Share:
Notifications
Clear all

காதல் சகி 34

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 202
Thread starter  

34

 

"அருவி எப்படி இருந்துச்சு டாம்?" என்று கேட்டான் செர்ரி. அவனது குறும்பு மகன்னும் கண்களும் மீசைக்கு அடியில் முகிழ்த்த சிரிப்பையும் பெண் அவள் சரியாக கண்டு கொள்ளவில்லை.

 

"நல்லா இருந்துச்சு!! பட் ரொம்ப குளுருது. ரொம்ப நேரம் இருக்க முடியாது.. போகலாம் வீட்டுக்கு!!" என்றவளிடம் அவன் எதைக் கேட்டேன் என்பதனை அவளது காதில் கற்றை மீசை உரச முணுமுணுக்க.. புரிந்தவளோ நாணம் கொண்டாலும்.. அடுத்து அவனின் எண்ணம் புரிந்து, "நோ.. நோ...!!" என்று பின் எட்டு எடுத்து வைக்க..

முன் எட்டு எடுத்து வைத்தனோ அவளை நெருங்கிவிட்டான்.

 

 

அவனை விட்டு விலகி ஓட எத்தனிக்க, அதற்குள் அவனது எண்ணத்தை செயலாக்கி இருந்தான் அந்தக் கள்வன்.

 

அதன் பின் அவளை தன் கைகளில் தூக்கிக் கொண்டு சென்றவனின் அதரங்களோ அவளது மது கிண்ணங்களில் இருந்து சற்றும் பிரியவில்லை. அங்கிருந்து புல்வெளியில் அவளை கிடத்தியவன் அருவிக்குள் நடத்திய அரங்கேற்றத்தை அங்கேயும் தொடங்க.. குளிரில்‌ விறைத்த அவளது தேகத்திற்கு சுடு போர்வையாக அவன் மாற... பெண்ணின் உடம்பில் உதடுகள் கொண்டு முத்தக் கோலம் போட்டான். மிக மிக சூடாக இறங்கியது அவனின் முத்தத்தின் ஈரம்.. குளிருக்கு இதமாய்.. பெண்ணவளின் முனகல் எல்லாம் ஆணவனுக்கு கிளர்ச்சி கூட்ட.. மென்மையாய் தொடங்கி வன்மையாக மாறிய கூடல் அரங்கேற்றதிலும்.. மோகன சினுங்கல்களிலும் அந்த இயற்கையையே வெட்கத்தில் ஆழ்த்தியது.

 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன்னவனை இரு கைகளாலும் அழுத்தமாக பிணைத்துக் கொண்டாள் தாமரை. அவள் முகமும் அவர் மார்பின் ஓரம் சாய்ந்து கண்கள் மூடி இருக்க.. ஆனால் அவள் முகத்தில் பூரணத்துவம் மின்னியது. அதைக் கண்ட செர்ரி கர்வ புன்னகையுடன் அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.

 

ஒரு வாரம் அவர்களின் தனிமையிலும்.. இனிமையிலும்.. மோகத்திலும்.. 

தாபத்திலும்.. 

காதலிலும்... கரைந்து போக..

அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை அரங்கநாதன் தம்பதி.

 

சான்ப்ரான்சிஸ்கோ சென்றனர் அந்த இளம் தம்பதிகள் தங்கள் வேலையின் பொருட்டு!!

 

செர்ரி அருவியில் நடத்திய காதல் லீலைகளில் தாமரை அந்த மாதமே கருவுற்றாள்.

லூசி அவளை தங்களோடு அழைத்துக் கொள்ள முயற்சிக்க... எதிர்ப்பு வந்ததோ அரங்கநாதனிடமிருந்து!!

 

"உனக்கு நான் பார்த்த மாதிரி அவனுக்கும் அவன் பொண்டாட்டிய பார்க்கனும்னு ஆசை இருக்கும் தானே?" என்று மனைவியை பார்த்து ஒரு மோகன புன்னகை சிந்த லூசி ப்ளாட்!!

