உயிரே 23

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 223
Thread starter  

23

"யேன் மகந்தேன் கொலைய செய்தானு என்ன சாட்சியம் உங்ககிட்ட இருக்கு? எத வைச்சு அவனை கைது செய்ய வந்திருக்கிறீரு?" என்று நேர்கொண்ட பார்வையோடு பஞ்சாயத்தின் நீதி தவறாத நாட்டாமையாக கேள்வி கேட்டார் சற்குணபாண்டியன் இன்ஸ்பெக்டர் கண்ணபிரானை பார்த்து!!

 

ஏற்கனவே இன்ஸ்பெக்டர் தங்கள் சின்ன ஐயாவை கைது செய்ய வந்திருக்கிறான் என்ற விஷயம் கேள்விப்பட்டு அங்கு உள்ள அல்லக்கை நல்லகைகள் மட்டுமல்லாமல் இளசுகளும் சேர்ந்து நரம்பு புடைக்க நின்றிருந்தனர். விட்டால் பொங்கி எழுந்து கண்ணபிரானை உருத்தெரியாமல் அழித்துவிட துடித்துக் கொண்டிருந்தனர். இதுழே மற்ற நேரமாக இருந்தால் கண்ணபிரான் அவர்களை பார்த்து உள்ளுக்குள் சற்று என்ன அதிகமாகவே நடுங்கி இருப்பான்.

 

ஆனால் இன்று அவன் கையில் தான் இருக்கிறதே அஸ்திரா என்ற பிரம்மாஸ்திரம்!! பின்னர் ஏன் தான் பயந்து நடுங்கி சாகவேண்டும் என்று நினைத்தவன் வதனத்தில் அத்தனை திமிரும் தெனாவட்டு கூடவே வெற்றியின் களிப்பு வேறு!! இப்பவே சஞ்சயன் கொலை வழக்கில் வீரா தான் குற்றவாளி என்று தீர்ப்பு வந்து அவனை உள்ளே தள்ளி விட்டதைப் போன்று அத்துணை சந்தோஷம் அவனிடம்!!

 

வீராவை கைது செய்ய வந்ததை தாங்க முடியாத பெற்ற மனம் துடிதுடித்தது. "அடி யாத்தே…!!" என்று நெஞ்சை நீவிக்கொண்டே நின்றிருந்தார் வடிவாம்பாள். இத்தனைக்கும் மருமகள் மீது ஒரு துளி சந்தேகம் வரவில்லை. காலை மகன் மட்டும் எழுந்து வரும்போது மருமகள் அசதியில் தூங்கி கொண்டு இருப்பாள் என்று நினைத்தார் அந்த வெள்ளந்தி!! இப்போது இன்ஸ்பெக்டரோடு மருமகளே பார்த்தால் என்ன ஆவாரோ??

 

சற்குண பாண்டியன் கேட்ட கேள்விக்கு ஒரு இகழ்ச்சி புன்னகையோடு "சாட்சி தானே இதோ கையோடவே கூட்டிட்டு வந்து இருக்கிறேன்.. நீங்களே பாருங்க நாட்டாம!!" என்று தன் ஜீப் கதவை திறக்க சென்றான் கண்ணபிரான்.

 

எவனா இருந்தாலும்.. எவனையும் விடக்கூடாது!!

 

அந்தச் சாட்சிக்கு வந்தவன் யாரென பார்த்து அவன போட்டோ எடுத்து வச்சு.. அவன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் தூக்கி கொண்டு போய் கத்தி முனையில் வைத்து கேஸ் வாபஸ் வாங்க வைக்கணும்!!

 

எவனா இருந்தா என்ன? வெளியே வந்த நொடி கோழி அமுக்குவது போல அமுக்கி கூட்டத்துக்குள் தூக்கிட்டு போய்ட்டா எவன் கண்டுபிடிப்பான்??

 

என்று கூட்டத்தில் உள்ளவர்கள் ஆளாளுக்கு அந்த சாட்சிக்காரனுக்கான தண்டனையை வகைப் படுத்தி பட்டியலிட்டு கொண்டிருந்தனர்.

 

விஷயம் கேள்விப்பட்டு பதறிய நாச்சிமுத்துவும் தர்மாவும் வந்து கொண்டிருந்தனர். தர்மாவுக்கு ஏற்கனவே இப்படித்தான் நடக்கும் என்று ஓரளவுக்கு அனுமானம் இருந்தது. ஆனால் நேற்று பேசி இருக்க இன்றே நடந்து விட.. பெரும் அதிர்ச்சி தான் அவனுக்கும்!!

