ஓவியம் 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

ஓவியம் 3

 

பார்க்கில் பார்த்த பெண்ணை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டுவருவதாக சென்ற வசந்த் மறுநாள் மதியம் ஜெய்தேவ்கிற்கு போன் செய்தவன்,

 

"கண்டுபுடிச்சேன்.. கண்டுபுடிச்சேன்.. 

பார்க் பொண்ண நான் கண்டுபிடிச்சேன்.. தேவா.. தேவா.." என்று அவன் பாட..

 

"ஏற்கனவே பல டென்ஷன்ல இருக்கேன்.. நீ வேற என்னை பாட்டுங்குகுற பேர்ல கத்தி இன்னும் என்னை டென்ஷன் ஏத்தாத.. ஒழுங்கா விஷயத்தை சொல்லுடா பக்கி" என்று ஜெய்தேவ் எரிந்து விழ..

 

"என்னை பக்கினு சொன்னது கூட நான் கோபப்படல டா.. ஆனால் நான் பாட்டு பாடுறதை கத்துறேனு சொன்ன பாரு, அதை மட்டும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. பிஞ்சு மனசு ரணப்பட்டுடிச்சு.. இங்கே பார் எனக்கு ரோஷம் வந்துடுச்சு.. அதனால போன கட் பண்ணிட்டு.." என்று அவன் முடிக்கும் முன்னே இந்த பக்கம் இருந்த ஜெய்தேவ் "சரி.. போன கட் பண்ணிட்டு.." என்று எடுத்துக்கொடுக்க..

 

"போன கட் பண்ணிட்டு நேருலேயே வந்து சொல்றேன்னு சொன்னேன் டா மச்சான்" என்று அசட்டு சிரிப்புடன் கூற..

 

கடகடவென்று சிரித்த ஜெய்தேவ்.. "ரோசம் வந்துச்சுனு சொன்னானே அவனை நீ பார்த்தியா?" என்று வார.. "ரோசமா? அதை வைத்து ரசம் கூட வாங்க முடியாது.. நமக்கு சோறு தான் முக்கியம் பாஸே" என்றவன் அடுத்த பத்தாவது நிமிடம் ஜெய்தேவ் எதிரில் இருந்தான்.

 

"சொல்லுடா" என்க..

 

"அந்த பொண்ணு பேரு பர்வீன் பானு.. அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன் மட்டும்தான். அப்பா இல்லை அம்மாவும் அவுங்களோட தான் இருக்காங்க. அண்ணனுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான்" என்று கூற.. 

 

 

"சூப்பர் சூப்பர் டா மச்சான்.. அன்னைக்கு பார்க்கும்போது ஃபர்ஸ்ட் ப்ளாக் போனா.. கரெக்டா அட்ரஸ் சொல்லு டா" என்று ஜெய்தேவ் பரபரக்க.. 

 

"சொல்றேன்.. அப்படியே சூடா.. கொஞ்சம் ஜில்லுனு ஒரு பீர் வாங்கி தருவியா?" என்று நண்பனிடம் டீல் பேச..

 

"அது என்னடா சூடா ஜில்லுனு.." என்று சந்தேகம் கேட்க..

 

"இல்ல மச்சான்.. ஜில்லுன்னு பீர உள்ள இறக்குன்னா அது நமக்கு ஹாட் ஃபீலிங்க கொடுக்கும்" என்று வசந்த் கண்ணடிக்க..

 

தன் அருகிலிருந்த ஃபைலை தூக்கி அவன் மீது எறிந்தவன், "ஒழுங்கா அட்ரஸ் சொல்லல.. இப்போ பைல விட்டி ஏறிந்தேன். அடுத்தது பைல் இருக்கிற ராக்கை தூக்கி எறிந்து விடுவேன்" என்று அவனை மிரட்ட..

 

"சரி சரி.. நண்பனாலே வேலை ஆன உடனே கழட்டிவிடுறவன் தான" புலம்பிக் கொண்டே தன் பையில் இந்த அட்ரஸ் எடுத்து அவனிடம் கொடுத்தான்.

 

"நைட் வெயிட் பண்ணுவேன்.. பீர் வாங்கித் தரலை அப்புறம் தான் இருக்கு?" என்று வசந்த் சென்றுவிட.. ஜெய்தேவ் தன் கையிலிருந்த அட்ரஸை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் விரைவாக அன்று வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பார்க்கில் அவளுக்காக காத்திருந்தான்.

