ஆனால் இன்று இவ்வளவு கலவரத்திலும் அவரது எந்த பேச்சும் பரிவும் அவளுக்கு மனதில் முன்னே இருந்ததைவிட பெரும் குற்ற உணர்ச்சியை கொடுக்க.. அதுவரை அவரை அத்தை என்று அழைக்காதவள், தன்னையும் மீறி "அத்..அத்தே.. அத்தே.." என்று அதற்கு மேல் வார்த்தைகள் வர முடியாமல் திக்கித் திணறி தவறு செய்துவிட்ட பிள்ளையின் பரிதாப கண்களோடு இறைஞ்சி இறைஞ்சி அவரை பார்க்க.. 

 

"நீயி எதுவும் இப்ப பேச வேணாம் அமைதியா உள்ள வா" என்று அவர் அழைத்து செல்ல அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஓடிவந்த கோதையும்

யோகாவும்.. வடிவு அஸ்திராவை அழைத்துச் செல்வதைப் பார்த்தவர்கள், கோபத்தோடு வழிமறித்து நின்றார்கள்.

 

"ஏய்.. யேன் அண்ணன ஜெயிலுக்கு அனுப்பிட்டு நாங்க வீட்டுக்குள்ள சொகுசாய் இருக்கலாம்னு பாக்கிறியோ?? அம்மா.. முதல்ல இவள வூட்டு விட்டு துரத்துமா!!" என்று அன்னையிடம் பேசியவள் அஸ்திராவிடம் திரும்பி "எவ்வளவு அதப்பு இருந்தா எங்க அண்ணன அனுப்பிட்டு நீ இந்த வீட்டுக்குள்ள இருப்ப.. எங்க அண்ணனே போனதுக்கு அப்புறம் உனக்கு என்னடி இங்கே வேலை? கூட இருந்து குழி பறிச்சிட்டல" என்று அவள் அஸ்திராவின் கையை பிடித்து இழுத்து வெளியே தள்ள முயல.. சட்டென்று அஸ்திராவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் வடிவாம்பாள்.

 

"விடுமா.. விடுமா.. அவள.. எனக்கு வர்ற கோவத்துக்கு அம்மிக்கல்லை எடுத்து அவ தலையில அப்படியே போடணும் போல இருக்கு.. ஊர்ல இல்லாத பொண்ணா பார்த்து இரண்டாம் தரமான போய் கட்டிகிட்டு வந்தான் பாரு அவன சொல்லணும்" என்றாள் கடுப்போடு!!

 

"ஏற்கனவே தாலியறுத்தவ தானே? இருக்கிறதையாவது பங்குடா பாதுகாக்கணும் நெனப்பிருக்கா? அதையும் அறுத்து எறிறதற்கு இவ்வளோ போய் வேலை பண்ணிட்டு வந்திருக்காலே.. ஆத்தாடி ஆத்தா பொம்பள செய்ற வேலையா இது? அதெல்லாம் தாலிபாக்கியம் இருக்குறதுக்கு ஒரு ராசி இருக்கணும்!!" என்று யோகாவும் வார்த்தைகளை கனல்களாய் கொட்டினார்.

 

"மதனி.. நீங்க சும்மா இருக்க மாட்டீகளா வாயை வச்சுக்கிட்டு? செத்த நேரம் சும்மா இருங்க!!" என்று யோகாவை அதட்டிய வடிவு.. மகளிடம் திரும்பி "கோத இதுல நீயி தலையிடாத.. போகும்போது உங்க அண்ணா சொல்லிட்டுதான் போயிருக்கான் யேன் பொண்டாட்டிய பத்திரமா பார்த்து இருந்துகிடனும்னு.. அவளுக்கு சின்ன ஒரு துரும்பு பட்டாலும் உங்களை யாரும் அவன் சும்மா விடமாட்டான். ஞாபகம் இருக்கட்டும்!!' என்று அவர் வருத்தத்தையும் மீறி அஸ்திராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

 

"ஆமா.. ஆமா.. இப்படியே தப்பு செய்றவுகளை எல்லாம் நீங்க காவந்து பண்ணிக்கிட்டே இருங்க விளங்கிடும்.. விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்? தாயை போல பிள்ளை நூலை போல சேலைனு வாங்க.. அப்படியேவால்ல இருக்கு!" என்று தாடையை முகத்தில் இடித்துக்கொண்ட யோகலட்சுமி கூற வருடங்கள் ஓடினாலும் அன்னை செய்த தவறு இன்றும் தன்னை துரத்துகிறது என்று துக்கம் மிகுந்தது அஸ்திராவுக்கு.

 

ஆனால் அவள் செய்த தவறை அவளால் தவறு என்று ஒத்துக் கொள்ள இயலவில்லை அதை நியாயப்படுத்தவே முயன்றது அவள் மனது!!

 

அதற்குள் நாச்சிமுத்துவை கண்களை காட்டி அங்குள்ளவர்களை அமைதி காக்க சொல்லிவிட்டு தர்மாவுடன் பேசிக் கொண்டே உள்ளே வந்தார் சற்குண பாண்டியன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க..

 

பெண்கள் கூட்டத்தை பார்த்து "உங்களுக்கெல்லாம் வேற தனியா சொல்லனுமா? சும்மா ஏதாவது பேசிகிட்டு இந்த வீட்டில் திரும்ப ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்தீக... நான் மனுசுன இருக்க மாட்டேன்! சொல்லிப்புட்டேன்!!" என்று தங்கையையும் மகளையும் பார்த்து கோபமாக கத்தியவரை கண்ட பெண்கள் அமைதியாக தங்கள் அறைக்குள் சென்று விட்டனர் இன்னும் அஸ்திராவின் அப்பத்தா.. தாத்தா.. பாட்டான்.. பாட்டி.. என்று பரம்பரையே திட்டி தீர்க்க…

 

"நீயி உள்ள போமா!!" என்று சொன்னவர் குரலிலுல் அழுத்தம் மிகுந்து ஒலித்தது. இருவரையும் சங்கடத்தோடு பார்த்துக்கொண்டே தங்கள் அறைக்கு சென்றாள் அஸ்திரா.

 

அறைக்குள் நுழைந்ததும் அந்த அமைதி அவளுக்கு வெறுமையை தந்தது. 

 

அறைக்குள் நுழைந்தாலே "ஓய் பொண்டாட்டி.. ஏய் பொண்டாட்டி.. தீரா.. மயிலு.." என்று வித விதமாக பெயர்களை கொண்டு வம்பு இழுத்துக் கொண்டு தன் பின்னே சுற்றித்திரியும் கணவனின் குரல் அவ்வறை முழுவதும் எதிரொலிக்க.. 

அக்குரலை தவிர்க்க முடியாமல் தவித்துப் போனாள் அவள்.

இரு காதுகளையும் அழுத்தமாக மூடிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்து விட்டாள் அஸ்திரா!!

 

நேரம் செல்லச் செல்ல அந்த அறை முழுவதும் வீராவின் குரலை ஒவ்வொரு செங்கல்லுமே எதிரொலித்தது.

ஏக்கம் கலந்த தவிப்பாய்.. 

மோகம் கலந்த கொஞ்சலாய்... கண்டிப்புடன் கூடிய அன்பாய்..

சில சமயங்களில் சீண்டலாய்..

பல நெருக்கமான நேரங்களில் உயிர் தீண்டலாய்..

அவன் வார்த்தைகள் அவளை சுற்றி சுற்றி வர.. அவற்றின் கணம் தாங்காமல் மயங்கி சரிந்தாள் அஸ்திரா!!

 

தீருமோ தாகம்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top