ஓவியம் 1
ஆதவன் விடைபெறும் இளமாலை பொழுது..
புள்ளினங்களும் சரி புள்ள குட்டிகளாக ஓடி ஓடி உழைத்து வரும் மனிதர்களும் சரி சற்றே இளைப்பாறும் நேரம் இது!!
அது ஒரு அப்பார்ட்மெண்ட் அருகிலுள்ள பூங்கா.. அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள விளையாட்டு திடலை விட இது சற்று பெரியதாகவும் நிறைய விளையாட்டு வசதிகளும், நடைப்பயிற்சி செய்ய என்று தனியாக சுற்றுப்பாதைகளும், பெரியவர்கள் அமர்ந்து பேச சாய்வு நாற்காலிகள் என அத்தனை வயதினரையும் இழுக்கும் இதமாக இருந்தது.
சிறு பிள்ளைகள் எல்லாம் விளையாட அதை கண்காணித்து பெரியவர்களோ பெற்றோர்களோ அருகில் அமர்ந்து ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க.. இப்பொதெல்லாம் இளம் தலைமுறையினருக்கு கூட சர்க்கரை வியாதி கட்டுக்குள் வைக்க... கூடவே இருக்கும் இளம் தொப்பையை குறைக்க.. ஐ அம் ஃபுட்டீ என்றும் நாகரிகம் என்ற பெயரில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை உணவாகவும் கண்ட நேரத்துக்கு உண்பதால் உண்டாகும் ஓபிசிட்டியை குறைக்கவும் நடைபயிற்சிக்கு என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இதில் எதிலுமே பட்டுக் கொள்ளாமல் சிந்தனையோடு ஒருவன் அனைத்தையும் அவதானித்தவாறு சுற்றிக் கொண்டிருந்தான்.
அவன் ஜெய்தேவ்!! ஜெய்தேவ் விஸ்வநாதன்!!
முதுநிலை பட்டதாரியான இவன்.. பேங்க் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறான். தந்தை அரசுப் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். அன்னை பாடலாசிரியர் அதே பள்ளியில் தான். அவரும் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டு வீட்டிலேயே மாலை நேரத்தில் பிள்ளைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மத்திய தரத்திற்கு சற்று மேம்பட்ட வர்க்கம். பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சுமூகமாகவே செல்லும் அவர்களது வாழ்க்கை. அப்பாவும் பிள்ளையும் அரசியல் நாட்டு பொருளாதாரம் முதல் வீட்டு பொருளாதாரம் வரை அனைத்தையும் விவாதித்து கொள்வார்கள் சமூகமாக.. ஆனால் ஒன்றை தவிர..
அது ஓவியம்!!
கணக்கு ஆசிரியரான விஸ்வநாதனுக்கு அது என்னமோ ஓவியத்தை கண்டால் அறவே பிடிக்காது. அவருக்கு சரியாக வராததாலா இல்லை வேற காரணத்தினாலோ.. அது அவர் மட்டும் அறிந்த ரகசியம்!!
ஆனால் அவரின் சீமந்த புத்திரனான தேவிற்கு ஓவியம் என்பது உயிரில் கலந்து, உணர்வில் நுழைந்து விரல்களில் நர்த்தனமாடும். சாதாரண ஒரு பூவை வரைந்தாலே அவ்வளவு தத்துரூபமாக உயிர்ப்பாக வரையும் திறமை இயல்பாகவே அவனுக்கு இருந்தது. சிறுபிள்ளை பிராயத்தில் அவனின் இந்த கலையை ஆசிரியர்கள் புகழ, விஸ்வநாதனுக்கும் மேனகாவுக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல படிப்பில் உள்ள ஆர்வம் குறைந்து வரைவதிலேயே இவன் மூழ்கிவிட, அதற்குப்பின் தந்தையாக இருந்தவர் கண்டிக்கும் ஆசிரியரானார். அதுவும் கணக்கு வாத்தியார் ஆனார் மகனுக்கு!! வாத்தியார் மகன் மக்கு என்று யாராவது சொல்லி விட்டால் என்னாவது அவரது பதவிக்குரிய பெருமை?!! அதனாலேயே அவர் தந்தை அவதாரத்தில் இருந்து ஆசிரியராக உருமாறினார்.