 

"என்ன இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் ஆள காணோம்?" என்று புது காதலனை போல இவன் நொடிக்கு ஒரு முறை கடிகாரத்தை திரும்பி பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க.. இன்று பார்த்து நேரம் மிக மெதுவாக ஓடுவது போலவே இருக்க, "வாட்ச் சரியா வேலை செய்யுதா?" என்று அதை கழட்டி ஆட்டி சரிபார்த்து கட்டினான். அப்போதும் மணி அதே காட்ட.. ச்சே.. என்று அலுத்துக் கொண்டவன் அந்த பார்க்கை இரண்டு முறை சுற்றி வந்து விட்டான். ஆனாலும் அவளும் வரவில்லை அந்த பொடியனும் வரவில்லை. ஒரு வேளை இன்னைக்கு வர மாட்டாளோ? வேறு‌ எதும் வேலை வந்திருக்குமோ?" என்றா தனக்குள் புலம்பித் தவித்தான் தேவா.

 

சிறிது நேரத்தில் பிள்ளைகள் இருந்த பக்கத்திலிருந்து கலகலவென்று சிரிப்பு சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். நேற்றைக்கு பயம் துக்கம் கோபம் என பலவித அபிநயங்கள் காட்டியே அவளது விழிகள் இன்று சிரிப்பில் பலநூறு கதைகளை பேசியது. 

 

சிரிக்கும் போது அவள் கண்களில் தெறித்த மின்னலில் தலைக்குப்புற விழ இருந்த மனதை நொடியில் கட்டுப்படுத்தி தன் கைகளால் இடது பக்கத்தை நீவிவிட்டு கொண்டான் ஜெய்தேவ்.

 

நேற்று பர்தாவில் வந்தவள் இன்று லாங் ஸ்கெட்டும் மினி டாப்பும் மேலே ஸ்கார்பால் முகமெங்கும் மறைத்திருக்க.. அவளின் நேத்திரங்கள் மட்டும் இவனின் தரிசனத்திற்காய்..

 

இன்றாவது அவளிடம் தன்னைப் பற்றியும் தன் ஓவிய எண்ணத்தை பற்றியும் கூற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தாலும் அவளை கண்ட நொடி அனைத்தும் மறந்து மறைந்து போய்.. அவள் மட்டுமே பிரதானமாக தெரிந்தாள் அவன் கண்களுக்கு!!

 

மெல்ல அவளை நெருங்க.. அவளோ அக்குழந்தை பின்னே ஓட.. மினி டாப் மீது அவள் போட்டிருந்த மெல்லிய ஷால் அவனது முகத்தில் உரசி சென்றது. அதன் வாசனையும் மென்மையும் அவளே வருடிச் சென்றது போல உணர்ந்தவன், தன் கண்களை மூடி கிறங்கி நின்றான். அவள் கண்களே மீண்டும் மீண்டும் அவன் ஞாபகத்தில் வந்து வந்து சென்றது. இம்முறை சற்றே ஸ்நேக பாவனை என்றால் இல்லை.. ஆனால் நேற்று இருந்த கோபம் பயம் அனல் இல்லை அதை மட்டும் கூற முடியும் அவனால். பார்த்த ஒரு நாளில் அவள் கண்களின் பாவனைக்கு டிஸ்ஷனரி போடும் அளவுக்கு முன்னேறி‌ இருந்தான் தேவா. 

 

தன்னிலை மறந்து எவ்வளவு நேரம் நின்றானோ.. மீண்டும் கேட்ட சிரிப்பு சத்தத்தில்.. தன் நிலையில் இருந்து வெளியே வந்தவன், "அச்சோ தேவா.. என்னடா செய்யுற? அந்த பொண்ண சைட் அடிச்சேனு அவ அண்ணனுக்கு தெரிஞ்சது?? அவ்வளவு தான் அந்த பயில்வான் பக்கீரி உன்னை கையாலே கைமா பண்ணிடுவான். கன்ட்ரோல்.. கன்ட்ரோல் தேவா!!" என்று தனக்குள் கூறிக் கொண்டு விழித் திறந்து பார்க்க, அங்கே அவர்கள் இல்லை. 

