23
ஜெர்ரியின் இறுகிய அணைப்பில் இருந்து எழுந்து ஓடி வந்தவள், தன் வீட்டுக் கதவை அடைத்து அதன் பின்னே நின்று வேகமாக மூச்சு இறைத்தாள்.
அவனின் மீதான கோபத்தை விட அவளின் மீதான கோபமே அதிகமாக இருந்தது!!
பின் ஒவ்வொரு முறையும் அவன் நெருங்கும் போதும் "விலகிச்செல்! விலகிச்செல்!" என்று கூப்பாடு போடும் அறிவை மனமானது சிறிதும் கண்டு கொள்ளாமல் நெகழ்ந்து நிற்க.. உடலோ அவனோடு குழைந்து போக.. அவளை நினைத்து அவளுக்கு பெரும் பயமாக இருந்தது. மீண்டும் ஒருமுறை ஜெர்ரி நெருங்கினால் தன்னால் தடுக்க கூடுமோ? நிச்சயம் முடியாது தான்! என்று மனது அடித்துச் சொன்னது.
தாமரை போட்டு இருக்கும் இந்த அழுத்தமான முகமூடிக்கு பின்னே அன்புக்கும் ஆதரவுக்கும் காதலுக்கும் ஏங்கித் தவிக்கும் ஒரு சிறு பெண் மறைந்து இருக்கிறாள் என்று.. என்று ஜெர்ரிக்கு தெரிய வருகிறதோ அன்று அவளின் முழு முதல் அவனே ஆவான்!!
அதை இலாவகமாக காப்பதில் தான் இருக்கிறது தாமரையின் திறமை கூட!!
இப்படிப் பலவாறு தன்னில் உழன்று கொண்டே இருந்தவள். அதன் பின்னே மழையில் நனைந்த உடைகள் பாதி காய்ந்தும் காயாமல் இருப்பதை கண்டு குளிர் என்றும் பாராமல் மீண்டும் ஒரு முறை குளித்து கட்டிலில் தஞ்சமடைய நித்திரா தேவியோ அவளை விட்டு தூரம் போனாள்.
ஆனால் இதெல்லாம் சிறுவயதிலிருந்தே பழகியது தானே!! இவ்வளவு வலிகளையும் ரணங்களையும் சுமந்து கொண்டு இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவள் தன்னை தானேத் தேற்றி தைரியமூட்டி தூக்கத்திற்கு மனதையும் உடலையும் திரும்புவாள். அதே போல இன்றும் முயன்று வெற்றியும் கண்டாள்.
மறுநாள் வழக்கம்போல இவள் வேலைக்கு செல்ல அங்கே அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
அது அவள் தற்போது செய்து கொண்டிருக்கும் பிராஜக்ட் இல் இருந்து வேறு ஒரு ப்ராஜெக்டுக்கு அவளை மாற்றி இருந்தனர். கூடவே அவரது க்ரேடையையும் உயர்த்தி இருந்தனர். அதுதான் அவளுக்கு அதிர்ச்சி!
ஆமாம்.. அதிர்ச்சி நல்லதா? கெட்டதா?
தாமரை பொருத்தவரையில் அந்த அதிர்ச்சி நல்லதும் கெட்டதும் கலந்த செய்த கலவை.
சிறிது நாட்களாக ஜெர்ரி கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது.. நேற்று அவனை தன் அப்பார்ட்மெண்டில் பார்த்தது.. இன்று அவளின் ப்ராஜெக்ட் மாற்றியிருப்பது எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
'இவன் பக்காவா பிளான் பண்ணி தான் வந்திருக்கான். விட்டு விலகிட்டானு நினைத்தது தப்பு!' என்று யோசனையோடு அவளுக்கு புதிதாக அலார்ட் செய்திருந்த ப்ராஜெக்ட் இருக்கும் ஏரியாவுக்கு இவள் செல்ல.. அங்கே டீம் லீடரிலிருந்து அனைவரும் இருந்தனர். இவள் அங்குள்ள டீம்ல இணைந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, அவளுடைய கேபினை காட்டியவர் "இங்க வேலை செஞ்சிட்டு இருங்க தாமரை.. நம்ம சீனியர் மேனேஜர் கம் டேரக்டர் ஆஃப் திஸ் ப்ராஜெக்ட் இன் மீட்டிங். அவர் வந்தவுடன் உங்களை கூப்பிடுறேன்" என்றான்.