அதன்பிறகு கணக்கு என்றாலே இவன் வெறுக்க ஆரம்பித்தான். அதனால் நன்றாக படித்தும் சயின்ஸ் குரூப் எடுக்காமல் காமர்ஸ் பக்கம் வந்தவன் அதிலேயே மாஸ்டர் டிகிரி வரை செய்து இப்பொழுது ஒரு பாங்க் மேனேஜர் ஆக உத்தியோகம் பார்த்தாலும் அவனின் அந்த கற்பனை திறனை இதுவரை காய விட்டதில்லை. என்ன பார்க்கிறானோ அதை அவ்வளவு தத்ரூபமாக வரைந்து விடுவதில் வல்லவன்.. அதனோடஉ அவளது கற்பனையும் சேர்ந்து விட்டால் அவன் படைப்புகள் பல்வேறு கோணங்களில் பல்வேறு கதைகள் பேசும்!!
அதெல்லாம் சரி இப்போது இந்த ஓவியனுக்கு பூங்காவில் என்ன வேலை??
பெண் பார்க்க தான்!! அட நீங்க வேற.. கணக்கு வாத்திக்கு பயந்தே இவன் பள்ளி கல்லூரி காலங்களில் பெண் பிள்ளைகளிடம் அளந்து அளந்து தான் பேசுவான். இப்போது பொறுப்பான பதவியில் இருப்பதால் காதல் எல்லாம் நம்ம ஓவியனுக்கு வரல.. அது மொத்தமும் இடம் மாறியது அவனின் ஒவியத்திடம்!! அத்துணை காதல் அதன் மீது.. இப்போதெல்லாம் அவனது கவனம் ஓவியத்தில் மட்டுமே!!
அதாவது அவன் கற்பனையாக வரைந்த ஒரு பெண்ணிற்கு உயிர் கொடுப்பதற்கு இந்த பூங்கா விஜயம். பொதுவாக பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அந்த அழகை மொத்தமும் தூக்கிக் காட்டுவது அவர்களது பேசும் விழிகள் தான்.
சமீபத்தில் ஒரு ஓவியப் போட்டி ஒன்று அறிவித்திருக்க.. இதுவரை பாத்ரூம் பாடகனை போல ரூம் ஓவியனாக இருந்தவன் இன்று வெளி உலகத்திற்கு தன் கற்பனை திறனை வெளிக்காட்டவே இந்த புதிய பரிமாணம்!!
அவனின் ஓவியக்கருவிற்கு உரு கொடுக்க ஒரு பெண்ணை பற்றி வரைந்து விட்டான் ஒன் லைனாக..
பல நாட்களாக அவனும் பல்வேறு விதமாக படங்களை வரைந்து பார்த்து விட்டான். எப்படி வரைந்தாலும் அந்த கண்கள் மட்டும் அவனுக்கு சிறிதும் திருப்தியை தரவில்லை. இதை தன் நண்பனிடம் அவன் புலம்பிக் கொண்டிருக்க, அதற்கு அவன் கொடுத்த ஐடியாதான் இந்த பார்க் விஜயம்.
அவனின் நண்பன் வசந்த்.. கல்லூரி காலத்தில் இருவரும் நண்பர்கள் தற்போது டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் ஒரு கடையை திறந்து அவன் மட்டுமே அமர்ந்து தொழில் செய்கிறேன் என்கிற பெயரில் ஏதோ செய்து கொண்டிருக்கிறான்.
அதே.. அதே.. யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்திக் கொண்டிருக்கிறான்.
