அத்தியாயம் 6
அனன்யாவின் அறை
கைப்பேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அனன்யா.
முந்தைய இரவு வந்த அந்தச் செய்தி அவளுடைய மனதை நிம்மதியாக இருக்க விடவில்லை.
“ஆதித்யா உன்னிடம் ஒரு முக்கியமான உண்மையை மறைக்கிறான். பழைய நிறுவனக் கட்டிடத்திற்கு வா. அங்கே உனக்கான பதில் கிடைக்கும்.”
‘ஆதித்யா என்னிடம் எதை மறைக்கிறார்?’
அவளுக்குள் கேள்விகள் அதிகரித்தன.
ஒருபுறம், அவனுடைய அக்கறையும் அவளுக்கு உதவ முன்வந்த விதமும் நினைவுக்கு வந்தன.
மறுபுறம், தன்னுடைய அப்பா அவனைப் பற்றிச் சொன்ன எச்சரிக்கையும் மனதில் தோன்றியது.
“அனு!”
அம்மாவின் குரல் அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது.
“என்னம்மா?”
“காலையிலிருந்து கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருக்கிறாய். என்ன பிரச்சினை?”
“ஒன்றுமில்லைம்மா. அலுவலகத்தில் ஒரு வேலை இருக்கிறது.”
அம்மா அவளைச் சந்தேகத்துடன் பார்த்தார்.
“எதுவாக இருந்தாலும் கவனமாக இரு, அனு.”
அனன்யா தலையசைத்தாள்.
ஆனால் அவள் மனதிற்குள் ஒரு முடிவை எடுத்துவிட்டாள்.
பழைய கட்டிடத்திற்குச் சென்று உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
---
அலுவலகம்
“குட் மார்னிங் , அனன்யா!”
பிரியா அவளுடைய டேபிள் அருகில் வந்தாள்.
“என்னடி, முகம் ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறது?”
“பிரியா, உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.”
அனன்யா அந்தச் செய்தியைக் காட்டினாள்.
பிரியா அதைப் படித்ததும் அதிர்ச்சியடைந்தாள்.
“என்னடி இது? யாரோ உன்னைத் தனியாக வரச் சொல்கிறார்கள். நீ எப்படி அங்கே போகலாம்?”
“எனக்கு உண்மை தெரிய வேண்டும்.”
“அதற்காகத் தெரியாத இடத்திற்குத் தனியாகப் போக வேண்டுமா? ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வாய்?”
அனன்யா அமைதியாக இருந்தாள்.
பிரியா அவளுடைய கையைப் பிடித்தாள்.
“பார், அனு. நீ போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், குறைந்தபட்சம் நீ இருக்கும் இடத்தை எனக்குத் தெரியப்படுத்து. தெரியாதவர்களைத் தனியாகச் சந்திக்காதே.”
“சரி.”
“ஆதித்யாவிடம் சொல்லலாமே?”
“வேண்டாம். முதலில் என்ன உண்மை என்று தெரிந்துகொள்கிறேன்.”
பிரியா பெருமூச்சு விட்டாள்.
“நீ எப்போதும் உன் மனம் சொல்வதைத்தான் செய்வாய்!”
அனன்யா சிரிக்க முயன்றாள்.
“அதனால்தான் உன்னைப் போன்ற தோழி எனக்குத் தேவை!”
---
பழைய நிறுவனக் கட்டிடம்
சென்னையின் ஓரத்தில் இருந்த அந்தப் பழைய கட்டிடம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
அனன்யா வாசலில் நின்று சுற்றிலும் பார்த்தாள்.
‘இங்கே யாருமே இல்லையே!’
அவள் போனே எடுத்தாள்.
“நான் வந்துவிட்டேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று அந்த எண்ணுக்குச் செய்தி அனுப்பினாள்.
பதில் இல்லை.
மீண்டும் அழைத்தாள்.
அந்த எண் அணைக்கப்பட்டிருந்தது.
“ச்சே! யாரோ என்னை ஏமாற்றிவிட்டார்களா?”
திரும்பிச் செல்ல நினைத்த நேரத்தில், கட்டிடத்தின் உள்ளிருந்து ஒரு சத்தம் கேட்டது.
“யாராவது இருக்கிறீர்களா?”
அனன்யா தயங்கினாள்.
பிறகு மெதுவாக உள்ளே நடந்தாள்.
அங்கே பழைய டேபிள் , உடைந்த நாற்காலிகள், தூசி படிந்த ஃபைல்களை என அனைத்தும் சிதறிக் கிடந்தன.