இவளும் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு அமர்ந்தவளின் கண்கள் சுற்றி சுழன்றுக் கொண்டு இருந்தது. எங்கேனும் ஜெர்ரி தென்படுகின்றானா என்று!!
அவளின் படபடப்பு..
அனேக எதிர்பார்ப்பு..
உள்ளத் துடிதுடிப்பு..
முதுகின் குறுகுறுப்பு..
அனைத்தும் அடித்துச் சொன்னது ஜெர்ரி இங்கே தான் இருக்கிறான் என்பதை!!
சிறிது நேரம் என்ன வெகு நேரம் அவளது நாடித்துடிப்பு முதல் இதயத்துடிப்பு வரை எல்லாம் எகிற வைத்து, அதன் பின்னே டைரக்டர் அறைக்கு அவளை போக சொன்னான் அவளுடைய டீம் லீடர்.
உள்ளே சென்று பார்க்க யாரும் இல்லை அமைதியாகத்தான் இருந்தது அவ்விடம். "நம்மை வர சொல்லிட்டு இவர் எங்கே சென்றிருக்கிறார்? ஒருவேளை மீட்டிங் முடிந்து இன்னும் வரவில்லையோ? அதற்குள் நம்மை ஏன் அனுப்பி வைத்தான் அந்த டிஎல்?" என்று புலம்பிக்கொண்டே இருக்கையில் அமர்ந்து அந்த அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள்.
சட்டென்று அவளது தலை பின்பக்கமாக சாய்க்கப்பட்டு அவளது பிறை நுதலில் அழுத்தமான இதழ்கள் பதித்து, "வெல்கம் ஹனி!!" என்றவனது பழுப்பு பாவையினுள் சிக்கிக்கொண்டது இவளது நீள நயனங்கள்!!
அவனை பார்த்தவள் பார்த்தபடி இருக்க.. அவனும் சாய்த்த தலையை சாய்த்தபடி இருக்க..
இரு கண்களுக்கு இடையே தான் எத்தனை வீச்சுக்கள்? காதல் வீச்சுகள்!!
சட்டென்று சமாளித்து அவன் பிடியிலிருந்து விலகி நேராக அமர்ந்தவளுக்கு மூச்சு வாங்கியது.
"சில் சில் ஹனி!!" என்றவனின் வார்த்தைகள் வெகு கூலாக வந்தது.
அவனை இவள் விடாமல் முறைத்துக் கொண்டிருக்க.. அவனும் வெகு சுவாரசியமாக தன் தாடையை கையால் தாங்கியவாறு அவளை பார்த்தவன் "என்னதான் அழகாக இருந்தாலும் இப்படி டைரக்டா என்னை சைட் அடிப்ப.. அதுவும் ஆபீஸில் வைத்து?" என்று கண்ணுக்குள் சிரித்தவனை பார்த்தவளுக்கு இப்போது கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"யாரு? யாரு உன்னை சைட்டு அடிச்சது? நானா?" என்று உறுமியவள் "வேண்டாம் ஜெர்ரி.. இந்த விளையாட்டை இதோட நிப்பாட்டுக்க. நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். என் வாழ்க்கை உன் வாழ்க்கையோடு எந்த புள்ளியிலும் தொடங்க முடியாது. எனக்கான தேர்வு எங்க வீட்ல ஏற்கனவே பார்த்தாச்சு. அதை மீறி எனக்கான ஒரு ஆசை என்னிடம் இப்பவும் எப்பவும் கிடையாது. தயவு செய்து இந்த விளையாட்டை நிறுத்திவிட்டு உன் ஊரை பார்க்க போங்க!" என்று எழுந்து கையெடுத்து கும்பிட்டவள் விறுவிறுவென்று கதவை நோக்கி நகர..