"நீ பாட்டுக்கு காலேஜ் கோவில்னு போய் பொண்ணுங்கள உத்து உத்து பார்த்தேனு வை.. அங்குள்ளவங்க உன்னை மொத்தி எடுத்துடுவாங்க... பார்க்குக்கு போனா, எல்லா வயசுலயும் பொண்ணுங்களை பார்க்கலாம். அதுல எந்த கண்ணு உனக்கு சூட் ஆகுதோ.. அதை வரைந்து விடலாம்" என்று வசந்த் ஐடியா கொடுத்தான்.
"வாழ்க்கையிலே முதல் தரம் இன்னைக்கு தான் நீ உருப்படியான ஐடியாவ கொடுத்திருக்க" என்ற ஜெய்தேவ் அடுத்த நிமிடம் அங்கிருந்து விரைந்து விட, அவன் சென்றதே அறியாமல், "என்னோட அருமை பெருமை எல்லாம் இனிமேதான் உனக்கு ஒன்னு ஒன்னா தெரியப்போகுது.." என்று பேசிக்கொண்டே இருந்த வசந்த் திரும்பி பார்க்க அங்கே அவன் இல்லை. "வழக்கம்போல சொல்லாமலே போயிட்டானா? நம்மைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே அப்பீட்டு ஆயிடுறான்.. ப்ளடி பிஸ்கட்" என்று தலையிலடித்துக் கொண்டவன் தனது 007 வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
வசந்த் சொன்னது போல் வேலை முடித்து வரும் ஜெய்தேவ், பார்க் பார்க்காக சென்று சுற்றி அலைந்தது தான் மிச்சம்.. இதுவரை அவன் எண்ணத்தை வண்ணமாக்க ஒரு கண்ணையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தூரிகை எந்த காரிகை கண்ணில் படவில்லை.
இதற்கிடையில் இவன் போட்டியில் கலந்து கொள்வதற்காக இவன் பார்க் பார்க்க சுற்றுவது விஸ்வநாதனுக்கு தெரியவந்தது.
"பொறுப்பான வேலைக்கு போயிட்ட.. இனிமேலாவது இந்த கிறுக்குவதை நிறுத்துவேனு பார்த்தா.. இப்போ பார்க் பார்க்கா சுத்திட்டு இருக்கு.. என்னைக்கு எவன் கையால அடி வாங்கிட்டு வர போறேன்னு தெரியல? மேனகா உன் பிள்ளை கிட்ட சொல்லி வை.. இப்படியே இருக்கிறது நல்லது கேளு சீக்கிரமா எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கால்கட்டு போடணும் என்று உரிமை விட்டு சென்றார்.
மேனகாவும் "புள்ள பேங்கில் மேனேஜராக இருக்கிறான் வெளியில தம்பட்டம் அடிக்கும் போது மட்டும் என் பிள்ளை என் பிள்ளை என்று சொல்ல வேண்டியது. அவன் ஏதாவது தப்பு செய்தால் மட்டுமே என் புள்ளையா? நல்ல விளக்கம் கொடுக்கிறார் வாத்தியாரு??" என்று திட்டிக்கொண்டே மகனை பார்க்க.. சோர்ந்து போனவனை பார்த்து லேசாக சிரித்து கண்ணடித்து அவன் தலையை கோதி விட்டு "உனக்கு பிடித்ததை செய் டா கண்ணா.. அவர் கிடக்கிறார்" என்றார்.
எப்போதுமே இந்த அம்மாக்கள் இப்படித்தான்.. பெரும்பாலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ மகன்களுக்கு சப்போர்ட் செய்வது. ஆனால் அதுதான் தேவுக்கு உந்துசக்தியாக இருந்தது.
"வீட்டில அப்பாவிடம் திட்டு வாங்குவது தான் மிச்சம்.. ஒரு பொண்ணு கண்ணு கூட நமக்கு செட் ஆகல.. இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு போட்டிக்கு. என்ன செய்ய?" தன் நிரூபிக்க முடியாது ஆத்திரத்தில் விரக்தியில் அன்றும் அவ்வாறு சோர்ந்து அவன் அமர்ந்திருந்தான்.
