33
மூன்று ஆண்டுகள் கழித்த நிலையில்...
அரங்கநாதன் லூசி வீடு...
மாடி அறையில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது.
"நோ.. நோ.... ஐ காண்ட்!!" என்ற சிறு பாலகனின் குரலும்..
"டேய்.. தாத்தா சொன்ன பேச்ச கேளு டா.. அவ கேட்குறால" என்று அலுப்போடு அரங்கநாதனின் குரலும்!!
செர்ரி அப்போதுதான் தங்கள் அறையில் இருந்து வந்தான். சான் பிரான்சிஸ்கோவில் அவர்களது ஜாகை இருந்தாலும் அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி படையெடுத்து விடுவான் காரணம் செர்ரி என்பதை விட அவன் பெத்த வாலுகள் தான்!!
செர்ரி அவர்களுக்கு ஒரே குழந்தை என்பதில் அரங்கநாதனுக்கு துளி வருத்தம் கூட கிடையாது. ஆனால் லூசிக்கு தான் அதில் பெரும் வருத்தம்.
அவன் பிறக்கும்போது பல கஷ்டங்களை தாண்டி.. பிழைப்பாரா மாட்டாரா லூசி என்று அரங்காதனை தவிக்க வைத்து உயிரோடு சிதைக்க வைத்து செர்ரி பிறக்க.. அதற்கு பின் வேறு குழந்தை வேண்டாம்.. இவனே போதும் என்று விட்டார் ஒரே குழந்தையோடு... லூசி எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவே இல்லை!!
அவருக்கே தெரியாமல் தானே அரங்கநாதன் சென்று குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டு வந்துவிட.. லூசிக்கு அரங்கநாதனின் மீது கோபம் வரவில்லை.. மாறாக அவரது அன்பில் மெய்யுருகி இன்னும் இன்னும் அவர் மீது பித்தாகிப் போனார்.
அதனால் தாமரையிடம் ஒரு விடுமுறையின் போது அவர்கள் அரங்கநாதன் வீட்டுக்கு வந்திருந்த போது சொல்லிவிட்டார் "எனக்கு வீட்டு நிறைய குழந்தைகள் வேண்டும் டாம்!" என்று!!
உடனே செர்ரி சண்டைக்கு வந்தான் "அது நீங்க செய்திருக்க வேண்டும் மாம். எனக்கும் சிஸ்டர்ஸ் பிரதர்ஸ் இருந்து இருப்பாங்கள.. நானும் உங்களை மாதிரி ஒன்றோடவே நிறுத்தி விடுவேன். என் பொண்டாட்டிக்கும் வலிக்கும் இல்லையா? உங்க வைஃப் மட்டும்தான் செல்லக்கட்டி சக்கரகட்டியா என் வைஃப் இல்லையா?" என்று அவன் தந்தை தாயோடு மல்லுக்கு நிற்க.. தாமரைதான் பயந்து போனாள்.
இதெல்லாம் அவ்வப்போது நடப்பது தான் என்று லூசி கண்டும் காணாமல் சிரிப்போடு நிற்க அரங்கநாதன் தான் "என் பொண்டாட்டி சக்கரகட்டி தான்.. ஆச வெல்லக்கட்டி தான்டா!!" என்று அவர்களுக்கு முன்னரே அவர் காதலோடு மனைவியைப் பார்த்து கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க... விடுவானா இவன்?
ஏற்கனவே எப்போதடா வாய்ப்புகள் கிடைக்கும் வட்டியோடு வசூலித்து விடும் கறார் வட்டிக்காரன் போலவே தாமரையிடம் காதலை வசூலித்துக் கொண்டிருப்பவனுக்கு கண்ணெதிரே பெற்றோரின் காதலை கண்டபின்.. ஹார்மோன்கள் எக்கத்தப்பாக
வழிந்தோட...
தாமரையை அலோக்காக தூக்கி கொண்டு சென்று விட்டான் காதலாட.
வீட்டிலிருந்து சற்று தள்ளி இருக்கும் அருவிக்கு உல்லாசம் குமிழியாட...
அப்போது சலசலவென்று நீர் ஓடும் ஓசையும் ச்ச்சோ என்று நீர் விழும் பெரும் சத்தமும் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தாள். அருகே இருந்த நீர்வீழ்ச்சியை கண்டு வியப்படைந்தாள். நீர்வீழ்ச்சியா? அருவியா? இங்கேயா? பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் இடத்திலிருந்து பார்த்தவளுக்கு மகிழ்ச்சி பொங்க கண்வனை கட்டிக் கொண்டாள். அவளது உணர்வுகளை முழுவதுமாக வெளிப்படுத்த அவள் தயங்கினாலும் அவ்வப்போது வெளிப்படும் இந்த ஒரு சிலவற்றை கெட்டியாக பிடித்துக் கொள்வான் செர்ரி.
அவளோ வெள்ளியை கரைத்து ஊற்றியது போல மேலிருந்து கீழாக கொட்டும் அந்த நீர்வீழ்ச்சியை தான் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்து அவளை இடையோடு இறுக்க அணைத்துக் கொண்டவள் அவள் தோளில் தன் தாடையை பிடித்து.. "பிடிச்சிருக்கா?" என்று அவள் காது உரசி காது மடலை கவ்வி கேட்க..
