Share:
Notifications
Clear all

காதல் சகி 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

22

 

 

அன்று கோபத்தில் சென்றவளை பின்தொடர்ந்து சென்று மேலும் ஒரு கில்ட்டி ஃபீலிங்கை ஏற்படுத்த முயலவில்லை ஜெர்ரி!! 'சிறிது அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும்!' என்று நினைத்தவன் இரண்டு நாள் அவளை தொல்லை செய்யாமல் தள்ளியே இருந்து வேடிக்கை பார்த்தான்.

 

 

அவளோ அதிகமாக எங்கும் வெளியே செல்லவே இல்லை. நல்ல நாளிலேயே அவள் வீடு விட்டால் அலுவலகம்.. அலுவலகம் விட்டால் வீடு என்று தனக்குள் நத்தையாய் கிடப்பவள்! அன்று நடந்த சம்பவத்திற்கு பின் அதையும் குறைத்துக்கொண்டு, தன்னை ஓட்டினுள் சுருக்கிக் கொண்டு பெரும்பாலும் வீட்டில் தான் இருந்தாள். 

 

அதனால் ஜெர்ரியுமே.. அவள் மனதளவில் தன்னை ஏற்க நேரம்‌ எடுக்கிறாள், நடந்ததையை கிரகிக்க காலம் எடுக்கிறாள் என்று புரிந்து அமைதியாக இருந்தான். ஆனால் அவள் அமைதிக்கு காரணம் புயலுக்கு முன் வரும் அமைதி என்றோ.. அந்த புயல் சான்பிரான்சிஸ்கோவை கடந்து சென்னையில் மையம் கொள்ளப் போகிறது என்று அவன் அறியவில்லை!!

 

 

அன்றைய நிகழ்வில் அவள் வீட்டிற்குள் நுழைந்த மறுகணமே அவன் சட்டையை கழற்றி தூர போட்டவள், ஹீட்டர் கூட செட் செய்யாமல் அந்த குளிர்ந்த நீரில் ஷவருக்கு அடியில் நின்று தன் கோபத்தை தணித்துக் கொண்டாள் தாமரை.. கோபத்தை மட்டுமா அவள் மீதான அவன் வாசத்தை.. ஸ்பரிசத்தை.. நேசத்தை!!

 

 

'எப்படி? எப்படி இது சாத்தியம்? ஏன் நான் அவ்வாறு நடந்து கொண்டேன்? உடம்பின் உள்ளே சென்ற ஒரு குப்பி ஆல்கஹால் மனதை இந்த அளவுக்கு திறக்குமா? கிறக்குமா என்ன?' என்று நொந்து கொண்டாள். வலிக்க வலிக்க தன் மனத்தின சுய அலசலில் ஈடுபட்டாள்.

 

ஜெர்ரி எப்போது அவள் மனதில் உள்ளே நுழைந்தான் என்று அவளுக்கு தெரியாது அல்லவா? ஆனால் சிறிது நாட்களாக தன் கூட்டில் இருந்து வெளியே வந்து அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள். ஏற்கனவே அவன் மீது இருந்த வெறுப்பு எப்போது நட்புணர்வாக மாறி.. மெல்ல மெல்ல சலனமாகி, பின் வளர்ந்து ஈர்ப்பாகி எப்போ காதலானது? என்று அவளுக்கு புரியவில்லை...

 

 

இதோ அதோ என்று நாட்கள் ஒரு மாதமும் முடிந்து போய் நாளையோடு அவன் செல்கின்றான் என்ற நிலையில் தான் அவளது மனது அவளுக்கு புரிந்தது.

 

போ! போ!! என்று விரட்டியவள், நாளை முதல் அவனை பார்க்க மாட்டோம் என்ற நிதர்சனத்தை உணர்ந்தவளால் அதை தாங்க முடியவில்லை. அந்த மனக்குழப்பத்தில் மனதை அடைத்த உணர்வில் இருந்து தப்பிக்க தான் பார்ட்டி நடைபெறும் போது கடற்கரையோரம் நடை பயில, அங்கேயும் சென்று அவளை காதலால் பருகிக் கொண்டிருந்தவன், அவளை ஏங்க வைத்தான்.

 

 

'கண்ணிலிருந்து மறைந்தால் கருத்திலிருந்து மறையும்!' என்ற சொல்லுக்கேற்ப, அவன் கண்ணில் படாமல் சிறிது நேரம் கண்ணாமூச்சி ஆடி, தப்பித்து செல்ல முயன்றவள், அவன் கைகளிலேயே போய் விழுந்தாள் போதையில்..