 

"அச்சச்சோ இன்னைக்கும் மிஸ் பண்ணிட்டேனா?" என்று சுற்றுமுற்றும் பார்க்க சற்றே தூரத்தில் ஒரு சிறு குழந்தையை ஊஞ்சலில் வைத்து இவள் ஆட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. விரைந்து அவ்விடம் நோக்கிச் சென்றவன் சற்று தயங்கி நின்றான். காரணம் நேற்று ஒரு ஆண்குழந்தையை இவள் அழைத்து வந்து இருக்க, இன்று அதே வயதுடைய பெண் குழந்தையோடு வந்திருந்தாள்.

 

"வசந்த் அவங்க அண்ணனுக்கு ஒரே ஒரு பையன் தானே சொன்னான். இந்த குட்டி பொண்ணு யாராயிருக்கும்?" என்று யோசனையோடு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 

ஒருவேளை அவர்கள் அப்பார்ட்மெண்டில் உள்ள தெரிந்தவர் குழந்தையாக கூட இருக்கலாம்.. இவர்கள் வீட்டு குழந்தை என்று எண்ண விடாமல் தடுத்தது குழந்தையின் நெற்றியில் இருந்த பொட்டு. "இது ஹிந்து பொண்ணு மாதிரி இருக்கே.. அந்த பொடியன்?" என்று இவன் யோசனையில் இருக்க.. 

 

சற்று நேரத்தில் அந்தக் குழந்தை "சித்தி வேகமா ஆட்டு" என்று கத்த..

 

"என்னது சித்தியா?" என்று அதிர்ந்தான்.

 

"நேத்து அந்த முஸ்லிம் பையன் இவளை அத்தை என்று சொன்னான். இன்னைக்கு இந்த ஹிந்து பொண்ணு இவளை சித்திங்குது.. இவ இந்துவா? முஸ்லிமா? அத்தையா?? சித்தியா??" என்ற அரும்பெரும் சந்தேகம் பாண்டிய மன்னனுக்கு பிறகு இவனுக்கே வந்தது!! எதுவும் புரியாமல் தன் தலையை சொறிந்தவன் அவளை நெருங்கி "மிஸ்.. " என்று அழைத்தான்.

 

அந்த குட்டி பொண்ணோ "எஸ்??" என்றாள். 

 

"பாப்பா உன்னை கூப்பிடல டா.. உங்க சித்தியை தான் கூப்பிட்டேன்!" என்றான் தேவா.

 

"இங்கே ரெண்டு மிஸ் இருக்கோம் இல்லையா?? நீங்க மொட்டையா மிஸின் தானே சொன்னீங்க.. அதை என்னதான் நான் நெனச்சதுல தப்பு ஒன்னும் இல்லையே?" என்று அந்த குட்டிப்பெண் விவரமாக கேட்க.. இவன் தான் அசட்டு சிரிப்போடு "இல்லையே தாராளமாக எடுத்துக்கலாம் மிஸ் குட்டி பொண்ணு!!" என்றான்.

 

"குட்டி பொண்ணா?" என்று அந்த பெண் இரு கைகளையும் இடுப்பில் வைத்து அவனை முறைக்க.. "பெயரைக் கேட்டால் எப்படியுமா சொல்ல மாட்டீங்க.. அதுக்குத்தான் நான் மிஸ் குட்டி பொண்ணுனு அட்வான்ஸா சொல்லிட்டேன்' என்று சொல்லி சிரித்தவன் தன் கைகளை அந்த பெண் முன்னால் நீட்டி "ஃபிரண்ட்ஸ்??" என்றான்.

 

"தெரியாதவங்க கூட எல்லாம் பேச கூடாதுன்னு எங்க அப்பா சொல்லி இருக்காங்க.. அது இல்லாம எப்படி டச் பண்ண கூட கூடாதுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க.. இட்ஸ் பேட் டச்!!" என்றவள் "வா சித்தி போகலாம்.. பொண்ணுங்க ஃப்ரீடமா எங்கேயும் போகவே முடியல" என்றவள் காஜலிட்ட விழிகளில் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்ற தன் சித்தியை இழுத்துக் கொண்டு சென்றால் அந்த குட்டி வாண்டு.. இன்றும் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.

