Share:
Notifications
Clear all

காமன் 35

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 288
Thread starter  

35

 

 

 

மூவரையும் சற்று தள்ளி நின்று பார்த்திருந்த சுலோச்சனா லோகநாதனுக்கு நிம்மதியாக இருந்தது.‌!

 

 

 

அதன் பின் ராகவ்வை அழைத்து “அக்கா எங்கேயும் போகல.. அதுவும் உனக்கு இன்னொரு தாத்தா வீடு தான்” என்று லோகநாதன் அறிவுரைகள் கூற அதன் பின் சற்றே தெளிந்திருந்தான் அவன்.

 

 

 

“மாலை போல பெண் அழைக்க வந்து விடுவாங்க சிற்பி. உனக்கு தேவையானதெல்லாம் இப்போதைக்கு கொஞ்சம் பேக் பண்ணி வச்சுக்கோ.. மஹி நீ அக்காவுக்கு ஹெல்ப் பண்ணு” என்று சுலோச்சனா கூற தலையசைத்தவள்,

 

 

 

பின் ரதியோடு வால் பிடித்தே திரிந்தாள் மஹிமா.

 

 

 

பேசினாள்.. பேசினாள்.. பேசிக் கொண்டே தான் இருந்தாள்..!

 

 

 

ரதி அவளுக்கு தேவையானதை அடுக்கும் பொழுதும்.. அதற்கு பின் அவளுக்கு பார்லர் ஆட்கள் வந்து அலங்காரம் செய்யும் பொழுதும்.. இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருந்தது மஹிமாவின் குரல்..

 

 

 

மஹிமாவின் பேச்சிலிருந்து ரதி அறிந்துக் கொண்டது அவளுக்கு அவளது குடும்பத்தின் மீது பற்று பாசம் அதிகம் என்று..!

 

 

 

நாத்தனார் முறை உள்ளவர்கள் தான் வந்து பெண்ணை அழைக்க வேண்டும்.. சுலோச்சனாவே பெண்ணின் தாயாக இருக்க ஒன்று விட்ட உறவுகளில் இருந்து பெண் அழைக்க வந்திருந்தனர். கூடவே ரத்னவேலும் பார்கவியும்.

 

 

 

தனியாக மண்டபம் எல்லாம் பார்க்கவில்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் இவர்களுக்கு சொந்தமான பெரிய திடலில் தான் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் ஈவன்ட் ஆட்கள் மூலம் நடந்துக் கொண்டிருந்தது.

 

 

 

முதல் நாள் இரவு வடக்கு பழக்க வழக்கங்கள் என மெஹந்தி சங்கீத் ஆடல் பாடல் போன்றவற்றை எல்லாம் தவிர்த்து,

 

 

 

தங்கள் குடும்ப வழக்கப்படி இரு குடும்பங்களும் அமர்ந்து தங்களுக்குள் சம்பந்தம் கலந்து நிச்சயதார்த்த ஓலை வாசித்து சம்பந்த கலப்பு செய்துக் கொண்டனர்.

 

 

 

மாப்பிள்ளைக்கு பெண் வீட்டாரும்.. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டாரும் புது துணிகள் கொடுத்து அணிந்து வர சொல்லி அனைவருக்கும் முன் ஆசீர்வாதம் வாங்க.. அதன் பின் விருந்து உபச்சாரம் முடிந்தது.

 

 

 

பெண் வீட்டார் தங்க என்று அருகில் வேறு ஒரு வீட்டில் ஏற்பாடு செய்திருக்க.. அங்கே தான் வீரராகவன் குடும்பம் அவர்களின் உறவினர்கள் அங்காளி பங்காளிகள் எல்லாம் தங்கி இருந்தனர்.

 

 

 

தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று சிகரெட்டை ஊதி தள்ளிக் கொண்டே இருந்த கதிர்காமனுக்கு ஒரு யோசனையும் பிடிபடவில்லை என்ன செய்து கல்யாணத்தை நிறுத்துவது என்று..!

 

 

 

இரு குடும்பமும் இந்த பகுதியில் பெயர் பெற்றது.. குடும்பத்துக்கு இழுக்கு நேராமலும் இருக்க வேண்டும். அதே சமயம் தனக்கும் ரதிக்கும் இருக்கும் பழக்கத்தை கூறாமலும் காரியத்தை சாதிக்க வேண்டும்..

 

 

 

என்ன செய்வது? என்ன செய்வது? என்று புரியாமல் தத்தளித்தவனின் முதுகை தட்டினான் தம்பியாகப்பட்டவன்.

 

 

 

“என்ன ப்ரோ ஏதோ பெருசா யோசிச்சுகிட்டே இருக்க?”

 

 

 

‘நமக்கு தான் எந்த யோசனையும் வரமாட்டேங்குது இவன்கிட்ட கேட்போமா?’ என்று அவனது புத்தி யோசிக்க..

 

 

 

‘அடப்பாவி..! கல்யாண மாப்பிள்ளை கிட்டயே அவன் கல்யாணத்தை நிறுத்த யோசனை கேட்கிறியே?' என்று மனசாட்சி அலற.. அதெல்லாம் காதில் வாங்காதவன்,

 

 

 

“ஒன்னும் இல்ல ப்ரோ, ஒரு கிளையன்ட் ஹெல்ப் கேட்கிறாங்க.. அவங்களுக்கு சட்ட ஆலோசகர். கம்பெனி சம்பந்தமா எதுவும் லா பிராப்ளத்தை ஹாண்டில் பண்ணிடுவேன்.. ஆனா.. லவ் பிராப்ளத்துக்கு என்கிட்ட வந்து சஜஷன் கேட்குறாங்க ப்ரோ” என்றதும் தென்னரசுக்கு சுவாரசியம் தொற்றிக் கொள்ள..