 

 

அதன் பின் நடந்த எதுவுமே தாமரையின் வாழ்க்கையில் அவளால் மன்னிக்க முடியாத பக்கங்கள்!!

 

'எல்லாம் போச்சு! என்னுடைய மனதைரியம்.. என்னுடைய வலிமை.. என்னுடைய மன உறுதி.. என் குடும்பத்திற்கான தேவைகள்.. மகேஷ் உடனான என் திருமணம்.. எல்லாம் எல்லாம் போயே போச்சு.. ஒற்றை இரவில் இத்தனை வருட என் உலகத்தையும் தவிடுபொடியாக்கி விட்டேன் என்று அந்த ஷவருக்கு அடியில் அமர்ந்து முகத்தில் அறைந்து குமுறி குமுறி அழுதாள் தாமரை.

 

பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெளிவந்தாள். இத்தனை வருடங்களில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தபோதும் தனக்குத் தான் மட்டுமே ஆறுதல் என்று இருந்தவள் அல்லவா? மீண்டும் தன் மன தைரியத்தை கூட்டி பழைய தாமரையாக தன்னை நிறுத்திக் கொண்டாள்! இறுக்கிக்கொண்டாள்!

 

அதற்குமுன் அவளுக்கு கொடுத்த அந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டிருந்தவள், எப்படியும் ஜெர்ரி அவன் தனக்காக இங்கே வர அதை உபயோகப்படுத்துவான் என்று நினைத்தவள், வேறு நாட்டுக்கு செல்லலாம் என்று அவள் முடிவு செய்து, எந்நாட்டுக்கு செல்லலாம் என்று அவள் திணறிக் கொண்டிருந்தாள்.

 

மறந்தும் இந்தியாவுக்கு செல்லலாம் என்று அவள் நினைக்கவில்லை! முதலாவதாக அதிகமாக பொருளீட்ட வேண்டும்.. இரண்டாவது மகேஷ் உடனான கல்யாணத்தை இனி நினைக்க முடியாது என்பதால் வேலையை காரணம் காட்டி அவனை முற்றிலுமாக தவிர்க்கலாம் என்று நினைத்தாள்.

 

இப்படிப் பலவாறு அவர் யோசனை கொண்டிருக்கையில், மகேஷின்‌ அம்மா அவளை வம்படியாக இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். "இங்க பாரு தாமர, முதல நிச்சயத்த முடிச்சிடுவோம், அப்புறம் கல்யாணத்தை பார்ப்போம், என் பையனுக்கும் வயசு ஏறி கிட்ட போகுது, அதோட பொண்ணு வூட்டுகாரனுவோ படையெடுத்தப்படி இருக்கானுவ.. என் மகன் ஆளும் அம்சமும் அப்படி! ஏதோ உனக்கு கொடுத்த வாக்குக்காக தான் கைய கட்டிக்கிட்டு சும்மா இருக்கேன்" என்று அவளை பேசி பேசியே ஒரு வழி ஆக்க.. முதலில் இது சாத்தியமில்லை 

என்று அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாதலால்,

அவளும் மற்ற நாடுகள் செல்வதைவிட தாய்நாட்டுக்கு செல்வோம் என்று முடிவெடுத்து சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு இரண்டே நாட்களில் பறந்துவிட்டாள். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல்..

 

 

ஆனால் ஜேம்ஸ் இடமிருந்து ஜெர்ரிக்கு அழைப்பு வந்தது.

 

"ஜெர்ரி!! உங்கள மாதிரி ஒரு டேலன்ட் ஆனா பெர்ஷன் எங்க பிராஞ்சுக்கு வந்தால்.. நாங்க ரொம்பவே சந்தோஷப் படுவோம்! அதுவும் ஃப்ரஸ்ட் பிளேஸ் வந்த நீங்க!! எங்க கூட ஒர்க் பண்ணா நம்ம லெவலே வேற!!" என்று அவர் ஐஸ்கட்டி ஒன்றொன்றாக அவன் தலைமீது வைத்துக் கொண்டே போக...