ஒரு மேசையின் மீது மட்டும் பழைய ஃபைல்களை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதன் மேல் எழுதப்பட்டிருந்த பெயரைப் பார்த்ததும் அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது.
“ரவி — இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டின் பிசினஸ் அக்ரீமெண்ட் ”
“இது… அப்பாவோட பெயர்!”
அவள் ஃபைல்களைத் திறந்தாள்.
அதற்குள் சில பழைய பிசினஸ் அக்ரீமெண்ட் ஒரு புகைப்படமும் இருந்தன.
புகைப்படத்தில் அவளுடைய அப்பாவும் ஆதித்யாவின் அப்பாவும் கடுமையாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.
அதன் பின்னால் ஒரு வரி எழுதப்பட்டிருந்தது.
“இந்த ஒப்பந்தம் முறிந்தால், இரண்டு குடும்பங்களும் பாதிக்கப்படும்.”
அனன்யாவின் கைகள் நடுங்கின.
அவள் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.
அதில் சில தொகைகளும் கையெழுத்துகளும் இருந்தன.
ஆனால் கடைசிப் பக்கம் மட்டும் காணவில்லை.
“மீதிப் பக்கம் எங்கே?”
அவள் ஃபைல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.
அனன்யா திரும்பினாள்.
“யாரு?”
ஒரு நபர் இருளிலிருந்து வெளியே வந்தார்.
அவருடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை.
“நீ ரவியோட பொண்ணுதானே?”
அனன்யா அதிர்ச்சியடைந்தாள்.
“ஆமாம். நீங்க யாரு?”
அவர் அவளுடைய கையிலிருந்த ஃபைல்களைப் பார்த்தார்.
“அந்த ஆவணங்களை நீ பார்க்கக் கூடாது.”
“ஏன்? இதில் என்ன இருக்கிறது?”
“அதைத் தெரிந்துகொள்ள உனக்கு உரிமை இல்லை.”
அனன்யா ஃபைல்களை இறுகப் பிடித்தாள்.
“இது என் அப்பாவைப் பற்றியது. எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்!”
அந்த நபர் அவளை நோக்கி வந்தார்.
அனன்யா பயந்து பின்னால் நகர்ந்தாள்.
அப்போது வெளியே ஒரு மகிழுந்து வேகமாக வந்து நின்றது.
“அனன்யா!”
அந்தக் குரலைக் கேட்டதும் அவள் திரும்பினாள்.
ஆதித்யா!
---
எதிர்பாராத சந்திப்பு
ஆதித்யா வேகமாக உள்ளே வந்தான்.
அனன்யாவுக்கும் அந்த மர்மமான நபருக்கும் இடையில் நின்றான்.
“யாரு நீங்க? இங்கே என்ன பண்றீங்க?”
அந்த நபர் ஒரு கணம் தயங்கினார்.
பிறகு அனன்யாவின் கையிலிருந்த ஃபைல்களைப் பிடுங்க முயன்றார்.
ஆதித்யா அவரைத் தடுத்தான்.
“கையை எடுங்க!”
சில நொடிகள் இருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த நபர் திடீரென்று ஆதித்யாவைத் தள்ளிவிட்டு வெளியே ஓடினார்.
ஆதித்யா அவரைப் பின்தொடர முயன்றான்.
ஆனால் அனன்யாவின் நடுங்கும் குரல் அவனை நிறுத்தியது.
"சார் …”
அவன் உடனே அவளை நோக்கித் திரும்பினான்.
“அனன்யா, உங்களுக்கு ஏதாவது ஆச்சா?”
அவள் தலையசைத்தாள்.
“இல்லை…”
“நீங்க இங்கே எதுக்காக வந்தீங்க?”
அவள் அமைதியாக இருந்தாள்.
அவன் மீண்டும் கேட்டான்.
“இந்த இடத்தைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?”
அவள் தன்னுடைய கைப்பேசியை எடுத்துக் காட்டினாள்.
“யாரோ எனக்குச் செய்தி அனுப்பினாங்க.”
ஆதித்யாவின் முகம் மாறியது.
“என்ன செய்தி?”
அவள் நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.
அவன் கோபமாகத் தலையைப் பிடித்துக்கொண்டான்.
“அனன்யா! தெரியாத நபர் அனுப்பிய செய்தியை நம்பி இப்படித் தனியாக வந்திருக்கீங்களா?”
அவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டது.
“எனக்கு உண்மை தெரியணும், சார் !”
“அதற்காக உங்க பாதுகாப்பைப் பற்றி யோசிக்க மாட்டீங்களா?”
“நீங்க எப்போதும் என்னிடம் ஏதோ மறைக்கிறீங்க! நான் வேற என்னதான் செய்யணும்?”
