உயிரே 29

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 221
Thread starter  

29

 

தான் முத்தமிட்டது பிடிக்காமல் வாந்தி எடுக்கிறாள் என்றால்.. அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறாளா?? இன்னும் அவளுக்கான என் நேசம் புரியவில்லையா?? என் காதல் அவளுக்கு விளங்கவில்லையா?? என் அன்பை அவள் உணரவில்லையா?? என்று அதிர்ந்து நின்றான் வீரா!!

 

அஸ்திரா காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்க.. அதில் கூட அவளது மன அழுத்தமும் சேர்ந்து கொள்ள.. கூடவே வீராவின் முரட்டு முத்தாடலில் சற்றே பயந்து போன பெண்ணவளுக்கு உடல் உபாதையும் சேர்ந்து படுத்த... வயிற்றை பிரட்டிக் கொண்டு வந்தது. வயிற்றில் உள்ளவை எல்லாம் வெளியே வந்து விடும் வண்ணம் ஓங்கரித்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தவளை ஒரு நிலைக்கு மேல் பார்த்துக்கொண்டு நிற்க வீரவால் முடியவில்லை.

 

குளியலறையில் துவண்டு விழுந்து விடுமாறு வயிற்றையும் தலையையும் இருகைகளால் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு பதட்டமானது.

 

"என்னாச்சு இவளுக்கு திடீரென்று?" விரைந்து அவளிடம் சென்றான்.

 

'அவள் மனதில் என் மீது எவ்வளவு வெறுப்பு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நான் கொண்ட காதல் நிஜம்!! நான் கொண்ட அன்பு உண்மை!!' என்று எண்ணியவன் அடுத்த நிமிடம் ஓடிச் சென்று அஸ்திராவின் தலையை இருபுறமும் ஆதரவாக பிடித்துக் கொண்டான். 

 

அவனது அருகாமை அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும்.. அவன் நெற்றிப் பொட்டை அழுத்தும் விதம் அவளுக்கு சற்று ஆசுவாசத்தை கொடுக்க.. கண்களை மூடிச் சிறிது நேரம் அப்படியே நின்றாள். அவன் அருகாமையால் விளைந்த எரிச்சலை வேறு வழியில்லாமல் உள்ளே வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். உடம்பில் உள்ள சத்துகள் அனைத்தும் வற்றிவிடும் அளவுக்கு வாந்தி எடுத்திருந்தாள் அஸ்திரா.

 

மெல்ல அவள் முகம் வாய் கழுவ தண்ணீர் பிடித்துக் கொடுத்தவன், அவள் முடித்ததும் பற்றிய கையை விடாமல் அவளை அழைத்து வந்து படுக்கையில் அமர வைத்தான். அவனது கோபத்தை காட்டிலும் இந்த அனுசரணையும் அன்பும் தான் அவளுக்கு இன்னும் அவன் மீது கோபம் பல மடங்காக பெருக காரணம்.

 

"செய்வதெல்லாம் செய்து விட்டு இப்படி அன்பாக நடித்தால்.. எல்லாம் மறந்து போய்விடுமா என்ன? என்று உள்ளுக்குள் அவ்வளவு எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

 

"இப்ப பரவாயில்லையா?" என்றான் பற்றுக் கொள்ளாத பாவனையில்..

 

"ம்ம்ம்..!!" என்று பதிலளித்தவள் சற்று சாய்ந்து அமர்ந்து கொள்ள அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான் அவனது ஷெல்ஃபில். அவனது குரலில் ஏதோ ஒன்று குறைந்தது. என்ன என்று அவளுக்கு புரியவில்லை. இன்னும் அவனை தெரியவில்லை அவளுக்கு.

 

ஆனால் அவன் கொலைகாரன்!! சஞ்சயனை கொன்ற கொலைகாரன்!! என்பது மட்டும் அவள் ஆழ் மனதில் பதிந்திருந்த விஷயம். இதுபோல சிறுசிறு அன்பை அவன் காட்டினாலும் அவன் தவறானவன் தானே.. என்பதை மனதில் நன்றாக உருவேற்றி கொண்டாள். சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்வது இல்லை அல்லவா? பழமொழி வேறு அவளின் கருத்துக்கு துணை சேர்க்க..

 

"ஏதாவது குடிக்கிறியா?" என்று‌ வீரா கேட்க.. பெண்டாட்டி.. தீரா என்ற வார்த்தைகள் இல்லை அவனிடம்!!

 

"வேண்டாம்.." என்று மறுதலித்தாள் தீரா.

 

"ஏன்?" என்றான் அவள் கண்களை தீரக்கமாக பார்த்து.‌

 

"என்ன.. ஏன்?" அவனின் அந்நியத்தனமான அந்த பேச்சே வார்த்தை அவளுக்கு கடுப்பாக இருந்தது. கூடவே அவனின் ஒரு வார்த்தை வார்த்தையாடல். 

 

இது வீரா அல்லவே!! கோபமோ மோகமோ அவனின் வார்த்தைகள் கட்டுக்கடங்கா காற்றைப் போல தான் இருக்கும். கிட்டத்தட்ட அவனைப் போலவே நரம்பில்லா நாக்கில் விளையாடும். இன்று ஏன் இப்படி? என்று அவளும் யோசனையாக அவனது பார்வையை கவ்வி நின்றாள்.