 

 

'எலி எதுக்கு இப்போ அம்மணமா ஓடுது! என்று புரியாமல் யோசித்தவன் "அதான் ஏற்கனவே தாமரை இருக்கிறார்களே சார்?" என்று எதார்த்தமாக சொல்ல அவரோ, "அவளுக்கு கொடுத்த அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவ சென்னை போய்ட்டா! நல்ல டேலண்டான பொண்ணு ! பட் நம்ம ப்ராஞ்சுக்கு இல்லாமல் போய் விட்டாளே?" என்று வருத்தமாகக் கூற.. இப்போது அதிர்ச்சியின் விளிம்பில் ஜெர்ரி!!

 

 

"ஓகே ஜேம்ஸ்.. ஐ.. ஐ நீட் டூ டேஸ் டைம். நானும் என் பிராஞ்சில் பேசிட்டு சொல்றேன்" என்று நழுவிக் கொண்டான்.

 

உடனே ஓடிச்சென்று அவளது வீட்டை பார்க்க வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஒருவேளை உள்ளே இருக்கிறாளா? என்ற தள்ளித்தள்ளி பார்த்தாலும் திறக்கவில்லை.. 

 

 

"டாம்!! டாம்!!" என்று கதவை தட்டி தட்டி சத்தமாக இவன் கத்த.. அவள் இருந்தால் அல்லவா மறுமொழி கூற..

 

"நோ டாம்.. ப்ளீஸ்.. யூ டோண்ட் டு திஸ் ஃபார் மீ! ஓபன் த டோர்!! ஓபன் த டோர் இடியட்!!" என்று கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் அவன் அந்தக் கதவை கைகளாலேயே உடைத்துக் கொண்டு இருக்க..

 

அப்போது வந்த அவ்வீட்டின் உரிமையாளர் அவனை வினோதமாக பார்த்துக்கொண்டு டூலெட் போர்டை மாட்டி விட்டு சென்றான். மொத்தமாக அவள் தன்னை விட்டு பிரிந்து சென்றதை நம்பமுடியாமல் அதிர்ச்சியோடு அந்த போர்டை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!

 

அதற்குப் பிறகு கோபம்! கோபம்! கோபம் மட்டுமே!!

 

எப்படி அவள் பிரிந்து செல்லலாம்? அவளோடு பெட்டை பகிர்ந்து கொள்ளவா அவள் பின்னால் அலைந்தேன்? 

கடைசி வரைக்கும் அவளுக்கு என் மனது புரியவே இல்லையா? அல்லது புரிந்தும் பிரிந்து சென்றாளா?

 

 

அவளுக்கு இவன் மீது காதல் இல்லை என்றாலும் அதை வரவழைக்க இவன் முயற்சி செய்து இருப்பான்!! ஆனால் காதல் இருந்தும்.. அதுவும் அபரிமிதமாக இருந்தும் பிரிந்து சென்றவளை என்ன செய்ய? என்று மனதே விட்டு போனது அவனுக்கு!! அதற்கு மேலும் இங்கே இருக்க முடியாமல் தன் தந்தையிடம் தஞ்சம் கொள்ள புறப்பட்டு விட்டான் தனயன்!!

 

 

விடியற்காலையில் வழக்கம்போல தன் மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்த அரங்கநாதன், வீட்டு காலிங் பெல் அடிக்கும் சத்தம் வந்து கதவைத் திறக்க.. அங்கே பல நாள் ஓய்ந்தது போல தலையெல்லாம் களைந்து கண்கள் எல்லாம் சிவந்து சோக பிம்பமாய் நின்ற மகனை பார்த்தவருக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது.

 

 

ஆனால் எதையும் கேட்டுக் கொள்ளாமல் மகனை அணைத்து "ஃபர்ஸ்ட் ப்ளேஸ் வந்ததுக்கு கங்கிராட்ஸ் டா!! மிஸ் யூ மை சன்!!" என்றார்.

 

"ஐ டூ மிஸ் யூ பா!!" என்று அவனும் கட்டிகொள்ள..

 

"போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, பிரேக்பாஸ்டுக்கு எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ ஜெர்ரி!!" என்று அவனை அனுப்ப, தலை அசைத்தவாறு உள்ளே சென்றான்.

 

 

தந்தையின் ஒற்றை அணைப்பில் ஆறுதல் கொண்டவன் சுகமாக தூங்கிவிட இங்கே அரங்கநாதனுக்கு தான் மகனை நினைத்து கவலை! களைந்த வந்த அவன் தோற்றமே தாமரைச்செல்வி அவளது காதலை ஒத்துக் கொள்ளவில்லை என்று இவர் நினைத்திருக்க.. முழு காரணமும் தெரிந்தால் என்ன சொல்லுவார்?