 

அவன் வருவது அறிந்து அந்த குட்டி பெண் குழந்தை "சித்தி டக்குனு திரும்பி பார்க்காத.. அந்த அங்கிள் நம்மளையே ஃபாலோ பண்ணிட்டு வராரு" என்றாள்.

 

"கையில பெப்பர் பவுடர் வைச்சிருக்க தானே சித்தி.. கிட்ட கிடனாப் பண்ண வந்தானா.. அந்த பெப்பர் பவுடர் கூட சில்லி பவுடரும் போட்டு அவனை சில்லி சிக்கனா மாத்திடுவோம்!! சரியா? நீ ரெடி!" என்று அவள் சத்தமாக சொல்லிக் கொண்டே செல்ல.. பின்னல் வந்த தேவாவுக்கும் இது நன்றாக கேட்டது.

 

"எம்மாடி பிள்ளைகள கூட்டிடு வரச்சொன்னா குட்டிபிசாசுங்கள கூட்டிட்டு வரா இவ தினமும் ஒன்னா.. அவனோ அடிச்சி மண்டையை உடைப்பேனு சொல்றான்.. இவ சில்லி பவுடர் பேப்பர் போட்டுடுவோம்னு பேசுறா.. ஆகமொத்தம் எனக்கு வில்லன் வில்லிங்களே இவங்க ரெண்டு பேரும்தான்" என்று அக்குழந்தையை முறைத்தவாறே பின்னால் சென்றான் தேவா.

 

இவன் எட்ட இருந்து பார்க்க, இம்முறை முதல் பிளாக்கை விட்டு இரண்டாவது பிளாக்கில் நுழைந்தாள் அந்த பெண்!!

 

"நேத்து ஃபர்ஸ்ட் ப்ளாக்.. இன்னைக்கு செகண்டட்டா? யாரு இவ?? புரியாத புதிரா இருக்காளே!! நம்மை குழப்புறாளே!!" முற்றிலும் குழம்பியவனாக தன் நண்பனை நோக்கி ஓடினான் ஜெய்தேவ்!! அதி விரைவாக!!

 

வசந்த்.. வசந்த்.. என்ற கூவலுடன்!!

 

 

ஓவியம் 4

 

"அப்பாடி.. அந்த பொண்ணோட அட்ரஸ் தேடி கண்டு பிடிச்சு கொடுத்துட்டோம். எப்படியும் நண்பன் அங்க பேசியிருப்பான்.. இன்னைக்கு பீர் கன்ஃபார்ம்!! ஓசியில் குடிக்கிற சுகமே சுகம் தான்…" என்று எப்பொழுதும் இவர்கள் சந்திக்கும் இடத்தில் அமர்ந்து தன் போல பேசிக்கொண்டிருந்தான் வஸந்த்.

 

பீருக்காக காத்துக்கொண்டிருந்த வசந்த்தின் முதுகில் திடீரென்று பலமாக அடி விழ.. அதிர்ந்து எழுந்து பார்த்தவன் நண்பனை பார்த்து முறைத்தான். அதுவும் வெறும் கையுடன் வந்திருந்த உன்னை பார்த்து இன்னும் கோபம் தான் பொங்கியது வசந்துக்கு.

 

"ஏண்டா நீ கேட்ட டீடைல்ஸ் எல்லாம் எடுத்து கொடுத்தேன்ல அதுக்கு நீ பீஸ் தான் கொடுக்கல.. ஒரு பீர் கூடவா கொடுக்கக் கூடாது? ஒரு பீர் கேட்டதுக்கு ஒரு பச்ச மண்ண போய் இந்த அடி அடிக்கிற நீனு.. உன்ன சொல்லி குத்தம் இல்லடா எல்லாம் என்னை சொல்லணும்.. நீ வாத்தி மகனும் தெரிஞ்சு உன் கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்கேன் பாத்தியா என்ன சொல்லணும்!!" என்று முதுகை நீவிக் கொண்டே பேசியவன்,

 

"உன்னை சொல்லி குற்றமில்லை 

என்னை சொல்லி குற்றமில்லை.." என்று பாட ஆரம்பிக்க.. 

 

எப்போதும் வசந்துக்கு ஒரு பழக்கம் எந்த ஒரு நேர்த்திலேயும் தன் போல பாடல் வந்து விடும் அந்த சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி..