 

சற்று நேரத்திற்கு முன் பேசி சிரித்து.. சீண்டி தீண்டி முத்தம் கொடுத்து கொஞ்சியவனா இவன்? அவன் முகத்தில் அவ்வளவு ஒரு இறுக்கத்தை கண்டாள் அஸ்திரா. இதுவரை அவள் அப்படி பார்த்ததில்லை அதிலும் அவளிடத்தில் பேசும்போது முகம் எப்போதும் இலகுவாக அவளை சீண்டி கொண்டே இருக்கும். இப்போது அது இல்லை. 

 

கண்களில் சிரிப்பு இல்லை..

பார்வையில் உயிர்ப்பு இல்லை..

பேச்சில் சீண்டல் இல்லை..

நடத்தையில் உரிமை இல்லை..

 

அவனிடம் மீண்டும் பேசி சமாதானக் கொடியை நாட்ட அவளுமே தயாராக இல்லை. ஏதோ கோபமாக இருக்கிறான் அப்படியே இருக்கட்டும் அப்பொழுதாவது எட்டி நிற்கிறானா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

 

அப்படியெல்லாம் அவனை எட்டி நிறுத்த முடியுமா என்ன??

 

மடமடவென்று கீழே சென்றவன் எலுமிச்சைசாறு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். அவள் என்ன என்று கண்களாலேயே கேட்க.. "குடி!!" என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு!!

 

வாங்கி பார்த்தவளுக்கு அந்த மணமும் சுவையும் புளிப்பும் அப்பொழுது தேவையாக இருக்க.. மடமடவென்று குடித்து விட்டாள்.

அவள் குடித்து முடிக்கும் வரை கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்திருந்தான். 'குடித்து முடி டி அப்புறம் இருக்கு உனக்கு!' என்ற மைண்ட் வாய்ஸோடு..

 

"என்னைய பத்தி என்ன டி நினைச்சிட்டு இருக்க?" என்று சட்டென்று அவன் குரல் உச்ச ஸ்தொணியில் கேட்க.. திடுக்கிட்டவள் கையில் இருந்த

கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்து சுக்கு நூறாகியது. 

 

அதிர்ச்சியுடன் கண்களை விரித்து அவள் பார்க்க.. அதில் தெரிந்த பயமும் அவ்விழியீர்ப்பும் அவனை அந்த கோபத்தையும் தாண்டி அவனை ஆழியென அவளுள் ஈர்க்க..

 

"வீரா.. வீரா.. ஸ்டெடி!! ஸ்டெடியா இரு டா.. அவ கண்ண பார்க்காதே! பேச வந்த விஷயம் எல்லாம் மறந்து போய்டும்.. ஸ்டெடி வீரா!!" என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு அதற்கும் சேர்த்து அவளைத்தான் முறைத்தான்.

 

"சொல்லுடி..!!" என்றான் கர்ஜனையாக..

 

"என்ன.. என்ன?" என்று புரியாத அவன் கோபத்தில் அவள் திக்கி திணற..

 

"என்னவா? என்ன நெனைச்சிட்டு இருக்க என்னைய பத்தி? பொம்பள பொறுக்கினா? ஹான்.. சொல்லுடி??" என்று அவள் முகத்துக்கு அருகே தன் முகத்தை வைத்து கண்களை உருட்டி அவன் கேட்ட விதத்தில் உள்ளுக்குள் மிரண்டே போனாள் அவள்.

 

கூடவே சற்றே அவளது அசட்டு தைரியம் தலைதூக்க.. "இல்லையா பின்ன?" என்று‌ துடுக்காக கேட்டாள்.

 

"அப்படி என்ன பார்த்துட்ட நீ.. நான் நித்தமும் ஒருத்தி கூட இருந்ததையா? இல்லை.. எப்பவும்.." கட்டிலைக் காட்டியவன், "இத பத்தி மட்டும் தேன் யோசிச்சுக் கிட்டு இருப்பேனு நெனைச்சியா?? எனக்கு வேற வேல பொழப்பே கிடையாதா? நான் என்ன ஊரூல உள்ள பொண்ணை எல்லாம் படுக்க கூப்பிடுற பொம்பள பொறுக்கியா??" என்று அவளை கூர்ந்து பார்த்தபடி அவன் கேட்க.. அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு சங்கடமாக இருந்தது.

 

"நான் உன் புருஷன் தானே? பின்ன நான் முத்தம் கொடுக்குறதுல்ல என்னடி தப்பு? பெரிய இவ மாதிரி போய் வாந்தி எடுக்குற? ம்ம்ம்.. அவ்வளோ அருவருப்பாவா இருக்கா யேன் அருகாமை.. யேன் ஸ்பரிசம்.. யேன் முத்தம்..!!" என்று அந்த முத்தத்தில் அவன் அழுத்திக் கேட்க.. அவளோ வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள். அந்த

நேரத்தில் உடல் உபாதைகளோடு அவனின் முத்தமும் சேர அவளுக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது என்னவோ உண்மைதான்!!

 

தனக்கு பதில் அளிக்காமல் திரும்பி கொண்டவளின் அலட்சியத்தை கண்டவனுக்கு.. ஆத்திரம் பல மடங்காக வர.. "ஆனா.. யேன் கூட நீ இருந்த போது அப்படியெல்லாம் தெரியலயே பொண்டாட்டி?" என்று இடது கையால் மீசையை நீவி கொண்டே அவன் கேட்ட அந்த பட்டவர்த்தனமாக கேள்வி அவளுக்கு அசூசையாக

இருந்தது.

 

'ச்சீ... என்ன மனுஷன் இவேன்?' என்று தான் நினைத்தாள். 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top