"எந்தப் புள்ளியிலும் நாம சேர முடியாதா? நாம சேர்ந்து ஆறு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு!!" என்று குரல் காதுக்கு மிக அருகாமையில் கேட்க, அசையாமல் அப்படியே நின்றாள் தாமரை.
அவனது மூச்சுக்காற்றால் அவளது முதுகில் உள்ள பூனை முடிகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நிற்க.. அவளையும் சிறிதும் அசையவிடாமல் அவன் அணைக்கட்டி நிற்க.. எங்கே அசைந்தால் உடலோடு உடல் உரசுமோ என்று பயந்தாள் மாது. அந்த பயம் கவலை எல்லும் கடந்தவன் அவன்!!
அவள் அங்கத்தோடு அங்கத்தை சேர்த்து அழுத்தமாக அழுத்த.. அவளோ விதிர்விதிர்த்து போக, அவளது கற்றை கூந்தலை இடது புறமாக ஒதுக்கி வலதுபுற காது மடலில் ரகசியம் பேசினான்.
"நாம வாழ ஆரம்பிச்சு ஆறு மாசத்துக்கு மேல ஆகுது ஹனி.. என்ன அன்னைக்கு எனக்கு விவரம் போதல போல.. இல்லேன்னா இப்போ அழகான குட்டிப் தொப்பை உள்ள வயிறு என் குழந்தையை சுமந்துகிட்டு பெருசா இருந்திருக்கும்!" என்று இடது கையால் அவளது வயிற்றை மெல்ல தடவியபடி பேசினான்.
"ஜெர்ரி.. நோ.. இப்படி எல்லாம் பேசாதே!!" என்று திக்கித் திணறி வெளிவந்தது அவளது வார்த்தைகள்.
"வேற எப்படி பேச?" என்றவளின் வார்த்தைகள் கிறக்கமாக வந்து அவளது காது மடலை கவ்வி பிடித்தது.
"ஸ்ஸ்ஸ்.. விடு ஜெர்ரி.. ப்ளீஸ்!!" என்றாள் இதுவரை யாரிடமும் கெஞ்சாத தாமரை.
"நோ ஹனி.. இப்படி எல்லாம் என்கிட்ட நீ கெஞ்சாதே..கொஞ்சி சொன்னாலே இந்த ஜெர்ரி கேட்டுக் கொள்வான். ரொம்ப நல்ல பிள்ளை அவன்!" என்று அவனது உதடுகள் அவளது பின்பக்க கழுத்தில் உரசியபடியே ஊர்வலம் போனது.
சட்டென்று அவளது வலது கையை வேகமாக கதவில் தட்ட கையை உயர்த்த.. அவளது கரத்தோடு அவனது கரத்தை கோர்த்து விரல்கள் பின்னிப் பிணைய அந்தக் கதவில் வைத்து நெருக்கியவன், "அப்பவே சொன்னேன்ல என்கிட்டே இருந்து நீ தப்ப முடியாதுனு இப்பவும் எப்பவும்! இந்த ஜெர்ரி ஓட டாம் நீதான் குறுக்கே இடையில எத்தனை மகேஷ் வந்தாலும். ஒன்னும் நடக்காது!" என்ற அவனின் குரலில் முதுகு தண்டு சில்லிட்டது பெண்ணுக்கு.
'இதை கண்டிப்பாக வளரவிடக்கூடாது இவனிடம் சொல்லி புரிய வைத்து ஆக வேண்டுமென்று சட்டென்று திரும்பியவள் இதழ் அவனது நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்தது.
அவள் உதட்டில் போட்டிருந்த மெல்லிய செர்ரி நிற லிப்ஸ்டிக் அழுத்தமாக அவனது வெண்ணிற சட்டையில் பதிந்து காதல் தடயத்தை ஏற்படுத்தியது. அப்போது அவள் அதை கவனிக்கவில்லை. இவனும் அதை கவனிக்காமல் "ஜஸ்ட் மிஸ்!!" என்று இருபக்கமும் தலையை ஆட்டி சிரித்தான்.