 

அவன் கழுத்தை நெறித்த ஜெய்தேவ் "இன்னும் ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை நீ பாட ஆரம்பிச்ச... உன் கேஸை விசாரிக்க வேற ஒரு போலீஸ் ஆஃபீசர் இங்கு வருவான்" என்று அவனை திட்டியவன், இன்று பார்க்கில் அவளோடு இருந்த பெண்குழந்தை பற்றியும், அது அவளை சித்தி என்றழைத்தது அவர்கள் இன்று இரண்டாவது ப்ளாக்கிற்கு சென்றதைப் பற்றியும் கூறினான் ஜெய்தேவ்.

 

"அது எப்படி டா சாத்தியம்?" என்று வசந்த் சந்தேகம் கேட்க..

 

"எது?" என்று அவனை முறைத்தான் ஜெய்தேவ்..

 

"அதில்லடா.. இவங்க முஸ்லிம்.. அந்த பொண்ணு இந்து.. அது எப்படிடா இவளை சித்தின்னு கூப்பிட முடியும்?" என்று இவனை அவன் திருப்பிக் கேட்டான்.

 

"அதைத்தான் எருமை உன்னை கேட்கிறேன்.. என்னத்த போய் விசாரிச்சுட்டு வந்த நீ? இதுல பெரிய டிடெக்டிவ்னு போர்டு வைச்சு கடை விரிச்சு உட்கார்ந்திருக்க" என்று அவன் எகிற..

 

"டேய் ஒருவேளை இப்படி இருக்குமோ..??" என்று காற்றில் கோலம் வரைந்தான்.

 

"எப்படி..??" என்று கைகளைக் கட்டிக்கொண்டு அவனை அழுத்தமாக பார்த்தான் தேவா.

 

"அதாவது அந்த பர்வீன் பானுவுக்கு ஒரு அக்கா இருந்து, அவ ஒரு ஹிந்து பையனை லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடிப்போய் இருப்பாளா இருக்கும். அந்த அக்காவோட குழந்தையைத் தான் இன்னிக்கு பார்க்ல அந்த பொண்ணு கூட நீ பார்த்து இருப்ப.. எப்படி?" என்று தன் கண்டுபிடிப்பை எண்ணி பூரித்துப் போய் அவன் கேட்க.. ஜெய்தேவ் போட்ட அடியில் அவன் முதுகு பூரி போல வீங்கி இருந்தது.

 

"டிடெக்டிவ் வேலை பண்ண சொன்னா.. நீ கதை எழுதுற வேலை பண்ற.. இங்கே பார் நாளைக்கு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது, அந்த பொண்ண பத்தி முழுசா தெரிஞ்சுட்டு வந்து சொல்லுற"

 

"சொல்லலைன்னா?" என்று நெஞ்சை நிமிர்த்தி வீரமாக வசந்த் கேட்க..

 

"பிசினஸ்காக நீ கேட்ட லோனை நான் சாங்ஷன் பண்ண மாட்டேன்" என்று கூலாக சொல்லியவன் திரும்பிப் பார்க்காமலேயே நடந்து சென்று விட்டான்.

 

"நீ எல்லாம்.." என்று வசந்த் அவனை திட்ட ஆரம்பிக்க..

 

என்ன என்று திரும்பிப் பார்த்த ஜெய்தேவ்வை பார்த்தவன் "நண்பேண்டா" என்று கூறி அசட்டு சிரிப்பு சிரித்தான்.

 

"டேய்.. அந்த பீரு" என்றான்‌ சத்தமாக..

 

"ஓடிரூ.. வந்தேன்!!" என்று கை முஷ்டியை முறுக்கிய தேவாவை பார்த்தவன், "இல்லை இல்லை.. நீ அங்கிருந்தே பேசு.. அதுதான் என் உடம்புக்கு நல்லது. நாளைக்கு டீடைல்ஸ் கூட வந்து உன்னை நான் பார்க்கிறேன்" என்றான் வசந்த்.

 

"அது!!" என்றதோடு புறப்பட்டான் தேவா.

 

வழக்கம்போல் வேலைகள் சென்று கொண்டிருந்தாலும், கண்கள் என்னவோ மேசை மேலிருந்த போனை தான் நிமிடத்திற்கு பத்து முறை பார்த்து பார்த்து சென்றது.

 

மதியம் வசந்திடம் இருந்து போன் வருமா என்று ஆவலாக ஜெய்தேவ் பார்த்துக்கொண்டு இருக்க... ஒன்றும் வந்தபாடில்லை. 

