உயிரே 28

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 221
Thread starter  

28

 

மயங்கி கிடந்த பத்ரி எழுப்பி அவனுக்கும் கண்ணபிரானின் சொந்த செலவிலேயே ஃப்ரெஷ்ஷாக ஜூஸ் எல்லாம் வாங்கி கொடுத்து "இங்கன இருப்பவனுகள தயவுசெய்து தள்ளிக்கட்டு போங்க" என்று சாஷ்டாங்கமாக அவன் காலில் விழவே சென்றுவிட்டான் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.

 

"யோவ் இன்ஸ்.. இவனுங்கள எல்லாம் வெளியே எடுக்குறதுக்கு என்கிட்ட பணம் இல்லை யா!! நானே ப்ரண்டனு யேன் சொந்த காசுல செலவு பண்ணிதேன் வீராவுக்கு ஜாமீன் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று பத்ரியும் சோககீதம் வாசிக்க அவனுக்கு எசப்பாட்டு வாசித்த கண்ணபிரான் மொத்தமாக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் வழித்து எடுத்துக் கொடுத்து அத்தனை பேருக்கும் ஜாமீன் வாங்கி வழி அனுப்பி வைத்தவன், இரண்டு வாரங்களுக்கு விடுமுறை போட்டு சொந்த ஊருக்கு ஓடி விட்டான்.

 

"லஞ்சம் வாங்கிச் சேர்த்த இல்ல மொத்தமா வழிச்சிட்டு போக வைச்சிட்டானுகளா உன்னைய!!" என்று சிரித்துக் கொண்டான் பத்ரி.

 

பாடுபட்டு சேர்த்த பணமே சிலசமயம் பாதியில் சென்றுவிட‌‌.. இவ்வாறு அடுத்தவன் பாவத்தில் சேர்த்த பணம் எங்கணம் வாழும்!! அப்பப்ப நாமும் கருத்து கண்ணம்மாவா மாறிடனும் மக்கா!!

 

உள்ளே போன இரண்டு மணிநேரத்தில் வெளிவந்து..

மாலை மரியாதை வேட்டு சத்தத்தோடு தன் வீட்டு முன்னே ஊர்வலமாக போன வீராவை கொடூரமாக பார்த்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். 

 

வீராவும் சும்மா இராமல் வேண்டுமென்று அவர்கள் வீட்டு வழியாகவே ஊர்வலம் போனான். போதாத குறைக்கு அவர்கள் வீட்டு வாசலுக்கு எதிராக ஆயிரம் வாலா பட்டாசு கொளுத்திப் போட்டார்கள் அண்ணனின் பாசக்கார தம்பிகள்!!

 

வீட்டுக்குள் நுழைந்தவனை வாரி அணைத்து கதிரி தீர்த்துவிட்டார் வடிவாம்பாள். 

 

"எம்மாவ் போதும்!! உன் கண்ணீரிலேயே என்னைய குளிப்பாட்டிடுவ போல.. கொஞ்சம் கண்ணுக்கு ரெஸ்ட் கொடு ஆத்தா!!"

என்று எவ்வளவோ ஆறுதல் மொழி வீரா கூறினாலும் அந்த தாய் உள்ளத்திற்கு அது போதவில்லை.

பெற்ற மனம் அல்லவா கலங்கி தவித்த தவிப்பை கண்ணீர் விட்டு ஆற்றிக் கொண்டாருந்தது!!

 

அருகில் நின்றிருந்த சற்குணம் "ஆத்தா வடிவு!! போதும் நிப்பாட்டு.. புள்ளய உள்ளே கூட்டிப்போ முதல்ல" என்று அழுத்தமாக உரைக்க.. அதன் பின்னே அவர் அவனை முதலில் கொல்லப்பக்கம் இருக்கும் கிணத்தடியில் அமரவைத்து எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வீட்டுக்குள் அழைத்து வந்தார்.

 

ஜெகநாதன் பூங்கொடியும் அப்போது வரை அங்கேதான் இருந்தனர். அண்ணனை பார்த்ததும் அவள் அழுகையோடு கட்டிக்கொள்ள.. ஜெகநாதனை பார்த்து சிரித்த வீரா, "ஒன்னும் இல்ல கொடி.. அதேன் வந்துட்டேன் தானே‌.‌ இதுக்கு ஏன் இப்படி ஓடி வந்தவ.. புள்ளைய வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டிங்களா? மருமகன தூக்கிட்டு வந்து இருக்கலாம் இல்ல" என்று கேட்டான்.