 

 

முதல் இரண்டு நாட்கள் அவனது போக்கிலேயே விட்டு விட்டார். அதற்குள் லூசி மகனிடம் பலமுறை பேச எத்தனிக்க, அரங்கநாதன் விடவில்லை. "அவனாக சொல்லட்டும்! நீயா போய் கேட்காதே! அவனுக்கு எப்ப சொல்லணும் தோணுதோ அப்ப சொல்லட்டும்... விட்டுவிடு லூலு" என்றார் மகனை அறிந்தவராய்!!

 

லூசிக்கு தான் மனது அடித்துக் கொண்டது. விளையாட்டு சேட்டைகளும் துடிப்புமாக இருக்கும் மகன், இப்படி ஓய்ந்து போய் காண.. ஆனாலும் தன்னை விட மகனை தன்னவர் நன்றாக புரிந்து வைத்திருப்பார் என்று தெரிந்தவர், மகனை இத்தனை நாள் பிரிந்து வருத்தத்தைப் போக்க நித்தமும் மகனிடம் தன் நேரத்தை செலவழித்தார்.

 

 

ஒரு மாலைப்பொழுதில் அவர்கள் வீட்டு வாயிலில் இருந்து சற்று தூரம் இருக்கும் அந்த வயல்வெளிகளை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தான் பாக்கெட்டுகளில் கைவிட்ட படி ஜெர்ரி!!லேசாக குளிர ஆரம்பித்தது. கைகளை அவன் தேய்த்து விட்டுக் கொண்டே நடக்க பின்னிருந்து ஒரு ஷால் அவன் மீது போற்றப்பட தந்தையைப் பார்த்து சிரித்துவிட்டு மெல்ல நடந்தான் கூடவே அரங்கநாதனும்!!

 

 

"விடு ஜெர்ரி.. அந்த பொண்ணுக்கு உன் மேல விருப்பம் இல்லைனா என்ன செய்ய முடியும்? விரும்பி தான் வர வைக்க முடியும். விரட்டி வம்படியாய் வாங்க முடியாது.. காதலை!!" என்று மெதுவாக பேச்சை தொடங்கினார்.

 

 

அவரை சட்டென திரும்பி பார்த்தவனின் கண்களில் அப்படி ஒரு வலி!! மகன் தோளோடு கை போட்டு சேர்த்து அணைத்தப்படி நடந்தார்.

 

ஒரு‌ பெரு மூச்சு விட்டவன், அவளுக்கு என் மீது காதல் இல்லைன்னு எப்போ சொன்னேன்?" என்றான் தந்தையை திரும்பி பார்த்து, அங்கு ஆச்சரியமாக மகனை பார்த்து, "என்ன டா சொல்லுற? உன் மேல காதல் இருந்ததா அந்த பொண்ணுக்கு?" என்ற‌ கேள்வியில் அவரிடம் பிரிந்து எதிரே நின்றவன்..

 

 

"ம்ம்ம்.. அவளுக்கு மனசு நிறைய இருக்கு காதல் இந்த ஜெர்ரி மேல! கல்யாண தளையால் கட்டப்பட்டாலும் அதனை தாண்டி அவள் அகத்தை தொட்ட இந்த ஜெர்ரி மீது அவ்வளவு காதல் இருக்கு பா!! 

குடும்ப சுமை அவள் தோள்களில் தொங்கினாலும் அதை துறந்து சிறகை விரித்து பறந்து வந்து இந்த ஜெர்ரி நெஞ்சில் தஞ்சம் கொள்ளும் அளவு காதல் இருக்கு பா!! நாடு மொழி பண்பாடு கலாச்சாரம் கடந்து இந்த பிரெஞ்ச்காரன் ஜெர்ரி மீது தமிழ்காரி தாமரைக்கு கரை காணா காதல் இருக்கு பா!! எல்லாத்தையும் விட

அவளையே என் கிட்ட தரும் அளவு ஜெர்ரி மேல காதலோட நம்பிக்கையும் வான் அளவு இருக்கு பா!!" என்றவன் மடிந்து அமர்ந்து அழ.. 

 

 

இந்த ஜெர்ரி புதியவன் அரங்கநாதனுக்கு!! 

 

காதல்!! வேள்வி தீ போன்றது!! தன்னிடம் வரும் அனைத்தையும் ஆகுதியாக எடுத்து கொழுந்து விட்டு எரிவது போல தான்!!

