ஓவியம் 5

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

ஓவியம் 9

 

மெல்ல அவளை தன்‌ அணைப்பிலிருந்து விடுவித்தான். அவள் உடம்பு மழையில் நனைந்த புறா குஞ்சு என வெடவெடடுத்தது. அவளின் கை விரல்களை தன் விரல்களோடு பிணைத்துக் கொண்டான். பின் குனிந்து அவளது ஒவ்வொரு விரல்களுக்கும் அதன் கீரிடமான நகத்தும் சேர்த்தே முத்தமிட்டான். அவளின் உடல் சிலிர்த்து சிணுங்கியது.

 

 மனசு அவனிடம் சரிந்தது. அவள் உதடுகளிலுள்ள மொத்த நீரை உறிஞ்சி அவன் எடுத்துவிட வறண்ட நிலமாய் அவளின் இதழ்கள். ஆனாலும் பாலைவனச் சோலையாய் மணம் பரப்பியது. அவளை நெருக்கமாக இழுத்தான். இறுக்கமாக அணைத்தான். மிருதுவான கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். 

 

ஒரு கை அவளை பின்னாலிருந்து இடையை வளைத்து அணைத்திருக்க.. இன்னொரு கை அவளின் ஒரு விரல் கொண்டு முகத்தை அளந்தது. அது கிறக்கமாகத்தான் இருந்தது பெண்ணவளுக்கு!!

 

மெல்ல அவன் கை அவளின் மெல்லிடையை தடவியது. முதல்முறை ஆணின் ஸ்பரிசம்.. அவளுக்கு உஷ்ணம் கிடுகிடுவென உயர்ந்தது. உடல் சொக்கியது. மூச்சு படபடப்பானது. சட்டென்று மடங்கி அமர்ந்தவளை மெல்ல அவனின் மடி சாய்த்துக் கொள்ள.. காற்றில் அவளது டாஸ் பறக்க.. வெண்ணிற இடுப்பில் அவன் கை அழுந்தி செந்நிறமாக பளிச்சென்று தெரிந்தது. மடிப்பில்லாத வயிற்றில் குட்டியான கவர்ச்சியான நாபிச்சுழி அழகு காட்டியது. அந்த குட்டி தடாகத்தைச் சுற்றிலும் மெலிதான பூனை மயிர்கள் மினுமினுத்தது.

 

அவன் ஆர்வம் கூடியது. அவள் இடுப்பை பிடித்தபடி சட்டென்று அவள் வயிற்றில் முகத்தை புதைத்தான். அவள் சிலிர்த்து விலக எத்தனிக்க

 அவன் பிடி இறுக.‌.. அவள் வயிறு நடுங்கியது. மெல்லிடையை மூக்கால் வலைய வர.. குட்டியான அவளின் அழகு நாபியை அழுத்தி முத்தமிட்டான். நாக்கை நீட்டி சுவைத்தான். பின் அவள் நாபியை கவ்வி சப்பினான்.

 

கூச்சத்தில் நெளிந்தாள் ஆதினி.. ஆனால் வெறுப்பில்லை அவனிடம். அந்நியன் என்ற‌ எண்ணமில்லை. தன்னவன் என்ற‌ எண்ணமே வியாபித்து இருந்தது. ஆனால் இருக்கும் இடம் அப்போது புரிய.. தன் கைகளால் அவன் முகத்தை பிடித்து தூக்கினாள். அவன் முகம் தூக்கி அவள் முகத்தை காதலாகப் பார்த்தான்.

"கிஸ் மீ ஆதுமா!" கிறக்கமாக கேட்டான்.