 

இங்கே இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கொஞ்சம் கூட அசராமல் மூடிய கண்களும்.. கூப்பிய கைகளும்.. விரைத்த நெஞ்சும்.. பக்தி நிறைந்த முகமாய் பூஜை அறையில் நின்றிருந்தான் வீர நெடுமாற பாண்டியன்!!

 

எவன் அவன் என் பிள்ளைக்கு எதிராக சாட்சி என்று ஆராயும் கண்களோடு சற்குணம்!!

 

யாராயிருக்கும் என்று படபடக்கும் இதயத்தோடு வடிவாம்பாள்!!

 

யாராயிருந்தாலும் சாம பேத தண்ட 

வகைகளைப் பயன்படுத்தி அடக்கி பணிய வைக்க வேண்டும் என்று கழுகு பார்வையோடு நாச்சிமுத்து!!

 

வாடா.. வாடா.. வட்டப்பாறைக்கு என்று முறுக்கிய மீசையும் கோப விழிகளுமாய் அல்லக்கைகளும் நல்லகைகளும்!!

 

சாட்சி யார் என்று தெரிந்தும்.. அதை வெளியில் சொல்ல முடியாமலும்.. சாட்சியை பார்த்தால் இங்கே காட்சி எப்படி இருக்கும் என்று எதையும் பகுத்தறிய முடியாமலும் தவிப்போடு தர்மா!!

 

எது நடந்ததோ அதுவும் உன் செயல்.. எது நடந்து கொண்டிருக்கிறதோ அதுவும் உன் செயல்..

இனி நடக்கப்போவது அனைத்தும் உன் செயல்..

வெறும் கருவி மட்டும் நானே!!

என்று ஆகப்பெரும் சிந்தனையோடு அமைதியே உருவாய் சாந்தமாய் பக்தியாய் வீரா!!

 

இப்படி அனைவரும் பல்வேறுபட்ட மனநிலையில் இருந்தாலும்..

வீராவின் நலம் ஒன்றே குறியாய் இருக்க.. அவனின் சரிபாதியானவளோ அவனை சிறை அனுப்ப எதிரியோடு கைக் கோர்த்திருந்தாள்!!

 

கண்ணபிரான் அனைவரையும் ஒரு மிதப்பான அலட்சிய பார்வை பார்த்து ஜீப் கதவை திறக்க.. அனைவரின் விழிகளும் கண்ணபிரானை தாண்டி ஜீப் கதவு மேலேயே நிலைகுத்தி நின்றது.

 

வேஷ்டியோ அல்லது பேண்ட் அணிந்த கால்களைப் எதிர்பார்த்த கண்களுக்கு.. வெட்டவா குத்தவா என்று ரௌத்திரத்தோடு காத்திருந்தவர்களுக்கு..

கொலுசு அணிந்த பாதங்களை பார்த்ததும் ஒற்றேத் திகைப்பு!!

 

பாதத்தை பார்த்ததற்கே அத்தனை திகைப்பு என்றால்.. முழுதாக ஜீப்பில் இருந்து வெளி வந்து நின்றவளைப் பார்த்ததும் ஸ்தம்பித்தே நின்றனர். ஊர் மக்களும்.. நாட்டாமையும் நாட்டாமையின் மனைவியும்!!

 

"அடி.. யாத்தே!! யேன் குடும்ப விளக்கால நினைச்சேன்.. இப்படி யேன் புள்ள கழுத்துக்கு தூக்கு கயிறால வந்த நிக்குறவ!!" என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்து விட்டார் வடிவாம்பாள்.

 

சற்குணத்தின் கண்கள் அஸ்திராவின் கண்களை தான் கூர்ந்து ஆழ்ந்து பார்த்தது. 'ஏன் இப்படி செய்தாய்?" என்று ஒற்றைக் கேள்விதான்!! அவரின் கண்களை பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை. சட்டென தலையை குனிந்து கொண்டாள்.

 

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்ற மக்கள் அதன் பிறகு வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தனர்.

 

"என்னதேன் இருந்தாலும் அவ அம்பலவாணன பொண்ணு தானே.. அதைத்தேன் இப்போ நிரூபிச்சிட்டா!"

 

"இந்த எண்ணத்தோடு தேன் கல்யாணம் பண்ணி வந்து இருந்தா போல.."