ஆதித்யா அமைதியாக அவளைப் பார்த்தான்.
அவளுடைய குரலில் இருந்த கோபத்தைவிட, அவள் தன்னிடம் வைத்திருந்த நம்பிக்கை உடைந்துவிடுமோ என்ற பயம்தான் அவனுக்குத் தெரிந்தது.
அவன் மெதுவாகக் கேட்டான்.
“அனன்யா… நீ என்னை நம்பலையா?”
அவள் பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.
சில நொடிகளுக்குப் பிறகு அவள் சொன்னாள்.
“நம்பணும்னுதான் நினைக்கிறேன். ஆனா எல்லாரும் ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறாங்க. யாரை நம்புறதுன்னே எனக்குத் தெரியல.”
ஆதித்யாவின் கோபம் முழுவதும் மறைந்தது.
அவன் அவளருகில் வந்தான்.
“என்னைப் பாருங்க, அனன்யா.”
அவள் மெதுவாகத் தலை நிமிர்ந்தாள்.
“உங்க அப்பா குற்றவாளின்னு நான் ஒருநாளும் நினைக்கல. உண்மை என்னன்னு தெரியாமல் அவரைப் பற்றி யாரும் தப்பாகப் பேசுவதையும் நான் அனுமதிக்க மாட்டேன்.”
அவளுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ஆனா நீங்க என்னிடம் எதையும் மறைக்க மாட்டேன்னு சொன்னீங்க…”
“நான் சொன்னது உண்மைதான். எனக்குத் தெரிந்ததை எல்லாம் உங்களிடம் சொல்வேன். எனக்கே தெரியாத விஷயங்களை எப்படி மறைக்க முடியும்?”
அனன்யா அமைதியாக அவனைப் பார்த்தாள்.
ஆதித்யா தன்னுடைய ஹக்கீரசிஎப் அவளிடம் நீட்டினான்.
“முதலில் இந்த இடத்திலிருந்து போகலாம். பிறகு நிதானமாகப் பேசலாம்.”
அவள் ஹக்கீரசிஎப் வாங்கிக்கொண்டாள்.
இருவரும் வெளியே நடந்தார்கள்.
அவளுக்காக மகிழுந்தின் கதவைத் திறந்த ஆதித்யா, அவள் அமர்ந்ததும் கதவை மூடினான்.
அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்வதற்கு முன் அவளைப் பார்த்தான்.
“இன்னொரு முறை இப்படித் தனியாக வரக்கூடாது. சரியா?”
அனன்யா மெதுவாகத் தலையசைத்தாள்.
“சரி.”
அவன் புன்னகைத்தான்.
அவளும் தெரியாமல் புன்னகைத்தாள்.
அந்தச் சிறிய புன்னகையைப் பார்த்த ஆதித்யாவின் மனதில் ஒரு புதிய உணர்வு தோன்றியது.
‘இவளை எதுவும் காயப்படுத்தக் கூடாது…’
---
மகிழுந்துக்குள்
மகிழுந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது.
சில நிமிடங்கள் இருவரும் பேசவில்லை.
பிறகு அனன்யா கேட்டாள்.
“சார் … நீங்க அங்கே எப்படி வந்தீங்க?”
ஆதித்யா அவளைப் பார்த்தான்.
“நீங்க அலுவலகத்தில் ரொம்பக் கவலையாக இருந்தீங்க. பிரியாவிடம் பேசும்போது அந்தப் பழைய கட்டிடத்தைப் பற்றிச் சொன்னதைத் தற்செயலாகக் கேட்டேன். உங்களைப் பற்றி கவலையாக இருந்தது. அதனால வந்தேன்.”
அனன்யா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“அப்போ… நீங்க என்னைப் பின்தொடர்ந்தீங்களா?”
“உங்க பாதுகாப்புக்காக வந்தேன்.”
அவள் சில நொடிகள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“தேங்க்ஸ், சார் .”
“எத்தனை தடவை தாங்கியூ சொல்வீங்க?”
“எனக்காக இவ்வளவு பண்றீங்களே…”
ஆதித்யா சிரித்தான்.
“நீங்க என் குழுவில் வேலை செய்றீங்க. உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் என் பொறுப்புதான்.”
அனன்யா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
‘வேலைக்காக மட்டும்தானா?’
அவளுக்கே அந்தக் கேள்வி ஏன் தோன்றியது என்று புரியவில்லை.
---
அலுவலகம்
விக்ரம் அந்தப் பழைய ஃபைல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆதி, இந்த டாக்குமெண்ட் எல்லாம் முக்கியமானவை. ஆனா கடைசிப் பக்கம் இல்லை.”