பெரும்பாலான இளைஞர்களின் நிலை என்று இதுதான் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள அவர்களுக்கு ஒரு தளம் வெகு சீக்கிரத்தில் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்காத எத்தனையோ டாட்டாக்களும், பிர்லாக்களும் ஏன் சச்சின் டெண்டுல்கர் கூட வீட்டு தளைகளால் கட்டப்பட்டு இருக்கின்றனர்.
இப்படி அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவனுக்கு கருணை காட்டினாரோ கடவுள்.. அவன் கால்களுக்கிடையே ஒரு பந்து வந்து தட்டியது.
ஏதோ சிறுபிள்ளை விளையாண்டது இந்த பக்கம் வந்து விட்டது போல, என்று அவன் பந்து எடுத்து அந்த குழந்தையிடம் கொடுக்கலாம் என்று நிமிர.. அதேசமயம் பந்தை எடுக்க குனிந்து அந்த விழிகளை பார்த்தவனுக்கு ஒற்றே ஆச்சரியம். தான் நினைத்த அதே விழிகள்.. சிறிது நேரத்திலேயே பல அபிநயங்களை காட்டிய நேத்திரத்தை கண்டவன் உறைந்து போய் நின்றான்.
விழிகளில் கோடி அபிநயம்... என்று மனம் தானாக பாடியது தேவுக்கு..
ஓவியம் 2
பந்தை எடுக்க அந்தப்பெண் தயங்கி நிற்க.. ஓவியனோ அந்த விழிகளிலே மயங்கி நிற்க.. பந்தோ கேட்பாரின்றி கிடந்தது.
அவனின் பார்வை அவளுக்கு பிடிக்கவில்லை போலும் அந்த விழிகளில் சற்றே அனல் கூடியது. சட்டென அதை படித்தவன், "தேவா என்னடா செய்யுற.. அந்த பொண்ணு நீ சைட் அடிக்கிறனு நினைக்குறா.. போய் பேசு டா.. போடா!!" என்று மனசாட்சி உந்தி தள்ள.. தன் காலுக்கு அடியில் கிடந்த பந்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவனிடம் ஒரு முனைப்பை பார்சல் செய்து விட்டே அந்த பதத்தை அவனின் விரல் நகம் கூட படதாவாறு அவள் கவனத்துடன் வாங்க.. அதை படித்தவன் போல.. "படாது.. படாது.. பயப்படாதிங்க" என்றான். நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். அதில் அவனை தொலைந்து போனவன், உறைந்து நின்றான். விரைவாக அங்கிருந்து சென்றவள், ஒரு குழந்தையிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
உறைந்து நின்ற ஜெய்தேவ் அடுத்த நிமிடம் அந்த பெண்ணை நோக்கி ஓடினான். சற்று எட்ட இருந்து அவளை நோட்டமிட்டானே ஒழிய, அந்த பெண்ணை அணுகவில்லை. முதல் காரணம் அந்த பெண் பர்தா அணிந்திருக்க, "பாய் வீட்டு பெண்ணை பார்த்தாலே பின்னி எடுத்து விடுவாங்க.. அதிலும் அந்தப் பெண்ணை வரைய வேண்டும் என்று சொன்னால்.. அவ்வளோ தான்!!" என்று நினைக்கும்போது அவனுக்கு அடிவயிறு மெல்ல கலங்கியது.
ஆனாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மெல்ல அந்த பெண்ணின் பக்கம் இரண்டு அடி எடுத்து வைத்தான். அதற்குள் அந்தப் பெண்ணோடு விளையாடிக்கொண்டிருந்த அந்த குட்டி பையன் ஜெய்தேவ் அந்த பெண்ணையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டான்.
மெதுவாக அந்த பெண்ணின் கையை சுரண்டி காதில் என்னமோ கிசுகிசுக்க..