 

ஒருவரின் கர்வம் கோபம் ஆணவம் ஈகோ போன்ற கெட்ட குணங்களை மட்டுமல்லாது.. சில சமயம் தன்னம்பிக்கை மன உறுதி துடிப்பு அனைத்தையும் விழுங்கிக்கொண்டு ஜக ஜக என செவ்வண்ண ஜோதியாகவே வளர்ந்து வரும் இந்த காதல் மிக பொல்லாதது!!

 

 

அதுவரை விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மகனுக்கு எப்படி அறிவுரை கூறுவது என்று புரியாமல் தவித்த அங்கு, மகனை பார்த்து "எழுந்திரிடா!! என்று அதட்டினார்.

 

 

"யோவ் அங்கு!! நான் எவ்வளவு பீல் பண்ணி அழுது கிட்டு இருக்கேன்! நீ என்னான்னா மகனுக்கு ஒரு நாலு வார்த்தை ஆறுதல் சொல்லுவோம்னு இல்லாம.. இப்படி அதட்டுற!! இரு இரு எங்க அம்மாகிட்ட போட்டுக் கொடுக்கிறேன். இன்னைக்கு நைட்டு நீ ரூம்க்கு வெளியில தான்!!" என்று கண்ணை புறங்கையால் துடைத்துக் கொண்டு ஜெர்ரி கூற..

 

 

ஹா ஹா ஹா என்று வாய்விட்டு சிரித்தார் அங்கு!! "முடிந்தால் போய் சொல்லுடா! நான் கூட என் பொண்டாட்டி இல்லாமல் இருந்து இருந்துடுவேன்.. ஆனால் என் பேபி லூலுவுக்கு இந்த மாமன் இல்லாம நைட் தூக்கமே வராது!!" என்று கெத்தாக மீசையை முறுக்கி கூறியவரின் கண்களில் வழிந்த காதலை பார்த்தவனுக்கு அப்பட்டமான ஒரு பொறாமை!!

 

 

மகனை இழுத்து அணைத்தவர், "டேய் மகனே!! அந்த பொண்ணுக்கு ஃபர்ஸ்ட் புடிக்கலைன்னு நினைச்சுதான் விருப்பமில்லாத பொண்ண வலுக்கட்டாயமா காதல் வர வைக்க முடியாதுன்னு சொன்னேன் தவிர, காதல் கொண்ட பொண்ண அல்ல!! நான் உன்னை ட்ரைன் பண்ணி அனுப்பிறேன். இனி உன் பர்பாமன்ஸில் அவளே வந்து அவளது காதலை சொல்ல வேண்டும்!! சொல்லுவா!! சொல்லு வைப்போம்!!" என்று உற்சாகமாக பேசி மகனிடம் ஹைபை கொடுத்தார்.

 

அதன்படி.. முதலில் அவனுக்கு ஏற்கனவே பாதியில் விட்டு இருந்த தமிழ் கிளாசை மீண்டும் எடுத்து பேச்சுவழக்கில் தமிழில் தேர்ந்தவராக்கினார். ஏற்கனவே அப்பாவின் மொழியும் அதுதானே என்னவளின் மொழி அதுதான் என்பதை புரிந்தவன் வெகுவிரைவிலேயே ஆர்வத்தோடு கற்று தேர்ந்தான். மேலும் நம் ஊர் மக்களுக்கும், வெளி‌நாட்டு மக்ககளுக்கும் உள்ள மன ரீதியான உணர்வுகள் எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்தார்.

 

 

குடும்பத்தோடு உண்டான பிணைப்பு.. சமூகத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்.. அவர்களது வாழ்க்கை குடும்பத்தோடும் சமூகத்தோடும் எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்துள்ளது என்று பல சுவாரசியமான கதைகள் கூறி புரிய வைத்தார். லூசி அனைத்தையும் ஒரு பார்வையாளர் ஆகவே பார்த்து இருந்தார்.

அவருக்கும் மகனின் சந்தோஷத்தை விட வேறு என்ன வேண்டும்?

 

 

முதலில் புரியாத அனைத்தும் புரிந்தது ஜெர்ரிக்கு. தாமரை பற்றிய அவனது கணிப்பு எல்லாம் இப்பொழுது தலைகீழாக மாறியது. 

 

 

பிரான்ஸூக்கு வரும்பொழுது இருந்த அவனது கலக்கம் வருத்தம் அனைத்தும் மாறி முன்னை விட துடிப்பான இளைஞனாக மாறி சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டு அப்ளை செய்து, இதோ வந்து விட்டான்.