 

"இல்ல மாமா தேன்.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் போயிட்டு வாங்க. ஏற்கனவே ஊருக்குள்ள நிறைய பிரச்சனை இருக்கு. பொத்துனாப்புல போயிட்டு வந்துடுங்கனு சொல்லி அனுப்பி விட்டார்" என்றதும், "சரி.. சரி உங்க மாமனாரும் சொன்னதும் சரிதேன்" என்றவன் ஜெகநாதனிடம் திரும்பி "என்ன மச்சான் உன் தங்கச்சி போய் பார்த்துட்டு வந்திட்டியா?" என்று சிரிப்புடன் கேட்டான் வீரா.

 

"அவ என் தங்கச்சினு இப்பதேன் உனக்கு ஞாபகம் வருதோ? தாலி கட்டும்போது தெரியலையோ?" என்ற முறைப்புடன் கூறினான் ஜெகன்.

 

"என்ன பண்ண சொல்ற மச்சான்.. எனக்கும் மாப்பிள்ள மச்சானு உங்களை எல்லாம் கூப்பிட்டு ஊருக்கே விருந்து வைத்து கல்யாணம் கட்டிக்க ஆசைதேன்!! ஆனால் இதெல்லாம் நான் செஞ்சுதான் உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணனும்னா.. டேரக்டா அறுபதாம் இல்லை என்பதாம் கல்யாணம் கூட பண்ணிக்க முடியாது உன் தங்கச்சியோட" என்று அலுத்துக் கொண்டான்.

 

இவ்வளவு அலப்பறை நடந்துகொண்டிருக்கும்போது பூங்கோதையின் யோகலட்சுமி ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். "இவள எல்லாம் திருத்தவே முடியாது! என்று புலம்பிக் கொண்டான் தர்மா.

 

மத்தியான நேரம் ஆகியிருக்க.. அனைவருக்கும் தடபுடல் விருந்து தயாரானது‌. ஆனால் மருந்துக்கும் விருந்து சாப்பிட மனமில்லை வீராவுக்கு. தன் தீராவின் நிலைமையை எண்ணி யோசித்துக் கொண்டே இருந்தான்.

 

இன்னும் மாடிக்குச் செல்லவில்லை. அவளையும் நேர்கொண்டு பார்க்கவில்லை. மனதுக்குள் கோபமும்.. ஏமாற்றி விட்டாளே என்ற வருத்தம் இருந்தாலும் அதையும் தாண்டிய அவனது காதல் அவனை அடக்கி வைத்திருந்தது.

 

"அஸ்திரா கொஞ்சம் வீக்கா இருப்பா போல அண்ணே.. அழுதழுது மூர்ச்சையாகி மயங்கி கிடந்தா.. நானும் அவரும் தேன் வந்து படுக்க வைச்சு.. அம்மா கொடுத்து சத்துமாவு கஞ்சிய குடிக்க வச்சிட்டு வந்தோம். நீ போய் பாக்குறதுன்னா பார்த்துட்டு வா" என்று பூங்கொடி அவனுக்கு தண்ணீர் கொடுப்பது போல அருகே வந்த முணுமுணுத்து விட்டு சென்றாள்.

 

ஜெகநாதனும் தர்மாவும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க இருவரையும் அழைத்துக் கொண்டு சிறிது நேரம் வெளியில் நின்று ஏதேதோ பேசினான். இருவரும் மறுக்கவும் இவன் அதட்டவும் இப்படியே சில நிமிடங்கள் சென்று கொண்டிருந்தது.

 

சற்குணம் மகன் கண்கள் மருமகளை தேடி அலைந்தது முதல்.. 

நண்பர்களோடு ஏதோ அவன் முக்கியமாக விவாதித்தது வரை அனைத்தையும் அவதானித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

பின் மூவரும் உள்ளே வர "நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க டா.. நான் கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிட்டுக்குறேன். ஏதாவது சொல்லி சமாளிங்க இங்கன" என்று நைசாக மாடிக்கு நிறைய விட்டான் வீரா மனைவியை காணும் ஆவலில்..

 

இன்னும் மயக்கம் கலந்த உறக்கத்திலேயே இருந்தாள் அஸ்திரா. அவளை கண்டதும் தானாக மோகம் கொண்டு உலரும் உதடுகளை நுனி நாக்கால் தடவி எச்சில் ஈரம் செய்து கொண்டு அவளை பார்த்துப் புன்னகைத்தான் வீரா. "இந்நேரத்தில் கூட என்னைய டெம்ட் பண்றா இல்!!" என்று சிகையை கோதிக் கொண்டான்.

 

அவள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு தனக்கு முன் படுத்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களுக்கு அவளின் இளமைக் கனிகள் கோபுரக் கூர்மையுடன் தெரிந்தன. புடவையை மீறிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் அவளின் ஆப்பிள் கனிகளை சில நொடிகள் உற்றுப் பார்த்தவனின் உடம்பில் அனலடித்தது.