 

"ஒரு வேலைக்கு ஆவதில்லை இவன்?! எப்ப போன் பண்றேன்னு சொன்னான். இன்னும் போன் பண்ண காணோம்?" என்று இவனே வசந்துக்கு கால் செய்தான்.

 

மீண்டும் மீண்டும் இவன் முயற்சித்து பார்க்க தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்றே வந்தது. சரி அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஜெய்தேவ் வேலையில் மூழ்கி விட்டான்.

 

எவ்வளவுதான் வேலை அவனை உள்வாங்கிக் கொண்டாலும் சரியாக அந்த நான்கு மணி அடிக்கும் ஓசையை கேட்டவன் அடுத்த நிமிடம் சிட்டாக பறந்தான் பார்க்கை நோக்கி.. 

 

மனம் என்னமோ அவள் கண்களை ரசிக்கத்தான் என்று காரணம் கூறினாலும்.. கண்களோடு சேர்த்து காரிகை அவளையும் விரும்பத் தொடங்கி இருந்தது அவனது கள்ள மனம்.

 

ஆனால் அதை ஒத்துக் கொள்ள மனது வரவில்லை. தன் வீட்டு நிலையும் தெரியும். அதேபோல வேறு மதத்து பெண் என்று அவள் நிலையும் புரிந்தது. இது எல்லாம் அறிவு அவனுக்கு எடுத்து எடுத்துக் கூறினாலும் மனது என்னவோ கள்ள புன்னகையோடு கேட்டுக் கொண்டது.

கள்ள புன்னகையின் பின் இருப்பது என்னவோ??

 

நேற்றுப் போல் இன்றும் சீக்கிரமாக வந்தவன், தன் நிலை இல்லாமல் தவித்தவாறு தன் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டபடி, அங்கிருந்து சிறு சிறு கற்களை தனது கால்களால் எட்டி உதைத்து நடைபயின்றுக் கொண்டே இருந்தான்.

 

நேரம் ஆகிக் கொண்டிருக்க நேற்று போல் வாட்சை பார்க்காமல் இன்று மொபைலை எடுத்து எடுத்து மணியை பார்த்து சலித்து கொண்டே மீண்டும் நடைபயின்று கொண்டிருந்தான்.

 

சிறிது நேரத்தில் அந்த சுகத்தை மணம் அவன்‌ நாசியை தீண்ட.. அந்த மனமே சொன்னது அவள் வந்துவிட்டாள் என்று!!

 

வந்துவிட்டாள்.. அவள் வந்துவிட்டாள் என்று மனம் சிறகை விரித்து பாடியது.

 

இன்றோ இரு பிள்ளைகளோடும் அவள் வந்துவிட.. அவள் வரும் முன்னே, அவனது மனம் அவளது மணத்தை அறிந்துக் கொண்டது. மெல்ல மெல்ல அவன் மட்டுமல்ல அவனது மனமும் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டதை உணர்ந்து கொண்டவனுக்கு நாணம் கலந்த வெட்கச்சிரிப்பு முகிழ உதட்டை கடித்து மறைத்துக் கொண்டான்.

 

அதேநேரம் அவனை கடந்து சென்றவள் திரும்பி அவனை ஒரு முறை பார்த்து செல்ல.. "என்ன பார்வை டா சாமி அது!!" என்று இதயமிருக்கும் இடப்பக்க மார்பை தடவியப்படி நினைத்துக் கொண்டான். அப்படி என்ன இருந்ததாம் அந்த பார்வையில்? என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அதே நேரம் அன்று இருந்த பயம் ஒதுக்கம் இவையெல்லாம் இல்லாமல் சிநேகமாய் இருந்ததோ?? என்று மனம் ஏங்கியதோ என்னவோ உண்மை!!

 

பிள்ளைகளோடு பிள்ளைகளாய் அவள் விளையாட இவன் மனமும் கால்களும் அவனது உத்தரவின்றி அவர்களை தொடர்ந்து கொண்டே இருந்தது அவர்கள் செல்லும் இடமெங்கும்.. அதிலும் ரஃபிக் என்ற பையன் அவளை அத்தை என்று விளிப்பதும்.. அந்த மற்றொரு குழந்தை அவளை சித்தி என்று அழைப்பதும் இவனுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் பித்துப்பிடித்த மனதோ அதை கண்டு கொள்ள முயலவில்லை.