 

 

"என்ன பொண்டாட்டி? பலத்த சிந்தனையா?" என்று அவளைக் கூர்ந்து பார்த்து கூறியவனின் கண்களில் தெரியவில்லை என்றாலும் அந்தக் கண்களின் பளபளப்பை நன்றாக உணர்ந்தாள்.

 

ஒரு முடிவோடு தான் வந்து இருக்கிறான் இவன்!! எப்படி இவனை தவிர்ப்பது? என்று யோசித்தவள், "எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்! என் வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்ணாம போயிடுங்க!" என்று அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து கூறியவளை

அழுத்தமாக பார்த்தவன், அவள் முகத்தை

இழுத்து நீள நரம்புகள் நெளிந்தோடிய அவளின் மிருதுவான சங்கு கழுத்தில் மீசை முடிகள் குத்த.. தாடி உராய உராய அழுத்தமாக முத்தமிட்டான். 

 

கழுத்து மட்டுமல்ல உடலே சிலிர்த்தது பெண்ணவளுக்கு!! கழுத்தைத் திருப்பிக் கொண்டாள் அவனிடமிருந்து! அவளின் மென்கழுத்து மெல்லக் கடித்து கவ்வியிழுத்து விடுவித்து முகம் பார்த்தான். உன்னால் என்னை விட்டு வேறொருவனை திருமண செய்ய முடியுமா? என்று!!

 

அவனது முத்தத்தில் முதலில் அதிர்ந்து.. பயந்து.. குழைந்து.. பின் தெளிந்து இப்போது முறைக்கும்‌ பெண்ணை பார்த்தவன், "உன்னையெல்லாம்... என்று வார்த்தைகள் முடிக்கும் முன், அவனது முரட்டு இதழ்கள், அவளின் கழுத்து பரப்பெங்கும் முத்தமிட்டு முத்தமிட்டு முக்குளித்தான்.. காதலாய்.. காமமாய்.. இன்பமாய்.. தாபமாய்!!

 

மெல்ல முனகி தலையைப் பின்னால் இழுத்து முகத்தை அண்ணாந்து அவன் தலைமுடியில் விரல்களை நுழைத்து இறுக்கியபடி கிளர்ச்சியுடன் அவனுக்கு ஈடுகொடுத்தாள் பெண் அனைத்தையும் அக்கணம் மறந்து!! அப்பொழுது அவன் மீது கொண்ட உயிர் காதல் மட்டுமே நினைவில்!!

 

 

நெற்றியோரங்களிலும் மூக்குக்குக் கீழேயும் அரும்பென வியர்க்கத் தொடங்கியிருந்து இருவருக்கும் மழை.. குளிர்ச்சி எல்லாம் தாண்டி.. வெம்மை கொண்ட‌ இரு உடல்களும்!!

 

சுவைக்கச்.. சுவைக்க இரு உதடுகள் மேலும்.. மேலும் தாகம் கொண்டதைப் போலாகி இன்னும்.. இன்னும் என்று ஏங்கித் தவித்து தேனமுதத்தை அருந்தின. 

 

ஆழ மூச்சு வெந்தனலாய் மூக்குத் துளைகளில் வெளிப்பட, மூக்கை சற்று சரித்தவன், இதழ்களை விலக்காமல் நீண்ட நெடிய இதழ் சமரை தொடர்ந்து நடத்தினான், சமாதானத்திற்கு வழி கொடுக்காமல்!!

 

சட்டென கரெண்ட் வந்திட, அவளது இதழ்களை பிரித்தெடுத்தவளின் ஈர உதடுகள் மெல்லிய நடுக்கம் கொண்டது! அச்செவ்விதழ்களை பற்களால் கவ்வி அடக்கினாள். கூர் மூக்கு விடைத்து விடைத்து சுருங்க.. மென் கன்னங்கள் சிவந்து சூடானது!!

 

அதில் அவனது தாபம் பெருக, சட்டென்று 

அணைக்க முயன்றவனை தடுத்து, தன் வீட்டினை நோக்கி ஓடினாள் பெண்!!

 

மறுநாள் வேலைக்கு சென்றவளை வேற‌

டிபார்ட்மெண்ட்க்கு மாற்றிவிட்டார்கள் என்று கூற.. அதில் என்ன‌ என்று அலட்சியமாக சென்றவளை வரவேற்றான் அதன் டைரக்டரான ஜெர்ரிக் ஜோன்ஸ்!! அவளின் ஜோன்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top