 

'இவனின் சிரிப்பு எங்கிருந்து வந்தது என்று இப்போது அல்லவா தெரிகிறது?' என்று தாமரைதான் வாயை பிளந்து பார்த்தாள். 

 

'எப்படி என்‌ அப்பா?' என்று புருவம் தூக்கி கற்றை மீசையை ஒரு கையால் திருகி இவனும் மோகன புன்னகை செய்ய.. உதடுகள் கடித்து முகத்தை திருப்பிக் கொண்டாள் செங்காந்தள் என வெட்கத்தில் சிவந்த முகத்தை காட்டாமல்..

 

அதன்பின் லூசியும் அரங்கநாதனும் தான் சான் பிரான்சிஸ் கோவிற்கும் ப்ரான்ஸூக்கும் பிளைட்டில் பறந்தனர். என்னதான் மகன் மருமகளோடு இருந்தாலும் அவர்களின் இனிமை நிறைவு எல்லாம் அவர்களது வீட்டில் தான். அதனால் பெரும்பாலும் ஒரு வாரத்துக்கு மேல் இங்கே அவர்களால் தாக்க பிடிக்க முடியாது.

 

அவ்வப்போது கணேஷ் மட்டும் போன் செய்து தாமரையின் நலத்தை விசாரித்துக் கொள்வான். ஆனால் தாமரையால் அவர்களோடு ஒட்ட முடியவில்லை. பட்டும் படாமல் பதில் சொல்வாள் ஒட்டாமல் இருக்கும் உறவு தானே!!

 

ஆனால் அவன் வேறு நல்ல கம்பெனியில் வேலை செய்வதற்கு அத்தனை உதவியும் செய்தாள். அதில் அவள் அப்பாவிற்காக அவள் செய்ய வேண்டிய கடமை!!

 

அது போல் வருங்காலத்தில் கணேசன் சகோதரிகளுக்கு திருமணம் நடந்தாலும் அதில் செர்ரி மற்றும் தாமரையின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். கடமையை தட்டிக் கழிக்க என்றுமே விரும்பியதில்லை தாமரை!!

 

இப்படியாக ஒன்பது மாதங்கள் செல்ல ஐந்தாவது மாதமே ட்வின்ஸ் என்றும் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று தெரிந்துவிட.. சந்தோசம் இருந்தாலும் "குழந்தை பிறக்கும் வரை என்ன குழந்தை என்ன குழந்தை என்று திரில்லிங் இருக்குமே அது ரொம்ப மிஸ் ஆகுது செர்ரி?" என்று புலம்பி தீர்த்தாள் செர்ரியிடம்.

 

இப்படியாக தாமரையின் புலம்பலும்... அதற்கு செர்ரியின் ஆறுதலும்... அவனின் மடி தாங்கலும்... 

லூசியின் அரவணைப்பிலும்... அரங்கநாதனின் அன்பிலும்... தாமரை இரு நிலவுகளையும் பெற்றெடுத்தாள்!!

 

இப்போது மூன்று‌ ஆண்டுகள் கழித்து... விடுமுறையை‌ கழிக்க இப்போது பிரான்ஸ் வந்திருந்தனர். இருவரையும் காலையிலேயே மாடியில் வைத்து ஆத்திச்சூடி முதல் திருப்புகழ் வரை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க செர்ரியின் மகன் மாதிவ் அரங்கநாதன் தான் அவ்வளோ அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான். அரங்கநாதனை தலையால் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருந்தான். அவனின் மகள் மான்சியோ வெகு சிரத்தையாக தாத்தா சொல்லிக் கொடுத்ததை கற்றுக் கொண்டிருந்தாள்.

 

அந்த சத்தத்தை கேட்டு தான் சிரித்தபடி தன் அறையில் வந்த செர்ரி தாமரைச்செல்வியை குறும்பாக பார்த்து கண்ணடித்தான்.