"என்னது ஜஸ்ட் மிஸ்ஸா?" என்று நிமிர்ந்தவளை பார்த்து தன் உதடுகளை நாவினால் ஏற்படுத்தி காட்டி "இங்கே விழ வேண்டிய இதில் முத்தம், மொத்தமா அங்கே போயிடுச்சு! சோ சேட்.." என்று வருத்தப்பட்டான்.
"ச்சீ.. மனுஷி பேசுவாளா உன்கிட்ட?" என்று அவள் வேகமாக கதவை திறக்கும் முன், அவளது இடது கையை பிடித்தவன் "நீ எவ்வளவு தூரம் என்னை விட்டு தூரமாக வேகமாக போக நினைக்கிறியோ? அதே அளவு வேகத்தோடு உன்னை நெருங்கி வருவேன். டூ யூ க்நோ நியூட்டன்ஸ் தேர்ட் லா!!" என்று கண்ணடித்து சிரித்தவன் அவள் கைகளை விட்டுவிட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.
"ப்ளீஸ் பீ ஷீட்டட் மிஸ் தாமரைச்செல்வி!!" என்றான் அவனது அழுத்தமான குரலில்..
இப்படி அதற்குள் தன்னை நிதானித்து முகத்தை மாற்றிக் கொள்கிறான் நம்மால் முடியவில்லையே என்று அவனைக் கடிந்த படி எதிரே போய் அமர்ந்தாள்.
இவள் அமர்ந்த அடுத்த இரு நிமிடங்களில் அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு மேலும் சிலர் உள்ளே வர, அனைவரையும் அங்கிருந்த வட்ட மேசையின் பின் அமர சொன்னான். அதன் பிறகு அவனது அறையின் ஓரத்தில் இருந்த வெள்ளை நிற போர்ட்டை நோக்கிச் சென்றான்.
"வெல்கம் கைய்ஸ்!!" என்ற அவனது கம்பீரமான குரலை கேட்டவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இதுவரை அவளிடம் பழகிய அந்த இலகுவான எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் அந்த ஜெர்ரி இவன் இல்லை என்று அவனது தோற்றத்திலும் கம்பீரத்திலும் நடை உடை பாவனைகளில் தெரிந்தது.
"ஐ அம் ஜெர்ரி ஜோன்ஸ்.. ஒரு புது ப்ராஜெக்ட்க்காகத்தான் இந்தியா வந்திருக்கேன்!" என்றவளின் கண்கள் தாமரையை தொட்டு மீண்டது
அவனது பிராஜெக்ட் எதுவென்று சொல்லாமல் சொல்லியது.
"வெல்.. இந்த ப்ராஜக்ட் ஒரு பினான்சியல் கம்பெனிக்காக செய்து கொடுக்கிறது. இதுக்கும் மேன்பவர் நிறைய தேவைப்படும். கூடவே கடின உழைப்பும் அதிக அறிவுத் திறனும் தேவை என்ற காரணத்தினால் தான் நான் இந்த ப்ராஜெக்ட்டுக்கு இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தது!!" என்றவன் பேசி முடிக்கையில் அங்கு பலத்த கரகோஷம்.
"இந்த மாதிரியான பாராட்டை இந்த
ப்ராஜெக்ட் முடிந்தவுடன் உங்களுக்கு இந்த கம்பெனி சிஇஓ சொல்லனும்! என்ன கைய்ஸ் சொல்ல வைப்போமா?" என்று அவன் கேட்ட அனைவரும் உற்சாகத்துடன் கை அசைத்தனர்.