 

 

 

“சொல்லு.. சொல்லு.. அப்படி என்ன பிரச்சனையாம்? நீ என்ன ஹெல்ப் பண்ணுமாம்?” என்று ஆர்வமாய் கேட்டவன் அறியவில்லை, அண்ணன் அவனுக்கு தான் ஆப்பு சொருகுகிறான் என்று..!!

 

 

 

“என் கிளைன்ட் அவங்க அத்தை பொண்ண ஒன் சைடு லவ் பண்றாரு.. இப்போ அந்த பொண்ணுக்கு வீட்ல மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. இன்னும் ஒன் வீக்ல மேரேஜ்.. இப்ப எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி இவர் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணுமாம்.. ஆனா ரெண்டு வீட்டுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதாம்.. நீயே சொல்லு இதுக்கு ஒரு சொல்யூஷனை?” என்று கேட்டான்.

 

 

 

“இதெல்லாம் சப்ப மேட்டர் ப்ரோ.. நம்ம கல்யாணம் பையனை தூக்கிடலாம்” என்றதும்,

 

 

 

கதிர்காமன் குடித்துக் கொண்டிருந்து சிகரெட் புகை அவனது நெஞ்சில் ஏற.. இருமியபடி அதிர்ச்சியோடு தம்பியை பார்த்தான் அண்ணன்.

 

 

 

“டேய் தம்பி வளரு டா..! இதெல்லாம் 60 70-லயே வந்துட்டுடா..” என்று கடுப்படித்தான்.

 

 

 

“அப்போ 80 90 ல வந்து ஒரு ஐடியா சொல்லவா? அந்த மாப்பிள்ளைக்கு வேறு ஒரு செட்டப் இருக்குனு சொல்ல சொல்லு..” என்றதும், சிரிப்பு பீறிட்டது கதிர்காமனுக்கு.

 

 

 

ஆனாலும் அடக்கிக் கொண்டு “நெக்ஸ்ட்..!” என்றான் முறைப்பாக...

 

 

 

“ம்ம்.. ஆஹான்..! இது அல்டியா இருக்கும்..! அந்த மாப்பிள்ளைக்கு ஆசூஸ்பெர்மியானு சொல்லு..! இந்த மாதிரி காரணத்தை உலகத்துல எவனும் கண்டுபிடிச்சு இருக்க மாட்டான்”’என்றான் கெத்தாக காலரை தூக்கிவிட்டபடி தென்னரசு.

 

 

 

“ஏதே?” என்று கதிர்காமன் அலற..

 

 

 

“நீ ஏன் டா அண்ணா அலறுற? நான் சொன்னது அந்த மாப்பிள்ளைக்கு தானே? அசூஸ்பெர்மியானா மேல் இன்பெர்டிலைட்டி ஸ்பெர்ம் இருக்காது. மாப்பிள்ளைக்கு அந்த பிரச்சனை இருக்குன்னு சொல்ல சொல்லு.. கல்யாணம் பிரச்சனையே இல்லாமல் ஆனா பிரச்சனையாகி நின்றிடும்” என்று தென்னரசுவை கண்டவனுக்கு ஒன்றுமே சொல்ல முடியாத நிலைமை..!

 

 

 

“இல்ல இது கொஞ்சம் ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு.. வேற ஏதாவது சொல்லேன்..!” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் வைரவேலுவிடமிருந்து தென்னரசுக்கு ஃபோன் வந்தது.

 

 

 

“எங்கடா இருக்க? எங்க இருந்தாலும் உடனே சுலோ வீட்டு ஆளுங்க தங்கி இருக்கிற வீட்டுக்கு வந்து சேரு” என்று அவர் கடித்துக் குதற..

 

 

 

“ஆமா எதுக்கு அப்பா இப்படி வயலன்ஸா கூப்பிடுறாரு.. வா என்னென்னு கேட்கலாம்” என்று அண்ணனோடு தென்னரசு அங்கே செல்ல..

 

 

 

வீரராகவன் குடும்பமும் அவர்கள் உறவினர்களும் தங்கி இருந்த வீடு இரண்டு கட்டு அடுக்கு வீடு. கீழ்கட்டில் உறவுகளுக்கு இருக்க.. முதல் அடுக்கில் தான் வீரராகவன் குடும்பம் இருந்தது.

 

இவர்கள் சென்ற பொழுது அங்கே மொத்தம் குடும்பம் இருந்தது.

 

 

 

“என்ன சம்மன் இல்லாம எல்லோரும் ஆஜராக இருக்கீங்க?” என்று இலகுவாக கேட்டபடியே அவர்களை நெருங்கினான் கதிர்காமன் தென்னரசுவோடு..!

 

 

 

அனைவரும் பார்வையும் சொல்லி வைத்தாற் போல தென்னரசுவை பொசுக்க..

 

 

 

என்ன எது என்று புரியாமல் இவன் அண்ணனை பார்க்க..

 

 

 

“என்னடா சொல்லி இந்த சின்ன புள்ள மனசை கலைச்ச? இப்போ சிற்பி இந்த கல்யாணம் வேணாம். நாளைக்கு முகூர்த்தத்தில் உனக்கும் மஹிமாவுக்கும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லி ஒத்த காலுல நிக்கிறா?” என்று வைரவேல் பொங்கிய கோபத்தோடு மகனை நெருங்க…

 

 

 

 

எதே என்று அதிர்ச்சியில் தென்னரசு..!

 

 

 

எதே என்று ஆச்சரியத்தில் கதிர்காமன்..!

 

 

 

ஆக மொத்தம்.. வார்த்தை ஒன்று தான். ஆனால் எமோஷனல் வேறு..!

 

 

 

தொடரும்...

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top