 

லூசி தான் அரங்கநாதனை திட்டினார். அவர் வாழ்நாளில் இப்போதுதான் முதன் முறையாக அதுவும் பேரனை அவர் படுத்தும் பாட்டில்தான் காண்டாகி...

 

"ஏன் இப்படி அவனை போட்டு படப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைக்கு நீங்க என்ன சொன்னீங்க? இஷ்டப்பட்டா கத்துக்கணும் தானே? அவனும் ஒரு காலத்துல உங்களை தேடி வந்தான் தானே!! அப்படி இவனும் வருவான்... சின்ன வயசுல போட்டு இதை செய்யணும் கஷ்டப்படுத்தாதீங்க" என்று வெளிநாட்டு தாயாய் அவர் பக்குவம் சொல்ல நம் அரங்கதான்னுக்கோ தாமரையின் உருவாக நிற்கும் அவனை அப்படி வெளிநாட்டு பையனாக மனதில் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

 

"சரி எப்படியோ போகட்டும் போங்க!!" என்று விட்டுவிட்டார்.

 

இரண்டு ஆண்டுகள் கழித்து... ஒரு அந்தி மாலை பொழுதில்.. அருகில் இருக்கும் பார்க்கில் விளையாண்டு கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் அருகே லூசியும் அரங்கநாதனும் அமர்ந்து பேரப்பிள்ளைகள் மீது ஒரு கண்ணும் தங்கள் இணையின் மீது மற்றொரு காரணமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

 

டாம் அண்ட் ஜெர்ரியும் எப்பவோ பிறந்து விட்டார்கள் தங்கள் அருவிக் கரையை நோக்கி ஆனந்த களியாட்டம் போட...

 

மாதிவ்வும் மான்சியும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அருகே வந்து ஒரு பந்து விழ.. அதை பார்த்த மாதிவ்.. அது வந்த திசையை நோக்கி திரும்ப மூன்று வயது அழகிய பெண் ஒன்று ஓடிவந்து அழகாக அவனிடம் "நன்றி!!* என்று கூறி வாங்கிச் செல்ல... மாதிவ் முதலில் அந்த பெண்ணிடம் பிரெஞ்சில் உரையாட... அந்த பெண் திருத்திரு என்று விழித்தாள். பின் "ஹாய்.. வாட்ஸ்.. வாட்ஸ் யுவர் நேம்?" என்றான் ஆங்கிலத்தில்..

 

"எண்ட பெயர் மயூரி!!" என்றாள் அழகாக!!

 

அம்மா பேசுவதில் இருந்து அவனால் தமிழை புரிந்து கொள்ள முடியுமே ஒழிய அவ்வளவாக பேசிராதவன் இந்த பெண்ணின் அழகு இலங்கை தமிழில் அவளது பெயர் மயூரி என்று மட்டுமே புரிந்தது.

 

"எங்களோட விளையாட வாரிகளா?" என்று அந்தப் பெண் அழைத்தாள். காரணம் மாதிவ்வை பார்க்கையில் அந்நாட்டைச் சேர்ந்தவன் போல் இல்லை. ஆதலால் அவள் தமிழிலேயே விளித்து பேச.. மான்சி ஓடி அவளோடு தமிழில் பேசி சென்று அவளோடு விளையாட ஆரம்பிக்க.. அப்பெண்ணும் அவளோடு விளையாட.. இருவரும் அப்படி மகிழ்ந்து விளையாடினார்கள். எட்டி நின்று சிறிது நேரம் அவர்களை வெறித்து பார்த்தான் மாதிவ்!! இருவரும் விளையாட்டு மும்மரத்தில் இருந்தார்களே ஒழிய மாதிவ்வை திரும்பி கூட பார்க்கவில்லை. இவனும் வெறித்து வெறித்து அவர்களையே பார்த்துக் கொண்டேன் நின்றிருந்தான் பாலகன்.

 

அடுத்த நிமிடம் ஓடினான் அரங்கநாதனை நோக்கி...