எட்டியிருந்த பார்த்த ஜெய்தேவ்கிற்கோ...
"இந்த குட்டி பையன் என்னமோ நம்மை பத்தி சொல்வது போலவே இருக்கே.. இப்ப என்ன செய்ய? இந்த காலத்துல சிறுசுக கூட விவரமா தான் இருக்காங்க. என்ன செய்யலாம்?" என்று சிறிது நேரம் யோசித்தவன் அடுத்த நொடி, "நேரடியாக பேசி பார்ப்போம்" என்று அவளை நெருங்கினான்.
"ஹலோ மிஸ்.." என்று இவன் ஆரம்பிக்க..
அந்தப் பெண்ணோ தன் கண்களிலேயே சிறு ஒதுக்கத்தையும் பயத்தையும் சேர்த்து காட்டினாள். ஆனால் ஜெய்தேவுக்கோ அந்த விழிகளின் அபிநயனத்தில் லயித்தவன் "சோ பியூட்டிஃபுல்" என்று சொல்லி கொண்டே அவளை இன்னும் நெருங்கினான்.
"மிஸ்.. உங்ககிட்ட ஒன்னு பேசணும்" என்று அவன் தயக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு அவளை நெருங்கி கூற..
அவள் நான்கு அடி பின்னே நகர்ந்து கண்களால் அவனை முறைத்தவாறு அருகிலிருந்த பையனை பார்த்து "ரஃபிக் வா போகலாம்" என்று அவனை அழைத்துக்கொண்டு செல்ல முயன்றாள். விழிகள் மட்டும் தான் அழகு என்றால் குரலோ கொஞ்சும் கிளியாக இருக்க.. போகும் அவளை தடுக்க முயன்றான்.
தன் கைகளை அவள் வழியில் நீட்டி தடுத்தவன்.. "ஜஸ்ட் டூ மின்ட்ஸ் மிஸ்.. நான் என்ன சொல்றேன் மட்டும் கேட்டுட்டு நீங்கள் போகலாம்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்" என்று பணிவாக கேட்டான்.
"நீ என்ன மேகி நூடுல்ஸ் செய்ய போறியா? டூ மினிட்ஸ் சொல்லுற? அத்த நூடுல்ஸ் நாட் ஹெல்தி, வா போகலாம்" என்று கூறி அந்த பொடியவன் தன் அத்தையின் கையை பற்றிக் கொண்டான் தேவாவிடம் இருந்து காப்பாத்துபவனாக.. "அத்த முதல்ல போய் இவனை அப்பா கிட்ட போட்டு கொடுக்கணும்" என்று ஜெய்தேவை முறைத்தவாறு அந்த வாண்டு சென்றது.
அவளும் அவனை திரும்பி திரும்பி பார்த்து 'எட்டி நில்!!' என்று கண்களாலேயே எச்சரித்தவாறு அந்த பையனை கூட்டி கொண்டு செல்ல... இவ்வளவு நாட்களாக தன் ஓவியத்திற்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் தவித்தவன் இன்று அவ்வாறு ஒன்று கிடைக்க, அதை எக்காரணம் கொண்டும் அவன் விட தயாராக இல்லை. அதேபோல் இந்த பேசும் கண்களையும் விடுவதாக இல்லை. சற்றும் தாமதியாமல் அவள் பின்னே இவனும் தொடுத்துக் கொண்டு சென்றான்.
"உஸ்ஸ்.." என்ற ரஃபிக், "அத்தை செத்த நில்லு" என்று அவளை நிறுத்தியவன், திரும்பிப் பார்க்க ஜெய்தேவ்தும் சட்டென்று நின்று வேறு எங்கு பார்ப்பது போல பார்க்க..
இதே முறை இரண்டு மூன்று முறை செய்து விட்டான் ரஃபிக்.
இவன் அவனை பார்க்க..
அவனோ வேறு எங்கோ பார்க்க..
