ஓவியம் 7
இத்தோடு அவன் அவளது கண்களை விரைந்து சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. தினமும் ஆதினி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பார்க்குக்கு வருகிறாள் தான்..
வரும்போதும்.. போகும்போதும் பிள்ளைகளை விளையாட விடும் போதும் அவளது கண்கள் ஒரு வித எதிர்பார்ப்புடன் நாலா பக்கமும் சுற்றி சுழலும்.. எங்கேனும் அவன் தெரிகிறானா ஒரு தவிப்போடு!! ஒரு தேடுதலோடு!!
ஆனால் அவன் தென்பட்டால் தானே!!
அவன் ஏன் திரும்ப வரப்போகிறான் அவனுக்கு தேவைப்பட்டது என் கண்கள் மட்டுமே என் மனது அல்ல!!
அதுவும் போட்டிக்காக வந்தவன் அழகிழந்த இந்த முகத்தைப் பார்த்ததும் ஏன் திரும்ப வரப் போகிறான். அப்படி என்ன நான் தவறு செய்துவிட்டேன்?? காதல் என்பது இரு கை தட்டும் ஓசை போல் அல்லவா.. அது என்னுள்ளும் வரவேண்டும் என்று நான் எதிர் பார்ப்பது எவ்வாறு தவறாக முடியும்? அவனுக்கு மட்டுமே வந்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் இவ்வாறுதான் தண்டிப்பானா? அதன்பின் அந்தப் பெண்ணோட வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று அவர்கள் எல்லாம் யோசித்தார்களா?? என்னதான் சட்டம் அவனுக்கு தண்டனை கொடுத்து இருந்தாலும்.. நித்தம் நித்தம் முகத்தை கண்ணாடியில் முகம் பார்க்கும் போது வேதனை எல்லாம் எனக்கு தானே!! என்று எப்பொழுதும் போல மனத்துக்குள் மறுகி கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தாள் வெகு நேரம்!!
இப்போதெல்லாம் பிள்ளைகளோடு பார்க்குக்கு வந்தாலும் அவர்களை விளையாட விட்டுவிட்டு யோசனையிலேயே அமர்ந்து விடுவாள் ஆதினி. அவளது அந்த துருதுருப்பு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
ஓவியம் 8
இரண்டு நாட்களாக இவள் பார்க் வரும் போதெல்லாம் கண்கள் அவள் அறியாமல் அவளவனை தான் தேடும். அவனை பார்க்காத அம்மயிலினியின் கண்கள் மயில் முட்டையாய் விரிந்து அப்பரப்பினுள் அவனை காணாது வாடும்.. திரும்பவும் அவனின் எழிலோழிவியமும் காண ஏங்கும்!!
அவனது சிரிக்கும் கண்களையும்..
துடிக்கும் மீசையையும்..
விழுங்கும் விழி பார்வையையும்..
பருகும் முகத்தையும்..
காண தவியாய் தவித்தது இவளது கள்ளம் புகுந்த மனது.
ஆம்.. காதலென்றாலே கள்ளத்தனம் தானே!!
ஆனால் அந்த காதலுக்கு தான் ஏற்றவளா?
அவனின் அன்புக்கு பாத்திரமானவளா?
அவனின் நேசத்திற்கு உட்ப்பட்டவளா?
என்று ஏக கேள்விகள்.. அநேக விவாதங்கள் அவளுள்!!
கடைசியாக அவள் மனதுக்கும் அறிவுக்குமான போட்டியில் மனதை வென்று மணி மகுடம் சூட்டிக் கொண்டது அறிவு..
நீ அவனுக்கு தகுதி இல்லையென்று!!
நீ அவனுக்கு பொருத்தமானவள் இல்லையென்று!!
நீ அவனின் கம்பீரத்துக்கு கால் தூசி என்று!!
நீ அவன் காதலை பெற வேறு பிறவிகள் எடுக்க வேண்டுமென்று!!
புண்பட்ட காதல் மனதோ.. அறிவோடு தர்க்கம் செய்து தோற்று தன் தோற்றத்தை கண்டு மனம் வெதும்பி ஓரத்தில் சுருண்டு கொண்டது மரவெட்டையாய்!!
மனதுக்கு தெரிந்த புரிதல்.. காந்தையவள் கண்களுக்கு புரியவில்லை போலும்!!
அந்நேரத்தில்.. அந்த பார்க்கில் அவனது இன்முகம் காணாது தேடி தவித்து நின்று பரிதவித்து பின் நிதர்சனத்தை ஏற்க முடியாமல் கண்ணீர் மழை பொழியும்.
நித்தமும் இதே கதை நடக்க..
அன்றும் இவளது வாள் வீசும் விழியால் ஆணவனை திணறடித்து பல கோடி அபிநயங்களை விழிகளில் காட்டி மதனனை பித்தாக்கிய அதே கண்கள் கார்மேகங்கள் சூழ்ந்து கண்ணீர் மழை பொழிய தயாராகிய தருணம்.. கண்ணீர் திரண்டிருந்த அவளது விழி படலத்தில் நிழலுருவமாய் பிம்பம்... அவனது பிம்பம்!! தண்ணீரில் பட்ட பிம்பம் சிதறி தளும்பி பின் அலையலையாய் தெரிவது போல தெரிந்தது!!
பார்ப்பது உண்மை காட்சியா? இல்லை கானல் நீரா? என்று பகுத்தறிய முடியாத வண்ணம் காந்தையவள் நிலை!!