அதற்கு கிறங்கியவள் "ரொம்ப" என்றாள்.
"எது? நானா? அருவியா?" என்று கேட்க..
"இரண்டுமே" என்றவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
"குளிப்போமா?" என்று அவன் கேட்க..
"இங்கேயா? இப்ப வா?" என்று சுற்றுமுற்றும் அவள் பார்க்க..
"இங்கே நம்மைத் தவிர யாரும் வரமாட்டாங்க.. வா போகலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு சில்லென்று இருக்கும் அந்த நீரில் இறங்கினான்.
நீரின் குளுமை அவளுக்கு வெட வெடக்க தன்னவனை இறுக அணைத்துக் கொண்டாள். "ஃபர்ஸ்ட் கொஞ்ச நேரம் ஜில்லென குளிரதான் செய்யும்.. அப்புறம் போகப் போக குளிர் எல்லாம் போக இதமா சுகமாய் இருக்கும்" என்று அவன் இரட்டை அர்த்தங்களில் பேச.. அவன் எதை குறிப்பிடுகிறான் என்று புரியாதவள் அல்லவே அவள்..
"யூ நாட்டி" என்று அடுத்த நிமிடம் அவனை அந்த தண்ணீருக்குள் அவள் தள்ளிவிட..
தண்ணீரில் ஒரு முக்கு முக்கி எழுந்தவன் அவளை அவளை நோக்கி தண்ணீரை வாரி இறைத்தான் கைகளால்..
அவளோ "நோ.. நோ.." என்று கூறிக்கொண்டே பின்னால் செல்ல..
"அது எப்படி டி என்னை நனைய வச்சுட்டு நீ மட்டும் நனையாமல் இருந்தா நல்லாவா இருக்கும்?" என்றவன் இரண்டே எட்டில் அவளைப் படித்து அவளுடன் அந்த நீரில் நீந்தினான். தாமரைக்கு செர்ரி அளவிற்கு லாவகமாக நீந்த எல்லாம் வராது. ஏதோ மூழ்காமல் தப்பிப்பதற்கு மட்டும் அறிந்து வைத்திருந்தாள். காவிரி ஆற்றிங்கரையில் பிறந்து வளர்ந்தவள்!!
அவளை நீந்தியபடி அணைத்து கொண்டே கொட்டும் அருவியின் அருகில் அழைத்து சென்றான். ஆர்ப்பரித்து கொட்டும் நீருக்கு அடியில் தன்னவளை அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்று இருக்க.. அதற்குள் அவளுக்கு குளிர் எல்லாம் பறந்திருந்தது. அவளும் அந்த அருவி போல ஆர்ப்பரித்து
துள்ளி துள்ளி விளையாட.. அதில் அவள் அங்கங்களின் துள்ளல்களில் காதல் மூழ்கி மோகம் பிறந்தது செர்ரிக்கு.
உடலை ஒட்டிய அவளின் டாப்சும்.. லெகின்ஸூம் அவளின் உடல் அங்கங்களை அவனுக்கு படையலிட்டு காட்ட.. நேற்று சாப்பிட்ட அவசர உணவை.. இன்று மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிட அவளை நெருங்கினான் செர்ரி.
கோமகன் அவனின் நெருக்கத்தில் கோதை அவள் வெட்கத்தில் தலை குனிய.. ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான். அப்பொழுது அருவியில் இருந்து அவள் முகத்தில் வழிந்த நீர் அவள் ஆடைக்குள் சரண் புகந்திட..
அதைக் கண்டவன் உள்ளமோ நீர்த் துளியாக மாறுவதை எண்ணம் கொண்டு அதை செயல் படுத்த தொடங்கினான்.
அவளின் அங்கங்களுக்கு அதிக பாரமாய் இருந்த ஆடைகளை அகற்றிட..
அங்கே பல்லவன் சிற்பமாய் அவள் மிளிரந்திட..
அவனும் அந்த அழகிய சிற்பத்தை செதுக்கும் சிற்பியாய் மாறிட..
இந்த சிற்பத்தை செதுக்கும் ஆயுதங்களாக அவனது விரல்களும் அதரங்களும் சென்றிட..
நீர்வீழ்ச்சியின் நீரோ இவர்கள் இருவருக்கும் புகுந்து ஓடிட..
அந்நீரை கண்ணன் அவனோ தன் நாவினால் சுவைத்திட..
காரிகையவளோ மன்னவனின் விளையாட்டில் கண்கள் மயங்கி கிறங்கிட..
அவள் இடைப்பற்றி இன்னும் இறுக்கமாக தன்னுடன் அவன் அணைத்திட..
அங்கே மோக ராகங்கள் தாப ஸ்வரங்களுக்குள் இசைத்திட..
மெல்ல மெல்ல அவளது பெண்மை மலர்ந்திட..
மன்னவன் ஆளுமையில் மங்கையவள் முயங்கி தள்ளாடிட..
கோமகன் காதலாட.. காதலாட..
கோதையவள் அதில் உணர்வுகள்
எல்லாம் உச்சமாகி ஆனந்த கூச்சலிட..
அங்கே அழகிய தாம்பத்தியம் அரங்கேறியது.