"அந்த முட்ட கண்ணன் நம்மை தான் ஃபாலோ பண்றான் அத்த.. இரு நான் போய் அவனை இரண்டு போடு போட்டுட்டு வரேன்" என்று வீராவேசத்துடன் செல்லும் அவன் கையை பிடித்து தடுத்தவள் "வேண்டாம் ரஃபிக்.. எதுக்கு வீண் பிரச்சனை.. வா வீட்டுக்கு போகலாம்!!" என்று வம்படியாக அவனை இழுத்து சென்றாள்.
"இரு.. இரு.. வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்!" என்றவாறு தன் அத்தையின் கையை பிடித்துக் கொண்டு பூங்காவிற்கு அருகில் இருந்த அந்த அப்பார்ட்மெண்டில் நுழைந்தான் அச்சிறுவன்.
நான்கு பிளாக் கொண்ட அந்த அப்பார்ட்மெண்டில், உள்ளே சென்றவர்கள் எந்த ப்ளாக்கில் சென்றார்கள்? அதில் எங்கே சென்று அவளை தேடுவது? என்று புரியாமல் தன் தலையில் கையை வைத்தவாறு சுற்றுமுற்றும் இவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பார்ட்மெண்ட் முன்னின்று யாரோ ஒருவன் சுத்தி சுத்தி பார்ப்பதை பார்த்த செக்யூரிட்டி அவனருகே வந்து "யார் சார் நீங்க? எந்த பிளாக் போகனும்? எந்த ஃப்ளோர்? எந்த வீடு?" என்று கடகடவென்று அவன் கேள்வி மேல் கேள்வி கேட்க.. தெரிந்தால் அல்லவா தேவா சொல்லுவான்? தட்டுத்தடுமாறி "ஒரு பொண்ணு.. பார்த்தா.. குட்டி பையன்.. பார்க்கு" என்று தெய்வத்திருமகள் விக்ரம் போல ஏதேதோ உளறினான்.
அவனை மேலும் கீழும் சுற்றி வந்து பார்த்தான் அந்த செக்யூரிட்டி. ஆழ்ந்த நீல நிறத்தில் ஷார்ட் கிரே நிற பேண்ட் கையில் லேப்டாப் பேக் காலில் ஷூ.
மொத்தமாக ஃபுல் ஃபார்மில் இருந்தான் தேவா. "பாக்குறதுக்கு ஏதோ ஆபீஸர் மாதிரி டிப் டாப்பா இருக்கிற சாரு.. ஆனா உன் புத்தி ஏன் இப்படி போகுது? அதுவும் பர்தா போட்ட பொண்ண பாலோ பண்றேன்னு சொல்ற? உனக்கு எல்லாம் அறிவே இல்லையா சாரு? போ.. போ.. யாராவது பார்த்து ஏதாவது பிரச்சனை பண்ண போறாங்க" என்று அடிக்காத குறையாக விரட்டி விட்டான் செக்யூரிட்டி.
அதேநேரம் முதல் பிளாக்கின் இரண்டாவது மாடியில் இருந்து ரஃபிக் எட்டிப்பார்த்து இவனை நோக்கி கையை நீட்ட... அவன் அருகிலேயே நின்று ஜெய்தேவை முறைத்து கொண்டிருந்தான் ரஃபிக்கின் தந்தை. வாட்டசாட்டமாக உடல் வாகோடு... "நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு டா" என்று சொல்லும் சிக்ஸ் பேக்குடன் நின்றவனை பார்த்த ஜெய்தேவ், அடுத்த நிமிடம் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டான்.
உயிரு முக்கியம் பிகிலு!!
நேராக அவன் சென்றதோ வசந்த்திடம் தான்.. பல நாட்களாக கேஸ் எதுவும் கிடைக்காமல் வெட்டியாக சுத்திக் கொண்டிருந்தவனுக்கு புதிதாக ஒரு கேஸ் கிடைத்துவிட அதுவும் நண்பனோடதே!! துள்ளிக்குதித்து தயாராகிவிட்டான் வசந்த்
துப்பறிய..