 

தயக்கம் இல்லாமல் அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் உதடுகளை குவித்து காட்டினான். அவள் மெல்லிய வெட்கத்துடன் சிறிது தயங்கி பின் அவன் உதட்டில் தன் ஈரமான மெல்லிதழ்களை பதித்து முத்தமிட்டாள். அவன் கைகள் அவள் இடுப்பை பிசைந்தது. அவனை அப்படியே இறுக்கினாள். அவன் முகம் அவளின் மென்மையான மென்மைகளுக்கிடையே புதைந்தது.. அவளின் வாசம் பிடித்தான் முகத்தை தேய்த்து.. அழுத்தமாக முத்தமிட்டான் அலர் அவள் ஸ்தூபிகளை... அவள் துடித்தாள். அவனை இறுக்கி பின்னர் அவன் முகத்தை விலக்கினாள்.

 

"இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட அத்துமீற எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் செய்தேன். காரணம் உன் மனதில் நான் இல்லை என்று கூறின.. உன் மனதில் நான் இல்லாமல் இடம் பொருள் ஏவல் தெரியாமல் உன்னை ஒப்புக் கொடுக்க மாட்ட.. அதை நிரூபிக்க தான் கொஞ்சம் உரிமை எடுத்தேன். கண்டிப்பாக கண்காட்சிக்கு நீ வர!! நான் உனக்காக வெயிட் பண்ணுவேன்!!" என்று அவளது கன்னங்களை தாங்கி கண்களை பார்த்து பேசி அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்துவிட்டு சென்றான். தான் என்ன நினைக்கிறோம் என்று புரிந்து கொள்ளாமல் சிலையாக சமைந்திருந்தாள். அவளை கண்காணித்தவாறே சற்று தூரத்தில் நின்று இருந்தான் தேவா.

 

 இன்று மட்டுமல்ல நிதமும் அவளை இப்படி அவளுக்கு தெரியாமல் கண்காணிப்பது அவனின் வேலை சில நாட்களாக.. அவள் எழுந்து அப்பார்ட்மெண்டு சென்றவுடன் தான் இவனும் சென்றான்

 

 ஞாயிற்றுக்கிழமை ஆனால் மூன்று குடும்பங்களும் ஒன்றாக யார் வீட்டிலையாவது கூடி சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று மாதத்திற்கு ஒரு முறை..

 

அன்றும் அவ்வாறு ஸ்டீபன் வீட்டில் அனைவரும் கூடியிருக்க.. அப்போது ஜெய்தேவ்விடம் இருந்து ஸ்டீபனுக்கு போன் வந்தது.

 

திடீர்னு இவன் ஏன் போன் செய்கிறான் என்று யோசித்துக்கொண்டே ஸ்டீபன் அட்டென்ட் செய்ய..

 

"வணக்கம் சார்!! நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டான் ஜெய்தேவ்.

 

"நல்லா இருக்கேன் சார் நீங்க.. உங்க போட்டி எல்லாம் முடிஞ்சிடுச்சா?"

 

"ஆமாம் சார் முடிஞ்சிடுச்சு.. படம் வரைஞ்சு சமிட் பண்ணிட்டேன் நாளைக்கு அதுக்கு ரிசல்ட்.. உங்க எல்லாரையும் இன்வைட் பண்ணுவதற்காகத்தான் இப்ப நான் போன் செய்ததே.. எனக்கு உங்க நம்பர் மட்டும் தான் தெரியும். கிரி சார்.. அஷ்ரஃப் அவங்க நம்பர் எல்லாம் தெரியாது. அவங்க பக்கத்துல இருந்தாங்கன்னா கொடுக்குறீங்களா அவங்களை நான் இன்வைட் பண்றேன்" என்றான் ஜெய்தேவ்.

 

"பரவாயில்ல ஜெய்தேவ்!! நானே இன்ஃபார்ம் பண்ணறேன். நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள். முடிஞ்சா நாங்க வர பார்க்கிறோம்" என்று கூறி ஸ்டீபன் போனை வைத்துவிட்டு மற்றவர்களிடம் விவரம் தெரிவித்தான்.