"இதுவரை நீங்க இருந்த பொசிஷன் கிரேட் எல்லாம் மாறி இங்க வந்திருக்கீங்க இல்லையா? நாலு டிஎல்.. ஒவ்வொரு டில் கீழே மூணு சீனியர் கிரேட் ஆபீசர்ஸ் அவங்க கீழ ரெண்டு ஜூனியர் இருப்பாங்க.. சோ மொத்தமா 40 பேர் கொண்ட டீம் இது. அதாவது இது முதல் கட்டம் மட்டுமே அடுத்தடுத்த கட்டம் ப்ராஜெக்ட்ல நியூ மெம்பர்ஸ் அட் ஆவாங்க. நீங்க முடித்ததை அவங்க கண்டினு பண்ணுவாங்க. இது மாதிரி இது மூன்று கட்டமாக நடக்கும். சோ முதல் கட்டம் இந்தியாவில் அடுத்த கட்டம் மேப் இன் இந்திய ஆர் எல்ஸ் வேர் இன் தி வேர்ல்டு.. ஆனா உங்க மூலமாவே இந்த ப்ராஜக்ட் பண்ணனும்னு ஆசைப்படுறேன். பார்க்கலாம் உங்களுடைய சப்போர்ட் அண்ட் டேலண்டை!" என்று அவன் கூற அனைவரும் சூர் சார் என்று உற்சாகமாய் கத்தினர்.
அந்த நாலு டீம் லீடர் ஒருவரின் கீழ் உள்ள சீனியர் கிரேடில் தான் தாமரைச்செல்வி இப்பொழுது பணிபுரிய இங்கே வந்து இருக்கிறாள்.
அதன்பின் ப்ராஜெக்ட் பற்றி அவன் பேச பேச அனைவரும் அதில் ஆழ்ந்து போயினர். "அவ்வப்போது இதுபோல மீட்டிங் நடக்கும். இப்பொழுது போகலாம்!" என்று அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு அவன் தன் இருக்கைக்கு வர ஒவ்வொரு டிஎல்லும் அவர்களது குரூப்பை தனித்தனியாக அழைத்து சென்றனர். தாமரையின் டிஎல் குரு.
வேலை என்று வந்தால் வெள்ளைக்காரி தான் நம் தாமரை! அதுவரை அவன் செய்த அணைத்து சில்மிஷங்கள் கில்மிஷங்கள் எல்லாம் மறந்துபோய் ப்ராஜெக்ட் கோடு என்று அதிலேயே மூழ்கிவிட்டாள் அவள்!
ஏற்கனவே இவழ் சென்னை அலுவலகத்திற்கு வந்த போது ஒருநாள் அனைவருக்கும் முன்பாக உலகளாவிய அளவில் நடந்த ப்ராஜெக்ட் போட்டியில் இவள் முதலிடம் வந்ததை அறிவித்து ஒரு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தனர் அலுவலகத்தினர்! அதனால் குருவுக்கு தாமரை தன் டீமில் இருப்பது அவ்வளவு ஒரு பெருமிதம்!
ஒரேடியாக அவளை பயமுறுத்த எண்ணாமல் சிறிது சிறிதாக விட்டு பிடித்தான் ஜெர்ரி. அதாவது அவள் ஜெர்ரி தன்னை கண்டு கொள்ளவில்லை என்று நினைக்கும் நேரத்தில் சட்டென்று எங்கிருந்தாவது வந்து அவள் முன் பிரசன்னமாகி இதழ்களையும் கன்னங்களையும் கொய்த்துவிட்டு சென்று விடுவான் மாறன் அவன்!!
இவளோ அதிர்ந்து சிலை என்ன சமைந்து நிற்கும் நேரங்களில் ஒற்றைக்கண் அடித்தலும் ஒற்றை புருவம் உயர்த்தலும் அவளை இன்னும் பலவீனப்படுத்தும்!!
அடுத்தநாள் இவனா காதலில் கரைந்து உருகி இதழ்களை எல்லாம் கடித்து வைத்தான் என்று கேட்கும் அளவுக்கு வொர்க் ஹாலிக்காக மாறி அவர்கள் டீமையே போட்டு படுத்தி வைப்பான்.