 

"தாத்தா... ஹீ இஸ் டாக்கிங் இன் தமிழ்!! ஐ வாண்ட் டு லெர்ன் தமிழ். ப்ளீஸ் டீச் மீ" என்று கண்களை சுருக்கி கேட்ட பேரனை கண்டு வாய்விட்டு நகைத்தார் அரங்கநாதன்..

 

"சரித்திரம் திரும்புகிறதடா பேரனே?" என்று!!

 

 

மாதிவ்வுக்கு வித்திட்டவனோ தன் காதல் சகியோடு இரண்டற கலந்து காதலாடினான்!! அவனின் மகிழ்ச்சகயில் மட்டுமல்ல அனைத்திலும் அவளே அவனின் காதல் சகி!!

அவளின் முகத்துக்கு நேராக அவனின் முகம் கொண்டு வந்தான். கண்களை மூடிக் கொண்டவன் தாமரையின் முகத்தோடு சேர்த்து தன் முகத்தை சேர்த்து அவனது இரண்டு வார தாடி முற்கள் அவளது கன்னத்தில் கோலமிட அழுத்தி உரசினான் மென்மையிலும் வன்மையாக!!

 

செர்ரின் இடதுக் கரமோ அணங்கவளின் இடுப்பை இறுக்கியப்படி மெல்லமாய் வருடிக் கொண்டிருந்தது. வலதுக் கரமோ முன்னேறி அவளின் பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்திருந்தது. தாமரைக்கு சிலிர்த்து மேனி!! ஒரு பக்கம் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் குளுமை... மறுபக்கம் மன்னவன் தீண்டலின வெம்மை!! சிலிர்த்து சிணுங்கினாள் மாது!!

 

தாமரை கொஞ்சம் கொஞ்சமாய் செர்ரியிடம் தொலைந்துக் கொண்டிருந்தாள். அவனின் சூடான மூச்சுக் காற்று, பின்னங்கழுத்தின் பிடி, இடை வருடிக் கொண்டிருக்கும் விரல்கள் இப்படி அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான் கோமகன்!! அவனது காதல் மட்டுமல்ல காமம் கூட அத்துணை பிரத்யேகமானது பெண்ணவளிடம்!!

 

"லவ் யூ பேபி!! லவ் யூ பேட்லி.. மேட்லி... டீப்லி!!"

என்றவன் அவளின் இதழ்களை வஞ்சகமின்றி கொய்ந்தான். அதன் தாக்கம் அதிகமாகி காரம் கொண்டவள் மேனி தெனாவெடுத்து நிற்க, பெண்ணவள் கண்கள் பேசின இனி உன்னை ஆட்கொண்டு மோகத்தீயில் தள்ளப் போகிறேன் பாரடா என்று. அவளின் அந்த நயன பாஷையில் கட்டுண்டு போனான் கள் குடித்த மந்தியாய் போதையில்...

 

அது சாதாரண போதை அல்லவே... காதல் போதை!! 

 

என்றும் அதன் மயக்கமும் கிறக்கவும் தீரவே தீராது!! ஏனென்றால் அது ராஜ போதை!! 

 

மீண்டும் அவளுள் அவன்!!

அவனுள் அவள்!!

 

அவளும் அவனும் மட்டுமே அவர்கள் உலகில்!!

 

அவனும் அவனும்... 

 

அலையும் கடலும்!!

 

தவமும் அருளும்!!

 

மீனும் புனலும்!!

 

விண்ணும் விரிவும்!!

 

ஆறும் கரையும்!!

 

பாட்டும் உறையும்!!

 

உயிரும் உடம்பும்!!

 

நரம்பும் யாழும்!!

 

சிரிப்பும் மகிழ்வும்!!

 

அவளும் அவனும்

 

அமுதும் தமிழுமாய்..

 

இன்புற்று இனிய வாழ்வு வாழட்டும்!!

 

 

 

சுபம்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top