முகம் கொள்ளா புன்னகையோடு தன் காதல் ஓவியத்தை நெருங்குகினான் ஜெய்தேவ்.
"ஹாய்... ஆ.. ஆதினி!"
"ஹ்ஹாய்.. ஜெ.. தே.. ஜெய்" உன்னை எப்படி அழைப்பது என்று தெரியாமல் கடைசியாக அவளே ஒரு புது புனை பெயரை வைத்து அழைத்தாள்.
பெரும்பாலும் அவனை எல்லோரும் தேவ் இல்லை தேவா என்று அழைத்திற்க முதல்முறையாக ஜெய் என்று அழைக்கப்படுகிறான். அதுவும் தன் மனம் நிறைந்தவளாள். ஆனால் அவள் மனம் நிறைந்தவனின் மனதினில் அவள் இருக்கிறானா என்று தெரியவில்லை ஆதினிக்கு.
"நீ.. நீங்க.. சாரி.. நீங்கனு வர மாட்டேங்குது. நீனு தான் வருது. மனசுல அப்படியே பிக்ஸ் ஆகிடுச்சு" என்றான் தேவா.
"இட்ஸ்.. ஓகே!!" என்றாள் ஆதினி.
"ஓவிய கண்காட்சிக்கு நீயும் வரனும் ஆதினி.. உங்க ஃபேமிலியோட!! வருவ தானே?" என்று ஆர்வமாய் கேட்டவனிடம் மறுக்க தோன்றவில்லை தான். ஆனாலும் போக இஷ்டமில்லை. யாருக்கும் காட்சி பொருளாக விரும்பவில்லை அவள்.
"என்னை.. நான்.. எதுக்கு? அங்க எல்லாம்? அதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சே.. வேற என்ன?" என்றாள் பாவை மனதை மறைத்தப்படி.. இவ்வளவு நேரம் அவனுக்காக தான் ஏங்கியதை மறந்தபடி..
"ஓஹ். ஒன்னுமில்ல.. ஒன்னுமே இல்லையில்லை... ஒன்னுமே இல்லை தான்!!" சிரித்த முகமாக இருந்தவனின் முகத்தில் அக்னி ஜுவாலை வீசியது.
நமக்குள்ள ஒன்னுமே இல்லையா ? ஒன்னுமே இல்லையாடி??
ஒன்னுமே இல்லாம தான் இந்த பார்க்கு வரும்போது உன் கண்கள் என்னை தேடி அலைஞ்சுச்சா? ஒன்னுமே இல்லாம தான் பிள்ளைகளோட துடிப்புடன் விளையாடுபவள் உயிர்ப்பே இல்லாம திரிஞ்சியா? ஒன்னுமே இல்லாம தான் எதையோ பறிக் கொடுத்தவ போல பொம்மையா நடமாடினியா? சொல்லுடி .. சொல்லு!!" என்றான் ஆக்ரோஷத்தோடு. அவனின் ஆக்ரோஷ அளவை அருகில் இருந்த மரத்தில் மீது காட்டினான். அதிலிருந்து முறிந்த கிளை ஒன்று அவன் என் கையை பதம் பார்க்க.. இரத்தம் வழிந்தது.
"ஐய்யோ கை ஜெய்!! இரத்தம் வருது பாருங்க!! அச்சோ எவ்வளவு இரத்தம்!!" என்றவள் தான் அணிந்திருந்த ஸ்கார்ப்பை சட்டென்று கழட்டி அவன் கையில் இறுக்க கட்டு போட்டு விட்டாள். அவள் கவனமெல்லாம் அவன் கையிலிருந்த வழிந்த ரத்தத்திலும் அவன் காயத்தில் மட்டுமே இருக்க.. தன் முகத்திலிருந்து தழும்பை மறந்தாள் ஏன் தன்னையே மறந்தாள்.
"ஆது.. ஆதுமா.." என்று ஆதுரமாக அழைத்தான் தேவா.
அவள் கண்களில் வழிந்த கண்ணீரோடு அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
"நீயம் வாயேன் கண்காட்சிக்கு.. உன்னிடம் ஒன்று காட்ட வேண்டுமே நான்!" என்றான் மென்மையாக..
அதுவரை ஏதோ ஒரு மயக்க மாய கயிற்றில் கட்டப்பட்டு இருந்த ஆதினி சட்டென்று தலையை உலுக்கி இரண்டடி பின்னால் நகர்ந்தவள் "கண்காட்சிக்கு எல்லாம் வந்து நான் காட்சிப் பொருளாக மாற விரும்பவில்லை என்னை விட்டு விடுங்கள்! இனி எதற்கும் என்னை நீங்கள் தொடர வேண்டாம்" என்றாள்.
"நான் சொல்ல வருவது உனக்கு நிஜமாகவே புரியவில்லையா?" என்ற பரிதவிப்புடன் கேட்டான்.
"எனக்கு அது புரிந்தும் புரிய வேண்டாம்!! இந்த ஆதினி உங்களுக்கு வேண்டாம்!! இந்த ஆசிட் கரை பட்ட முகம் உங்களுக்கு வேண்டாம்!! இந்த தழும்பு படிந்த அகோரம் முகம் உங்களுக்கு வேண்டாம்!! வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்!!" என்று தன்னை மறந்து கத்தினாள்.
கத்தாயவளை சட்டென்று அணைத்தவன் இறுகி இதழ்களில்.. அவளி
ன் வேண்டாம் அனைத்தையும் நின்று மென்று தின்று கொண்டாருந்தான் அவளின் ஜெய்!!