சான்பிரான்ஸ்கோவில் சாதாரணமாக அவனை சமாளித்தவளால், இன்று சென்னையில் அதுவும் அவளது ஊரில் அவனை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கினாள்.
அன்று அவர்கள் டீமாக அமர்ந்து உண்டு கொண்டிருக்கும் போது "ஹேய் தாமரை! சான்பிரான்சிஸ்கோவில் நடந்த ப்ராஜெக்ட் நீ வின் பண்ண தானே.. நம்ம ஹெட் ஜெர்ரி கூட அந்த ப்ராஜெக்ட் இருந்ததா சொல்றாங்க? ஆனா இவரு இப்போ டைரக்டர் ஆஃப் தே ப்ராஜெக்ட் ஆல்சோ சீனியர் மேனேஜர். எப்படி அந்த டீம்ல அவர் வந்திருக்க முடியும்?" என்று நிஷா கேள்வி கேட்க, அப்போது தான் கோமாவில் இருந்து விழித்ததைப்போலவே விழித்தாள் தாமரை.
" அட ஆமாம்ல!! இதை எப்படி நான் மறந்தேன்? இல்லை இல்லை இவன் மறக்க வைத்திருக்கிறான்!" என்று அதற்கும் அவனையே சாடினாள்.
ஆனால் உண்மையில் இவனைப் பற்றி நினைக்க பயந்து அதையெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை இவன் வந்த நாட்களில் இருந்து!!
"உன்னை பார்க்கும் போது இருக்குடா ஜெர்ரி உனக்கு?" என்று மனதில் அவனைக் கரித்துக்கொண்டே உணவே விழுங்கியவளுக்கு, அதிக நேரம் காக்க வைக்காமல் மாலையில் அவள் முன் தரிசனம் கொடுத்தான் இந்த மாயக்கண்ணன்!!
"உன்னைத்தான் பாக்கணும்னு தேடிக்கிட்டே இருந்தேன்!" என்றாள் ஜெர்ரியை பார்த்து அவர்களது வீட்டு லிப்டில் ஏறும் பொழுது..
"ஆகா.. முன்னாடியே தெரியாம போச்சே ஹனி எனக்கு!" என்று விழிகளில் ஆர்வத்தை தேக்கி அவள் கிட்டே நெருங்க..
"கீப் டிஸ்டன்ஸ் மேன்!!" என்று ஒற்றை விரலால் அவன் பரந்து விரிந்த மார்பு தன்னை நெருங்கி விடாமல் தடுத்தாள்.
அவன் கீழ்நோக்கி அவளது விரலையும் அவளையும் பார்த்து மோகனமாய் சிரித்தவன், "பெரிய தடைதான்!!" என்று சிரித்துக் கொண்டான். அவனது தனது ஒற்றை விரலால் அவளது விரலை தட்டிவிட்டு சிறிதும் அசையாமல் அதே இடத்தில் நின்று கைகளால் அவளை இருபுறமும் சிறைபிடித்து "என்ன விஷயம் ஹனி!" என்று கேட்டான்.
இவ்வளவு அருகில் அவளைப் பார்த்தால் எங்கனம் பெண்ணிற்கு பேச்சு வரும்?
அவனது ஆண்மை வாசமும்..
அகற்றா பார்வை கணமும்..
அகன்ற மார்பின் தீரமும்..
விரிந்த கைகளின் வசமும்..
விழிகளின் எல்லையில்லா காதலும்..
அதனையும் தாண்டிய மோகமும்..
மீசையின் அடியில் குறுஞ்சிரிப்பும்..
வன் இதழ்களின் தாபமும்..
லயம் தப்பி துடிக்க வைத்தது தாமரையின் இதயத்தை!!
நீள நயனங்களை கொஞ்சமும் சிமிட்டாமல் அவனை பார்த்தாள் கோதை!!
அவனோ ஒற்றை விரலால் அவளது பிறை நுதலில் இருந்து மெல்ல கோடு இழுத்தான்.