“அதுதான் பிரச்சினை.”
“அந்த ஆள் யாருன்னு தெரியுமா?”
“முகம் சரியாகத் தெரியல. ஆனா அவன் அந்த டாக்குமெண்ட்ப் பற்றி நன்றாகத் தெரிந்தவன்.”
விக்ரம் சில நொடிகள் யோசித்தான்.
“டேய், இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டில் இந்த அக்ரீமெண்ட் சம்பந்தமாக வேலை பார்த்தவர் ஒருத்தர் இருந்தார். பெயர் சேகர். அவர் இப்போ எங்கே இருக்கார்னு தெரியல.”
ஆதித்யா உடனே நிமிர்ந்தான்.
“சேகரா?”
“ஆமாம். அவரைக் கண்டுபிடிச்சா ஏதாவது தகவல் கிடைக்கலாம்.”
ஆதித்யா அந்தப் பெயரைத் தன்னுடைய நோட்பேபட் எழுதினான்.
“சரி. அவரைப் பற்றி விசாரி. யாருக்கும் தெரியாமல்.”
விக்ரம் தலையசைத்தான்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் தெரியாது…
அந்த உரையாடலை அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் உடனே தன்னுடைய போன் எடுத்தார்.
“சார் … ஆதித்யா சேகரைப் பற்றி விசாரிக்க ஆரம்பிச்சிட்டார்.”
மறுமுனையில் இருந்தவர் கோபமாகப் பதிலளித்தார்.
“அவனுக்கு முன்னாடி சேகரைக் கண்டுபிடி!”
---
அனன்யாவின் வீடு
வீட்டிற்குச் சென்ற அனன்யா தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தாள்.
அன்றைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தாள்.
ஆதித்யா அவளுக்காக அங்கே வந்தது…
அவள் பாதுகாப்பாக இருக்கிறாளா என்று கேட்டது…
அவளை நம்பச் சொன்னது…
அவளுடைய மனதில் அவனைப் பற்றிய எண்ணங்கள் மாறிக்கொண்டிருந்தன.
அப்போது போன் ஒலித்தது.
ஆதித்யாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
“வீட்டுக்குப் பாதுகாப்பாகப் போயிட்டீங்களா?”
அனன்யா சிரித்துக்கொண்டே பதில் அனுப்பினாள்.
“ஆமாம், சார். தேங்க்ஸ் .”
உடனே இன்னொரு செய்தி வந்தது.
“நாளைக்கு அலுவலகத்திற்கு தாமதமாக வராதீங்க. முக்கியமான மீட்டிங் இருக்கு.”
அனன்யா கண்களைச் சுழற்றினாள்.
“அடப்பாவி! காதலாக ஒரு செய்தி அனுப்புவார்னு பார்த்தா, மறுபடியும் வேலை!”
அவள் சிரித்துக்கொண்டே போனை வைத்தாள்.
ஆனால் அடுத்த கணம் மீண்டும் ஒரு மெசேஜ் வந்தது.
“கவனமாக இருங்கள், அனன்யா. இனிய இரவு.”
அவளுடைய முகத்தில் மென்மையான புன்னகை மலர்ந்தது.
“இனிய இரவு, ஆதித்யா சார் …”
அவள் அந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டே உறங்கச் சென்றாள்.
---
மர்மமான அறை
ஒரு இருண்ட அறையில் தொலைபேசி ஒலித்தது.
“சேகர் எங்கே இருக்கார்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?”
“இல்லை, சார் . ஆனா ஆதித்யா அவரைத் தேட ஆரம்பிச்சிட்டார்.
”
சில நொடிகள் அமைதி நிலவியது.
“அப்படின்னா நமக்கு நேரம் குறைஞ்சுடுச்சு.”
“அடுத்தது என்ன செய்யணும்?”
அந்த நபர் டேபிள் இருந்த ஒரு பழைய டாக்குமெண்ட்த் திறந்தார்.
அதில் இரண்டு கையெழுத்துகள் இருந்தன.
ஒன்று ரவியுடையது.
மற்றொன்று ஆதித்யாவின் தந்தையுடையது.
அந்த நபர் மெதுவாகச் சிரித்தார்.
“அந்த டாக்குமெண்ட் வெளியில் வந்தால், ஆதித்யாவே அனன்யாவை நம்ப மாட்டான்.”
அவர் டாக்குமெண்ட் மூடினார்.
“இப்போ விளையாட்டு ஆரம்பிக்கட்டும்!”
தொடரும்… ❤️