 

குழந்தைகளும் அவனை முறைத்துக் கொண்டே அவளிடம் எதோ பேசுவதும் அவள் அந்த குழந்தைகளை சமாதானப்படுத்துவதையும் பார்த்துக் கொண்டே இருந்தானே ஒழிய.. இன்று அவளை நெருங்கவோ பேசவோ முயற்சி செய்யவில்லை.

 

இன்றும் அவர்கள் பின்னோடு செக்யூரிட்டியாய் சென்று அப்பார்ட்மெண்ட் வரை அவர்களை ட்ராப் செய்து விட்டே, இவன் நண்பனை காண சென்றான்.

 

அங்கே வசந்தின் வீட்டில்.. வசந்தின் அன்னை வாசலிலேயே அவனௌ மறைத்து அழுது புலம்பினார்.

 

"உன் பிரண்டு தானே.. உன் கூட தானே படிச்சான்.. நீ எப்படி இன்னைக்கு ஒரு நல்ல உத்தியோகத்தில் இருக்க.. அதே போல இவனுக்கும் ஒரு வேலையை பார்த்துக் கொடுக்க கூடாதா? டிடெக்டிவ் வேலை பார்க்கிறேன்னு அங்கேயும் எங்கேயும் சுத்தி அடி வாங்கிட்டு வந்து படுத்துக் கிடக்கிறான். எனக்கு இருக்கிறது இவன் மட்டும் தானே.. இப்படி ஊரார் கிட்ட அடி வாங்கிட்டு வந்தா எப்படி? இதெல்லாம் ஒரு வேலையா? நீ சொல்ல கூடாதா?" என்று தாயாய் வருத்தப்பட்டார்.

 

அவர் சொல்வதும் சரிதானே என்று நினைத்தான் தேவா. "இந்த நாதாரி எங்க போயி அடி வாங்கிட்டு வந்தான் தெரியலையே மா.. நீங்க கவலைப்படாதீங்க மா.. அவன் எங்க பேங்க்ல தான லோனுக்கு அப்ளை பண்ணி இருக்கான். அதனை சேக்ஷன் பண்ணிக் கொடுத்தா.. இவன் வேற தொழில் ஆரம்பித்து விடுவான். நான் இருக்கேன் நானே பாத்துக்கிறேன் மா!!" என்று நண்பனின் அன்னையைத் தேற்றி விட்டு அறையில் படுத்து கிடந்த நண்பனை பார்க்க வந்தான் தேவா.

 

அவனது அறையில் கைகால்கள் வீக்கத்துடன் அங்காங்கே ரத்தக் காயங்களுடன் படுத்துக் கொண்டிருந்தவனை பார்த்து அதிர்ந்து பதறி "என்னாச்சுடா?" என்று கேட்டான் ஜெய்தேவ்.

 

"அந்தப் பொண்ணோட அண்ணன் என்னை அடிச்சிட்டான் டா" என்று கூற..

 

"அந்த பயில்வான் பக்கீரி யா டா? அவனைப் பார்க்கும் போதே நினைச்சேன் டா நல்லா பிரியாணி தின்னு உடம்பை வளர்த்து வைத்திருக்கிறான் அந்த பாய்!!" என்று இவன் வருத்தப்பட்டான். 

 

"அவன் இல்லடா இவன்! இவன் நியூ என்டரி!!" என்றான் வஸந்த் சோகத்தோடு..

 

"நியூ எண்டரியா? எவன் அவன்?"

 

"ஆமா.. ஸ்டீபன்.. அவள் அண்ணன்!!" என்றான் உதட்டை பிதுக்கி வருத்தத்தோடு.

 

"என்னது ஸ்டீபனா? அவளுடைய அண்ணனா? என்னடா கிறிஸ்டின் பேரு மாதிரி இருக்கு" என்று ஜெய்தேவ் குழம்ப..

 

"கேக்குற உனக்கே இப்படி இருந்தா..‌ அடி வாங்கின எனக்கு எப்படி இருக்கும்?" என்று புலம்பினான் வசந்த்.

 

கிறிஸ்டியனா? இந்துவா? முஸ்லிமா?

யார் இந்த பாவை??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top