 

"கூடவே இருந்து கழுத்த அறுத்து பட்டாலே பாவி சிறுக்கி!!"

 

"நாய குளிப்பாட்டி நடுவீட்டில் வைச்சாலும் அது அது புத்தி தேன் காட்டும்.. அவே அப்பனும் ஆத்தாளும் எப்படிபட்ட ஆளுக.. பொண்ணு மட்டும் வேற எப்படி இருக்கும்!!" என்று ஒவ்வொரு சொல்லும் இடியாய் வந்து அஸ்திராவின் இதயத்தை தாக்கியது.

 

என்னதான் அவளின் அம்மா கல்யாண பிறகு காதல் என்று அவள் அப்பவோடு சென்று இன்றுவரை ஒன்றாக குடும்பம் நடத்தினாலும் அந்த அவப்பெயர் இன்னும் அவரை விட்டு செல்லவில்லையே? என்று வருத்தமாக இருந்தது!

 

ஆனால் அதெல்லாம் ஒரு நிமிடம் தான். 'நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏன் இவர்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டும்? தவறு செய்தவனே தெனாவட்டாக திமிராக ஊருக்குள் நடமாடும் கொண்டிருக்கும்போது.. அதுவும் ஒன்றும் அறியா அப்பாவி சஞ்சயனை கொன்றுவிட்டு!!

 

என்று அவள் மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் ஊரார் பேச்சுக்களும் எல்லை மீறி சென்று கொண்டிருக்க…

 

"யேன் பொண்டாட்டிய நா மேல பல்லு போட்டு பேசுறவன் ஒருத்தவன் பல்லும் இருக்காது!!" என்று கம்பீரமான கட்டளையான குரல் கேட்க.. அப்படியே அடங்கி இருந்தது அவர்கள் வார்த்தைகள் மட்டுமல்ல ஆட்களும் அக்கம்பீர குரலோனுக்கு!!

 

குரல் வந்த திசையை அனைவரும் திரும்பி பார்க்க.. அங்கே

நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு வெளியே வந்தான் பக்தி பழமாய் வீரா!! அவன் கண்கள் அனைவரையும் ஒரு முறை சுற்றி பார்த்து அவன் தீராவின் மேல் நிலைத்தது.

 

அப்பார்வையிலிருந்தது என்ன??

அப்பார்வை பேசும் பாஷை என்ன??

அப்பார்வை சொல்ல விழையும் உண்மை என்ன??

எதையும்.. எவரையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அஸ்திரா!!

 

மனம் முழுக்க எரிந்துகொண்டிருந்த பழி தீக்கு.. கண்ணபிரான் எண்ணெய் வார்த்திருக்க.. இப்போது அது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது!! பார்க்கும் அனைவரையும் தன் பழி உணர்வுக்கு ஆகுதியாய் உள்ளே இழுக்க தான் பார்த்தது!!

 

தாலி கட்டிய கணவன் என்று பார்க்காமல்.. அவனிடம் அவன் தரப்பு நியாயங்களை கூட இதுவரை கேட்காமல்.. கண்டதே கோலம் கொண்டதே காட்சி என்று சாட்சிக்கு கூடவே கை கோர்த்தாள் அஸ்திரா!!

எப்பொழுதும் போல அவள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதாய்!!

 

அவ்வளவு ஆக்ரோஷமாய் ஆர்ப்பரித்தவர்கள் அனைவரும் அவனின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆழ்கடல் போல் அமைதியாய் இருந்தாலும்.. எப்போது சுனாமியாய் பொங்குவார்கள் என்று தெரியாது!! 

 

அதுவும் இக்கூட்டத்தினரிடையே தன் மனைவியை விட்டு செல்லவும் அவனுக்கு மனமில்லை!! வார்த்தைகளை கத்தியாய் வீசியே கொன்றுவிடுவார்கள்!! அதற்காக அவளை அவள் அப்பா அம்பலவாணனோடும் அனுப்ப முடியாது.

 

இங்கேயாவது என் மனைவியாக இருப்பவள, அங்கே முழுதாக மூளைச்சலவை செய்து இல்லை வேறு ஏதோ பித்தலாட்டங்கள் செய்தோ வேறொருவனுக்கு மனைவியாக மாற்றிவிடுவான் இல்லை ஒரேடியாக சிவலோக பதவியை கொடுத்து விடுவான் அந்த நியாஸ்தன் அம்பலவாணன்!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top