 

ஆனால் ஆதினிக்கோ அவன் அப்படி என்ன வரைந்திருக்கிறான் என்று தெரிய மிக ஆவல் கொண்டது மனது!! எனவே அண்ணனிடம் வந்து "அண்ணா நாளைக்கு நாம போலாமா? அவர் அப்படி என்ன வரைந்திருக்காரு என் கண்ண வச்சுனு எனக்கு தெரியணும்.. ப்ளீஸ் கூட்டிட்டு போங்க" என்றாள்..

 

வெகு நாள் கழித்து அவளே வெளியே செல்ல ஆசைப்பட்டு கேட்க.. கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு நெகிழ்ந்தது.‌ வீடு வீட்டை விட்டால் பார்க் என்று மட்டுமே இருந்த பெண் முதன் முறையாக கேட்கிறாள் என்றதும் கண்களில் கண்ணீர் விழ சம்பந்தமாக ஸ்டீபன் தலையாட்டினான்.

 

மறுநாள் ஜெய்தேவ்விற்கு போன் செய்து எத்தனை மணிக்கு எங்கே வர வேண்டும் என்ற விவரத்தை அறிந்து கொண்டான்.

அதேபோல் சரியாக மூன்று குடும்பமும் அங்கே செல்ல வாயில் அருகிலேயே நின்று அவர்களை வரவேற்றான் ஜெய்தேவ்.

 

பின் தனது அன்னையையும் தந்தையையும் அவர்களிடம் அறிமுகப் படுத்தி வைத்தான்.

பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு.. அனைவரும் அந்த அரங்கத்தில் அமர்ந்து இருந்தனர். பல முக்கியஸ்தர்களும் அந்த விழாவிற்கு வந்து இருக்க.. நிறைய ஓவியர்களுடைய ஓவியங்களும் அங்கே அணிவகுத்து இருந்தது. முதலில் அந்த ஓவியங்களை எல்லாம் நடுவர்கள் பார்வையிட்டு பரிசு அறிவித்த பின் மற்றவர்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

 

அனைவரும் ஆவலாக காத்திருக்க.. பரிசு பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் மூன்றாவது பரிசு அறிவித்து அந்த பரிசுக்குரிய படம் பார்வையாளர்களுக்காக காட்டப்பட்டது அதேபோல இரண்டாவது பரிசுக்கும்.

 

அருகிலிருந்த வசந்தோ "என்னடா செகண்ட், தேர்ட்டு பரிசு சொல்லிட்டாங்க ஃபர்ஸ்ட் வர்ற அளவுக்கு எல்லாம் நீ வரைவியா டா?" என்று பிரெண்டை பார்த்து கேட்க.. ஏற்கனவே அதே கேள்வியை முகத்தில் தாங்கியவாறு ஜெய்தேவ்கை பார்த்தார் அவனது தந்தை!!

 

அடுத்து முதல் பரிசு என்று சற்று நிறுத்தி ஓவியத்தின் தலைப்பு "ஓவியப் பாவை" பரிசு பெறுபவர் "ஜெய்தேவ்" என்று அறிவித்து அவன் வரைந்த படத்தை அங்கே காண்பிக்க பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சி!! 

 

ஓவியம் 10

 

ஓவியத்தில் ஆதினி ஆசிட் பட்ட முகத்தோடு கண்களில் சந்தோஷத்தோடு அருகில் இருப்பவனை பார்க்க.. அவனும் அவளைத்தான் காதலோடு பார்த்தான்.

அவர்களின் காதலின் சின்னமாக கையில் தங்கள் மகவை ஏந்தி இருந்தனர்.

 

அந்த அவன் ஜெய்தேவ்!!

 

ஆனந்த அதிர்ச்சி அல்லவா!?

 

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆதினி குடும்பத்தில் இருந்தவர்களும்.. ஜெய்தேவ்தின் பெற்றவரும்.. வசந்த்கும்!!