 

"இவ்வளவு ரணகளத்திலேயும் என்னைய மோகம் கொள்ளச் செய்ய.. உன் ஒருத்தியால் மட்டும்தேன்.. முடியுமடி என் பொண்டாட்டி!!" என்று மெல்ல குனிந்தான். அவள் உதடுகளும் அவன் உதடுகளும் உரசிக் கொள்வதைப் போல மிகவும் நெருக்கமாக இருந்தன. அவளின் வெம்மையான மூச்சுக் காற்றை முகர்ந்தவன் உடலினுள் அவை பரவி அவனின் வெம்மையை கூட்டின!!

 

அவன் மீறிய தாபத்தோடு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவள் அதை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. இன்னும் மயக்கத்தின் பிடியில் தான் இருந்தாள். அவனின் வியப்ப பன் மடங்கு கூடியது. 

 

"என்ன இது? எவ்வளவு தூக்கமா இருந்தாலும் நான் இப்படி செய்தால் முகம் சுளிப்பாளே? ஏன் இன்றைக்கு என்ன ஆனது?' என்று யோசனையோடு அவளைப் பார்த்தான். மின்விசிறியின் உபயத்தில் அவளது புடவை சற்று நெகிழ்ந்து.. குழைவான அவளது சிற்றிடையை அவன் கண்களுக்கு விருந்தாக்கியது.

 

அவள் மீது அவனது தீராத மோகமும்.. குறையாத தாபமும் அவளை முத்தமிடும் ஆவலை நொடிக்கு நொடி கூடிக் கொண்டே போனது. உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தை பிடித்து தைரியமாக தன் பக்கம் திருப்பி அவள் கழுத்துக்கும் மார்புக்கும் இடைப்பட்ட இடத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

 

ஒரு நொடி தன்னை மீறி மயக்கத்திலே சிலிர்த்தாள் மாது. சட்டென்று கருவிழிகள் உள்ளே நர்த்தனம் ஆடின.. மெல்ல இறுக்கமாக மூடியிருந்த கண்களை திறந்தாள். லேசான முக இறுக்கத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் மார்புகள் சற்று வேகமாக ஏறி இறங்கியது கோபத்தாலா?? வருத்திலா?

 

அழகுப் பதுமையவளை மெல்ல அணைத்தான் வீரா. அவள் லேசாக திமறி தள்ளினாள். அவன் முகம் அவளின் அழகு முகத்தை நெருங்கியது மிக மிக நெருக்கமாக.. சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள் அஸ்திரா. அவளின் சிவந்த மெல்லிய உதட்டில் தன் உதடுகளைப் பதித்தான் அழுத்தமாக.. ஜில்லென்றிருந்தத அவள் உதடுகள் அவனுக்கு ஜிவ்வென்று ஏற்றியது உடல் வெம்மையை!!

 

அவள் உடம்பு சிலிர்த்தது ஆனாலும் திரும்பிக் கொண்டாள். பின்னால் இருந்து அவளை சற்று இறுக்கி அணைக்க அவள் முரண்டினாள். அந்த அழகுப் பதுமையின் முகத்தை திருப்பி உதடுகளைக் கவ்விச் சுவைத்தான். வெல்வெட் போன்ற மிருதுவான அவளின் உதடும்.. அவளது உமிழ் நீரின் இனிய சுவையும் அவன் இதயம்வரை இனித்தது. அவள் உதடுகளை அவன் சப்பிச் சுவைத்து விடுவித்தபோது அவனின் ஆண்மை அவளை சுகிக்க தயாராக.. ஆனால் இப்போது வேண்டாம் என்று மனமின்றி மலரினியின் மலர் இதழ்களை விடுவித்தான் வீரா!!

 

அவளின் தித்திப்பான உதட்டுச் சுவையை தன் நாக்கில் ருசித்தபடி மெல்லிய புன்னகையுடன் அவன் கட்டிலில் வீழ.. அவனது உவர்ப்பு உதட்டு சுவையை ருசித்த அவளது நாக்கு அவளுக்கு பிடித்தமின்மையை காட்ட.. அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. எழ முடியாமல் எழுந்து குளியலறை நோக்கி ஓடினாள் அஸ்திரா!!

 

தன் முத்தமிட்டது பிடிக்காமல் வாந்தி எடுக்கிறாள் என்றால் அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறாளா?? என்று அதிர்ந்து நின்றான் வீரா!!

 

 

அடேய்.. அவ வாந்தி எடுப்பதே உன்னால் தானடா!!

 

தீருமோ தாகம்!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top