"டேய்.. நீ கணேஷ் வசந்த்ல வர்ற டிடெக்டிவ் இல்லடா.. இருந்தாலும் வேற வழியில்லாமல் உன் கிட்ட வந்திருக்கேன். சொதப்பிடாத டா.. இட்ஸ் மை ட்ரீம்!!" என்றான் தேவா.
"நீ கவலைப்படாத மச்சான் அந்த அப்பார்ட்மெண்டில் அந்த பொண்ணு எங்க இருக்கா? அவ யாரு? என்ன படிக்கிறா? அவளுக்கு எத்தனை தங்கச்சி அண்ணன் தம்பி இப்படி மொத்த ஜாதகத்தையும் இரண்டே நல்ல உன்கிட்ட கொண்டு வந்திடுறேன்" என்று அவன் வீராவேசமாக பேச..
"போடா லூசு.. நான் அந்த பொண்ணு என்ன கல்யாணமா பண்ணிக்க போறேன்!! ஜாதகம் எல்லாம் கொண்டுவரேங்கிற.. அந்த பொண்ணோட டீடைல்ஸ் மட்டும் கொண்டுவா போதும். மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்" என்று நண்பனின் தலையை தேவா தட்ட..
"தேவா!! நீ இப்ப பார்ப்ப.. இந்த சூர்யா யாருன்னு.. இந்த தளபதி யாருன்னு.." என்று ரஜினி குரலில் முயன்று, அது வராமல் சதிசெய்ய கருணாஸ் குரலில் பேசி முடித்தான் வசந்த்.
"டேய் உன் வால சுருட்டி கொஞ்சம் ஓரமா வைடா.. இது என் எதிர்காலம் டா.. எங்க டாடியை எவ்வளவு சமாளிச்சு இந்த போட்டிக்கு நான் பர்மிஷன் வாங்கி இருக்கேன் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்துடாதடா ராசா.. உன்ன நம்பி தான் போறேன். நான் நாளைக்கு வருவேன் எனக்கு அவளோட மொத்த டீடைல்ஸ் நீ தரணும்" என்று நண்பனை பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு சென்றான் ஜெய்தேவ்.
"நல்ல நண்பன் நீ தான் என்று.." என்று நண்பன் பட பாடலை பாடிக்கொண்டே ஜெய்தேவ் சொன்ன அபார்ட்மெண்ட் நோக்கி விரைந்தான் வசந்த்.
அதே நேரம் தன் வீட்டிற்கு சென்று தேவா ஏற்கனவே தான் வரைந்து வைத்திருந்த பெண்ணின் முகத்தில் அந்த விழிகளை வரைய ஆரம்பித்தான். வரைய வரைய அந்த கண்களில் அவன் கண்ட பயமும் கோபமும் அனலும் மட்டுமே திரும்பத் திரும்ப வந்தது. இவன் எதிர்பார்த்த பாவனை வரவே இல்லை. எவ்வளவு முயன்றும் அந்தக் கோபமும் எதுவென்று தெரியாத ஒரு வெறுமையும் திரும்பத் திரும்ப அவன் மனக் கண்களில் பார்த்தவனுக்கு வரைய முடியாமல் தூரிகையை தூக்கிப்போட்டு காரிகையே நினைத்துக் கொண்டு நின்றான்.
"பெண்ணே யாரடி நீ? இப்படி படுத்துற என்னை.. உன் கண்கள் என்னை இம்சைக்குது. ஆனா.. உன் கண்களை தாண்டி அழகை ஆராதிக்க விரும்பவில்லை நான்
. அது தப்பு.. வரைய மட்டும் அனுமதி கொடு டி என் ஓவியப் பெண்ணே!!" என்று அந்த கண்களிடம் பேசிக் கொண்டிருந்தான் மானசீகமாக!!