 

இதைவிட தன் மனத்தின் காதலை எவ்வாறு அவன் உரைத்திட முடியும்!!

 

இவ்வாறு ஆசிட் வீச்சால் பாதிக்கபட்டவர்களுக்காக சமூகத்தில் அவர்களை பாவமாகவும் அருவருப்பாகவும் பார்ப்பவர்கள் மத்தியில் அவளை என் இணையென்று வைத்து அவள் மனதை மட்டுமே பார்த்து கைப்பிடிக்கும் ஆண்கள் வெகு சிலரே!! அதில் தான் ஒருவன் என்று நிரூபித்து இருந்தான் ஜெய்தேவ்!! வார்த்தைகள் கொடுக்கும் நம்பிக்கையைவிட செயல்களை அதிக நம்பிக்கையை கொடுக்கும்.

 

அது வெறும் வாய் வார்த்தையாக கூட அவர்களிடம் சொல்லி இருந்தால் கண்டிப்பாக யாரும் அவனை புரிந்து கொள்வது சற்று கடினமே!!

 

ஆனால் உணர்வுமிக்க இந்த ஓவியத்தை பார்த்தவர்களால் கண்களை அதில் இருந்து சற்றும் எடுக்கவே முடியவில்லை..

 

அவ்வளவு தத்ரூபமாக இருந்தது அந்த படம்!!

அதுவும் ஆதினி கண்களில் தெரியும் அந்த மட்டற்ற மகிழ்ச்சி.. வெறும் கண்களில் மட்டுமல்ல மனதில் இருந்து வெளி வந்தது போல இருக்க.. ஜெய்தேவ் கண்களில் தெரிந்த அந்த காதல்!! அனைவரையும் இப்படி கூட மனைவி மீது உள்ள காதலை கண்களில் காட்ட முடியுமா என்று யோசிக்க வைத்தது!!

 

மொத்த குடும்பமும் ஸ்தம்பித்த நிலையில் மேலே ஏறி தனது பரிசினை வாங்க சென்றவனோ பரிசை வாங்காமல் அங்கிருந்த மைக்கை பிடித்து.. "இந்த பரிசை நான் மட்டும் வாங்க விரும்பவில்லை.. என் இணையுடன் சேர்ந்து வாங்கவே விருப்பப்படுகிறேன்" என்று கூற.. இன்னும் கரவொலி அந்த அரங்கை நிறைத்தது.

 

ஆதினியோ நடப்பது ஏதும் கனவா நினைவா என்று அறியாமல் கண்கள் கலங்க அந்த படத்தில் இருந்து கண்ணை பிரிக்க முடியாமல் அதிலேயே லயித்து இருந்தாள்.

 

ஸ்டீபன் கிரி அஷ்ரஃப் மூவருக்கும் அப்படி ஒரு ஆனந்தம் வார்த்தைகளால் வடிக்க முடியாத படி!! அவர்கள் ஆதினியை உலுக்கி மேடைக்கு செல்லுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரையும் பயத்தோடும் மேலும் ஜெய்தேவ்கின் பெற்றோரையும் தயக்கத்தோடு பார்க்க... அவர்களும் சம்பந்தமாக தலையசைக்க.. மெல்ல நாணம் வந்து ஒட்டிக் கொண்டது பெண்ணுக்கு!!

 

சந்தோஷத்துடன் மேடை அவள் ஏற, முன்னை விட இப்போது விண்ணை முட்டியது கரகோஷம்!!

 

இருவரும் இணைந்து பரிசினை பெற்றனர்.

அதன்பின் மற்ற ஓவியங்கள் எல்லாம் பார்க்க மற்றவர்களுக்கு அனுமதி அளிக்க..

பெற்றோரை ஒருவித தயக்கத்துடன் பார்த்தான் ஜெய்தேவ்!!