கூர் மூக்கு அதை அளந்து சற்று கீழே இறங்கி..
துடிக்கும் செர்ரி இதழ்களை தடவி இழுத்து விடுத்து..
தாடைகளில் தடையற்று பயணித்து.. சங்கு கழுத்தில் நங்கூரம் இட்டது விரல்!
ஏறி இறங்கிய அவளது தொண்டைக் குழியை ஆசையாக வருடியது அந்த ஒற்றை விரல்!!
அவள் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை விரலால் தொட்டு சுழற்றி விளையாட.. இவளோ அவனை தடுக்க முடியாமல் தவித்தாள். அந்த விளையாட்டில் அவன் விரல்கள் அவளின் கழுத்தின் மென்மையை சோதித்து சோதித்து மீண்டன. மலரில் தேனருந்தும் தேன் சிட்டு போல அவன் இதழ்கள் அவளின் இதழ்களையே இலக்கென சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால் தீணடவில்லை.. தீண்டினால் அடுத்த நிமிடமே முடிந்துவிடுமே தாபம்! ஆனால் இவனோ அலர் அவளின் விரகதாபத்தை ஏற்றிக் கொண்டிருந்தான் உரசி உரசி!! இருவருமே புற உலகை தவிர்த்த நிலையிலிருந்தனர்.
ஜெர்ரிக்கோ அவளைத் தொட்டுத் தழுவி அணைத்து இறுக்கிக் கொள்ள வேண்டும்!!
கூடவே அன்றைய தினம் போல தாமரையின் கொஞ்சலுடன் கூடிய மெல்லிய தொடுகையும் மென் முத்தங்களும் வேண்டும்!!
இடைவிடா அவளின் இன்ப சிணுங்கல்கள் வேண்டும்!!
கரை தாண்டிய மோக தாபங்களில் கரைந்திட வேண்டும்!!
ஆம், இப்படி வேண்டும்கள் பல அவனுக்கு!!
மெல்ல குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசம் முகர்ந்து, காது மடல்களை தீண்டி, பின் சிறு சிறு கடிகளும் முத்தங்களும் வைத்து, கன்னங்களை இதழ்கள் கொண்டு ஆராய்ந்து பின் இச் இச் என்று நச்சென முத்தங்களை பதித்து, அவளது மெல்லிய இதழ்களை பற்றிக் கொண்டான் ஆழமாக.. அவளோ அவன் பிடறி மயிரில் விரல்களோட்டி முதுகு தடவி விரல்களை இறுக்கி கோர்த்தாள்.
நொடிகளோ நிமிடங்களாக கரைந்து கொண்டே இருக்க.. இவ்விருவரும் தங்கள் இதழ்களுக்குள் மற்றொருவர் இதழ்களை புதைத்து கரைந்து கொண்டிருந்தனர்.
அப்போது அடித்த தாமரையின் செல்போனில் நிஜம் உணர்ந்து அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டாள் தாமரை!!
அவளால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை அவனின் தொடுதலை விட.. இவளின் ஒப்புதலை..
எல்லாத்துக்கும் காரணம் இவன்! இவன் மட்டுமே! என்று கொதித்தவள், "இதுக்குதானே இதுக்குத்தானே என் பின்னாடி வந்த நீ.. செக்ஸ் காட்டி என்னை மடக்கலாம்னு தானே.. ச்சீ!!" என்று அவள் மொழிய அடுத்த நிமிடம் "ஏய்ய்!!!" என்று பலத்த உறுமலுடன் அவளை அடிக்க கை ஓங்கியவன் அந்த அடியை லிப்ட் கதவில் அடைத்தான்.
அதுவரை அவன் அணைத்து வைத்திருந்த லிப்ட் விசையை விடுவித்து விடுவிடுவென்று அதில் இறங்கி சென்று விட்டான்.
தாமரையோ லிப்ட் என்றும் பாராமல் அப்படியே மடங்கி அமர்ந்து அழுதாள் முகம் மூடி...