 

"உண்மையிலேயே இன்னைக்கு தான் உன்னை நெனச்சு நான் பெருமை படுறேன் டா மகனே!!" என்று அவனது தந்தை கட்டிக்கொள்ள.. ஜெய்தேவ்கின் அன்னையின் சந்தோஷத்துடன் ஆமோதித்தார்.

 

அதன்பின் இரு குடும்பங்களும் இவர்களது திருமணத்தை பற்றி பேச ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அழைத்துக் கொண்டிருந்தனர்.

 

ஜெய்தேவ் தயங்கி தயங்கி ஆதினி அருகில் சென்று நிற்க.. "உனக்கு சம்மதமா?" என்று கேட்டான்.

 

"நீங்க ஒண்ணுமே சொல்லலையே எதுக்கு சம்மதம் கேட்கிறிங்க?" என்று குறும்புடன் அவள் கேட்க..

 

அப்போது தான் புரிந்தது அவனுக்கு தான் முறையாக அவளிடம் எதுவும் கூறவில்லை என்று... சட்டென்று தனது கையில் வைத்திருந்த அந்த பரிசுக் கோப்பையை அவள் புறம் நீட்டி கால் மடக்கி..

"ஐ லவ் யூ ஆதுமா... இந்த சுமாரான பேங்க் மேனேஜரை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா? அப்பப்போ இவன் கிறுக்குத்தனமா நிறையக் கிறுக்குவான்.. அதையெல்லாம் பொறுத்து அவனை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வாயா டார்லிங்?" என்று கேட்க..

 

அவளுக்கு அவன் கூறியதில் காதல் பொங்கினாலும் அதை மறைத்து சிரிப்புடன்... "எதா இருந்தாலும் எங்க அண்ணன்கள் கிட்ட தான் கேட்கணும்!!" என்றாள்.

 

 

அடுத்த நிமிடம் மச்சான்ஸ் என்று ஜெய்தேவ் மூவரையும் பார்த்து கண்களால் கெஞ்ச...

 

"ஏதோ இவ்வளவு கெஞ்சுறிங்க அந்த ஒரே காரணத்துக்காக எங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதிக்கிறோம்" என்று அவர்களும் பிகு செய்துகொண்டே கூற.. "ரொம்ப சந்தோஷம் மச்சான்ஸ்!!" என்றவன் தனது கோப்பையை அவர்களிடம் கொடுத்துவிட்டு பிறகு ஆதினியின் கையை பிடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு சந்தோஷமாக ஓடினான்..

 

 

மூவரும் அதிர்ந்து "மாப்புள!! எங்க போறிங்க எங்க வீட்டு பொண்ணு கூட்டிகிட்டு?" என்று சத்தம் போட...

 

 

"ஒரு நல்லநாள் பாருங்க.. மூணு பேரும் பொறுப்பா அண்ணன்களா.. அதுவரைக்கும் நாங்களும் லவ்வர்ஸா பொறுப்பா காதலிக்கிறோம்" என்றவாறு!! அவனின் ஓவியப்பாவையான ஆதினியின் முகம் இப்போது நாணத்திலும் சந்தோஷத்திலும் அதைவிட காதலிலும் ஜொலித்தது!!

 

ஆதினி போன்ற பெண்கள் இந்த சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்!!

பெண்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு வன்முறை மட்டுமே முடிவல்ல!! அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்களேன்?? எவ்வளவு நாட்களுக்குத்தான் அவர்களும் முதலில் அப்பா சகோதரன் அதன்பின் கணவன் மகன் என்று ஆண்களுக்கு பயந்துகொண்டே சமுதாயத்துக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்?? பறவையென சிறகடித்து பறக்கட்டுமே!! பாதுகாப்பாக இருக்கவில்லை என்றாலும் சிறகை வெட்டாமல் இருக்கலாமே!! இனிவரும் காலங்களில் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு கற்பிப்பதை வி

ட.. பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!!

 

சுபம்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top